புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_m10பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 25, 2010 10:06 pm

பூக்கள் பூத்திருப்பதைப் பார்க்க யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். காட்டில் விட்டேத்தியாக மலர்ந்திருக்கும் மலர் முதலாக வீட்டுத் தொட்டியில் ஒற்றையாகப் பூத்திருக்கும் ரோஜா வரை எல்லாப் பூக்களுமே இயற்கையின் பேரழகுகள். சரம் சரமாக மரக்கிளைகளில் தொங்கும் மஞ்சள் வண்ணச் சரக்கொன்றை மலர், கை விரல்கள் போன்ற சிவந்த காந்தள் மலர், கவர்ச்சியான தோற்றத்தில் நாகலிங்கப் பூ, குற்றால மலையில் மணம் வீசிடும் செண்பகப்பூ. . . இப்படி நம்மைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான மலர்கள். பெயர் தெரியாத காட்டுப்பூக்கள் கூட காற்றில் அசைந்து தம்மை அடையாளப்படுத்துகின்றன. தமிழர் வாழ்க்கையில் பூக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை. சங்க காலத்தில் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் பிரித்த தமிழரின் ஆழ்மனத்தினுள் தொன்மமாகப் பூக்கள் படிந்துள்ளன. பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலான எல்லா நிலைகளிலும் பூக்களை விட்டு வாழ இயலாத நிலையே நம்மிடம் உள்ளது.

பூக்கள் என்றால் காலங்காலமாகப் பெண்கள் தலையில் அலங்காரமாகச் சூடிக்கொள்வது என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. போன நூற்றாண்டின் முற்பகுதியில் தலைமுடியைக் கொண்டையாக அள்ளிச் செருகி பூக்களை வைத்துக் கொண்டது ஆண்கள்தான். பெண்கள் தாலியில் பூக்களைச் சூடிக் கொண்டனர். அறுபதுகளில் குடுமி வைத்திருந்த ஆண் குழந்தைகளுக்குப் பூச்சூடிப் புகைப்படம் எடுத்தனர். கிராமத்து ஆண்கள் காது மடல்களில் பூக்களை வைத்துக் கொண்டிருந்தனர். விவரம் அறியாத கிராமத்தினர் என்பதைச் சுட்டிக்காட்ட ‘என்ன காதுல பூ வைக்கப் பார்க்கிறே. . . நான் என்ன காதுல பூ வைச்சிருக்கிறேனா?. . .’ போன்ற மரபுத் தொடர்களில் சமூகப் பழக்கவழக்கம் மாறி வருவதைக் காட்டின. மரிக்கொழுந்து, செண்பகப்பூ, மல்லிகைப் பூ போன்ற பூக்களைக் காதில் செருகிக் கொண்டு திரிந்த ஆண்கள் எங்கள் ஊரில் இருந்தனர்.

மல்லிகைப் பூ, சாதிப்பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூ போன்ற பூக்களைப் பெண்கள் விரும்பி அணிவது இன்று பெரு வழக்கிலுள்ளது. சின்ன ஊர்களில்கூடப் பூக்கடைகள் உள்ளன. அறுபதுகளில் பூ விற்பனை என்பது மிகக்குறைவு. கோயிலைச் சார்ந்து இருக்கும் ‘பண்டாரம்’ என்ற சாதியினர் மட்டும் பூக்களைக் கட்டி விற்பனை செய்தனர். மலர் மாலைகள் தவிர, பல்வேறு மலர்களைத் தொடுத்துக் ‘கதம்பம்’ என்ற மலர்ச் சரமும் விற்பனை ஆயின. கோவில்களுக்குத் தவிர, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வீட்டு மாடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சாமி போட்டோக்களுக்குக் கதம்பச் சரம் கட்டப்பட்டது. கதம்பச் சரத்தைக் கையினால் முழமிட்டு அளந்து விற்றனர்.



பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 25, 2010 10:07 pm

கல்யாணம், திருவிழா போன்ற விசேஷநாட்களில்தான் கிராமத்துப் பெண்கள் தலைமுடியில் பூக்களைச் சூடினர். யாராவது ஒரு பெண் தலையை நன்கு சீவி, கண்ணுக்கு மையிட்டு, முகத்திற்குப் பவுடர் பூசி, தலையில் நிறைய பூச் சூடுவதைத் தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தால், அவளைப் பற்றிப் பிற கிராமத்துப் பெண்கள் ‘ஒரு மாதிரியாகப் பேசினர். ம் கிளம்பிட்டா. . . தேவிடியா மாதிரி சீவிச் சிங்காரிச்சிட்டு’ என்று பெண்கள் சாடை பேசுவதைக் கேட்டிருக்கிறேன். தூய ஆடைகள் உடுத்தி, அலங்கரித்துக் கொள்வதைக் கூடத் தவறாகக் கருதிய ‘மனோபாவம்’ வக்கிரமானதுதான்.

இன்று மல்லிகைப் பூச் சரத்தை நீளமாகத் தலையில் தொங்க விட்டுக் கொள்வது பெண்களிடையே பெரு வழக்காக உள்ளது- சுடிதார் அணியும் இளம்பெண்கள் கூட மல்லிகைச் சரத்தை வைத்துக் கொண்டு கல்லூரி, அலுவலகங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். அறுபதுகளில் சாமந்திப் பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற பூக்கள் தலையில் சூடப் பயன்பட்டன. மல்லிகைப் பூவின் பயன்பாடு மிகக்குறைவு. மஞ்சள் சாமந்திப் பூக்களை நெருக்கமாக வைத்துக் கட்டப்பட்ட சரத்தினை, மடித்துக் கட்டப்பட்ட சடைகளுக்கு மேலாகப் பின்னந்தலையில் வளைவாக வைத்துச் சூடியவாறு வரும் பதின்பருவத்து வளரிளம் பெண்கள் நிரம்ப இருந்தனர். கனகாம்பரமும் மல்லிகைப் பூவும் கலந்து தொடுக்கப்பட்ட சரம் ‘திரும்பிப்பார்’ என்ற பெயரில் எழுபதுகளில் பிரபலமாக இருந்தது. மல்லிகைப் பூவைத் தலையில் சூடுவது என்பது எழுபதுகளில்தான் பெரிய அளவில் தொடங்கியது. குடும்பப் பெண்ணுக்கான அடையாளமாகவும், பூவின் வாசம் மூலம் கணவனை ஈர்ப்பதற்கான வழியாகவும் மல்லிகைப்பூ மாற்றப்பட்டதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது.

தாழை மரப்புதர்களிடையே உச்சியில் மலர்ந்து வெளியெங்கும் மணம் வீசும் தாழம்பூவின் வாசம் நெடியடிக்கும், சிலருக்குத் தலைவலியை வரவழைக்கும். தாழம்பூவைத் தலையில் வைப்பதற்கு முன்னர் கவனமாகப் பூவைப் பார்க்க வேண்டும். ஏனெனில் மிகச்சிறிய அளவில் அப்பூவில் இருக்கும் பூ நாகம் தீண்டினால் மரணம் நிச்சயம் என்று பலரும் நம்பினர். தாழம்பூவிற்குள் நாகம் இருக்க வாய்ப்பில்லை. ஆற்றங்கரையோரம் பரந்து கிடக்கும் தாழைமரப் புதர்களிடையே நிச்சயம் பாம்புகள் இருக்கும். பூவைப் பிடுங்கப் போய்ப் பாம்பினால் தீண்டப்பட வாய்ப்புண்டு. எனவே எச்சரிக்கைக்காக அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். தாழம்பூவைத் துணிமணிகள் வைத்திருக்கும் பெட்டியில் வைத்து மூடி வைத்துவிட்டால் நான்கைந்து மாதமானாலும் உடைகள் மணத்துடன் இருக்கும். தாழம்பூவின் உள்மடல்களை அழகாகக் கத்தரித்துச் சிறிய துண்டுகளாக்கி இளம் பெண்ணின் சவுரி முடி வைத்துப் பின்னப்பட்ட நீண்ட சடையில் வைத்துத் தைத்து அலங்கரிப்பதில் திறமை வாய்ந்த பெண்கள் இருந்தனர். வயதுக்கு வந்த வளரிளம் பெண்ணின் சடைமுடியைத் தாழம்பூவினால் அலங்கரித்து, ஸ்டுடியோவிற்கு அழைத்துப் போய் பெரிய கண்ணாடியில் சடை தெரியுமாறு நிழற்படம் எடுத்து வீட்டில் தொங்கவிடுவது எழுபதுகளில் மோஸ்தராக இருந்தது.

ஆண் தான் விரும்பிய பெண்ணுக்குப் பூ வாங்கித் தருதல் என்பது ஒருவகையில் குறியீட்டுத் தன்மையுடையது. பெண் மீதான தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் வழிமுறையாகப் பூ இருந்தது. பூ, மிக்சர், பூந்தி போன்றவற்றை வாங்கிக் கொடுத்துத்தான் தாசியைக் கூட நெருங்க முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த பெரிசுகளின் பேச்சுகளை எழுபதுகளில் நான் கேட்டிருக்கிறேன்.



பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 25, 2010 10:08 pm

காதலின் அடையாளமாக ஒற்றை ரோஜாப் பூ முன்னிறுத்தப்பட்டதில் திரைப்படத்திற்குப் பிரதானப் பங்கு உள்ளது. இளைஞன் ரோஜாவைத் தந்து ‘ஐ லவ் யூ’ சொல்வதும், அதைக் கேட்டவுடன் பெண்ணின் மனம் மகிழ்வதும், மிகவும் விருப்பத்துடன் அந்தப் பூவை வாங்கித் தலையில் சூடுவதும் காட்சி ஊடகம் நம்மிடையே ஏற்படுத்தியிருக்கும் புனைவு. அதிலும் விரும்பிய பெண்ணின் தலையில் ஆண் மல்லிகைச் சரத்தையோ அல்லது ஒற்றை ரோஜாவையோ சூடும்போது, திரையில் காட்டப்பெறும் பெண்ணின் முகத்தில் வெளிப்படுவது புணர்ச்சிப் பரவசத்தின் உச்சமாக இருப்பது விநோதம்தான்.

தமிழர் வாழ்க்கையில் பூக்கள் இன்றி எந்த முக்கியமான நிகழ்வு நடைபெறும் என்பது யோசிக்கப்பட வேண்டிய கேள்வி. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் பூக்கள் துணைக்கு வருகின்றன. குழந்தைக்கு மொட்டையடித்து, காது குத்திக் கழுத்தில் மலர்மாலை அணிவிப்பது முக்கியமான சடங்கு. ஏன் பத்துமாதக் குழந்தையின் தலைமுடியைச் சீவிச் சிறிய குடுமியாக்கி, அதில் பூச்சரத்தை வளையமாக வைப்பதுகூட நம்மிடையே வழக்கில் உள்ளது. பெண் வயதுக்கு வந்தவுடன் செய்யப்படும் சடங்கினால் அவளுக்குத் தாய்மாமன் மலர்மாலை அணிவிக்கிறார். திருமண நாளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மலர் மாலைகள் அணிவித்துக் கையில் பூச்செண்டு தருகின்றனர்.

திருமணம் என்ற உறவு உறுதியாகிவிட்டது என்பதனை முடிவு செய்ய மணமகனும் மணமகளும் மணமேடையில் மூன்று தடவைகள் மாலைகளை மாற்றிக் கொள்கின்றனர். திருமண நாளில் வழக்கதைவிட சிலமடங்குகள் கூடுதலாகப் பூக்களைத் தலையில் சூடியுள்ள மணப்பெண்ணுக்கு, அந்த மலர்களின் வாசம் பரவசத்தை ஏற்படுத்துகிறது; மணமகனுக்குப் பாலியல் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது. பெண் மகப்பேறு அடைந்தவுடன், ஏழாம் மாதம் நடைபெறும் வளைகாப்பு விழாவிலும் பெண்ணுக்கு மலர் மாலை அணிவிக்கப்படுகிறது.

கோவிலில் அர்ச்சகரால் சூட்டப்பெறும் மாலை என்பது ஆணுக்கான சமூக அந்தஸ்தாகத் திருவிழாவில் வடிவெடுக்கிறது. கோவிலில் ‘முதல் மரியாதை’ என்பது மலரையும் உள்ளடக்கியதுதான். பரம்பரையாகக் கிராமத்துக் கோவிலில் இருந்து வழங்கப் பெறும் ‘மாலை’ வழங்குவதில் ஏற்படும் சிக்கல் காரணமாகக் கொலைகள்கூட நடைபெற்றிருக்கின்றன.

சமூகத்தில் யாரையாவது வரவேற்று மரியாதை செய்யவேண்டுமெனில் மலர் மாலைகள் மிகவும் அவசியம். அரசியல் தலைவர், மடாதிபதிகள் போன்றோரை மரியாதை செய்ய மலர் மாலைகள் பெரிதும் பயன்படுகின்றன.

தெருவோரக் கோவில் தொடங்கி, மதுரை மீனாட்சியம்மன் போன்ற பெரிய கோவில்கள் வரை, இறைவனை வழிபடப் பூக்கள் அவசியம். ‘பூசை’ என்ற சொல்லே ‘பூ செய்’ என்பதிலிருந்து வந்தது. பூக்களைத் தூவியும் பூக்களால் அலங்கரித்தும், மலர் மாலை அணிவித்தும் இறை வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது. உற்சவ மூர்த்தி முழுக்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஊர்வலம் வருவது இன்றும் பல கோயில்களில் வழக்கமாக உள்ளது. துடியான தெய்வங்களுக்கும் ‘பலி’ தரவிருக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் கழுத்தில் மாலை சூட்டி அழைத்து வந்து வெட்டுவது மரபாக உள்ளது.

மரணமடைந்தவரின் சடலத்திற்கு மாலை சூடுவது என்பது பன்னெடுங்கால வழக்கு. புதைகுழியின் மீது மலர்களைத் தூவுவது இறந்தவரின் புகைப்படப் போட்டாவின்மீது மாலை சூடுவது போன்றன நடைமுறையில் உள்ளன. இறந்தவர் கடவுளாகிவிட்டார் என்ற கருத்தில், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் மலர்ச்சரமானது போட்டாவில் சூட்டப் பெறுகிறது.

பெண் பருவமடைதலைப் பூப்படைதல் என்ற சொல்லால் குறிக்கப்பெறுவது நாட்டார் வழக்கு. பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் பருவமடைதல் சடங்கானது விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ‘நான் பூத்ததே, மாமா உனக்காகத்தான்’ எனப் பாடும் இளம்பெண்கள் தமிழ்த் திரைப் படங்களில் உண்டு.

இளம்பெண்ணை மணமகளாக உறுதி செய்வதற்காகப் பெண் பார்க்கச் செல்லும் மாப்பிள்ளை வீட்டார், அப்பெண் பிடித்தவுடன், ‘திருமணம் விரைவில் நடைபெறும்’ என்பதன் அடையாளமாகப் ‘பூ வைத்தல்’ என்ற சடங்கு மதுரைப் பக்கத்தில் நடைபெறுகிறது. நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கு முன்னர், இரு வீட்டாரும் மனமொப்பியவுடன், மாப்பிள்ளையின் சகோதரிகள், அம்மா போன்ற பெண்கள் மணப்பெண்ணின் தலையில் மல்லிகைப் பூவைச் சூடுவார்கள். உடனடியாக நிகழும் ‘பூவைத்தல்’ நிகழ்வானது, பெரிதும் ஆரவாரம் அற்றது.

தமிழகத்தில் குடும்பப் பெண் அல்லது சுமங்கலி எனப்படுபவளின் அடையாளமாகப் பூ, பொட்டு, மஞ்சள், குங்குமம் குறிக்கப்படுகின்றன. தலையில் பூவைச் சூடுதலுக்கும் பத்தினிப் பெண்ணுக்குமான தொடர்பு ஆராயத்தக்கது. பண்டைக்காலத்தில் இளம் பெண்கள் பூச்சூடும் பழக்கம் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். திருமணம் ஆன பெண் என அடையாளப் படுத்திட ‘பூ’வானது குறியீடாகப் பயன்பட்டுள்ளது. நெற்றியில் ‘பொட்டு’ வைக்கும் வழக்கம் கூட அப்படித்தான் உருவாகியிருந்திருக்கவேண்டும். திருமணமான பெண்கள் நெற்றியின் உச்சியில் வகிட்டிற்குக் கீழ் வைக்கப்படும் குங்குமம் என்பது 90களுக்குப் பின்னர்தான் தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளது. இதுபோல குங்குமம் வைத்துக்கொள்வது பெங்காலி, கன்னட, ஹிந்திக்காரப் பெண்களிடமிருந்து தமிழகத்திற்குப் பரவியுள்ளது. ‘திருமணம் ஆன பெண்’ என்பதில் ஏதோ ஓர் புனிதத்தைக் கட்டமைப்பதைப் பெண்களே தொடர்ந்து விருப்பத்துடன் செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் இறந்தவுடன் பெண் சூடக்கூடாது என்று பூவிற்கு விதிக்கப்படும் தடையானது, ஒரு காலத்தில் திருமணமான பின்னர்தான் பெண்கள் பூவைத் தலையில் சூடினர் என்று கருத இடம் அளிக்கின்றது. இத்தகைய விலக்கு இன்று தேவையில்லை. ஏனெனில் ஒரு வயது நிரம்புவதற்குள் பெண் குழந்தையின் சிறிய குடுமியில் மலர் சூட்டப்படுகிறது. பெண்ணின் திருமணத்திற்கும் பூவிற்கும் எந்தவொரு சம்பந்தமுமற்ற நிலையில், அவளுடைய கணவன் இறந்ததற்காகப் பூவைச் சூடக்கூடாது என்பது தவறு. பூவைப் போன்ற மெல்லிய குணமும் அதியற்புதமும் மிக்க பெண்ணை ‘பூவை’ என்று அழைக்கும் தமிழகத்தில் பெண்கள் என்றும் பூக்களைச் சூடியிருக்கவேண்டும் என்பதுதான் சரியான பார்வை.

இஸ்லாமியர்களுக்கும் மல்லிகைப் பூக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. தர்காக்களில் அடங்கிய சூபிக்களின் சமாதிமேல் போர்த்தப்பட்டுள்ள பச்சைவண்ணத் துணிக்கு மேலாக மல்லிகைச்சரம் போர்த்தப்படுகின்றது. திருமண நாளில் மணமகனின் முகத்தை மல்லிகைச் சரங்களால் மறைப்பது இன்றும் வழக்கினில் உள்ளது. இறந்தவரின் சடலத்தைத் தூக்கிச் செல்லப் பயன்படும் மரப்பெட்டியின் மீது மல்லிகைச் சரங்கள் தொங்க விடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இஸ்லாமியர்களின் அன்றாட வாழ்க்கையானது முழுக்க மலர்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கப் பிரிவைச்சார்ந்தவர்கள், இந்து சமயத்தினரைப் போலவே பூக்களை நேசிக்கக் கூடியவர்கள். பூக்களைச் சாத்தான் என்று வெறுத்து ஒதுக்கும் பெந்தகோஸ் பிரிவிலும் நவீனத் தமிழரில் சிலர் இருக்கின்றனர்.

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பூக்களை வைத்துப் பாடப்பட்டுள்ள பாடல்களைத் தொகுத்தால், அவை சிலதொகுதிகளாக விரியும். கவிஞரின் கற்பனைக்கும் பூக்களுக்குமான உறவு மிகவும் நெருக்கமானது.

பூக்கள் பற்றிய எனது எண்ணங்களின் பதிவில் நிறைவாக ஒரு பழக்கத்தைப் பதிவு செய்கிறேன்.

அதுவா? இதுவா? என்று இரட்டை மனநிலையில் குழம்பிக்கொண்டு, எந்தத் தீர்வுக்கும் வரவியலாமல் தவிக்கும்போது இரு வண்ணப் பூக்களைத் தனித்தனியே ஒரே மாதிரி இலையில் பொதிந்து, கோயில் வாசலில் போட்டு, குழந்தையின் மூலம் ஏதோ ஒரு பொட்டலத்தை எடுக்கச் சொல்வார்கள். அதில் தான் மனத்தில் நினைத்த பூ இருந்துவிட்டால் போதும், உடன் செயலில் இறங்கிவிடுவார்கள். பூவைத் தேர்ந்தெடுத்தல்மூலம் வேறு ஏதோ ஒன்றைத் தீர்மானிப்பது, புனைவின் வால் திடீரென நம்மை உரசி விட்டுப் போவதுபோலத்தான்.



பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக