சமீபத்தில் வலைதளத்தில் படித்த நகைச்சுவை ஒன்று...

அந்த ஜவுளிக்கடைக்கு நாள்தவறாமல் வந்து சென்றார் ஒருவர். ஒருநாள் கடை ஊழியர் அவரிடம் கேட்டார்.

``சார்... பத்து நாளா வந்துட்டுப் போறீங்க. ஆனா, துணிமணி எதுவும் எடுத்துப் பார்க்கவே இல்லையே!’’

இதற்கு அந்த வாடிக்கையாளர் பதில் சொன்னார், ``பத்துநாளும் நான் எடுத்துட்டுத்தான் போறேன்... நீங்க பார்க்கலைன்னா நான் என்ன பண்ணுறது!’’