புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? Poll_c10மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? Poll_m10மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? Poll_c10மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? Poll_m10மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 06, 2023 5:45 pm

மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? FeYsFe7

குழந்தையோடு போட்டி போட்டு ஐஸ்கிரீம் சாப்பிட ஆயத்தமானேன். காலை எழுந்து பல் துலக்கியதும், வாய்க்குள் சுழன்று மூச்சை நிரப்பும் பேஸ்ட் வாசனையைப் போக்க ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்பது என் எண்ணம்.

எனது பற்கள் உணர்ச்சிமிக்கது என்பதால் அது சுல்லென்ற கூச்சத்தை ஏற்படுத்தும். இது தெரிந்துமே மிகவும் பிடித்த சாக்லெட் ஐஸ்கிரீம் கண்முன் இருந்ததால், அது என்னை “உடனே சுவைத்திடு!” எனச் சொல்வதுபோல் தூண்டியது.

முதல் ஸ்பூன் ஐஸ்கிரீமை வாயில் போட்டதுமே சுல்லென்ற வலி. இம்முறை, வலி வந்தது பற்களில் அல்ல, மார்பகத்தில்.

ஐஸ்கிரீம் சுவைக்கும் ஆர்வத்தில் அதைப் பொருட்படுத்தவில்லை. வழக்கமான வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது, குண்டும் குழியுமான சாலையில் பயணிக்கும்போது மீண்டும் அதே ‘சுல்’ என்ற வலி.

ஆனால், பொறுக்க முடியாத அளவு அல்ல என்பதால் கண்டுகொள்ளவில்லை. வீடு வந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு சோஃபாவில் அமர்ந்தேன்.

அதில் ஓடிக்கொண்டிருந்த நாடகத்தில் வந்த வசனம் என்னை திடுக்கிடச் செய்தது. “முதல்முறை மார்பில் வலி வரும்போதே வந்திருந்தால், புற்றுறோய் பரவியிருக்காதே? இந்த எச்சரிக்கையைக் கூடவா தட்டிக் கழிப்பீர்கள்” என நாயகியைக் கடிந்து கொண்டிருந்தார் ஒரு மருத்துவர்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வயிற்றில் புளி கரைப்பதுபோன்ற உணர்வு. கழிப்பறை சென்றேன். மார்பகப் புற்றுநோயை அறிய முதலில் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று எங்கோ கேட்டது நினைவில் வர நானும் பரிசோதித்தேன்.

குட்டிக் குட்டியாக நீள்வட்ட பாசிமணிகள் திரள் போன்று ஏதோ உருள, அதை அழுத்தினால் சற்று வலித்தது. அவ்வளவுதான் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை அந்த பேரச்சம்.

அந்தப் பேரச்சம் உடல் முழுவதும் பரவி படபடத்தது. வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போல் ஓர் உயிர் பயம். “ஒருவேளை கேன்சர் வந்து செத்துவிட்டால், குழந்தை நான் இல்லாமல் என்ன செய்வான்?” என்றெல்லாம்கூட எண்ணத் தோன்றியது. கற்பனைக் குதிரைகள் கடல் தாண்டி பறந்து கொண்டிருக்க, “முதல்ல டாக்டரப் போய் பாரு” என்றது என் புத்தி.

உடனடியாக மருத்துவரை அணுகினேன். “மாதவிடாய் நெருங்குகிறதா?” என்று கேட்டார். “ஆம், 3 நாட்கள் உள்ளன” என்றேன். “அச்சம் கொள்ள வேண்டாம், பரிசோதித்துப் பார்க்கலாம்” என அழைத்துப் பரிசோதித்தார்.

மாதவிடாய்க்கு முன்னால் மார்பகம் வலிப்பது எதனால்?

மாதவிடாய் காலத்தில் மார்பகங்களில் வலி வருதல் பல நேரங்களில் வழக்கமான ஒன்றுதான் எனக் கூறி பதற்றத்தைத் தணித்தார் சென்னை கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர் கலைவாணி. தொடர்ந்து இதுகுறித்து விளக்கமும் அளித்தார்.

“மாதவிடாய் சுழற்சி 14 நாட்களில் கருமுட்டை வெளிவருவதற்கு முன், அதற்குப் பின் என இருவகைப்படும். அதில் இரண்டாவது சுழற்சியில் புரொஜஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பதால் மார்பகங்களில் உள்ள சுரப்பிகளில் திட்டுத் திட்டாக திரள் போன்ற குட்டிக் கட்டிகளில் வலி வரக்கூடும்.

இது PCOS என்ற சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்களுக்கும், பருமனாக இருப்பவர்களுக்கும் வரும்போது, வலியை ஏற்படுத்தலாம். குறிப்பாக மாதவிடாய்க்கு முன்னதாக ஐந்து நாட்கள் முதலே இத்தகைய வலி வரலாம். கை, கால்களில் வீக்கமும் வரலாம்,” என்று விளக்கம் அளித்தார் மருத்துவர்.

மன அழுத்தம்

மாதவிடாய்க்கு முன்னதாக மன அழுத்தமோ, எதைப் பார்த்தாலும் எரிச்சல் அடையும் குணமோ பெண்களுக்கு அதிகரிப்பது பற்றியும் சந்தேகம் தோன்ற அதையும் மருத்துவரிடமே கேட்டேன்.

அதைப் பற்றியும் விளக்கினார் அவர்.

“இதை Pre Menstural Syndrome என அழைப்போம். மாதவிடாய் முடிந்ததும் சற்று நிம்மதி அடைவது போல் உணர்வார்கள்.

கால் வீக்கம், மார்பக வலி ஆகியவையும் குறைந்துவிடும். மாதவிடாய் முடிந்ததும் புரொஜஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பது குறைவதே காரணம்” எனக் குறிப்பிட்டார்.

மாதவிடாய் அறிகுறிகள் தானாகவே சரியாகிவிடுமா?

இதுபோன்ற மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் சிலருக்கு வரும்போது அது மாதவிடாய் முடிந்ததும் தானாகவே சரியாகிவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்றும் விளக்கினார் மருத்துவர் கலைவாணி. இருப்பினும் கட்டி போன்றதைக் கண்டது குறித்தும் கேள்வி எழுந்தது.

அதுகுறித்து பதிலளித்த மருத்துவர் கலைவாணி, “நீங்கள் எப்போதுமே உங்களது மார்பகங்களை சுயபரிசோதனை செய்ததே இல்லையா?' எனக் கேட்டார். நான் இல்லை என்றதும், 'அதை ஏன் செய்ய வேண்டும்?' என்றும் விளக்கினார்.

“மார்பகங்களில் குட்டிக் குட்டித் திரள்கள் இருக்கும். இது ஃபைப்ரோடினோசிஸ் என அழைக்கப்படும். அவற்றில் பால் சுரப்பிகள், திசுக்கள் இருக்கும்.

அவை எப்போதுமே மார்பகங்களில் இருக்கக் கூடியதுதான். அதை முதன் முதலில் தொட்டுப் பார்க்கும்போது இது என்ன கட்டி போன்று உள்ளதே, ஒருவேளை இது புற்றுநோயாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றும்,” என்றார்.

மார்பக வலி வர என்ன காரணம்?

உடல் உழைப்பின்றி இருத்தல்

உடல் பருமனாக இருத்தல்

மார்பகங்களுக்கு சரியான அளவில் உள்ளாடை அணியாது இருத்தல்

அதிகளவு துரித உணவு சாப்பிடுதல்

மன அழுத்தம்

சினைப்பை நீர்க்கட்டி இருத்தல்

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அதிக அளவு உப்பு சேர்ப்பது

அதிக செயற்கை உப்புள்ள சுவையூட்டி கலந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என முறையற்ற நாட்களில் மாதவிடாய் வருதல்

அம்மா, பாட்டி, அத்தை போன்றோருக்கு மார்பக வலி இருத்தல்

இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திப்பவர்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய மார்பக வலி ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. பள்ளி சிறுமிகளுக்கும், மாதவிடாய் நிற்கப்போகும் பெண்களுக்கும்கூட மாதவிடாய்க்கு முன் மார்பக வலி வரக்கூடும்.

மகப்பேறு மருத்துவரான தன்னிடம் சிகிச்சைக்கு வரும் 10 முதல் 15 % பெண்கள் இந்தப் பிரச்னைகளை சந்திப்பதாகச் சுட்டிக்காட்டினார் மருத்துவர் கலைவாணி.

ஆனால், வேறு சில அறிகுறிகள் தென்படும்போது, அதைச் சாதாரண கட்டியாக இருக்கக்கூடும் என்று தட்டிக் கழிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் எனவும் அவர் எச்சரித்தார். அவை என்னென்ன அறிகுறிகள்?

மார்பக வலியில் தவிர்க்கக்கூடாத அறிகுறிகள் என்ன?

மார்பகங்களில் மாதவிடாய் முடிந்த பிறகும் வலி

மார்பகங்களில் வலியுடன் கூடிய அல்லது வலி இல்லாத கட்டி

அக்குளில் கட்டி அல்லது வீக்கம்

மார்பகத் தோலில் ஆரஞ்சுப் பழத் தோலில் உள்ளது போல் புள்ளி புள்ளியாய் வருவது

மார்பக காம்புகளில் ரத்தம் அல்லது பிரவுன் நிறத்தில் திரவம் கசிவது

மார்பக அளவுகள் ஒன்றுடன் ஒன்று வேறுபடுவது

மார்பக காம்புகள் உட்புறமாகவோ, மேலே அல்லது பக்கவாட்டிலோ திரும்பி இருத்தல்

எப்படி பரிசோதிக்க வேண்டும்?

மேலாடையின்றி கண்ணாடி முன்பு நின்று மார்பகங்களை நன்கு கவனிக்க வேண்டும். அளவுகள் மாறியுள்ளதா, தோலில் புள்ளி புள்ளியாய் உள்ளதா, மார்பக அடர்த்தி அதிகரித்துள்ளதா, வீக்கம் உள்ளதா, காம்புகளில் திரவம் கசிகிறதா எனப் பார்க்க வேண்டும்.

முதலில் வலது கையை உயர்த்தி தலைக்குப் பின்னால் வைத்துக் கொள்ளுங்கள். இடது கையால் மார்பகங்களை சுழற்சி வடிவில் அழுத்திப் பாருங்கள்.

இப்படிப் பார்த்தாலே நமது மார்பகம் எப்படியிருக்கும், எந்தெந்த இடங்களில் திரள்கள் உள்ளன, எந்த வடிவில் உள்ளன, எத்தனை கடினமாக அல்லது மிருதுவாக உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அப்படி மாதந்தோறும் பார்த்து வந்தால் நமது மார்பகங்கள் நமக்கே நன்கு பரீட்சயமாகிவிடும். அப்போது கட்டி ஏதும் புதிதாக வந்தால், கடந்த முறை இது இல்லையே என மூளை தன்னிச்சையாகவே உங்களை எச்சரிக்கும்.

நமது கண் படும் உடல் பாகங்களான கை, கால்களில் கட்டி வந்தால் தெரிந்துவிடும். அதேபோல் நமது மார்பகங்களையும் நாம் கூச்சமின்றி தொட்டுப்பார்த்து நன்கு பரீட்சயமாக்கிக் கொள்ள வேண்டும்.

என்ன இருந்தாலும், இது “நமது உடல், நமது மார்பகம், நாம்தான் பாதுகாக்க வேண்டும்” என்ற பொறுப்பு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறார் மருத்துவர் கலைவாணி.

பொதுவாக நமது மார்பகங்கள் மென்மையானவை. அழுத்திப் பார்க்கும் போதே அதனுள் உள்ள பால் சுரப்பிகள் நன்கு தென்படும். அதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

ஆனால், கட்டி போன்ற ஏதேனும் ஒன்று கையில் பிடிபடும் வகையில் தெரிந்தால் கவனம் தேவை. அடுத்ததாக அக்குளுக்குள் வீக்கமோ, கட்டியோ உள்ளதா என்று பார்க்க வேண்டும். இதையும் அதே சுழற்சி வடிவில் சுற்றி சுற்றி ஆழமாக அழுத்திப் பார்க்க வேண்டும்.

"மார்பகக் காம்புகளைப் பிதுக்கும்போது ரத்தம் போன்றோ, பிரவுன் நிறத்திலோ திரவம் வெளிவருகிறதா என்று பார்க்க வேண்டும். காம்புகள் உள்நோக்கி உள்ளதா அல்லது ஒரு புறமாக இழுத்துக் கொண்டிருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். வலது புறம் மட்டுமின்றி இடதுபுறமும் இதேபோன்று பரிசோதிக்க வேண்டும்."

மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அச்சப்படவேண்டாம். ஆனால், 'பிள்ளைக்குப் பரீட்சை, மகளுக்கு கல்யாணம், பணம் இல்லை, அலுவலக வேலை, லீவு கிடைக்கல' என்று தனக்குத் தானே சாக்கு போக்கு சொல்லிக் கொண்டோ, குடும்பத்திடம் இதுபற்றிக் கூறாது மறைத்துக் கொண்டோ தாமதிக்கக் கூடாது.

உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவரின் அறிவுரைப்படி மெமோக்ராம் அல்லது மார்பக அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் வந்திருப்பது 'புற்றுநோய் கட்டியா? சாதாரண கட்டியா? ஒருவேளை வியர்வைக் கட்டியா?' எனக் கண்டறிந்து கொள்ளலாம்.

எப்போது பரிசோதிக்க வேண்டும்?

மாதவிடாய்க்கு முன்னதாக மார்பில் வலி என வருவோருக்கு பெரும்பாலும் மெமொகிராம் சோதனை செய்வதில்லை என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்ட் ஆக பணியாற்றி வரும் தேவி மீனாள்.

இது கதிர்வீச்சைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பரிசோதனை என்பதால் ஒரு பெண் மாதவிடாய் முடிந்த 14 நாட்களுக்குப் பிறகு தனக்கே தெரியாமல்கூட கருவுற்று இருந்தால்அந்தக் குழந்தையை இந்தப் பரிசோதனை பாதித்துவிடும்.

ஆகையால் மாதவிடாய்க்கு முன்னதாக இந்தப் பரிசோதனையைச் செய்வதில்லை என்கிறார் அவர். எனவே, "மாதவிடாய் முடிந்து 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை மட்டுமே தாங்கள் மெமோகிராம் பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும்" கூறுகிறார்.

இதுகுறித்துப் பேசிய ரேடியாலஜிஸ்ட் தேவி மீனாள், “மாதவிடாய் கால மார்பக வலி புற்றுநோயாக இருக்குமோ என்ற அச்சத்தில் பரிசோதனைக்குப் பல பெண்கள் வருகின்றனர்.

இது மாதவிடாய் சுழற்சியின் விளைவால் வருகிறது எனப் புரிய வைத்து விடுவோம். அதையும் மீறி அவர்களுக்கு அறிகுறி இருந்தால், மாதவிடாய் முடிந்த பிறகு பரிசோதனைக்கு வருமாறு எழுதிக் கொடுத்து அனுப்புவோம். ஏனெனில் அது நிஜமாகவே புற்றுநோய்க் கட்டியாக இருந்தால் மாதவிடாய்க்குப் பின் மறையாது,” என்றார்.

மார்பகப் புற்றுநோய் ரிஸ்க் யாருக்கெல்லாம் அதிகம்?

யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் வந்தால், தனக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுவாகவே சிலருக்குத் தொற்றிக் கொள்ளும். எனவே, “காதில் கேட்டாலே புற்றுநோய் தொற்றாது,” என நகைச்சுவையாக விளக்கமளித்தார் ரேடியாலஜிஸ்ட் தேவி மீனாள்.

“ அக்கா மாமியாருக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது, ஆகவே எனக்கும் வந்துடுமோ என்று அச்சமா இருக்கு, கொஞ்ச பரிசோதிச்சு சொல்லுங்க என்று சொல்லிக்கூட எங்களிடம் வருவார்கள்," என்று பொதுமக்களிடையே இதுகுறித்து இருக்கும் புரிதலின் நிலையை சான்றுடன் விளக்கினார் தேவி மீனாள்.

பொதுவாக, "புற்றுநோய் நெருங்கிய உறவுகளுக்கு வந்திருந்தால் மட்டுமே பெண்களுக்கும் வரும் வாய்ப்பு 20% உள்ளது. குறிப்பாக அம்மா, சித்தி, அக்கா, தங்கை, அக்கா அல்லது தங்கையின் மகள்கள் போன்றோருக்கு வந்திருந்தால், மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது,” என்ற அறிவியல் உண்மையை விளக்கினார் அவர்.

சுரப்பித் திசுக்களின் அடர்த்தி அதிகம் இருந்தால் அவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டார் ரேடியாலஜிஸ்ட் தேவி மீனாள்.

"அந்த திசுக்களின் அடர்த்தி, புற்றுநோய் வளரும் கட்டிகளைக்கூட மறைக்கக்கூடும். திசு அடர்த்தி அதிகம் என்பது பெரிய மார்பகங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று பொருளல்ல. குட்டி மார்பகங்களாக இருந்தாலும், திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருக்கல்ம்."

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு வலி ஏற்படும். ஆனால், அதுவும்கூட சில நேரம் புற்றுநோய் கட்டியாக இருக்குமோ என்ற அச்சத்தை சிலருக்கு ஏற்படுத்தும்.

அதுவும் மூடநம்பிக்கைதான் என மருத்துவர்கள் விளக்குகின்றனர். அதே போல், "குழந்தைக்குப் பால் கொடுக்காதவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும், பால் கொடுப்போருக்கு வராது," எனச் சொல்வதும் உறுதிப்படுத்தப்படாத ஒரு கூற்று என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

பரிசோதனை செலவு

நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் பெண்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக மெமோகிராம் பரிசோதனைக்கு ரூ.3,500 முதல் தனியார் மருத்துவமனைகள் தங்களது கட்டமைப்புக்கு ஏற்ப வசூலிக்கக்கூடும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டு அட்டை வைத்துள்ளோருக்கு இந்தப் பரிசோதனை இலவசமாகவே மேற்கொள்ளப்படுகிறது.

காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எனவே, செலவுக்குப் பயந்து எந்தப் பெண்ணும் அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மிக நுண்ணிய புற்றுநோய்க் கட்டியைக் கூட கண்டறியும் திறன் உள்ள இயந்திரம் உள்ளதாக ரேடியாலஜிஸ்ட் தேவி மீனாள் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பரிசோதனை இலவசமாகக் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கான பெரும்பாலான புற்றுநோய் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முந்திக்கொண்டு முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான்.

எனவே, மாதவிடாய் முடிந்த 3 முதல் 5 நாட்களில் தங்களுக்குத் தாங்களே ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி சுய பரிசோதனை செய்து கொள்வதே பெரும்பாலான உயிரிழப்பைக் குறைக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிச்சொற்கள் #மாதவிடாய் #மார்பக_புற்றுநோய் #breast_cancer #மார்பகப்_புற்றுநோய்
பிபிசி

மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக