புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
7 Posts - 58%
heezulia
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
8 Posts - 2%
prajai
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_m10ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 30, 2023 2:45 pm

ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்... Jai-sriram

சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் என்பதன் தத்துவ வடிவம் என்ன்ன என்பதை இப்படி சொன்னார்

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

ராமனை போல ஒருவனை காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் , ஆழமாக இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் , வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும், நீங்கள் இன்னும் ஒரு ராமனை காணவே முடியாது

அவன் ஒப்பற்றவன். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய ஒருவனை காணமுடியும்

இந்துக்கள் தர்மகொடிநாட்டி ஆட்சி செய்யும் போது ராமன் உலகெல்லாம் கொண்டாடபடுவான், அதே இந்துக்கள் நான்கு பேராக சுருக்கபட்டாலும் அவர்கள் நடுவில் ராமன் வாழ்ந்துகொண்டிருப்பான், அவன் இந்திய தர்மத்தில் முழுக்க கலந்த நாயகன்

அது முழுக்க உண்மையானது

அதர்மம் தலைதூக்கும் பொழுதெல்லாம் அவதாரமாய் வந்து அதை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது என்பது பரமாத்மா ஏற்றுகொண்ட சுதர்மம்

பூமியில் அக்கிரமங்கள் மிகும்பொழுதெல்லாம் அதை சரியாக செய்யும் பரமாத்மா தன் 7ம் அவதாரமாக ராமனாக இறங்கி வந்தார்

அக்காலம் கடுமையானதாய் இருந்தது, வாலி முதலான கூட்டம் ஒருபுறம், தாடகை முதலான அரக்கியர் ஒருபுறம், யாராலும் வீழ்த்தமுடியா ராமன் ஒருபுறம் இன்னும் எண்ணற்ற அரக்கரும் அங்காரர்களும் கொடியவர்களும் உலகை படாதபாடு படுத்திய நேரமிது

உதாரணம் சொல்லும் அளவு ஒரு நல்லவன் வரமாட்டானா, எக்காலமும் அவன் பெயர் சொல்லும்படி ஒரு தர்மவீரன் உருவாக மாட்டானா என பிரபஞ்சமே ஏங்கிய நேரமது

அப்பொழுதுதான் ராமபிரான் அவதரித்தார்

அவதாரங்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்லை வந்தவைதான், ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு நோக்கம் உண்டு, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ராம அவதாரம்

ராமவழிபாடு என்பது கம்பன் தொடங்கிவைத்தது அல்ல, அது பற்றிய குறிப்புகள் புறநானூறு முதல் மகா பண்டைய இலக்கியம் வரை உண்டு, முருக வழிபாடு போலவே ராமன் வழிபாடும் இங்கு மகா பழமையானது

அயனம் என்றால் வழி என பொருள், ராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று.
கம்பன் இப்படி சொல்கின்றான் அவன் வரியில் தொடங்கலாம்

"மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்"

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம், அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது வால்மீகி சொன்னது

ராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடும் தாங்காது, உலகமும் தாங்காது. காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் , அவன் புகழை மானிட குலம் பாடுவற்கும் காரணம் வாழ்வின் ஒவ்வொரு பக்கதுக்கும், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணம்

அவன் வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தான், உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான். மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டினான்.

அப்படி சோகமும் பரிதாபமும் கண்ணீரும் நிறைந்த வாழ்வு அவனுடையது, ஆயினும் ஒரு நொடியிலும் அவன் தன்நிலை தவறவில்லை

மானிடன் எப்படி கர்மமே சுதர்மமாக கொண்டு வாழவேண்டும் என வாழ்ந்த தத்துவம் அவனுடையது

சகோதர்களுடன் தாய்களுடனும் தந்தையின் ஒப்பற்ற பாசத்தில் வளர்ந்தவன் அவன், அவனின் குருமார்களுக்கு அருமை சீடன் அவன்

அந்த வில்லை கூட சீதைக்காக அவன் உடைக்கவில்லை, விசுவாமித்திரர் சொன்னார் என்பதற்காக‌ உடைத்தான் சீதைக்கு மாலையிடுவதை கூட‌ தசரதனே முடிவு செய்வான் என ஒதுங்கி நின்றான் ராமன்

ஆம் சீதை ராமனுக்கு நிச்சயம் செய்யபட்டவள் அல்ல, ஆனால் அவள் ராமனை மணந்து அவன் வழியேதான் ராவணனுக்கு முடிவுகட்ட வேண்டும் எனும் தர்மத்தின் திட்டம் விசுவாவித்திரர் மூலம் அழகாக ஆடியது

பெரும் அழகியும் அரசியுமான சீதையினை அடையும் பந்தயத்தில் வென்றபின்பும் தந்தையினையே அவன் நோக்கினான்

தந்தை அனுமதித்தபின்பே அந்த சீதையினை தன் ஒரே மனைவியாய் ஏற்றும் கொண்டான்

மறுநாள் பட்டாபிஷேகம் எனும் நிலையில் அவன் அரசு மறுக்கபட்டபொழுது, அவன் கானகம் செல்லவேண்டும் என தசரதன் சொன்னபொழுது "யாருக்கு என் அரசை கொடுக்கின்றேன்? என் தம்பிக்குத்தானே" என பெருமையாக சொல்லி கானகம் புகுந்த அவனை அயோத்தி வணங்கி நின்றது

ராமன் சென்ற இடமெல்லாம் தர்மங்கள் அரங்கேறின, அரக்கர் கூட்டமும் ஆணவமும் ஒழிந்தது, தர்மத்தை அவன் அப்படி காத்தான்

பெண்கள் மேல் அவனுக்கு தனி இரக்கம் இருந்தது,

சூர்ப்பநகையின் காதலை அவன் மறுத்து அவளுக்கு போதனையே செய்தான், இது முறையன்று என் இயல்புமன்று என எவ்வளவோ போதித்தான் .

(ஆனால் சீதை இருக்கும்வரை தன் காதலை ராமன் ஏற்கபோவதில்லை என அவளை கொல்ல முயன்ற சூர்ப்பநகையினை லக்குவனே மூக்கறுத்து விரட்டினான்)

தாடகையினை கொல்லுமுன் கூட விசுவாமித்திரரிடம் ஒரு பெண்ணை கொல்வது தர்மமாகாது என அஞ்சி வேண்டுகின்றான் , "மானிட குலத்துக்கு எதிரான , தர்மத்துக்கு எதிரான அக்கிரமிகளில் ஆண்பெண் பேதமில்லை" என அவன் குரு விளக்கிய பின்பே அவன் அவளை வதைக்கின்றான்

கல்லான அகலிகை அவனால் உயிர்பெற்றாள் அப்பொழுதும் ஏற்க மறுத்தான் அவள் முனி கணவன் "கவுதமா முக்காலமும் உணர்ந்த உனக்கே எது பொய்கோழி என தெரியவில்லையே, அவளுக்கு எப்படி வந்தவன் முனிவன் என தெரியும்?" என அவன் சொன்னபொழுது மன்னிப்பு கேட்டு அகலிகையினை ஏற்றான் முனிவன்

மானிடருக்கு இருக்க வேண்டிய மிகபெரும் குணம், தர்மமும் நியாயமும் கலந்த குணம் அவனுக்கு இருந்தது, அது எல்லா உயிர்மேலும் அன்பு.

ஆம் குரங்குகளை தனக்கு சமகாக அமர்த்தியவன் அவனே

கழுகு என்றாலும் ஜடாயுவுக்கு தன் உடன்பிறந்தவன் போல் காரியம் செய்தவனும் அவனே

தன்னை அறியாமல் அம்பால் குத்தபட்ட தேரைக்கும் அவன் கண்ணீரோடு அருள்பொழிந்தான் என்கின்றது ராமாயணம்

இதனாலே வானர கூட்டம் அவன் அடிபணிந்தது, அனுமன் தான் கண்ட மனித கடவுளாகவே அவரை வணங்கினான், கடைசி வரை கூடவே இருந்தான்

அந்த இலங்கை போரில் கூட ராவணன் திருந்த கடைசி வரை சந்தர்ப்பம் கொடுத்தான், "இன்று போய் நாளை வா" என அவன் சொன்னது கடைசி இரவிலாவது அவன் திருந்த்மாட்டானா எனும் ஒரு நம்பிக்கையன்றி வேறு என்ன?

ராமனின் விஷேஷ குணங்களில் ஒன்று அரசுக்கு ஆசைபடாதது,

முதலில் தம்பி பரதனுக்கு ஆட்சியினை விட்டு கொடுத்தான்

வாலியினை வீழ்த்தியபின் கிஷ்கிந்தா ராமனுக்கே சொந்தம் ஆனால் சுக்ரீவனுக்கு விட்டு கொடுத்தான்

லங்காபுரியினினை வென்றபின் நிச்சயம் அதன் அரசன் ராமனே, ஆனால் விபீஷ்ணனுக்கு விட்டு கொடுத்தான்

ராவணனை அவன் வென்றபின் மண்டோதரியினை அபகரித்து பழிவாங்கியிருக்கலாம் ஆனால் மிக மிக கண்ணியமாக கடந்து சென்றான் அந்த ஞானமூர்த்தி

சென்ற இடமெல்லாம் தர்மத்தை வாழவைத்து அரியணை ஏற்றிவைத்துவிட்டு வந்தான் அந்த ஞான‌மூர்த்தி
தன்னை நம்பியோயோரை எல்லாம் காத்தான், யாரெல்லாம் அக்கிரமத்தின் கொடுமை தாங்காமல் அடைக்கலம் என வந்தார்களோ அவர்களை எல்லாம் அரணாக நின்று காத்தான்.

இலங்கை போருக்கு பின்பே அவன் அயோத்தி அரசனாகின்றான், இன்றுவரை ராமராஜ்யம் என்ற அவன் ஆட்சிமுறை புகழபடுகின்றது என்றால் அவனின் ஆட்சிதிறன் அப்படி

கவனியுங்கள், ஒரு சலவை தொழிலாளி சீதை யோக்கியமா? என்றவுடன் அவன் தலையினை ராமன் சீவவில்லை, சிறையிடவில்லை, நாடுகடத்தவில்லை மாறாக அவன் தன் குடிமகன் தன் அரசின் கீழ்வாழ்பவன் அவன் நம்பிக்கையினை பெறுவது அரசனின் கடமை என்றே சீதையினை தீகுளிக்க சொன்னான்

அவனுக்கு சீதைபற்றி தெரியும், அவளின் கற்பு பற்றியும் அவளுக்கு இருந்த சக்தி பற்றியும் தெரியும்

இதனால் அவளை முழுக்க நம்பி அதே நேரம் தன் நாட்டு குடிமக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே சீதையின் புகழ் அறியபட வேண்டும் என்பதற்காகவே தீயிலிறங்க சொன்னான்

அங்கு நெருப்பே அந்த தாயினை வணங்கியது

உலகிலே அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என சொன்ன அரசன் அவனே, அது உலகெல்லாம் புகழ்பெற்ற வரியாய் மாறிற்று, காலம் காலமாக தொடர்ந்தது
ரோமர்களின் சாம்ராஜ்யத்திலும் அந்த வரி ஒலித்தது,

சீசருக்கு பல லட்சம் வருடம் முன்னாலே அதை சொன்னவன் ராமன், ராமனின் புகழ் உலகம் முழுக்க பரவியிருந்தது இன்னும் தாய்லாந்து முதல் இந்தோனேஷுயா கிழக்கு சைனா வரை அவனின் வரலாறு உண்டு, அப்படி மேற்கிலும் பரவி இருந்த ராமனின் புகழ்வரிதான் சீசர் சொன்னதாக நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது

ராமனின் அரசு தேவலோக அரசுக்கு நிகராய் இருந்தது. அவன் பரதனிடம் கேட்கும் கேள்விகளின் தொகுப்பு, அவன் விளக்கும் பல நிர்வாகங்களின் தொகுப்பு சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்தில் அப்படியே வரும்
ஆம் ராமன் இங்கு எல்லா விஷயங்களுக்கும் எடுத்துகாட்டானவன்

அவன் செய்த ராஜநீதியே பின்னாளில் மனுநீதி சோழன் தன் மகனை பசுவுக்காய் கொல்லும் அளவு ஆட்சி கொடுத்தது, அவனின் பொய் சொல்லா குணமே அரிச்சந்திர கதையின் நாதம்

அவனின் சகோதர பாசத்தின் தொடர்ச்சியே பாரதம்

அவனின் அரச நீதியின் தொடர்ச்சியே சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம்

இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு

ஒருவனின் நற்குணத்தை பற்றி அவனின் நண்பர்களோ பலன் பெற்றவர்களோ சொல்வதில் அர்த்தமில்லை, அவனின் எதிரி என்ன சொல்கின்றானோ அதுதான் நிஜம்

ராவணன் மாயமான் உருவெடுக்க மாரீசனிடம் சொன்னபொழுது ராமனின் குணம் பற்றி வியந்துரைத்து அவனுக்கு துரோகம் புரிய முடியாது என மருவுகின்றான் மாரீசன்

ராமன் உருவெடுத்தால் சீதை மயங்குவாள் என திட்டம் போட்ட ராவணன்,, ராம உருவெடுத்து அந்த உருவில் தனக்கு மாபெரும் நல்ல குணங்கள் வருவதை உணர்ந்து அதை சட்டென மாற்றி அழுதான் என்கின்றது புராணம்

போர்களத்தில் ராமனின் அழகையும் அவனின் வீரத்தையும் , "ஆயுதம் இல்லா தன்னை வீட்டுக்கு அனுப்பி நாளை வா" என சொன்ன ராமனிடம் மனமார தோற்றான் ராவணன்

லங்காபுரியில் அவன் அழகில் தோற்றாள் சூர்ப்பநகை, அவன் அன்பில் தோற்றான் விபீஷ்ணன், அவன் வீரத்திலும் கருணையிலும் தோற்றான் ராவணன்

ராவணன் வாலியாலோ, இல்லை கார்த்த வீரியனாலோ கொல்லபட்டிருக்க வேண்டியவன் ஆனால் அவனின் பெரும் பக்தியின் பலன் ராமன் எனும் நல்லவனால் கொல்லபட்டான், இதை உணர்ந்தே மகிழ்வாய் உயிர்விட்டான் ராவணன்

இதைவிட ராமனின் பெருமை சொல்ல என்ன உண்டு?

தந்தை பாசத்துக்கு எடுத்துகாட்டான ஒருவன் உண்டா? ராமன் வாழ்வு சொல்லும்

ஒரு மூத்த சகோதரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யார் உதாரணம்? ராமன் வாழ்வு சொல்லும்

ஒன்றுமே இல்லா பராரி நிலையில் ஒருமனிதன் எப்படி இருக்க வேண்டும்? ராமன் வாழ்வு சொல்லும்

தந்தையும் மனைவியும் பிரிந்த நிலையில் அனாதையாய் நிற்கும் நிலையில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? ராமன் வாழ்வ் சொல்லும்

நம்பியோரை காப்பது எப்படி, தர்மத்தை அரங்கேற்றுவது எப்படி? அவன் வாழ்வு சொல்லும்

மனிதன் தன்னிலும் கீழான விலங்குகளிடமும் பறவைகளிடமும் கருணையாய் இருப்பது எப்படி? அவன் வாழ்வு சொல்லும்

எல்லாம் தொலைத்த நிலையிலும்எதுவுமே இல்லா நிலையிலும் தர்மமும் கருணையும் ஒருவனிடம் இருந்தால் அவன் எப்படி மீள்வான்? அதை அவன் வாழ்வு சொல்லும்

ராஜ்யமும், ஏராளமான‌ பெண்களும், ஏன் அந்நிய ராஜ்யங்கள் ஏராளம் கண்முன் நின்று தனக்காக ஏங்கினாலும் ஒரு மனிதன் எப்படி ஒதுங்க வேண்டும்? ராமன் வாழ்வு சொல்லும்

நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும், தன் குடிகளை கண்காணித்து தன்மேல் நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும்? ராமனே உதாரணம்

இதனாலே காலம் காலமாக இந்த உலகில் ராமனை வழிபட சொன்னார்கள், அவன் கதையினை படிக்க சொன்னார்கள்

ராமன் கதையினை முழுக்க வாசிக்கும் ஒருவனுக்கு அவனின் ஏதாவது ஒரு குணம் வரகூடும், அவன் அதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக

ராமனை யார் யாரோ சந்தித்தாலும் அனுமன் என ஒரு மாபெரும் வீரன் அவனால் உருவானான் அல்லவா? அதை போல லட்சோப லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அவனை போல் ஒருவன் வருவான் என ராமனின் கதையினை இச்சமூகம் வைத்திருந்தது

எல்லா அரச குடும்பங்களுக்கும் உலகெல்லாம் அவன் வாழ்வு பாடமாயிருந்தது, சீசர் என்பவன் ஒரு உதாரணமே

காதலருக்கு அவன் கதையே பாடம், சகோதர பாசத்துக்கு அதுவும் மூத்த மகனின் தியாகத்துக்கு அவனே வழிகாட்டி, நட்புக்கும் தர்மத்துக்கும் அவனே வழிகாட்டி , தியாகம் வீரம் கொடை என எல்லாவற்றுக்கும் அவனே வழிகாட்டி என இந்த பூமி காலம் காலமாய் அவன் புகழை காத்தும் வந்தது

மகா முக்கியமாய் அவன் வாழ்வு எதற்கும் ஆசைபடாத குணத்துக்கும் அகங்காரத்தை ஒழிக்கும் உதாரணமாகவும் காட்டபட்டது

தான் வீரன் எனும் வாலியின் அகங்காரம் அவனால் ஒழிக்கபட்டது, அழகி எனும் கர்வம் கொண்ட சூர்ப்பநகையின் அகங்காரம் அவனாலே ஒழிக்கபட்டது, தாடகை அவனிடமே அடங்கி வீழ்ந்தாள்
மூவுலகை வென்ற ராவணின் அகங்காரம் அவனிடமே ஒழிந்தது, தன்னை வெல்ல சத்திரியன் எவனுமில்லை எனும் பரசுராமனின் அகங்காரமும் அவனிடமே ஒழிந்தது

அகங்காரம் ஒழிய ராமனை வணங்கு என்றது இந்த பூமி, ஆற்றல் கொண்டவன் ராமனை பணிந்தால் அனுமன் போல் வாழ்வான், அகங்காரம் கொண்டவன் அழிவான் என சொன்னது

ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் (மனைவி) என வாழ்ந்தவன் ராமன்..

ராமனின் ஒரே குறை, குறை காணமுடியா வாழ்வினை அவன் வாழ்ந்தான் என்பதன்றி வேறல்ல

ராமனை இங்கு எக்காலமும் நினைவில் நிற்க சொன்னார்கள், அவனை அனுதினமும் வணங்கினால் அவனை போல் நற்குணத்தில் ஒன்று வரும் என்றார்கள், அவன் அருள் பெருகும் என்றார்கள்

அருள் பெருகுமோ இல்லையோ ராமனின் வாழ்வினை தியானிப்பவர்களுக்கு ஞானம் வரும்

மானிட வாழ்வு சிக்கலும் கண்ணீரும் கவலையும் மிகுந்தது, ராமனுக்கு வந்த சிக்கலா நமக்கு வரும் என்ற தைரியம் பிறக்கும்

ராமன் ராஜ்ஜியம் போனாலும் மனைவி பிரிந்தாலும் மீண்டும் பெற்றது போல் பெறுவோம் எனும் நம்பிக்கை வரும்

வனவாசம் மட்டும் செல்லாமல் இருந்தால் அவன் அனுமனை கண்டிருப்பானா? குகனை கண்டிருப்பானா?

ராவண வதம் நடந்திருக்குமா? இல்லை சலவை தொழிலாளியின் நம்பிக்கையினை பெற்று மாபெரும் அரசனாய் வீற்றிருப்பானா? எல்லாம் நன்மைக்கே எனும் நம்பிக்கை பிறக்கும்

நல்லவனாய் இருப்போம் ராமனுக்கு அனுமன் போல நமக்கும் ஒருவன் வராமலா போய்விடுவான் எனும் தைரியம் பிறக்கும்

ராமனின் பரசுராம மோதல் காட்சிகளை காணும் பொழுது அகம்பாவம் ஒழியும், ஆட்சியாளர் படித்தால் நாமும் அப்படி ஆள வேண்டும் என்ற் ஆசைவரும், வீரன் படித்தால் நாமும் ராமனை போல் தர்மப்போர் புரிய வேண்டும் என்ற வீரம் வரும்

குறைந்த பட்சம் குகனைப்போல் நண்பனை பெறவேண்டும் எனும் ஆசை வரும், விபீஷ்ணன் சுக்கீவன் ராஜ்யம் அவனுக்கு என்பதை போல் மண் ஆசை குறையும்

ராமனை வணங்கினால் பரதனுக்கு நாடு கொடுத்த ராமன் போல் நாமும் சகோதரனுக்கு விட்டு கொடுப்போம் மண்ணாசை வராது, பேரழகி ஆனாலும் ஏறேடுத்து பார்க்கமாட்டோம் இதனால் பெண்ணாசையும் வராது

இதனாலே ஒவ்வொரு மனிதனும் ராமனின் கதையினை படிக்க வேண்டும் என்றது இந்த ஞானபூமி, இன்றும் இந்துக்கள் வாயில் "ராமா..." எனும் வார்த்தை சர்வ சாதாரணம்

அது அவர்கள் ரத்தத்தில் வந்தது, பூர்வ பூர்வ ஜென்மமாய் வந்தது அது இன்னும் வரும்

(திராவிட கோஷ்டி ஏன் ராமனை குறி வைத்து அடித்தது என்பதன் பொருள் இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், மனிதன் மனிதனாகவே வாழ்ந்துவிட கூடாது என்பது அவர்கள் பகுத்தறிவு)

ராமன் காலம்தோறும் யாரையாவது உலகிலும் இப்பூமியிலும் தொட்டுகொண்டே இருப்பான், நல்ல அரசர் முதல் மோடிவரை வரை அவன் தொட்டான்

இந்தியாவின் புகழ்மிக்க மன்னர்கள் முதல் கவிஞர்கள் ஆட்சியாளர்கள் ஞானியர் வரை ஆழமாக கவனியுங்கள் அவர்கள் ராமபக்தர்களாய் இருப்பார்கள்

ராமன் பெயரில் வாழ்ந்து அவனை பணிந்தவர்களே தேசத்தின் விடுதலையினை முன்னெடுத்து சனாதான தர்மத்தை மீட்டெடுத்தார்கள்

ராமதாஸர், துக்காராம் போன்ற ராமன் பக்தர்கள் அவர்களில் முக்கியமானவர்கள், வீரசிவாஜி அப்படித்தான் இவர்களால் உருவாகி இந்துராஜ்ஜியத்தை மீட்டெடுத்தான்

ராமனின் நினைவு இல்லாமல் அவன் பிரஞ்ஞையில் கரையாமல் நல்லாட்சி தரமுடியாது, காந்திக்கு கூட ராமன் மேல் ஒரு தனி பக்தி இருந்தது

காந்தி ராமனின் பல குணங்களை பின்பற்றினார், அதை மறுக்கமுடியாது. ராமன் அவரின் விருப்பமான கடவுளாய் இருந்தான்

இதனாலே பரதனுக்கு ராமன் கொடுத்த தேசம் போல் ஜின்னாவுக்கும் கொடுத்தார் என்பதுதான் சோகம்

ஆனால் ராமனை மனமார பின்பற்றினார், அனுதினமும் அவர் பெயரை சொல்லிகொண்டே இருந்தார், சாகும் பொழுதும் அவர் சொன்ன வார்த்தை "ராமா.."

ஆம், ராமனே இந்த சுதந்திர இந்தியாவினை காக்க முடியும் என அவர் நம்பியிருக்கலாம்

அப்படிபட்ட ராமன் இத்தேசத்தை இன்றல்ல எக்காலமும் காப்பான், சோதனை வந்தாலும் மீள் எழவைத்து காப்பான்

பல ஆயிரம் வருடம் கழித்து அவன் ஆலயம் கட்டபடுவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல, எகிப்து ரோம் இன்னும் பல மதங்கள் செத்தே விட்ட நிலையில் ராமன் ஆலயம் மட்டும் உயிர்த்தெழுவது எப்படி?

ஆம் அவனே தர்மம், அவனே சத்தியம் அது ஒருகாலும் அழியாது

சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் என்பதன் தத்துவ வடிவம் என்ன்ன என்பதை இப்படி சொன்னார்

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

ராமனை போல ஒருவனை காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் , ஆழமாக் இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் , வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும், நீங்கள் இன்னும் ஒரு ராமனை காணவே முடியாது
அவன் ஒப்பற்றவன். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய ஒருவனை காணமுடியும்"

இன்று ராமநவமி, இந்துக்கள் அவன் பெயரால் பூஜித்து கொண்டிருக்கின்றார்கள், இன்றல்ல எக்காலமும் உச்சரித்து கொண்டிருக்கவேண்டியது அவன் பெயரே

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே."

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் , புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே விடுதலையும் கிட்டும்.

அந்த ராமனை மனமார வணங்குங்கள், வான் மேகத்தில் ஒரு துளியும் தாகம் தீர்க்கும் என்பது போல, வைரத்தின் ஒவ்வொரு துண்டும் மின்னும் என்பது போல ராமனின் குணங்களில் ஒன்று , ஒன்றே ஒன்று உங்களில் கலந்தால் போதும், உங்கள் வாழ்வே மாறும் அது சமூகத்தை மாற்றும்

அனுமன், விபீஷ்ணன், வால்மீகி, கம்பன், விவேகானந்தர், காந்தி , மோடி என ஏராளமான உதாரணங்களை சொல்லிகொண்டே இருக்கமுடியும்

நிச்சயம் அதில் உங்கள் பெயரும் வரும், அழியா அடையளமாவீர்கள்

ஒவ்வொரு அன்னையும் தன் மகனை ராமன் போல வளர்க்கவும், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ராமன் போல் கணவன் கிடைக்கவும் வேண்டும் நாளிது

ஒவ்வொரு அண்ணனும் தான் ஒரு ராமனாகவும், ஒவ்வொரு தம்பியும் தான் ஒரு லக்குவனாகவும் வாழவேண்டும் என உருகும் நாள் இது

ஒவ்வொரு குருவும் ராமனை போல் ஒரு சீடன் வேண்டும் என மனமுருகும் நாள் இது,

ஒவ்வொரு பக்தனும் அனுமனை போல் ராமனை வணங்கி நிற்கும் நாளும் இதுவே.

ராவணன் சிறைபோல் பெரும் இக்கட்டில் இருப்போரெல்லாம் ராமா.. என கூவி அழைக்கும் நாளும் இதுதான்.

அதே நேரம், நல்லாட்சி அமைய ஒவ்வொரு இந்துவும் அழைக்கும் நாமமும் அவன் நாமமே.

ஆம் தலைமகனாக, அண்ணனாக, கணவனாக, நாயகனாக, வீரனாக ,குருவாக மின்னினான் ராமன், "ராமன் எத்தனை ராமனடி" என்பது அதுதான்.

எத்தனையோ வகையாக மின்னிய ராமனில் அவன் அரசனாக ஜொலித்தது தனி இடம்.

அந்த பரந்தாமனின் தனி அருளில் நாடு ஜொலிக்கட்டும் என தேசம் வேண்டிகொண்டிருக்கின்றது.

ராமநாமம் ஒலிக்கட்டும், அது ஒலிக்க ஒலிக்க தேசம் செழிக்கட்டும்

.



T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக