புதிய பதிவுகள்
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
74 Posts - 76%
heezulia
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
239 Posts - 76%
heezulia
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_m10ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 2 Jun 2023 - 23:52

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து YCsrIUi

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ரயில் விபத்தில் காயமடைந்த 132 பயணிகள் கோபால்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

இது தவிர, காயமடைந்த 47 பேர் பாலசோரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி முகமைகளின்படி, சென்னையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியதால், அதன் பல பெட்டிகள் தடம் புரண்டன.

பாலசோர் அருகே உள்ள பஹனகா பஜார் ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடந்தது.

உதவிக்கு வந்த மேற்கு வங்க முதல்வர்


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே துறையுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தனது மாநிலத்தில் இருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு மாநில அரசு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தபட்சம் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக புவனேஸ்வரை சேர்ந்த பிபிசியின் செய்தியாளர் சுப்ரதா பதி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் கியான் ரஞ்சன் தாஸ், “அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக” கூறினார்.

பிடிஐ, ஏஎன்ஐ செய்தி முகமைகள் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்திருப்பதைக் காணக்கூடிய வகையிலான சில படங்களை வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பிரதமர் இரங்கல்


ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண்


மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவிப்பு.

ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 3 Jun 2023 - 14:57

அதிகாரிகள் என்போர் குளுகுளு அறைக்குள்ளேயே காலத்தைக் கழிக்கலாம் என்ற எழுதப்படா விதி நம் நாட்டைப் பிடித்து ஆட்டுகிறது! இதைச் சொல்வார் யாருமில்லை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 19:11

Dr.S.Soundarapandian wrote:அதிகாரிகள் என்போர் குளுகுளு அறைக்குள்ளேயே காலத்தைக் கழிக்கலாம் என்ற எழுதப்படா விதி நம் நாட்டைப் பிடித்து ஆட்டுகிறது! இதைச் சொல்வார் யாருமில்லை!  
மேற்கோள் செய்த பதிவு: undefined

இந்த விபத்திற்கும் அதிகாரிகள் குளுகுளு அறையில் இருப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை முனைவரே .
இந்த குளுகுளு அறை அமைப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் சகஜம். துணிக்கடை /சூப்பர் மார்க்கெட்/ மால்கள் /
IT நிறுவனங்கள் எல்லாம் அடக்கம்.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 19:57

நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ,-லயன் மேன் இவர்களே முழு பொறுப்பேற்கவேண்டும்

பிரதமரோ/ரயில்வே மந்திரியோ /ஒரிசா முதல்வரோ முதலியவர்களை குற்றக்கூண்டில் ஏற்றமுடியாது.

ரயில்வே மந்திரி தனது பதவியை முன்வந்து ராஜினாமா செய்யலாம்.

 மத்திய ரயில்வே  மந்திரி காலம் சென்ற லால் பகதூர் சாஸ்திரி செய்தது போல் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Jun 2023 - 23:08

ஒடிசா ரயில்கள் விபத்து: 2000 பேர் மீட்பு பணியில்; பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு



கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 233 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பல பெட்டிகள் இன்னும் தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கிறது. சென்னை-ஹவுரா வழித்தடத்தில் ரயில் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளானோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. அது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பாலசோர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பொது வகுப்பின் (general class) இரண்டு பெட்டிகள், ஸ்லீப்பர் வகுப்பின் ஐந்து (S1 முதல் S5 வரை) மற்றும் ஏசி வகுப்பின் இரண்டு (B4, B5) உட்பட 23 பெட்டிகளில் சுமார் 10 பெட்டிகள் மோதியதில் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் அதிகபட்ச உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸின் இரண்டு ஜெனரல் பெட்டிகளும் கவிழ்ந்ததாக தென்கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாலாசோர் தொழிற்பேட்டையில் தற்காலிக பிரேத அறையாக தயார்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதால், உடல்கள் பஹானாகாவில் உள்ள பள்ளிக்கு கொண்டு வரப்படுகின்றன. இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடிச் சென்றவர்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஹவுரா செல்லும் ரயிலில் இறந்தவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் என்றும் நம்பப்படுகிறது.

மீட்புப் பணியாளர்கள் அவர்களது பொருட்கள், பிற உடமைகள் மற்றும் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர், இவை உடல்களை அடையாளம் காண உதவும் என்று நம்புகிறார்கள்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா பகுதியைச் சேர்ந்த சாஹிடல் ஷேக் (35) என்பவர் தனது நண்பர் நிஜாம் மொண்டலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் கோச்சில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். சாஹிடல் மற்றும் நிஜாம் இருவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு பேருந்தைத் தேடுபவர்களில் அடங்குவர்.

“நாங்கள் கேரளாவில் உள்ள மரத்தூள் ஆலையில் தச்சராக வேலை செய்கிறோம். சென்னையில் இருந்து கேரளாவுக்கு வேறு ரயிலில் சென்றிருப்போம். எங்களைக் காப்பாற்றிய சர்வவல்லவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், ”என்று ஷேக் கூறினார். அவரது இடது கையில் சிறிய காயம் ஏற்பட்டது.

மோதியதைப் பற்றி, ஷேக், தானும் நிஜாமும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது பயங்கரமான மற்றும் உரத்த சத்தம் கேட்டது. “அது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்காக பாலசோர் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு வெளியே நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது. பாலாசோரில் ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாக தலைமைச் செயலாளர் பிகே ஜெனா தெரிவித்தார்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Jun 2023 - 23:15

‘ரயில் விபத்து வேதனை அளிக்கிறது’ - பிரதமர் மோடி



ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து Kumudam%2F2023-06%2F6dffe5c6-4032-4702-aa1b-d12e8aa428d3%2Fmodi_odisha

ரயில் விபத்துக்குள்ளான இடத்தை ஆய்வு செய்த பிறகு, ‘ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 261க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதில் 900த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஒடிசா மாநிலம் பஹனஹா பஜார் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு தயாராக இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பிரதமர் மோடியை ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பிரதமரிடம் விபத்துக்கான காரணம், பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதன் பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்’ என்றார்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Jun 2023 - 23:18

ஒடிசா ரயில் விபத்து: இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்கள்



ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் நேற்று (ஜூன் 3) விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்: இந்த கடினமான சூழலில் இந்தியாவுடன் பிரான்ஸ் உறுதியாக நிற்கும். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பிரான்ஸ் உங்களுடன் துணை நிற்கும். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விரும்புகிறேன்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா: ஒடிசா ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாகிஸ்தான் பிரதமர்: இந்தியாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Jun 2023 - 23:20

கவாச் எனும் ரயில் பாதுகாப்புக் கருவி கோரமண்டல் ரயிலில் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை உறுதிப்படுத்தி உள்ளது.

ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறுகையில், ஒடிசாவில் விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.

ரயில் மோதல்களை தவிர்ப்பதற்காக கவாச் எனும் அதிநவீன மின்னணு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வேகம், சிக்னலை மீறி ரயில் சென்றால் கவச் கருவி மூலம் எச்சரிக்கை கொடுக்கப்படும்.

இந்த தொழில் நுட்பத்தில் தாமாகவே பிரேக் போட்டு ரயில் நிறுத்தப்படும். இதுதான் கவாச் கருவியின் சிறப்பு அம்சமாகும். கடந்த 2022 மத்திய பட்ஜெட்டில் கவாச் எனும் ரயில் பாதுகாப்புக் கருவி உருவாக்கப்படும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

கவாச் கருவி குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளிக்கும் விடியோக்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வரும் நிலையில், திரிணாமுல் கட்சியின் சாகேத் கோகலே, ரயில் வழித்தடங்களில் 2% மட்டுமே கவாச் கருவி பொருத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Jun 2023 - 23:23

அன்ரிசர்வ்ட் பெட்டியில் தான் அதிக பலி, சிலருக்கு ஹார்ட் எல்லாம் வெளியே வந்துருச்சு: உயிர் தப்பிய பயணி பேட்டி..!

ஒடிஷாவில் நடந்த ரயில் விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்ரிசர்வ்ட் பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு தான் மிகப்பெரிய பாதிப்பு என்றும் ஒரு சிலருக்கு ஹார்ட் எல்லாம் வெளியே வந்துவிட்டது என்றும் இந்த ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய இளம் பெண் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் இருந்து தப்பி சென்னை வந்த இளம்பெண் செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்த விபத்து சுமார் 7 மணி அளவில் நடந்தது. நான் பயணம் செய்த பெட்டி ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தது, லேசாக சரிந்ததால் பயணிகளுக்கு சிறிய காயங்கள் தான் ஏற்பட்டது.

ஆனால் எங்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் இருந்தவர்கள், ஸ்லீப்பர் பெட்டியில் இருந்தவர்கள் மற்றும் அன்ரிசர்வ்ட் பெட்டியில் பயணம் செய்தவர்கள் தான் அதிகம் பலியாகினர். குறிப்பாக ஒரு சிலருக்கு ஹார்ட் எல்லாம் வெளியே வந்து விழுந்ததாக கூறப்பட்டது

நாங்கள் அங்கிருந்து ஒருசில கிலோமீட்டர் நடந்தே சென்று பேருந்தில் பயணம் செய்து சென்னைக்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Jun 2023 - 23:23

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.


நேற்று ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட நிலையில் அதில் ஒரு ரயிலில் பயணம் செய்த 1200 பேர்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால் நேற்று ரயில் விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயில் மோதிய நிலையில் பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பு இல்லை இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக