புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
107 Posts - 49%
heezulia
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
9 Posts - 4%
prajai
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
234 Posts - 52%
heezulia
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
18 Posts - 4%
prajai
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_m10சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 15, 2023 8:45 pm

சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்? Vikatan%2F2023-04%2F8c9b1af5-26e1-455f-bcb7-ce1607bb4eb8%2FUntitled_9.jpg?rect=0%2C0%2C700%2C394&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

அவையில், கிண்டலும் கேலியும் எல்லாக் காலத்திலும் நடந்தவைதான். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசுகள் இருந்தபோதும் கிண்டல்கள் இருந்தன. ஆனால், அதில் புத்திசாலித்தனமும், கருத்தியல் சார்ந்த விமர்சனங்களும், கண்ணியமும் இருந்தன

இந்திய அரசியலில், தமிழ்நாடு சட்டமன்றத்துக்கென தனிச் சிறப்புகள் உண்டு. 69 சதவிகித இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சிக்கான தீர்மானம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தொழில் படிப்புக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, `நீட்’ விலக்கு மசோதா என இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த வரலாற்றுரீதியிலான சட்டங்கள், மசோதாக்களை நிறைவேற்றிய பெருமை தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உண்டு. இந்திய அரசியலுக்கே முன்னோடியாக விளங்கும் சட்டமன்றம் நமது. இங்கே நடந்த கருத்தாழம் மிக்க விவாதங்களும், கேள்வி பதில்களும் எதிர்கால அரசியலுக்கான வழிகாட்டிக் கையேடுகளாக விளங்கக்கூடியவை. அப்படிப்பட்ட இந்த மன்றம், கடந்த சில நாள்களாக ‘சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுகிறதா?’ என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.

‘மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பு, நாட்டிலேயே முதன்முறையாக பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள், ஆளுநருக்கு எதிரான அரசினர் தனித் தீர்மானம்’ என முக்கியமான அறிவிப்புகளும் தீர்மானமும் அரங்கேறியிருந்தாலும், “தேவையற்ற கேலி கிண்டல்களும், இடையூறுகளும், தனிநபர் அவமதிப்புகளும் அதிகமாகி, ஆக்கபூர்வமான செயல்பாடுகள் குறைந்துபோய்விட்டன” என்று புகார் வாசிக்கிறார்கள் பல சட்டமன்ற உறுப்பினர்கள்.

``சபாநாயகர் அப்பாவுவே, ‘இது கேளிக்கை மன்றமல்ல, சட்டமன்றம். உறுப்பினர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்’ எனக் காரமாகக் கண்டிக்கும் நிலையில்தான், பல எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எதிர்க்கட்சிப் பணியை அ.தி.மு.க சரிவரச் செய்வதில்லை” என வருத்தப்படுகிறார்கள் சீனியர் எம்.எல்.ஏ-க்கள். சபாநாயகர் அப்பாவு மீதும், “நிறைய குறுக்கீடு செய்கிறார். நாங்கள் சொல்லவந்த விஷயத்தைக்கூட முழுவதுமாகச் சொல்லவிடுவதில்லை” என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையில் ஏன் இந்தக் குழப்பங்கள்... விசாரித்தோம்!

“எழும்போதெல்லாம் கிண்டல் செய்கிறார்..!”



நம்மிடம் பேசிய சட்டமன்ற பா.ஜ.க கொறடா வானதி சீனிவாசன், “நான் முதன்முறை எம்.எல்.ஏ-வாக இருப்பதால், ஜனநாயக முறைப்படி ஆக்கபூர்வமான, ஆழமான விவாதங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு சட்டமன்றத்துக்குள் நுழைந்தேன். ஆனால், அப்படி எதுவுமே நடைபெறவில்லை. எதிர்க்கட்சியான அ.தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, ‘கடந்த பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தது நீங்கள்தானே...’ என்றுதான் பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் பதிலளிக்கிறார்கள். சில நேரங்களில் பேரவைத் தலைவரே அமைச்சர்களின் பதிலை ஆர்வத்தில் சொல்லிவிடுகிறார். இல்லையென்றால், அமைச்சர்களுக்கு பதிலை எடுத்துக் கொடுக்கிறார்.

நிலக்கரி விவகாரம் தொடர்பாக நான் தீர்மானம் கொண்டுவந்தேன். என்னை முதலில் பேச அனுமதிக்கவில்லை. இது குறித்துக் கேட்டபோது, ‘எல்லாமே உங்களுக்கு எதிராகத்தானே இருக்கின்றன... என்ன பேசப் போகிறீர்கள்?’ என்று கேட்டார் சபாநாயகர். கடைசியாகத்தான் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல, பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் எழும்போதெல்லாம் கிண்டல் செய்கிறார். அது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. நயினார் எந்தக் கருத்து கூறினாலும், ‘நீங்கள் திராவிட இயக்கத்தில் இருந்தவர்தான். உங்கள் தொண்டை வரை ஆதரவு இருக்கிறது’ என்று சொல்கிறார். இதெல்லாம் வாதத்துக்குச் சுவையாக இருந்தாலும், இது முறையாகாது. எங்களின் கருத்துகள் அவைக் குறிப்பில் ஏறக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆக்கபூர்வமான விவாதங்கள் நடத்த வாய்ப்பு இருந்தும் ஈகோவாலும் அவசரத்தாலும் அதைச் செய்ய மறுக்கிறார்கள்” என்றார் காரமாக.

“உளவியல் ரீதியாக ‘டார்கெட்’ செய்கிறார்கள்!



``அவையில், கிண்டலும் கேலியும் எல்லாக் காலத்திலும் நடந்தவைதான். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசுகள் இருந்தபோதும் கிண்டல்கள் இருந்தன. ஆனால், அதில் புத்திசாலித்தனமும், கருத்தியல் சார்ந்த விமர்சனங்களும், கண்ணியமும் இருந்தன. ஆனால், இன்று உளவியல்ரீதியாக உறுப்பினர்களை ‘டார்கெட்’ செய்யும் வகையிலான கிண்டல்களே அதிகமும் ஒலிக்கின்றன” என்று வருந்திய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர், சம்பவங்களை அடுக்கினார்கள்.

“அ.தி.மு.க உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் பதிலளிக்க நேரம் கொடுக்காமல், அவர்களைக் கேலி செய்யும் வகையில் பேசி, தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் சில அமைச்சர்கள். கேள்வி நேரத்தின்போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், ‘பஸ்ஸெல்லாம் தெர்மாகோலில் செய்ய முடியாது’ என்று கிண்டலடித்தார் அமைச்சர் சிவசங்கர். அதேபோல, செல்லூர் ராஜூவின் தொகுதி தொடர்பான கேள்விக்கு, ‘மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள். ஆனால் செல்லூர் ராஜூ புலிவாலைப் பிடித்துப் படம் வெளியிட்டிருக்கிறார். அவரின் வீரம், புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்திருப்பதில் தெரிகிறது’ என்று கிண்டலடித்துவிட்டு, பதிலளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக அவையில் பேசும்போது, ஏகப்பட்ட இடையூறு செய்தார்கள். குழம்பிப்போன அவர், `ஆன்லைன் சூதாட்டம்’ என்பதற்கு பதில், `ஆளுநர் சூதாட்டம்’ என்று கூறிவிட்டார். இப்படி உளவியல்ரீதியாக உறுப்பினர்களைத் தாக்கி, அவர்கள் மீண்டும் பேசவே எழ முடியாதபடி கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள். இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல” என்றனர் வருத்தத்துடன்.

சட்டமன்றமா... புகழ்பாடும் மன்றமா?



“சட்டமன்றத்தில் என்னைப் புகழ்ந்து யாரும் பேச வேண்டாம்” என முதல்வர் ஸ்டாலின் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால், அவரின் கட்சி உறுப்பினர்கள் யாரும் அதைக் கேட்பதாகவே இல்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்திலெல்லாம் முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் புகழ்பாடித் தீர்க்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ஆடுகிற மாட்டை ஆடிக் கறந்து, பாடுகிற மாட்டை பாடிக் கறந்து, அரசாங்கத்தின் திட்டம் என்ற பாலை மக்களின் இல்லங்களுக்கு முறையாகச் சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர்... ஸ்டாலினிசம்” என்று புதிய தத்துவத்தைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “பெரியார் மட்டும் இன்று இருந்திருந்தால் என் கொள்கைகளை நாடு முழுவதும் பரப்புகின்ற என் கொள்ளுப்பேரன் உதயநிதி என்று கூறி உச்சி முகர்ந்திருப்பார்” என்று புகழ்ந்தபோது உதயநிதியே ஜெர்க்காகிவிட்டார். `உங்களையெல்லாம் மிஞ்சுகிறேன் பார்’ என்பதுபோல `மனோகரா’ திரைப்பட வசனத்தை அவையில் பேசி, ஸ்டாலின் குடும்பத்தின் புகழ் பாடினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், “அவையை நாகரிகமாக நடத்திச்செல்வதில் அவை முன்னவரின் பங்கு முக்கியமானது. ஆனால் துரைமுருகனோ, ‘எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதுங்கள்’ என்பதும், ‘உதயாவுக்கு ஒரு பையன் இருக்கிறார். அவருடனும் நான்தான் இருப்பேன்’ என்பதுமாக, ஸ்டாலின் குடும்பத்துக்கு விசுவாசம் காட்டுவதையே சட்டமன்றச் செயல்பாடாகக்கொண்டிருக்கிறார். அவை முன்னவரே வண்டி வண்டியாகப் புகழ் மாலைகளைச் சூட்டினால், மற்ற தி.மு.க உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்... வேறு வழியில்லாமல், தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் அதே புகழுரைகளைப் பாடவேண்டியதாக இருக்கிறது.

சட்டமன்றத்தில், முதல்வரின் சாதனைகளைப் பட்டியலிடுவதில்தான் காங்கிரஸ், வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஆர்வமாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்னைகளை மன்றத்தில் எடுத்துவைக்கும் அறிகுறியே இல்லை. இவர்களில் கம்யூனிஸ்ட்டுகளும் விதிவிலக்கல்ல. மின்கட்டண உயர்வு, ஒப்பந்த ஊழியர்கள் விவகாரம், சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி, மதுரையில் ஊராட்சிப் பணியாளர் நாகலட்சுமி தற்கொலை உள்ளிட்ட விவகாரங்களில் கடும் எதிர்ப்பைக் காட்டும் கம்யூனிஸ்ட்டுகள், அவைக்குள் அதைச் செய்வதில்லை. பா.ம.க-வைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ‘ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து, தென்னை மரச் சின்னத்துக்கு ஒரு குத்து’ என நடிகர் வடிவேலு செய்யும் காமெடிபோல, இரண்டு கழகங்களையும் பகைத்துக்கொள்ளாமல் ‘ஜால்ரா’ நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள்” என்றார் ஆற்றாமையுடன்.

“நாற்காலி சண்டைதான் போடுகிறது அ.தி.மு.க!”



சட்டமன்ற நடவடிக்கைகளில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் மக்கள் பிரச்னைகளைப் பேசும்விதமாக இல்லை. யார் யார் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதும், யாருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதும்தான் எதிர்க்கட்சி அரசியல் என்று நினைக்கிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாகப் பஞ்சாயத்து செய்வதிலேயே அந்தக் கட்சியின் நடவடிக்கை முடிந்துவிடுகிறது. இன்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகில்தான் அமர்ந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவர் அமர்ந்திருக்கும் திசையைக்கூட எடப்பாடி திரும்பிப் பார்ப்பதில்லை. பன்னீருக்கு அருகிலிருக்கும் வேலுமணியிடம் ஏதாவது பேச வேண்டுமானால்கூட, தனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் கடம்பூர் ராஜூவை அழைத்துச் சொல்லியனுப்புகிறார். பன்னீரைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக, அவையின் மேற்கூரையைப் பார்ப்பதும், சட்டமன்றத்திலுள்ள விளக்குகளைப் பார்ப்பதும், வெளிநடப்பு செய்வதுமாகக் கழிகிறது அவரது பொழுது. எதிரே அமர்ந்திருக்கும் அமைச்சர் துரைமுருகன், “ஏங்க மனசுவிட்டுப் பேசுங்க...” என பன்னீரைப் பார்த்துக் கிண்டலாகச் சீண்ட, டென்ஷனாகிறார் எடப்பாடி. சில சமயம் `விருட்’டெனக் கிளம்பியும்விடுகிறார்.

நம்மிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், “பிரதான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்கிறார்களே தவிர, இதுவரை எந்த ஆக்கபூர்வமான விவாதங்களிலும் அ.தி.மு.க முழுமையாகப் பங்கேற்கவே இல்லை. ஆளுநருக்கு எதிரான முதல்வரின் தனித் தீர்மானத்தின்போது, சம்பந்தமே இல்லாமல், பன்னீருடனான இருக்கை விவகாரத்தை எழுப்பி, வெளிநடப்பு செய்துவிட்டனர். மறுநாள் அவை தொடங்கும்போது, பன்னீருடனான இருக்கை விவகாரம் குறித்து வாய் திறக்கவே இல்லை. அவைக்குள் நாற்காலிச் சண்டைதான் போட்டுவருகிறது அ.தி.மு.க” என்றார்கள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க துணை கொறடா அரக்கோணம் ரவி, “அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, கடந்த ஆட்சிக்காலத்தில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்று பேசக்கூட விடாமல், எங்களின் குரல்வளையை நெறிக்கிறார்கள். அமைச்சர்களிடம் கேட்கும் பல கேள்விகளுக்கு சபாநாயகரே இடைமறித்து பதில் சொல்கிறார். மானியக் கோரிக்கையின்போது, முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அமைச்சர் உதயநிதி குறித்தும் அமைச்சர்களும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களும் புகழ்ந்து தள்ளுவதாலேயே நேரப் போதாமை ஏற்படுகிறது. ஏதோ சம்பிரதாயத்துக்காகச் சட்டமன்றத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலனுக்காக அவை செயல்படவில்லை. 18 உறுப்பினர்கள் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கே துணைத் தலைவர் இருக்கும்போது, பிரதான எதிர்க்கட்சிக்குத் துணைத் தலைவரைக் கொடுப்பதுதான் முறை. அதைக் கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதையும் ஜனநாயக முறைப்படி, அவையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் கேட்கிறோம்” என்றார்.

பல எம்.எல்.ஏ-க்களிடமும் இதே போன்ற வருத்தம் இருக்கிறது. “தி.மு.க உறுப்பினர்களும், அந்தக் கட்சியின் கூட்டணி எம்.எல்.ஏ-க்களும் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு பேசினால், சபாநாயகர் தடுப்பதில்லை. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேப்பரைப் பார்த்துப் பேசும்போது மட்டும் தடுக்கிறார். உறுப்பினர்களுக்குக் கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகம் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைப் பேசவிடவே இல்லை. தி.மு.க உறுப்பினர் தமிழரசி, அ.தி.மு.க உறுப்பினர் நத்தம் விசுவநாதன் ஆகியோரிடம் சபாநாயகர் கறாராக நடந்துகொண்டது விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. சபாநாயகர், ஆசிரியர் பணியில் இருந்தவர் என்பதால், `கண்டிப்பு காட்டுகிறேன்’ என்கிற பெயரில், பெஞ்ச்சில் நிற்க வைக்காத குறையாக உறுப்பினர்களிடம் நடந்துகொள்கிறார். நாங்கள் அவையில் பேச வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அதற்குரிய மரியாதையையும் நேரத்தையும் வழங்க வேண்டும். ஆளுங்கட்சிப் பேச்சுகளை மட்டும் எடிட் செய்து விளம்பரம் செய்வதுபோல எதிர்க்கட்சிகளின் முக்கியமான விவாதங்களைக் காழ்ப்புணர்வின்றி ஒளிபரப்ப வேண்டும்” என்றார்கள் அவையின் சீனியர் உறுப்பினர்கள்.

அ.தி.மு.க கொறடா வேலுமணி “ஐபிஎல் மேட்ச் பார்க்க டிக்கெட் வேண்டும்” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் கேட்க, அதற்கு அவர் “உங்கள் நண்பர் அமித் ஷாவின் மகன்தான் நடத்துகிறார். அவரிடம் கேட்டு எங்களுக்கும் வாங்கித் தாருங்கள்” என்று பதிலளித்தார். “அமித் ஷாவின் பெயரை பயன்படுத்தியது தவறு. அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என பா.ஜ.க உறுப்பினர்கள் பிரச்னையைக் கிளப்ப, முதல்வர் ஸ்டாலின் “அவர் தவறாகப் பேசவில்லையே?” என்று சொல்ல, “முதல்வரின் மகன் என்பதால், அவர் செய்யும் தவறுகள் முதல்வரின் கண்ணில் தெரிவதில்லை” என்று அந்த விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்த வானதி கடுகடுத்தார். ஆக்கபூர்வமான மக்கள் பிரச்னைகளைப் பேசவேண்டிய அவை, தேவையில்லாத கருத்துகளிலும், விவாதங்களிலும், வெளிநடப்புகளிலுமே நேரம் கடக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் மாண்புமிகு சட்டமன்றம், நாட்டின், மக்களின் பிரச்னைகளையும் முன்னேற்றத்தையும் கருத்தில்கொண்டு ஆக்கபூர்வமாக நடக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு!

*****

“நேரமின்மை பிரச்னையாகத்தான் இருக்கிறது!”



“முன்பு இருந்ததைவிட அவை நன்றாகவே நடக்கிறது. நேரமின்மை கொஞ்சம் பிரச்னையாகத்தான் இருக்கிறது. ஒரே நாளில் இரண்டு மூன்று துறைகளுக்கு மானியக் கோரிக்கை வைத்து, இரண்டு செக்‌ஷனாக அவையை நடத்துவதால், ரொம்ப சிரமமாக இருக்கிறது. அதை மாற்றி, கூடுதலாக இன்னும் சில நாள்கள் அவையை நடத்தினால், மக்கள் பிரச்னையைப் பேச வசதியாக இருக்கும்.” - விஜயதரணி, சட்டமன்ற கொறடா, காங்கிரஸ்

“வெளிநடப்பு என்கிற பெயரில் ஓடுகிறார்கள்!”



“ எதிர்க்கட்சிகளுக்குப் போதிய நேரம் கொடுக்கப்படவில்லை என்பது அபத்தமான குற்றச்சாட்டு. வழக்கமாகக் கொடுக்கப்படும் நேரத்தைவிட இரு மடங்கு நேரம் கொடுக்கப்பட்டுவருகிறது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து கோரிக்கை வைத்தால் ஒட்டுமொத்த அமைச்சர்களும் குறுக்கிடுவார்கள். ஆனால், எங்கள் முதல்வர் “எதிர்க்கட்சியினர் பேசட்டும். குறுக்கீடு செய்யாமல் குறிப்பெடுத்துக்கொண்டு பதில் உரையில் பேசுங்கள்” என்று எங்களுக்கு அறிவுறுத்துகிறார். சபாநாயகர் தரும் நேரத்தையும் பயன்படுத்திக்கொள்ளாமல் அவர்கள்தான், `வெளிநடப்பு’ என்கிற பெயரில் ஓடுகிறார்கள்!” - கோ.வி.செழியன், அரசு கொறடா.

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக