புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:05 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 1:17 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 1:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:16 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 1:16 pm

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 1:14 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 1:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 1:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01 pm

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 4:11 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
14 Posts - 45%
cordiac
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
265 Posts - 52%
heezulia
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
163 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
cordiac
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 5:13 pm

First topic message reminder :

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 F8UUreu

ஐபிஎஸ் அதிகாரி டூ ஆளுநர் - யார் இந்த ஆர்.என்.ரவி?


பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்என் ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்என் ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்என் ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்துள்ளார்.

இது தவிர மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றிய ஆர்என் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர். 2012ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராகியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Barrab10

கடந்த ஆட்சி வரை தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையில் பஞ்சமில்லா லஞ்ச லாவண்ய ஊழல் ஆட்சியில் திளைத்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவர்.

அதே கனவுடன் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது தற்பொழுது உள்ள திராவிட மாடல்? அரசு.

ஆட்சிக்கு வந்ததும் யாரையோ திருப்திப் படுத்த வேண்டிய நிர்பந்த நிலையில் ஈஷா யோகா அறக்கட்டளையை தவிடுபொடி ஆக்க வேண்டும் எனக் கிளம்பினார்கள். அதற்கு பதிலடி டெல்லியில் இருந்து கிடைத்ததும் ஈஷாவை விட்டுவிட்டு ஓடினார்கள்.

அடுத்து வழக்கம் போல் இந்து அழிப்பு பணியே பிரதான பணி என இதுவரை நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி ஆணவத்தின் உச்சியில் நின்று கொக்கரிக்கிறது திராவிட மாடல் அரசு.

இவற்றையெல்லாம் வெற்றிகரமாக சாதித்த ஊழலின் ஊற்றுக்கண்ணான திமுக அரசுக்கு ஊழல் செய்ய இடையூறாக இரண்டு முன்னாள் ஐ‌பி‌எஸ் அதிகாரிகள் வந்து இப்படி முட்டுக்கட்டை போடுவார்கள் என கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒருவர் அண்ணாமலை ஐ‌பி‌எஸ் மற்றொருவர் ஆர்.என்.ரவி ஐ‌பி‌எஸ்.

ஒருவர் ஊழல் செய்ய திட்டமிடும் பொழுதே இதில் ஊழல் செய்ய திட்டமிடுகிறார்கள் என அறிவித்து விடுகிறார். மற்றொருவர் இதுவரை செய்த ஊழல்களையெல்லாம் எப்படி செய்தார்கள் என அறிவிக்கிறார்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போன்ற இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட திராவிட மடல் அரசு, தனது மீடியா சக்தி, தனது அல்லக்கை அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள், அவ்வப்பொழுது நேரடியாகவும் இவர்களுடன் மோதிப்பார்க்கிறது. இதுவரை தோல்விகளே எஞ்சியுள்ளது திராவிட மாடல் அரசுக்கு....

ஆர்.என்.ரவி திமுகவிற்கு எதிராக அதிகம் பேசிய பேச்சின் மூலப்பொருள்.

நீட்
மும்மொழித் திட்டம்
புதிய கல்விக் கொள்கை
சனாதனம்
கால்டுவெல்
திராவிடம்
மசோதா நிலுவை

தற்போழுது முதலமைச்சர் குடும்பமே நேரடியாக ஆளுனருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த காரணமான ஆளுநரின் பேச்சு ஸ்டெர்லைட் போராட்டம்.

இறுதியாக (இன்று) திமுக ஆளுனருக்கு எதிராக எடுத்துள்ள வாசகம் "ஆளுநர் பதவி, அவசியமில்லாத பதவி"

இதுவரை ஆளுனருக்கும் திமுகவினருக்கும் என்ன பிரச்சனை, இனிமேல் வரப்போகும் அரசியல் யுத்தம் என அனைத்தையும் செய்தித் தொகுப்புகளாக இங்கு பார்ப்போம்.

அதற்கு முன் அவரது பேச்சுக்களின் சுருக்கத்தை ஒரு பார்வையிடுவோம்.


போராட்டம்:


* ``வெளிநாடுகளிலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி வருகிறது. அந்த நிதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் நம் நாட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல நாடுகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40% காப்பர் தேவையைப் பூர்த்தி செய்துவந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்.

* கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும்போது போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கும் வெளிநாட்டு நிதிகளே காரணம்.

*விழிஞ்சம் துறைமுகம் கொண்டுவரக் கூடாது என்ற எதிர்ப்புக்குப் பின்னாலும் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

*வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* `அக்னிபத்' திட்டம் புரட்சிகரமான திட்டம். அக்னிபத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில், தவறாகப் புரிந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதி இளைஞர்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்.”

திராவிடம்:


* ``பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்.

* ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களை வடஇந்தியர்கள் என்றும் தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் பிரித்து அடையாளப்படுத்திவிட்டனர். திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் அடையாளப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்தான்!

* சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல. அது 'டார்வினியன் மாடல்!' சில புத்திகூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுகிறார்கள். பிரதமர் மோடியின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல்தான் எல்லா அடிப்படைத் தேவைகளையும் எல்லோருக்கும் பாகுபாடின்றி அளிக்கிறது!

* நாம் அனைவரும் மாநிலரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி சமமான வளர்ச்சியை உருவாக்காது. மாநில அளவிலான வளர்ச்சி நம் நாட்டுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும்.

* அதிகாரத்துக்காக மொழியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் இங்குள்ள கட்சியினர் அரசியல் செய்கின்றனர்; நாட்டு மக்களின் பார்வையைக் குறுக்கிவிட்டனர். தற்போது, திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டுவருகிறது. ஆனால், தேசியகீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது!

* நீட் வருவதற்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது. நீட் விலக்கு மசோதா கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது, தமிழக சட்டப்பேரவை இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* மற்ற மாநில மாணவர்களைப்போல நம்முடைய தமிழக மாணவர்களும் பிற இந்திய மொழிகளைக் கற்க வழிசெய்ய வேண்டும், அதை மறுப்பது சரியல்ல!”

தமிழ்நாடு:


*``ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிறுத்திவைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்துக்காகவே நாகரிகமாக நிறுத்தி வைப்பு என்கிறோம். நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் பொருள்.

*சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமாகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஓர் அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்குப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

* தமிழகத்தில் பட்டியலின மக்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இன்னும் பல இடங்களில், பல பள்ளிகள், கோயில்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

*கோவையில் நடந்தது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல். இந்தப் பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து நான்கு நாள்கள் கழித்துதான் தமிழக அரசு என்.ஐ.ஏ-வுக்கு வழக்கை ஒப்படைத்திருக்கிறது. இந்த காலதாமதம் ஏன்?

*கோயம்புத்தூர் பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம்!

* பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமைகள், மறுவாழ்வு, மாணவர் சங்கம் எனப் பல முகமூடிகளை அணிந்துகொண்டு அது செயல்பட்டுவருகிறது. இந்தியாவைச் சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான், இராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடுவதற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பிவைத்திருக்கிறது. இது மிகவும் அச்சுறுத்தலான ஒரு பிரச்னை. இது குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புக்கு இது போன்ற வெளிநாடுகளில் இருந்தே நிதி வருகிறது.

*துப்பாக்கியைப் பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால்தான் பதில் சொல்ல வேண்டும்.”

திருக்குறள்:


*``மதபோதகரான ஜி.யு.போப் திருக்குறளிலுள்ள ஆன்மிக சிந்தனைகளை, பக்தி கண்ணோட்டத்தை நீக்கி பெரிய அவமதிப்பைச் செய்திருக்கிறார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப்பின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம்போல இருக்கிறது.

*திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பதுபோல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், அது ஓர் இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது.

*முதல் திருக்குறளிலுள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்திலிருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. திருவள்ளுவர் ஓர் ஆன்மிகவாதி!”

சனாதனம்:


*``சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்புச் சட்டம், சனாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது.

*ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது.

*`சனாதன தர்மம்’ என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது.

*இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும்.

*இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல! உலகின் மற்ற நாடுகளைப்போல இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கிறது.

*நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை.

*காரல் மார்க்ஸின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே நிரந்தர மோதல்களைக்கொண்டது. அந்தக் கோட்பாட்டின்படி, 'இல்லாதவர்கள்' மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாகப் பரவுகிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவுகளுக்கிடையேயும், அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது.

*நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டிப் பேசுகிறார்கள். "மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது" என்ற ஜனநாயகம் பற்றிப் பேசும்போது ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனைப் புகழ்கிறார்கள். இவையெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை.”

புதிய கல்வி கொள்கை:


* ``மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணம்.

*ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வுடன் கல்விக் கொள்கையை அணுகியிருக்கிறோம். இதுவரை நாம் தேசத்தைப் பார்த்த பார்வை சரியாக இல்லை; தற்போது இருக்கும் கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும்.

* புதிய கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாசாரம், பாரம்பர்யம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றைப் புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெடுக்க முடியும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

* புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னவென்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான். தயவுசெய்து தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்!”


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 24, 2023 11:36 am

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 HXhQSRw

தேசியக் கல்விக் கொள்கை: அமல்படுத்த தீவிரம் காட்டும் ஆளுநர் ஆர்.என் ரவி

.

நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில், கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதை, ஒரு சில மாநிலங்கள், ஏற்றுக் கொண்டபோதும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில், உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து, தனியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுடன் கடந்த 20-ம் தேதி ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கவர்னரின் செயலர் ஆனந்த் ராஜ், விஷ்ணு பட்டேல் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தனியார் பல்கலைகழகங்களை சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அந்தந்த பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தப்படுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆளுநரிடம் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கையை ஆர்வத்துடன் செயல்படுத்தும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை என்பது சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட கொள்கை என்பது மட்டுமல்லாமல் புரட்சிகரமான மாற்றத்திற்கான கொள்கை என ஆளுநர் ரவி கூறியுள்ளார். அதோடு தொழில்நுட்ப பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்ட ஆளுநர், இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்கள் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதனையடுத்து தேசிய விடுதலைக்கு போராடிய வீரர்கள் பலர் அறியப்படாமல் இருப்பதாகவும், அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தவும் துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து தேசிய கல்வி கொள்கையை ஆளும் தி.மு.க அரசு எதிர்த்து வரும் நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழக அரசியல் சூழலில் மீண்டும் ஆளுநர் vs தி.மு.க அரசு என விவாத பொருளாக மாறியுள்ளது.




ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 30, 2023 1:59 pm

அண்ணாமலை நடைபயணத்தில் இறங்கிவிட்டதால் அந்த குளத்தில் கல்லெறியும் வேலையினை கவர்னர் மறுபடி கையில் எடுத்துவிட்டார்,

அவ்வப்போது இப்படி எதையவது சொல்லிவிட்டு அவர் தன் போக்கில் தன் வேலைகளில் பரபரப்பாகிவிடுவார் ஆனால் ஒரு கும்பல் அவரை குறிவைத்து சாடும்.

சில நாட்களாக கொஞ்சம் ஓய்வில் இருந்த அவர் அந்த அண்ணாமலை கொடுத்த பெரிய பெட்டியினை உடைத்து ஊழல்புகாரை படிக்கும் போது தன்னை கொஞ்சம் ஆசுவாசபடுத்திகொள்ள நினைத்திருக்கின்றார்.

"ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆரியர் - திராவிடர் வாதம்' என ஒன்றை சொல்லிவிட்டார்,

இனி பாருங்கள் சில நாட்களுக்கு ஏய்ய்ய்ய்ய்ய்ய் ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய்ய்ய்ய்ய்ய்ய் என ஹரிபடத்தில் வரும் வில்லன்கள் போல ஆளாளுக்கு கிளம்புவார்கள்.

அவர் எல்லோரையும் ஒரு சுற்று பார்ப்பார், அத்தோடு அவர் மனபாரம் குறையும் உற்சாகம் ஏறும் சந்தோஷமாக தன் வேலையினை பார்க்க செல்வார்.

மன அழுத்தத்தை எப்படியெலலம் போக்கலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்கின்றது.... சிரி சிரி சிரி



ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 30, 2023 2:21 pm

'ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆரியர் - திராவிடர் வாதம்' கவர்னர் ரவி பேச்சு



''பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்து மற்றும் அவரின் சேவைகளை, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் பாடமாக எடுத்து செல்ல வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.

ஏகாத்ம மானவவாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நுால் தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை நடந்தது.

அதில் கவர்னர் ரவி, நுால் தொகுப்பை வெளியிட்டார். 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி, ஆராய்ச்சி நிறுவன தலைவர் மகேஷ் சந்திரா சர்மா, இரட்டைமலை சீனிவாசன் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் கொள்ளு பேத்தி நிர்மலா அருள்பிரகாஷ், இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் பங்கேற்றனர்.

குருமூர்த்தி பேசும்போது, ''தீன்தயாள் உபாத்யாயா, அரசியலில் பன்முக தன்மையுடன் இருந்தார். அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு உயர்ந்தவர். சமூகம் பற்றி மட்டுமல்ல, தனிமனிதன், நாடு பற்றியும் பேசினார்,'' என்றார்.

கவர்னர் ரவி பேசியதாவது:

கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

தீன்தயாள் உபாத்யாயா செயல்பாடுகளும், தத்துவங்களும் நம் அன்றாட வாழ்வில் வெளிப்பட்டபடி உள்ளது.

நம் நாடு முன்னோக்கி செல்ல பாடுபட்டவர் தீன்தயாள் உபாத்யாயா. அவர், அனைவரும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தினார்.

இந்த பிரபஞ்சத்தை, ஒரே பரமேஸ்வரன் தான் படைத்தார். நாம், பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் தான் இருந்தோம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பாக, 400 ஆண்டுகள் தான் அடிமையாக இருந்தோம்.

மேற்கத்தியவர்களிடம் ராணுவ பலம், தொழில்புரட்சி உள்ளிட்டவை இருந்தன. அவை, நம்மை விட உயர்ந்தது என்று நினைத்து, வேறு வழியில்லாமல் நாம் ஏற்று கொள்ளும் நிலை ஏற்பட்டது.

தற்போது, அதுவே நம் கலாசாரமாக மாறிவிட்டது.

அவர்களால் தான் நம்மிடையே பிரிவினை ஏற்பட்டது. ஆரியர், திராவிடர் என்ற வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. இது, பிரிவினையை ஏற்படுத்தியது.

தற்போது, மொழி பெயரில் சிறுபான்மை மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. பலர் பள்ளிகளை நடத்துகின்றனர். அதில் அவர்களின் தாய் மொழியில் கூட கற்று தருவதில்லை.

ஒரே நிலத்தில் இருந்தவர்கள் கூட, மொழியால் தங்களை இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கருதுகின்றனர். ஆங்கிலேயர்களால் பல தொல்லைகள் ஏற்பட்டன.

உலகளாவிய ஒருமைப்பாடு பற்றிய கூறிய ஒரே நாடு இந்தியா தான். இந்தியா, உலகிற்கு ஒளி காட்டுகிறது. நம் பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீன்தயாள் உபாத்யாயாவின் தத்துவம் இருக்க வேண்டும்.

அவரின் நுால் தொகுப்புகளை வெளியிடுவது மட்டும் அல்லாமல், மேலும் பல ஆய்வு மேற்கொண்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்து, ஆற்றிய சேவைகளை, பாடமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 06, 2023 6:51 pm

‘இனிய மாணவச் செல்வங்களே..!’ திரவுபதி முர்மு- ஸ்டாலின் முன்பு தமிழில் பேசிய ஆளுனர் ரவி



சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தமிழக ஆளுனரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தனது பேச்சை தமிழில் தொடங்கினார். ஆர்.என்.ரவி தனது பேச்சில், மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், நமது ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களே, மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு ஸ்டாலின் அவர்களே, அமைச்சர் டாக்டர் பொன்முடி அவர்களே, துணைவேந்தர் டாக்டர் கவுரி அவர்களே, மரியாதைக்குரிய அழைப்பாளர்களே, என் இனிய மாணவச் செல்வங்களே, இங்கு கூடி இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்! நமது குடியரசுத் தலைவரை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். இவ்வாறு தமிழில் பேசினார்.

மேலும், நண்பர்களே, இந்தச் சந்தர்ப்பத்தில் இன்று பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்த ஆளுனர், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். இறுதியாக தமிழில் வாழ்க தமிழ், வாழ்க பாரத், ஜெய்ஹிந்த் என்று கூறி தனது உரையை முடித்தார். ஆளுனரின் தமிழ் பேச்சை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் வியந்து பார்த்தனர்.

ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் பொறுப்பேற்றப்போது, விரைவில் தமிழ் கற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 3:11 am

இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழகம்


இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழகம்தான் என திருவண்ணாமலைக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் பாதையில் உள்ள தனியார் மண்டபத்தில் சாதுக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்என் ரவி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசிய போது ’பல நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இந்தியா ஆன்மீக சக்தியால் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

கிரிவலம் பாதையில் அசைவ உணவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்த அவர் இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம் தான் என்று கூறினார்.

ரிஷிகள் நாயன்மார்கள் தமிழகத்தில் தான் தாங்கள் யார் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தினர் என்றும் ஆர்.என்.ரவி பேசினார்.



ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 28, 2023 12:46 am


சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை; ஆர்.என்.ரவி


தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் தனியார் அமைப்பு சார்பில் 'சனாதன உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், "இந்தியா என்பது பாரத் என அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாம் உள்ளது. இலை இல்லாமல், கிளை இல்லாமல் மரம் வாழலாம், ஆனால் வேர் இல்லாமல் மரம் வாழ முடியாது. இப்படி மரத்தின் அடி வேர் போல் இருப்பது சனாதனம். சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நம் வேதங்களில் உள்ளது. சனாதன தர்மம் உலகின் தேவையாக உள்ளது. ஆனால் நாட்டை உடைக்கப் பார்ப்பவர்கள் சனாதனத்திற்கு எதிராக பேசுகின்றனர்

சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. நாம் அனைவரும் சமம் என்று நமது வேதம் கூறுகிறது. தமிழகத்தில் சனாதன தர்மம் வளம் பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர், திருநெல்வேலி மாவட்டம் மானூர் உள்ளிட்ட பல இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளில் சனாதனம் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், உங்களால் முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் சென்று அழித்துப் பாருங்கள். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர். ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை." இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.



ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக