புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
90 Posts - 76%
heezulia
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
255 Posts - 76%
heezulia
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:27 pm

First topic message reminder :

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  - Page 2 F3iz7Nh


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – நேற்று இரவு முதல் இப்போதுவரை நடந்தது என்ன?

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த அமலாக்கத்துறை இப்போது அவரைக் கைது செய்திருக்கிறது. இவ்விஷயத்தில் நேற்று இரவிலிருந்து பரபரப்பான பல காட்சிகள் அரங்கேறின. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.

ஜூன் 13, செவ்வாய்க்கிழமை காலை: சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல இருந்த நிலையில் காரில் இருந்த செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாகக் கூறி, கதறி அழுது துடித்ததால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

ஜூன் 14, புதன்கிழமை காலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். இதன்பிறகு, ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார்: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? … சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”

ஜூன் 14, புதன்கிழமை காலை: சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தநாளப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாகவும் ஒரு அறிக்கையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டது. மேலும் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தது.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அளித்த அறிக்கையில் “இது விசாரணை அல்ல; பழிவாங்கும் நடவடிக்கை,” என்று கூறினர்.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார்.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: அமலாகத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு உட்பட, மூன்று மனுக்களின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. இவற்றின்மீதான தீர்ப்பை நீதிமன்றம் நாளைக்கு (ஜூன் 15, வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.

குறிச்சொற்கள் #செந்தில்_பாலாஜி #திமுக. #ஸ்டாலின் #பாஜக



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:43 pm

பழிவாங்கும் நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி விமர்சனம்


சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்க்க சக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. மேற்குவங்கம், டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் என பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ச்சியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.



மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி


செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே புகார் கூறிவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்ப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜி செய்துள்ள முறைகேடுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது தலைமைச் செயலகத்தில் வருமானவரிச் சோதனை நடந்தபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதை ஆதரித்தார் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:47 pm

செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் #செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு உட்பட 3 மனுக்கள், மற்றும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு மீதான தீர்ப்பை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்து உள்ளது.

சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டும், காவிரி மருத்துவமனைக்கு மாற்ற கோரியும் உள்ளிட்ட 3 மனுக்களை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் வாதாடியதாவது: கைது செய்யப்படுவதற்கான சம்மனை, செந்தில்பாலாஜியிடம் வழங்கினோம்.

ஆனால், அவர் பெற மறுத்துவிட்டார். மனைவி மேகலாவை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை. இதனால் குறுஞ்செய்தி மற்றும் இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கையில் சட்ட விதிமீறல் இல்லை. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், நோட்டீஸ் தர வேண்டும் என்ற குற்றவியல் நடைமுறைச்சட்டம் பொருந்தாது. செந்தில்பாலாஜி மீதான வழக்கில் முகாந்திரம் உள்ளது. கைது நடவடிக்கையில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

ரிமாண்ட் செய்யப்பட்டால் ஜாமினில்தான் வெளியே வர வேண்டும். ரிமாண்டை நிராகரிக்குமாறு கோர முடியாது. அவருக்கு ஜாமின் தரக்கூடாது. நேற்று வரை செந்தில்பாலாஜி நலமாக தான் இருந்தார். செந்தில்பாலாஜியிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது.சுதந்திரமான மருத்துவ குழுவை வைத்து செந்தில்பாலாஜி உடல்நிலையை ஆராய வேண்டும்.

மருத்துவ குழுவை நீதிமன்றமே நியமிக்கலாம். அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும்.இடைக்கால ஜாமின் வழங்க சட்டத்தில் இடமில்லை. என தெரிவித்தார். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்தார்.

செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ வாதாடுகையில் கூறியதாவது:

விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு துன்புறுத்தப்பட்டார். 3 அடைப்புகள் உள்ளதால், பைபாஸ் அறுவை சிகிச்சையை 2 நாட்களுக்குள் செய்ய வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சை செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து உள்ளது.

அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும். அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இஎஸ்ஐ மருத்துவர்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். 22 மணி நேரமாக அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி துன்புறுத்தப்பட்டு உள்ளார்.

செந்தில்பாலாஜி எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில்பாலாஜிக்கு ஜாமின் மனு கேட்டு தாக்கல் செய்தமனுக்கள் மற்றும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரிய மனு மீதான விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:48 pm

செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: அமலாக்கத்துறை விளக்கம்


செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர் வாங்க மறுத்து விட்டார் என செந்தில் பாலாஜி கைதுக்கான விவரம் குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் உள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: செந்தில்பாலாஜிக்கு இன்றும் (14 ம் தேதி) சம்மன் அனுப்பப்பட்டும் அவர் வாங்க மறுத்து விட்டார் .செந்தில்பாலாஜி வங்கி கணக்கில் ரூ.1.34 கோடி இருந்தது.செந்தில்பாலாஜி மனைவியின் பெயரில் ரூ.29.55லட்சமும் இருந்தது. வங்கி கணக்கில்இருந்த பணம் வருமான வரி கணக்கிற்கு முரண்பாடாக இருந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் விசாரணைக்கு எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்வில்ல, குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதை உறுதி செய்த பின்னர் கைது நடவடிக்கையை மேற்கொண்டோம். செந்தில் பாலாஜி, மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார், சண்முகம் ஆகியோருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அதனை பெற மறுத்துவிட்டனர். செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால் பி.எம்.எல்,ஏ சட்டத்தின் அடிப்படையிலும், விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு ரூ. 25 கோடி மதிப்பில் பினாமி சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரேதமாக சம்பாதித்த பணத்தை பினாமி நிலம் வாங்குவதற்கு செந்தில் பாலாஜி பயன்படுத்திருக்கலாம்.

சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காததுமே கைது காரணம் ஆகும். இவ்வாறு அமலாக்கத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:49 pm

மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதற்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் $செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். கார்கே வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது: இது மோடி அரசாங்கத்தின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையேத் தவிர வேறில்லை. எதிர்கட்சியில் இருக்கும் நாங்கள் யாரும் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் அஞ்ச மாட்டோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:52 pm

கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வலிமையை குறைக்க பாஜ., முயற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்



கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வலிமையை குறைக்க பாஜ., முயற்சி. தேசநலனுக்காக உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறையை தனது அரசியல் லாபத்திற்காக பாஜ., பயன்படுத்துகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஜனநாயக படுகொலை


செந்தில் பாலாஜி கைது ஜனநாயக படுகொலை. பார்லிமென்ட் தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்தும் முயற்சியை செயல்படுத்தும் அமலாக்கத்துறை. கைதில் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை.அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பாஜ., வின் கிளை அமைப்பு போல் செயல்படுகின்றன. பொய்ப் பிரசாரத்திற்கு புலனாய்வு அமைப்புகளை பாஜ., பயன்படுத்தி வருகிறது. செந்தில் பாலாஜியை ஒரே இடத்தில் உட்கார வைத்து டார்ச்சர் செய்துள்ளனர். வரும் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு கூட்டம் நடத்துவதால் பாஜ., பதற்றம் அடைந்துள்ளது.

பழிவாங்க முயற்சி


தன் தோல்விக்கு காரணம் எனக் கருதி செந்தில் பாலாஜியை பழிவாங்க சுற்றிக் கொண்டிருக்கிறார். பாஜ.,அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயல்களை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை திருப்திப்படுத்த இது போன்ற செயல்களில் அமலாக்கத்துறை ஈடுபடுகிறது. அண்ணாமலை கூறியது போலவே அமலாக்கத்துறை செயல்பாடுகள் உள்ளன. அரவக்குறிச்சியில் தான் தோற்க்க செந்தில் பாலாஜியே காரணம் என அண்ணாமலை நினைக்கிறார்.

வலிமையை குறைக்க முயற்சி


அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை செந்தில் பாலாஜி விமர்சித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் பாஜ., பெறக்கூடிய ஓட்டுக்களை சிதறடித்தவர் செந்தில் பாலாஜி. செந்தில்பாலாஜி பற்றி தொடர்ச்சியாக அவதூறு பரப்பினார்கள். நீதிமன்ற காவலை நிராகரிக்காவிடில் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வலிமையை குறைக்க பாஜ., முயற்சி. தேசநலனுக்காக உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறையை தனது அரசியல் லாபத்திற்காக பாஜ., பயன்படுத்துகிறது.

பழனிசாமிக்கு பதிலடி


செந்தில் பாலாஜியை பேசும் முன் கண்ணாடியை பழனிசாமி பார்க்க வேண்டும். செந்தில்பாலாஜி குறித்து பழனிசாமி பேசுவது வெட்கக்கேடு. கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர். செந்தில் பாலாஜி விவகாரத்தில் பழனிசாமியின் பேச்சு முன்னுக்குபின் முரணாக உள்ளது.

செந்தில் பாலாஜி கைது குறித்து பேச பழனிசாமிக்கு தகுதியில்லை. ஆட்சி மீது குற்றம் சாட்ட ஏதும் இல்லாததால் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையை காரணமாக்கி களங்கம் கற்பிக்க முயற்சி நடக்கிறது. அதிமுக ஆட்சியில் தலைமை செயலகத்தில் சோதனை நடந்த போது, பழனிசாமி, பன்னீர் செல்வம் ஒன்னும் பேசவில்லை.

பயத்தில் பாஜக


வேலுமணி, தங்கமணிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான 9ஆண்டுகால ஆட்சி தோல்வியை மறைக்கவே இது போன்ற அச்சுறுத்தல். 2024 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி பணியாற்றினால் பாஜ., நோட்டாவைவிட குறைவான ஓட்டுக்களை பெற்றுவிடும் என்ற பயத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஜாமின் வழங்கணும்


திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜ., முயற்சி செய்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்ட் நிராகரிக்க வேண்டும் எனவும், ஜாமின் வழங்க வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செ ய்யப்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது பாஜ.,.. தற்போது அமலாக்கத்துறை பிசியாக இல்லை. ப்ரீயாக உள்ளது என்பது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மூலம் தெரிந்திருக்கிறது.

ஆளும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் விசாரணை அமைப்புகள்


மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஆளும் அரசுக்கு ஆதரவாக பயன்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. இது தொடராமல் இருக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி நல்ல முடிவை எடுக்க வேண்டும். 17 மணி நேரம் வீட்டில் வைத்து விசாரணை என்ற பெயரில் அழுத்தம் கொடுத்ததால் தான் அமைச்சருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாஜ., அரசு இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை உட்பட விசாரணை ஏஜென்சி-ஐ வைத்து மிரட்டுவது தொடர் கதையாகி வருகின்றன. ராகுல், சோனியா, மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்களுக்கு நேர்ந்தது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேர்ந்துள்ளது. செந்தில் பாலாஜியைக் கண்டு பாஜ., அஞ்சுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:53 pm

கெஜ்ரிவால் எதிர்ப்பு


டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கை: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை, ‛பாஜ சேனா' என மாற்ற வேண்டும். முந்தைய காலத்தில், இந்த விசாரணை அமைப்புகள் மீது பெரிய மதிப்பு இருந்தது. அவர்கள் ரெய்டு நடத்தும்போது அல்லது யாரையாவது கைது செய்யும் போது, நிச்சயம் அந்த நபர் தவறு செய்திருக்கிறார் என நம்பினர்.

ஆனால், இன்று இந்த அமைப்புகள் பாஜ.,வின் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன. சிபிஐ, அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ., பயன்படுத்துகிறது. கைது நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.,வால், தமிழகத்தில் ஒரு இடம் கூ பா.ஜ.,வால் வாங்க முடியாது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:55 pm

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: இரண்டு நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு



சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிர்த்து, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகினார். இதையடுத்து, மனுவை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.

அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

அமைச்சர் #செந்தில்_பாலாஜி கைதுக்கு எதிராக அவரது மனைவி மேகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த மனுவில், 'செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. அவரது கைதில் சட்ட விதிகளை பின்பற்றவில்லை;

கைது தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்த கைது சட்ட விரோதமானது' எனக்கூறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு விசாரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகினார். இதையடுத்து நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:57 pm

உச்சநீதிமன்ற உத்தரவின்படியே நடவடிக்கை; காழ்ப்புணர்ச்சி இல்லை: அண்ணாமலை



சென்னை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படியே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது என்றும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை எனவும் தமிழக பா.ஜ., தலைவர் #அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் செந்தில் பாலாஜி. பணம் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட அருள்மணி என்பவர் 2018ல் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார்.

இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் #செந்தில்_பாலாஜி. 2019ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2022ல் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்ட விரோத பணம் பரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை நடவடிக்கை துவங்கியது.

இதில் எந்த வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்? அதனை முதல்வர் விளக்குவாரா? அமலாக்கத்துறையிடம் ஆதாரங்கள் இருந்ததால் தான் தலைமை செயலகத்தில் உள்ள அறையில் சோதனை நடத்தப்பட்டது.

மற்ற மாநில வழக்குகளில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு வித்தியாசமானது. அமலாக்கத்துறை மத்திய அரசின்கீழ் வந்தாலும், அது தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது; அதனை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்த்தது கண்டிக்கத்தக்கது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முதல்வரும், அமைச்சர்களும் உணர வேண்டும். விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத்துறை சட்டப்படி அறிவிப்பார்கள். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிற்காது. இவ்வாறு அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:59 pm

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரச்னை: பழனிசாமி



அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்துவிட்டால், தங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் செந்தில் பாலாஜியை ஓடோடிப்போய் முதல்வர் ஸ்டாலின் பார்த்திருக்கிறார் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

செந்தில் பாலாஜி கைதால் முதல்வர், மற்ற அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளனர். தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். மனித உரிமை குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளது.

அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்துவிட்டால், தங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் செந்தில் பாலாஜியை ஓடோடிப்போய் முதல்வர் ஸ்டாலின் பார்த்திருக்கிறார்.

ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் டெண்டர் இல்லாமல் 2000 மதுபான பார்கள் நடத்தப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பே செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

அமலாகக்த்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என நேற்று வாக்கிங் போய்விட்டு வந்து செந்தில் பாலாஜி பேட்டி கொடுத்தார். அவர் சொன்னபடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? விசாரணையில் எதையோ கண்டுபிடித்துவிட்டார்கள். பிரச்னையிலிருந்து தப்பிக்க நாடகத்தை செந்தில் பாலாஜி நடத்தியிருக்கிறார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு பேசுகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது அவர் ஒரு பெண் அதிகாரி என்றும் கூட பார்க்காமல் தாக்குதல் நடத்தினர். இது இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 11:18 pm

காவலரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜி; எய்ம்ஸ் டாக்டர்கள் இவரை பரிசோதிக்கணும்: ஜெயக்குமார்



அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, கைது செய்ய முயன்ற போது காவலரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கம் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப #செந்தில்பாலாஜி கைது உள்ளது. அவரது கைது நடவடிக்கையை ஊரார் கைதட்டி வரவேற்கின்றனர். அவர் கைதானதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்கிறது.

தி.மு.க ஆட்சியில் சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் மூலம் ரூ.2000 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையால் அரசின் கருவூலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேட்டில் கிடைத்த பணம் ஒரே குடும்பத்திற்கு சென்றுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மதுவிற்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளில் பார்கள் மூலம் ஒன்றரை சதவிகிதம் வரைவு காசோலை மூலம் அரசுக்கு வரும் அதை செந்தில்பாலாஜி தனக்கு வரும்படி செய்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து ஆய்வு முடிவை தெரிவிக்க வேண்டும். அவர் காவலரை எட்டி உதைத்துள்ளார். நெஞ்சுவலி வந்தால் எப்படி உதைக்க முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு அமைச்சர் பதிவியில் இருந்து உடனே செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்.

மேலும், நகமும் சதையுமாக அமைச்சரும் முதலமைச்சரும் உள்ளனர். குறிப்பாக, அண்ணா நகரில் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஏன் நீங்கள் இப்படி நடந்துகொள்ளவில்லை. வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி செல்லவேண்டியது தானே? என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக