புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதோஷ வரலாறு
Page 1 of 1 •
தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானையின்) மீது அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார்.
தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது போலும். எப்போது பார்த்தாலும் ''பிடி, சாபம்!'' என்று சொல்லும் துர்வாசர், தன் கையில் இருந்த மலர் மாலையை, மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.
தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். துர்வாசரின் கண்கள் சுருங்கின.
யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது.
வெடித்தார் துர்வாசர். ''தேவேந்திரா! அவ்வளவு ஆணவமா உனக்கு? வெறுக்கை (செல்வத்தின்) மேல், வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள். லட்சுமிதேவியின் அருள் கடாட்சம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில், அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன். ஆனால், செல்வச் செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ, அதை அலட்சியப்படுத்தி விட்டாய். உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய்!'' என சாபம் கொடுத்தார்.
உத்தமர் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது செல்வங்கள் அவனை விட்டு நீங்கி மறைந்தன. பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. ஆகவே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று.
திருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.
சோதனை போல, மத்தான மந்தர மலை கடலுக்குள் அமிழத் தொடங்கியது. உடனே மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கி, மூழ்காதபடி தடுத்தார். பழையபடியே கடலைக் கடைந்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது. ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் அங்கிருந்து ஓடி, நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள்.
'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே! உமையருபாகா! கங்காதரா! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் ஸ்வாமி... அபயம்... அபயம்!'' என்று வேண்டினர்.
#சிவபெருமான் திரும்பினார். அருகில் இருந்த அவரின் மறு வடிவான சுந்தரரைப் பார்த்தார்: ''கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா!'' என்றார்.
இந்த இடத்தில் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், '''சுந்தரா! அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா!’ என்றார் பரம்பொருளான சிவபெருமான்!'' என அழகாக நயம்படக் கூறுவார்.
விஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர். ஆலகால விஷத்தைக் கொண்டு வந்ததால் அவர், 'ஆலால சுந்தரர்’ எனப்பட்டார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு '(திரு)நீலகண்டர்’, 'ஸ்ரீகண்டன்’ என்ற திருநாமங்கள் உண்டாயின.
(சிவபெருமான் விஷத்தை உண்டபோது, 'அகில உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால், உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும். விஷம், வெளியே வந்து விட்டாலோ, தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள். யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகால விஷத்தால் உண்டாகக் கூடாது!’ என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள். விஷம் அங்கேயே நின்று விட்டது என்றும் சொல்வது உண்டு.)
அனைவரும் மனக் கலக்கம் தீர்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.
மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே 'பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.
பிரதோஷ தரிசனம் பாவ விமோசனம்!!
#பரமேஸ்வரன் விஷம் உண்டது, ஏகாதசி தினத்தில்; அயர்ச்சியில் படுத்து, கண்ணுறங்கியது துவாதசியில்; உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில்... இந்தக் காலத்தைத்தான் #பிரதோஷ_காலம் என்கிறோம்.
14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகி விடுவார்கள்.
சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம்.
மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு சூடக் கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.
ரஜனீ-பிரதோஷம்
பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.
வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.
தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் #பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரதோஷங்கள் ஐந்து!
பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.
நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை
மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.
சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை:
முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.
பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். 'சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.
பிரதோஷ விரதம் இருப்பது எப்படி?
பிரதோஷ நாள் என்பது சிவனை பழிப்பட சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை நந்தி தேவர் தன்னுடைய தவத்தை களைத்து சிவனை நோக்கி விரதம் இருப்பவர்களின் கோரிக்கையை கேட்டு அதை நிறைவேற்றுவார்.
பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு பிரதோஷ நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம். நேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம்.
மாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வளம் வந்து விரதத்தினை முடிக்கலாம்.
பிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.
எந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள்!!
ஞாயிறு பிரதோஷம்: சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் சோமவார பிரதோஷம்: பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
செவ்வாய் பிரதோஷம்: செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
பலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும், ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
புதன் பிரதோஷம்: புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
வியாழன் பிரதோஷம்: குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
வெள்ளி பிரதோஷம்: சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சனி மஹா பிரதோஷம்: சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனிக்கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.
பிரதோஷ காலத்தில் அந்த சிவபெருமானின் ஆசியை முழுமையாக பெறுவதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களுக்கான சிவமூர்த்தி ஸ்தோத்திரம் இதோ..
சிவமூர்த்தி ஸ்தோத்திரம்:
1. ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி
2. ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி
3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி
4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி
5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி
6.ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி
7. ஓம் உலகமே நாயகனே லோகநாயகா போற்றி போற்றி அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி
8. ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி
9. ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி
10. ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி
11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி
12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி
13. ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி
14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்புநாதா போற்றி போற்றி
15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி
16. ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி
17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ
பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலமான 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் இந்த மந்திரத்தை ஏதாவது ஒரு சிவ ஆலயத்திற்கு சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின்பு இந்த சிவமூர்த்தி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தோடு சேர்த்து சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.
இந்த பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1