புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_m10குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 7:48 pm

First topic message reminder :

குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024 - Page 2 V0YJKDw

மேஷம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

ரிஷபம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

மிதுனம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

கடகம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

சிம்மம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

கன்னி - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

துலாம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

விருச்சிகம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

தனுசு - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

மகரம் - குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2023 - 2024

கும்பம் - குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023 - 2024

மீனம் - குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023 - 2024

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 8:02 pm

மகரம் 2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்

விருப்பு வெறுப்பு இல்லாதவர் நீங்கள். குரு பகவான் இப்போது 22.4.23 முதல் 1.5.24 வரை நான்காவது வீட்டில் வந்து அமர்கிறார். செலவுகளைக் குறைக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு வீட்டில் வாழ்க்கைத்துணை-பிள்ளைகளைப் பகைக்க வேண்டாம்.

எதிலும் உணர்ச்சிவயப் படாமல் அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது நல்லது. அவ்வப்போது விரக்தி, சோர்வு, டென்ஷன் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடு, மனக்கசப்பு வரக்கூடும்.

சிறுசிறு வாகன விபத்துகள் வரக்கூடும்; கவனம் தேவை. நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். சொத்து வழக்குகளில் யோசித்து முடிவெடுங்கள். மகளுக்குத் திருமணம் திடீரென ஏற்பாடாகும். மகனுக்கு இருந்த கூடா பழக்க வழக்கங்கள் நீங்கும். அவருக்கு அயல்நட்டில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பிள்ளைகளிடம் அதிகம் கெடுபிடி வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சொத்து வாங்குவது - விற்பதில் மிகுந்த கவனம் தேவை.

உங்களின் 10-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புது வண்டி வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சின்னச் சின்ன உரசல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களில் சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்; பொருட்படுத்த வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை மற்றும் 23.11.23 முதல் 6.2.24 வரை குருபகவான் அசுவினியில் செல்கிறார். அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். பழைய நண்பர்களைப் பகைக்க வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனைகளைச் சிறப்பாகச் செய்து முடியுங்கள்.

23.6.23 முதல் 22.11.23 வரை மற்றும் 6.2.24 முதல் 17.4.24 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணியில் குரு செல்வதால் எதிர்பாராத பண வரவு, திடீர் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தள்ளிப்போன கல்யாணம் முடியும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டு.

17.4.24 முதல் 1.5.24 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி, பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

வியாபாரிகளே! கடன் வாங்கிப் புதிய முதலீடுகள் செய்யவேண்டாம். இருப்பதைப் பெருக்கப் பாருங்கள். பணம் விஷயத்தில் கறாராக இருங்கள். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். வேலையாட்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல்கள் நீங்கும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் விஷயத்தில் வளைந்துகொடுத்துப் போகவும்.

உத்தியோகஸ்தர்களே! வேலை அதிகரிக்கும். நேரடி அதிகாரி குறை கூறினாலும், மூத்த அதிகாரி உங்களைப் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். பதவி-சம்பள உயர்வு தாமதமாகும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கவே செய்யும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி அதீத உழைப்பைத் தந்தாலும், புதிய பாதையில் உங்களைப் பயணிக்கவைத்து புது மாற்றத்தைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: சஷ்டி தினங்களிலோ, வியாழக் கிழமைகளிலோ திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரையும், அங்கே பிராகாரத்தில் அருளும் குரு பகவானையும் நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்; ஏற்றங்கள் உண்டாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 8:03 pm

கும்பம் 2023 குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்!

கொள்கை - கோட்பாடுகளுடன் வாழ்பவர் நீங்கள். குரு பகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை 3-வது வீட்டில் நீடிப்ப தால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நன்று. சில விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து முடிவெடுக்க வேண்டும். சில வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போகலாம். வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும்.

வசதி, செல்வாக்கு உள்ளவர்களின் பேச்சைக் கேட்டுத் தவறான பாதையில் செல்லவேண்டாம். குடும்பத்தில் சிறு விவாதமும் பெரிய சண்டையில் முடியலாம்; கவனம் தேவை. முக்கிய விஷயங்களில் வீட்டுப் பெரியோரின் ஆலோசனை அவசியம். உங்களின் 7-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். நாடாளுபவர்கள், வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் உயரும்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தந்தை வழிச் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். பிள்ளைகளின் பிடிவாதம், அலட்சியப் போக்கு மாறும்.

மகனை அவர் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத் திலேயே படிக்கவைப்பீர்கள். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். அவ்வப்போது பெரிய நோய் இருப்பது போன்று எண்ணம் உண்டாகும். பயப்பட வேண் டாம். விலையுயர்ந்த நகைகள், ரத்தினங் களைக் கவனமாகக் கையாளுங்கள்.

உங்களது லாப வீடான 11-வது வீட்டைக் குரு பார்ப்பதால் வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். காரியத் தடைகள் நீங்கும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை மற்றும் 23.11.23 முதல் 6.2.24 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு உண்டு; செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.

23.6.23 முதல் 22.11.23 வரை மற்றும் 6.2.24 முதல் 17.4.24 வரை உங்கள் சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், தடைப்பட்ட வேலைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சிலர், வசதியுள்ள வீட்டுக்குக் குடிபெயர்வீர்கள்.

17.4.24 முதல் 1.5.24 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணைவர் வழியில் மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ரகதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. செல்வம், செல்வாக்குக் கூடும்.

வியாபாரிகளே! பெரிய முதலீடுகள் வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுங்கள். கடையை அழகுபடுத்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூல் செய்வீர்கள். வேலையாள்களிடம் கறார் வேண்டாம். ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரிப் பாகங்கள், கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் ஒப்படைப்பார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால், யோசித்து முடிவெடுங்கள். மே, டிசம்பர் மாதங்களில் வேலைச்சுமை குறையும். புதிய சலுகைகளுடன், சம்பள உயர்வும் உண்டு. கணினித் துறையினருக்குப் பதவி உயரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, ஒருவித அயர்ச்சியைத் தந்தாலும் பல காரியங்களில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஶ்ரீராகவேந்திரர், ஷீர்டி ஶ்ரீசாயிபாபா, ஶ்ரீபாம்பன் சுவாமிகள் என மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; சாதுக்களுக்கு அன்னதானம் வழங்க இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்; சகல நலன்களும் உண்டாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 8:04 pm

மீனம் 2023 குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்!

எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைப்பவர் நீங்கள். குருபகவான் 22.4.23 முதல் 1.5.24 வரை, உங்கள் ராசிக்குத் தன வீடான 2-ம் வீட்டில் அமர்கிறார். மனப்போராட்டங்கள் நீங்கும். இதமான பேச்சால் சாதிப்பீர்கள். செலவுகளைச் சமாளிக்கும் வகையில் பண வரவு உண்டு. குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். பிரிந்தவர் ஒன்றுசேர்வீர்கள்.

வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும் என்பதால், வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து மோதல்கள் விலகும். தேக ஆரோக்கியம் பற்றிய வீண் பயம் விலகும்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால், உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வேற்றுமொழி பேசுவோரால் ஆதாயம் உண்டு. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.

உங்களது 8-ம் வீட்டைக் குரு பார்ப்பதால், எதிர்பாராத வகையில் பணம் வரும். பழைய சொந்தங்கள் தேடி வருவர். திட்டமிட்டபடி அயல் நாட்டுப் பயணங்கள் கூடிவரும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

குருபகவான் உங்களது 10-ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப்பதவிகள் தேடி வரும். ஆன்மிகக் காரியங்களில் நாட்டம் பிறக்கும். வேலையில்லாமல் தவிக்கும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 22.4.23 முதல் 23.6.23 வரை; 23.11.23 முதல் 6.2.24 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு மூலம் பணம் வரும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

23.6.23 முதல் 22.11.23 வரை மற்றும் 6.2.24 முதல் 17.4.24 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

17.4.23 முதல் 1.5.24 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் பகிர வேண்டாம்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.23 முதல் 20.12.23 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு.

வியாபாரிகளே! லாபம் கூடும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் நீங்கும். தேங்கிக் கிடக்கும் சரக்குகளைப் புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்பப் புதிய முதலீடுகளைச் செய்வது நல்லது. பிரச்னை தந்த பங்குதாரர்களை நீக்குவீர்கள்; புதிய பங்குதாரர்கள் சேர்வார்கள். அரசின் கெடுபிடிகள் தளரும். மே, ஜூன், ஆகஸ்ட், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஹோட்டல், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், பைனான்ஸ், கமிசன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! இழந்த சலுகைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். மேலதிகாரி உங்களின் திறமையை அறிந்து பதவி-சம்பள உயர்வு தருவார். வேலை நிரந்தரமாகும். சகஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள். சம்பளம் உயரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, பழைய சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், மாறுபட்ட அணுகுமுறையால் எதையும் சாதித்துக் காட்டும் வல்லமையைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: புதுக்கோட்டையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேங்கைவாசல். இங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை சுண்டல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; குரு பலம் உண்டாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2023 6:28 pm

குருப்   பெயர்ச்சி  ஒரே ராசிக்கு வெவ்வேறு ஜோதிடர்கள்  வேவ்வேறுவித பலன்கள், கூறுகிறார்கள்.

அதே சமயத்தில் சுக்கிரன் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு வருகிறார்.

ஒன்றில் நற்செய்திகளும் மற்றதில் சாதாரண பலன்களும் கூறுகிறார்கள்.

படிக்கிறோம் --சந்தோஷப்படுகிறோம் அல்லது கவலைப்படுகிறோம், ஒருவார காலத்திற்கு .

பிறகு மறந்துவிடுகிறோம். 

வாழ்க்கை எப்போதும் போல் ஓடிக்கொண்டு இருக்கிறது. சிரி சிரி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 20, 2023 4:12 pm

T.N.Balasubramanian wrote:குருப்   பெயர்ச்சி  ஒரே ராசிக்கு வெவ்வேறு ஜோதிடர்கள்  வேவ்வேறுவித பலன்கள், கூறுகிறார்கள்.

அதே சமயத்தில் சுக்கிரன் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு வருகிறார்.

ஒன்றில் நற்செய்திகளும் மற்றதில் சாதாரண பலன்களும் கூறுகிறார்கள்.

படிக்கிறோம் --சந்தோஷப்படுகிறோம் அல்லது கவலைப்படுகிறோம், ஒருவார காலத்திற்கு .

பிறகு மறந்துவிடுகிறோம். 

வாழ்க்கை எப்போதும் போல் ஓடிக்கொண்டு இருக்கிறது. சிரி சிரி

முற்றிலும் உண்மை தலைவரே.

இதுதான் வாழ்க்கை.

இறக்கும் வரை இருந்துவிட்டுப் போவோம் இந்தப் பூமியில்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 9:39 pm

நாளை குருபெயர்ச்சி.. என்ன செய்ய வேண்டும்..?

நாளை குரு பெயர்ச்சி நிகழ இருப்பதை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்றும் குரு பெயர்ச்சி அன்று குருவை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்

குரு பெயர்ச்சி அன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலில் சென்று வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் இருப்பதாகவும் குரு பெயர்ச்சியால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் குரு பெயர்ச்சி அன்று கோவிலுக்கு சென்று குருவை வழிபட்டால் அந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

குரு பார்க்க கோடி நன்மை என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளதால் குருவின் கோடி நன்மைகள் நம்மை தேடி வர வேண்டும் என்றால் குரு பெயர்ச்சி அன்று கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். குரு பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமான நாள் என்பதால் அன்றைய தினத்தில் குருவை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக