புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_c10பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_m10பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_c10பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_m10பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_c10பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_m10பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 12, 2023 12:14 am

First topic message reminder :

"திமுக ஆட்சியில் ராணுவ வீரரைக் கொல்வதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சாதாரணமாக நடக்கிறது!"

திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், `என்னுடைய மனைவி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்தக் கடையை காலிசெய்யச் சொல்லி, என்னுடைய மனைவியை அரை நிர்வாணமாக்கி பலர் தாக்கினர். உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்' என்று தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர்மீது, 120-க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியிட்டிருக்கும் காணொளியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரண பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக்கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.

தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது தி.மு.க அரசு. காஷ்மீர் எல்லையில் பணியிலுள்ள ராணுவ வீரர் பிரபாகரன் அவர்களின் மனைவிமீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு உணர வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 8:08 pm

அண்ணாமலை உடன் பிரச்சனை இல்லை; அக்கா, தம்பியாக ஒற்றுமையாக கட்சியை வளர்க்கிறோம் – வானதி சீனிவாசன்

”மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் எந்த பிரச்சினையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்த்து வருகிறோம்” என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கல்யாண மேடைகளை எதிர்க்கட்சிகளைத் திட்ட தமிழக முதல்வர் பயன்படுத்துகிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்துள்ளார். ஆட்சிக்கு ஆபத்து வந்தால் கூட பரவாயில்லை என முதல்வர் பேசியிருக்கிறார். அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் நடக்கும் என்கிற பயம் வந்துவிட்டதா?

எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பா.ஜ.க.,வுக்கு விருப்பமில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு பிரதமர் மோடி எரிச்சல் அடைந்திருக்கிறார் என முதல்வர் கூறியுள்ளார். மோடி பயப்படுகிறார் என முதல்வர் சொல்வது, அவரின் கற்பனை. முதல்வர் தனது கற்பனை உலகத்தில் இருந்து வெளி வந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். மணல் கடத்தல், மது கடத்தல், டாஸ்மாக் பிரச்சினை, சட்டம், ஒழுங்கு, லஞ்சம், ஊழல் போன்றவற்றை முதல்வர் சிந்திக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும் போது பிரதமர் மோடி தன்னை பார்த்து பயப்படுகிறார் என பேசுவது போல் மாநிலத்தின் பிரச்சினைகளை முதல்வர் மூடி மறைக்க நினைக்கிறார்.

தமிழக ஆளுனர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பது முழுவதும் கற்பனை மற்றும் உண்மையில்லாத விஷயங்கள். மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார் , இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது? ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா? ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆளுநர் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோபம் வருகிறது.

மேலும், மேடை நாகரிகம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் தான் திராவிட தலைவர்கள். ஆளுநர்கள் அரசியல் பேசுவது என்பது வரம்பை மீறி போவதில்லை. ஆளுநர் குறித்து பேசி சிக்கலான நெருக்கடிகளை தி.மு.க உருவாக்குகிறது. தி.மு.க,வினர் பெண்களை எவ்வளவு இழிவாக கேவலமாக பேசுவார்கள் என்பது நாடறிந்ததுதான். நான் மேடையில் பேசியதை வைத்து என்னை முடக்கிவிடலாம் என நினைத்தால் அது நடக்காது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.,வும் இம்மாதிரியான பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள், என்று கூறினார்.

அப்போது அண்ணாமலைக்கும் உங்களுக்கும் பிரச்சனையா, அவர் கோவை வரும்போது நீங்கள் இங்கு இருப்பதில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, இப்படி ஒரு புது கதையை உருவாக்குகிறீர்களா என பயங்கரமாக சிரித்தபடி கூறினார் வானதி சீனிவாசன். மேலும், ”அதில் எந்த உண்மையும் இல்லை. கட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்துக் கொள்கிறோம். அண்ணாமலைக்கும் எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் மாநில அரசியலிலும் நான் தேசிய அரசியலிலும் பரபரப்பாக இயங்குகிறோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது, ​​இல்லாமல் இருப்பதை போன்ற சூழல் உள்ளது. அதனால் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல். இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகின்றோம். மற்றப்படி அக்காவும் தம்பியுமாக ஒன்றிணைந்து கட்சியை வளர்த்து வருகிறோம். கோயம்புத்தூரில் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வேட்பாளர் யார் என்று தேசிய தலைமை முடிவெடுக்கும்” என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 8:16 pm

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 F0riNBAX0AI8guB?format=jpg&name=small

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளளார்.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மது இல்லாத தமிழகம் உருவாக்கும் திட்ட அறிக்கையை முதல் அமைச்சரிடம் சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கித்தருமாறு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கடிதம் எழுதியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 8:17 pm

பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணாமாக டெல்லி சென்று இருந்தார். அங்கே மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு தான் கவர்னர் ரவி தமிழ்நாடு திரும்பினார். கவர்னர் தமிழ்நாடு திரும்பிய சில மணி நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைபயணம் ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி சென்னையில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது. இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைக்க உள்துறை மந்திரி அமித்ஷா வர உள்ள நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லி சென்றதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 7:12 am

முக்கிய அறிவிப்பு

இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் (14/07/2023) நேரில் ஆஜராக உள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை

திமுக டி ஆர் பாலு சொத்து
குவிப்பு செய்துள்ள ஆதாரம் இருக்கு நீதிமன்றத்தில் நீதிபதி முன் சமர்ப்பிக்கிறேன் தமிழக மக்களுக்கு தெரியட்டும் இதன் மூலம் திமுக ஊழல் படிந்தது கட்சி

திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழக பாஜக சார்பாக #DMKFiles இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலின் மீது அவதூறு வழக்கு தொடங்கப்பட்டுள்ளது
தரமான சம்பவம் இனி பார்க்கலாம்

K.ashok advocate
மாநிலச் செயலாளர் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு
9884206924

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 3:49 pm

உண்மைகளை மறைத்துள்ளார் டி.ஆர்.பாலு: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) ஆஜரானார்.

அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை மீது திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்றாவது வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஊழலை வெளியிட்டதால், ஆளும் கட்சியினரின் பலர் கோபமடைந்துள்ளனர். ஊழல் பட்டியல் அடுத்தக்கட்டத்து சென்றுள்ளது.

பாலு தாக்கல் செய்த மனுவில் அவரின் சொத்து மதிப்புகள் தொடர்பான உண்மைகளை மறைத்துள்ளார். முழுமையாக வெளிப்படவில்லை. 2004 - 2009 வரை ஊழல் செய்ததால்தான் மத்திய அமைச்சரவையில் டி.ஆர். பாலு சேர்க்கப்படவில்லை. மு.க. அழகிரியும் ஒரு பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் 3 நிறுவனங்களின் பங்குதாரர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இரு மகன்கள் எந்தெந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர் என்பதை குறிப்பிடவில்லை.

இது வாரிசு அரசியலால் உருவான 3ஆம் தலைமுறைக்கும் முதல் தலைமுறைக்கும் நடக்கும் யுத்தம். இது கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருவது இல்லை. பணபலம் படைத்தவர்களுக்கு எதிரான நீண்ட காலம் நடைபெறுவது. டிஎம்கே பைல்ஸ் பாகம் 2 விரைவில் வெளியிடப்படும். அதில் பினாமிகள் பெயரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் ஊழல் பட்டியலிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 27, 2023 7:18 pm

அண்ணாமலை லண்டன் செல்கின்றார், அமெரிக்கா செல்கின்றார் இப்போது தென் ஆப்ரிக்கா செல்கின்றார் என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் ஒரு இந்திய இளம் தலைவராக படிபடியாக வளர்க்கப்படுகின்றார்,

உலக நாடுகளில் இளம் இந்திய முகமாக அறிமுகமாகின்றார் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பககம் அவரின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கைகள் மேலோங்குகின்றன‌.

உலகில் இந்தியா போல பாதுகாப்பு நிறைந்த நாடுகள் குறைவு, ஐரோப்பாவிலெல்லாம் எல்லா வகை குற்றமும் அதிகம், தென்னாப்ரிக்கா போன்ற தேசங்களும் காவல் நிறைந்தது அல்ல‌..

அண்ணாமலை எங்கு சென்றாலும் அவரின் காவல் மிக பலமாக இருக்கும் என நம்புவோம், ஒரு காவல்துறை அதிகாரி காக்கி சட்டையினை கழற்றினாலும் அவன் பெற்ற பயிற்சியினை களையமுடியாது எனும் வகையில் அவரும் எல்லாம் அறிந்திருப்பார் எனினும் காணகிடைக்கா அந்த மாமணி செல்லுமிடெல்லாம் காவலுடன் திகழ வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்...

அது ஒவ்வொரு தேசாபிமானியின் மிக முக்கிய கடமையாகின்றது..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 27, 2023 8:29 pm

அண்ணாமலை அவர்களுக்கு தக்க பாதுகாப்பு கிடைக்குமென நம்புவோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 31, 2023 4:14 pm

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 AYrdmTq

பொதுவாக தமிழக டிவிக்கள், யூ டியூப் அலப்பறைகளை கண்டாலே அலர்ஜி, கொஞ்சமும் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான விஷயங்களை அவர்கள் கொடுப்பதே இல்லை, எல்லாம் வெட்டி நியாயம் வீணான தர்க்கம், ஐந்து காசுக்கு உபயோகமில்லா விஷயம்

அதை பார்ப்பதை போல நேர விரயம் ஏதுமில்லை என்பதால் அப்பக்கம் செல்வதே இல்லை

ஆனால் அண்ணாமலை அரசியலுக்கு அப்பாற்பட்டு கலாட்டா சேணலின் நிகழ்வில் கலந்து கொண்டார் என்றதும் பார்க்க தோன்றிற்று

பொதுவாக அரசியல் என்பது அழுத்தமிக்கது, அது கொடுக்கும் அழுத்தம் தாங்க மோடிபோல் யோகி போல் தவத்தில் இருப்பது ஒருவகை, எல்லாம் கடந்த ஞானவைராக்கியத்தில் நின்று தாங்கிகொள்வது ஒருவகை

அய்யா கலைஞர் போல வைரமுத்து வாலி போன்றோர் அமர, கவியரங்கம் இலக்கியம் முரசொலியில் கவிதை, அடிகக்டி குடும்ப சண்டை என அரசியல் அழுத்தம் போக்குவது இன்னொரு வகை அதெல்லாம் அவருக்கே சாத்தியம்

அன்னாமலை அந்த மோடி யோகி வகை, அவர் அரசியலுக்கு வந்து இரு ஆண்டுகள்தான் ஆகின்றது ஆனால் அவர் கடுமையாக உழைக்கின்றார், அவரின் பொழுதுபோக்கு என்றோ தனிபட்ட நண்பர்களுடன் விளம்பரமான பொழுதுபோக்கோ எதுவும் அவர் செய்ததில்லை

அரசியல் தாண்டி அதிகம் பேசுவதுமில்லை

அப்படிபட்டவர் ஒரு பேட்டி கொடுக்கின்றார் என்றால் கவனிக்க வேண்டும்

அந்த பேட்டியில் அவரை சிக்கத்தான் வைத்தார்கள், ஆட்டு குட்டி ஒன்றை மேடையில் ஏன் காட்டினார்கள் அதன் அவசியம் என்ன என்பது தெரியவில்லை

ஆனால் அவர் அசத்தினார், ஆடு மேய்த்துத்தான் படித்தேன் என் தந்தையர் ஆடுமாடு மேய்த்துதான் வாழ்ந்தனர் என்னை வாழவைத்தனர் என்பதை தெளிவாக சொன்னார்

பாரதம் வணங்கும் பகவான் கண்ணனே மேய்ப்பன் எனும் வகையில் அவரின் பதில் பெருமிதமாய் இருந்தது

நாம் உலகை கவனிக்கின்றோம், இந்துக்களை தவிர கோசாலை அதாவது மாடுகள்பராமரிப்பு நிலையம் கொண்டவர்கள் யூதர்கள்

அவர்களின் மூல குலதொழில் ஆடுமாடு மேய்ப்பதுதான், அதனால் ஆடுமாடு பலிகொடுக்கும் வழக்கம் உண்டு, இப்போது மிக சிறிய ஆனால் வலுவான தனிநாடு கொண்ட சமூகமாக இருந்தாலும் இன்னும் அந்த கோசாலைகளை பராமரிக்கின்றார்கள்

ஜெருசலேம் எவ்வளவு முக்கியமோ அப்படி இந்த கோசலையும் அவர்களுக்கு முக்கியம், இதற்கெல்லாம் அவர்கள் சொல்லும் ஒரே பதில் "முன்னோர்கள் செய்த தொழிலையும் அவர்கள் வாழ்ந்த மண்ணையும் மறக்கும் சமூகம் உருப்படாது

அண்ணாமலை அந்த ஆட்டினை தொட்டு தட்டி இதுதான் எனக்க்கு சோறுபோட்டது படிக்கவைத்தது எனும்போது அவரின் பெரும் பக்குவம் வெளிபட்டது

காவல்துறையின் அந்த தொப்பிக்கு அவர் காட்டிய மரியாதை பிரமிக்க வைத்தது, உண்மையில் ஒரு உன்னதமான காவல்துறை அதிகாரியின் மனம் அப்படித்தான் இருக்கும்

எமக்கு தெரிந்து பிரிட்டிஷ் காலத்தில் பெரும் பதவி வகித்த காவல்துறை அதிகாரி உண்டு, அவர் வீட்டில் அவர் பணியில் இருந்தபோது எடுத்தபடம் அதாவது தொப்பி காக்கிசட்டை கையில் அந்த அதிகார கோல் எல்லாம் கொண்டு அவர் நிற்கும் கம்பீரமான படம் அது

80 வயதில் அவர் இருந்தபோது நாம் கேட்டோம், மறுபடி இதே தொப்பி வைத்து படமெடுப்பீர்களா

அவசரமாக மறுத்தார் "நோ.. அது உயர்ந்த பதவி , நான் அந்த பதவியினை வகித்தபோது அந்த பதவியின் அடையாளத்தான் அணிந்தேன், எப்போது அதைவிட்டு நீங்கினேனோ அதன் பின் அதனை அணிவதோ , அதை சூடி அழகுபார்ப்பதோ அந்த பதவியின் மாண்புக்கு எதிரானது, அதையெல்லாம் காவல் அதிகாரியாக செய்யமுடியாது"

நல்ல காவல் அதிகாரியின் அனுபவமிக்க வார்த்தை அது, இந்த இளம் வயதிலே அந்த பக்குவத்தை அவர் அடைந்தது ஆச்சரியம்

மனிதர் அவர் வாழ்வின் பாதைகளை, குடும்பத்தை பற்றியெல்லாம் சொல்லும் போது வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து உழைத்து படித்து இந்த நிலையினை அவர் அடைந்திருக்கின்றார் என்பது தெரிகின்றது

அண்ணாமலையிடம் மிக மிக கவனிக்க வேண்டிய விஷயம், எந்த மேடையிலும் எந்த இடத்திலும் அவர் உணர்ச்சிவசபடுவதில்லை

அப்படி எளிமையாக தன் குடும்பம் மனைவி என கடந்து சென்றார், அந்த மொராக்கோ சம்பவத்தில் கூட குற்றவாளி பெயர், குற்றபின்னணி என எல்லாமும் மிக கவனமாக தவிர்த்தார்

சிறிய வயதிலே அவருக்கு மிகபெரிய பக்குவ்ம் வந்திருகின்றது, அது எல்லோருக்கும் வாய்க்காது

ஆக அவரின் பேட்டி சில விஷயங்களை சொன்னது

முதலில் வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து வந்த ஒருவனை, போராடி மேலேழுந்த சாமானியனை பாஜக கட்சிதான் அடையாளம் கண்டு மாநில தலைவராக்கி தேசிய தலமையினை நோக்கி அழைத்து செல்கின்றது

பாஜக தவிர இன்னொரு கட்சியில் இதெல்லாம் சாத்தியமா என்றால் அடுத்த ஆயிரம் ஆண்டுக்கு இல்லை

பாஜக எவ்வளவு பெரும் காரியத்தை எப்படியெல்லாம் அடிதட்டு மக்களை மேலே கொண்டுவரும் காரியத்தை செய்கின்றது என்பதை உணர அண்ணாமலை பெரும் உதாரணம்

அவரின் அந்த ஆடு காட்சியினை கடந்து செல்லமுடியவில்லை, நினைவுகள் எங்கோ சுழல்கின்றன

பல வருடங்களுக்கு முன் நயினார் நாகேந்திரனின் தகப்பனார் நயினார் தேவர் என்பவரை சந்தித்தேன், அவருக்கு அப்போதே 85 வயது இருந்தது, வாழ்ந்த காலத்தில் குறிப்பிடதக்க தொழிலதிபர் அவர்

நயினார் நாகேந்திரன் அப்போது அமைச்சராக இருந்தார்

அப்பொழுதெல்லாம் மதுகடைகள் தனியாரிடம் இருந்தன, ஏகபட்ட கடைகளை அவர் நடத்தினார் இன்னும் பிரதான பெரும் பெரும் தொழில்களெல்லாம் உண்டு

அதனால் ஏகபட்ட பெரும்புள்ளிகளெல்லாம் அவரை காண ஓடி ஓடிவருவார்கள்

கோடிகணக்கான சொத்துக்கள் பெரும் அதிகாரம் என இருந்த அவரை சந்தித்தபோது ஆடம்பர கார்கள் அணிவகுத்து நின்றன, பெரிய பெரிய ஆட்களெல்லாம் நின்றார்கள்

அந்த விலைஉயர்ந்த கார் ஓரமாக சில ஆட்டுகுட்டி கட்டபட்டிருந்தது அதற்கு தளைகள் இடபட்டிருந்தன‌

அவரிடம் மெல்ல கேட்டோம் "அய்யா இங்க எதுக்கு இந்த ஆட்டுகுட்டி"

சிரித்து சொன்னார் "தம்பி இன்னைக்கு வசதி வந்திருக்கலாம், கோடி கோடியா குவிந்திருக்கலாம் ஆனா அன்னைக்கு சோறுபோட்டது ஆடுதான், அதனால எங்க இருந்தாலும் அத மறக்ககூடாதுல்ல, பழசு கண்முன்னால இருந்தான் நாம எங்க இருந்து வந்தோம்னு தெரியும்ப்பா.."

ஆயிரம் அர்த்தமுள்ள வார்த்தை அது

இன்று கல்குவார் கொள்ளை மணல்குவாரி கொள்ளையெல்லாம் உச்சத்தில் இருக்கும் நேரம் அந்த வைகுண்டராஜனை பலர் மறந்திருக்கலாம், உண்மையில் அவர்மேல் சுமத்தபட்டவையெல்லாம் ஆதாரபூர்வ குற்றசாட்டு அல்ல‌

அந்த தொழிலை நியாயமாகத்தான் செய்தார், எவ்வளவோ பேர் தோற்றோடி ஏன் அரசே நடத்தமுடியாமல் விட்ட தொழிலை திறம்பட செய்து மேலெழுந்தார், அரசியல் அழுத்தங்களால் அவர் ஒதுக்கபட்டார்

பின்னாளில் பெரும் சர்ச்சைகள் பெரும் சொத்துக்களை கொண்ட வைகுண்டராஜனை எல்லோரும் அறியலாம் ஆனால் தொடக்கத்தில் 5 பேரோடு தொடங்கபட்ட மணல் ஆலயினை தன் தலையில் கூடை சுமந்து கைகளால் மண்ணை அரித்து பிரித்தெடுத்த அந்த உழைப்பாளி வைகுண்டராஜனை பலருக்கு தெரியாது

எந்தமண் அவருக்கு வாழ்வு கொடுத்ததோ அந்த மண்ணை மதித்து இன்றுவரை அவர் காலில் செருப்பு அணிவது இல்லை

இன்னும் எவ்வளவோ பேரை பார்க்கமுடியும், யார் பழையதை மறக்கவில்லையோ அவர்கள்தான் பெரும் உயரம் தொட்டார்கள், யார் மறந்து கனவில் பறந்தார்களோ அவர்கள் சரிந்தார்கள்

வந்தவழி தெரியாதவனுக்கு செல்லும் வழியும் தெரியாது

தான் உச்சநடிகராக இருந்தபோதும் படபிடிப்பு தளத்தில் ஒரு லைட்பாய் அவமானபடுத்தபட்டாலோ பசியோடு இருந்தாலோ எம்ஜிஆர் தாங்கியதில்லை தான் எங்கிருந்து வந்தாமோமோ அந்த அடிதட்டு மக்களின் வலியினை அவர் உணர்ந்திருந்தார்

அவரின் வெற்றிக்கெல்லாம் அதுதான் காரணம்

அண்ணாமலை அந்த நம்பிக்கையினைத்தான் தருகின்றார், அவர் சாமானியரில் இருந்து வந்ததால் இந்த மக்களின் வலி தெரியும், இந்த மக்களின் போராட்டம் தெரியும், அதனாலே அவரால் இப்படி மின்னமுடிகின்றது

அண்ணாமலையினை ஆட்டுகுட்டி என்போருக்கு அழகாக அவர் பதிலும் கொடுத்துவிட்டார்

திமுகவினர் இப்படி விமர்சிப்பதெல்லாம் எப்போதும் உண்டு , முன்பு காமராஜர்மேல் வன்மமாக "காமராஜரின் அன்னை கருவாடுவிற்றவள்" என்றார் கருணாநிதி

கண்ணதாசன் அமைதியாக சொன்னார் "என் தலைவனின் தாய் கருவாட்டை மட்டும்தான் விற்றாள்"

அப்படி இப்போதும் சொல்லலாம் "தலைவர் அண்ணாமலை ஆட்டுகுட்டியினை மட்டும்தான் மேய்த்தார்"

சரி அண்ணாமலைக்காவது எங்கள் குலதொழில் இது, இந்த தொழிலால் நாங்கள் பிழைத்தோம் வாழ்ந்தோம் என தைரியமாக சொல்லமுடிகின்றது, சொல்கின்றார்

இப்படி அவரை ஆட்டுகுட்டி என விமர்சிப்போர் தரப்பில் தங்கள் கட்சியின் பிம்பங்கள் குறித்து இப்படி சொல்லமுடியுமா?

சொல்லட்டும் பார்க்கலாம்..

#பிரம்ம_ரிஷியார்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 31, 2023 6:26 pm

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 3838410834 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 103459460 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 1571444738

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 4:13 pm

’அவர் சென்றிருக்க வேண்டிய உயரம் அதிகம். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார்’ : மனைவி பற்றி அண்ணாமலை நெகிழ்ச்சி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்று தமிழகம் முழுவதும் பாதையாத்திரை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு “ எங்கள் இருவரின் வாழ்க்கையை பற்றி வெளி உலகத்திற்கு எந்த தகவலும் வரக்கூடாது என்று கவனமாக இருந்தோம். எங்களை பற்றிய புகைப்படம் வெளியே வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

ஒரே கல்லூரியில்தான் படித்தோம். படிக்கும்போது இருவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள். எனக்கு எதிரான குணம் கொண்டவர். நான் அதிரடியாக செயல்படுவேன். அவர் மிகவும் மென்மையானவர்.

அவர் இப்போது மிக உயரத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் எனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நான் வளர வேண்டும், அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்பதால், எனக்காக தனது வாழக்கையை முழுவதுமாக செலவு செய்துள்ளார்.

நான் அவருக்கு தகுதியான நபரா என்று கேட்டால் நிச்சியமாக இல்லை. அவர் கிடைக்க நான் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக