புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_m10இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 05, 2023 11:04 pm

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு... நிபுணர்களின் பார்வை

செயற்கை நுண்ணறிவின் பார்வைக்குத் தப்பாத துறைகளே இல்லை எனும் நிலையில், தற்போது நீதித்துறையிலும் கால்பதித்திருக்கிறது AI.

‘இதுதான் மரபு... இது அப்படியே தொடர வேண்டும்’ என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டுவந்த பல விஷயங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது அறிவியல். ‘மன்னருக்கும் மடாதிபதிகளுக்கும்தான் தேரும் பல்லக்கும்... ஏழைகளுக்குக் கால் நடைதான்’ என்றிருந்த நடைமுறையை உடைத்து எல்லோரையும் ஒரே வாகனத்தில், ஒரே வேகத்தில் பயணிக்கவைத்தது ரயில். வழக்கு விசாரணையின்போது நீதிபதி உயரமான பீடத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்க, வழக்கறிஞர் கீழே... அதுவும் எழுந்து நின்றபடிதான் வாதாட வேண்டும் என்ற நடைமுறையை கொரோனா காலத்து காணொளி விசாரணை முறை மாற்றியது. வழக்கறிஞரும் நீதிபதிக்குச் சரிக்குச் சமமாக உட்கார்ந்தபடியே வாதாடினார். அதே பாணியில் இப்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவும் நீதித்துறையில் சில புரட்சிகளைச் செய்யப் புறப்பட்டிருக்கிறது!

இது குறித்து இத்துறையில் ஆர்வம் காட்டும் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம். “எல்லாத் துறைகளிலும் இன்று காலத்திற்கேற்ப பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. பிரிட்டிஷ் காலத்திலிருந்து பெரிய மாற்றத்தைச் சந்தித்திராத நீதித்துறையும் இப்போது அந்த மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் E-Filing, Video Conferencing போன்ற டிஜிட்டல் முறைகள். கொரோனா காலகட்டத்தில் உலகிலேயே காணொளி வாயிலாக அதிக தீர்ப்புகள் வழங்கப்பட்டது இந்தியாவில்தான். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் வருகைக்குப் பிறகு, நீதித்துறையில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களில் Machine Learning மற்றும் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், 34 ஆயிரம் தீர்ப்புகள், பல்வேறு மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இது வரவேற்கத்தக்கது. இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பயன்படும் ஒன்றாக இருக்கும். மற்றொன்று, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதம் AI உதவியுடன் தற்போது உடனுக்குடன் Transcript செய்யப்பட்டு, திரையில் நீதிபதிக்குத் தெரியும் வகையில் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கூடவே, இந்த எழுத்துப்பூர்வ வாதங்களை சேமித்துவைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவேளை ஆறு மாதங்கள் கழித்து தீர்ப்பளிக்க நேர்ந்தால்கூட வார்த்தை மாறாமல் வாதங்கள் அப்படியே இருக்கும். நீதித்துறையில் AI-ஐ பயன்படுத்துவதால் சில நன்மைகள் இருப்பதைப் போலவே, சில பாதகங்களும் இருக்கின்றன. ஏற்கெனவே நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை உள்ளீடாக (Input) வைத்து செயற்கை நுண்ணறிவு தீர்ப்பு வழங்கும் Predictive Judgement-ல் பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது.

இந்திய அரசமைப்பின் மூன்று முக்கிய தூண்கள் நிர்வாகத்துறை (Executive), சட்டமியற்றும் முறை (Legislature, நீதித்துறை (Judiciary) ஆகியவைதான். முதல் இரண்டு அமைப்புகளிலும் தங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், ஒரு குடிமகனின் கடைசித் தேர்வு நீதிமன்றமாக மட்டுமே இருக்கிறது. நீதிமன்றத்தையும் நாம் இயந்திரத்தனமாக மாற்றி விட்டோம் என்றால், மனிதாபிமானம் என்பது அறவே இல்லாமல் போய்விடும். முன்ஜாமீன், விபத்து இழப்பீடு, சிவில் வழக்கு போன்ற சில எளிமையான வழக்குகளில் முழுமையான AI பயன்பாடு என்பது நமக்குப் பலனளிக்கும். இதனால், நீதிமன்ற நேரம் சேமிக்கப்படும். நிலுவையிலுள்ள பல வழக்குகள் முடித்து வைக்கப்படும். ஆனால், மனித மனமும், மனித இதயமும் தலையிடக்கூடிய பல வழக்குகள் உண்டு. அதற்கு நாம் முழுமையாக AI-ஐ பயன்படுத்த முடியாது. இது போன்ற வழக்குகளில் நாம் ஒரு கலவையான (Hybrid) அமைப்பைத்தான் உருவாக்க வேண்டும். ஒரு நீதிபதி, தேவைப்பட்டால் AI-ன் ஆலோசனைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் நடைமுறைக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்” என்றார்.

இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனிடம் பேசினோம். “ஒரு குற்ற வழக்கைப் பொறுத்தவரை குற்றவாளியின் மனநிலை, குடும்பம், தொடர்ந்து தவறு செய்பவரா அல்லது ஆத்திரத்தில் செய்பவரா என்பதையெல்லாம் கவனத்தில்கொண்டுதான் தீர்ப்பளிக்க முடியும். பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்தும் ஒரு வழக்கைப் பார்க்க வேண்டும். வழக்கும், சாட்சியும் ஒன்றாக இருந்தாலும், கீழமை நீதிமன்றத்தில் `குற்றவாளி’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர், மேலமை நீதிமன்றத்தில் `நிரபராதி’ என விடுவிக்கப்படுகிறார். நீதிபதி என்பவர் மத, சாதிய, பாலினத் தளைகளிலிருந்து விடுபட்ட ஒருவராக இருக்க வேண்டும். அவர்களைக் கூர் உணர்ச்சி (Sensitize) கொண்டவர்களாக ஆக்க வேண்டும். தொடர் பயிற்சி மற்றும் கண்காணிப்பு மூலமாக நீதிபதிகளைக் கண்காணிக்க வேண்டும். நான் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, தனிப்பட்ட முறையில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து அவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டுவேன். அடுத்த முறை அந்தத் தவறு நடக்காது.

அப்படிப் பார்க்கும்போது, நமது நீதி அமைப்புக்கு AI ஒத்து வராது. சில வழக்குகளை வேண்டுமானால் AI இடம் ஒப்படைக்கலாம். நீதிமன்றத்துக்குச் சென்றாலே காலதாமதம் ஏற்படும் என்பதே நிதர்சனமாக இருக்கிறது. கம்ப்யூட்டர் வந்தபோது அனைத்து நீதிபதிகளும் அதை எதிர்த்தோம். ஆனால், அது தற்போது சாதாரணமாகிவிட்டது. நாளை AI-ம் அப்படியான ஒன்றாக மாறலாம். AI வருகையால் யாருக்கும் வேலை இழப்பு ஏற்படாது. சாதாரண வழக்குகளுக்குச் செலவிடும் நேரத்தை, முக்கிய வழக்குகளுக்காக நீதிபதிகள் செலவழிப்பார்கள், அவ்வளவுதான். ஆனால், இது குறித்து நீதிபதிகளுக்கு உரிய விழிப்புணர்வும், பயிற்சியும் வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வழக்குகளை நீதிபதிகள் கையாண்டுவருகின்றனர். வேலைப்பளுவால், மன இறுக்கத்தால் அவதிப்படும் ஒரு நீதிபதியால் நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்க முடியாது. AI எப்போது நீதிபதியாக அவதாரம் எடுக்கும் எனத் துல்லியமாகக் கூறிவிட முடியாது. ஆனால், அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை” என்றார்.

விகடன்

இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 06, 2023 11:01 am

"நான் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, தனிப்பட்ட முறையில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து அவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டுவேன். அடுத்த முறை அந்தத் தவறு நடக்காது." -
அனைவரும் பின்பற்றுவார்களா?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக