புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக செய்திகள்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், 1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத் இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.
டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளது.
கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், 1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத் இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.
டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்கும் ஸ்டாலின்; காரணம் என்ன?
நாளை (ஏப்ரல் 27) டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். நாளை மறுதினம் ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்.
அதன்படி, இம்மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர் சிறப்பு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு (27.4.2023) சென்னையிலிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்று, நாளை மறுநாள் (28.4.2023) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சமீபத்தில் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
இந்த முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மனுவாக தாக்கல் செய்த பின் இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் முடிவில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் தலைவிதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆன்லைன் சூதாட்டம்: `தமிழக அரசு தடைச் சட்டம் இயற்றியதில் என்ன தவறு?' - சென்னை உயர் நீதிமன்றம்
``தமிழ்நாட்டில் புகையிலை, மது போன்றவற்றைத் தடை செய்யாத நிலையில், ஆன்லைன் ரம்மியை மட்டும் அரசு தடைசெய்திருக்கிறது." - மனுதாரர் தரப்பு வாதம் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடைவிதிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு, ஒருவழியாக ஏப்ரல் 10-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். கூடவே, அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பும், கேம்ஸ்க்ராஃப்ட் (Gameskraft) என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனமும் தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா, பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பிலிருந்து, ``ரம்மி உள்ளிட்டவை திறமைக்கான விளையாட்டுகள், சூதாட்டமல்ல. தமிழ்நாட்டில் புகையிலை, மது போன்றவற்றைத் தடை செய்யாத நிலையில், ஆன்லைன் ரம்மியை மட்டும் அரசு தடைசெய்திருக்கிறது. எனவே இதை ரத்துசெய்ய வேண்டும்.
அதோடு இந்த வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், தினசரி மில்லியன் கணக்கில் இழப்பு ஏற்படும்" என நீதிபதிகளிடம் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ``மக்களைப் பாதுகாக்கவே அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், பிற இழப்புகளைத் தடுக்க அரசு சட்டம் கொண்டுவந்ததில் என்ன தவறு" எனக் கருத்து தெரிவித்துக் கேள்வியெழுப்பினர்.
அதேசமயம் மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ``தமிழ்நாடு அரசின் விளக்கத்தைக் கேட்காமல் இதில் எந்தவோர் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனக் கூறி ஆறு வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றமா? நீக்கப்படும் அமைச்சர்கள் யார் யார்?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடைபெற இருப்பதாகவும் ஒரு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு ஒரு சில புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அமைச்சரவையில் சில மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நீக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஒருசில அமைச்சர்கள் மீது மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களின் துறை மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அமைச்சரவை மாற்றப்படும் என்றும் அப்போது நீக்கப்படும் அமைச்சர்கள் யார்? புதிய அமைச்சர்கள் யார்? என்பது குறித்த தகவல் புரியவரும் என்று கூறப்படுகிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ரெய்டுக்கு சென்ற அதிகாரி வீட்டில் கொள்ளை.. சில மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி..! |
சமீபத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்த நிலையில் அந்த அதிகாரிகளின் ஒருவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலக குடியிருப்பில் ராமசுப்பிரமணியன் என்பவர் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு செய்வதற்காக முந்தைய நாள் இரவே ராமசுப்பிரமணியம் அலுவலகம் சென்று விட்டார். இந்த நிலையில் அன்றைய தின இரவில் மர்ம நபர் ஒருவர் அவருடைய வீட்டிற்கு சென்று பீரோவில் இருந்த 18 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்று உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆஷா தனது கணவரிடம் கூற ராமசுப்பிரமணியம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையன் பழைய குற்றவாளி ஆனந்த் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொள்ளையன் ஆனந்தை கைது செய்த போலீசார், கொள்ளையனிடமிருந்து நகைகள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஊட்டி மாணவி ஓட்டலில் அடைத்து பாலியல் வன்கொடுமை! – உதவி கேட்டவருக்கு நேர்ந்த கொடுமை! |
கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக உதவி கேட்ட மாணவியை இருவர் ஓட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்த ஆங்கிலோ இந்தியன் இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். தாய் – தந்தை இருவரும் பிரிந்து விட்ட நிலையில் கோவையில் தனி அறை எடுத்து தங்கி படித்து வரும் அந்த மாணவி அவ்வபோது நண்பர்கள் உதவியுடன் கல்வி கட்டணம் செலுத்தி படித்து வந்துள்ளார்.
அவ்வாறாக கல்வி கட்டண உதவிக்காக சக மாணவர்களிடம் கேட்டபோது ஒரு மாணவர் வழியாக ராஜேஷ், ரவீந்திரன் என்ற இருவர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர். கல்வி உதவி செய்வதாக கூறி மாணவியை கோவையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்ற அவர்கள் அங்கு மாணவியை அடைத்து வைத்து 3 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
எப்படியோ அங்கிருந்து தப்பித்த மாணவி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜேஷ், ரவீந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் ஊட்டி சாலையில் வாகன சோதனையின்போது தப்பி ஓட முயன்ற ராஜேஷ், ரவீந்திரனை போலீஸார் துரத்தி சென்றனர். அப்போது கீழே விழுந்ததில் ராஜேஷ், ரவீந்திரனுக்கு கை, கால்கள் உடைந்தன. அவர்களை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், குணமானதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை வைத்து ஒரு ஐபிஎல் மேட்சே நடத்தலாம்: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..! |
அதிமுக தற்போது பல அணிகளாக பிரிந்து இருக்கிறது என்றும் அந்த அணிகளை வைத்து ஒரு ஐபிஎல் போட்டி நடத்தலாம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.
திருச்சியில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பின் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புத்தக புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது முதலமைச்சரின் ஐம்பது வருட உழைப்பை இந்த கண்காட்சியில் நாம் பார்க்கிறோம் என்றும் ஒவ்வொரு முறையும் இந்த கண்காட்சியை பார்க்கும்போது வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.
அதன் பின் அதிமுகவில் உள்ள அணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என்று யாருக்கும் தெரியாது என்றும் ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி டிடிவி அணி சசிகலா அணி என பல அணிகள் இருப்பதால் இந்த அணிகளை வைத்து ஒரு ஐபிஎல் மேட்ச் நடத்தலாம் என்றும் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமயபுரம்: போலீசார் – குருக்கள் மோதல்; அரைமணி நேரம் பூஜைகள் நிறுத்தம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் போலீசாருக்கும் குருக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பூஜைகள் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
இது குறித்த விபரம் பின்வருமாறு:-
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோவில் குருக்கள் ஒருவரை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்ததால். போலீசாருக்கும் குருக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் குருக்கள்கள் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இதனிடையே கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கோயிலின் மேற்கு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அவ்வழியாக சென்ற பக்தர்களை விரட்டியுள்ளார்.
மேலும் பின்புறம் வாசல் வழியாக சென்ற குருக்கள் ஒருவர் உள்ளே சென்ற போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குருக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் மூலஸ்தானத்தில் உள்ள அனைத்து குருக்களும் பூஜையை புறக்கணித்து வெளியே வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரமாக பக்தர்கள் குருக்கள் இல்லாமல் தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் அலுவலர்கள் குருக்கள்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சுமுக தீர்வு ஏற்பட்டு மீண்டும் வழக்கமான பூஜைகளில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சமயபுரம் கோயிலில் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை: சோதனைக்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்- தடுத்து தகராறில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர்கள்
மயிலாடுதுறையில் நேற்று இரவு பிரபல டீக்கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் சோதனை செய்ய வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளை தி.மு.க-வினர் தடுத்து தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
#மயிலாடுதுறை, சின்னகடைவீதி பகுதியில் குரு காபி பார் என்ற டீ கடை உள்ளது. இந்தக் கடையில் 5 ரூபாய்க்கு வடை,பஜ்ஜி விற்கப்படுவதால் எப்போதும் மக்கள் கூட்டம் குறையாமல் இருக்கும். இந்நிலையில் இந்த கடையில் விற்கப்படும் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்ப்டையில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சீனிவாசன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் இரவு 7 மணியளவில் சோதனை செய்ய வந்தனர்.
சோதனையில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்டவைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவது தெரியவந்து கடையை பூட்டி சீல் வைக்க முற்பட்டனர். அப்போது டீ கடைக்கு ஆதரவாக திமுக பிரமுகர் அமர்நாத் மற்றும் திமுக பிரமுகர்கள் சிலர் அதிகாரிகளை தடுத்த்தோடு ‘மாமூல் கொடுக்காத்தால் நடவடிக்கை எடுக்கிறீர்களா?’என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் சீல் வைக்கும் முயற்சியை கைவிட்ட அதிகாரிகள் அருகே இருந்த பழக்கடைக்கு சென்று ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உள்ளதா? என்று ஆய்வில் ஈடுபட்டு பழங்களை பறிமுதல் செய்ததோடு கடையின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி கடையை பூட்டி சீல் வைக்க முற்பட்டனர். இதனையடுத்து கோபப்பட்ட பழக்கடையினர் மற்றும் பொதுமக்கள் ‘எதிரே உள்ள டீ கடை மீது மக்கள் புகார் கூறியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? ஏற்கனவே பிரபல ஹோட்டலில் உணவுப்பொருளில் கரப்பான் பூச்சி இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் மாமூல் வாங்கிக்கொண்டனர் என்ற புகாரும் நிலுவையில் இருக்கும் நிலையில் இப்போது மாமூல் தரவில்லை என்பதற்காக பூட்டி சீல் வைக்கிறீர்களா? என்று கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நகரமன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். இதனால், நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையை கைவிட்டுவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். “பொதுமக்களின் புகாரின்பேரில்தான் நாங்கள் ஆய்வுக்கு செல்கிறோம். மாமூல் கொடுக்காததால் ஆய்வு செய்கிறோம் என்பது பொய்யான புகார்” என்றனர்.
திருச்சி: ’பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம்’-ஆசிரியர்களுக்கு ’பாடம்’ கற்பித்த மாணவர்கள்
#திருச்சி மாவட்டம், #துவரங்குறிச்சி அருகே #வளநாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்குவதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பணம் கேட்கவே அதை கொடுக்க விரும்பாத மாணவர்கள் நாலு பேர் ஆசிரியர்கள் பணம் கேட்கும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் நான்கு பேரும் 2019-2020ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள். அவர்கள் ஆண்டு இறுதி தேர்வை எழுதாமல் கொரோனா காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் அடுத்த வகுப்பில் சேரும்போது அவர்களது வருடாந்திர கல்வித் தரத்தை பொறுத்து தோராயமாக மதிப்பெண்கள் வழங்கி டிசி வழங்க வேண்டும்.
இந்த மாணவர்கள் நான்கு பேரும் தற்போது ஐடிஐ சேர்வதற்கு இந்த மதிப்பெண்கள் தேவைப்படுகின்றன என்பதால் அதை கேட்டு பள்ளியை அணுகிய போது தான் தலைமை ஆசிரியர் தலா 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார். 'எங்களிடம் பணம் இல்லை' என்று அவர்கள் சொல்லவே, ஒவ்வொருவரும் தலா இரண்டு A4 பேப்பர் பண்டல்கள் வாங்கி வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தலைமை ஆசிரியர். அடுத்து அவர்கள் செய்தது அசாதாரணமான காரியம்... ஒரே ஒரு பண்டல் மட்டும் வாங்கிக் கொண்டு போனவர்கள், கையில் கொண்டு போன செல்போனில் வீடியோவை பதிவு செய்துள்ளார்கள்.
அதில் ஆசிரியர்கள் மாணவர்களை பணம் கேட்டு திட்டுவது பதிவாகியுள்ளது. ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தலைமை ஆசிரியர் இன்னொரு ஆசிரியையை அழைத்து, 'இந்த நாலு எருமை மாடுகளையும் வெளியே விரட்டுங்கள்' என்கிறார். ' இவனுக ஐடிஐயும் படிக்க வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம்' என்கிறார்.
'காசு இல்ல டீச்சர். அதனால்தான் ஒன்னே ஒன்னு வாங்கிட்டு வந்தோம்' என்று மாணவர்கள் கெஞ்சுகிறார்கள். அதற்கு அந்த ஆசிரியை 'காசு இல்லைன்னா 10, 12, 13 மார்க் போட்டு தரட்டுமா?' எனக் கேட்கிறார். 'இவங்களுக்கு இது போதும்' என்று தலைமை ஆசிரியர் சொல்வதோடு 'போங்கடா போங்க' என்று விரட்டுகிறார்.
மாணவர்கள் காசு இல்லை என கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோ தற்போது பள்ளிக் கல்வித் துறை கவனத்திற்கும் சென்றுள்ளது அடுத்து என்ன நடக்குமோ என்று பள்ளி வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது.
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6