புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி? Poll_c10பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி? Poll_m10பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி? Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி? Poll_c10பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி? Poll_m10பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி? Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 31, 2023 8:17 pm

பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி? Colorectal-cancer

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

எந்தவித காரணமும் இன்றி ரத்தத்துடன் மலம் வெளியேறுவது. ரத்தம் பிரகாசமான சிவப்பு அல்லது அடர் சிவப்பாக இருக்கலாம்.

அடிக்கடி கழிவறைக்குச் செல்வது மற்றும் மலம் அதிக திரவமாகவோ அல்லது கடினமாகவோ வெளியேறுவது என குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்.

வயிறு நிரம்பியிருக்கும் போது அடிவயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர்தல்.

உடல் எடை குறைதல்.

மலம் கழித்த பிறகும் முழுமையாக மலம் கழிக்காத உணர்வு ஏற்படுதல்.

வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது மயக்கத்தை உணர்தல்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அவை குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், மூன்று வாரங்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது.

ஏனென்றால் தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம்.

சில நேரங்களில் பெருங்குடல் புற்றுக்கட்டிகள் குடல் வழியாக கழிவுகள் வெளியேறுவதைத் தடுத்துவிடும். இதன் காரணமாக தீவிர வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்படும்.

இது மாதிரியான சூழல்களில் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

நம் மலத்தை எப்படி கவனிப்பது?

நீங்கள் மலம் கழிக்கும் போது வெளியேறும் மலம் எப்படி உள்ளது என்பதை நன்கு கவனியுங்கள். அது குறித்துப் பேச வெட்கப்படக் கூடாது.

மலத்தில் ரத்தம் ஏதேனும் உள்ளதா, ஆசன வாயின் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுகிறதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

மலத்துடன் அடர் சிவப்பு ரத்தம் வெளியேறுவதற்கு மூலம் போன்ற ஆசன வாயில் உள்ள ரத்த நாளங்களின் வீக்கம் காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், இது பெருங்குடல் புற்றுநோய் காரணமாகவும் ஏற்படலாம்.

மலத்தில் உள்ள அடர் சிவப்பு அல்லது கருப்பு ரத்தம் குடல் அல்லது வயிற்றில் இருந்து வெளியேறலாம். இதுவும் கவலைக்குரிய ஒன்றே.

குறைந்த திடத்தன்மையுடன் மலம் வெளியேறுதல், அடிக்கடி மலம் கழித்தல் போன்ற குடல் இயக்க செயல்பாட்டில் மாற்றங்களை நீங்கள் கவனிக்கலாம்.

பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம்?

பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து யாரிடமும் தெளிவான பதில் இல்லாவிட்டாலும், சாத்தியமுள்ள சில காரணங்களைப் பார்ப்போம்.

வயதாகும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கீழ்கண்ட காரணங்களால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம்.

சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் உண்பது.

புகைபிடிக்கும் பழக்கம் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

அதிகப்படியான மது அருந்தும் பழக்கம்.

அதிக எடை அல்லது உடல் பருமன்.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்குப் பரவுமா?

பெருங்குடல் புற்றுநோய் பரம்பரை நோய் அல்ல. ஆனால், உங்கள் உறவினர் யாருக்காவது 50 வயதிற்கு முன்னதாக இந்த நோய் கண்டறியப்பட்டிருந்தால் அதை மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

லிஞ்ச் சிண்ட்ரோம் போன்ற சில மரபணு நிலைமைகள், பெருங்குடல் புற்றுநோயை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது குறித்து மருத்துவர்கள் அறிந்திருந்தால் இதையும் தடுக்கலாம்.

ஆபத்தைக் குறைப்பது எப்படி?

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் பாதிக்கும் மேற்பட்ட குடல் புற்றுநோய்களை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதிக உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து மிகுந்த மற்றும் கொழுப்பு குறைந்த உணவை எடுத்துக்கொள்வது மற்றும் ஒரு நாளுக்கு ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் அருந்துவது ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

ஏதேனும் கவலைக்குரிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பெருங்குடல் புற்றுநோயை எப்படி கண்டறிவது?

ஒரு நீண்ட குழாயில் கேமராவைக் கொண்டு முழு குடலின் உட்பகுதியையும் ஆய்வு செய்யும் கொலோனோஸ்கோபி செயல்முறை மூலமாகவோ அல்லது பகுதி அளவு ஆய்வு செய்யும் சிக்மாய்டோஸ்கோபி செயல்முறை மூலமாகவோ பெருங்குடல் புற்றுநோய் இருப்பதை உறுதிசெய்யலாம்.

ஆரம்பக் கட்டத்தில் பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர்வாழ்வார்கள். தாமதமாக கண்டறியப்பட்டவர்களில் 44 சதவிகிதத்தினரே ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர்வாழ்வார்கள்.

பிரிட்டன் தரவுகளின்படி, கடந்த 40 ஆண்டுகளில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் இருமடங்காக அதிகரித்துள்ளன. 1970களில் ஐந்தில் ஒருவர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர் வாழ்ந்த நிலையில், தற்போது பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்கின்றனர்.

என்ன மாதிரியான சிகிச்சைகள் உள்ளன?

தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் பெருங்குடல் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.

தனிநபருக்கு ஏற்ப அளிக்கும் சிகிச்சைகள் முறைகள் தற்போது அதிகரித்துள்ளன.

இந்த அணுகுமுறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் ஆண்டுகள் உயிர்வாழ்வதை இது உறுதிசெய்கிறது.

புற்றுநோயின் நிலைகள் என்ன?

முதல் நிலை:

சிறிய அளவில் உள்ளது. இன்னும் பரவவில்லை.

இரண்டாம் நிலை:

பெரிய அளவில் உள்ளது. இன்னும் பரவவில்லை.

மூன்றாம் நிலை:

சுற்றியுள்ள திசுக்களுக்கு பரவியுள்ளது.

நான்காம் நிலை:

உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்குப் பரவி, இரண்டாம் நிலை கட்டியை உருவாக்குகிறது.

குறிச்சொற்கள் #பெருங்குடல்_புற்றுநோய்  #Colorectal_cancer #புற்றுநோயின்_அறிகுறிகள் #புற்றுநோய்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 31, 2023 8:54 pm

புற்றுநோய் ஆபத்தை காற்று மாசு அதிகரிக்குமா?

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் உயிரணுக்களில் இருந்தே புற்றுநோய் பரவும் என வல்லுநர்களால் கருதப்படுகிறது. அந்த உயிரணுக்கள் உச்சபட்ச நிலையை அடையும் வரை, அவற்றின் மரபணுக் குறியீடுகளில், அல்லது டி.என்.ஏ-வில், தொடர்ந்து மரபணு பிறழ்வுகள் நிகழும். பின்னர் இது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து புற்றுநோயாகிறது.

எனினும், இதுவரையிலான இந்தப் பார்வைக்கு இப்போது சிக்கல் உண்டாகியுள்ளது. ஏனெனில், ஆரோக்கியமான திசுக்களிலும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் மரபணு பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய, காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் டி.என்.ஏ-வை சேதப்படுத்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது?

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாறுபட்ட பார்வையை முன்வைத்துள்ளனர். ஏற்கனவே அணுக்களின் டி.என்.ஏ-வில் உள்ள சேதாரங்கள், நாம் வளரும்போதும், மூப்படையும்போதும் தீவிரமாகின்றன. அதை புற்றுநோய் காரணியாக மாற்ற ஓர் உந்துவிசை தேவைப்படுகிறது.

புகை பிடிக்காதவர்களுக்கும் ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதை ஆராய்ந்ததன் மூலம் அது கண்டறியப்பட்டது. பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமே உண்டாகிறது. எனினும், பிரிட்டனில் 10ல் ஒருவர் காற்று மாசால் நுரையீரல் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர்.

மனித ரோமத்தைவிட குறைவான விட்டத்தை உடைய PM2.5 எனப்படும் துகள்மப் பொருளால் உண்டாகும் காற்று மாசில் க்ரிக் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர்.

தொடர்ந்து மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கீழ்வருவனவற்றை அவர்கள் கண்டறிந்தனர்.

புகை பிடிக்காமலேயே நுரையீரல் புற்றுநோய் உண்டாவது காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் வெகுவாக உள்ளது.

பி.எம் 2.5 துகள்களை சுவாசிப்பது இன்டெர்ளுகின் - 1 - பீட்டா (Interleukin 1 beta) எனும் எச்சரிக்கை வேதிப்பொருள் நுரையீரலில் சுரக்க வைக்கிறது.

இது நுரையீரலில் அழற்சியை உண்டாக்குவதுடன், அதில் உள்ள அணுக்கள் சேதாரங்களை சரிய செய்யத் தூண்டுகிறது.

50 வயதான ஒருவரின் நுரையீரலில் ஆறு லட்சம் அணுக்களுக்கு ஓர் அணு எனும் விகிதத்தில் புற்றுநோயை உண்டாக்கும் வல்லமை உடைய மரபணுப் பிறழ்வு உள்ளது.

இந்தத் தன்மைகள் வயது மூப்படையும்போது உண்டாகின்றன. ஆனால், எச்சரிக்கை வேதிப்பொருள் சுரந்து, புற்றுநோய் உண்டாக்குபவையாக மாறும் வரை அவை நலம் மிக்க அணுக்களாகவே தெரிகின்றன.

காற்று மாசால் உண்டாகும் புற்றுநோய் பாதிப்புகளை மருந்துகள் மூலம் தடுக்க, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், தற்போதைய இந்த ஆய்வுகள், காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் மூலம் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிய உதவியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் வாழும் மக்களில் 99 சதவீதம் பேர் காற்று மாசால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், புகை பிடிக்காதவர்களுக்கும் எதனால் புற்றுநோய் வரும் என்ற உண்மை நிலையை இந்த ஆய்வு முடிவுகள், வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும் க்ரிக் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் எமிலியா லிம் குறிப்பிடுகிறார்.

மரபணு பிறழ்வுகளால் புற்றுநோய் சாத்தியமா?

மரபணு பிறழ்வுகள் மட்டுமே புற்றுநோயை உண்டாக்கப் போதாது என்றும் இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. அவை புற்றுநோயை உண்டாக்க கூடுதல் காரணிகள் தேவை.

புற்றுநோய் கட்டிகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த புரிதலை மறு சிந்தனைக்கு உள்ளாக்கியதே, தமது ஆய்வகத்தில் கண்டறியப்பட்டதில் மிகவும் வியப்பளிக்கும் வகையில் இருப்பது என்று பேராசிரியர் ஸ்வாண்டன் கூறுகிறார்.

நீங்கள் அதிகம் காற்று மாசு உள்ள பகுதியில் வசிக்கும்போது புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மருந்து எடுத்துக்கொள்வது முற்றிலும் பலனளிக்காது என்பது தெரியவந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக