புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
366 Posts - 49%
heezulia
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
25 Posts - 3%
prajai
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_m10காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 30, 2023 12:20 pm

காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? MAgUfRW

மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற  ஒன்று இருந்தே தீருகிறது. அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன. நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது.

சரிந்து போன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு காமமே  முதல் காரணமாக இருக்கிறது.

தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்களில் பலர், தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும் காமமே காரணமாக இருக்கிறது.சராசரி மனித வாழ்வில் பசி,காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை..கட்டுப்பாடாக அதைத் தவிர்த்தவர்களுக்குப் பெயரே ஞானிகள்.

உடல் வற்றிப்போய் காய்ந்த எலும்புக்கூடக் கிடைக்காமல் பசியோடு அலையும் ஆண் நாய், ஒன்று ஒரு பெண் நாயைக் கண்டவுடன் பசியையும் மறந்து காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல் உண்டு. வடமொழியில் ”காமம்” என்ற வார்த்தைக்கு ”பாலுணர்ச்சி” என்பது மட்டுமல்லாமல் வேறு பல  பொருள்களும் உண்டு.

ஆனால் பாலுணர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த மதத் தத்துவங்களை ஆராயப்புகுந்தால் காமத்தை தவிர்ப்பதற்கு  அது சொல்லும் வழிகள் ஏராளம்.முதலில், சந்நியாசிகளில் ஒரு வகையினர் நிர்வாணமாக இருப்பதே, இந்த உணர்ச்சியைத் தவிர்க்கத்தான்.

பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தை தான் பெற்றிருந்தால், பெண்களுக்குத் தன் மீது ஆசை வராது, என்பதே அந்த நிர்வாணத்தின் நோக்கம்... ஆடை, அலங்காரங்களினால்  மூடப்பட்ட உடம்பு சுருதியைத் தூண்டிவிடுகிறது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும் ஷவரம் செய்யப்பட்ட முகமும், பெண்களின் உணர்ச்சித் தந்தியை மீட்டி விடுகின்றன.

ஆகவே அலங்கோலமான உருவத்தைச் செயற்கையாக தேடிக் கொள்வதே ஜடாமுடி தரிப்பதன் நோக்கம்.அவர்கள் வெறும் கோவணத்தோடு இருப்பதற்கும் காரணம் அது தான்.சகல உணர்வுகளையும் உறவுகளையும், துறந்து விட்ட நிலைக்கு”நிர்வாணம்“ என்பது பெயர்.

அந்த மகா நிர்வாணத்தை இந்து தத்துவங்களில் இருந்தே பௌத்தம் எடுத்துக்கொண்டது. இந்து மதமே உலகின் ஆதி மதம்.சந்நியாசம்” ”துறவு” என்பவை அது உண்டாக்கியவையே .அந்தத் துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும் என்பதால்.. பின்னால் தோன்றிய ஒவ்வொரு மதமும் அதனை மேற்கொண்டன.

உணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருள்களையும் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்களையும் விலக்கி , கடுங்குளிரிலும் கூட குளிர்ந்த நீரிலே நீராடி, காம உணர்வை அகற்றினர் இந்து ஞானிகள்.

ஆண் பெண் உறுப்புக்களுக்கு அவர்கள் ”ஜனனேந்திரியங்கள்” என்று பெயர் கொடுத்தார்கள்.

சில உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுப்பதற்காக  மட்டுமே இந்த அங்கங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.அதில் ஏற்படுகின்ற சுகத்தை ”அற்ப சுகம்” என்றார்கள். தமிழுங்கூட அதைச் ”சிற்றின்பம்” என்றே அழைத்தது.

மனைவி என்பவள் தன் கணவனின் காமச்சூட்டைத் தணிப்பதற்காக வரும் வெறும் கருவியல்ல. அதற்கு மேற்பட்ட சமூக சம்பிரதாயங்களே அவளுக்கு அதிகம்.

ஆணைவிடப் பெண்ணுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணர்ச்சி உண்டு.

ஆனால் பத்து மடங்கு அடக்கம் உண்டு. இது இயற்கையாக அவளுக்கு வந்ததல்ல.

இந்து மதம் காலங்காலங்களாகப் பெண்ணை அப்படிப் புடம் போட்டு எடுத்தது. இழிந்த குலப்பெண்கள், இதன் மறு எல்லைக்குப் போவதுண்டு. இந்த இருவகைப் பெண்டிரில், முதல் வகையினர் நூற்றுக்குத் தொண்ணூறு பேராவர். இரண்டாம் வகையினர்  விதிவிலக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு குலமகளுக்குப் பள்ளியறையும், காம உணர்ச்சியும் ஒரு குழந்தைக்குத் தாயாகிற தொழிலுணர்ச்சியே தவிர, சுகம் முதல் காரணமாகாது. சுகமும் அதிலே ஒன்று” என்பதைத் தவிர அதற்கு ஒரு தனி முக்கியத்துவத்தை அவர்கள் கொடுப்பதில்லை. காரணம் இந்து மதம் அவர்களை அப்படி வளர்த்திருக்கிறது.

கணவனிடம் அத்தகைய சுகம் கிடைக்காவிட்டாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதிலேயே  அதைப்பெற்று விடுகிறாள் ஒரு இந்துப்பெண். காமத்தின் மின்சாரத் தாக்குதல் ,நற்குடிப் பிறந்த இந்துப் பெண்களிடம் பலிப்பதில்லை.

ஆனால் ஆடவர்களது நிலை வேறு. அவர்களது ரத்த அரிப்பு, அந்த எல்லைக்கும் அவர்களைத் தூண்டுகிறது.

லௌகிக மனிதனுக்கு இந்த ராட்சத அரிப்பு ஏற்படும் போது, குலப்பெண்களைக் கெடுக்காமல், அவன் அந்த உணர்ச்சிகளைத் தணித்துக் கொள்வதற்காகவே ”தேவதாசி” முறை ஏற்பட்டது. முடிந்தவர்களுக்கு ஏக பத்தினி விரதத்தையும், முடியாதவர்களுக்கு இந்த வகை வாழ்க்கையையும் அது அனுமதித்தது.

ஒரே இதிகாசத்தில் ஒரே அரண்மனையில் இந்த இருவகைக் காட்சிகளையும் அது காட்டிற்று. தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர்” என்றது. அவன் மகன் ராமன் ஏகபத்தினி விரதன் என்றது. அது தசரதன் செயலைக்குற்றம் சாட்டவில்லை. ஆனால் ராமனின் நடத்தையைப் புகழ்ந்துரைத்தது.
பல மாதர் உறவுக்கு அது நியாயம் கற்பிக்கவில்லை. ஆனால் அனுமதித்தது.

அதே சமயம் ஒருதார வாழ்க்கையை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றிற்று. அதைத் தெய்வீகம் என்றது. மனித மனத்தின் சபலங்களை அங்கீகரித்து அதைத்தட்டிக் கொடுத்து, மெது மெதுவாக மீட்பதே அது செய்யும் பணி. எந்த உணர்ச்சியையும் அது அறுவைச் சிகிச்சை மூலம் தீர்க்க விரும்பவில்லை.

அங்கீகரித்துத் திருத்தும் நாகரிகத்தைக் கையாண்டது .நீ பன்றியைக் கூடச் சாப்பிடலாம். ஆனால் உடலில் கொழுப்பேறிவிடும், பார்த்துச் சாப்பிடு என்று சொன்னதே தவிர, கட்டளையிடவில்லை. எண்ணெய் ஸ்நானம்  செய்த அன்று மனைவியோடு உறவு கொண்டால், சிலருக்கு ஜன்னி காணும்.
அந்த உடற்கூறு உண்மையைக் கூட அது நாகரிகமாக ”தரித்திரம் பிறக்கும்” என்று சொன்னதே தவிர, ஜன்னி காணும் ”என்று பயமுறுத்தவில்லை.

அது காமத்தை ஒரு வகைக் குற்றமாகக் கருதவில்லை. ஆனால் குற்றங்களுக்குக் காரணமான காமத்தை அது கதைகளிலே விவரிக்கிறது. இளம் விதவைகள் வேதம் படிக்கிறார்கள். புராணம் படிக்கிறார்கள், இதிகாசம் படிக்கிறார்கள், உணர்ச்சியடங்கி விடுகிறதே? எப்படி? அவர்களே நமது வாரப் பத்திகைகளையும் மாதப் பத்திரிகைகளையும் தொடர்ந்து படித்தால் என்னவாகும்?

சராசரி மனிதனின், தவிர்க்க முடியாத உணர்ச்சியாகிய காமத்தை, இந்து மதம் எவ்வளவு வைதிகமாகக் கையாளுகிறது.

காமம் எப்போது பாவமாகிறது” என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது.இந்து சாஸ்திரங்களில் ஓரிடத்தில் ”உடலுக்கு ஏற்ற உறவு எது? என்பது கூடக் கூறப்பட்டிருக்கிறது.

தன்னைவிடப் பத்து வயதுக்கு மேல் அதிகமான ஒரு பெண்ணுடன் ஒருவன் உறவு கொண்டால் அவன் உடம்பு மெலிந்து முகம் களையிழந்து போகிறதது.

வயது குறைந்த பெண்ணோடு தொடர்பு கொண்டால் முகம் பிரகாசமடைகிறது.

ஒரு மத சாஸ்திரம் இதை ஏன் விவரிக்க  வேண்டும்? ஒன்று-ஒரு ஆரோக்கியமான உடம்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வது., இரண்டு- பத்து வயது அதிகமான பெண் குறைந்த வயதுடைய ஆணுடன் தொடர்பு கொள்ள வருகிறாள் என்றால், ஒன்று அவள்  கெட்ட நடத்தையுடையவளாக இருக்க வேண்டும். அல்லது  இன்னொருவன் மனைவியாக இருக்க வேண்டும்., அதைத் தடுப்பது.

அப்படியென்றால் குறைந்த வயதுடைய பெண்ணோடு தொடர்பு கொள்வதைச் சிலாகித்துப் பேசுவது கற்பழிப்பதற்கு வகை செய்யாதா? இல்லை, அதனால் தான் அது பல தர மணத்தை ஏற்றுக்கொண்டது. நீ எதை விரும்பினாலும், அதற்கொரு அளவை நிர்ணயித்து, அதை அனுமதித்துப் பின் உன்னை ஞானியாக்குவதே இந்துமதம்.

காம உணர்ச்சியிலும் அதன் கட்டம் அத்தகையது தான்.

எப்போது காம உணர்ச்சி பாவமாகிறதோ அப்போது தண்டனை கடுமையாகிறது.

இந்து மதத்தின் பயமுறுத்தல் என்பது, அங்கே மட்டும் தான் வருகிறது. யாரையும் கெடுக்காத யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு ஆடவனின் உணர்ச்சிகளை, இந்து மதம்  மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது...‌‌

(அர்த்தமுள்ள இந்துமதம்)
கவியரசு கண்ணதாசன்




காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக