புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
48 Posts - 51%
heezulia
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
48 Posts - 51%
heezulia
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 20, 2023 9:21 pm



மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்னைகளையும் மதுக்குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறியிருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் மது அருந்துவோர் குறித்து ஆய்வொன்றை நடத்தியுள்ளது ஜெர்மனியிலுள்ள டி.யூ.டிரெஸ்டன் பல்கலைக்கழகம். 2010 முதல் 2017 வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த ஆய்வின் முடிவில், மதுவுக்கு அடிமையானவர்களை 200 வகையான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் `லான்செட்' ஆங்கில இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் மது குடிப்பவர்களை ஒதுக்கி வைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இன்று, மது அருந்துவது தவறல்ல என்ற மனோபாவம் வளர்ந்துவிட்டது. பள்ளி மாணவர்கள்கூட மதுக்கடைக்குச் சென்று எவ்வித அச்சமும் இல்லாமல் புட்டிகளை வாங்கும் அவலம் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கொண்டாடுவதற்கும், கூடிப்பிரிவதற்கும் மட்டுமே உலகம் முழுவதும் மது குடிக்கிறார்கள். ஆனால், இங்கு குடி என்பது நோயாக மாறியிருக்கிறது. சிறு வயதிலேயே பலமிழந்து, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள்.

``மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்னைகளையும் மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

மது அருந்துவதால் `ஆல்கஹால் இண்டியூஸ்டு சைக்காட்டிக் டிஸ்ஆர்டர்’ (Alcohol Induced Psychotic Disorder) என்ற மனப்பிறழ்வு நோய் ஏற்படுகிறது. மனப்பிறழ்வு என்பதை `பித்துப்பிடித்தாற்போல’ என்றும் குறிப்பிடலாம். அதாவது, காதில் மாயக்குரல்கள் கேட்பது, தன்னை யாரோ கத்தியால் குத்தவோ, வெட்டவோ வருவதுபோன்ற மாயப்பிம்பங்கள் தோன்றுவது, தனக்கு யாரோ செய்வினை அல்லது சூனியம் வைத்துவிட்டதுபோல நினைப்பது, பிறர் தன்னைப் பற்றியே பேசுவதாக நினைப்பதுபோன்ற பல்வேறு மனநிலைக்கு ஆளாவார்கள். இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது, கொலை செய்வதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மதுப்பழக்கம் உள்ள சிலர், தன்னுடைய மனைவி மீது சந்தேகப்படுவார்கள். இதன் விளைவாக இருவருக்கும் இடையே பிரச்னைகள் உருவாகி, அது கடைசியில் விவாகரத்தில் முடியும். சமீபகாலமாக, 'ஆல்கஹால் இண்டியூஸ்டு சைக்காட்டிக் டிஸ்ஆர்டர்' பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

உடல்நலப் பாதிப்புகள்!


தொடர்ச்சியாக மது அருந்துவதால் நரம்பியல் கோளாறுகள், கைகால் தளர்ந்துபோவது, கால் எரிச்சல், `எரெக்டைல் டிஸ்பங்ஷன்’ (Erectile dysfunction) என்ற ஆண்மைக் கோளாறு போன்றவை ஏற்படும். `சிரோசிஸ் ஆஃப் த லிவர்’ (Cirhosis of the liver) என்பது மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவலாகக் காணப்படும் கல்லீரல் நோய். இதுமட்டுமன்றி பார்வைக் கோளாறுகள், உடல்பருமன் மற்றும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மது அருந்துவதால் உணவுக் குழாய் முழுவதும் பாதிக்கப்படும்.

சிலர் நீண்டநாள் மது அருந்தாமல் இருப்பார்கள். திடீரென இரண்டு, மூன்று நாள்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவார்கள். இதனால் கணையம் அழற்சிக்குள்ளாகி, `அக்யூட் பேங்கிரியாட்டிடிஸ்’ (Acute Pancreatitis) என்ற நிலைக்குப்போய் மரணம்கூட சம்பவிக்கலாம். மிதமிஞ்சிய மதுப்பழக்கத்தால் `கிரானிக் பேங்கிரியாட்டிடிஸ்’ (Chronic Pancreatitis) எனும் நிலைக்குச்சென்று அடிவயிற்றில் வலி (Nagging Pain) ஏற்படும். ஆகவேதான் மதுப்பழக்கத்தை `குடி நோய்’ என்கிறோம்.

சோஷியல் டிரிங்கிங்!


இன்றைய வாழ்க்கைச்சூழல் மனஅழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல், நிலையற்ற அரசியல், சமூக ஏற்றத்தாழ்வுகள், பணிச்சுமை போன்றவையும் அதிகரித்திருக்கின்றன. எனவே, அவற்றை எதிர்கொள்ள மதுப்பழக்கம் நல்லது என்றும், அது ஆசுவாசப்படுத்தும் என்றும் தவறாகக் கற்பிக்கப்படுகின்றன. இதனால், இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை பலரும் குடிப் பழக்கத்தில் அடிமையாகிக் கிடக்கின்றனர்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் இளைஞர்கள் சிலர் தன்னுடைய கழுத்துப்பட்டையைக்கூட கழற்றாமல் மதுக்கூடங்களில் மது அருந்துவதைச் சென்னை போன்ற பல நகரங்களில் பார்க்கமுடிகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி என மாநகரங்களில் உள்ள பப்புகள், பார்கள் எல்லாம் நிரம்பிவழிகின்றன. பணத்தைப் பற்றி கவலைப்படாமல், `நாளை காலைக்குள் இந்த உலகம் அழிந்துவிடும். அதற்குள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும்’ என்பதுபோல மதுவை வெறித்தனமாக குடிக்கின்றனர். அதேபோல சோஷியல் டிரிங்கிங் (social drinking) ஈடுபடும் எல்லோரும் குடிநோயாளிகளாக மாறிவிடுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கல்லூரி மாணவர்கள் 10 பேரிடம் மதுப்பழக்கம் அறிமுகமானால், அதில் ஆறு பேர் தப்பிவிடுவார்கள். ஆனால், நான்கு பேர் தீவிர மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி சுமார் 35 வயதிலிருந்து 40 வயதுக்குள் எல்லாவகையான உடல்நலப் பிரச்னைகளுக்கும் ஆளாகிவிடுவார்கள். சில நேரங்களில் `மதுப்பழக்கம் என்பது மரபணுக்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குடிநோயாளிகளாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் அது பரவும்’ என்கிற தியரி உண்டு. அதனால், முன்னோர் மதுவுக்கு அடிமையாகியிருந்தால், அடுத்த தலைமுறையினர் மதுவிலிருந்து விலகியிருப்பதே நல்லது.

மீள்வது எப்படி?


ஒரேநாளில் ஒருவரால் மதுப்பழக்கத்தைக் கைவிட முடியாது. மதுப்பழக்கத்திலிருந்து ஒருவரை மீட்க நீண்டகால சிகிச்சை தேவைப்படும். `ஆல்கஹாலிக் வித்ட்ராவல் சின்ட்ரோம்’ (Alcohol Withdrawal Syndrome) என்று ஒன்று உள்ளது. ஒரு குடிநோயாளி மதுவை நிறுத்தினால் அவருக்குக் கைகால்கள் நடுங்க ஆரம்பிக்கும்; குழப்பமான மனநிலை ஏற்படுவதுடன் வியர்த்துக்கொட்டும்; உறக்கம் வராது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும்விதமான சிகிச்சை மையங்களை அரசு கூடுதலாகத் திறக்க வேண்டும். அதற்குரிய மருத்துவர்களை அதிகமாக நியமிக்கவேண்டியது அவசியம். மதுவினால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தை மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டும். மாவட்டம், நகரம்தோறும் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை மையங்கள் தொடங்கினால் மதுவைக் கைவிட நினைக்கும் பலரும் இத்தகைய மையங்களை நாடிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களில் படித்தவர்கள் மனநல மருத்துவர்களை நாடுகின்றனர். ஆனால், நம் நாட்டில் குடிக்கு அடிமையானவர்களில் பலர் படிப்பறிவில்லாதவர்களே. அவர்களில் பலர் மதுவிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை குறித்துத் தெரியாமல் இருக்கின்றனர். அவர்களை மீட்கக் கடைநிலை மக்களையும் சென்றடையும்வகையில் மிகப்பெரும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்க வேண்டும். சில அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பிடுவதுபோல படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தலாம். இதனால் இளைய தலைமுறை மதுவைச் சுவைக்காமல் நாம் காப்பாற்றிவிடலாம்.

இவற்றுக்கும் மேலாகத் தனிமனித ஒழுக்கம் அவசியமானது. தமிழகத்தை எய்ட்ஸ் நோய் அச்சுறுத்தியபோது தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டுவந்தோம். அதேபோல மிகப்பெரிய பிரசாரங்கள், உதவிக் குழுக்கள் அமைப்பது, மருத்துவர்களை ஒருங்கிணைப்பது, மாநாடுகள் நடத்துவது எனத் தொடர்ச்சியான செயல்பாடுகள்மூலம் சமூகத்தில் மதுவுக்கு எதிரான மாற்றத்தைக் கொண்டுவர அரசால் மட்டுமே முடியும். செய்வார்களா..?” என்ற கேள்வியோடு முடிக்கிறார் எஸ்.மோகன வெங்கடாசலபதி.

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக