புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
68 Posts - 41%
heezulia
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
319 Posts - 50%
heezulia
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
2 Posts - 0%
Barushree
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_m10தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 25, 2023 2:05 pm

தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை: பயன் தருமா? உணவு பற்றாக்குறையில் தள்ளுமா?


தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை 9b6d7060-cab7-11ed-adec-df892934c940

கடந்த வாரத்தில் தமிழக அரசு அங்கக வேளாண்மை கொள்கை ஒன்றை அறிமுகம் செய்தது. சென்ற இரண்டு ஆண்டுகளில் விவசாயத்துறை அதிகாரிகள், வல்லுநர்கள், அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் உள்ளிட்டவர்களைக் கொண்ட குழு இந்தக் கொள்கையை வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்தது.

தற்போது வெளியாகியுள்ள இந்தக் கொள்கையின் தேவை என்ன, எப்படி நடைமுறைப்படுத்தப்படும் விவசாயிகளின் வருமானம் உயர இந்தக் கொள்கை கைகொடுக்குமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் 2.66 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சான்றளிக்கப்பட்ட அங்கக வேளாண்மை நடைபெறுகிறது என்றும் அதில் தமிழ்நாட்டில் அந்த பரப்பளவு 31,629 ஹெக்டேராக உள்ளது என்றும் அங்கக வேளாண்மை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அங்கக வேளாண்மையில் மத்திய பிரதேசம் முதல் இடத்திலும் தமிழ்நாடு 14ம் இடத்திலும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டு காலத்தில், 4,223 மெட்ரிக் டன் அளவிலான ரூ.108 கோடி மதிப்பிலான அங்கக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதால், இந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் புதிய அங்கக வேளாண் கொள்கை மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முதலில், அங்கக வேளாண்மை என்ற சொல்லாடல் பலருக்கும் புதிதாகத் தெரிந்தது. இதுவரை இயற்கை வேளாண்மை அல்லது மரபுவழி விவசாயம் என்ற பயன்பாடுதான் புழக்கத்தில் உள்ளது. அதாவது, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதே இயற்கை வேளாண்மை என்ற புரிதல் இருந்தது.

ஆனால், உரங்களை சொந்த பண்ணையில் தயாரிப்பது, விவசாயம் செய்யும் இடத்திற்கு அருகே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விளைச்சல் எடுப்பதே இயற்கை வேளாண்மை என்றும் பண்ணைக்கு வெளியில் இருந்து சந்தையில் கிடைக்கும் உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்வது அங்கக வேளாண்மை என்றும் தமிழ்நாடு வகுத்துள்ள அங்கக வேளாண்மை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கக வேளாண்மையின் முக்கிய நோக்கம்



மண் வளத்தை அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது
ஏற்றுமதியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது
அங்கக வேளாண்முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குச் சான்றிதழ் பெறுவது
விவசாய பொருட்களில் நச்சுத்தன்மையை பகுப்பாய்வு செய்வது

அங்கக வேளாண்மைக்கான தேவை



தமிழ்நாடு அரசு அங்கக வேளாண்மையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. உடனடி மாற்றமாக இல்லாமல், ரசாயன உர விவசாயத்தில் இருந்து மெள்ள மீளும் நடவடிக்கையாக அந்த நகர்வு இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கக வேளாண்மைக்கான தேவை குறித்துக் கேட்டபோது, ''ரசாயன மருந்துகளைக் கொண்டு நடைபெறும் விவசாயம் காரணமாக, பூச்சிக்கொல்லி எச்சங்கள் உணவுச் சங்கிலியில் நுழைந்து உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதை உலக சுகாதார மையம் நிரூபித்துள்ளதால், அங்கக வேளாண்மைக்கு நகர்வது அவசியமாகிறது.

அதே நேரம், அந்த மாற்றத்தை தீவிரப்படுத்தாமல், இயல்பான மாற்றமாக அதனை கட்டமைக்க இந்த கொள்கை உதவும். விவசாயிகளுக்கு ஏற்ற விலை கிடைக்கவேண்டும், அதேநேரம் அந்த உணவுப் பொருளை வாங்கும் சக்தி மக்களுக்கு இருக்கவேண்டும் என்பதால், நீடித்த முறையில் இந்த மாற்றத்தை செயல்படுத்துவோம்,'' என விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகிறார்.

விவசாயிகளுக்கு என்ன நன்மை?



அங்கக வேளாண்மை கொள்கை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அரியனுர் ஜெயச்சந்திரன் என்ற விவசாயி, பிபிசி தமிழிடம் இந்த கொள்கை செயல்படுத்தப்படும்போது விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று விளக்கினார்.

கடந்த 23 ஆண்டுகளாக ரசாயனமின்றி நெல், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகிறார் ஜெயச்சந்திரன்.

''அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர்க்கடன், உயிர் உரங்கள், உயிரி இடுபொருட்கள் மானிய விலையில் தரப்படும் என்று அரசு முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் விதை வங்கி, மரபணு வங்கி, பண்ணை கழிவு, உரக் கூடங்கள் அமைக்கப்படும் என்பதால், தற்போது ரசாயன உர விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூட தங்களது நிலத்தில் அங்கக வேளாண்மையை ஒரு சிறு நிலப்பரப்பில் தொடங்க முடியும்.

ரசாயனமில்லா உணவுப்பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு அங்கக வேளாண் பொருட்களுக்குச் சான்றளிக்கும் நடைமுறையைக் கொண்டுவருவதால், சர்வதேச சந்தையில் எங்கள் விளைபொருட்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்,'' என்கிறார் விவசாயி ஜெயச்சந்திரன்.

தமிழ்நாட்டில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், விளைச்சல் பொருட்களைச் சந்தைப்படுத்த சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல இடங்களில் நேரடியாகப் பொருட்களை விற்பது, சிறப்பு அங்காடி நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும் என விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகிறார்.

மேலும் எல்லா மாவட்டங்களிலும் அங்கக உணவுத் திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்தும் என்றும் அங்கக வேளாண்மை கொள்கையின் செயல்பாடுகள் ஐந்து ஆண்டுகள் கழித்து விவசாயிகளின் வருமானம் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு சீராய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அங்கக வேளாண்மைக்கு மாறும் நேரமா?



தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள முயற்சி அங்கக வேளாண்மைக்கு மாறும் முதல்படி என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, அதற்கான தேவையும் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார் விவசாயிகள் நல செயற்பாட்டாளரும், அங்கக வேளாண்மை கொள்கை வரைவு குழுவில் இடம்பெற்ற வல்லுநருமான அனந்து.

''உலகம் முழுவதும் ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. ஆனாலும், ரசாயன உரங்களை முற்றிலும் புறக்கணித்து அங்கக வேளாண்மைக்கு மாறுவது என்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி ரூ.38,904 கோடியில் ரூ.26 கோடி மட்டும் அங்கக வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இது சிறு ஒதுக்கீடாகத் தெரிந்தாலும், இந்த ஆண்டு நாம் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளோம். கிராமம், நகரம் என எல்லா பகுதிகளிலும் விழிப்புணர்வு அதிகரிக்கும். மக்களின் தேவையை ஒட்டி உள்நாட்டுச் சந்தையிலும் அங்கக வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்,''என்கிறார் அனந்து.

அங்கக வேளாண்மைக்கு மாறுவது குறித்து விளக்கிய தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன், படிப்படியான மாற்றம்தான் தேவை என்றும் அதிரடியான மாற்றம் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்.

''பல கிராமங்களில், விவசாயிகள் தங்களது நிலத்தில், ஒரு சிறு பகுதியில் தங்களது தேவைக்கான பொருட்களை அங்கக வேளாண்மை முறையில் பயிரிடுகின்றனர்.

தற்போது, அரசாங்கம் கொடுக்கும் ஊக்கம் மேலும் அந்த நிலப்பரப்பை ஓரளவு அதிகரிக்க உதவும். உடனடியாக அங்கக வேளாண்மைக்கு மாறினால், உணவுப்பொருள் உற்பத்தி பலமடங்கு குறைந்துவிடும்.

எடுத்துக்காட்டாக, ஒரு ஏக்கர் நிலத்தில், ரசாயன முறையில் 40மூட்டை நெல் விளைந்தால், அங்கக வேளாண் முறைப்படி 15மூட்டைகள்தான் எடுக்கமுடியும்.

குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் ரசாயன முறைக்கு இணையான உற்பத்தியை அங்கக வேளாண் முறையில் பெறமுடியும் என்பதால், அதிரடியாக மாறுவதற்குப் பதிலாக, உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வழியில் நடைமுறைப்படுத்துவதுதான் நீடித்த மாற்றமாக இருக்கும்,' 'என்கிறார் இளங்கீரன்.

பிபிசி தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 25, 2023 2:09 pm

இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா - உண்மை என்ன?


இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவசரநிலை அறிவிக்கப்பட்டபின், அங்கு உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. செய்கை உரப் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டு, இயற்கை வேளாண்மைக்கு மாறியது, இந்த உணவு பஞ்சத்திற்கான காரணம் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பும், உணவு பஞ்சத்திற்கான ஒரு காரணம் என கூறப்பட்டு வருகின்றது. இந்த விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை கடந்த 30ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியை நாடாளுமன்றம் திங்களன்று வழங்கியிருந்தது.

இலங்கையில் செய்கை உர பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 6ம் தேதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், செய்கை உர இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, இலங்கையில் திடீரென உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடந்த மே மாதம் முதல் சுமார் ஒரு மாத காலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

எனினும், வர்த்தமானி அறிவித்தல் காரணமாக இவ்வாறான உர தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், செய்கை உரங்களை இறக்குமதியாளர்கள் பதுக்கி வைத்தமையே, உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம் எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

செயற்கை உரமே வேளாண்மைக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது என்கிறார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட உரத்தை உடனடியாக வெளியில் கொண்டு வந்து, விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்ததன் ஊடாக, விவசாய நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர முடிந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அதாவது இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றாமல், முன்பு இருந்தது போலவே செயற்கை உரப் பயன்பாடு பழைய நிலைக்கே வந்தது.

தேவைக்கு அதிமாக ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி



2020ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் 13 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்பட்ட விவசாயத்தின் ஊடாக, 5.3 மில்லியன் மெட்ரிக் டன் நெல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதனூடாக 3.2 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி கிடைத்துள்ளது.

இலங்கையின் மொத்த அரிசி தேவையானது, ஆண்டுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் என்ற நிலையில், நாட்டின் தேவைக்கு மேலதிமாக சுமார் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது என்கிறது இலங்கை அரசு.

இந்த நிலையில், 2021ம் ஆண்டும் அரிசி செய்கை செய்யப்படுகின்றமையினால், உள்நாட்டு பயன்பாட்டிற்கான அரிசி தம்வசம் உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகின்றது.

விவசாய அமைச்சின் தகவல்களுக்கு அமைய, நாட்டில் தற்போது எவ்விதத்திலும் அரிசிக்கான தட்டுப்பாடு கிடையாது.

எனினும், 100 ரூபாய்க்கு அரிசியை விற்பனை செய்யக்கூடிய நிலைமை காணப்பட்ட போதிலும், 150 ரூபாய் முதல் 225 ரூபாய் வரை அதனை வர்த்தகர்கள் விற்பனை செய்துள்ளதாக விவசாய அமைச்சு கூறுகின்றது.

அதேபோன்று, நாட்டின் அன்றாட தேவைக்காக நாளாந்தம் நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் கிலோகிராம் மரக்கறி விநியோகிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டின் எந்தவொரு இடத்திலும் மரக்கறிக்கான தட்டுப்பாடு கிடையாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நாட்டின் கடந்த காலங்களில் சர்ச்சையை தோற்றுவித்த சர்க்கரை (சீனி) வியாபாரம் குறித்தும், பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இலங்கையில் சர்க்கரை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள், ஒரு கிலோகிராம் சர்க்கரையை 85 ரூபாய்க்கு இறக்குமதி செய்துள்ள நிலையில், அந்த சர்க்கரை சந்தையில் 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

அவசரகால நிலைமை பிரகடனம்



இலங்கையில் கடந்த ஓரிரு மாத காலங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அந்த பொருட்களுக்கான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக சமையல் எரிவாயு, பால் மா ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவிய அதேவேளை, அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கான விலைகள் பல மடங்குகளாக அதிகரித்திருந்தன.

இவ்வாறான நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கிலேயே, அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமல்படுத்தியிருந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எந்த ஒரு காரணத்துக்காகவும் அவசரநிலையை அறிவிக்க இலங்கை ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது

இந்த அவசரகால அறிவிப்பின் பின்னர், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல என்ற ராணுவ அதிகாரியொருவரையும் ஜனாதிபதி நியமித்திருந்தார்.

இதனையடுத்து, அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு அமைய, பல்வேறு சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தும் பல களஞ்சியச் சாலைகளில் சட்டவிரோதமான முறையில், சர்க்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழு கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த முதலாம் தேதி வரை நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சுமார் 29,900 மெட்ரிக் டன் சர்க்கரை கைப்பற்றப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

கைப்பற்றப்பட்டு, அரசுடமையாக்கப்பட்ட சர்க்க்கரை, கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களில் ஊடாக, நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரான காலத்தில் சந்தையில் தற்போது, ஒரு கிலோகிராம் சர்க்கரை வகைகளின் விலைகள் 116 ரூபாய் முதல் 128 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோன்று, அரிசி வகைகளின் விலைகள் ஒரு கிலோகிராம் 95 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது நாட்டில் சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடு ஓரளவு குறைவடைந்து, மக்களுக்கு முன்னைய விலையை ஒத்தமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை காண முடிகின்றது.

எனினும், பால் மா உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு இன்றைய நிலைமையிலும் தட்டுப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் உணவு பஞ்சம் நிலவுவதாக ஏன் பிற நாடுகள் நினைப்பது ஏன்?



இலங்கையில் தற்போது கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தொடர்ச்சியாகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

எனினும், இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை என்பது, இலங்கையிலுள்ள அனைத்து தரப்பினரும் அறிந்த ஒரு விடயமாக காணப்படுகின்றது.

உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தியில் குறிப்பிடப்படுகின்ற விதத்தில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை என்ற போதிலும், பதுக்கல் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மாத்திரமே நிலவியது.

சர்வதேச ஊடகங்கள் ஏன் இலங்கையில் உணவுப் பஞ்சம் அல்லது பட்டணி நிலவுவதாக செய்திகள் வெளியிட்டன என்பது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் துறை பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில், அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் என்ற வசனம் பயன்படுத்தப்பட்டமையே, இந்த ஊடக அறிக்கைகளுக்காக காரணம் என அவர் கூறுகின்றார்.

அவசரகால விதிமுறைகள் என்பது, சோமாலியா போன்ற நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமையை, ஒத்ததான பொருளை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பட்டினி, பஞ்சம் ஆகியன நிலவுகின்ற சந்தர்ப்பத்திலேயே, உலக நாடுகள், இவ்வாறான அவசரகால நிலைமை அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி, உணவு விநியோகத்தை சீர் செய்வதற்காக அரசாங்கம், இவ்வாறான அவசரகால நிலைமையை அறிவித்தமையை, உலக நாடுகள் பட்டினி, பஞ்சம் போன்ற பொருளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பஞ்சம் மிகுந்துள்ள நாடுகளில் வாழும் மக்கள், உணவுக்காக கையேந்தும் நிலைமையை எதிர்நோக்கும் போதே, இவ்வாறான அறிவிப்புக்கள் வெளியாகும் என கூறிய அவர், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது அமலில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, உணவு தட்டுப்பாட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும் என அவர் கூறுகின்றார்.

நாட்டில் கேள்விக்கு ஏற்ற உற்பத்தியை, உள்நாட்டில் உறுதிப்படுத்தி பின்னர், இவ்வாறான தடைகளை அறிவித்திருந்தால், அது சிறந்ததாக அமைந்திருக்கும் என அவர் கூறுகின்றார்.

'6 மாத காலம் தேவை'



நாட்டில் தற்போது காணப்படுகின்ற சட்டத்தின் பிரகாரம், அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை மாத்திரமே அபராதம் விதிக்க முடியும் எனவும், அதனை அவர்கள் இலகுவாக செலுத்தி விடுவார்கள் எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

இதனால், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், அதனை திருத்துவதற்கு சுமார் 6 மாத காலம் தேவை என அவர் கூறுகின்றார்.

அவ்வாறு 6 மாத காலம் தாமதித்து, சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் போது, குறித்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் பாரிய லாபத்தை ஈட்டுவதுடன், பொதுமக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி விடுவார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதனாலேயே, அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தி, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்தார் என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனையில் மாபியா நிலைமையொன்று உருவாகியுள்ளமையே, உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என அவர் கூறுகின்றார்.

சில அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு தடை



அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இலங்கையில் கடுமையாக அதிகரித்துள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இலங்கையில் கடுமையாக அதிகரித்துள்ளன.

இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சில உணவு பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், அவ்வாறான பொருட்களின் விலைகளும் பல மடங்காக அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.

உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலேயே, மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டதாக அந்த காலப் பகுதியில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

மக்கள் சிறிது காலம் அர்ப்பணிப்பு செய்தால், உள்நாட்டு விளைச்சல்களை அதிகரிக்க முடியும் என அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஒரு கிலோகிராம் மஞ்சளின் விலை தற்போது 5500 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதை காண முடிகின்றது.

எனினும், மஞ்சள் இறக்குமதிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என ஆளும் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மேலும் பல பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நாட்டில் தொடர்ந்தும் நீடித்த வண்ணமே உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக