புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
98 Posts - 49%
heezulia
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
7 Posts - 4%
prajai
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
225 Posts - 52%
heezulia
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
18 Posts - 4%
prajai
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_m10எழுப்புதலுக்கு ஆயத்தம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுப்புதலுக்கு ஆயத்தம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Apr 2009 - 0:41

கிறிஸ்தவ நாட்காட்டியில் உயிர்த்தெழுதலுக்கு அடுத்த மிக முக்கிய சம்பவம் பெந்தெகொஸ்தே ஆகும். அத்தினத்தன்று காத்திருந்த சீடர் மீது தூயாவியானவர் இறங்கினார். உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து பெந்தெகொஸ்தேக்கு ஆயத்தமாகப் பல காரியங்கள் நடந்தன. பெந்தெகொஸ்தேயை தேவன் தமது மக்களைப் புதிதாய்ச் சந்திக்கும் வேளையென ஆவிக்குரிய அர்த்தப்படுத்தலாம். அந்த 50 நாட்களில் சீடர்கள் அனுபவித்தவை அல்லது செய்தவை யாவையும் “எழுப்புதலுக்கான ஆயத்தம்” எனக் கொள்ளலாம். கீழ்க்கண்ட ஐந்து பகுதிகளில் நாம் நம்மை ஆயத்தப்படுத்தினால் நெடுங்காலமாய் எதிர் நோக்கியிருக்கும் எழுப்புதல் சீக்கிரம் “சடிதியாய்” வரும் என்று நிச்சயித்திருக்கிறேன்.

1. உயிர்த்தெழுந்த கர்த்தர் மீது விசுவாசம்

கிறிஸ்துவின் பிறப்பு முதல் புதைப்பு வரை அது அவரது பாடுகளாகும். அவரது உயிர்த்தெழுதலில் தான் அவரது மகிமைப்படுதல் துவங்குகிறது. இயேசு மகிமைப்படாவிடில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப் படமாட்டார் (யோ 7:39). உயிர்த்தெழுந்தபின் கிறிஸ்து நாற்பது நாட்கள் “அநேகத் தெளிவான நிரூபணங் களினால்” தம்மை உயிரோடிருக்கிறவராகச் சீட ருக்குக் காண்பித்தார் (அப் 1:3). அவர் உயிர்த்தெழுந் ததை ஒத்துக்கொள்ள சீடர் தயங்கியபோது அவர்கள் அவிசுவாசத்தையும் இதயக்கடினத்தையும் அவர் கடிந்துகொண்டார் (மாற் 16:9-14). மட்டுமல்ல, தமது உயிர்த்தெழுதல் உடலின் உயிர்த்தெழுதல் எனவும் அவர்கள் திட்டமாய் அறிய விரும்பினார். “நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களை யும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்குச் சதையும் எலும்புகளும் இருக்கிறதுபோல ஓர் ஆவிக்கு இராதே” என்றார் (லூக் 24:39). அவர்களுக்கு ஒரு சந்தேகமும் இருக்கக்கூடாதென விரும்பினார். தோமாவை நம்ப வைக்க அவனுக்காக ஒருமுறை தனித்தரிசனம் கொடுக்கவும் அவர் தயங்கவில்லை. அவனிடம் “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார் (யோ 20:27). உயிர்த்தெழுந்த இரட்சகரைக் கண்ட பேதுருவும் யோவானும் “அவர் கர்த்தர்” என்றனர் (யோ 21:7).

எழுப்புதல் பாவிகளுக்கு அல்ல, உயிர்த்தெழுந்த கர்த்தர் மீது விசுவாசத்தை அறிக்கையிட்டவர் களுக்கே. வேறுவிதமாய்ச் சொன்னால், எழுப்புதல் இரட்சிக்கப்படாதோருக்கல்ல, இரட்சிக்கப்பட்டோ ருக்கே (ரோ 10:8-10). பெந்தெகொஸ்தே அனுபவம் “சீடர்களுக்கு” மட்டுமே. அதாவது உயிர்த்தெழுந்த ஆண்டவருக்கு அடிமைகளாக அவரைப் பின்பற்று வோருக்கே. மனந்திரும்பி கிறிஸ்துவின் கர்த்தத் துவத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணிந்தோருக்கே பரிசுத்தாவியின் வரம் (அப் 23:8). எனவே, தங்கள் சபையில் அல்லது கூட்டத்தில் எழுப்புதலை நாடும் எந்த மேய்ப்பரும், பிரசங்கியும் பிரதானமாய்ச் செய்ய வேண்டியது மக்களை மெய்யான மனந்திரும்புதலுக் கும் தெளிவான விசுவாசத்திற்கும் நடத்துதலாகும். சடலத்துக்கு அனல்மூட்ட முடியாதே!

இன்று பிரசங்கபீடங்களிலும் சபையார் இருக்கை களிலும் இரட்சிக்கப்படாதோர் ஏராளம். குழந்தை அல்லது வயதுவந்தோர் ஞானஸ்நானம், திடப்படுத் துதல், சபை அங்கவகிப்பு, நற்கருணை, இன்னும் இதுபோன்ற நூறு காரியங்களும் ஒருவரையும் இரட் சிக்காது எனச் சபையாருக்குத் தைரியமாய் அறி விக்கும் தீர்க்கதரிசிகள் இன்று தேவை (மத் 3:8,9). மக்கள் “மனந்திரும்பி விசுவாசிக்க” வேண்டும். உருக்கமான, ஆறுதலான பிரசங்கத்தைக் கேட்டு தங்கள் பிரச்னைகளுக்காகக் கண்ணீர் விடுவது இன்று சாதாரணம். ஆனால் பாவங்களுக்காக கண் ணீர் விடுவது அபூர்வம். ஏசாயா-எரேமியா, யோவான் ஸ்நானன்-இயேசு, பவுல்-பர்னபா (அப் 13:1) போன்ற தீர்க்கதரிசிகள் மனந்திரும்புதலைப் பிரசங்கிக்கத் தேவை. முந்தியகால எழுப்புதல் வேண்டுமானால் முந்தியகால மனந்திரும்புதலும் வேண்டும்! சுகமும் பணமும் இரண்டாவது. “ஆன்மா” செழிப்பில்லாதி ருக்கும் மக்களுக்குப் பொருளாதார, உடலுக்க டுத்த வளத்தைப் பேசுவது முற்றும் தவறு. அப்போஸ் தலன் யோவான் (அவனும் ஒரு தீர்க்கதரிசி) சரி யாய்ச் சொன்னான்: “பிரியமானவனே, உன் ஆன்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுக மாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோ 2).

ஆவிக்குரிய மனிதனின் முதல் அடையாளம் அவன் பரவசத்தைவிட பரிசுத்தத்தை நாடுவான் என்று தீர்க்கதரிசி ஹ. று. டோசர் குறிப்பிட்டார். தேவனது வீட்டில் ஆனந்தத்தைத் திரும்பப் பெறுவதே எழுப்புதலாகும் (சங் 85:6). ஆனால் நல்லதை விரும்பி தீதானதை வெறுக்காதவர்மீது ஆனந்த தைலம் ஊற்றப்படுவதில்லை (எபி 1:9).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Apr 2009 - 0:42

2. வேத வசன ஆராய்ச்சி

உயிர்த்தெழுந்த ஆண்டவர் ஒரு சந்தர்ப்பத்தை யும் நழுவவிடாது தமது சீடருக்கு வேத வாக்கியங் களை விளக்கிக் காண்பித்தார். எம்மாவுக்குப் போய்க்கொண்டிருந்த சீடருக்கு, “மோசே முதலிய எல்லா தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்க ளெல்லாவற்றிலும் தம்மைப் பற்றிச் சொல்லியவை களை விவரித்துக் காண்பித்தார்” (லூக் 24:27). எருசலேமில் சீடர்களுக்குத் தரிசனமானபோது “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசி களின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும்” தம்மைக் குறித்து எழுதப்பட்டவைகளின் நிறைவேறுதலை விளக்கிக் காண்பித்தார் (லூக் 24:44). மட்டுமல்ல, பரிசுத்த ஆவியானவருக்காகக் காத்திருந்த சீடரும் பல்வேறு வேத பகுதிகளைத் தியானித்துக்கொண்டி ருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது வேத வாக்கி யங்கள் வெகுவாய் அவர்கள் சிந்தனையில் இருந்தன. எடுத்துக்காட்டாக, யூதாசைக் குறித்துப் பேதுரு வசனத்திலிருந்து விளக்குவதைப் பாருங்கள்: “யூதா சைக் குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டிய தாயிருந்தது... சங்கீதப் புத்தகத்திலே: ...அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என் றும் எழுதியிருக்கிறது” (அப் 1:15,16,20).

பழைய ஏற்பாட்டின் எழுப்புதல் அல்லது சீர் திருத்தக் காலங்களில் வேத வசனத் தியானமும் ஆராய்ச்சியும் பெரும் பங்கு வகித்துள்ளன. எடுத்துக் காட்டாக, யோசியா ராஜா, எஸ்றா ஆகியோர் மூலம் ஏற்பட்ட சீர்திருத்தம் அல்லது எழுப்புதல் சரித்திரத் தைப் பாருங்கள் (2 இரா 22:8-11; எஸ்றா 7:10). அப்பமும் தண்ணீருமல்ல, வசனம் கிடையா பஞ்சம் ஏற்படுமென ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தான் (ஆமோ 8:11,12). ஏற்கனவே அப்பஞ்சம் வந்துவிட்ட தென எண்ணுகிறேன். ஏனென்றால் பல பிரசங்க பீடங்களிலிருந்து இன்று நாம் கேட்பதெல்லாம் சம்ப வங்களும் அனுபவங்களும்தான். வசன விளக்கம் மிகவும் குறைவு. வசனத்தை வசனத்தோடு ஒப்பிட்டு வியாக்கியானிப்பது மறைந்த கலையாயிற்று. எல் லாமே இலகுவாக இருக்க மக்கள் விரும்புகின்றனர். பிரசங்கிகளும் வேத வசன உயரத்திற்கு மக்களைத் தூக்கிச் செல்வதற்குப் பதிலாக மக்களுடைய தரத் திற்கு இறங்கி அங்கேயே இருக்கத் துவங்கிவிட் டனர். உபதேசம் அல்லது போதனையைவிட பிரசங் கத்திற்குத்தான் கிராக்கி அதிகமாதலால், உபதேசம் அல்லது போதக ஊழியத்திற்காய் அழைக்கப்பட்ட சிலரும் வெறும் சுவிசேஷப் பிரசங்கிகளாய் மாறி விட்டனர். பால் நல்லதுதான், ஆனால் எவ்வளவு காலம்? பலமான உணவின்றி முதிர்ச்சி சாத்திய மில்லை.

யாரையும் நியாயந்தீர்க்க நான் யார்? ஆனால் ஒன்று நிச்சயம்: இன்றையப் பிரசங்கங்களில் உணர்ச்சி வசப்படுத்துதல் அதிகம், உணர்த்துவித்தல் குறைவு. தெளிவான சத்தியமே ஆன்மாவை உணர்த்தி உறுதிப் படுத்தும். பவுலின் தீர்க்கதரிசனமான எச்சரிப்பைக் கவனித்துப் படிப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்: “ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத் தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு புத்தி சொல்லு. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், கேட்பதில் மந்தமாகி, தங்கள் சொந்த விருப்பங்களுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாய்ச் சேர்த்துக் கொண்டு சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்” (2 தீமோ 4:2-4). தமது வசனத்திற்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கும்போது தேவன் எழுப்புதல் ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளுவார் (ஏசா 66:1,2). வேதத்தைத் தவிர இன்று நாம் கண்ணால் காணும் யாவும் அநித்தியமானவை களே! வசனமே விதை; ஆவியானவரே மழை (ஏசா 30:23; ஓசி 10:12).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Apr 2009 - 0:44

3. துதியும் ஜெபமும்

பெந்தெகொஸ்தேக்கு முன், குறிப்பாக கிறிஸ்து வின் பரமேறுதலை அடுத்த பத்து நாட்களும் ஜெப ஆவியும் துதியின் ஆவியும் சீடர்களை வெகுவாய்ப் பற்றியிருந்தன. எல்லாவற்றையும் “ஒழுங்காய்” எழு திய லூக்கா தனது சுவிசேஷத்திலும் நடபடிகள் புத்தகத்திலும் இதை அழகாய்க் குறிப்பிட்டுள்ளான். பரமேறுதலை அடுத்து சீடர்கள் “மிகுந்த மகிழ்ச்சி யுடன் எருசலேமுக்குத் திரும்பி வந்து, தினமும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள்” (லூக் 24:52,53). மேலறைக்கு ஏறியபோது “ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டு தலிலும் தரித்திருந்தார்கள்” (அப் 1:12-14). இன் னும் குறிப்பாக பெந்தெகொஸ்தே நாளில் வெகு வாய்த் துதியிலும் ஜெபத்திலும் நனைந்திருந்தனர் (அப் 2:1).

எழுப்புதலுக்கு ஆயத்தமாக ஜெபத்தை அளவுக்கு மீறி அழுத்திச் சொல்லிவிட முடியாது. ஜெபம் என்றால் “ஆண்டவரே, எழுப்புதலை அனுப்பும்!” என்பது மட்டுமல்ல. அது தற்பரிசோதனையையும் பாவ அறிக் கையையும் உள்ளடக்கியது. அதாவது நமது மாம்சீகம், மாய்மாலம் முதலியவற்றை நமக்கு வெளிப்படுத்தும்படி தேவன் தமது ஒளிக்கதிர்களை நம்மீது திருப்ப அனுமதித்தலாகும் (வெளி 2:23). மட்டுமல்ல, கர்த்தருக்கு முன் நிறைவேற்றாத பொருத்தனை களையும் (பிர 5:1-6), பிறருக்கு விரோதமாகச் செய்தவற்றையும் (மத் 5:23,24) ஜெபத்தில் நினைவு கூரவேண்டும். மேலும் அவரது பிரசன்னத்தில்தான் நாம் அவரது பரிசுத்தத்தையும் நமது ஒன்றுமில் லாமையையும் உணர்வதால் ஜெபமானது மெய்யான தாழ்மைக்குள் நம்மை நடத்திச்செல்கிறது (ஏசா 6:1-5). ஜெபமென்பது நமது இயலாமை, போதாமை ஆகிய வற்றின் அறிக்கையாகையால் அவரது பலத்திற் காகவும் வல்லமைக்காகவும் அது ஒரு மன்றாட்டாக அமைகிறது (மத் 26:41). இவ்விதமான பலிகளில் தேவன் பிரியப்படுவதால், நிச்சயமாகப் பலிபீடத்தில் அவரது அக்கினி இறங்கும் (சங் 51:17-19).

கர்த்தரின் பலிபீடத்தை எலியா செப்பனிட்டபோது அக்கினி இறங்கவில்லையா? தேவன் தம் மனிதரை உடைப்பதும் உருவாக்குவதும் முழங்காலில்தான். இயேசு ஜெபித்தபோது வானம் திறந்தது. ஆதிச்சபை ஜெபித்தபோது இடம் அசைந்தது. இகத்தை அசைக் கும் ஆவியின் வல்லமையை ஜெபம் அவிழ்த்துவிடு கிறது. எழுப்புதலைக் குறித்துப் போதுமான அளவு பிரசங்கித்துவிட்டோம்; போதுமான அளவு பிரசுரித் தும்விட்டோம்; ஆனால் அதற்காகப் போதுமான அளவு பிரார்த்திக்கவில்லையென்றே எண்ணுகிறேன். எவ்வளவுக்கதிகமாக எழுப்புதலுக்காக ஜெபிக்கி றோமோ அவ்வளவுக்கதிகமாக எழுப்புதலை வாஞ் சிப்போம்; எவ்வளவுக்கதிகமாக எழுப்புதலை வாஞ் சிக்கிறோமோ அவ்வளவுக்கதிகமாக எழுப்புதலுக் காக ஜெபிப்போம். இன்று எழுப்புதல் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் எழுப்புதல் இல்லாமல் வாழ நாம் கற்றுக்கொண்டோம் என்று பக்தன் லியோ னார்டு ரேவன்ஹில் அழகாய்ச் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்களில் துதித்தலில் புதியதோர் ஆர்வம் உருவாகியுள்ளது. இப்பொருள்பற்றி ஆண்டுதோறும் பல புதிய புத்தகங்களும் வெளிவருகின்றன. ஆனால் பெரும்பாலும் முடிவு “தன்னலத்திற்கான துதிதான்” எப்படி தன்னல ஜெபம் என்று சொல்லுவோமோ அப்படியே. அதாவது நமக்காகவும் நமது தேவை களுக்காகவுமே ஜெபித்தல் அல்லது துதித்தல். சபையைப் பற்றியும் உலகைப் பற்றியும் கரிசனை கொள்வது யாரோ? துதிப்பது எனது பிரச்னைகளி லிருந்து நான் வெளிவரவும், எனது தேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது என்பது உண்மை தான். ஆனால் நாம் இந்தச் சிறுபிள்ளைத்தனத் திலிருந்து மேலெழுந்து, சபையின் ஆசீர்வாதத்திற் காக சபையின் ஆண்டவரை, உலகின் ஆசீர்வாதத் திற்காக அறுவடையின் ஆண்டவரை, இராஜ்யத் திற்குப் புதிய வெற்றிகளுக்காக படைகளின் ஆண்டவரைத் துதித்துப் போற்றுவோம். பெந்தெகொஸ் தேக்கு முன் சீடர்கள் எதை மனதில் வைத்து தேவனைத் துதித்து ஆராதித்திருப்பார்களெனக் கற்பனை செய்து பாருங்களேன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Apr 2009 - 0:44

4. இறையரசைக் குறித்த எதிர்பார்ப்பு

பெந்தெகொஸ்தேக்கு முன் உயிர்த்தெழுந்த கிறிஸ்து தமது சீடரிடம் பேசியதெல்லாம் தேவ இராஜ்யத்தைப் பற்றியதே (அப் 1:3). இயேசுவின் சிந்தையைத் தவறாய்ப் புரிந்த சீடர் அவரிடம், “ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தைத் திரும்ப இஸ்ரவேலருக்குக் கொடுப்பீர்?” என்று கேட்டனர் (வச 6). எருசலேம் துவங்கி உலகின் கடைசிவரை சுவிசேஷம் அறிவிக்கப்படுவதால் தனிப்பட்டோரின் இதயங்களில் உருவாகப்போகும் ஆவிக்குரிய இராஜ்யத்தைக் குறித்தே தாம் பேசுவதாக அவர்களுக்குப் பதிலு ரைத்தார் (வச 7,8). பரமேறுதலுக்கு முன்னர்தான் பேராணை கொடுக்கப்பட்டது. அவர்களைப் பார்த்துப் “புறப்பட்டுப் போங்கள்” என்றார்! எல்லா “நாட்டின ரிடமும்!” “உலகம்” எங்கும்! “சுவிசேஷத்தைப்” பிரசங்கிக்க! அனைத்துப் “படைப்பையும்” சந்திக்க! எல்லா “சத்தியங்களையும்” உபதேசிக்க! அவரது “அதிகாரத்தோடு!” அவரது “சாட்சிகளாக!” “பரிசுத்த ஆவியின்” வல்லமையோடு! எந்நாளும் அவர்களோடி ருக்கும் அவரது “பிரசன்னத்தோடு!” (மத் 28:18-20; மாற் 16:15-18; லூக் 24:47-49; அப் 1:8). பிரிய மானவரது பிரிவு வார்த்தைகளைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது (அப் 1:8,9). உலகமெங்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதால் நிறுவப்பட்டு விரிவ டையப்போகும் ஆவிக்குரிய இராஜ்யத்தைக் குறித்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஆண்டவர் சீடரது இரு தயங்களில் தெளிவாய் உருவாக்கிவிட்டார்.

எழுப்புதல் தன்னில்தானே முடிவடைவதில்லை. அதின் முடிவு நற்செய்திப்பணியாகும். எழுப்புதல் என்பது நற்செய்திப் பணியல்ல; ஆனால் எழுப்புதல் பிறப்பிப்பது நற்செய்திப் பணியாகும். “உமது இரட் சிப்பின் மகிழ்ச்சியைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப் பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்” என்று தாவீது ஜெபித்தான் (சங் 51:12,13). எழுப்பு தலை வாஞ்சிக்கும் நோக்கம் சரியானதாயிருக்க வேண்டும். வேல்ஸ் நாட்டு எழுப்புதல் வீரர் ஈவான் இராபர்ட்ஸ் இப்படி ஜெபித்தார்: “ஆண்டவரே, சபையை வளைத்து உலகை வளமாக்கும்!” கடந்தகால எழுப்பு தல்கள் பல மிஷனரி, நற்செய்தி இயக்கங்களைப் பிறப்பித்துள்ளன. ஆனால் எழுப்புதல் ஆசீர்வாதங் களைத் தலைவர்கள் தீவிர நற்செய்திப்பணிக்கு நேராகத் திருப்பிவிடாததால் சீக்கிரம் அணைந்து போன துக்ககரமான எழுப்புதல் சரிதைகளும் உண்டு. வெறுமனே நம்மை உற்சாகப்படுத்தவும், நமக்கு நன்றாயிருக்கவும் தேவன் எழுப்புதலை அனுப்புவ தில்லை. இல்லவே இல்லை! அவரது நோக்கமெல் லாம் “உலகம்!” உலகிற்காக மரிக்க தமது குமாரனை அனுப்பினார். உலகைப் பாவத்திற்காகக் கண்டித் துணர்த்தி, பாவிகளை இரட்சகரிடம் நடத்தவே ஆவியானவரை அனுப்பினார். உலகமெங்கும் சாட்சி களாய்ப் புறப்பட்டுச் செல்லவே தமது 120 சீடரை அன்று அபிஷேகித்தார். நமக்கு ஏன் எழுப்புதல் தேவை என்று நாம் இன்னும் சரிவர அறியாததே எழுப்புதல் தாமதிப்பதற்கு ஒரு முக்கிய காரண மாயிருக்குமோவென அஞ்சுகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Apr 2009 - 0:45

5. தலைவர்களை ஆயத்தப்படுத்துதல்

அவர்களுக்கு முன்னிருந்த அனைத்துலக ஊழியத் திற்காக மிகக் கவனமாக இயேசு தமது சீடர்களைத் தமது பூவுலக ஊழிய நாட்களில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். பரமேறுமுன் இறுதியான ஆயத்தங் களைச் செய்தார். பன்னிருவருக்கும் தலைவனான பேதுருவோடு இடைபட்டார். மும்முறை அவனிடம், “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட் டார் (யோ 21:15-17). கிறிஸ்துவின் ஊழியனுக்கு அன்பானது அடிக்கல்லும் உச்சக்கல்லுமாகும். முதலாவது கிறிஸ்து அவனை மனிதரைப் பிடிக்கும் மீனவனாக அழைத்தார் (மத் 4:19). இப்பொழுது மனிதரை நடத்தும் மேய்ப்பனாக நியமிக்கிறார் (யோ 21:15-17). ஆத்துமாக்களை மீட்கவும் மேய்க்கவும் அன்பு தேவை. ஒன்று காணாமற்போனோருக்கான அன்பு; அடுத்தது கண்டுபிடிக்கப்பட்டோருக்கான அன்பு. அடுத்த சில நாட்களில் பல்லாயிரங்கள் இறை யரசிற்குள் பிறக்க இருக்கின்றனர். அதற்காகத் தலை வன் ஆயத்தப்படுகிறான். முன்பு தேவன் அவனிடம் “திறவுகோல்களைக்” கொடுத்தார் (மத் 16:19). இப்பொழுது அவனிடம் “தடியையும் கோலையும்” கொடுக்கிறார் (சங் 23:4). ஆத்துமாக்கள் மந்தைக் குள் வரவேண்டும்; மந்தையில் வளர வேண்டும்! அவன் சுமக்கவேண்டிய சிலுவைக்காகவும் அவனை ஆயத் தப்படுத்தினார் (யோ 21:18,19). தலைவர்களைப் பயிற்சிப்பதில் இயேசுவுக்கு நிகரில்லை! கரிசனை யினாலல்ல, ஆசையினால் உடன் ஊழியனது காரியங் களைக் குறித்துத் தேவையில்லாமல் வினவிய பேது ருவை இயேசு கண்டித்தார் (யோ 21:20,22). அப்போஸ்தலர் வரிசையில் யூதாசின் வீழ்ச்சியினால் உண்டான குறைவைச் சரிசெய்ய தேர்தல் ஒன்றைப் பேதுரு நடத்தினான் (அப் 1:22-26). முன்னொரு நாள் இயேசு பேதுருவிடம் சொல்லியதிலிருந்து “பன்னிரண்டு” என்ற எண்ணின் முக்கியத்துவத்தை ஒருவேளை அவன் நினைவுக்குக் கொண்டுவந் திருப்பான் (மத் 19:27,28).

இங்கு படிப்பினை தெளிவு. எழுப்புதலின் திரளான கனிகளைப் பாதுகாக்க தலைவர்கள் முன்னதாகவே ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். ஆவியின் அருள் மாரியைத் தொடர்ந்து அப்போஸ்தலரின் விளக்கம் (2:14), அப்போஸ்தலரின் உபதேசம் (2:42), அப் போஸ்தலரின் நிரூபணம் (3:1,6,7), அப்போஸ்தலரின் ஆலோசனை (6:1-4), இப்படியெல்லாம் வாசிக் கிறோம். வந்து சேரப்போகிற ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களையும், வந்து குவியப்போகிற கணக் கற்ற காணிக்கைகளையும் ஊழலின்றி உத்தமமாய்க் கையாள அப்போஸ்தலரின் மனது ஏற்கனவே பக்கு வப்படுத்தப்பட்டிருந்தது (2:41; 4:4,34,35). இன்று ஊழியங்களில் கூட்டமும் காசும் பெருகியதும் நீதி, நேர்மையெல்லாம் காற்றாய்ப் பறந்துபோவதை எத் தனை முறை கண்டிருக்கிறோம்! தலைவர்களுக்கு வரம் இருந்தால் போதாது, குணம் வேண்டும்.

வெற்றியைவிட உத்தமத்தையும், புகழைவிட புனிதத்தையும், அகலத்தைவிட ஆழத்தையும், உணர்ச்சிவசத்தைவிட தியாகத்தையும், சூழ்நிலை வசதியைவிட மனச்சாட்சியையும் அழுத்திக் கூறி, சீடத்துவ, தலைமைத்துவப் பயிற்சிகள் நடத்தும் ஒழுங்கான ஊழிய இயக்கங்களுக்காக தேவனைத் துதிப்போம். நெகேமியா புத்தகத்தையும், தீமோத் தேயுவுக்கும் தீத்துவுக்கும் பவுல் எழுதிய நிருபங் களையும் திரும்பத்திரும்ப வாசிக்கும்படி வாலிபரைக் கேட்கிறேன். அப்படியே லியோனார்டு ரேவன்ஹில் எழுதிய எழுப்புதல் தாமதிப்பது ஏன்? என்ற நூலையும், ஆஸ்வால்டு சான்டர்ஸ் எழுதிய ளுயீசைவைரயட டுநயனநசளாiயீ என்ற நூலையும் வாசியுங்கள். நீங்கள் மாறாமல் இருக்க முடியாது! மாய்மாலக்காரரை எழுப்புதல் வெட்டிவீழ்த்தும்; அவர்களது சடலங்களை அப்புறப் படுத்தி அறிவிப்பின்றி அடக்கம்பண்ண அப்பொழுது வாலிபர் தேவைப்படுவர்! (அப் 5:6,10).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Apr 2009 - 0:48

அனுபவ சாட்சி பகரும்போது செய்யக்கூடாதவை



பிரசங்கம் பண்ணாதே.

அரசியல் கட்சிகளையோ சபைப்பிரிவுகளையே தாக்காதே.

காலவரம்பை மீறாதே.

அளவுக்குமீறி நகையாடாதே.

இயேசுவின் பெயரைச் சொல்லாமல் பொதுவாக கடவுள், ஆண்டவர் என்றே சொல்லிக்கொண்டிராதே.

உனது இரட்சிப்பின் அனுபவங்களைத் தெளிவற்றுக் கூறாதே.

இரகசியப் பாவங்களை விவரியாதே.

கூட்டத்திலுள்ள யாரையும் வெட்கப்படுத்தாதே. எடுத்துக்காட்டாக, “இங்கே இருக்கும் என் விருந்தினர் சாம் இன்னும் இரட்சிக்கப்பபடவில்லை.”

மக்களைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு பேசாதே.

இரட்சிப்பு, சுத்திகரிப்பு, நீதிமானாக்குதல் போன்ற பதங்களை விளக்காமல் அவற்றைச் சொல்லிக்கொண்டிராதே.

குரலில் ஏற்றம் இறக்கமின்றிப் பேசாதே.

தொலைவில் அமர்ந்திருப்போர் கேட்கமுடியாத அளவு மெதுவாய்ப் பேசாதே.

உனது வேலையைக் குறித்துத் தம்பட்டம் அடிக்காதே.

அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றெல்லாம் அடிக்கடி அலப்பாதே.

மைக்கைக் கவனியாது தள்ளிப்போகாதே.

சுவாரஸ்யமற்றுத் துவக்காதே.

பிரசங்கபீடத்தின்மீது சாயாதே.

பைக்குள் கைபோடுதல், சில்லறைகளைப் பிரட்டுதல் போன்றவற்றைச் செய்யாதே.

வேதத்திலிருந்து வசனம் ஏதும் எடுத்து வாசிக்காமல் சும்மா அதைக் கையில் பிடித்திராதே.

நீண்ட குறிப்புகளை எடுத்துச் செல்லாதே.

‘ம்’ ‘ஆ’ போன்ற தேவையற்ற ஓசைகளை எழுப்பாதே.

“பின்னர் எனது உரையில்...” என்பது போன்று அடிக்கடி நேரத்தைக் குறிப்பிடாதே.

அவசியமற்ற இடங்களில் சிரிப்பே வராத ஜோக் அடிக்காதே.

“எனது நேரம் முடிந்துவிட்டது, நான் அமர வேண்டும்” என்று பரிதாபமாய் முடிக்காதே.

உனது அனுபவ சாட்சியை உனது சொல்வாக்கில் அல்ல, இறைவன்னமையில் சார்ந்திருந்து சொல்லு.









அனுபவ சாட்சி பகிரும்போது செய்யவேண்டியவை



அ. ஆயத்தம்



உனது வாழ்விலும் வேலையிலும் உண்மையாயிரு; வரிகள் செலுத்துவதில் நேர்மையாயிரு.

சுற்றியுள்ளோர் பார்வையில் நன்னடத்தையுள்ளவனாயிரு. அறிக்கையிடப்படாத பாவம் வேண்டாம்.

உனது சாட்சி கடவுளுக்குமுன் முக்கியமானது என்பதை நினைவிற்கொள். நீ அவரது வேலைக்காரன்.

கடவுள் உன்னைப் பயன்படுத்த விரும்பு.

கடவுள் உன்மூலம் பேசும்படி நீ முதலாவது அவரிடம் பேசு.

ஏன் சாட்சி பகரவேண்டுமென்று திருமறையிலிருந்து கற்றுக்கொள்.

எப்படி சாட்சி பகரவேண்டுமென்றும் திருமறையிலிருந்து கற்றுக்கொள் (அப் 26). சாட்சியில் முகவுரையும், நடுப்பகுதியும், முடிவில் சவாலும் இருக்கவேண்டும்.

உனது சாட்சியை எழுதிப்பார்; அப்பொழுது தேவையற்றவைகளை அடித்துவிடலாம்; சொல்லும்போதும் அமைப்பாயிருக்கும்.

தனியாக இருக்கும்போது உனது சாட்சியைச் சத்தமாகச் சொல்லிப்பார்.

நடையுடை பாவனை மற்றும் உடல் நாற்றம் இவையெல்லாவற்றையும் கவனித்துக்கொள்.



ஆ. சாட்சி பகருதல்



உனது ஆள்தோற்றம், சொல்வளம் போன்றவற்றின்மீது சார்ந்திராமல் தெய்வீக வல்லமையையே சார்ந்திரு.

ஒரு தத்துவத்தையல்ல, இயேசுவாகிய நபரை அறிமுகப்படுத்து.

கிறிஸ்துவின் அன்பு உன்மூலம் பிரகாசிக்கட்டும்.

திருவசனங்கள் மூலம் இரட்சிப்பின் திட்டத்தைத் தெளிவாய் விளக்கு.

உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் முடித்துவிடு.

உண்மையாய்ப் பேசு.

உற்சாகமாயிரு.

சாதகச் சிந்தையுடனிரு.

கண்ணியமாய் நடந்துகொள்.

மக்கள் நம்பத்தகுந்த வகையில் பேசு.

ஆண்டவர் வெற்றி தருவார், ஏனெனில் யுத்தம் அவருடையது என நினைவிற்கொள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக