புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
25 Posts - 69%
heezulia
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
361 Posts - 78%
heezulia
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
8 Posts - 2%
prajai
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_m10சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 05, 2023 1:02 pm

சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி சிங்கனாப்பூர். Vikatan%2F2023-02%2F5c10795a-656c-495f-98c1-c3d1ee3fe8dc%2F24.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
நவகிரகங்களில் சனி பகவானும் ஒருவர். இவரை சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் புராணங்கள் போற்றுகின்றன. ‘சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு!

விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர்! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின. ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. கர்ம வினைகளுக்கு ஏற்ப உரிய பலாபலன்களை பாரபட்சமின்றி வழங்கும் மூர்த்தி இவர்.

திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு போன்ற சனி பகவான் வழிபாட்டுக்கு உகந்த தலங்களை நாமறிவோம். அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் #சனிபகவான் அருளோச்சும் அற்புதத் தலம் சனி #சிங்கனாப்பூர்.

அவுரங்காபாத்- அகமத் நகர் நெடுஞ்சாலையில் கோடேகான் எனும் இடத்தில் பிரியும் சாலை வழியாகச் சென்றால், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். மகான் சாயிபாபா கோயில் கொண்டிருக்கும் ஷீர்டியிலிருந்து சுமார் 74 கி.மீ. தொலைவு. ஷீர்டிக்குச் செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் சனி சிங்கனாப்பூரையும் தரிசித்து வருவது வழக்கம்.

இங்கே இவரைப் பக்தர்கள் #சனி_மகராஜ் என்றே அழைக்கிறார்கள். தமக்கான கோயிலில் வானமே கூரையாக, தட்டையான கல் வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சனி மகராஜ். சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரம். ஒண்ணரை அடி அகலம்.

இந்தக் கோயிலுக்குக் கிழக்கே, சிறிய ஆறு ஓடுகிறது. 400 வருடங்களுக்குமுன் ஒரு முறை பெய்த பெரும் மழையால் இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், மேற்குறிப்பிட்ட சுயம்பு மிதந்து வந்து கரையோரத்தில் கொடிகளிடையே சிக்கிக் கொண்டதாம். மாடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர், சுயம்புக் கல்லைப் பார்த்து அதிசயப்பட்டனர். உடனே தங்கள் கையில் இருந்த கம்பினால், அந்த சுயம்புக் கல்லை நெம்பினர். மிகுந்த பலத்துடன் நெம்பியதால், சுயம்புவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பொங்கி வழிந்தது.

இதைக் கண்டு பயந்த சிறுவர்கள், ஓடிப் போய் ஊர்ப் பெரியவர்களிடம் தெரிவித்தனர். ஊர்ப் பெரியவர்களும் ஓடி வந்து இந்த அதிசயத்தைக் கண்டனர். எனினும் என்ன செய்வதென்று தீர்மானிக்க முடியவில்லை.

அன்று இரவு அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவரது கனவில் தோன்றிய சனி மகராஜ், தான் கல் வடிவில் ஆற்றங்கரையில் உள்ள செடி-கொடிகளிடையே சிக்கி இருப்பதாகவும், தன்னை எடுத்துச் சென்று ஊரில் பிரதிஷ்டை செய்யுமாறும் கூறினார். மறுநாள் அந்தக் கிராமவாசி, இந்தத் தகவலை மற்றவர்களிடம் சொன்னார். உடனே ஊரார் ஒன்று சேர்ந்து அந்த சுயம்பு விக்கிரகத்தை எடுத்து வந்து, பிற்பாடு பிரதிஷ்டை நடந்தது.

பின்னாளில் பக்தர் ஒருவர், மேடை ஒன்றைக் கட்டி அதன் மேல் சற்று உயரத்தில் இருக்கும்படி இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்ய விரும்பினாராம். ஆனால், ‘உயரத்தில் வைக்க வேண்டாம்... சுற்றிலும் மேடை கட்டவும்!’ என்று அசரீரியாக உத்தரவு வந்ததாம். அதன்படியே இப்போது உள்ள இடத்தில் சனி மகராஜ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

மழையிலும் வெயிலிலும் வெட்ட வெளியில் சனி மகராஜ் கம்பீரமாக நிற்கிறார். ‘சனி மகராஜ் சிலைக்கு மேலே விமானம் எழுப்பலாம்!’ என்று பக்தர்கள் சிலர் தீர்மானித்தனர். அப்போது அவர்களது கனவில் தோன்றிய சனி மகராஜ், ‘‘எனக்குக் கூரை வேண்டாம்... வெட்ட வெளியே போதும்!’’ என்றாராம். அதனால் இங்கு விமானம் கிடையாது!

சனி மகாராஜ் மீது நிழல் படவே கூடாதாம். சனி மகராஜ் சிலைக்கு வட பகுதியில் வேப்ப மரம் ஒன்று உண்டு. அந்த மரத்தின் கிளை வளர்ந்து, மதிய நேரத்தில் சுயம்பு வடிவத்தில் நிழல் பட்டதால், அந்தக் கிளை தானாகவே முறிந்து விழுந்ததாம்!

இந்த சனி மகராஜ், சனி சிங்கனாப்பூரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். இவரது ஆணைப்படி இங்குள்ள எந்த வீட்டுக்கும் வாசல் மற்றும் அறைகளுக்குக் கதவுகள் இல்லை. இங்குள்ள கடைகளில் எவ்வளவு விலை உயர்ந்த பொருட்கள் இருந்தாலும், இரவில் திரைச் சீலை அல்லது கித்தான் துணி போட்டுத்தான் மூடுகிறார்கள். அதே போல் வீடுகளிலும் துணித் திரைதான்.

இந்த நம்பிக்கையை மீறி, அன்பர் ஒருவர் கதவு வைத்து வீடு கட்டினாராம். மறுநாளே அவர் விபத்தில் சிக்கினார். அதேபோல் ஒருவர் இவ்வூரில் திருட முயன்ற ஒருவரும் சனிபகவானின் கடுமையான தண்டனைக்கு ஆளானாராம்.

இப்போதும் வீடுகளில் கதவுகள் கிடையாது. நாய் போன்ற விலங்குகள் அத்துமீறி நுழையக்கூடாது என்பதற்காக தடுப்புப் பலகையை மட்டும் பயன்படுத்துகின்றனர். தபால் நிலையம், வங்கி போன்றவையும் கதவு இல்லாமல்தான் கட்டப்பட்டுள்ளது. காவல் நிலையம்கூட 2015-ல்தான் திறக்கப்பட்டதாம்.

நாள்தோறும் சுமார் 40,000 பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். சனிக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என்கின்றனர்.

ஆரம்பத்தில் இக்கோயிலில் பெண்கள் சாமியை தொட்டு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஆண்கள் குளித்துமுடித்து காவி உடை அணிந்துதான் சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற நியதி இருந்தது. இப்போது அனைத்தும் மாறிவிட்டன. பெண்கள் தங்களது குடும்பத்தினரோடு சேர்ந்து சனி மகராஜ் அருகில் சென்று தொட்டு வணங்கிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தக் கோயிலில் சனி மகராஜ் அருள்தரும் இடத்துக்குமுன் சிறியளவில் அனுமனும் சிவபெருமானும் அருள்பாலிக்கின்றனர். நேர் எதிரில் மகாலட்சுமி சந்நிதி. அங்கேயே உதேசிபாபா என்ற மகானின் சமாதியும் உள்ளது. இவர், சிறு வயது தொடங்கி தன் ஆயுள் முழுக்கவும் சனி மகராஜுக்குச் சேவை செய்து 87 வயதில் முக்தி அடைந்தாராம். அவருக்கும் இங்கே சிலை உண்டு.

மேலும் பல பரிவார தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் நுழைவு வாயிலில் இருக்கும் திரிசூலத்திற்கு எருக்க இலை மாலை அணிவித்து வணங்கிவிட்டு உள்ளே செல்கின்றனர். சனி மகாராஜுக்கு எண்ணெய் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். தொட்டி போன்ற கலன்களில் பக்தர்கள் சேர்க்கும் எண்ணெய் சனிமகராஜ் சிரத்தின் மீது தாரையாக வழியும்படி செய்திருக்கிறார்கள்.

ஆலய நிர்வாகத்தால் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்கள் 500 ரூபாய் கட்டி ரசீது பெற்றால், சனீஸ்வரர் இருக்கும் பீடத்தின் மீது ஏறி சிலைக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யலாம். கோயிலில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

தினமும் காலை 4 முதல் 5 மணி வரை நிகழும் காகட் ஆரத்தியுடன் தொடங்கி இரவு 11 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

எப்படி செல்வது? வெளி மாநிலங்களிலிருந்து இக்கோயிலுக்கு விமானம், பஸ், ரயில் மார்க்கமாக வர முடியும். விமானம் மூலம் வருவோர் ஷீர்டி அல்லது புனே நகரை அடைந்து, அங்கிருந்து சனி சிங்கனாப்பூருக்குச் செல்லலாம். சென்னையிலிருந்து வருவோர், புனே நகருக்கு முந்தைய தவுண்ட் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சனி சிங்கனாப்பூருக்குச் செல்லலாம்.

சக்தி விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக