புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது
Page 1 of 1 •
ஊழல் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, சினிமா பாணியில், நீதிமன்ற ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த 'ரேஞ்சர்ஸ்' எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். |
இதையடுத்து, அந்நாட்டின் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைமையகத்தை முற்றுகையிட்டு, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால், பதற்றம் நிலவுகிறது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக, 2018 ஆக., - 2022 ஏப்., வரை பதவி வகித்தவர், இம்ரான் கான், 70.
அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவர், பாக்., தெஹ்ரீக்- - இ - -இன்சாப் என்ற கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். 2022 ஏப்ரலில், பாக்., பார்லியில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து, இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து பாக்., புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
இதையடுத்து, அரசுக்கு எதிராக இம்ரான் கான் அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இவர் மீது, கடந்த ஓராண்டில் மட்டும், 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே, தன்னைக் கொல்ல, பாக்., ராணுவம் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, இம்ரான் கான் சமீபத்தில் குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊழல் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், இம்ரான் கான் நேற்று ஆஜரானார். அப்போது அங்கு வந்த ரேஞ்சர்ஸ் படையினர், நீதிமன்ற ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து அவரை கைது செய்தனர்.
இதை தடுக்க முயன்ற இம்ரான் கானின் வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மீது அவர்கள் தடியடி நடத்தினர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.
இம்ரான் கானுக்கு சொந்தமான அல் - காதிர் அறக்கட்டளைக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பஹ்ரியா டவுன் நிறுவனம் ஒதுக்கீடு செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியின் காரிசன் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென, ராணுவ தலைமையகத்தின் பிரதான வாயிற்கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இஸ்லாமாபாதில் உள்ள ஐ.எஸ்.ஐ., எனப்படும் பாக்., உளவு அமைப்பின் தலைமையகத்தையும் முற்றுகையிட்டு, இம்ரான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதேபோல், லாகூரில் உள்ள ராணுவ தளபதியின் வீட்டின் ஜன்னல்களை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
இதற்கிடையே, நீதிமன்றம் வந்த இம்ரானை, விசாரணை துவங்கும் முன்பே அதிரடியாக கைது செய்த துணை ராணுவ ரேஞ்சர் படையின் மூத்த அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பியுள்ளது.
பாக்.,கில் வன்முறை; போலீசார் காயம்: ராணுவம் குவிப்பு
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டில் முக்கிய நகரங்களில், டயர்கள் எரிப்பு, கல்வீச்சு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருவதுடன், வன்முறை வெடித்துள்ளது. 130க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். இதனால், பஞ்சாப் மாகாணத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஊழல் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று ( மே 09)இம்ரான்கான் ஆஜரானார். அப்போது அங்கு வந்த ரேஞ்சர்ஸ் படையினர், நீதிமன்ற ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து அவரை கைது செய்தனர். இம்ரான் கானுக்கு சொந்தமான அல் - காதிர் அறக்கட்டளைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பஹ்ரியா டவுன் நிறுவனம் ஒதுக்கீடு செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வன்முறையை தவிர்க்க இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் வன்முறை வெடித்ததுடன் குழப்பமான சூழ்நிலை உருவாகி உள்ளது. ராவல்பிண்டியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மரங்கள் மற்றும் டயர்களை எரித்து சாலைகளில் தூக்கி வீசியுள்ளனர். அங்குள்ள ராணுவ அலுவலகத்திற்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை போட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர். அலுவலகம் மீது கற்களை வீசியதுடன், நுழைவு வாயில்களை சேதப்படுத்தனர்.
இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். ராணுவ அமைப்புகள் மற்றும் அலுவலகங்கள் மீது இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர்களின் கோபம் திரும்பி உள்ளது.
பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.
அரசு அலுவலகங்களும் சூறையாடப்பட்டுள்ளன. இதனால், வெளியில் செல்லும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வன்முறை காரணமாக 130க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்து உள்ளனர். பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
முறையீடு
இதனிடையே, கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்துள்ளார். தான் கைது செய்யப்பட்டது சட்டப்படியானது என்ற இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்ட போது கூறுகையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. கழிவறை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
உதவியாளர் கைது
இம்ரான் கானின் உதவியாளர் ஆசாத் உமரையும், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? இம்ரான் கான் ஏன் கைது செய்யப்பட்டார்?
கேள்வி- இம்ரான் கான் கைது தொடர்பான பேச்சு நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், அவர் ஏன் திடீரென கைது செய்யப்பட்டார்? |
பதில்- இது திடீரென நடந்ததல்ல. பின்னணியில் நடவடிக்கை நடந்து கொண்டுதான் இருந்தது. பாகிஸ்தானில் ஊழலைத்தடுக்கும் பொறுப்பு உள்ள நிறுவனம் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB). அந்நிறுவனம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவரை நேரில் ஆஜராகுமாறும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறும் கேட்டிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காததால் படிப்படியாக விஷயம் கைது வரை சென்றது.
இந்த விவகாரம் இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அப்போது அவர் ஆன்மிகம் மற்றும் சூஃபித்துவத்தில் பணியாற்றுவதற்காக பாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ அனுமதி அளித்தார்.
அந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்ட பஞ்சாப் அரசு நிலங்களை வாங்கியது. அந்த நிலத்தை வாங்குவதில் இம்ரான் கானும் அவரது மனைவியும் மோசடி செய்ததாக தேசிய பொறுப்புடைமை பணியகம் கூறுகிறது. சட்டவிரோதமாக நிலம் வாங்கப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன் இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
கேள்வி- தேசிய பொறுப்புடைமை பணியகத்தின் கட்டுப்பாடு யார் கைகளில் உள்ளது மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது? பதில்- தேசிய பொறுப்புடைமை பணியகம் சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய அமைப்பாக மாறியுள்ளது. |
இது பர்வேஸ் முஷாரஃப் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வாயை அடைக்க அவர் இந்த அமைப்பை பயன்படுத்தினார்.
இந்த அமைப்பிடம் நிறைய அதிகாரங்கள் இருந்தன. தேசிய பொறுப்புடைமை பணியகம் ஒருவரை கைது செய்த பின்னர் அவரை 60 நாட்களுக்கு தான் காவலில் வைத்திருக்க முடியும்.
இம்ரான் கான் ஆட்சியின் போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர்களும் இதன் காவலில் இருந்துள்ளனர். இதில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோரும் அடங்குவர்.
ஆனால் இம்ரான் கானின் அரசு வெளியேறிய பிறகு, இந்த அமைப்பிற்கு பரந்த அதிகாரங்கள் இருப்பதாகவும், அதன் உதவியுடன், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கருதிய புதிய அரசு, அதன் அதிகாரங்களைக் குறைத்துள்ளது.
இன்றைய தேசிய பொறுப்புடைமை பணியகம் ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட மிகக் குறைவான அதிகாரங்களோடு செயல்படுகிறது. எல்லா அரசுகளும் தங்கள் அரசியல் திட்டங்களை நிறைவேற்ற இந்த அமைப்பை பயன்படுத்தியுள்ளன.
கேள்வி- இம்ரான் கானுக்கு என்னென்ன சட்ட வழிகள் உள்ளன. இதற்கு முன்பும் பலமுறை அவர் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுள்ளார். இந்த முறை என்ன நடக்கும்? |
பதில்- இது சட்ட விஷயத்தைக்காட்டிலும் அரசியல் ரீதியான விஷயமாகும். சட்டரீதியாக, அவர் தொடர்ந்து நிவாரணம் பெறுகிறார். ஆனால் பின்னர் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
நான் கூறியது போல், தேசிய பொறுப்புடைமை பணியகத்தின் சட்டங்கள் கடந்த ஆண்டு இருந்தைப்போல இப்போது வலுவாக இல்லை.
முன்பெல்லாம் ஜாமீன் கிடைப்பதே சிரமம். சிலருக்கு இரண்டு ஆண்டுகள் கூட ஜாமீன் கிடைக்காமல் இருந்துள்ளது.
ஆனால் ஒப்பீட்டளவில் இப்போது இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைப்பது எளிது.
ஆனால் பாகிஸ்தானில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை சட்ட அடிப்படையில் மட்டும் அல்லாமல் அரசியல் பின்னணியிலும் பார்க்க வேண்டும்.
இதற்குப் பிறகுதான் விஷயம் எங்கு முடியும் என்பதை நீங்கள் யூகிக்க முடியும். இம்ரான் கான் விஷயத்தில் கூட, சட்ட விவாதம் அவ்வளவு முக்கியமில்லை. உண்மையில் அரசியல் சூழ்நிலை முழு விஷயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கேள்வி- பாகிஸ்தானில் அவரது சொந்தக் கட்சியைத் தவிர இம்ரானுடன் யார் இருக்கிறார்கள்? அவருக்கு எதிராக யார் உள்ளனர்? உதாரணமாக, ராணுவம், நீதித்துறை மற்றும் பிற அரசியல் குழுக்களின் நிலைப்பாடு என்ன? |
பதில்- இம்ரான் கான் ஆட்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவருக்கு நீதிமன்றத்தின் ஆதரவு அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
நீதிமன்றத்தில் விசாரணை நடத்தும் நீதிபதி கூட தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர் என்றும் இம்ரான் கானுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்குவதாகவும், இம்ரான் கானின் அரசியல் எதிரிகள் கூறத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்பும் இம்ரானை கைது செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு முன்னெப்போதும் இருந்திராத அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவரது கைது வாரண்டை நீதிமன்றங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
நீதிமன்றத்தில் ஆஜரான போதெல்லாம் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இனி அரசியல் விவகாரங்களில் தலையிடுவதை குறைத்துக்கொள்ளப் போவதாகப் பாகிஸ்தான் ராணுவம் ஓராண்டுக்கு முன்பு வரை கூறி வந்தது.
கடந்த ஒன்றரை வருடங்களில் ராணுவம் அரசியலில் இருந்து தன்னை வெகுவாக ஒதுக்கி வைத்துக்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் பாகிஸ்தானின் அதிகார வட்டங்களில் இதனால் ஏற்பட்ட வெற்றிடம் நீதிமன்றங்களால் நிரப்பப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இம்ரான் கானுக்கு நிறைய நிவாரணம் கொடுப்பதால் மக்கள் முன் இம்ரான் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது போல் தெரிகிறது. ராணுவத்தில் தனக்கு ஆதரவானவர்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் ஆதரவு தனக்கு கிடைத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இம்ரான் கான் பாகிஸ்தானின் சாதாரண அரசியல்வாதிகளைப் போல் இல்லை. அவர் ஒரு அசாதாரண சக்தியைப் பெற்றுள்ளார், அதை அவர் நன்றாகப் பயன்படுத்துகிறார்.
கேள்வி- இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல் விளைவு என்னவாக இருக்கும்? அரசுக்கும் இம்ரானுக்கும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். பாகிஸ்தானில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும் போது, தேர்தல் நடக்குமா? உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இம்ரான் கான் நீண்ட நாட்களாக கோரி வருகிறாரே? |
பதில்- இந்தக் கைதின் விளைவு என்னவாக இருக்கும் என்பது அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தது.
ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் வெளியே வந்தால் அது அவரது அரசியலை மேலும் வலுவாக்கும்.
ஆனால் தேர்தல் முடியும் வரை அவர் சிறையில் இருந்தால் அது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு தோல்வியை கொடுக்கக்கூடும்.
தெஹ்ரீக்-இ-இன்சாப் பாகிஸ்தானின் மற்ற கட்சிகளைப் போலல்லாமல் ஒரு தனிநபர் கட்சி.
இம்ரான் கான் சாலைக்கு வரும்போது மக்களும் வெளியே வருகிறார்கள். அவர் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லவில்லை என்றால், அது பிடிஐ கட்சிக்கு மிகவும் கடினமான நேரமாக அமையும்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன - முதலில், வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் போது கட்சி நிறைய சிக்கல்களைச் சந்திக்கும். இரண்டாவதாக, இம்ரான்கான் மக்கள் மத்தியில் இல்லையென்றால் கட்சி பின்னடைவை சந்திக்க நேரிடலாம்.
பங்குச் சந்தையில் தாக்கம்
இம்ரானின் கைது பாகிஸ்தானின் பங்குச் சந்தை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
செவ்வாயன்று பங்குச் சந்தை குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலான சரிவுடன் முடிந்தது.
நாட்டின் அரசியல்-பொருளாதார சூழ்நிலையால் பங்குச்சந்தை ஏற்கனவே அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அது மேலும் சரிந்துள்ளதாகவும் பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தையில் கொந்தளிப்பு நிலவியது. ஒரு மணி நேரத்திற்குள் பங்குகளை விற்கும் அலைமோதல் தொடங்கியது.
இம்ரான் கானின் கைது நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அதிகரித்து, பங்குச் சந்தையில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை தரகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இம்ரான்கானை ஒருமணி நேரத்தில் ஆஜர்படுத்துங்கள்: பாகிஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள் என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை 8 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது கைது தொடர்பாக நாடு முழுவதும் வன்முறை வெடித்தது
இதனால் பாகிஸ்தான் முழுவதுமே பெரும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நேற்று முன்தனம் கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்னும் ஒரு மணி நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாக்., முழுதும் இம்ரான் ஆதரவாளர்கள் போராட்டத்தால் தொடரும் பதற்றம்
இஸ்லாமாபாத் : பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள், 900க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக்- - இ- - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை, ஊழல் வழக்கு ஒன்றில், 'ரேஞ்சர்ஸ்' எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். வழக்கு விசாரணைக்காக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கானுக்கு சொந்தமான அல் - காதிர் அறக்கட்டளைக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பஹ்ரியா டவுன் நிறுவனம் ஒதுக்கீடு செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், இஸ்லாமாபாத், லாகூர் உட்பட பல்வேறு நகரங்களில், இரண்டாவது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ தலைமையகம், ஐ.எஸ்.ஐ., எனப்படும் பாக்., உளவு அமைப்பின் தலைமையகத்தை முற்றுகையிட்டு, பல இடங்களில் தீ வைத்தனர்.
பஞ்சாப் மாகாணத்தில் மட்டும், போராட்டத்தில் ஈடுபட்ட 945 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில், 2 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில், அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மயில்கள் திருடிய போராட்டக்காரர்கள்
லாகூரில் உள்ள ராணுவப் படை தளபதி வீட்டை முற்றுகையிட்டு, நேற்று முன்தினம் இரவு, இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், வீட்டில் இருந்த பொருட்களை தீயிட்டு எரித்தனர். மேலும், அங்கு வளர்க்கப்பட்ட மயில்களை திருடிச் சென்றனர்.
8 நாள் காவல்
அல் - காதிர் அறக்கட்டளை வழக்கில், இம்ரான் கானை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, என்.ஏ.பி., எனப்படும் தேசிய பொறுப்புடைமை அமைப்புக்கு, பாக்., ஊழல் தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது. அப்போது நீதிபதியிடம், ''கழிப்பறைக்கு செல்லக் கூட அனுமதிக்கவில்லை,'' என, இம்ரான் கான் குமுறினார்.
இதற்கிடையே, வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்ற வழக்கில், இம்ரான் கான் மீது, செஷன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
ராணுவம் வரவழைப்பு
இன்று நடந்த போராட்டம் பல்வேறு நகரங்களில் வன்முறையாக பரவியது. இஸ்லாமாபாத்தில் உள்ள பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த போராட்டத்தில் 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது.போராட்டம் நீடித்து வருவதால் நிலையை சமாளிக்க ராணுவம் வரவழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இண்டர்நெட் துண்டிப்பு
இதற்கிடையே பாகிஸ்தான் இன்று முதல் இணையதள சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஆலோசனை
பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதைய நிகழ்வுகளுக்கு அரசியல் ஆதாயம் தேடும் இம்ரான் கான் காரணம். அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு எதிராக சாட்சியங்கள் உள்ளன எனவும் சட்டப்படியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாகிஸ்தானில் ஆட்சி செய்த பிரதமர்கள் மீது ஊழல் குற்ற சாற்றை சாற்றுவதோ
அல்லது பிரதமர் அசந்து தூங்குகையில் மிலிட்டரி ஆட்சி பிடிப்பதோ மிகவும் சகஜம்.
பாகிஸ்தான் சரித்திரத்தை 1947 க்கு பிறகு சிறிது புரட்டிப்பார்த்தால் தெரியவரும்.
ஒன்றுபட்ட பாகிஸ்தானில், கிழக்கு பாகிஸ்தானில் (பங்களா தேஷ் உருவாவதற்கு முன்
பெண்களை போல் முகமூடி -படுதா அணிந்து அன்றைய கிழக்கு வங்க பிரதமர் லியாகத் அலிகான்
தப்பினார் என்பது செய்தி)
அல்லது பிரதமர் அசந்து தூங்குகையில் மிலிட்டரி ஆட்சி பிடிப்பதோ மிகவும் சகஜம்.
பாகிஸ்தான் சரித்திரத்தை 1947 க்கு பிறகு சிறிது புரட்டிப்பார்த்தால் தெரியவரும்.
ஒன்றுபட்ட பாகிஸ்தானில், கிழக்கு பாகிஸ்தானில் (பங்களா தேஷ் உருவாவதற்கு முன்
பெண்களை போல் முகமூடி -படுதா அணிந்து அன்றைய கிழக்கு வங்க பிரதமர் லியாகத் அலிகான்
தப்பினார் என்பது செய்தி)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
» கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள்: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் அறிவுறுத்தல்
» இம்ரான் கான் கைது, தேர்தலில் நிற்க தடை
» இம்ரான் கான் அவுட், ஷேபாஸ் ஷெரீப் உள்ளே :இந்திய பாகிஸ்தான் உறவு எப்படி இருக்கும்?
» மலேசிய முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது
» எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு
» இம்ரான் கான் கைது, தேர்தலில் நிற்க தடை
» இம்ரான் கான் அவுட், ஷேபாஸ் ஷெரீப் உள்ளே :இந்திய பாகிஸ்தான் உறவு எப்படி இருக்கும்?
» மலேசிய முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது
» எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1