புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசிலாமணீஸ்வரர் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 1:49 pm

மாசிலாமணீஸ்வரர் கோயில்  Masilamaneeswarar

முல்லைக்கொடிப் புதரில் இருந்து சிவன் தோன்றியதால், "திருமுல்லைவாயல்' அல்லது "திருமுல்லைவாசல்' என்று அழைக்கப்படுகிறது.

மாசிலாமணீஸ்வரர் கோயில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ள சுந்தரர் பாடல் பெற்ற சிவன் தலமாகும்.

"கோயிலின் இறைவனைப் பற்றி கேட்டாலே முக்தி அடையலாம்' என்பது சான்றோர் வாக்கு. 276 தேவாரப் பாடல் பெற்ற சிவன் தலங்களில் ஒன்றாகும். ஏழாம் நூற்றாண்டின் தமிழ் சைவ தோத்திரப்பா தேவாரத்திலும் பாடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரும் போற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். மாதவ சிவஞான யோகி, ராமலிங்க அடிகளார், "இரட்டைப் புலவர்கள்" ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

இத்தலம் கிருத யுகத்தில் ரத்தினபுரமாகவும், திரேதா யுகத்தில் வில்வவனமாகவும், துவாபர யுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. புராண வரலாற்றுப் பெயர் "சண்பகாரண்யம்' என்பதாகும்.

தொண்டை நாட்டு வடதிசையில் குறும்பர்களான ஓணன், வாணன் ஆகியோர் அடுத்தவர்கள் பொருள்களை அபகரித்து, கோட்டைகளில் பதுங்கி கொடுமைகளைச் செய்துவந்தனர். அருகிலுள்ள தொண்டை நாட்டுப் புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்தனர்.

தகவலறிந்த தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். இதையறிந்த குரும்பர்கள் தங்களது தெய்வமான வைரவனின் வரத்தால் தொண்டைமானின் படைகளைத் துரத்தினர். அன்று இரவு தொண்டைமான் போரை நிறுத்தி பாசறைக்குத் திரும்பினான்.

அப்போது யானையின் காலில் சூழ்கொடி முல்லை சிக்கிக் கொள்ள, முல்லைக் கொடியை மேலிருந்தவாறே மன்னன் வெட்டினான். குபீரென ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ந்த மன்னன் இறங்கிப் பார்த்தபோது, சுயம்பு லிங்கமாய் சுடரொளி வீசிய இறைவனின் லிங்கத்தின் மேற்பகுதி வெட்டுப்பட்டு, குருதி பீறிட்டுவந்தது. தவறு செய்து விட்டதாகக் கருதிய மன்னன், அதே வாளால் தன் தலையை துண்டித்துக் கொள்ள முயல இறைவன் வெளிப்பட்டு தடுத்து ஆட்கொண்டதோடு "மன்னனே வாளால் வெட்டுண்டாலும் யாம் மாசிலாமணியாக (குறையில்லாமணியாக) இருப்போம். வருந்தற்க! நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக' எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்றவுடன், அவர்களின் அரண்மனையில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்தான். வெற்றியைத் தேடித் தந்த இறைவனுக்கு, மாசிலாமணீசுவரரின் திருமேனியைக் கண்ணாரக் கண்டு, கோயில் அமைத்து நித்திய பூசைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடு செய்து வழிபட்டவன் தொண்டைமான் சக்கரவர்த்தி.

இன்றும் சந்நிதி முன்புறம் வெற்றிச் சின்னமான வெள்ளருக்கந் தூண்கள் கருவறையின் வாயிலில் உள்ளன. இந்தத் தூண்கள் 11 அடி உயரம், சுமார் 2.5 அடி சுற்றளவு கொண்டவை. போரில் துணை நின்ற நந்தி காவல் பணியைக் கொண்டு பின்புறம் இறைவனுக்குக் காட்டி கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறது. கோயிலில் நவக் கிரகத்துக்கு சந்நிதி இல்லை. கருவறையின் விமானம் கஜ பிருஷ்டம்(யானையின் பின்புறம்) எனப்படும் சிறப்பு கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் அகழி போல் உள்ளது . வசிஷ்டர் இங்கு தவம் செய்து இறைவனை வழிபட்டு , தெய்வீகப் பசுவான காமதேனுவைப் பெற்றார்.

இக்கோயில் வரலாற்றை பற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார். அவர் வாக்குத் தவறியதால் இரு கண்களும் இழந்து ஊன்றீசர் ஊன்றுகோல் கொடுக்க நடந்தபடி இத்தலத்து குற்றமொன்றும் இல்லாத இறைவனை அகக்கண்ணால் கண்டு மகிழ வந்து பாசுபதாப்பரஞ்சுடரே எனப் தேவாரம் பாடிய தலம்.

கருவறைக் கடவுள் #மாசிலாமணீஸ்வரர் லிங்க வடிவில் சதுரபீட ஆவுடையாருடன் உயரமான சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். "தீண்டாத்திருமேனி' என்பதால் யாரும் தொடுவதில்லை. லிங்கம் மன்னனின் வாளால் வெட்டப்பட்டதன் காரணமாக வடுவுடன் உள்ளது. இந்த வடுவை மறைக்க, லிங்கம் சந்தனத்தால் மூடப்பட்டிருக்கிறது.

சித்திரை மாதத்தில் சதய நட்சத்திரத்தில், பழைய சந்தனம் அகற்றப்பட்டு புதியதாகச் சார்த்தப்படுகிறது. அந்த நாளில் மட்டும் நிஜரூப தரிசனம் காண முடியும். சந்தனப் பூச்சுடன் இருப்பதால் லிங்கத்துக்கு அபிஷேகம் இல்லை, அது பீடஆவுடையார்க்கு மட்டுமே செய்யப்படுகிறது.

திரி}சக்தி கோயில்கள் வரிசையில் திருமுல்லைவாயில் ஸ்ரீ கொடியிடை நாயகி அம்பாள் கிரியா சக்தியாகும். சிவனின் வலது பக்கத்தில் உள்ளது. சுவாமி அம்பாள் இரண்டு சந்நிதிகளும் கிழக்கு திசையை நோக்கி உள்ளன. இங்குள்ள அம்மன் "கொடியிடை நாயகி' என்ற " ஸ்ரீ லதாமத்தியம்பாள்' என வணங்கப்படுகிறாள். அம்பாளை வழிபட, புதுமணத் தம்பதிகளுக்கு வளமான வாழ்வு அமையும். திருமணத் தடையும் அகலும்.

கோயில் வெளியே குளம் அமைந்துள்ளது. தீர்த்தம் கல்யாண தீர்த்தம், அக்னி தீர்த்தம், சுப்ரமணிய தீர்த்தம், பாலாறு ஆகியவையாகும். தல விருட்சம் முல்லையாகும். கோயில் திருப்பணி முடிக்கப்பட்டு ஜூலை 6-ஆம் தேதி காலை 9 முதல் 10-க்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக