புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm
» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm
» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm
» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm
» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm
by heezulia Yesterday at 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm
» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm
» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm
» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm
» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm
» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
மொஹமட் | ||||
Guna.D | ||||
Renukakumar | ||||
prajai | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
Abiraj_26 | ||||
Srinivasan23 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மேஷம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 11-ல் சனிபகவான் அமர்கிறார். |
ஆர்ப்பாட்டமின்றி சாதிப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்குப் பத்தாவது ராசியில் சோபகிருது வருடம் தொடங்குகிறது. ஆகவே உங்களின் சாதனைகள் தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.
வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். ஆடி மாதத்தில் பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. மகள் திருமணத்துக்காக கடன் வாங்க நேரிடும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். தடைப் பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கூடிவரும்.சொத்துப் பிரச்னைகளில் அனுகூலமான நிலை உருவாகும். பழைய சிக்கல்களைப் புதிய கோணத் தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.
மார்கழி, தை, மாசி மாதங்களில் பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். விலையுயர்ந்த அணிகலன்கள் வாங்குவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
22.4.23 முதல் வருடம் முடியும் வரை ராசியில் அமர்கிறார் குரு. ஆரோக்கியத்திலும் பேச்சிலும் கவனம் தேவை. தம்பதிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். சில செலவுகள் இரட்டிப்பாக வாய்ப்பு உண்டு. சிக்கனம் அவசியம். இரவு நேரப் பயணம் செய்ய வேண்டாம்.
ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 11-ல் சனிபகவான் அமர்கிறார். உத்தியோகப் பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிட்டும். பெற்றோர், உடன்பிறந்தோருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். 26.8.23 முதல் 19.12.23 வரை சனி 10-ம் வீட்டில் அமர்வதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.
வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை உங்கள் ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். முன்கோபமும் ஏற்படலாம். யோகா, தியானத்தில் ஈடுபடுவது சிறப்பு. 7-ல் கேது நிற்பதால் கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் எழலாம். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் நுழைவதால் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் நீங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு.
2.11.23 முதல் 30.11.23 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் எழும்; வாகன விபத்து வந்து நீங்கும். தங்க நகைகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள் ளுங்கள். 17.11.23 முதல் 27.12.23 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்வதால் உறவினர்களுடன் மோதல், செலவினங்கள், பயணம் உண்டாகும்.
வியாபாரிகளுக்குக் கணிசமான லாபம் உண்டு. கம்யூனிகேஷன், புத்தகம், உணவு போன்ற புதுத் துறைகளில் கால் பதிப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். குருவின் நிலை சரியில்லை ஆதலால், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு வைகாசி, ஆனி, ஆவணி மாதங்கள் சாதகமாக இருக்கும்; வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவ்வப்போது சில ஆதங்கங்களும் உண்டாகும். மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். கணினித் துறையினர், கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும். வீண் பழிகள் ஏற்படும்; எனினும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை திட்டமிட்டு செயல்படவைக்கும்; சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்துவதாகவும் அமையும்.
பரிகாரம்: கோவை மாவட்டம், அன்னூர் - தென்னம்பாளையம் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமாரபாளையம். இங்கு அருளும் வட்டமலை ஆண்டவரை கார்த்திகை நட்சத்திர தினங்களில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; செல்வம் பெருகும். |
ரிஷபம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை 10-ம் வீட்டில் சனி அமர்வதால் தந்தையின் உடல்நிலை சீராகும். |
இயற்கையை, இசையை நேசிப்பவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 9-வது ராசியில் சோபகிருது புத்தாண்டு பிறக்கிறது. புதிய முயற்சிகள் வெற்றி அடையும். கடன் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிடைக்கும்; பணபலம் கூடும்.
ஆனி, ஆடி மாதங்களில் திடீர் யோகம் உண்டு. அதிகாரப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். உங்களின் பேச்சுக்கு மரியாதை கூடும். மகளுக்கு நல்ல வரன்; மகனுக்கு நல்ல வேலை அமையும். ஆடி, ஆவணி மாதங்களில் குழந்தை இல்லையே என வருந்தும் தம்பதிக்குக் குழந்தைப்பேறு வாய்க்கும்.
ஆண்டு தொடக்கம் முதல் 21.4.23 வரை குரு லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
22.4.23 முதல் வருடம் முடியும் வரை 12-ல் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள், கனவுத் தொல்லை வந்து செல்லும். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள், தகுந்த ஆதாரம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அவர்களைப் பிரிய நேரிடும். கர்ப்பிணிகள், மருத்துவர் ஆலோசனைப்படி உணவு முறைகளை அமைத்துக்கொள்ளுங்கள். தந்தைக்கு உடல்நலக் குறைபாடு, அவருடன் மனத்தாங்கல் ஏற்படலாம்.
ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை 10-ம் வீட்டில் சனி அமர்வதால் தந்தையின் உடல்நிலை சீராகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எந்த வேலையையும் நீங்களே செய்வது நல்லது. வெளி வட்டாரத்தில் புகழ் பெருகும்.
26.8.23 முதல் 19.12.23 வரை சனி 9-ல் நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும்; பணம் வரும்; தடைகளெல்லாம் நீங்கும்.
வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை ராகு 12-ல் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. எனினும் எதிர்மறை எண்ணங்களும் திடீர்ப் பயணங்களும் ஏற்படலாம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் உணர்ச்சி வயப்பட்டு முடிவுகள் எடுக்கக்கூடாது. சொத்து வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள்.
கேது 6-ல் அமர்வதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். வசதிகள் நிறைந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
8.10.23 முதல் வருடம் முடியும் வரை, ராசிக்கு 11-ல் ராகுவும் 5-ல் கேதுவும் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள்.
30.11.23 முதல் 25.12.23 வரை உங்களின் ராசிநாதன் சுக்ரன் 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்; கவனம் தேவை. 28.12.23 முதல் 4.2.24 வரை செவ்வாய் 8-வது வீட்டில் மறைவதால் வீடு - மனை விஷயங்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். வைகாசி, ஆனி மாதங்களில் சரக்குகள் விற்றுத்தீரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். பாக்கிகள் வந்து சேரும். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். மருந்து, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகஸ்தர்களே! உங்களுக்கு எதிரான மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி சம்பள உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வேலைச் சுமையும் அதிகரிக்கும். சிலர் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் சனி 10-ல் அமர்வதால் அலுவலக விஷயங்களை கவனமாகக் கையாளுங்கள். கணினித் துறையினர், இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களின் குறிக்கோளை நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்: சென்னை-தாம்பரத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள தலம் மணிமங்கலம். இங்கே கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு செங்கமலவல்லி சமேத ராஜகோபால சுவாமியை சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; பிணிகள் மனக்கவலைகள் நீங்கும். வீட்டில் சுபிட்சம் உண்டாகும். |
மிதுனம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டுத் தொடக்கம் முதல் 7.10.23 வரை கேது உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் மனச் சஞ்சலம் உண்டு. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபன் வெடிக்கும். |
தொலைநோக்குப் பார்வை கொண்டவர் நீங்கள். சோபகிருது புத்தாண்டு உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் பிறக்கிறது. வீட்டில் சுப நிகழ்வுகள் கூடி வரும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும்; கல்யாணம் கோலாகலமாக முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத் தில் வேலை கிடைக்கும். வங்கிக் கடனை அடைக்க வழி பிறக்கும். 14.4.23 முதல் 21.4.23 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை பதற்றம் இருக்கவே செய்யும். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்லவர்களின் நட்பும் அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். மகனின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். வீண் பழி, வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.
14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டிற்குச் சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். சொத்து விஷயங்களில் நிதானம் தேவை. 26.8.23 முதல் 19.12.23 வரை சனி பகவான் அஷ்டமத்துச் சனியாக வருவதால் பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும். உரிமைக்காக நீதிமன்றங்கள் செல்ல நேரிடும். மற்றவர்களுக்காக எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வெளியூர்ப் பயணங்களின்போது, ஆபரணங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆண்டுத் தொடக்கம் முதல் 7.10.23 வரை கேது உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் மனச் சஞ்சலம் உண்டு. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபன் வெடிக்கும். பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிரவேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு 11-ல் அமர்வதால், பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். செல்வாக்குக் கூடும்.
8.10.2023 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 4-ல் கேதுவும், 10-ல் ராகுவும் நுழைவதால், தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். காரிய தாமதம், வாகன விபத்துகள் வந்து போகும்.
25.12.23 முதல் 19.1.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. வாகன விபத்துகள் வரக்கூடும். 4.2.24 முதல் 14.3.24 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் அமர்வதால், வாழ்க்கைத் துணைவருக்கு சிறியளவில் சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பல சலுகைகளை அறிவிப்பீர்கள்.ஆனி, ஆடி மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மருந்து, இரும்பு, கட்டட உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினித் துறையினரே! வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.
மொத்தத்தில் இந்தச் சோபகிருது வருடம், ஒருபுறம் அலைச்சலைத் தந்தாலும் மறுபுறம் பண வரவையும் புகழையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: சென்னை-கோயம்பேட்டிலிருந்து போரூர் செல்லும் வழியில் உள்ளது சிவகாமசுந்தரி உடனுறை ராமநாதீஸ்வரர் ஆலயம். பிரதோஷ காலத்தில் இங்கு சென்று வழிபட, சகல நன்மை களும் உண்டாகும். |
கடகம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
வருடம் பிறக்கும்போது 4-ம் வீட்டில் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது அதீத கவனம் தேவை. |
சுற்றம் நட்புக்காக உழைப்பவர் நீங்கள்; பொது நலம் பேணுபவர். உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி பூர்த்தியாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.
கடகம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக் கும்போது புத்தாண்டு பிறக்கிறது. ஆகவே மன இறுக்கம் குறையும். எதிலும் திட்டமிட்டு செயல் படுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். செலவுகள் குறையும். தம்பதிக்கு இடையே நெறுக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வெளி நாட்டில் உள்ள நண்பர்கள் உறவுகளால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசுக் காரியங்கள் வெற்றி அடையும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடியிருக்கும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.
புத்தாண்டின் தொடக்கத்தில் குரு 9-ல் நிற்கிறார். ஏப்ரல் 21 வரையிலும் தேவைகள் பூர்த்தியாகும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ல் நிற்கிறார். வீண் பழி, விமர்சனங்கள் ஏற்படலாம். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து இடவேண்டாம். காசோலை தருமுன் பணம் கையிருப்பைக் கவனிப்பது நல்லது. தாயாருக்குச் சிறிய அளவில் சிகிச்சைகள் தேவைப் படும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
14.04.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் அஷ்டமத் துச் சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம் வந்து போகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் சிறு பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. சிலர் உங்களைத் தவறாக வழிநடத்தலாம்; கவனம் தேவை. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.
26.8.23 முதல் 19.12.23 வரை 7-ல் சனி தொடர்வ தால் முன்கோபம், டென்ஷன், வந்து போகும். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் எழும்.
வருடம் பிறக்கும்போது 4-ம் வீட்டில் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது அதீத கவனம் தேவை. தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வீண் வாக்குவாதங்கள் வந்துபோகும். வீடு கட்ட திட்டமிட்டால், போதுமான பணத்தை வைத்துக்கொண்டு செயலில் இறங்குங்கள். 10-ல் ராகு இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வி.ஐ.பிகளின் உதவி உண்டு. 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் நுழைவதால், தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தந்தைக்கு உடல்நலக் குறைபாடு, அவருடன் வாக்குவாதம் வந்து செல்லும்.
19.1.24 முதல் 13.2.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். கால் வலி, கழுத்து வலி, இறுமல் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சொந்த வாகனத்தில் அதிகாலைப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 14.3.24 முதல் 13.4.24 வரை ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச் சல், செலவுகள் இருக்கும்.
வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்துகொடுத்து போவார்கள். ஆவணியில் புது ஒப்பந்தம் தேடி வரும். கார்த்தகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். இரும்பு, உணவு, ரியல்எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகஸ்தர்களே! ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு தன்னம்பிக்கை யால் உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்: மதுரை அருகே சிம்மக்கல் எனும் ஊரில் உள்ள ஆதிசொக்கநாதர் கோயிலில் அருளும் பைரவரை, அஷ்டமி தினங்களில் தரிசித்து தீபமேற்றி வழிபட்டு வாருங்கள்; சங்கடங்கள் நீங்கி வாழ்க்கை செழிக்கும்; புதிய பாதை புலப்படும். |
சிம்மம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை 3-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். |
கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடித்துவிடும் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ல் சோபகிருது ஆண்டு பிறப்பதால், எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தாரின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.
சிம்மம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் பணப் புழக்கம் அதிகரிக்கும். நவீனரக எலெக்ட்ரானிக்ஸ், சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்த வீடு கனவு நனவாகும். சிலருக்குத் தாய்மாமன், அத்தை வழியில் சங்கடங்கள் வரும். மார்கழி மாதத்தில் அரசு விவகாரங்களில் இழுபறி நிலை ஏற்படும். தை, மாசி மாதங்களில் திடீர் பணவரவு, புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் திருமணம் கூடி வரும்.
21.4.23 வரை 8-ம் வீட்டில் குரு இருப்பதால் இனம் புரியாத கவலை, நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டில் குரு அமர்வதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பண இழப்புகள் வந்து போகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26.8.23 முதல் 19.12.23 வரை உங்கள் ராசிக்கு சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்கள் உதவியால் வளர்ச்சி அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை 3-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதில் இருந்த தடைகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். 9-ல் ராகு இருப்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசி 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் மன உளைச்சல் வரக்கூடும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.
13.2.24 முதல் 8.3.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியே பகிரவேண்டாம்.
வியாபாரிகளே! தொழிலில் இதுவரை இருந்த அவல நிலை மாறும். போட்டியாளர்களுக்குப் பதில் கொடுக்கும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். புரட்டாசி மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு. அரசாங்க வகையில் தொந்தரவுகள் நீங்கும். பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். புதிய பொறுப்புகள் வந்து சேரும். 22.4.23 முதல் 8-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால், நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் உறுதியாக கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கணினித் துறையினர், சம்பளம் சலுகைகள் அதிகம் உள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தச் சோபகிருது வருடம், உங்களின் பண பலத்தை உயர்த்துவதாகவும் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம், திருமோகூர் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் காளமேகப் பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் சனிக் கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சந்தோஷம் நிலைக்கும். |
கன்னி - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். |
சொந்த உழைப்பால் முன்னேறும் திறமை சாலி நீங்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளை வரத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் கூடும். மகனுக்கு நல்ல இடத்தில் பெண் அமையும். குழப்பங்கள், வீண் டென்ஷன் விலகும். வீட்டில் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுப காரியங்கள் கூடிவரும்.
21.4.23 வரை குரு பகவான் 7-ல் தொடர்வதால் பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ல் சென்று குரு மறைவதால் வீண் அலைச்சல், இனம் புரியாத கவலை, ஒருவித பய உணர்வுகள் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வு மனப்பான்மை நீங்கும். உள்ளத்தில் மலர்ச்சி கூடும். பழைய கடனைப் பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
26.8.23 முதல் 19.12.23 வரை உங்கள் ராசிக்கு சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
வருடம் பிறக்கும்போது 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நுழைவதால், துரித உணவு வகைகள், உப்பு, காரம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
8.3.24 முதல் 1.4.24 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். டிரைவிங் லைசன்ஸ், வண்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றைப் புதிப்பிக்க மறவாதீர்கள்.
வியாபாரிகளே! இதுவரையிலும் போட்டியாளர் களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினீர்கள். சிலரின் தவறான ஆலோசனையால் பல இழப்புகளைச் சந்தித்தீர்கள். இனி அந்த நிலை மாறும். உங்களின் திறமையால் லாபம் ஈட்டுவீர்கள்.
திறமைசாலிகளை வேலைக்குச் சேர்ப்பீர்கள். ஏற்ற இறக்கம் இருந்தாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பழைய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய கொள்முதல் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் உதவி கிடைக்கும்; வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டா கும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! 22.4.23 முதல் குரு பகவான் 8-ல் அமர்வதால் சிறு சிறு அவமானங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். சில தருணங்களில் வேலையை விட்டுவிடலாமா என்றுகூட ஆதங்கம் வந்து போகும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். சிலருக்கு விருப்பம் இல்லாத இடமாற்றம் ஏற்படலாம். அலுவலக ரகசியங்களையோ, மேலதிகாரி குறித்த விமர்சனங்களையோ வெளியே பகிர வேண்டாம்.
கணினித் துறையினரே! புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இருக்கும் இடத்திலேயே நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் வளர்ச்சி யையும் பிள்ளைகள் மூலம் நிம்மதியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40கி.மீ. தொலைவில், பொன்னமராவதிக்குச் செல்லும் வழியில் உள்ளது கொன்னையூர். இங்கு அருளும் மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள். தடைகள் நீங்கும்; முன்னேற்றம் உண்டாகும். |
துலாம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை ராசிக்குள் கேது நிற்பதால் மன அழுத்தம், டென்ஷன், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். |
மற்றவர்களை எடைபோடுவதில் வல்லவர் நீங்கள். தலைமைப் பண்பும் அதிகம் உண்டு. உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் இனிதே நடக்கும்.
14.4.23 முதல் 21.4.23 வரை 6-ல் நிற்கும் குரு சற்றே அலைக்கழிப்பார். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை அவர் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், விபரீத ராஜயோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது சிந்தனைகள் பிறக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத் தில், எக்காரணம் கொண்டும் வேகம் கூடாது; நிதானம் தேவை.
26.8.23 முதல் 19.12.23 வரை சனிபகவான் நான்காம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். பயணத்தின்போது கவனம் தேவை. புதியவர்களை நம்பி வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை ராசிக்குள் கேது நிற்பதால் மன அழுத்தம், டென்ஷன், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படும்.
8.10.23 முதல் வருடம் முடியும் வரை கேது ராசியை விட்டு விலகுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். மகனுக்குத் திருமணம் கூடிவரும்.
1.4.24 முதல் 13.4.24 வரை சுக்ர பகவான் 6-ல் மறைகிறார். ஆகவே, குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். ஆனாலும் பேச்சில் சற்றுக் கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவருக்குச் சிறு சிறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
வியாபாரிகளே! லாபத்தைப் பெருக்க புது வித யுக்திகளைக் கையாளுவீர்கள். புதிய சலுகை களையும் அறிமுகப்படுத்துவீர்கள். போட்டியாளர் களை வெல்வீர்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர் களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாசி, பங்குனி மாதங் களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். தகுதி குறைந்தவர்கள் உங்கள் வழியிலிருந்து விலகிச் செல்வார்கள். வெகுகாலமாக நீங்கள் எதிர்பார்த்து இருந்த பதவி, சம்பள உயர்வுகள் இனி கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். உங்கள்மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். சிலருக்குக் கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிகச் சம்பளத் துடன் கூடிய புது வேலை வாய்ப்பு தேடி வரும்.
கணினித் துறையினரே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எதிர்பாராத திருப்பங்களையும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் அருளும் கரும்பாயிரம் பிள்ளையாரை சங்கடஹர சதுர்த்தி நாளில் சென்று வணங்குங்கள்; அதிர்ஷ்டம் தேடி வரும். |
விருச்சிகம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும். |
உழைப்பால் உயர்வை நாடும் உத்தமர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் சோபகிருது புத்தாண்டு பிறக்கிறது. முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். சலிப்பும் சோர்வும் நீங்கும்; தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும். பண வரவு உண்டு.
சித்திரை, வைகாசி மாதங்கள் கொஞ்சம் அலைச்சலை தந்தாலும் வளர்ச்சியையும் தரும். வீடு கட்டும் பணிகள், உறவுகள் வீட்டு விசேஷங்கள் என சுபச் செலவுகள் உண்டு. புரட்டாசி, ஐப்பசி காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
21.4.23 வரை உங்களின் தன-பூர்வபுண்ணியாதி பதியான குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால், அறிஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். வாகன வசதிகள் பெருகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால், செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். குடும்பத்தில் வீண் குழப்பங்கள் வரும். சிலர் உங்களைத் தவறான பாதைக்கு தூண்டுவார்கள்.
ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர வேண்டாம். வருங் காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அரசியல் வாதிகள் வீண் விமர்சனத்தைத் தவிர்க்கவும். 26.8.23 முதல் 19.12.23 வரை சனி 3-ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
வருடம் பிறப்பு முதல் 7.10.23 வரை கேது 12-ல் நிற்பதால் வீண் செலவுகள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். ராகு 6-ல் நிற்பதால் வழக்கில் வெற்றியுண்டு. வெளி நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை, கேது லாப வீட்டிற்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர்யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள். சொத்துச் சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டும். ராகு 5-ல் இருப்ப தால் பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. சிலர், குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.
14.4.23 முதல் 12.05.23 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், சகோதரர்களால் நிம்மதி இழப்பீர்கள். யாருக்கும் எவ்வித உறுதிமொழியும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். நெடுநாள் நட்பை இழக்க நேரிடும். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரிகளே! பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசியில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். மாசி, பங்குனி மாதங் களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடுவதை தவிர்க்கவும். பங்குதாரர்கள் அவ்வப்போது சண்டை யிட்டாலும், இறுதியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்; நெருக்கடிகள் நீங்கும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்கா கப் போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலநேரங்களில் தன்மானத்தை விட்டுக் கொடுக்க வேண்டியது வரும். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய சில நிறுவனங்களில் புது வாய்ப்புகள் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு ஏற்றத் தாழ்வு களைக் கொடுத்தாலும், நிறைவில் புதிய மாற்றங் களைத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் - ஆர்.எம் காலனியில் கோயில் கொண்டிருக்கும் மகாதுர்கை அம்மனைச் செவ்வாய்க் கிழமைகளில் சென்று வழிபட்டு வாருங்கள்; குழப்பங்கள் நீங்கும். |
தனுசு - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டுத் தொடக்கம் முதல் 21.4.23 வரை குரு பகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருக்கு உடல் உபாதைகள் இருக்கும். |
முன்வைத்த காலை பின்வைக்காத கொள்கை வாதிகள் நீங்கள். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சோபகிருது புத்தாண்டு பிறக்கிறது. சோர்வு நீங்கும்; தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வி.ஐ.பி. நட்புகளைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்வீர்கள்.
சித்திரை மாதம் செலவுகள் உண்டு. எனினும் இழுபறியாக இருந்த அரசு வேலைகள் நல்லபடியாக முடியும். சிலர் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். மகளுக்கு நல்ல வரன்; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாரிசு இல்லாத சில அன்பர் களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
ஆவணி, தை, மாசி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. வேற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வசதிகள் நிறைந்த வீட்டிற்குக் குடிபுகுவீர் கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
ஆண்டுத் தொடக்கம் முதல் 21.4.23 வரை குரு பகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருக்கு உடல் உபாதைகள் இருக்கும். தாய்வழிச் சொத்துப் பிரச்னைகளைப் பேசித் தீர்க்கப் பாருங்கள். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை 5-ம் வீட்டிற்குக் குரு செல்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு திருமணம் இனிதே கூடிவரும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் 3-ல் நுழைவதால் புதுச் சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவுவார்கள். வேற்று மொழிக்காரர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. பூர்வீகச் சொத்துக்கான வரியை முறையே செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். சனி பகவான் 26.08.23 முதல் 19.12.23 வரை பாதச்சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல்வாங்கல் விஷயத்திலும் கறாராக இருங்கள்.
13.05.23 முதல் 02.07.23 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் மனக் கசப்புகள் வரும். இருவரும் மனம் விட்டுப் பேசி, சரிசெய்வது சிறப்பு. சகோதர வகையில் சச்சரவு வரலாம். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் அதிகச் செலவுகள் வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கை அவசியம். 14.4.23 முதல் 3.5.23 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
வியாபாரிகளே! நவீன விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்திய பகுதியில் கடையைச் சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், புரோக்கரேஜ், ஷேர் வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்புண்டு. தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப்பாருங்கள். மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். வழக்கில் வெற்றி அடைந்து நீங்கள் இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். இயக்கம், சங்கங்கள் சார்பாக பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணினித் துறையினருக்கு, வருட பிற்பகுதியில் அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை முதல் இடத்துக்கு உந்தித் தள்ளுவதுடன், வசதி வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: கோபிசெட்டிபாளையம் - அந்தியூர் செல்லும் வழியில் உள்ள இடம் முருகன்புதூர். இங்கு அருளும் ஸ்ரீபவளமலை முத்துகுமாரசுவாமியை சஷ்டி திதி அல்லது விசாகம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். எல்லா தடைகளும் விலகும்; முன்னேற்றம் உண்டாகும். |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|