by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
Page 2 of 4 • 1, 2, 3, 4
காங்கிரஸ் கதவைத் தட்டும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்!
காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இதுவரை கட்சியைவிட்டு வெளியேறவில்லை. இது பா.ஜ.க-வுக்குப் பாதகமாகவும், காங்கிரஸுக்குச் சாதகமாகவும் மாறியிருக்கிறது
கர்நாடக அரசியலில், பா.ஜ.க தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியைத் தேடிப் படையெடுத்துவருவது பா.ஜ.க மேலிடத்துக்கு, தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது!
தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகா, வருகிற மே 10-ம் தேதி தேர்தலைச் சந்திக்கிறது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும், உளவுத்துறை ரிப்போர்ட்டுகளும், ‘காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெறும்’ என்றே சொல்கின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதேபோல், ஹிரகேரூர் தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ–வாக இருந்த யூ.பி.பங்கார், பா.ஜ.க-வை உதறிவிட்டு, காங்கிரஸில் இணைந்துவிட்டார். இவரைப்போலவே, பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ-க்களான வி.எஸ்.பட்டீல், ஜி.என்.நஞ்சுண்டசுவாமி, எம்.எல்.சி-க்களான பாபுராவ், புட்டண்ணா, மோகன் லிம்பிகாய் மற்றும் சில தலைவர்களும் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில், சுமார் 50-க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான லட்சுமண் சவதி பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டார். முன்னாள் முதல்வரும், தொடர்ந்து ஆறாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருப்பவருமான ஜெகதீஷ் ஷெட்டரும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருப்பதால், பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர்கள், ‘‘பா.ஜ.க-விலிருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர். அதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து சிட்டிங் எம்.எல்.ஏ சிவலிங்க கவுடா, மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இதுவரை கட்சியைவிட்டு வெளியேறவில்லை. இது பா.ஜ.க-வுக்குப் பாதகமாகவும், காங்கிரஸுக்குச் சாதகமாகவும் மாறியிருக்கிறது’’ என்கின்றனர்.
கர்நாடக தேர்தல்இந்த நிலையில், கர்நாடகா மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கணேஷ் கார்னிக்கிடம் ‘பா.ஜ.க பலத்தை இழந்துவருகிறதா?’ என்ற கேள்வியைக் கேட்டபோது, ‘‘பா.ஜ.க-வில் இத்தனை ஆண்டுகளாக எம்.எல்.ஏ-க்களாகவும், எம்.எல்.சி-க்களாகவும் இருந்தவர்கள், வரும் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். ‘தேர்தலில் சீட் கிடைக்கவில்லை’ என்ற ஒற்றைக் காரணத்துக்காக சிலர் வெளியேறியதால், பா.ஜ.க வலுவிழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. நாங்கள் கடந்த தேர்தலைவிட இப்போது வலுவாகவே இருக்கிறோம்’’ என்றார் சமாளிப்பாக.
கர்நாடக அரசியலில் அரங்கேறிவரும் இந்த ‘உள்ளே வெளியே’ ஆட்டங்களையெல்லாம் பார்த்தபடியே, ஒரு கணக்கோடு தேர்தலுக்குக் காத்திருக்கிறார்கள் மக்கள்!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாட்டிற்கும் மக்களுக்குமா சேவை செய்யப்போகிறார்கள்?
தேர்தல் வெற்றி ---எந்த கட்சியாயினும் --பணம் பண்ண
ஓர் உத்தி .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஓபிஎஸ் அணி வேட்புமனுக்கள் நிராகரிப்பு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வருகிற மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளரான மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் புலிகேசி நகர் தொகுதிக்கு நெடுஞ்செழியன், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜ், காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நெடுஞ்செழியன், அனந்தராஜ் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்செழியனின் மனு முழுமையாக கையெழுத்திடப்படவில்லை என்றும் அனந்தராஜின் மனுவில் தவறுகள் இருந்ததாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் அதிமுக நேரடியாக களம் காண்கிறது.
கர்நாடகாவுக்கு மத்திய அரசு செய்தது என்ன என்பது குறித்து அமித் ஷா புள்ளிவிரங்களுடன் பேச்சு
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில், சீட் வழங்காததால் பாஜகவை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி ஹூப்ளி-தார்வாட் தொகுதியில் போட்டி இருகிறார்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெகதீர் ஷெட்டர் தேர்தலில் தோல்வி அடைவார் என்றும், ஹூப்ளி மக்கள் எப்போதும் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஜெகதீஷ் ஷெட்டர் விலகலால் பாஜகவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்ற அமித்ஷா பாஜகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது. காங்கிரஸ் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று கூறுகிறார்கள், ஆனால், யாருடைய இட ஒதுக்கீட்டைக் குறைப்பார்கள் என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
கர்நாடகாவின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக ஆளும் பாஜக உழைத்துள்ளதாகவும், மோடி அரசு அனுப்பிய நிதியைக் காட்டிலும் வரிப் பகிர்வு மற்றும் மானியம் என ஐந்து ஆண்டுகளில் 140 சதவீதம் கூடுதல் நிதியை அந்த மாநிலத்துக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மன்மோகன் சிங் ஆட்சியின் போது, 2009 மற்றும் 2014 க்கு இடையில் வரி பகிர்வு மற்றும் உதவித்தொகை அடிப்படையில் கர்நாடகாவுக்கு சுமார் 94,224 கோடி ரூபாய் தரப்பட்டது. ஆனால் மோடி அரசாங்கம் 2014 முதல் 2019 வரை 2,26,418 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியை விட 140 சதவீதம் அதிகம் என்று அமித் ஷா பேசினார்.
மாநிலத்தில் பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 55 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்ற அவர், இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை அதிகரிப்பது மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் மாநிலத்தை மேலும் முன்னேற்றுவது உள்ளிட்ட பாஜக அரசின் பல்வேறு வளர்ச்சி முயற்சிகளை அமித் ஷா பட்டியலிட்டார். பாஜக அரசு சாமானியர்களுக்காக செயல்படவில்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.
கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பெல்காவியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி, பெலகாவியில் உள்ள சிக்கோடி, கிட்டூர் மற்றும் குடாச்சி ஆகிய இடங்களுக்கு அவர் செல்கிறார். மே 3ஆம் தேதி உத்தர கன்னடா மாவட்டத்திற்கும் பிரதமர் வருகை தருகிறார்.
இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்
கர்நாடக மாநிலத்தில் இசுலாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அதுவரை இடஒதுக்கீடு ரத்து முடிவை அமல்படுத்தகூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மார்ச் மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கர்நாடக அமைச்சரவையின் இந்த முடிவுக்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் கர்நாடக அரசின் இந்த முடிவு இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவும், இந்துக்களின் வாக்குகளை கவரும் வண்ணம் எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்த உத்தரவை அமல்படுத்தகூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை சமரசப்படுத்தும் முயற்சியாக கடந்த மார்ச் 24ஆம் தேதி, 2B பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவீத இடதுஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், அதை ஒக்கலிகாஸ லிங்காயத் சமூதாய மக்களுக்கு சமமாக பிரித்து கொடுப்பதாகவும் முடிவு செய்து அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான இஸ்லாமியர்களின் உரிமை பறிக்கப்படுவதாக விமர்சனங்களை முன் வைத்தன. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர், நடிகை மாளவிகா அவினாஷ், இடஒதுக்கீடு சாதி அடிப்படையில்தான் வழங்கு முடியும். மத அடிப்படையில் தர முடியாது. எனவே காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு 2B என்ற தனி உள் இடஒதுக்கீடு பிரிவு உருவாக்கப்பட்டது. இது அரசியலமைப்பு எதிரானது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, பிறபடுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த ரத்து முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவத்தார்.
இந்த சூழ்நிலையில் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை இந்த ரத்து உத்தரவை அமல்படுத்தகூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு சார்பில் இதற்கு உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.
’முஸ்லீம்களின் ஒரு ஓட்டு கூட பாஜகவுக்கு வேண்டாம்’ - ஈஸ்வரப்பா
முஸ்லிம் சமூகத்தின் ஒரு ஓட்டு கூட பாஜக விரும்பவில்லை என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். சிவமொகாவில் நடைபெற்ற வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, "எங்களுக்கு இங்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம். தேசியவாத முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்து, இரண்டு ஆதிக்க சமூகங்களான வீரசைவ-லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்களுக்கு இட ஒதுக்கீட்டை பகிர்ந்து அளித்தது. OBC முஸ்லீம்களை 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு (EWS) பிரிவுக்கு மாற்றவும் முடிவு செய்தது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசியல் சாசன விதிகளின்படி இல்லை. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இல்லை. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. காங்கிரஸ் அரசு தனது துருவமுனைப்பு அரசியலால் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. பாஜக அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட ஓபிசி பட்டியலில் முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் இந்த இடஒதுக்கீடு அனைத்தையும் ரத்து செய்வோம், ஏனெனில் இதில் எந்த அடிப்படையும் இல்லை, இந்த முடிவை எடுக்கும்போது எந்த அறிக்கையும் இல்லை” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் டிகே சிவக்குமார் கூறினார்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக..!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சி.வி ராமன் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு பிரமாண்ட பேரணி நடத்தினார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, அனைத்து கட்சியினராலும் சூறாவளி பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் இன்று பேரணி நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாகத் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய சி.வி. ராமன் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு பிரமாண்ட பேரணி மேற்கொண்டார்.
தனித் தொகுதியான சி.வி.ராமன் நகரில், பாஜக சார்பில் போட்டியிடும் ரகுவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் ஆனந்த் குமார் போட்டியிடுகிறார். சி.வி.ராமன் நகர் தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் வசிக்கும் நிலையில், அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர்.
இதனால், இந்த தொகுதியில் வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சி.வி ராமன் நகர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏவாக ரகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முறையும் ரகு வெற்றி பெறுவார் என்று தொகுதியில் வசிக்கும் தமிழர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் தகவல்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாழும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன
காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர், பாஜக சார்பாக பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்ட வரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளது
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் பாஜக 79 முதல் 89 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்
குறிப்பாக காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், தங்கள் பங்குக்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பாஜக தொண்டர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டு வருகிறது.
மாநில தேர்தல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், பெங்களூரு, பெங்களூரு ஊரகம், ஷவமொகா, பீதர், விஜயபுரா, மங்களூரு, சிக்கமகளூர் என மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் குறித்த மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,
''பணி நிமித்தமாக பெங்களூர் செல்ல நேர்ந்தது.. அங்குள்ள மக்கள் தலைவர் அண்ணாமலையை மிகப்பெரும் சக்தியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.பெரும்பாலும் ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் தலைவர் அண்ணாமலை அவர்கள் முதல்வராக வாய்ப்பு அதிகம்...தமிழ்நாட்டு பாஜக அண்ணாமலை அவர்களை, முதல்வராக பார்க்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாநில முதல்வராக இருப்பது சாத்தியமா?...சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். . நன்றி'' |
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த அவரது தொண்டர்கள் பலர் சிலாகித்துக் கொண்டு, அவருக்கு ஆதரவாக கமெண்ட்களையும், நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.
கர்நாடகா தேர்தல்: பறிமுதல் பணம் 300 கோடி ரூபாயை தாண்டியது
பெங்களூரு: கர்நாடகா மாநில தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் கைப்பற்றிய பணம் ரூ;300 கோடியை தாண்டி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் வரும் 10 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் விதிகள் குறித்த நடைமுறைகள் அமலில் இருந்து வருகின்றன.பிரசாரத்தின் போது அரசியல் கட்சி தலைவர்கள் செய்யும் விளம்பரங்கள் குறித்த செலவினங்களை கண்டறிவதற்காக தேர்தல் ஆணையம் 145 செலவின பார்வையாளர்களை நியமித்து உள்ளது.
கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது நடைபெறும் மோசடியை தடுப்பதற்காக 1,334 பறக்கும் படைகள் மற்றும் 1,225 கண்காணிப்பு குழுக்களும், வணிக வரிதுறைசார்பில் 200 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 185.74 கோடி ரூபாய் வரையில் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்காக 2,040 பறக்கும் படைகள்,2,605 கண்காணிப்பு குழுக்கள் 631 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 225 கணக்கியல் குழுக்கள் என தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரையில் சுமார் 302 கோடி ரூபாய் வரையில் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து 81.76 கோடி ரூபாய் வரையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிக்கமகளூரு மற்றும் ஷிவமோகா மாவட்டங்களில் இருந்து முறையே ரூ.33.87 மற்றும் ரூ.30.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலை காட்டிலும் 2.5 மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ( மார்ச் 09 முதல் 27 வரையில் )ரூ.58 கோடி மதிப்புள்ள பணம் மற்றம் பொருட்களை ஆணையம் பறிமுதல் செய்தது என தெரிவித்து உள்ளது.
கர்நாடக தேர்தல் : அடித்து விடும்...பா.ஜ.க
பெங்களூரு, மே 2- கர்நாடக சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, காங்., பாணியில் பா.ஜ.,வும், இலவச வாக்குறுதிகளை 'அள்ளி' விட்டுள்ளது. ஆண்டுக்கு மூன்று இலவச 'காஸ்' சிலிண்டர், தினமும் அரை லிட்டர் இலவச பால் உள்ளிட்ட 16 வாக்குறுதிகள், நேற்று அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 'இலவசங்கள் வழங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என, நான்கு நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதிகள் அமைந்துள்ளது, விமர்சனத்தில் சிக்கி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. 13ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த முறை ஆட்சியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என, காங்கிரஸ் தீவிரமாக போராடுகிறது. இதற்காக, பல்வேறு இலவச வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில், பா.ஜ., இரண்டு மாதங்களாக தேர்தல் அறிக்கை தயாரித்தது.
சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தலைமையிலான கமிட்டி, விவசாயிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் என பல தரப்பிடம் இருந்து கருத்துகளை கேட்டு அறிக்கை தயாரித்தது.
இந்நிலையில், பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா, நேற்று பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், 16 கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பின், நட்டா பேசியதாவது:
கர்நாடகாவை வளர்ச்சி அடைய செய்யும் வகையில், உணவு, கல்வி, சுகாதாரம், வருவாய், பாதுகாப்பு, வளர்ச்சி என ஆறு பிரிவுகளாக பிரித்து, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொற்காலத்துக்கு முன்னோட்டமாக, மக்கள் அறிக்கை என்ற பெயரில் இதை வெளியிட்டுள்ளோம்.
இதன்படி, வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் பி.பி.எல்., ரேஷன் அட்டை குடும்பங்களுக்கு, யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு தலா ஒரு இலவச காஸ் சிலிண்டர்; தினமும் அரை லிட்டர் நந்தினி பால்; மாதந்தோறும் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, சிறுதானியங்கள் வழங்கப்படும்.
காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது. பா.ஜ., சார்பில் யதார்த்தமான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.
உள்ளூர் கலாசாரத்தை பாதுகாப்பதற்காக பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ், ஆறு ஆண்டுகளாக மோசமான ஆட்சியை கொடுத்தது. சித்தராமையா அரசு 'ரிவர்ஸ் கியரில்' சென்றது. இது, ஊழல் அரசாக செயல்பட்டது. இவர்கள் ஆட்சியில் பயங்கரவாதத்தை ஊக்குவித்தனர்.
பெங்களூரில், மகளிர் பாதுகாப்பு இல்லாமல் இருந்தனர். ஆனால் பா.ஜ., அரசில் வித்யாநிதி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவியர் பயன்பெற்றனர்.
ஒரு சிறிய அறையில் அமர்ந்து இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கவில்லை. மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து பலரது கருத்துகள் கேட்டு தயாரிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக பூத் கமிட்டி முகவர்களிடையே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஏப்., 27ம் தேதி பிரதமர் மோடி பேசியிருந்தார்.
அப்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவசங்களை வாரி வழங்குவோம் என கூறிய காங்கிரஸ் காலாவதி ஆகி விட்டது. அவர்கள் வாக்குறுதிக்கு அர்த்தமே இல்லை. இலவசங்கள் வழங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என பேசியிருந்தார்.
இதற்கு நேர்மாறாக, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையிலும், காங்கிரசை போல சகட்டுமேனிக்கு இலவச வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டிருப்பது, விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குறுதிகள் விபரம்
* பி.பி.எல்., ரேஷன் அட்டை குடும்பங்களுக்கு, யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என ஆண்டுக்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்* அனைத்து மாநகராட்சி வார்டுகளிலும், அடல் உணவு மையம் அமைத்து, மலிவு விலையில் தரமான, ஆரோக்கியமான உணவு வழங்கப்படும்
* போஷனா திட்டத்தின் கீழ், பி.பி.எல்., ரேஷன் அட்டை குடும்பங்களுக்கு, தினமும் அரை லிட்டர் நந்தினி பால், மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, சிறுதானியங்கள் வழங்கப்படும்
* ஒருங்கிணைந்த சிவில் எண் அறிமுகம் செய்யப்படும். இதன் வாயிலாக முறைகேடாக புலம் பெயர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவர்
* அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் 10 லட்சம் வீட்டு மனைகள் அடையாளம் காணப்பட்டு, வீடில்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும்* எஸ்.சி., - எஸ்.டி., மகளிருக்கு 'ஒனகே ஓபவ்வா' சமூக நிதி திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் ரூபாய், ஐந்து ஆண்டுகள் வரை நிரந்தர வைப்பு தொகையாக தரப்படும்
* மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் 'இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப்' செய்யப்படும்
* கர்நாடகா, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையமாக மாற்றப்படும்
* பெங்களூரு நகருக்கு அப்பாற்பட்டு, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
இவை உட்பட 16 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்., அறிக்கை இன்று வெளியீடு
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை இன்று காலை 9:00 மணிக்கு, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிடுகிறார். இதில், பா.ஜ.,வுக்கு போட்டியாக பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் காங்., பிரசாரத்தில், ஐந்து முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விபரம் வருமாறு:
* குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய்
* பி.பி.எல்., ரேஷன் அட்டை குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்
* வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் தலா 3,000 ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு தலா 1,500 ரூபாய் உதவித்தொகை
* பி.பி.எல்., ரேஷன் அட்டை குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி * மகளிருக்கு இலவச பஸ் பயணம்
இறந்தவரின் ஜாதகம் போன்றது!
காங்கிரஸ் கட்சியின், 'டுவிட்டர்' அறிக்கை:
கடந்த முறை அறிவித்த எத்தனை வாக்குறுதிகளை பா.ஜ., நிறைவேற்றியுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அதன்பின், புதிய தேர்தல் அறிக்கை குறித்து விளக்கட்டும். இதன் வாயிலாக, பா.ஜ., தேர்தல் அறிக்கை கட்டுக்கதை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கையும்; இறந்தவரின் ஜாதகமும் ஒன்று.
கடந்த முறை அன்னபூரணா உணவகம் திறப்பதாக கூறி, தற்போது உள்ள இந்திரா உணவகத்தை மூடிவிட்டனர். 'அடல் உணவகம்' அறிவித்துள்ளனர். அடுத்த முறை 'மோடி உணவகம்' என்று அறிவிப்பர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சியின் மையம்
பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவில், 'பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை, வளர்ச்சியை மையமாக கொண்டுள்ளது. மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ., அரசு செய்துள்ள சிறந்த பணிகளுக்கு தகுந்தார் போல் உள்ளது' என தெரிவித்துள்ளார்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
» சிவகங்கை: சட்டப் பேரவைத் தொகுதிவாரியாக வாக்களித்தோர் விவரம்
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்