புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
31 Posts - 55%
heezulia
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
17 Posts - 3%
prajai
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
4 Posts - 1%
jairam
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_m10பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 06, 2023 11:23 pm

பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா: 1000 ஆண்டுகள் பழைமையான நிகழ்வின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்



பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா 20c2ddf0-ebf5-11ed-a142-ab0e42bfd9c3

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா வரும் இன்று (6.5.2023) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் மனைவி கமில்லாவுடன் பங்கேற்கும் அரசருக்கு முடிசூட்டப்படும். இந்த விழாவிற்கு 'Operation Golden Orb' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முடிசூட்டுதல் என்றால் என்ன?


அரசரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது.

இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை அரசருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்வு இருக்கும்.

இருப்பினும், அரசர் பதவியில் இருப்பதற்கு கண்டிப்பாக கிரீடம் சூட்டப்பட வேண்டும் என எந்தத் தேவையும் இல்லை.

அரசர் எட்டாம் எட்வர்ட் முடிசூட்டிக்கொள்ளாமலேயே ஆட்சி செய்தார். சார்ல்ஸை பொறுத்தளவில், அரசி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த அடுத்த வினாடியில் இயல்பாகவே அவர் அரசராகிவிட்டார்.

இதற்கிடையே இந்த முடிசூட்டு விழாவை முன்னிட்டு 8ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முடிசூட்டு விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும் விண்ட்சர் கோட்டையில் 7ஆம் தேதி 20,000 பார்வையாளர்களைக் கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள பப்கள், பொழுதுபோக்கு விடுதிகள், பார்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று கூடுதலாக இரண்டு மணிநேரம் திறந்திருக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்துமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழாவில் என்ன நடக்கும்?


முடிசூட்டு விழா என்பது கடந்த 1,000 ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில், பிரிட்டனில் மட்டும்தான் இதுபோன்ற முடிசூட்டு விழா நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 1953ஆம் ஆண்டு அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு நடைபெற்ற முடிசூட்டு விழாவைவிட சிறிய நிகழ்ச்சியாகவும் மிகக் குறைந்த நேரமே நடைபெறும் நிகழ்வாகவும் இந்த விழா இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழா ஊர்வலமும் சிறிய அளவிலேயே நடத்தப்படவுள்ளது. அரசி எலிசபெத்தின் முடிசூட்டு விழாவின்போது சுமார் 16,000 பேர் பங்கேற்ற ஊர்வலம் 45 நிமிடங்களில் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.

இந்த முறை அரசரும் அவரது மனைவியும் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய ரதத்தில் தான் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு செல்கின்றனர். இந்த ரதத்தில் குளிர்சாதன வசதியும் மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் இருக்கின்றன.

2014ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட வைரவிழா ரதத்தில் விழாவுக்குச் செல்லும் அரசர் பின்னர், கடந்த 1830ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு முடிசூட்டு விழாவுக்கும் பயன்படுத்தப்படும் தங்க ரதத்தில் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆயுதமேந்திய 6,000 ராணுவ வீரர்கள் பங்கேற்கும் ஒரு மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் நாடுகளில் இருந்து வரும் ஏராளமான ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பங்கிங்ஹாம் கோட்டையில் இருந்து இந்த அணிவகுப்பைக் கண்டு ரசிப்பார்கள்.

பிரமாண்ட அரச ரதம்


இரண்டு தங்க ரதங்கள் தான் அரசர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளன. மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிருடன் இருந்தபோது தயார் செய்யப்பட்டிருந்த வைர விழா அரச ரதம், தற்போது அரசர் சார்ல்ஸ் மற்றும் அரசரின் மனைவியை லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் அபேவுக்கு அழைத்துச் செல்லும்.

“இந்த வைரவிழா அரச ரதம் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. இது 2014ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நிகழ்வில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இதற்கு முன்னதாக அமையவில்லை,” என்கிறார் தி ராயல் கலெக்ஷன் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் சேலி குட்சிர்.

இந்த 5 மீட்டர் நீள ரதத்தின் எடை 3 டன்களைவிட அதிகம். “இன்றளவிலும் சாலையில் செல்லும் எந்தவொரு காரையும்விட இது குறிப்பிடத்தக்க அளவில் பெரியது. ரதத்தின் மேற்புறத்தில் மிகப்பெரிய தங்க மகுடம் உள்ளது.

18ஆம் நூற்றாண்தில் பயன்படுத்தப்பட்ட அரச கப்பற்படையின் புகழ்பெற்ற ஹெச்எம்எஸ் விக்டரி கப்பலின் மரக்கட்டைகள் இந்த ரதத்தை செதுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்கிறார் சேலி.

முடிசூட்டு விழா முடிந்தவுடன் இந்த தங்க ரதம் அரசர் மற்றும் அரசரின் மனைவியை பக்கிங்காம் அரண்மனைக்கு மீண்டும் அழைத்துச் செல்லும்.

உலகின் பழமையான வாகனம்


நீண்ட நேரம் நடைபெறும் இந்த மிகப்பெரிய விழாவின் மையப்புள்ளியாக இந்த இரண்டாவது தங்க ரதம் இருக்கும். இது சுமார் 4 மீட்டர் உயரமும் ஏழு மீட்டர் அளவிற்கு நீளமும் கொண்டது. இதன் எடை 4 டன்கள்.

1762ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ரதம், உலகிலேயே இன்றளவும் இயங்கும் ஒரு பழைமையான வாகனமாக இது உள்ளது.

இந்த வண்டியை இழுக்க எட்டு குதிரைகள் தேவை. எட்டு குதிரைகள் தங்க ரதத்துடன் பூட்டப்பட்டிருக்கும். பக்கவாட்டில் நான்கு குதிரைகள் இருக்கும்.

முடிசூட்டும் போது என்ன நடக்கும்?


முடிசூட்டுவதில் பல படிநிலைகள் உள்ளன.

அங்கீகரித்தல்: 700 ஆண்டு கால பழைமையான இருக்கையின் பின்னால் நின்றுகொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், அரசரை அங்கீகரித்து ஓர் அறிவிப்பை வெளியிடுவார். அப்போது, "God Save the King!" என அனைவரும் முழக்கங்களை எழுப்புவார்கள். ராணுவ இசை மற்றும் வாத்திய கருவிகள் முழங்கும்.

சத்தியப் பிரமாணம்: சட்டத்தையும் பிரிட்டன் தேவாலயத்தையும் காப்பதாக அரசர் உறுதிமொழி எடுப்பார்.

சமயச் சடங்கு: பின்னர் அரசர் அந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டு அவரது வழக்கமான ஆடைகள் அகற்றப்படும். அப்போது பார்வையாளர்களிடம் இருந்து தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட திரைமூலம் அவரை மறைத்து, அவரது தலை, உடல் பகுதியில் புனித எண்ணெய் தேய்த்துவிடுவர்.

அரசருக்கென்றே சிறப்பாகத் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் எந்தப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பர்கிரீஸ், ஆரஞ்சு மலர்கள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளன. மேலும், விலங்குகளிடம் இருந்து பெறப்பட்ட எந்தப் பொருளும் இந்த எண்ணெயில் இல்லை.

பதவியில் அமர்த்தும் சடங்கு: பின்னர் அரசரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு, அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்படும். பின்னர் நியாயம், இரக்கம் போன்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தால் உருவாக்கப்பட்ட வாத்து ஒன்றும் அளிக்கப்படும். அதன் பிறகு இறுதியாக அரசரின் தலையில் ஆர்ச் பிஷப் புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூட்டுவார்.

அரியணை ஏற்றுதல்: பின்னர் முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையை நோக்கி அரசர் செல்வார். அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமர வைக்கப்படுவார். பின்னர் இதேபோல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்படும்.

முடிசூட்டு விழாவுக்கு என்ன செலவாகும்?


இதுவோர் அரசு விழா என்பதால் இதற்காகும் செலவுகள் அனைத்தையும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசே ஏற்கும்.

ஏற்கெனவே பிரிட்டனில் கடும் பொருளாதார நெருக்கடிகள் நிலவும் நிலையில், உலக அரங்கில் பிரிட்டனின் கௌரவத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இதை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.

பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 06, 2023 11:25 pm

சார்லஸ் முடிசூட்டு விழாவின் பத்து சிறப்பு அம்சங்கள்


கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டன் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெர்(96) மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக்கொண்ட சார்லஸ், அரசவை சட்டத்தையும் பிரிட்டன் திருச்சபையையும் நிலை நிறுத்துவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தங்க அங்கி அணிவித்து தங்க முலாம் பூசப்பட்ட அரியணையில் அமரவைக்கப்பட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். அவரது கையில் செங்கோலும் வழங்கப்பட்டது.

பிரிட்டன் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெர்(96) மறைவைக்குப் பிறகு, மூன்றாம் சார்லஸ் சனிக்கிழமை பிரிட்டன் மற்றும் 14 பிற காமன்வெல்த் நாடுகளின் மன்னராக முடிசூட்டப்பட்டார். உடனடியாக அவரது மனைவி கமீலா பிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டார்.

* 1937 மற்றும் 1953-க்குப் பிறகு நடைபெற்ற ஒரு மன்னரின் முதல் முடிசூட்டு விழாவாகும். பிரிட்டன் வயதான மன்னராக பதவியேற்ற முதல் மன்னர் மூன்றாம் சார்லஸ்.

* 2,300 பேர் பங்கேற்ற வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் "கடவுளே மன்னரை காப்பாற்று" என்ற முழக்கங்கள் முழங்கின, மேலும் அவர் பதவியேற்றதை மத ரீதியாக உறுதிப்படுத்தியதன் உச்சக்கட்டத்தில் ஆரவாரங்கள் ஒலித்தது.

* வெளியே, நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஆலய மணி சத்தங்கள், டிரம்ஸ்கள் முழங்க கொண்டாட்டப்பட்டது.

* சார்லஸை " மக்களின் மன்னர்" என்று அங்கீகரிப்பதற்காக பல சிக்கலான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருந்தபோதிலும், மன்னரை சேவையின் பிற அம்சங்களை இன்று கொண்டு வர முயன்றார்.

* பெண் பாதிரியார்கள் முதல் முறையாக கலந்து கொண்டனர், பிரிட்டனின் பிற மத தலைவர்களும் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் அதன் செல்டிக் மொழிகளான வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக் மற்றும் ஐரிஷ் கேலிக் ஆகியவை முக்கியமாக இடம்பெற்றன.

* கோர்ஃபு தீவில் பிறந்த மன்னர் சார்லஸின் மறைந்த தந்தை பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மன்னர் முடிசூட்டு விழாவில் முதன்முறையாக கிரேக்க பாடகர் குழு சங்கீதம் வாசித்தது.

* சார்லஸ் மன்னர் மட்டும் அல்ல, சர்ச் ஆஃப் பிரிட்டனின் தலைவர் மற்றும் தன்னை ஒரு "இறையாண்மையின் ஆன்மீக நிலையை வலியுறுத்தும் கிறிஸ்தவ மத தலைவர்" என்று தெரிவித்தார். ஆனால் அவர் இரண்டாம் உலகப் போரின் நிழலில் அவரது தாயார் பெற்றதை விட மத ரீதியாகவும் இன ரீதியாகவும் வேறுபட்ட நாட்டிற்கு தலைமை தாங்குகிறார். எனவே, அவர் சபையை பிரிட்டன் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாக மாற்ற முயன்றார், சாதாரண பொதுமக்களை அரச தலைவர்கள் மற்றும் உலகளாவிய அரச தலைவர்களுடன் அமர அழைத்தார்.

* முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக, கேன்டர்பரி பேராயர் சிலுவை வடிவில் உள்ள அவரது உள்ளங்கைகளில் புனித எண்ணெயை அபிஷேகம் செய்தார். விழாக்களின் சடங்கு உடைகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன.

* இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டனின் பிரதமா் ரிஷி சுனக், மத நம்பிக்கைபடி இந்துவாக இருந்தாலும், பிரிட்டன் அரசின் முதல் தலைவர் என்ற முறையில் மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பைபிள் வசித்தார். முடிசூட்டு விழாவை "நமது வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களின் பெருமையின் வெளிப்பாடு" என்று தெரிவித்தார்.

* முன்னதாக, பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் முடிசூட்டிக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் வழி அருகே போராட்டம் நடத்திய முடியாட்சி எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 06, 2023 11:27 pm

கோஹினூர் வைரம் பிரிட்டன் அரசர் முடிசூட்டு நிகழ்வில் பயன்படுத்தப்படாது - ஏன் தெரியுமா?



பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாது என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, அரசரின் மனைவி கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிரீடம் லண்டன் டவரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு முடிசூட்டு விழாவுக்காக அளவு மாற்றப்படுகிறது.

சமீபகாலத்தில் இப்படி கிரீடம் அளவு மாற்றப்படுவது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. அரசி இரண்டாம் எலிசபெத்தின் வைரங்களும் இதில் சேர்க்கப்படுகின்றன. கமீலா வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரசருக்கு அருகில் முடி சூட்டப்படுவார்.

அரசர் அரசி அணியும் கிரீடங்கள்


மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய அணிகலன்களில் உள்ள வைரங்களைக் கொண்டு அரசி கமீலா சூடும் கிரீடம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட குல்லினன் III, IV, V என்னும் வைரங்கள் ஆகும்.

முடி ஆபரணங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அரசர் மூன்றாம் சார்ல்ஸ் அணிந்திருப்பார். 1661-இல் அரசர் இரண்டாம் சார்ல்ஸ் அணிந்திருந்த கிரீடம் உள்நாட்டுப் போரால் அழிந்துபோன பின் அவருக்காக உருவாக்கப்பட்ட கிரீடம் இது.

அவருக்குப் பின் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் இதை அணிந்து வந்தார். ஆனால் அவருக்குப் பின் வரும் அரசர்கள் தங்களுக்குப் பொருந்தும் வகையில் கிரீடங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட இந்த கிரீடம் முடி சூட்டு விழாவில் பயன்படுத்தப்படாது

கோஹினூர் வைரத்தின் சர்ச்சை


உலகிலேயே அதிக விலைமதிக்கத்தக்க வைரக்கற்களில் ஒன்றான #கோஹினூர் வைரக்கல் இந்த முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படவில்லை.

அதற்குக் காரணம், இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்னும் சர்ச்சை அரசி எலிஸபெத் முடிசூட்டிய காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. இதற்குப் பதிலாகத்தான் கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படுகிறது.

கோஹினூர் வைரம் உலகின் மிகப் பழைமையான வைரம் அல்ல. இருந்தும் அதைச் சுற்றி சர்ச்சைகள் இன்றளவும் சுழன்று வருவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த வைரம் இந்தியாவில் இருந்து நாதர்ஷா என்னும் இரானிய மன்னனால் 1739ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முடி ஆபரணங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முடி சூட்டு விழாவில் அணிந்திருப்பார்

அதன் பிறகு பல படையெடுப்புகளையும் சூறையாடல்களையும் கண்ட கோஹினூர் வைரம் இறுதியாக 1849இல் பஞ்சாப் இணைப்பின்போது பிரிடிஷ் கவர்னர் ஜெனரலின் கைகளுக்கு வந்தது.

அப்போது இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு, வீழ்த்தப்பட்ட ஓர் இளம் மன்னன் இதைப் பரிசாக அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கோஹினூர் பற்றிய ஒரு புத்தகத்தின் இணை எழுத்தாளரும் பிபிசி செய்தியாளருமான அனிதா ஆனந்த் கூறும்போது, “ஈட்டிமுனையில் இருக்கும்போது வழங்கப்படுவதை எல்லாம் பரிசு என்று எடுத்துக் கொள்ளலாமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று கூறுகிறார்.

1850களில் இளவரசர் ஆல்பர்ட் இந்த வைரத்தை பளபளப்பாக்கி அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆபரணத்தில் பதித்தார். அதிலிருந்து பட்டத்து ஆபரணங்களுள் ஒன்றாக கோஹினூர் வைரம் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்கூட இந்த வைரத்தை தங்களுடையது என்று உரிமை கோரி வருகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 06, 2023 11:34 pm

ராஜாவுக்கு என்ன பொறுப்புகள் உள்ளன ?


ராஜாவின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று பிரிட்டனில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்தை நியமிப்பது.

தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தலைவர், மன்னரின் இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்பட்டு, அவரை ஆட்சி அமைக்க முறைப்படி அழைக்கிறார்.

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசைக் கலைக்கும் உரிமையும் ராஜாவிற்கு உண்டு.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை திறப்பு விழாவுடன் தொடங்கி, தனது உரையில் அரசின் திட்டங்களை வகுக்கிறார் மன்னர். இந்த பேச்சு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மேல் சபையான ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெறுகிறது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்குவதும், அவை செல்லுபடியாகும் என்று கருதப்படுவதும் மன்னரின் பணியாகும். கடைசியாக 1708 ஆம் ஆண்டில், சிம்மாசனம் எந்த சட்டத்தையும் நிறைவேற்ற மறுத்தது.

பொதுநலவாயத்தின் தலைவர்


இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம், அவர் நினைவு தினத்தில் அறிவுறுத்தல்களை வழங்குகிறார். இது போர்நிறுத்த நாள் அல்லது படைவீரர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. சில காமன்வெல்த் நாடுகளில் நடந்த போர்களின் போது உயிர்நீத்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவுகூரப்படும் நாள் இது.

புதிய மன்னர் காமன்வெல்த் அமைப்பின் புதிய தலைவராகவும் உள்ளார். காமன்வெல்த் என்பது 56 சுதந்திர நாடுகளையும் 2.4 பில்லியன் மக்களையும் கொண்ட ஒன்றியமாகும்.

இதன் மூலம் மூன்றாம் சார்லஸ் மன்னர் 14 காமன்வெல்த் நாடுகளின் தலைவரானார்.

இருப்பினும், 2021 இல் பார்படாஸ் குடியரசாக மாறிய பிறகு, மற்ற கரீபியன் காமன்வெல்த் பிரதேசங்களும் குடியரசாக மாற விருப்பம் தெரிவித்துள்ளன.

இளவரசர் ஜார்ஜ், கேம்பிரிட்ஜ் டச்சஸ், இளவரசர் லூயிஸ், இளவரசர் லூயிஸ், இளவரசர் வில்லியம் மற்றும் விண்ட்சரில் இளவரசி சார்லோட்

ராணிக்கு பதிலாக ராஜா


இப்போது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் படம் நீக்கப்பட்டு, அந்நாட்டின் தபால் சேவையான ராயல் மெயிலின் புதிய முத்திரைகளிலும், இங்கிலாந்து வங்கி வெளியிட்ட நோட்டுகளிலும் மன்னர் மூன்றாம் சார்லஸின் படங்கள் வைக்கப்படும்.

மேலும், பிரித்தானிய கடவுச்சீட்டில் எழுதப்பட வேண்டிய வார்த்தை 'ஹிஸ் மெஜஸ்டி' என மாற்றப்படும்.

புதிய ராஜாவுடன், நாட்டின் தேசிய கீதத்திலும் மாற்றம் ஏற்பட்டது, இப்போது 'காட் சேவ் தி ராணி' என்பதற்கு பதிலாக 'காட் சேவ் தி கிங்' சேர்க்கப்பட்டது.

பேரரசர்கள் எங்கு வாழ்கிறார்கள்?


மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி மனைவி ஆகியோர் லண்டனின் மையத்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், அவர் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள கிளாரன்ஸ் ஹவுஸ் மற்றும் மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஹைக்ரோவ் ஹவுஸில் வசித்து வந்தார்.

இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேத்தரின் சமீபத்தில் மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையிலிருந்து தலைநகரின் புறநகரில் உள்ள விண்ட்சரில் உள்ள அடிலெய்டு காட்டேஜுக்கு குடிபெயர்ந்தனர்.

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்க்கல் ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.

பிரிட்டனில் முடியாட்சி எவ்வளவு விரும்பப்படுகிறது ?


கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் யூகோவ் நடத்திய ஆய்வின்படி, ராணியின் பிளாட்டினம் விழாவையொட்டி, 62 சதவீத பிரிட்டிஷ் குடிமக்கள் முடியாட்சி அப்படியே இருக்க வேண்டும் என்று நம்பினர். 22 சதவீத மக்கள் தேசத்தின் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டிற்கான Ipsos Mauri இன் இரண்டு கருத்துக்கணிப்புகளிலும் ஏறக்குறைய இதே முடிவுகள் வந்துள்ளன. மன்னராட்சியை அகற்றுவது பிரிட்டனுக்கு நல்லது என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே நம்பினார்.

இருப்பினும், கடந்த தசாப்தத்தில் முடியாட்சிக்கான ஆதரவு குறைந்துள்ளதாக YouGov ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. 2012 ஆம் ஆண்டில் 75% ஆக இருந்த ஆதரவின் எண்ணிக்கை 2022 இல் 62% ஆக அதிகரித்துள்ளது.

மூத்தவர்கள் மத்தியில் மன்னராட்சிக்கு அதிக ஆதரவு இருந்தபோதிலும், இளைஞர்களின் தரவுகள் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தன.

2011 இல், YouGov முதன்முறையாக இதைப் பற்றிய கருத்துக்கணிப்பைத் தொடங்கியது. 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 59% பேர் முடியாட்சி தொடர வேண்டும் என்று விரும்பினர், ஆனால் 2022 இல் 33% இளைஞர்கள் மட்டுமே முடியாட்சியை ஆதரித்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 3:49 am

பிரிட்டன் அரசிக்கு ஆடை, அரசருக்கு அணிகலன் வடிவமைத்த மேற்கு வங்கப் பெண்!


பிரிட்டன் அரசி கமீலாவுக்கு ஆடையும், அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு மேலாடையில் அணியப்படும் அணிகலனையும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண் வடிவமைத்து தந்துள்ளாா். அவருக்கு நன்றி தெரிவித்து பிரிட்டன் அரச குடும்பம் கடிதம் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பதினான் என்ற சிற்றூரில் வசிப்பவா் பிரியங்கா மாலிக் (29). இவா் இத்தாலியில் உள்ள மிலான் பல்கலைக்கழகத்தில் இணையவழியில் ஆடை வடிவமைப்பில் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளாா். இவா் பிரிட்டன் அரச குடும்பத்தின் பிரதிநிதிகளை தொடா்புகொண்டு, அரசி கமீலாவுக்கு ஆடை வடிவமைத்து தர விரும்புவதாக தெரிவித்துள்ளாா். இதனைத்தொடா்ந்து அவா்களுக்கு ஆடையின் வடிவமைப்பை பிரியங்கா அனுப்பியுள்ளாா். அத்துடன் அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு மேலாடையில் அணியப்படும் அணிகலனையும் வடிவமைத்து அனுப்பியுள்ளாா். ஆடை மற்றும் அணிகலனின் வடிவமைப்பு அரசி மற்றும் அரசருக்குப் பிடித்ததால், பிரியங்காவுக்கு நன்றி தெரிவித்து அரச குடும்பம் கடிதம் அனுப்பியுள்ளது. அத்துடன் பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளவும் பிரியங்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பிரியங்கா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

எனது ஆடை மற்றும் அணிகலன் வடிவமைப்பை பிரிட்டன் அரசியும், அரசரும் பாராட்டினாா்கள் என்று தெரியவந்தபோது, அது எனக்கு நம்பமுடியாத வியக்கத்தக்க உணா்வாக இருந்தது. பாராட்டு கடிதம் கிடைத்தது சிலிா்ப்பூட்டியது. பிரிட்டன் அரச குடும்பத்திடம் இருந்து கடிதம் அல்லது மின்னஞ்சல் பெறுவது எனக்கு மிகவும் மதிப்புமிக்கது.

அரசரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், உடல்நிலை காரணமாக என்னால் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்று தெரிவித்தாா்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக