by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
DMK Files - திமுக கோப்புகள்
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவர பட்டியலையும், வெளியிட்டார்.
இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. எல்லோரும் பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.
வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:
ஜெகத்ரட்சகன்
₹.50 ஆயிரத்து ,219.37 கோடி
எ.வ.வேலு
₹.5,442.39 கோடி
கே.என்.நேரு
₹.2,495.14 கோடி
கனிமொழி
₹.830.33 கோடி
கலாநிதிமாறன்
₹.12,450 கோடி
டிஆர் பாலு
₹.10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
₹.579.58 கோடி
கலாநிதி வீராசாமி
₹.2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி
₹.581.20 கோடி
திமுக கட்சியின் சொத்து மதிப்பு
₹.1,408.94 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
₹.1,023.22 கோடி
உதயநிதி
₹.2,039 கோடி
சபரீசன்
₹.902.46 கோடி
மொத்தம் ₹.1,343,170,000,000 (₹.1,34,317 கோடி)
மாணிக்கம் நடேசன் and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்! ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கைக்கு அண்ணாமலை பதிலடி..!
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்த நிலையில் அவர் மீது 500 கோடி ரூபாய் தர வேண்டும் என்று குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த எச்சரிக்கைக்கு சற்று முன் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில் திமுகவினருக்கு சொந்தமான பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்துவிட்டு அடுத்த வரியில் திமுக உறுப்பினர் ஒருவர் நிர்வாகியாக இருந்தாலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.
ஒருபுறம் இது திமுக சொத்து இல்லை என்றும், மறுபுறம் வழங்கப்பட்ட திமுகவினின் சொத்து விவரம் பொய் என்றும் கூறுவதற்கு மட்டும் திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் கட்சி தலைவருக்கும் இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து இழப்பீடு கோரி சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்எஸ் பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ்.. ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி..!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்டார். இதனை அடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் ஆர்எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நோட்டீஸ்க்கு பதில் அனுப்பிய அண்ணாமலை ஆருத்ரா நிறுவனத்திடம் தான் ரூ.84 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ஆர் எஸ் பாரதி 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பு தர வேண்டும் என்றும் இழப்பு தொகையை பிரதமரின் நலநிதிக்கு செலுத்த விரும்புகிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'DMK Files' என்ற தலைப்பில், தி.மு.க தலைவர்கள், அமைச்சர்களின் ஊழல் பட்டியல் எனும் சில தரவுகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி `சரியான ஆதாரங்களை தி.மு.க அலுவலகத்தில் அண்ணாமலை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருந்தார்.
மேலும், ``பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாட்டிய குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்டு, 48 மணி நேரத்தில் ரூ.500 கோடி இழப்பீடாகத் தர வேண்டும்" என நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "இதற்கு முன்னர் BGR நிறுவனத்துக்கு முறைகேடாக தி.மு.க வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை அனுப்பினார்கள். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக ரூ.100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கை அனுப்பினார்கள்.
அதைத் தொடர்ந்து மீண்டும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியிருக்கிறார். கோடிகளில் சொத்துகளைக் குவித்துவைத்திருக்கும் தி.மு.க-வினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் ரூ.500 கோடி கேட்கிறார் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. `DMK Files’ என்ற பெயரில் பா.ஜ.க வெளியிட்ட காணொளி மற்றும் அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநில தலைவராக நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை முழுவதுமாகப் பார்த்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்தக் காணொளியின் இணைப்பையும், இணையதள முகவரியையும் தாங்கள் அனுப்பிய சட்ட அறிக்கையில் வெளியிட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க-வினர் செய்த சொத்துக்குவிப்பை, தமிழக மக்கள் அறிந்துகொள்ள, ஏப்ரல் 14-ம் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உதவியதில் எனக்கும் மகிழ்ச்சியே. தாங்கள் வெளியிட்டிருக்கும் சட்ட அறிக்கையில், தி.மு.க-வினருக்குச் சொந்தமான ரூ.3,478.18 கோடி மதிப்பிலான பள்ளிகளும், ரூ.34,184.71 கோடி மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பும் பொய்யானவை என்று தெரிவித்துவிட்டு,
அடுத்த வரியில், ஒருவர் தி.மு.க உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள், கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒருபுறம் இது தி.மு.க சொத்து இல்லை என்றும், மறுபுறம், வழங்கப்பட்ட தி.மு.க-வினரின் சொத்து விவரம் பொய்யென்று கூறுவதற்கு மட்டும் தி.மு.க அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா... பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ், ஒவ்வோர் ஊரிலும் தி.மு.க-வினருக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டன.
உதாரணத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் நடத்தும் 'சன்ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல்', மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் உறவினர் நடத்தும் 'தி சென்னை பப்ளிக் ஸ்கூல்', அமைச்சர் எ.வ.வேலு-வின் மனைவி நடத்தும் 'ஜீவா வேலு இன்டர்நேஷனல் ஸ்கூல்', 'அருணை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி' போன்றவற்றை ஒவ்வொருவர் பெயரிலும் காண்பித்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை, தி.மு.க தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை. ஆர்.எஸ்.பாரதி ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக, இப்படி மழுப்புவதுபோல் தெரிகிறது.
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை சி.பி.ஐ-யிடம் அளிக்கவிருக்கிறோம். உங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமல்லாமல், முன்னுக்குப் பின் முரணான சில கருத்துகளை, ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும், ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்திருக்கிறார்.
ஒன்றில், நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். மற்றொன்றில், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்துக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நோபல் புரொமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் போன்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குநராக இருந்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார்... தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பஷீர் முகம்மதுவுடன் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா இயக்குநராக இருந்திருக்க்கிறார். நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை, நேற்று எனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியாக எழுப்பியிருக்கிறேன். நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட், நோபல் புரொமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும், தி.மு.க-வினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒரு முறை கேள்வி எழுப்புகிறேன்.
இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா... நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். என்மீதும், பா.ஜக-வின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூ.500 கோடியே 1 ரூபாய் இழப்பீடாகக் கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்குச் செலுத்த விரும்புகிறேன்.
ரூ.4,400 கோடி மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை, 2021-ம் ஆண்டு, மே மாதம் 19-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை, சமூக வலைதளத்தில் நான் பார்த்தேன். ரூ.100 கோடி பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும், ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்.
அடுத்த 48 மணி நேரத்தில், என்மீதும், எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று மிகப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இங்கோ கோடியில் பலர் இருக்கின்றனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
'அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்' - கனிமொழி எம்.பி பேட்டி
தி.மு.க தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, சங்கரப்பேரி பகுதி திடலில் புத்தகக் காட்சி, ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை, நெய்தல் கலைத் திருவிழாவும், இந்த புத்தகக் காட்சியுடன் இணைந்து 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து, புத்தகக் காட்சி நடைபெறும் மைதானத்தை பார்வையிட்ட தி.மு.க. எம்.பி., கனிமொழி, பிரம்மாண்ட பலுானை பறக்க விட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, "நெய்தல் கலைத் திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இதில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நெய்தல் கலை விழாவில் ஒரு பகுதியாக தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
புத்தகக் காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில், தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த புகைப்படங்களின் கண்காட்சி நடைபெறும்" என்றார்.
இதனிடையே, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, "தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி தெளித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு பொய்யானது. எனவே, வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளேன். இன்னும் ஒரு வார காலத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்" என்றார்.
அன்பில் மகேஷ் குறித்து அவதூறு; அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார்
அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பாக அவதூறு பரப்புவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ட்விட்டர் கணக்கில் அவதூறாகவும் உண்மைக்கு மாறான பொய்யான கற்பனை செய்யப்பட்ட படங்களையும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார் என்றும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாக அண்ணாமலை பேசுவது போல், அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் முரளிதரன் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து உண்மைக்கு மாறாக பொய் செய்தியை பரப்பிய பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையில் தூசி படிந்து கிடக்கும் 6 ஊழல் வழக்குகள்
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், சென்னையில் 6 ஊழல் வழக்குகள் தலைதூக்கி ஆடுவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.
தற்போதைய தமிழக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், சென்னை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான குடிமைத் திட்டங்கள் தொடர்பாக, 6 ஊழல் வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் காணப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தால் ஒரு குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் பல முறைகேடுகளில், சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் துறை தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோன்று கவனிக்கப்படாத வழக்குகளில் ரூ.437 கோடி பேரூந்து நிழற்குடை ஊழல் அடங்கும், இதில் ஊழல் எதிர்ப்பு அரசு சாரா அமைப்பு ‘அறப்போர் இயக்கம்’ பணமோசடி மற்றும் டெண்டர்களை ஒதுக்குவதில் சாதகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
ரூ.1,000 கோடி மதிப்பிலான எம்-சாண்ட் ஊழல், பெருநகர சென்னை மாநகராட்சி ஆற்று மணல் விலைக்கு இணையாக எம்-சாண்ட் வைத்து ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது, இருப்பினும் இந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புதுறையின் புகார்களைத் தவிர, அதிக விலை கொடுத்து தெருவிளக்குகள் வாங்குவது, நீர்நிலைகளில் தெருவிளக்குகள் பொருத்துவது, புதிய விளம்பர நிறுவனங்களுக்கு பயோ மைனிங் டெண்டர்கள் வழங்கியது போன்றவற்றில் முறைகேடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கும் சென்னை மாநகராட்சியின் கண்காணிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த முறைகேடுகளை விசாரித்து, இதுவரை எந்த அதிகாரியும் கைது செய்யப்படவில்லை என்று தன்னார்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
ரூ.30 ஆயிரம் கோடியால் தடுமாறும் திமுக; பழனிசாமி தாக்கு
30 ஆயிரம் கோடி ரூபாய் சாதாரணமான விஷயம் அல்ல. பணத்தை எங்கு வைப்பது என தடுமாறி கொண்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான பழனிசாமி கூறினார்.
மதுரையில் நிருபர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது: 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரிவராது. சுவிட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனித வாழ்க்கை. 12 மணி நேர வேலை செய்ய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல. இதற்கு கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படியென்றால், இதன் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலை. இதுதான் ஸ்டாலின் பண்பாடு.
30 ஆயிரம் கோடி ரூபாய் சாதாரணமான விஷயம் அல்ல. நிதியமைச்சர் கூறுவதை பார்க்கிறோம். அது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவுகிறது. ஆடியோ விவகாரம் புனையப்பட்டதா இல்லையா என்பதை, நிதியமைச்சரே பேசிவிட்டு, அவரே எப்படி சொல்ல முடியும். தற்போது, இந்த விவகாரத்தில் அவர் பேசியது தான் பெரிய சந்தேகமாக உள்ளது. அவர் அறிக்கைவெளியிட்ட பிறகு தான், இந்த விவகாரத்தில் ஏதோ சமாச்சாரம் உள்ளது என தோன்றுகிறது. இது அவரது குரல் தான்.
30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது என தடுமாறி கொண்டுள்ளனர். இதையெல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். மத்திய அரசு முழு விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துவோம். கவர்னரிடம் மனு அளிப்போம். ஆடியோ உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேதோ விஷயத்திற்கு எல்லாம் அறிக்கை அளிக்கும் முதல்வர், ஆடியோ போலி என அறிக்கை வெளியிட வேண்டியது தானே.
2 ஆண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு நல்லது செய்யவில்லை. கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளது. 30 ஆயிரம் கோடி கொள்ளை என்றால், நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது. 2 வருடத்தில் இவ்வளவு கொள்ளையடித்து உள்ளனர். 3 ஆண்டுகள் உள்ளது. இன்னும் அவர்கள் கொள்ளையடித்தால், வேறு எவரும் வாழ முடியாது. அவர்கள் தான் வாழ முடியும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களில் பணத்தை சுருட்டுகின்றனர். நிதியமைச்சர் பேசியதை உண்மையா, போலியா என ஆராய வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்
» எழுத்தாளர் சுஜாதாவின் தொகுப்புகள் சுமார் 162 கோப்புகள்(1.09GB)- தரைவிறக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்