by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
DMK Files - திமுக கோப்புகள்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவர பட்டியலையும், வெளியிட்டார்.
இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. எல்லோரும் பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.
வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:
ஜெகத்ரட்சகன்
₹.50 ஆயிரத்து ,219.37 கோடி
எ.வ.வேலு
₹.5,442.39 கோடி
கே.என்.நேரு
₹.2,495.14 கோடி
கனிமொழி
₹.830.33 கோடி
கலாநிதிமாறன்
₹.12,450 கோடி
டிஆர் பாலு
₹.10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
₹.579.58 கோடி
கலாநிதி வீராசாமி
₹.2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி
₹.581.20 கோடி
திமுக கட்சியின் சொத்து மதிப்பு
₹.1,408.94 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
₹.1,023.22 கோடி
உதயநிதி
₹.2,039 கோடி
சபரீசன்
₹.902.46 கோடி
மொத்தம் ₹.1,343,170,000,000 (₹.1,34,317 கோடி)
மாணிக்கம் நடேசன் and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
’மன்னிப்பு கேட்க முடியாது’; உதயநிதி நோட்டீஸ்-க்கு அண்ணாமலை பதில்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என அவதூறு நோட்டீஸ்க்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தி.மு.க.வின் மூத்த வக்கீல் வில்சன் நோட்டீஸ் அனுப்பினார். அதில், உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்துள்ளதாகவும், இந்த நோட்டீஸ்க்கு 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க தவறினால் அண்ணாமலை ரூ. 50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நோட்டீஸ்க்கு அண்ணாமலை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட நோட்டீஸ் அண்ணாமலையின் குரலை அடக்கும் முயற்சி என்றும் உதயநிதி ஸ்டாலினிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடியோ போலியானது: அமைச்சர் பிடிஆர் விளக்கம்
தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ போலியானது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
பொது சமூகத்தில் வில்லன் போல் என்னை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பொய்யான தகவல்கள் பகிரப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பிடிஆர், என்னை இந்த அரசுக்கு எதிரான தனிப்பட்ட போராளி போல் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது.
இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். இந்த தவறான, பொய்யான ஆடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. இந்த ஆடியோ முழுக்க பொய்யானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று மாலை தமிழக பாஜக குழு சந்தித்துப் பேசவுள்ளது. ஆடியோவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆளுநரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.
ஆடியோ விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறது பாஜக
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக பாஜக குழு சந்தித்துப் பேசவுள்ளது.
நிதியமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆடியோ உண்மையல்ல என்றும் தனக்கு எதிராக எடிட் செய்து புனையப்பட்டது என்றும் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆடியோ குறித்து சுதந்திரமான அமைப்பு தணிக்கை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக குழு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வலியுறுத்தவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (ஏப். 23) இரவு 7 மணிக்கு நடைபெறும் எனத் தெரிகிறது.
பி.டி.ஆர் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்... சுதந்திரமான சோதனை செய்யாதது ஏன்? அண்ணாமலை கேள்வி
தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக பேசுவதன் மூலம் பெயர் பெற்றவர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்கருத்து கொண்டவர்களை விமர்சிக்கிறார் என்று விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 விநாடிகள் கொண்ட ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
அந்த வீடியோவில், ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியது போல இருந்தது. அந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அக்கட்சி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் பகிர்ந்திருந்தனர். இதுகுறித்து தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர்.
இந்தநிலையில், ஆடியோ விவகாரம் குறித்து பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆடியோ எளிதாக கிடைக்கும் நவீன தொழில்நுட்பம் மூலம் இட்டுக்கட்டப்பட்டது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் ஆடியோ, வீடியோக்கள் வெளியாவதில் ஆச்சரியமில்லை.
எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் பேச்சு சுதந்திரம் மிகவும் அவசியம் என்று உறுதியாக நம்புவன் நான். எனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான நான் ஒருபோதும் காவல்துறையில் வழக்குத் தொடர்ந்ததில்லை. என்னுடைய மூதாதையர்கள் குறித்து தவறாக பேசியதற்காக மட்டும் ஒரே ஒருமுறை எதிர்கட்சி எம்.எல்.ஏ மீது வழக்குத் தொடர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் என் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சிறிய குற்றச்சாட்டுகள் முதல் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் ஒருபோதும் எதிர்வினை ஆற்றியதில்லை. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது. தற்போது கிடைக்கும் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
பழனிவேல் தியாகராஜன் விளக்கம் குறித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில், ‘சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு தினங்களாக தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்கள் கொடுத்த அரைகுறை விளக்கத்தைப் படித்துவிட்டு அமைச்சர் பி.டி.ஆர் அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.
தி.மு.க ஐ.டி பழனிவேல் தியாகராஜனின் விளக்கத்தை தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறுயாரும் நம்பமாட்டார்கள். ஆடியோ கிளிப் தொடர்பான சுயேட்சையான தடயவியல் சோதனைக்கு அழைப்புக்கு விடுக்க அமைச்சர் பி.டி.ஆர் தடுப்பது எது? வருடத்திற்கு 30,000 கோடி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏராளம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு டேப் வெளியிட்ட அண்ணாமலை
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் அவர் பேசியதாக ஒரு ஆடியோ கிளிப்பை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதனை ஊடகவியலாளர் சவுக்கு சங்கரும் அண்ணாமலையும் அடுத்தடுத்து வெளியிட்டார்கள். இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கம் தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இது மோசடியாக தயார் செய்யப்பட்டது என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக மீண்டும் ஒரு டேப் அண்ணாமலையின் ட்விட்டர் (twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், அமைச்சர் பி.டி.ஆர் பேசுவதாக குறிப்பிட்டு, ஆங்கிலத்தில் வரும் பேச்சுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் போடப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.க.,விடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர்.
நிதி மேலாண்மை செய்வது சுலபம்… இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்… முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே… அவர்களை நிதி மேலாண்மைச் செய்யச் சொல்லுங்கள்… அதனால் 8 மாதங்கள் பார்த்தப் பிறகு முடிவு செய்துவிட்டேன்… இது ஒரு நிலையான முறை கிடையாது…
எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால்… இப்போது நான் விலகினால்… இந்தக் குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்… எப்படி சொல்வது… நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது எனக் கருதுகிறேன். நான் அந்தப் பதவியில் இல்லாதபோது அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை,” என்று பேசப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்த ஆடியோவை பகிர்ந்துள்ள அண்ணாமலை, ”தி.மு.க அமைப்பு உள்ளுக்குள்ளே சிதைவதை கேளுங்கள். தமிழக நிதியமைச்சரின் 2வது டேப். தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே சரியான வேறுபாட்டைக் காட்டிய தமிழக நிதியமைச்சருக்கு சிறப்பு நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.
'ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்' PTR அடுத்த ஆடியோ ரிலீஸ்
;முன்னதாக சவுக்கு சங்கர் வெளியிட்ட முதல் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் இரண்டாவது ஆடியோவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் வெளியிட்டிருந்த முதல் ஆடியோவில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரிசன் ஆகியோர் 30 ஆயிரம் கோடி ஊழல் பணத்தை சேர்த்துவிட்டதாக குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் இரண்டாவது 57 வினாடி ஆடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றி உள்ளார்.
அதில், ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா?. ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும்தான் எடுக்கின்றனர்.
நிதி மேலாண்மை செய்வது சுலபம்... இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்... முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே... அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள்... அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன்... இது ஒரு நிலையான முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால் இப்போது நான் விலகினால் இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்... நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிடதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன்.
நான் அந்த பதவியில் இல்லாத போது அதை பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை என பிடிஆர் பேசி உள்ளார்.
#PTR_Leaks: #dmk_files
சபரீசன் என் வழிகாட்டி; உதயநிதி சிறந்த செயல் வீரர்; அவர்களைப் பற்றி எப்படி பேசுவேன்: அமைச்சர் பி.டி.ஆர் வீடியோ விளக்கம் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து விபரங்கள் குவித்து பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆடியோ பதிவு உண்மையில்லை. இது பொய்யாக ஜோடிக்கப்பட்டது. இப்படி ஆடியோ வெளியிட்டு எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையேயான நட்பபை பிரிக்க பார்க்கிறார்கள். அது ஒருநாளும் நடக்காது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.
எனது இந்த அறிக்கை 22 ஏப்ரல் 2023 அன்று நான் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகும்.
அறிக்கையின் இணைப்பு: https://t.co/upXrzcgfFY Deep Fake உதாரணங்கள் : இணைப்பு 1 – https://t.co/PfY57t31Gl இணைப்பு 2 – https://t.co/PbFbwzQu9W இணைப்பு 3 – https://t.co/O3SSEuwCCy https://t.co/pkH07FW7Hb pic.twitter.com/bqecDJ2Mcl — Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) April 26, 2023 |
எனது இந்த அறிக்கை 22 ஏப்ரல் 2023 அன்று நான் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின் தொடர்ச்சியாகும். இதனை தொடர்வதற்கு முன்னர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) எப்படி Deep fake போலி காணொளிகளை உருவாக்கும் என்பதற்கான சில உதாரணங்களை நான் காண்பிக்க விரும்புகிறேன்.
உதாரணகளுக்கான இணைப்புகள்:
1) Reality Check: Deepfaite Videos In Delhi Elections?
2) It’s Getting Harder to Spet a Deep Fake Video
3) SASSY JUSTICE – Official White House Address | Deep Fake a…
இத்தகைய உண்மை போன்று தோற்றமளிக்கும். வீடியோக்களை கணினி மூலம் உருவாகக முடியும் என்றால்,ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
நேற்று முதல் சமூகவலைதளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிவோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது
பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்வாத ஒன்றை ஆடியோவாக வெளியிடும். அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு திட்டங்களையும் ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம் -இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம். இத்தகைய உயரிய இலக்குகளை இடைய நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இவை கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும். இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியம்.
இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவின தொழில்நுட்பத்தை மலிவான புத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மக்கதான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி அவர்கள். செயல்பட்டு வருகிறார்கள் முதலமைச்சரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார், தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை வருகிறார்.
இப்படி பட்ட ஆற்றலமிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாக பேசுவேன்? என கூறியுள்ளார்.
" மன்னிப்பு கேட்க வேண்டும் " - நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை, கனிமொழி
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆருத்ரா விவகாரம் தொடர்பாக தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக உடனடியாக ஆர்எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அண்ணாமலை சார்பாக வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசில், தவறினால், ஆர்எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
கனிமொழி நோட்டீஸ்
இதனிடையே, அண்ணாமலைக்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி அனுப்பிய நோட்டீசில் கூறியுள்ளதாவது:
கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை. அவதூறு பரப்பியது தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு தொடர்பாக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின் படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவர் ஆகிறீர்கள். அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேற்கண்ட அவதூறு வீடியோவை 48 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டு, அனைத்து சமூக தளங்களிலும் அகற்றி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.வேண்டும் எனக்கூறியுள்ளார்.
மிசாவை கண்ட இயக்கம் திமுக; ஐடி ரெய்டுகளை கண்டு எல்லாம் அஞ்சாது: அமைச்சர் உதயநிதி
மிசாவை கண்ட இயக்கம் தி.மு.க ஐடி ரெய்டுகளை கண்டு எல்லாம் அஞ்சாது என ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். ஈரோடு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; நம்முடைய முதலமைச்சர் மக்களுக்காக டெல்லி செல்கிறார். ஆனால் இன்னும் சிலரும் டெல்லி செல்கிறார்கள். இவர்கள் எதற்குச் செல்கிறார்கள். இவர்களது கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பிரச்சனைக்காக டெல்லி செல்கிறார்கள்.
அ.தி.மு.கவை பார்த்து நான் கேட்கிறேன், பிரதமரை அடிக்கடி சந்திக்கும் நீங்கள் என்றைக்காவது மக்கள் பிரச்சனைக்காக அவரை சந்திக்கச் சென்று உள்ளீர்களா?. உங்கள் கட்சி பஞ்சாயத்தைப் பேசுவதற்காகவே செல்கிறீர்கள். நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கும் அஞ்சாதவர். அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர். மிசாவை கண்ட இயக்கம் தி.மு.க. இவர்களின் ஐடி ரெய்டுகளை கண்டு எல்லாம் அஞ்சாது. பாசிச அடிமைகளைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள். அதேபோல் பாசிச பா.ஜ.கவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடத்தில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி சாதனைகளைச் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்
» எழுத்தாளர் சுஜாதாவின் தொகுப்புகள் சுமார் 162 கோப்புகள்(1.09GB)- தரைவிறக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்