by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
தமிழக செய்திகள்
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளது.
கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், 1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத் இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.
டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
போலீஸ் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் ரூ.2 கோடி மோசடி?
சேலம் மாநகர ஆயுதப்படையில் போலீஸ் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் ரூ.2 கோடி மோசடி நடந்துள்ளதா? என உயர் அதிகாரிகள் விசாரனை
சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றிய எழுத்தர் உள்பட 4 பேர் போலீஸ் வாகனங்களுக்கு நிரப்பக்கூடிய டீசலை மோசடி செய்து ரூ.2 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளாக ஓடாத வாகனங்களை இயக்கியதாகவும், பழுதான வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதாகவும் போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை வாகனங்கள், ஆம்புலன்சுகளுக்கு 1,460 லிட்டர் டீசல் நிரப்பியதாக மோசடி செய்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஊர்காவல் படைக்கும், 2 ஏட்டுக்களில் ஒருவர் டவுன் குற்றப்பிரிவுக்கும், மற்றொரு ஏட்டு மத்திய குற்றப்பிரிவுக்கும் இடமாற்றப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மோட்டார் வாகன பிரிவில் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் மோசடி நடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகாரில் சிக்கியதால் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்கள் ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
தமிழகத்தில் புதுப் பொலிவு பெறும் 341 குளங்கள், 67 அணைகள், 11 கால்வாய்கள்
#தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 341 குளங்கள், 67 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.461 கோடி நிதிஒதுக்கீடு செய்து புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தை தொடங்கிட உலக வங்கி 70 சதவீத நிதியை கடனாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 30 சதவீத செலவுகளை தமிழக அரசு ஏற்கும்.
இத்திட்டத்தின் கீழ் பாலாறு, செய்யாறு, காவிரி, பெரியாறு என்று நீர்நிலைகளும் அணைகளும் சீரமைக்கப்படும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த பின், பணிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் விவசாயத்தையும், அதனால் விளையும் உற்பத்தியையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் கட்டமாக, உலக வங்கியின் ஆதரவுடன் காவிரி உட்பட சில குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை சீரமைக்க மேற்கொண்டுள்ளனர். மத்திய நீர்வள ஆணையம் மூலம் உலக வங்கிக்கு நிதிக்கான முன்மொழிவை அனுப்பியுள்ளது.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி - திமுகவினர் முகத்திலேயே படிவத்தினை எறிந்து ஆத்திரம்
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. |
தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களே பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடி இடம் வழங்கி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை தூக்கி அவர்களது முகத்திலேயே எரிந்து ஆவேசமாக பேசினார். திருக்கோவிலூர் சைலோம பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி வழங்கிய படிவத்தை எறிந்தார். அதேபோல், அரகணடநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அங்கேயும் அமைச்சர் பொன்முடி திமுக நகர செயலாளர் முகத்திலேயே அவர் வழங்கிய படிவத்தினை எறிந்தார்.இதனால் நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பு நிலவியது.
ஏற்கனவே இலவச பேருந்து விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி, இப்போது சொந்தக் கட்சிகார்களிடமும் ஆவேசமாக நடந்து கொள்வது பேசு பொருளாகியுள்ளது. ஒரு அமைச்சராக இருப்பவர் பொதுவெளியில் வரும்போது அடிக்கடி கோபத்தை நேரடியாக நிர்வாகிகளிடம் மற்றும் பொது மக்களிடம் காட்டுவது சரிதானா? என்றும் பலர் வினவியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி..!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது முறைகேடு விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டை விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கை என்ன அதிமுகவின் முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
“உடனடியாக நெகிழி தடை அமல்படுத்தினால்...” - சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசு!
பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் நெகிழி உறைகளில் பொதிந்து விற்கப்படுவதால், நெகிழி தடை உத்தரவை மாற்றியமைக்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
தமிழகத்தில் நெகிழி பொருட்கள் தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது தொழிற்துறை செயலாளர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், பால், பால் பொருட்கள், எண்ணெய், ரொட்டி, மிட்டாய், மருந்து பொருட்கள் நெகிழி உறைகளில் பொதிந்து விற்கப்பட்டு வருவதால், உணவு பொருட்களை நெகிழி உறைகளில் பொதிந்து விற்க விலக்களிக்க மறுத்து, 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
நெகிழிக்கு மாற்றாக வேறு பொருட்கள் சந்தையில் இல்லாததால், தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலாது எனவும், முழு அளவில் அமல்படுத்தினால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கும் எனவும் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெகிழி உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், இது உள்ளூர் தொழில்கள் பாதித்து, வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரம் ஆலைகளில், 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும், அவர்களில் 30 முதல் 35 சதவீதத்தினர் பெண்கள் எனவும், இந்த ஆலைகள் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பை வழங்குவதாகவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு எந்த மாநிலங்களிலும் நெகிழி தடை இல்லாததால், அந்த மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவதால் நெகிழி இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் இலட்சியம் வீழ்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில், நெகிழி பொருட்கள் தடை முழுமையாக அமலுக்கு வர 10 ஆண்டுகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதில் இருந்து உடனடியாக தடையை அமல்படுத்த முடியாது என்பது தெளிவாவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூன் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட தேர்வு பட்டியல் ரத்து
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், "தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் அலுவலர்கள் நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை சென்னை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்டது. நாங்கள் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள். நாங்கள் அளித்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளவில்லை
20.12.2022 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வையும் எழுதினோம். ஆனால், தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வுப் பட்டியலில் எங்களின் பெயர்கள் இல்லை. சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட தேர்வுபட்டியலை ரத்து செய்து, புதிய தேர்வு பட்டியலை வெளியிடக் வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,"சித்த மருத்துவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தனிச்சிறப்பும், பந்தமும் உண்டு. சித்த மருத்துவம் தமிழ்நாட்டு கலாச்சாரத்தோடு ஒன்றிது. மேலும் பல்வேறு கோவில்களில் சித்த மருத்துவ முகாம் முன்னர் செயல்பட்டு வந்தது. தற்பொழுது அது செயல்படுகிறதா? என தெரியவில்லை.
நெருக்கடி காலங்களில் சித்த மருத்துவம்!
பல்வேறு நெருக்கடியான காலங்களில் சித்த மருத்துவர்களின் பங்கை நாம் மறந்து விட முடியாது. கொரோனா தொற்று காலத்தில் கபசுர குடிநீர், அதே போல் டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க தமிழ்நாடு அரசே நடவடிக்கைகளை முன்னெடுத்தது. சித்த மருத்துவக் கல்லூரிகளை அரசு நடத்தி வருகிறது. அவர்களுக்கான உரிய அங்கீகாரம் என்பது இருக்கிறது.
சித்த மருத்துவ சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே!
தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் நவீன முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் துறையில் இருந்து வழங்கப்படும் சித்த மருத்துவ சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே.
எதுவும் பழமையானதும் அல்ல புதுமையானதும் அல்ல
தேர்வு முறையில் சித்த மருத்துவ பட்டம் பெற்றவர்களை தகுதி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது. தமிழகத்தில் சித்த மருத்துவம் நடைமுறையில் இருக்கிறதா? என தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இங்கு எதுவும் பழமையானதும் அல்ல புதுமையானதும் அல்ல, நடைமுறை செயல்பாடுகளை பொறுத்தது. மருந்து என்பது சித்த மருத்துவத்தை உள்ளடக்கியது என நான் நம்புகிறேன். மேலும் இந்திய மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவங்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு தீர்வளித்திருக்கிறது. அலோபதி முறையில் எல்லா மருத்துவ கேள்விக்கும் பதிலும் இல்லை.
தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவு
எனவே மனுதாரர்களை "உணவு பாதுகாப்பு அலுவலர் " பதவியில் நியமிப்பது தொடர்பாக பரிசீலிக்க உரிமை உண்டு என நான் கருதுகிறேன். ஆகவே, உணவு பாதுகாப்பு அலுவலர் நியமம் தொடர்பாக வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து, மீண்டும் மனுதாரர்களை இணைத்து பரிசீலனை செய்து புதிய தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கினை நீதிபதி முடித்து வைத்தார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனிமேல் ஆவின் தலைமையகத்தில்தான் வாங்கவேண்டுமாம்.
ஆவின் பூத்துகள் திறக்கமாட்டார்கள். ஆனால் டாஸ்மாக் ரோட்டுக்கு ரோடு இருக்கின்றது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கோடையில் கால்நடைகளுக்கு தேவையான உணவு வழங்கி, நோய் தாக்குதல் இல்லாமல் பராமரிப்பது குறித்து ஓமலூர் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். |
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் ஆகிய வட்டார கிராமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தால் கால்நடைகளை நோய்கள் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பதால் அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பது குறித்து ஓமலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
அதன்படி அகத்தி, வேம்பு, பூவரசு, கருவேலம், குடைவேல், பலா, கொடுக்காப்புளி, அரசு, உதியன், இலந்தை ஆகிய மரங்களின் இலைகளை வறட்சியின் போது கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்க வேண்டும். மர இலைகளை தீவனமாக வழங்கும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மர இலைகளை பிற புல் வகைகள் மற்றும் உலர்ந்த தீவனங்களுடன் சிறிது சிறிதாக கலந்து கொடுக்க வேண்டும். வழங்குவதற்கு முன் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை இலைகள் வாட வேண்டும்.
உலர வைத்து ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதம் உப்பு அல்லது வெல்ல கரைசலை தெளித்து கொடுத்தால், இலைகளை விரும்பி சாப்பிடாத கால்நடைகளும், விரும்பி சாப்பிடும். மாலை அல்லது இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும்.
கால்நடைகளை கடும் வெயில் நேரத்தில் 11 மணி முதல் பகல் 3 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். தீவன தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொடுத்தால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக்கூடாது.
இளம் சோளப்பயிரில் சைனிக் அமிலம் நச்சுத்தன்மை உள்ளது. இதனை சாப்பிடும் கால்நடைகள் இறக்கவும் வாய்ப்புள்ளதால், இளம் சோளப்பயிரை கொடுக்கக்கூடாது.
முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்காமல் இரண்டு, மூன்று தடவை பிரித்து கொடுக்க வேண்டும். கால்நடைகள் பழக்கத்துக்கு அடிமையானவை என்பதால் தீவனத்தில் திடீரென மாறுதல் செய்யக்கூடாது.
ஒரே நேரத்தில் மொத்த தீவனத்தையும் கொடுத்தால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும். அதனால், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பராமரித்து வந்தால் கோடையிலும் கால்நடைகளை ஆரோக்கியமாக வளர்த்து லாபம் பெறலாம் என்று தெரிவித்தனர்.
திருவள்ளூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 போலி மருத்துவர்கள் கைது
திருவள்ளூரில் காவல்துறை மற்றும் மருத்துவத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட எஸ்பி கல்யாண் கள சோதனைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் சேகர் தலைமையிலான மருத்துவத் துறையினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து இச்சோதனை நடைபெற்றது.
அதன்முடிவில் பேரம்பாக்கம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்கே பேட்டை, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்து வந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களன் விவரம், பின்வருமாறு:
1. கடம்பத்தூரில் முத்துசாமி என்பவர் DNMS, MA., படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
2. பேரம்பாக்கத்தில் தேவராஜ் என்பவர் Dip.in Electro Homeopathy படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
3. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் மகேஷ் என்பவர் Cell Therapy படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
4. கவரைப்பேட்டையில் ஞானசுந்தரி என்பவர் Siddha படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
5. ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் பிஏ படித்து விட்டு எம்பிபிஎஸ் மருத்துவரிடம் கம்பவுன்டராக பணி புரிந்து, செல்போனில் அழைத்தால் இருசக்கர வாகனத்தில் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரை இருசக்கர வாகனத்தில் சிகிச்சை கொடுக்க சென்றபோதே கைது செய்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
6. திருத்தணியை அடுத்த கேஜி கண்டிகை பகுதியில் ராபர்ட் என்பவர் Lab Techniciah படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
7. திருவாலங்காட்டை அடுத்த வீரக்கோயில் கிராமத்தில் ரெஜினா (74) என்பவர் மருத்துவம் படிக்காமலேயே அவரது கணவர் கிளினிக் வைத்து நடத்திய அனுபவத்தைக் கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
8. ஆர்.கே.பேட்டை அடுத்த செங்கட்டானூர் கிராமத்தில் ஞானபிரகாஷ் (35) என்பவர் Bachelor of Electropathy படித்து விட்டு மருத்துவமனை வைத்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
9. பள்ளிப்பட்டு பகுதியில் மோகன் என்பவர் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் மருத்துவமனை நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
10. பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் வடிவேல் (53) என்பவர் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்த 10 பேரையும் கைது செய்த போலீசார் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
நள்ளிரவு வரை நீடித்த விசாரணையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு அழைக்கும் போது மருத்துவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் எனவும் தாங்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்