புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
79 Posts - 68%
heezulia
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
4 Posts - 3%
prajai
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
2 Posts - 2%
Barushree
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
1 Post - 1%
nahoor
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
133 Posts - 75%
heezulia
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
7 Posts - 4%
prajai
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
3 Posts - 2%
Barushree
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_m10புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:11 pm

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Vikatan%2F2023-05%2Fc3d3b79b-0620-4e6f-be6d-abbb5bbad5cf%2F3060b7e9_3ba7_4acd_a22c_cad4ad40ece8

நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா:

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. மேலும், அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.

இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து பிரதமர் மோடி கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது.

அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும்:

இதனையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது அவையில் இருந்தவர்கள் மோடி மோடி என உற்சாக குரல் எழுப்பினர். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக திகழும் என பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட அவர், "நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்படுவதால், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. நாடாளுமன்றக் கட்டிடம் எனும் இந்த சின்னம், அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும்; கனவுகளை காணச் செய்து அவற்றை நனவாக்கட்டும். இது நமது மகத்தான தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்" என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கட்டப்பட்டதன் பின்னணி: பழைய நாடாளுமன்றக் கட்டிடம் 1927ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த மத்திய அரசு, அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நாட்டினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் பணி டாடா ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு சாதனை கால அளவில் முடிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பொருட்கள் வாங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. 4 மாடிகளைக் கொண்டது. நாடாளுமன்றத்தின் கட்டிட பரப்பளவு 64,500 சதுர மீட்டர். இந்த கட்டிடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விஐபி-க்கள், எம்பிக்கள், பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும், மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மக்களவையில் ஆயிரத்து 280 பேர் அமரக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:12 pm

``வருங்காலத்தில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்..!" - புதிய நாடாளுமன்றத்தில் மோடி உறுதி



``வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால்தான் புதிய நாடாளுமன்றம் கட்டுவது காலத்தின் தேவையாக அமைந்திருக்கிறது." - மோடி

புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் ஒரு மணிநேரம் நடந்த பூஜைக்குப் பிறகு செங்கோல் முன் விழுந்து கும்பிட்ட பிரதமர் மோடி, தமிழக ஆதீனங்களின் கைகளால் செங்கோலைப் பெற்று மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவினார். மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கல்வெட்டையும் மோடி திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து கெளரவித்தார். அதோடு, புதிய 75 ரூபாய் நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார்.

பின்னர் புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய மோடி, ``ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறும். மே 28 அத்தகையதுதான். இந்தியா 'ஆசாதி கா அம்ரித்கால்' கொண்டாடும் வேளையில், இந்திய மக்கள் அதன் ஜனநாயகத்துக்கு புதிய நாடாளுமன்றத்தைப் பரிசாக அளித்திருக்கின்றனர். இது வெறும் கட்டடம் அல்ல. 140 கோடி இந்திய மக்களின் லட்சியத்தின் சின்னம். மேலும், இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகுக்கு வழங்குகிறது.

இந்தப் புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்குச் சாட்சியாக விளங்கும். செங்கோல் இங்கு நிறுவப்பட்டிருக்கிறது. இந்தச் செங்கோல் சோழ வம்சத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது. இப்படிப்பட்ட புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம்முடைய அதிர்ஷ்டம். இனி அவை தொடங்கும்போதெல்லாம் இந்தச் செங்கோல் நம்மை ஊக்குவிக்கும். இந்தியா முன்னேறும்போது, உலகமும் முன்னேறும். இந்தியாவின் வளர்ச்சியின் மூலம் உலகின் வளர்ச்சிக்கும் இந்தப் புதிய நாடாளுமன்றம் வழிவகுக்கும்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்லாது ஜனநாயகத்தின் தாயும்கூட. அடிமைத்தனத்துக்குப் பிறகு பலவற்றை இழந்து புதிய பயணத்தைத் தொடங்கிய நம் இந்தியா, பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து, சவால்களைக் கடந்து சுதந்திரத்தின் பொற்காலத்தில் நுழைந்திருக்கிறது. பல ஆண்டுக்கால அந்நிய ஆட்சி நம் பெருமைகளை நம்மிடமிருந்து பறித்தது. இன்றைக்கு இந்தியா அந்தக் காலனித்துவ மனநிலையை விட்டுச் சென்றுவிட்டது. இந்தப் புதிய நாடாளுமன்றம், பழைமையும், புதுமையும் ஒன்றாக இருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டதன் மூலம் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. அவர்களுக்கென டிஜிட்டல் கேலரி கட்டப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால்தான் புதிய நாடாளுமன்றம் கட்டுவது காலத்தின் தேவையாக அமைந்திருக்கிறது. இன்று, புதிய இந்தியா புதிய இலக்குகளை நிர்ணயித்திருக்கிறது. புதிய பாதைகளை விரும்புகிறது. அதன் உற்சாகம் புதியது, பயணம் புதியது, யோசனை புதியது, திசை புதியது, பார்வை புதியது. நம்மிடம் 25 ஆண்டுகள் 'அமிர்த கால்' இருக்கின்றன. எனவே, இந்த 25 ஆண்டுகளில் நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்.

இன்று, இந்தப் புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணித்ததற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம், கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் நான்கு கோடி ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதை நினைக்கும்போது அது எனக்கு அளவற்ற திருப்தியைத் தருகிறது. நாட்டிலுள்ள கிராமங்களை இணைக்க 4 லட்சம் கி.மீ சாலைகளை அமைத்திருக்கிறோம். எனவே, இந்த நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் முடிவை தீர்மானிக்கும். இங்கு இயற்றப்படும் சட்டங்கள் வறுமையை அகற்ற உதவும்" என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:12 pm

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி



புதுடில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிப்பதாகவும், தற்சார்பு இந்தியாவின் விடியலுக்குச் சான்றாக திகழ்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை விவரம்: "புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்தின் சாட்சியாக இது திகழ்கிறது. இது வெறும் கட்டிடம் அல்ல. 140 கோடி மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் உள்ளடக்கியது. இந்தியா அசைக்க முடியாத உறுதியைக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை இது உலகிற்குக் கொடுக்கிறது. இந்தியா முன்னேறும்போது, புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல; இது ஜனநாயகத்தின் தாய். தற்சார்பு இந்தியாவின் உதயத்தை புதிய நாடாளுமன்றம் பிரதிபளிக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மரியாதைக்குரிய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. சோழ சாம்ராஜ்யத்தில், கடமையின் பாதை, சேவையின் பாதை, தேசத்தின் பாதை ஆகியவற்றின் அடையாளமாக செங்கோல் கருதப்பட்டது. நமது ஜனநாயகமே நமக்கு உத்வேகம் அளிக்கிறது. பழையதும், புதியதும் இணைந்து வாழ்ந்தற்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் அளித்த வாழ்த்துச் செய்தியை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார். இந்த விழாவில், குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் தேவெ கவுடா, மாநில முதல்வர்கள் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, யோகி ஆதித்யநாத், ஏக்நாத் ஷிண்டே, நெய்பு ரியோ, வெளிநாட்டு தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:14 pm

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்டது செங்கோல்



புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 997727

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு வலப்புறத்தில் செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இன்று திறப்பு விழா காண உள்ளது. இதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிறுவும் வைபவம் இன்று நிகழ்ந்தேறியது. செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்களும் தேவாரமும் ஓத செங்கோலுக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.

இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார். இவ்விழாவில் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புனித செங்கோல் வரலாறு:

ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வே புனித செங்கோல் வழங்கும் நிகழ்வு. தமிழகத்தின் பழமையான ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில், பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது. இதற்காக திருவாவடுதுறை ஆதீன தம்பிரான், ஓதுவார், மங்கள இசை இசைப்பவர்கள் ஆகியோர் செங்கோலுடன் தனி விமானம் மூலம் டெல்லி சென்றனர். ஆதீன தம்பிரான் முதலில் செங்கோலை ஆங்கிலேயர்களின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டனிடம் வழங்கினார். பின்னர் அவரிடம் இருந்து செங்கோலை வாங்கிய அவர், அதற்கு புனித நீர் தெளித்து தேவாரம் பாடி செங்கோலை ஊர்வலமாக எடுத்துச் சென்று பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். பிரதமர் ஜவஹர்லால் நேரு புனித செங்கோலைப் பெற்றுக்கொண்டார். இவ்விதமாகவே, ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கான சடங்குகள் நிகழ்ந்தேறின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:18 pm

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல் - தமிழக ஆதீனங்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 997717

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆதீனங்கள் டெல்லி சென்றுள்ளனர். அப்போது திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார். உடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார். படங்கள்: பிடிஐ
புதுடெல்லி: செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைப்பது நாட்டின் கலாச்சாரத்தை சித்தரிப்பதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழக ஆதீனத்தால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை தான் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தின் சின்னமான மக்களவையில், மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் இந்தியா விடுதலை அடைந்தபோது தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது.

இன்று நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 ஆதினங்கள் டெல்லி சென்றுள்ளனர். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி வந்துள்ள ஆதீனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் சந்தித்தார். அவர்களிடம் இருந்து ஆசியும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்நாடு மிகவும் புண்ணியபூமியாகத் திகழ்கிறது. நாட்டின் விடுதலைக்காக ஏராளமான தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து பாடுபட்டனர். தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தேசியக் கவி சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் சுதந்திரத்துக்காக பாடுபட்டனர்.

சுதந்திர வேட்கையை மக்களிடையே பரப்பினர். பாரதத் தாயின் சுதந்திரத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் நினைவுகூர்வது நமக்குச் சிறப்புகளைத் தரும். தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களின் சுதந்திரப் போராட்டம் அளப்பரியது. இந்த விழாவில் அதை நான் எடுத்துக் கூறுவதை பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்களது தியாகம் போற்றப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

கடந்த 1947-ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்ற போது செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஆனால் அந்த புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதை தரப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’ என்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது நமது அரசு அந்த செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. இந்த செங்கோலை ஒப்படைப்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் டெல்லிக்கு வந்து ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர். உங்கள் ஆசீர்வாதம் எங்களை மகிழ்விக்கிறது. எல்லாம்வல்ல சிவனின் கருணையால் மீண்டும் செங்கோல் இங்கு வந்துள்ளது. நாளை திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த செங்கோல் நிறுவப்பட உள்ளது. அந்த செங்கோலுக்கு இன்று மறுவாழ்வு கிடைத்துள்ளது.

இந்தியா எந்த அளவுக்கு ஒன்றுபட்டிருக்கிறதோ, அவ்வளவு வலுவாக இருக்கும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடைகளை உருவாக்குபவர்கள் பல்வேறு சவால்களை முன்வைப்பார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் உங்கள் அமைப்புகளிடமிருந்து தேசம் பெற்றிருக்கும் ஆன்மீகத்தின் வலிமை, எல்லா சவால்களையும் எதிர்கொள்ள எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

தமிழகத்தைச் சேர்ந்த அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோர் தமிழின் வளர்ச்சிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் பாடுபட்டனர். இமயமலை தமிழகத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தாலும், இரண்டுக்கும் இடையில் பல்வேறு மகான்கள் தொடர்புகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தி உள்ளனர்.

அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக, 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பு செங்கோல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. செங்கோல் 1947-ம் ஆண்டு அதிகாரப் பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது. அதேநேரத்தில் காலனித்துவ காலத்துக்கு முந்தைய புகழ்ப்பெற்ற இந்தியாவை அதன் எதிர்காலத்துடன் இணைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி தனது பேச்சை அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பேசி தொடங்கினார். பின்னர் பேச்சை முடிக்கும்போது வணக்கம் என்று தமிழில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓம் நமச்சிவாய என்று கூறி முடித்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:19 pm

நாடாளுமன்றத்தில் செங்கோல் | விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்ட விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்று பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் வலப்புறத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், "நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ்.

மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடை சூழ நம் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் நாடாளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும், தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்துள்ளேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் நாடாளுமன்றத்திற்குள் ஒலித்து இருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வைகொண்டது. அன்று பாடியது... நாடாளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது. யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவர் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்திருக்கிறது. இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:21 pm

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்



புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 997697

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு முக்கிய சிறப்பு பெற்றுள்ளது. இதன் முக்கிய இடத்தில் நிரந்தரமாக வைக்கப்பட இருக்கும், ‘செங்கோல்’ தென்னிந்தியாவின் தொடர்பை காட்டுவதாக உள்ளது.

இது மட்டுமின்றி ராஜஸ்தானின் பளிங்கு கற்கள், உத்தரபிரதேசத்தின் கம்பளத் தரை விரிப்புகள், திரிபுராவின் மூங்கில்கள் என பல்வேறு மாநிலங்களின் பங்களிப்புகள் புதிய கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணியாளர்கள் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன்படி, இந்தப் புதிய கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் டையு டாமனில் இருந்தும் எம்-சாண்ட் ஹரியாணாவின் சர்க்கி தாத்ரியில் இருந்தும் செங்கற்கள் ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்தும் வந்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் உள்ளமிர்சாபூர், கம்பளத் தரைவிரிப்புகள் தயாரிப்புக்கு உலகப் புகழ்பெற்றதாகும். இங்கு முகலாயர்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு வகை கம்பளத் தரைவிரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்பட்ட கம்பள விரிப்புகள் புதிய நாடாளுமன்றம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ராஜஸ்தானின் பளிங்கு:

ராஜஸ்தானின் பளிங்கு கற்கள்தான் கட்டிடத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன. இங்கு வெட்டி எடுக்கப்பட்ட கற்களைத் தான் ஷாஜகான்உள்ளிட்ட முகலாய மன்னர்கள் தங்கள் கட்டிடங்களில் பயன்படுத்தினர். தாஜ்மகால் உள்ளிட்ட வடமாநில சுற்றுலாத் தலங்களின் கட்டிடங்களில் இவை இன்றும்மிளிர்கின்றன.

உதய்பூரில் இருந்து பச்சை பளிங்கு கற்கள், அஜ்மீர் மாவட்டத்தின் லக்காவில் இருந்து சிவப்பு பளிங்கு கற்கள், அம்பாஜி மற்றும் மக்ரானாவில் இருந்து வெள்ளை பளிங்கு கற்கள், கிஷ்ண்கரிலிருந்து இதர பளிங்கு கற்கள் கொண்டுவரப்பட்டன. இவை தவிர தோல்பூர் மாவட்டத்தின் சார்மதுராவிலிருந்து மணல்கற்கள் கொண்டு வரப்பட்டன.

உத்தரபிரதேசத்தின் நொய்டாமற்றும் ராஜஸ்தானின் ராஜ்நகரிலிருந்து கருங்கல் ஜல்லிகள் வந்தன. பளிங்கு கற்களின் பூ வேலைபாடுகளை ராஜஸ்தானின் சிற்பக் கலைஞர்கள் செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து மர வேலைப்பாடுகளுக்காக தேக்கு மரங்களும், இவற்றில் செய்த மேசை, நாற்காலி, சோபாக்கள் மும்பையில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. இக்கட்டிடத்தில் அமைந்த அசோக சக்கரம் மற்றும் வெளிப்புற அலங்கரிப்புகளுக்கு மத்திய பிரதேசத்தின் இந்தோரிலிருந்து கலவைப் பொருட்கள் வரவழைக்கப்பட்டன. பித்தளை வேலைபாடுகள் குஜராத்தின் அகமதாபாத்தில் செய்யப்பட்டுள்ளன.

2014 முதல் பிரதமராகத் தொடரும் நரேந்திர மோடி, தனதுஇரண்டாவது ஆட்சியில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும்முழக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில், நாட்டின் அனைத்துமாநிலங்களும் வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்து பணியாற்றவும் வலியுறுத்தி வருகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நாட்டின் பெரும்பாலான மாநிலப் பொருட்களின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:24 pm

பழைய நாடாளுமன்றம் என்னவாகும்?



புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 07028d80-fbdf-11ed-92cc-b3a9bf1f67e9

பழைய நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் 'கவுன்சில் ஹவுஸ்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டது. இதை உருவாக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. அக்காலத்தில் ஆங்கிலேய அரசின் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது.

பழைய நாடாளுமன்றக் கட்டடம் 83 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நிலையில், புதிய கட்டிடம் சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது கவுன்சில் ஹவுஸ் நாடாளுமன்ற கட்டடமாக மாற்றப்பட்டது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:26 pm

``தமிழ் ஆதீனங்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்துப் பெருமை சேர்த்த முதல் பிரதமர், மோடி!" - மதுரை ஆதீனம்



புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி Vikatan%2F2023-05%2F9237fc1b-2647-4200-adbf-0596b3093e12%2FWhatsApp_Image_2023_05_28_at_13_58_38.jpeg?rect=0%2C0%2C943%2C530&auto=format%2Ccompress&format=webp&dpr=1

``தமிழ்நாட்டில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையின் முகமாகத்தான் இன்றைக்கு எங்களை வரவழைத்துப் பெருமை சேர்த்திருக்கிறார் மோடி." - மதுரை ஆதீனம்

நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா விமர்சையாக நடந்துவருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்கள், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் என தமிழ்நாட்டு ஆதீனங்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சுமார் ஒரு மணிநேரம் நடந்த பூஜைக்குப் பிறகு பிரதமர் மோடி, தமிழ்நாட்டு ஆதீனங்களிடமிருந்து செங்கோலைப் பெற்று, மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைத்தார். இந்த நிலையில், `தமிழ் ஆதீனங்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்த முதல் பிரதமர் மோடிதான்' என்று விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் புகழாரம் சூடியிருக்கிறார்.

இது குறித்து ஊடகத்திடம் பேசிய மதுரை ஆதீனம், ``14 பிரதமர்கள் இருந்தார்கள். ஒருவர்கூட இங்கு தமிழை ஒலிக்கச் செய்யவில்லை. வெள்ளையன் விரட்டப்பட்டானே ஒழிய அவன் கட்டிய நாடாளுமன்றம் முடக்கப்படவில்லை. ஆனால், நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்றத்தைக் கட்டி தேச பக்தியுள்ளவர் என்பதை இன்றைய தினம் நிரூபித்துவிட்டார். தமிழ்நாட்டில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையின் முகமாகத்தான் இன்றைக்கு எங்களை வரவழைத்துப் பெருமை சேர்த்திருக்கிறார் மோடி.

தமிழ் ஆதீனங்களை அழைத்து நாடாளுமன்றத்தில் தமிழ் கலாசாரத்தைப் பெருமையுடன் ஊக்குவித்த முதல் பிரதமர் மோடி. அது மட்டுமல்லாமல் தமிழுக்கும் நரேந்திர மோடிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிரதமர் மோடி எப்போதும் தமிழ் கலாசாரம், தமிழ் மக்களுடன் நிற்கிறார். ராஜீவ் காந்தி இங்கு பிரதமராக இருந்தபோது இலங்கையில் ராஜபக்சேவுடன் சேர்ந்துகொண்டு லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த அரசு காங்கிரஸ் அரசு. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து பல உதவிகளைச் செய்த அரசு நரேந்திர மோடி அரசு. அதற்காகத்தான் இன்று அவருக்கு செங்கோல் கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:34 pm

30 % மின்சாரத்தை சேமிக்கும் கட்டிடம் : 1,272 இருக்கைகள் கொண்ட லோக் சபா: புதிய நாடாளுமன்றத்தின் முக்கிய அம்சங்கள்



பிரதமர் மோடி இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டட வடிவமைப்பாளர் பிமல் படேல், இதை வடிவமைத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முக்கோண வடிவம்



இந்த புதிய கட்டிடம் முக்கோண வடிவதில் உள்ளது. பிமல் படேலை பொருத்தவரையில், பல்வேறு மதங்களில் இந்த வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார். பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் அம்சங்களை நினைவுப்படுத்தும் வகையில் புதிய பாராளுமன்றத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இருக்கும். இந்த இரண்டு கட்டிடமும் ஒன்றாகத்தான் செயல்பட உள்ளது.

கட்டிடத்தின் பரப்பளவு



புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 3 மாடிகள் உள்ளன. 64, 500 சது மீட்டர் கொண்டது. லோக் சபா நடைபெறும் பகுதியில் தற்போது 888 இருக்கைகள் உள்ளன. இதுபோல இந்த இருக்கைகளை 1,272 ஆக அதிகப்பட்டுத்தி கொள்ளலாம். மத்தியில் இருக்கும் ஹால் அல்லது அறை இல்லை என்றால், லோக் சபா மற்றும் ராஜா சபா உறுப்பினர்களை சேர்த்ந்து ஒரே நேரத்தில் கூட்டம் நடத்த முடியும்.

நுழைவாயில்



மூன்று நுழைவாயிலும், 3 பக்கங்களில் அமைந்துள்ளது. குறிப்பாக குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற அவைத் தலைவர், பிரதமர் உள்ளே நுழைய வசதியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் மற்றும் புதிய பாராளுமன்றத்தை காண விரும்பும் நபர்கள், பி.டி.ஐ-யின் ( Press Trust of India) கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் வரவேற்பு அறை மற்றும் அலுவலகத்தை அணுகலாம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது



பசுமை கட்டடக்கலை மூலம் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மின்சார தேவை 30 % குறையும். மழை நீர் வடிகால் மற்றும் நீர் மறுசுழற்சி முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் 150 வருடங்கள் வரை இந்த கட்டிடம் நிலைத்து இருக்கும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்



டெல்லி என்பது நில அதிர்வு ஏற்படும் பகுதி – வி என்பதால் இந்த புதிய கட்டிடம் நில அதிர்வை தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம், நில அதிர்வை தாங்கும் நிலையில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

புதிய லோக் சபா



புதிய லோக் சபா பகுதியின் சுவர்கள் மற்றும் மேற்கூரை முழுவதும், மயிலின் தோகை செதுக்கப்பட்டுள்ளது. இவை ’டியல் ’ கார்பெட்டுகளால் கூடுதலாக மெருகூட்டப்பட்டது. ராஜா சபை பகுதி தாமரைச் சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ராஜா சபை மற்றும் லோக் சபா எம்.பிக்கள் ஒரே நேரத்தில் கூட்டத்தை நடத்த ஒன்று கூட முடியும். அனைவருக்கும், தொடு திரை வசதி கொண்ட மேசை அமைக்கப்பட்டுள்ளது.

ராஜா சபை பகுதியில், 384 நபர்கள் வரை அமரலாம். எதிர்காலத்தில் எம்.பிக்களின் அளவு அதிகரிக்கலாம் என்பதால் கூடுதல் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்ட அறை அல்லது மண்டபம்



புதிய கட்டத்தில் சட்ட அறை உள்ளது. இந்த அறையில் இந்திய ஜனநாயகத்தின் பயணத்தைப் பற்றி ஆவணங்கள் இடம் பெறும்.

வசதிகள்



எம்.பிக்களுக்கு ஓய்வு அறை, உணவு பரிமாறப்படும் அறை, நூலகம் ஆகியவை இருக்கிறது. இந்த புதிய கட்டிடத்தின் மத்தியில் உள்ள முற்றத்தில் ஆல மரம் உள்ளது.

அலுவலக வசதி



புதிதாக 6 கமிட்டி அறைகள் இருக்கிறது. இதுவே பழைய கட்டிடத்தில் 3 மட்டுமே இருந்தது. பல்வேறு துறை அமைச்சர்களுக்கு 92 அறைகள் உள்ளது. இவை துறை அமைச்சர்களின் அலுவலகமாக செயல்படும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக