புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
7 Posts - 64%
heezulia
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
8 Posts - 2%
prajai
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_m10கண் அழுத்த நோய் - Glaucoma  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் அழுத்த நோய் - Glaucoma


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 16, 2023 8:17 pm

கண் அழுத்த நோய் - Glaucoma  TuNfiRD

கண் அழுத்த நோய் ஒரு மெதுவான, அதே சமயம் கடுமையாகத் தாக்கக் கூடிய நோய் என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது.

கண்ணின் மற்ற நோய்களைப் போன்று நேரடியாக இது எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை.. பெரும்பாலான நோயாளிகளுக்கு சாதாரண பரிசோதனையின்போதே கண் அழுத்த நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. கண்டுபிடிக்கும்போதே பலருக்கு ஏற்கெனவே குறிப்பிடத்தகுந்த பார்வை இழப்பு ஏற்படுவதைக் காணலாம்...

ஏன்? எதனால் அதுவரை நோயாளி தன் பிரச்னையைக் கண்டுபிடிக்கவில்லை?

இதற்கான காரணம் மிகவும் எளிது. உடலில் ஏற்படும் வேறு சில அறிகுறிகளையும் இதற்கு ஒப்பாகக் கூறலாம். உதாரணமாக எடை இழப்பை எடுத்துக்கொள்வோம். ஒரே வாரத்தில் 4 அல்லது 5 கிலோ குறைந்தால் சம்பந்தப்பட்டவருக்கு உடனே தெரிந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைந்தால் கண்டுபிடிப்பது கடினம் அல்லவா?

அதேபோல் ரத்தசோகையை எடுத்துக்கொண்டால் காயம் ஏற்படும்போதோ, மாதவிடாயிலோ, மூலம் போன்ற தொந்தரவுகளாலோ உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் நோயாளி அதை ஒரு அவசர பிரச்னையாகக் கருதி உடனடியாக சிகிச்சைக்கு வருவார். ஆனால் வயிற்றில் ஏற்படும் புண்கள், குடற்புழுக்கள் இவற்றால் தினமும் சிறிய அளவில் இரத்தம் வெளியேறி மாதங்கள் கழித்து ரத்தசோகை ஏற்பட்டால் நோயாளி அதை தாமதமாகவே கண்டு கொள்வார்.

இதேபோல்தான் கண் அழுத்த நோயிலும் பார்வை இழப்பு மிக மெதுவாக நடைபெறுவதால் நோயைக் கண்டறியத் தாமதம் ஆகிறது.
ரத்தத்தில் சராசரியாக ரத்த அழுத்தம் 120/80mmHg என்ற அளவில் இருப்பதைப்போல, இயல்பாக கண் பந்தின் நீர் அழுத்தம்(Intraocular tension) 14 முதல் 18 வரை இருக்கலாம். சில சமயம் 21 mm Hg என்ற அளவிலும் இருக்கலாம்.

இந்த சம நிலையை சரியாகக் கடைப்பிடிக்க இரண்டு சுழற்சிகள் கண்ணுக்குள் தொடர்ந்து இயங்குகின்றன. ஒன்று கண்ணில் உள்ள அக்வஸ் Aqueous திரவத்தை சுரக்கும் சிலியரி பிராசஸ்(Ciliary process) பகுதியில் உள்ள சுரப்பிகள். இரண்டாவது இந்த திரவத்தை சீரான இடைவெளியில் வெளியேற்றும் ரத்த நாளங்கள் மற்றும் சிறு துகள்களாலான பாதை அமைப்பு.

இந்த இரண்டில் எதன் சமநிலை பாதிக்கப்பட்டாலும் கண் அழுத்த நோய் ஏற்படும். முதலில் அக்வஸ் திரவத்தை எடுவ்த்துக்கொள்வோம். சில சமயம் இந்த திரவம் வழக்கத்தைவிட அதிகமாக சுரக்க நேரிடும். அதிக திரவத்தை வெளியேற்ற ரத்தநாளங்கள் மற்றும் துகள் பாதைகள் திணறும் சூழல் ஏற்படும். இந்தச் சூழலில் கண் அழுத்தம் அதிகரிக்கும். இந்த வகைதான் ஓபன் ஆங்கிள் க்ளுக்கோமா(Open angle glaucoma) என்று அழைக்கப்படுகிறது.

ஓபன் ஆங்கிள் க்ளுக்கோமா க்ளுக்கோமாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெரும்பாலும் திரவம் சுரப்பதைக் குறைக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் இதற்கான மருந்துகள் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன. சில சமயம் மாத்திரைகளும் தேவைப்படலாம். லேசான உயர் அழுத்த நிலையை சொட்டு மருந்தின் மூலமாகவே கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். மருந்தால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அறுவை சிகிச்சை தேவை.

அடுத்த முக்கியமான வகை க்ளுக்கோமா கண்ணில் அக்வஸ் திரவம் வெளியேறுவதில் நிகழும் தடங்கலால் ஏற்படுவது. இந்த வகையின் பெயர் ஆங்கிள் க்ளோசர் க்ளுக்கோமா(Angle closure glaucoma).

35 முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு அக்வஸ் திரவம் வெளியேறும் பாதை இயல்பாகவே சுருங்கிவிடும். திரவத்தின் தயாரிப்பு சீராக இருந்தாலும் வெளியேறும் இடத்தில் 'டிராபிக் ஜாம்' ஆவதால் இந்த நிலையிலும் கண் அழுத்தம் கூடுகிறது. ஆரம்ப நிலை என்றால் ஆங்கிள் க்ளோசர் க்ளுக்கோமாவுக்கு லேசர் சிகிச்சை மட்டுமே போதுமானது. அதன்பின் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டாலே போதும். முற்றிய நிலையில், இந்த வகை க்ளாக்கோமாவுக்கும் அறுவை சிகிச்சை தேவை.

சீராக இருந்த அக்வஸ் திரவத்தின் போக்குவரத்து திடீரென ஒருநாள் அடைத்துக்கொள்ள நேரலாம். அப்போது சட்டென்று உயர்ந்த கண் அழுத்தத்தால் கண்ணில் வலி, நீர் வடிதல், பார்வைக் குறைபாடு இவை ஏற்படும். இதையே ‘ஆங்கிள் க்ளோஸர் அட்டாக்' என்கிறோம்.
உடனடியாக மருந்துகளின் துணை கொண்டு கண் அழுத்தத்தைக் குறைத்து விட்டு லேசர் சிகிச்சை செய்ய வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் கண்களில் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்.

சரி, உயர் கண் அழுத்தம் எப்படி பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது?!

கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரித்தால் விழித்திரையில் இருக்கும் காங்க்லியான் செல்கள் (Ganglion cells) எனப்படும் செல்கள் மரணிக்க ஆரம்பிக்கும். இந்த செல்கள் இணைந்து தான் விழி நரம்பை கட்டமைக்கின்றன. எனவே, பார்வை நரம்பிலும்(Optic nerve) தேய்மானம் ஏற்படும்.

முதலில் இந்த நரம்பின் ஓரமான பகுதிகள் பாதிக்கப்படுவதால் பார்வை வட்டத்தில் நேர்பார்வை மட்டுமே தெளிவாக இருக்கும்(Central vision). பக்கவாட்டுப் பார்வை குறைந்திருக்கும். இந்த மாற்றம் மிக மெதுவாக நிகழ்வதால் வெகுசிலரே தாமாக இதை உணர்வார்கள். பலருக்கு வழக்கமான பரிசோதனையின்போது மட்டுமே இதைக் கண்டறிய முடியும்.

கண் அழுத்த நோய் சிகிச்சையைப் பொறுத்தவரை ஆறுதலான விஷயம் என்னவென்றால் விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டால் அதற்கு மேல் பாதிப்பு அதிகரிக்காத வண்ணம் பார்வையை ஓரளவுக்குக் காப்பாற்றிவிட முடியும். மேற்கூறிய இரண்டு வகைகளும் பெரும்பாலும் மரபணு சார்ந்து வருபவை. இவை தவிர வேறு பிரச்னைகளாலும் கண் அழுத்த நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கண்ணில் ஏற்படும் கட்டிகளால் உயர் கண் அழுத்தம் ஏற்படலாம். சில வகை கிருமித் தொற்றுகள், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் இவற்றாலும் கண் அழுத்த நோய் ஏற்படக்கூடும். பல நாட்களுக்கு முன் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் வருடங்கள் கழித்தும் கண் அழுத்த நோய் ஏற்படலாம்(Angle recession glaucoma).

சீரான இடைவெளியில் வழக்கமான கண் பரிசோதனை அவசியம் என்பதை இந்தத் தொடரில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறோம். வேறு எந்த பிரச்னைகளையும் விட க்ளுக்கோமாவுக்கு அத்தகைய பரிசோதனை மிகவும் அவசியம். 35 வயதுக்கு மேல் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் கண் பரிசோதனை தேவை. குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்குக் கண் அழுத்த நோய் இருந்தால் அவரது உடன் பிறந்தோர், மகன், மகள் முதலிய ரத்த சொந்தங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சிலர் கண்ணாடிக் கடைகளில் வழக்கமாகக் கண்ணாடி வாங்கும்போது ‘ஆட்டோமேட்டட் ரெப்ராக்டோமீட்டர்' பரிசோதனையை மட்டுமே செய்து கொள்வார்கள் அல்லது அழுத்தமானி (Tonometer) மூலமாகக் கண் அழுத்தத்தை மட்டும் சோதித்துவிட்டு திருப்திப்பட்டுக் கொண்டு செல்வார்கள். மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வதில்லை.

நார்மல் டென்ஷன் க்ளுக்கோமா என்று ஒரு பிரிவு உண்டு. இந்த பிரச்னையில் கண் அழுத்த நோய்க்கான அனைத்து பாதிப்புகளும் காணப்படும். ஆனால், கண் அழுத்தம் குறைவாகவோ(Normal or low tension glaucoma) சரியான அளவிலோ இருக்கும். எனவே, கண் அழுத்த நோய்க்கான மற்ற அம்சங்களையும் சோதனை செய்தால்தான் உறுதியாக கூற முடியும்.

கண் அழுத்த நோய் இருக்கிறதா, எந்த நிலையில் இருக்கிறது என்று முடிவு செய்ய செய்யப்படும் பரிசோதனைகள்…

* கண் அழுத்தம் அளத்தல்- Tonometry
* கண் ஓரத்தின் துகள் பாதையை அளவிடல் - Gonioscopy
* பார்வை பரப்பு கணக்கிடல்- Automated perimetry
* கருவிழியின் கனத்தை அளத்தல்- Pachymetry
* கண் நரம்பு பரிசோதனை - Ophthalmoscopy, Optic disc imaging
* விழித்திரை அமைப்பை பரிசோதித்தல்- Optical coherence tomography.

இந்த அனைத்து பரிசோதனை களையும் தேவைக் கேற்ப முறையாகச் செய்வதுடன் அவற்றைப் பதிவேடுகளில் சேமித்துப் பாதுகாப்பதும் மிக அவசியம்.



குறிச்சொற்கள் #க்ளுக்கோமா #Glaucoma #கண்_அழுத்த_நோய்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக