புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
156 Posts - 79%
heezulia
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
1 Post - 1%
prajai
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
1 Post - 1%
Pampu
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
321 Posts - 78%
heezulia
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
8 Posts - 2%
prajai
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
3 Posts - 1%
Barushree
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_m10செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 24, 2023 4:41 am

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence Artifi10

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன.

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் `ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்' (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பாய்ச்சலாகி இருக்கிறது. கணினித் தொழில்நுட்பத்தின் கொடையான இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி காலத்தின் தேவை என்றாலும் கணினித் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு மனிதர்கள் செய்யும் வேலையை இந்தச் செயற்கை நுண்ணறிவே செய்து விடும் நிலை ஏற்பட்டு பலரது வேலை பறிபோய் விடும் என்கிற அச்சமும் நிலவுகிறது. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, மனித ஆற்றலை அதனால் ஈடுசெய்ய இயலுமா, அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் என்னென்ன...

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?


“ஒரு ரோபோ இப்படித்தான் செயல்படும் என்று வரையறுக்கப் பட்டதை (programming) தாண்டி சுயமாக சிந்தித்தால் எப்படி யிருக்கும் என்கிற கற்பனைதான் `எந்திரன்’ திரைப்படம். ஓரளவில் இந்தச் செயற்கை நுண்ணறிவை `எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோவோடு ஒப்பிடலாம். நமது தகவல்களை அடிப்படை யாக வைத்து நமக்கு எதுவெல்லாம் தேவைப்படும் என் பதை யூகித்து வழங்குவதுதான் செயற்கை நுண்ணறிவு செய்கிற வேலை.

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன. எப்படி ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் நாம் ஒவ்வொன்றையும் பயிற்றுவிக்கிறோமோ, அதேபோல் கணிப் பொறித் தொழில் நுட்பத்திலும் உள்ளீடு (feed) செய்யப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தச் செயற்கை நுண்ணறிவு வேலை செய்கிறது. `கோடிங்' (Coding) வழியாக இதற்கு பயிற்றுவித்திருப்பார்கள்.

நீங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் வாட்ச் ஒன்று வாங்கலாம் எனத் தேடுகிறீர்கள். அதன் பிறகு ஃபேஸ்புக்குக்குச் சென்றால் வேறொரு ஷாப்பிங் வெப்சைட்டின் வாட்ச் விளம்பரம் உங்களுக்குக் காண்பிக்கப்படும். அதுவும் நீங்கள் எந்த விலையில் தேடினீர்களோ அதற்கு நிகரான விலையில் காட்டும். இதுதான் செயற்கை நுண்ணறிவின் வேலை.

நம் தேவைகள், விருப்பங்கள் பற்றி செயற்கை நுண்ணறிவுக்கு எப்படி தெரியும்?


மெயில் ஐடிகள், சமூக வலைதளங்கள், மொபைல் சேவைகள் என நம்மிடமிருந்து செயற்கை நுண்ணறிவுக்குக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில், நம் தேவை என்ன, நமக்கு எதன் மேல் நாட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்குத் தொடர்புடையவற்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

உதாரணமாக, கூகுள், ஃபேஸ் புக் ஆகியவற்றில் கணக்கு ஆரம் பிக்க நமது வயது, பாலினம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்களைக் கொடுத்திருப் போம். அந்தத் தகவலை அடிப் படையாகக் கொண்டு எந்தெந்த வயதினருக்கு எந்தெந்தப் பொருள்களின் மீது நாட்டம் இருக்கும் என்கிற யூகத்தில் அதற்கான விளம்பரங்களைக் காட்டும். ஃபேஸ்புக்கில் ‘உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியவர்கள்’ என சிலரது கணக்குகளை முகநூல் பரிந்துரைக்கும். எப்படி? நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொரு நபரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்திருக்கிறோம் என்பதை `ஜிபிஎஸ்' (GPS - Global Positioning System) மூலமாகக் கணக்கில்கொண்டு இந்தப் பரிந்துரையை முன்வைக்கும்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலையைப் பறிக்குமா?


ஐடி துறையை எடுத்துக்கொண்டால் கோடிங் மற்றும் அக்கவுன்ட்ஸ் ஆகியவைதான் மிக முக்கியமான பணிகள். டேலி, மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற மென் பொருள்கள் அக்கவுன்ட்ஸை எளிமையாகச் செய்து முடிக்கும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இப்போது செயற்கை நுண்ணறிவின் மூலம் அக்கவுன்ட்ஸை கணிப்பொறியே தன்னிச்சையாக மேற்கொள்ள முடியும். நாம் மேற்பார்வை மட்டும் பார்த்து அப்ரூவ் செய்தாலே போதுமானது. இதனால் மனித உழைப்பு பெரிய அளவுக்குத் தேவையில்லாமல் போகும். அதேபோல, ஒரு அப்ளிகேஷனைத் தயார் செய்ய வேண்டும் என்றால், இத்தனை ஆண்டுகளில் எழுதப்பட்ட கோடிங்கை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவே கோடிங்கை எழுதி விடும். மனிதர்கள் அதனை மேற்பார்வை பார்த்தால் மட்டுமே போதுமானது. ஐடி துறை போல, இப்படி வங்கி முதல் மீடியா வரை ஒவ்வொரு துறையிலும் AI-யால் மனிதன் செய்த பணிகளைச் செய்ய முடியும். அதனால்தான், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நிறைய பேருடைய வேலையை காலி செய்யும் என்கிற அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது.

பெருநிறுவனங்கள் பலவும் இந்தச் செயற்கை நுண்ணறிவை 2010ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தத் தொடங்கி விட்டன. பெரு நிறுவனங் களிடம் மட்டுமே இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு வசதி இன்றைக்கு `Open AI' செயலி மூலம் பொதுமக்களுக்குப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

`சாட்ஜிபிடி' (chatGPT) என்று சொல்லப்படுகிற, செயற்கை நுண்ணறிவுக்கான தளத்தில் சென்று அதனுடன் `சேட்' செய்யலாம். நாம் என்ன கேட்கிறோமோ அந்தத் தகவல்களை துல்லியமாக அது வழங்கும். ஹிமாச்சலில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் இருக் கின்றன என்று கேட்டால் வரிசையாகப் பட்டியலிடும். ஓர் இடத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ ஒரு கட்டுரை கேட்டால் அசத்தலாகத் தரும். இப்படியாக இன்றைக்கு சிறு நிறுவனங்கள் கூட செயற்கை நுண்ண றிவைப் பயன்படுத்துகிற சூழலை `chatGPT' உருவாக்கியிருக்கிறது.

ஆகவேதான் இத்தனை காலமாக இல்லாமல் சமீபமாக செயற்கை நுண்ணறிவு வேலையைப் பறித்துவிடும் என்கிற குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

மனிதனை வெல்ல முடியுமா?


காலத்துக்கு ஏற்றாற்போல் நவீனத் தொழில் நுட்பம் வருவது இயல்புதான். அதேபோல் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தால், மனித மூளையின் அளவுக்குச் செயலாற்ற முடியாது. செயற்கை நுண்ணறிவு என்பது இருக்கிற தகவல்களை அடிப்படையாக வைத்து நிகழ்த்தும் யூகமே தவிர, சுய சிந்தனை கிடையாது. அது தன்னிச்சையாக இயங்குகிறது என்றாலும் மனிதர்களின் மேற்பார்வையில்தான் இயக்கப்படுகிறது.

வேறு என்ன ஆபத்து?


`டீப்ஃபேக்ஸ்' (Deep Fakes) தொழில்நுட்பம்... அச்சுறுத்தும் இதன் பாதகம். இதன் மூலம் பொய்ச் செய்திகளை உருவாக்கி, மக்கள் குழுக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்த முடியும். நாடுகள், அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள் என அந்தப் பிரதிநிதிகளின் பொய்யான வீடியோ, ஆடியோக்களை உருவாக்கி, மக்களைத் தூண்டி, போராட்டங்களை எரிய வைக்க முடியும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, நமக்குத் தெரிந்தவர்போல குரலை மாற்றி (voice morphing) பேசி, பணம் பறிக்க முடியும். இவ்வாறாக, சாமான்ய மக்களுக்கு உண்மை, பொய்யைப் பிரித்தறியும் சாத்தியத்தைச் செயற்கை நுண்ணறிவு வெகு தொலைவில் வைக்கும்.

தீர்வு என்ன?


செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் சட்ட வரையறைகள், நிறுவனங்களுக்கான பொதுவான, பகிரப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள், உண்மை, பொய்யைப் பிரித்தறிய வைக்கும் முத்திரைகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அதனால் தான், அதுவரை செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை நிறுத்திவைக்கக் கோரி உலகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும்?


மருத்துவத்துறை முதல் கலைத்துறை வரை செயற்கை நுண்ணறிவின் சாதகங்களால் பயன்பெறப் போகிறோம். கூடவே, இனி எந்தச் செய்தியிலும் பொய்க்கான சாத்தியம் வலுக்கிறது என்ற விழிப்புணர்வையும் நாம் பெற வேண்டும்.’’

குறிச்சொற்கள் #AI_தொழில்நுட்பம் #செயற்கை_நுண்ணறிவு #chatGPT #Artificial_intelligence

விகடன்


ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 24, 2023 1:29 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed May 24, 2023 3:02 pm

செயற்கை நுண்ணறிவை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா ! செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence 103459460



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

1950 -60 களில் திரு சுஜாதா எழுதிய "ஜீனோ " தொடர், நினைவுக்கு வருகிறது.

சிறிய சந்தேகம்

எப்பிடி இருப்பினும்  AI க்கு ப்ரோக்ராம் எழுத மனித ஆற்றல் அவசியமல்லவா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 01, 2023 11:55 pm

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தையே பூண்டோடு அழிக்க வல்லதா?


செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

"செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இது போன்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என பலர் விமர்சித்துள்ளனர்.

ChatGPTஎன்னும் அரட்டை செயலியை உருவாக்கிய OpenAI இன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind)-ன் தலைமை நிர்வாகி டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (Demis Hassabis) மற்றும் Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டரியோ அமோடி (Dario Amodei) ஆகியோர் செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் இந்த பதிவை ஆதரித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவினால் என்ன மாதிரியான பேரிடர்கள் ஏற்படும் என்பது குறித்த சில சூழ்நிலைகளை செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.

• செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல மென்பொருட்கள் மற்றும் மிண்அணு கருவிகளை பெரும் ஆயுதங்களாக சமூக விரோத கும்பல்கள் மற்றும் சில நாடுகளின் அரசுகள் பயன்படுத்தலாம்.

• செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள், சமூகத்தை சீர்குலைத்து "பலர் ஒன்றிணைந்து முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும்."

• செயற்கை நுண்ணறிவின் சக்தி, மிகக்குறைவான கைகளில் அதிக அளவில் குவிந்து, உலக அரசுகள் பொதுமக்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கத் தொடங்கலாம். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவவும் உதவும்.

•Wall-E திரைப்படத்தில் காட்டப்பட்டது போல், மனிதர்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும்.

அதிபுத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக்கான மையத்தின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான யோசுவா பெங்கியோவும் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்துள்ளார்.

டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், பேராசிரியர் யோசுவா பெங்கியோ, மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் யான் லீகுன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அவர்களின் அற்புதமான ஆரம்பகட்ட பங்களிப்புக்களுக்காக செயற்கை நுண்ணறிவின் தந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் மூவரும் கூட்டாக 2018-ம் ஆண்டின் டூரிங் விருதை வென்றனர். இது கணினி அறிவியலில் ஒருவரின் மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

ஆனால் மெட்டாவில் பணிபுரியும் பேராசிரியர் LeCun, மனித அழிவு குறித்த இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவைகளாகவே இருக்கின்றன என்ற கருத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

உண்மைகளுக்கு ஊறு விளைவிக்கும் தன்மை


இதே போல் செயற்கை நுண்ணறிவினால் மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதை பல வல்லுநர்கள் முழுமையாக ஏற்கவில்லை. இது போன்ற அச்சம் நம்பக்கத்தகுந்த வகையில் இல்லை என்கின்றனர் அவர்கள். ஏற்கெனவே நாம் எதிர்கொண்டு வரும் சவால்களை முறியடிப்பதற்கான பாதையிலிருந்து இது போன்ற அச்சங்கள் நமது கவனத்தை திசைதிருப்புவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானியான அரவிந்த் நாராயணன், அறிவியல் புனைகதை போன்ற பேரழிவுக் காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என்று பிபிசியிடம் கூறினார்: "தற்போதைய செயற்கை நுண்ணறிவின் திறன்கள், இது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்துமளவுக்கு பெரிய அளவில் ஆற்றல் பெற்றவையாக இல்லை என்கிறார் அவர். மேலும், இது போன்ற அதீத அச்ச உணர்வுகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படப் போகும் சிறிய அளவிலான ஆபத்துக்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களின் கவனம் திசை திருப்பப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆக்ஸ்போர்டின் இன்ஸ்டிடியூட் ஃபார் எதிக்ஸின் மூத்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் எலிசபெத் ரெனிரிஸ், செயற்கை நுண்ணறிவினால் நிகழ்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள், மென்பொருட்களும், கருவிகளும் தாமாகவே முடிவெடுக்கும் அளவைப் பரவலாக்கும். அது பாரபட்சமானதாக, வெறுப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கலாம். அதே நேரம் நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள் எடுக்கப்படும் ஆபத்தும் உள்ளது," என்று அவர் கூறினார். அவை, "தவறான தகவல்களின் அளவு மற்றும் பரவலில் மிக மோசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு இதன் மூலம் எதார்த்தத்தை உடைத்து, பொது நம்பிக்கையை சீர்குலைக்கும்."

பல செயற்கை நுண்ணறிவு கருவிகள், மனிதர்களின் எண்ண ஓட்டங்களை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுக்கின்றன. அவற்றின் உள்ளடக்கம், உரைகள், கலை மற்றும் இசைக்கான முன்னுரிமைகள் என அனைத்தும், இக்கருவிகளை பயன்படுத்தி வருபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒட்டிய அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அதனால் அவை செயல்படும் விதமும் அதன் அடிப்படையிலேயே இருக்கும்.

இந்த செயற்கை நுண்ணறிவு என்பது பொதுமக்களின் பெரும் அளவிலான செல்வங்களை சொற்ப எண்ணிக்கையிலான தனியார் நிறுவனங்களுக்கு மாற்றும் செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.

ஆனால் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் டான் ஹென்ட்ரிக்ஸ், தற்காலத்தில் நிலவும் ஆபத்துகள் மற்றும் எதிர்கால அபாயங்களை சம்பந்தமற்ற விஷயங்களாக பாவித்து அணுகக்கூடாது என பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார்.

"தற்போதைய சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, பிற்காலத்தில் ஏற்படும் பல ஆபத்துக்களை எதிர்கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

மனிதனை மிஞ்சிய அறிவினால் ஆபத்து


அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை உடனடியாகத் தடுத்தது நிறுத்தவேண்டும் என கடந்த மார்ச் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் உள்ளிட்ட வல்லுநர்கள் கூட்டாக கையெழுத்திட்டு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவினால் மனித குலத்துக்கு ஆபத்து என்ற செய்தியின் மீது ஊடகங்கள் அதிக அளவில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.

அந்த கடிதத்தில், "செயற்கையாக உருவாக்கப்படும் மனங்கள் (non human minds)ஒரு கட்டத்தில் மனிதர்களை விட திறமை மிக்கவைகளாக மாறி, அதிக எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தையே அழித்துவிடும் அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மாறாக, தற்போதைய பிரச்சாரங்கள் தெளிவான வேண்டுகோளை முன்வைக்கின்றன. அவற்றின் படி, உடனடியாக இந்த ஆபத்துகள் குறித்த ஆலோசனையை அனைவரும் தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளையும், அணு ஆயுதப் போரால் ஏற்படும் அபாயத்துகளையும் ஒப்பிடுகிறது. OpenAI, தனத வலைப்பதிவு ஒன்றில், அணு சக்தியைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சர்வதேச அணு சக்தி நிறுவனம் செயல்படுவதைப் போலவே, செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தவும் உலக அளவில் ஒரு கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு பற்றி கூடுதல் கவனம் செலுத்த பிரிட்டன் உறுதி


சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இருவரும் அண்மையில் பிரிட்டன் பிரதமருடன் செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை பற்றி விவாதித்தவர்களில் இடம்பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரிஷி சூனக், செயற்கை நுண்ணறிவினால் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.

"முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செயல்பட உதவுவது, நோயெதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பது போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் உதவி அளப்பரிய அளவில் இருந்தாலும், அதை பாதுகாப்புடன் பயன்படுத்தும் தேவை இருப்பதை மறுக்கமுடியாது," என்றார் அவர்.

"அதனால் தான், கடந்த சில நாட்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் வல்லுனர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும், செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க புதிதாகத் தேவைப்படும் சட்டங்கள் குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது."

"கொரோனா தொற்றுநோய் அல்லது அணு ஆயுதங்களால் விளையும் ஆபத்துகளை செயற்கை நுண்ணறிவும் ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட தகவல்கள் பொதுமக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளன. அதனால், செயற்கை நுண்ணறிவு குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் போது, அரசு அதில் மிகுந்த கவனம் செலுத்தும் என நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்."

அண்மையில் ஜி7 பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டிலும் இது குறித்துப் பேசி உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த ரிஷி சூனக், விரைவில் அமெரிக்க அரசிடமும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 12, 2023 12:07 am

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அதிக பணத்தை செலவிடும் வளைகுடா நாடுகள்: என்ன காரணம்?


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான (ஏ.ஐ) தொழில்நுட்பம் உலக முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. இது செயல்படாத துறைகளே இல்லை. மனிதர்கள் செய்யக்கூடிய வேலைகளை கூட திறம்பட செய்யும். இது ஒரு புறம் நன்மைகளை தந்தாலும், மறு புறம் மனித வேலை வாய்ப்புகளை பறிப்பதாக உள்ளது எனப் பல நாடுகள் கூறி வருகின்றன.

இந்தநிலையில், புதிய தொழில்நுட்பத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அதிகளவு செலவிடுகின்றனர். இது எம்மாதிரியான தாக்கங்களை கொண்டு வரும் என தெரியவில்லை. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் செலவிடும் உலகின் மிகப்பெரிய நாடுகளாக மாறி வருகின்றன. அதிகாரத்துவம் உள்ள நாடுகளில் ஏ.ஐ-ன் தவறான பயன்பாடு பற்றிய கவலையும் அதிகரித்து வருகிறது.

“சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளும் கவலைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாக எழுந்துள்ளன,” கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சர்வதேச தலைப்புச் செய்திகளை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியான ChatGPT, DW பத்திரிக்கையாளர் கேட்கும்போது பதிலளித்தார். இது மத்திய கிழக்கில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆனால், ரோபோடிக் உதவியாளர் மேலும் கூறினார், “இந்த அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் பரந்த அளவிலான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் தவறான பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.”

சவூதி அரேபியா சம்பந்தப்பட்ட சமீபத்திய உயர்மட்ட வழக்குகளில், நாடு வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்க்க டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, அத்துடன் அநாமதேய கணக்குகளைப் பயன்படுத்தும் அரசாங்க எதிர்ப்பாளர்களை அடையாளம் காண ட்விட்டரில் ஊடுருவ முயற்சிக்கிறது.

ஏ.ஐ-ல் அதிக செலவு செய்பவர்கள்


ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற பணக்கார எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளின் அரசாங்கங்கள் இப்போது ஏ.ஐ தொடர்பான தொழில்நுட்பங்களை உள்நாட்டில் மேம்படுத்த சில தனிப்பட்ட ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக செலவழிக்கின்றன என்று சமீபத்திய சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.

இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் உலகளாவிய ஏ.ஐ செலவினங்கள் பற்றிய அறிக்கையின்படி, மத்திய கிழக்கு நாடுகள் இந்த ஆண்டு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் 3 பில்லியன் டாலர் (2.8 பில்லியன் யூரோக்கள்) செலவழிக்கும் என்றும், 2026க்குள் 6.4 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் கூறுகிறது. முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று சந்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தில் செலவழிப்பதில் கிட்டத்தட்ட 30% ஆண்டு வளர்ச்சியைக் காண்கிறது. இது “வரவிருக்கும் ஆண்டுகளில் உலகளவில் மிக விரைவான வளர்ச்சி விகிதம்” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏ.ஐ-ல் செலவிடக் காரணம்?


வளைகுடா நாடுகள் ஏ.ஐக்கு அதிகம் செலவழிக்கின்றன, ஏனெனில் இது எதிர்காலத் திட்டங்களின் முக்கிய பகுதியாக எண்ணெய் வருவாயில் இருந்து தங்கள் தேசிய பொருளாதாரங்களை மேம்படுத்துகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2017 இல் தேசிய AI மூலோபாயத்தை இப்பகுதியில் முதன்முதலில் ஏற்றுக்கொண்டது மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான அமைச்சரை நியமித்த உலகின் முதல் நாடு ஆனது. எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, கத்தார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளும் இதைப் பின்பற்றுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை கடந்த மூன்று ஆண்டுகளில்.

சவூதி அரேபியா குறிப்பாக குறிப்பிடத்தக்கது, ஏனெனில் அதன் எதிர்கால நகரத்தை உருவாக்கும் திட்டமான நியோமில் அனைத்து வகையான AI ஐயும் பயன்படுத்த விரும்புகிறது, மேலும் இந்த தொழில்நுட்பங்களில் அரசின் நிதியுதவி மற்றும் அதன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இறையாண்மை சொத்து நிதி மூலம் முதலீடு செய்வதற்கான செல்வம் உள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 1:54 am

வீட்டுப்பாடம் இனி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது: சாட்ஜிபிடி நிறுவனர் கருத்து



"செயற்கை நுண்ணறிவு கருவிகள், கால்குலேட்டர்கள் செய்ததை போல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும், ஆனால் கற்றலுக்கு மாற்றாக அமையாது" என்று சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கீயோ பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஆதரித்து மாணவர்களிடம் பேசும்போது இவ்வாறு அவர் கூறினார்.

"அநேகமாக வீட்டுப்பாடமாக மாணவர்கள் செய்யும் கட்டுரைகள் எழுதுதல் போன்றவை இனி முன்பு இருந்தது போல் ஒரே மாதிரியாக இருக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"எங்களிடம் கல்விக்காக ஒரு புதிய கருவி உள்ளது. வார்த்தைகளுக்கான கால்குலேட்டர் போன்றது" என்று கூறிய அவர், "நாம் மக்களுக்கு கற்பிக்கும் விதம் மாற வேண்டும். அதே போன்று நாம் மாணவர்களை மதிப்பிடும் விதமும் மாற வேண்டும்" என தெரிவித்தார்.

மனிதர்களை போன்ற உரையாடல்கள், எழுத்து மற்றும் மொழிபெயர்ப்புகளை நொடிகளில் உருவாக்கும் திறனுடைய சாட்ஜிபிடி தொழில்நுட்பம், உலக மக்களின் கற்பனை ஆற்றலை மிகவும் கவர்ந்திழுத்திருக்கிறது. ஆனால், அதே சமயம் இது கல்வி உட்பட பல துறைகளில் பலருக்கு கவலைகளை எழுப்பியுள்ளது.

குறிப்பாக கல்வித்துறையில் இதன் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பலர், அனேக மாணவர்கள் தாங்களாக சிந்தித்து அசலான ஒரு படைப்பை உருவாக்குவதற்கு பதில் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதையே விரும்ப தொடங்கி விடுவார்கள் என்றும் அதே போன்று, இந்த தொழில்நுட்பத்தை ஒரு சில மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கி விடலாம் என்றும் கவலைப்படுகிறார்கள்.

உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய தலைநகருக்கு ஆல்ட்மேன் வருகை தந்திருக்கிறார். அங்கு அவர் வணிக மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் விதிமுறைகளை வகுப்பது பற்றியும் விவாதித்து வருகிறார்.

ஏ.ஐ.க்கான விதிமுறைகளை உருவாக்குமாறு அரசியல் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர், "இந்த தொழில்நுட்பம் தவறாகப் போனால், முற்றிலும் தவறாகிவிடும்" என்றும் எச்சரித்திருக்கிறார்.

"இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம்மிடம் இருக்கப் போகும் கருவிகளுடன் ஒப்பிடும்போது நம்மிடையே தற்பொழுது உள்ள கருவிகள் மிகவும் பழமையானவை" என்று கூறிய அவர், இந்த தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.

ஏ.ஐ.க்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து தனது அச்சத்தை மீண்டும் வலியுறுத்திய ஆல்ட்மேன், உலகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, தாம் நேர்மறையாக உணர்ந்ததாக கூறினார். இருப்பினும் அவர் இச்சந்திப்புகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

"எவ்வளவு தவறு நடந்தாலும், நாங்கள் மிகவும் பொறுப்பாக இருப்போம்," என்று அவர் கூறினார்.

"சாட்ஜிபிடியினால் ஒரு சில வேலைகள் பறிபோய்விடும்" என்ற கருத்தை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், மக்கள் எதிர்பார்ப்பது போல் வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை என்றார். புதிய வகை வேலைகள் உருவாகும் எனவும் அவர் கூறினார்.



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 11:50 pm

அமேசானில் நுழையும் ஏ.ஐ: என்ன வேலை செய்யும் தெரியுமா?



அமேசான் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான(ஏ.ஐ) அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமேசானிலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜெனரேட்டிவ் ஏ.ஐ மூலம் பயனர்கள் வாங்கிய பொருட்களின் ரிவ்யூவை தொகுத்து வழங்கும் எனத் தெவித்துள்ளது. அதாவது, அமேசானில் பயனர்கள் தாங்கள் வாங்கிய பொருட்கள் குறித்து அனுபவத்தை கொடுத்திருப்பர். லைக், டிஸ்லைக் செய்தும், கமெண்ட் எழுதியும் தங்களது அனுபவத்தை தெரிவித்திருப்பர்.

அந்த அடிப்படையில் ஏ.ஐ பயனர் அனுபவத்தை தொகுத்து ஒரு ரிவ்யூவை வழங்கும். இதன் கீழ் ஏ.ஐ ஜெனரேட்டேட் சம்மரி ( Summary is AI-generated) எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வசதியை அமேசான் நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 15, 2023 10:15 pm

செயற்கை நுண்ணறிவு தாக்கம்: 90% ஊழியர்களை நீக்கிய இந்திய நிறுவனம் துக்கான்


செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence 5b9f8460-22e5-11ee-941e-23d1e9ab75fa

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக தனது வாடிக்கையாளர் சேவை பணியாளர்களில் 90 சதவீதம் பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான் (Dukaan) இ.காமர்ஸ் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனமும் சி.இ.ஒ.வுமான சுமித் ஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஒரு செய்தி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், “செயற்கை நுண்ணறிவு சாட்போட் காரணமாக எங்களது வாடிக்கையாளர் சேவை குழுவைச் சேர்ந்த 90 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம். இது கடினமானதாக இருந்தாலும் அவசியமானதும் கூட.

இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கக் கூடிய நேரம் என்பது 1.44 நிமிடங்கள் என்பதில் இருந்து உடனடியாக மாறியது. அவர்களின் குறைகளை தீர்க்கும் கால அளவு என்பது 2 மணி நேரம் 13 நிமிடங்களில் இருந்து 3 நிமிடங்கள் 12 நொடிகளாக குறைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவைக்கான செலவின் அளவு 85 சதவீதம் குறைந்துள்ளது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சாட்போட் விரைவாகவும் சரியாகவும் பதிலளிப்பதாகவும் துக்கான் நிறுவனம் கூறுகிறது

பொருளாதாரத்தை வைத்து பார்க்கும்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களை பெருநிறுவனங்களாக வளர்த்துக்கொள்வதை விட லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதைதான் நாங்களும் செய்தோம் என்றும் தனது செயலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவையை பொறுத்தவரை தங்களது நிறுவனம் நீண்ட காலமாக திணறிவந்ததாகவும் அதனை மேம்படுத்த விரும்பியதாகவும் கூறியுள்ள சுமித் ஷா, இதன் காரணமாகவே செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சாட்போட் விரைவாகவும் சரியாகவும் பதிலளிப்பதாகவும் துக்கான் நிறுவனம் கூறுகிறது.

எனினும், சுமித் ஷாவின் செயலுக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சுமித் ஷாவின் இந்த கடினமான முடிவால் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னைகள் அதிகரித்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் அபரிமித வளர்ச்சி


AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது. Chat GPT, Google Bard போன்ற சாட்பாட்(Chatbot) உதவியால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதனைப் போலவே சிந்தித்து பதில் கூறும் திறன் உடைய இந்த மென்பொருளுக்கு தெரியாதது என்று எதுவுமே இல்லை என பலரும் வியந்து கூறுகின்றனர்.

அதே நேரத்தில் , மனிதனுக்கு உதவி செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அவர்களின் வேலைக்கே பெரும் அச்சுறுத்தல் இருப்பதான ஒரு அச்சமும் மக்களிடம் நிலவுகிறது. குறிப்பாக சேவைத் துறையில் இருப்பவர்களின் வேலைவாய்ப்பு பெருமளவில் பறிபோக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வணிக ரீதியாக என்றால் இது சரிதான். ஆனால், இதனை கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

`உங்களின் ஊழியர்களில் 90 சதவீதம் பேரின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளீர்கள்` என்று மற்றொரு பயனர் இதனை விமர்சித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் பதிலளிக்கப்படுவது ஒரு வாடிக்கையாளராக தங்களுக்கு பிடிக்கவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

90 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் வழங்கப்பட்டன என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து சுமித் ஷா, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரத்தை லிங்க்ட்-இன் தளத்தில் பதிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் பெருகி மேலும் அணுகக்கூடியதாகிவிட்டன. செலவைக் குறைக்கும் அதே வேளையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க நிறுவனங்கள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதாக அறிக்கைகள் வந்துள்ளன. இதனால் தொழில் நுட்பத்தால் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

AI-ஐ தான் இனி உலகம்


மார்ச் மாதத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் 30 கோடி முழு நேர வேலையில் ஈடுபடுபவர்கள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், பல நிறுவனங்கள் தயாரிப்புகளை உருவாக்க AI இல் முதலீடு செய்கின்றன. இதுவும் வேலை இழப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளது.

அண்மையில், ஒடிசாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் லிசா என்ற செய்தி வாசிப்பாளரை தொலைக்காட்சி ஒன்று அறிமுகப்படுத்தியது. அச்சு அசல் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ரோபோ செய்திகளையும் பிழையின்றி வாசிக்கிறது.

இவ்வாறு, செயற்கை நுண்ணறிவுகள் ஒவ்வொரு துறையில் அறிமுகப்படுத்தப்படுவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூகுள் ஆப் ஸ்கேல் அகாடமியில் பயிற்சி பெற்றவரும் கணினி வல்லுநருமான செல்வ முரளியிடம் கேட்டோம்.

அவர், “எந்த தளத்துக்கு சென்றாலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற விசயங்கள் உள்ளன. அதேபோல், அதிகம் கேட்கப்படும் கேள்விகள் (FAQ) என்பதும் உள்ளது. இவை இரண்டையும் சாட்பாட் போன்ற இயந்திரங்கள் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டால் , 100க்கு 40 சதவீதம் சந்தேகங்களை அவை தீர்த்துவைத்து விடும். ஒருவேளை அவற்றால் தீர்வு காண முடியவில்லை என்றால், குழுவினர் தொடர்புகொள்வார்கள் என்று பதிலளித்துவிடலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர் சேவை இனி எளிதாகும்” என்று குறிப்பிட்டார்.

இனி செயற்கை தொழில்நுட்பம்தான் உலகம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவற்றை இணைந்து வேலை செய்வதற்கு யார்யாரெல்லாம் தயராக இருக்கிறார்களோ அவர்களுக்கு பிரச்னை இல்லை என்றும் செல்வ முரளி நம்மிடம் தெரிவித்தார்.

“ சாட் ஜிபிடி, பாட், போன்றவை எல்லாம் தனிப்பட்ட உதவியாளர்கள் என்ன வேலையை செய்வார்களோ அந்த வேலையை செய்கின்றன. அப்படியிருக்கும்போது, தனி உதவியாளர்களுக்கான(பி.ஏ) தேவை இல்லாமல் போகிறது. இதேபோல், ஒரு வாக்கியத்தை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிந்த ஆளை நாம் வேலைக்கு வைத்திருப்போம். இப்போது, அந்த வேலையை செயற்கை நுண்ணறிவு குறைந்த நேரத்தில் தரமாக செய்து முடிக்கின்றன. கூகுளின் செயற்கை நுண்ணறிவான பார்டு (Google Bard), தற்போது 40 மொழிகளில் உரையாடும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சேவை துறையில் இருப்பவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு காரணமாக நிச்சயம் பாதிப்பு ஏற்படும். குறைந்த அளவில் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு உள்ளது. எனவே, சேவைத்துறையில் உள்ளவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

'AI-ஐ முழுவதும் சார்ந்து இருப்பது சாத்தியமில்லாதது'


செயற்கை தொழில்நுட்பம் மூலம் வேலையை திறன்பட செய்ய முடிகிறது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அவற்றால் என்றைக்கும் மனிதர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று கூறுகிறார் சைபர் குற்றவியல் நிபுணரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வேலைசார்ந்தது என்ற கூற்று ஒரு புறம் இருக்கட்டும், AI என்பது ரிமோட்டாக எங்கிருந்தும் கட்டுப்படுத்தும் வகையிலான ஒரு கருவிதான். இணையத்துடன் அவை இணைந்துள்ளது. அப்படியிருக்கும்போது, எங்கேயோ உள்ள ஒரு ஹேக்கர் உங்கள் AI-ஐ ஹேக் செய்து உங்களுக்கு எதிராகவே செயல்பட வைக்க முடியும். நிறுவனத்தின் மொத்த தரவுகளும் AI வசம் இருக்கும்போது அவற்றை ஹேக் செய்து உங்களுக்கு போட்டி நிறுவனங்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியும்,” என்றார்.

இ.காமர்ஸ் போன்ற போட்டிகள் நிறைந்த துறையில் இத்தகைய செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அவரது கூற்றின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

AI-யின் செயலுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சட்ட ரீதியிலான சிக்கல்களும் இருப்பதாக கார்த்திகேயன் கூறுகிறார். “AI மூலம் இயங்கும் கார்களும் வரப்போவதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் இல்லாத தானாக இயங்கும் கார்கள் விபத்தில் சிக்கும்போது, அந்த விபத்துக்கு யார் பொறுப்பாக முடியும்? காரின் உரிமையாளரா அல்லது காரை தயாரித்தவர்களா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

முழுதும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இருக்காமல், மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து பணியாற்றும் COBOT முறை சரியானதாக இருக்கும் என்ற வாதத்தையும் கார்த்திகேயன் முன்வைக்கிறார்

அதே நேரத்தில் ஊழியர்களிடம் விசுவாசம் குறைந்துள்ளதும் நிறுவனங்கள் செயற்கை தொழில்நுட்பத்தை அதிகம் நாடுவதற்கு காரணமாக உள்ளன என்று அவர் கூறுகிறார். “ ஒரு நிறுவனம் தனது ஊழியரை 6 மாதம், 1 ஆண்டு என காலமெடுத்து நன்றாக பயிற்சிகளை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக நிறைய அவர்கள் செலவழிப்பார்கள். பயிற்சி பெற்றப்பின்னர், அதிக ஊதியம் கிடைக்கிறது என்று அந்த ஊழியர் வேறு நிறுவனத்துக்கு செல்லும்போது முந்தைய நிறுவனத்துக்கு அது இழப்பை ஏற்படுத்துகிறது. இதுவே AI பயன்படுத்தும்போது நமக்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை” என்றார்.

COBOT முறை சரியானதாக இருக்கும்


எனவே, முழுதும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இருக்காமல், மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து பணியாற்றும் COBOT முறை சரியானதாக இருக்கும் என்ற வாதத்தையும் கார்த்திகேயன் முன்வைக்கிறார். “மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து வேலை செய்வதை collaborative robot அல்லது COBOT என்று அழைக்கிறோம். ஒருசில நிறுவனங்கள் இந்த முறையை பின்பற்றுகின்றன. AI எதாவது தவறு செய்தாலும் உடன் இருக்கும் மனிதர்களால் அதை உடனடியாக சரி செய்ய முடியும். பொதுவான வேலைகள் அனைத்தையும் ரோபோ செய்துவிடும். அதிலேயே திறன் தேவைப்படும் வேலைகளை மனிதர்கள் செய்வார்கள். இது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.” என்கிறார் அவர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 16, 2023 10:03 am

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence 103459460 செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக