by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தன்னுடைய வேட்பாளரை அறிவித்துள்ளது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக.
ஈரோட்டுத் தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெறவில்லை. தவிர, கூட்டணியின் பெயரும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று எழுதப்பட்டுள்ளது.
இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. இபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கும் எதிரணியை அசைத்துப் பார்க்கக் கூடிய பின்புலமும் இருக்கிறது.
அதிமுகவின் இபிஎஸ் அணி தானாக வேட்பாளரை அறிவிக்கும் என்பதை யார் எதிர்பார்த்திருந்தாலும் பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் என்றதும் காங்கிரஸ் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதைவிட ஆளுங்கட்சியான திமுகவே போட்டியிடலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதி காங்கிரஸுக்கு, வலிந்து திமுக போட்டியிடுவதுதான் ரிஸ்க். ஒருவேளை தோற்க நேரிட்டால் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதில் சங்கடங்கள் உருவாகிவிடும், காங்கிரஸையே நிறுத்தி முழுமூச்சாக பணியாற்றுவோம் என்று திமுக தலைமையிடம் உள்ளூர் திமுக தலைவர்கள் வலியுறுத்த அப்படியே ஆனதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிய நகர்வுதான் இன்னொரு மகனுக்குப் பதிலாக இவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதும்.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்றதுமே எதிர்த்து யார் போட்டியிடப் போவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் நிறையவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் என்று அறிவித்த நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் எல்லாம் ஒருசேர ஆதரித்தால் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் எளிதில் ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற ஆவல் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் காணப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சியில் சரஸ்வதியும் பெற்ற வெற்றியும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றமும் இந்த எண்ணத்துக்கு நெய்யூற்றின.
உள்ளூர இருந்த பாரதிய ஜனதாவின் இந்த ஆசையைத்தான் அதிமுகவின் மற்றோர் அணித் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியொன்றில் எதிரொலித்தார் - பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று (இத்தகைய ஆசையை பாஜகவினர் மனதில் விதைத்தவரே ஓ. பன்னீர்செல்வமாக இருக்கலாமோ என்னவோ?). இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, புதன்கிழமை மாலையில் தங்கள் அணி வேட்பாளர் அறிவிப்பின்போதும்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில், தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
ஆனால், பாஜகவின் நினைப்புக்கு மாறாக, அதிமுகவின் பிற அணித் தலைவர்களான பழனிசாமியோ, அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனோ இந்தக் கருத்தைப் பொருட்படுத்தவே இல்லை. போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததுடன், அமமுகவோ வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், என்ன மாயமோ பாரதிய ஜனதா போட்டியிடும் என்ற பேச்சு திடீரென நின்றுவிட, ஈரோடு கிழக்கில் போட்டியில்லை, அதிமுகதான் வலுவான கட்சி என்று பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.
இத்தகைய சூழ்நிலையில்தான், யாருக்கு ஆதரவு என்ற தங்களுடைய முடிவைத் தாமதப்படுத்துவதன் மூலம் - இழுத்தடிப்பதன் மூலம், நெருக்கடியை ஏற்படுத்த முடியும், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை, இபிஎஸ் அணியைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும், இடைத்தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை ஒன்றுசேர்த்துவிட முடியும் என்றெல்லாம் பாஜக நம்பிக் கொண்டிருந்தது (இதனிடையே, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தன).
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த மாதிரியெல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாஜகவின் ஆதரவுக்காகவோ, ஒப்புதலுக்காகவோ காத்துக்கொண்டும் இருக்காமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தங்கள் வேட்பாளரை இன்று (பிப். 1) அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பின் காரணமாக, வேறு வழியே இல்லாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியை, வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டே தீர வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணி வேட்பாளரின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எல்லாராலும் எளிதில் ஊகித்துவிட முடியும்.
பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள இபிஎஸ் அணி வேட்பாளரை விட்டுவிட்டு, அதிமுகவின் ஓரணிக்கு, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் முடியாது. அப்படியே அறிவித்தாலும் மேலும் குழப்பங்கள்தான் ஏற்படும்; அதன் விளைவும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில்தான், திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில், கூட்டணியின் பெயரை மாற்றியிருப்பது பற்றி உரிய நேரத்தில் பதிலளிப்பேன். எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வரை பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அறிவிப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் என்ன கருதுகிறது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதிமுக அணிகளின் இணைப்பை அல்லது ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்றே வழிகள்தான் இருக்கின்றன.
1. ஆளுங்கூட்டணிக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அணியை ஆதரிப்பது.
2. ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளரை ஆதரிப்பது.
3. ஆளும் திமுக அணிக்கு எதிராக வலுவான அணியும் வேட்பாளரும் தேவை என்ற நிலையில் அதிமுக அணிகளின் ஒற்றுமையைத்தான் விரும்பினோம். ஆனால், அதிமுக தலைவர்கள் இணங்கி வராததால் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துவிடுவது.
ஓபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரையே அறிவித்துவிட்ட எடப்பாடி அணியை ஆதரிப்பதிலும் பாஜகவுக்கு தர்மசங்கடங்கள் இருக்கின்றன.
இரண்டு அணிகளையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டு, விருப்பமானவர்களுக்கு வாக்கு என அறிவித்துவிடுவதன் மூலம், இடைத்தேர்தலையே தவிர்த்துவிட்டால், எப்போதும் போல கொங்கு மண்டல செல்வாக்கு என்ற தங்களுடைய பிம்பத்தையும் பாரதிய ஜனதாவால் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
இவற்றையெல்லாம் தாண்டி வேறு திட்டம் எதையேனும் பாரதிய ஜனதா வைத்திருக்கிறதா? தெரியவில்லை.
இயன்றவரை தாமதப்படுத்தினாலும் வாய்ப்புகளை அறிந்துகொண்ட பிறகு, எப்படியும் விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் நிலை என்ன? என்பதை பாரதிய ஜனதா அறிவிக்க வேண்டியிருக்கும். அதற்கான வேலையைத்தான் விரைவுபடுத்தித் தொடங்கிவைத்திருக்கிறார் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஈரோடு கிழக்கு: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு!
ஈரோடு: ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் புதன்கிழமை காலை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கே.எஸ்.தென்னரசு பிரிக்கப்படாமல் ஒரே தொகுதியாக இருந்த ஈரோடு தொகுதியில் 2001 தேர்தல், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என இரு தொகுதிதளாக பிரிக்கப்பட்ட பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
2021 தேர்தலில் அவர் போட்டியிட விரும்பிய நிலையில் கட்சி உத்தரவின்படி தமாகா வேட்பாளரான எம்.யுவராஜாவுக்கு இந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார்.
அதிமுக ஆளும்கட்சியாக இருந்த காலங்களில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்ததால் கட்சியினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்கு அறிமுகமானவாராக கே.எஸ்.தென்னரசு உள்ளார்.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு கடும் போட்டியாக இருப்பார் என அதிமுகவினர் தெரிவித்தனர்.
ஈரோடு அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மோடி, பாஜக தலைவர்கள் படமின்றி பேனர்!
ஈரோடு: பதாகையில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் படம் இல்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனைய திறந்து அதிமுக அதிரடி காட்டியுள்ளது.
#ஈரோடு_கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என யாருக்கு ஆதரவு என தெரிவிக்காமல் பாஜக காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனையை அதிமுக திறந்துள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவப்பிராசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக வேட்பாளரை புதன்கிழமை அறிவித்தது. தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வேட்பாளர் அறிவிப்பு வெளியானது. அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என உள்ளது. பாஜக முடிவை அறிவிக்காத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனையை அதிமுக திறந்துள்ளது.
இந்த பதாகையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. பாஜக முடிவை பொறுத்து பதாகையை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருப்பதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில் செந்தில் முருகன் போட்டியிடுவார். வேட்பாளர் செந்தில்முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்பேன். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு எக்காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்,
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே, ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று காலை அதிமுக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்: எர்ணாவூர் நாராயணன் தகவல்
சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்ரவரி 27ம்தேதி நடைபெற இருக்கும் ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சமத்துவ மக்கள் கழகம் பிரசாரத்தில் ஈடுபடும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்களையும், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு, கொரோனாவை தடுப்பதற்கான முழு நடவடிக்கை உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். இதையடுத்து, எர்ணாவூர் நாராயணன், தேர்தல் பணிக்குழு பொருளாளராக எம்.கண்ணன், கொங்குமண்டல செயலாளராக கோவிந்தசாமி, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக சங்கர்குமார், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக முருகேசன், மாவட்ட இளைஞரணி கோவிந்தசாமி, மாவட்ட இணை இளைஞரணி தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி சிவகுமார் ஆகியோரை நியமித்துள்ளார்.
இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் மறைந்த எம்எல்ஏ. ஈவெரா திருமகனின் அப்பா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி, அமமுக, உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், பாஜக போட்டியிடுமா அல்லது அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல் தற்போது ஒபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக இருக்கும் அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தொடர்பான பரபரப்பும் நிலவி வந்தது.
இதனிடையே இன்று காலை அதிமுகவின் இபிஎஸ் அணி தங்களது வேட்பாளரை அறிவித்தது. இதனால் பாஜக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது இந்’த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே ஒபிஎஸ் தரப்பு தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கூட்டணி தலைவர்களுடன் என்ன பேசினோம் என்பதை சொல்வது நாகரிகம் இல்லை. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இதுவரை ஆளும்கட்சியே பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் வெற்றி பெற்றுள்ளது. எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே, எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டம் அரசு நடத்தியதா அல்லது தி.மு.க நடத்தியதா என தெரியவில்லை.
அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என தான் பேசியுள்ளார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும். தி.மு.க தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தப் போகிறது.
இடைத்தேர்தல் என்பது எந்த கட்சியின் பலத்தையும் நிரூபிப்பதற்கானது அல்ல. பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதிமுக இபிஎஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்.
பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் - ஓ.பன்னீர் செல்வம்
இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றுக்கொள்ளோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்றும் ஒருவேளை பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று ஏற்கனவே கூறினோம். ஏற்கனவே நான் எங்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஒன்று சேர்ந்து நேரடியாக பாஜக அலுவலகம் சென்று பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளும் நிறைந்திருந்தார்கள்.
அவர்களிடம் எங்களுடைய ஆதரவை கேட்டோம். பாஜக போட்டியிடும் என்று கூறினால் எங்கள் தார்மீக ஆதரவையும் தருவோம் என்ற வாக்குறுதியையும் அளித்துவந்துள்ளோம்.
இடைத்தேர்தலில் பாஜக தங்கள் வேட்பாளரை நிறுத்தும் என்ற உறுதியாக தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன் எங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றுக்கொள்ளோம்' என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முடிவுகள் எடுப்பதில் திணறுகிறாரா அண்ணாமலை?!
``முந்தைய தேர்தல்களிலெல்லாம் அதிமுக அலுவலகம் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தோம். இப்போது மிக பலவீனமாக இருக்கக்கூடிய அவர்கள், இந்த நேரத்திலும் பா.ஜ.க அலுவலகம் ஏறவில்லையென்றால் வேறு எப்போது ஏறுவார்கள்?”
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க தரப்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாக #ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களமிறக்கி கூட்டணியிலிருக்கும் அனைவரும் அவருக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டங்கள், வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு என வேலைகளை முடுக்கியிருக்கின்றனர்.
ஆனால், மறுபக்கம் அ.தி.மு.க கூட்டணியிலோ பல குளறுபடிகள். அதில் முக்கியமாக அ.தி.மு.க-வுக்குள்ளேயே இ.பி.எஸ் தரப்பில் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும், #ஓ.பி.எஸ் தரப்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து இருவருமே வேட்பாளர்களை அறிவித்திருப்பதால், யாரை ஆதரிப்பது என்கிற பலமான குழப்பம் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் நீடிக்கிறது. அதோடு, ‘#பா.ஜ.க நின்றால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்குவோம்... பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்போம்’ என்கிறார் ஓ.பி.எஸ் ஒருபக்கம். மறுபக்கமோ, ‘பா.ஜ.க நின்றாலும் நாங்கள் போட்டியிடுவது உறுதி. முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டோம்’ என்கிறார் #இ.பி.எஸ் ஆதரவாளர் ஜெயக்குமார்.
நிலைமை இவ்வாறு இருக்க அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளைவிட பெரிய கட்சியாகவும், தேசியக் கட்சியாகவும் இருக்கும் பா.ஜ.க தன் முடிவுகளை எடுக்க ஏன் திணறுகிறது என்கிற கேள்விகளோடு பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “கடந்த 31-ம் தேதி பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நடந்த பெருங்கோட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மூன்று விஷயங்கள் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டது. ஒன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், இரண்டு பாதயாத்திரை, மூன்றாவதாக இந்த ஒன்றாம் தேதிலிருந்து பதினைந்தாம் தேதிவரை க்யூ ஆர் கோடு அறிமுகம் செய்து கட்சிக்கான நிதிவசூல் குறித்து பேசினோம். ஈரோடு தேர்தல் குறித்து பேசும்போது, ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க தேவையில்லாமல் தனது ஆற்றலைச் செலவு செய்ய வேண்டாம் எனக் கருகிறேன். இடைத்தேர்தலில் நாம் அக்கறை செலுத்த வேண்டாம். தேசிய தலைமையிடம் நமது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு இன்னும் இரண்டு நாள்களில் முறைப்படி நாம் அறிவிப்போம்’ என்று மாநிலத் தலைவர் பேசினார்.
பொதுவாக எங்கள் கட்சிக்கென்று சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறது. அதையெல்லாம் பின்பற்றித்தான் டெல்லி தலைமை உத்தரவின் பேரில் முடிவுகள் எடுக்கப்படும்” என்றவர்களிடம், ‘அ.தி.மு.க இ.பி.எஸ் சார்பில் பணிமனையில் வைக்கப்பட்ட பேனர்களில் கூட்டணியின் பெயர் மாற்றம், புகைப்படம் இடம்பெறாதது போன்றவற்றைப் பார்க்கும்போது, பா.ஜ.க-வை அவர்கள் மதிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா...’ என்கிற கேள்வியை வைத்தோம்.
``அவர்கள் மதிக்கவில்லை என்பதைத்தாண்டி இன்னும் எங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காதபோது எப்படி எங்கள் புகைப்படத்தை வைக்க முடியும். அதில் எங்கள் புகைப்படம் மட்டுமில்லை கூட்டணியிலிருக்கும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் புகைப்படங்களும்தானே இல்லை. பா.ம.க விலகிக்கொண்டுவிட்டோம் என்பதால் அவர்களின் படங்களும் இல்லை. எனவே, எங்கள் முடிவு தெரிந்த பிறகு வைக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இதற்கு முந்தைய தேர்தல் எல்லாம் அ.தி.மு.க அலுவலகம் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தோம். இப்போது மிக பலவீனமாக இருக்கக்கூடிய அவர்கள், இந்த நேரத்திலும் பா.ஜ.க அலுவலகம் ஏறவில்லையென்றால் வேறு எப்போது ஏறுவார்கள்?” என்கிறார்கள்.
ஈரோட்டில் தேர்தல் பணியிலிருந்த அ.தி.மு.க சீனியரான முன்னாள் அமைச்சர் ஒருவரோ, “எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. இடைத்தேர்தல் அறிவித்ததும் உண்மையான அ.தி.மு.க-வான நாங்கள் போட்டியிட முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் அண்ணன் இ.பி.எஸ் தி.மு.க-வுக்கு நிகராக ஆரம்பத்தில் இருந்தே தீவிரமான களப்பணியை முடுக்கிவிட்டிருக்கிறார். தேர்தல் பணிக்குழு அமைத்து வீடு வீடாக வாக்காளர்கள் உண்மையான வாக்காளர்கள்தானா அல்லது முகவரி மாறி இடம் பெயர்ந்தவர்களும் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்களா என்ற ஆய்வுப் பணியை முதலில் செய்தோம். இந்த அடிப்படையில்தான் பல ஆயிரம் வாக்குகள் மாறி இருந்ததன் அடிப்படையிலும், இங்கு ஆளும் விடியா தி.மு.க அமைச்சர்கள் அரங்கேற்றும் அராஜகப் போக்கையும் ஆதாரத்தோடு ஜெயக்குமார் தேர்தல் ஆணையரிடம் புகாராகக் கொடுத்தார்.
நாங்கள் கமலாலயம் போனபோதும் ‘முழு மனதோடு ஆதரவு கொடுங்கள். நாங்கள் மக்கள் மன்றம் செல்கிறோம்’ என்றுதான் சொல்லிவந்தோம். பா.ஜ.க எங்களை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கினாலும் பரவாயில்லை, தனிச் சின்னத்தில் போட்டியிட்டாவது அ.தி.மு.க-வை மீட்போம்.
மக்கள் இன்று ரொம்ப பக்குவமாக இருக்கிறார்கள். எல்லா விஷயங்களையும் பார்க்கிறார்கள், அனுமானிக்கிறார்கள். முன்பைப்போல் வெளியில் எதையும் காட்டிக்கொள்வதில்லை. ஆனால், இவர்கள் முடிவு ஓட்டு போடும்போதுதான் தெரிகிறது. இப்போது எங்கள் வேட்பாளர் வலிமையாகவே களத்தில் இருக்கிறார். ஈ.வி.கே.எஸ்-ஸுக்குப் பெயர்தான் இருக்கிறதே தவிர, மக்களிடத்தில் பெரிய மரியாதையோ, அவரின் கள செயல்பாடுகளால் பெயரோ எடுக்கவில்லை. கடந்த முறையே எங்களுக்கு சரியான ஃபீல்டு ஒர்க்கர்ஸ் கிடைக்காததால்தான் அந்த தம்பி வெற்றிபெற முடியாமல் போனார். இப்போது எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் பம்பரம்போல் களத்தில் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அரசியலாகவும் சில மாற்றங்கள் வந்துகொண்டிருக்கிறது. அதையும் மறுசீரமைக்க வேண்டும் என்கிற வேகம் ஒவ்வொரு கட்சிக்காரங்களிடமும் இருக்கிறது. எனவே, இந்த இடைத்தேர்தல் அ.தி.மு.க-வுக்கான ஒரு பலப்பரீட்சைத்தான். அதேவேளையில் பா.ஜ.க எந்த முடிவெடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.
``திமுக-வை எதிர்க்க அதிமுக-வினர் ஒன்றுசேர வேண்டும்!” - நெல்லையில் டி.டி.வி.தினகரன் பேட்டி
”ஒருசிலரின் சுயநலத்தால் ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க பலவீனமாகிவிட்டது. தி.மு.க-வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணையும் காலம் விரைவில் வரும்” என்றார் டி.டி.வி.தினகரன்.
நெல்லை மாவட்டம், தச்சநல்லூரில் அ.ம.மு.க நிர்வாகியான ராமலிங்கஜோதியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் அ.ம.மு.க-வினர் செயல்பட்டுவருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் வைப்பதில் தவறில்லை. அவர் தமிழுக்காக நிறையச் செய்திருக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சந்தித்துவரும் சூழலில் நினைவுச்சின்னம் அமைப்பது தவறு. வேண்டுமானால் தி.மு.க சார்பாக அவர்களின் கட்சி அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நினைவுச்சின்னத்தை அமைத்துக்கொள்ளலாம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடுவோம். தி.மு.க என்ற அரக்கனை வெளியேற்ற அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவும் வாய்ப்பிருக்கிறது. - டி.டி.வி.தினகரன்
தற்போது இருக்கும் சூழலில், இரட்டை இலைச் சின்னம் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்யும். தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பது ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும். 2017-ல் நானும் ஓ.பி.எஸ்-ஸும் இரட்டை இலைச் சின்னத்துக்காக மனுத் தாக்கல் செய்தோம். அப்போது தேர்தல் ஆணையம் இருவருக்கும் கொடுக்காமல் சின்னத்தை முடக்கிவிட்டது. அது போலக்கூட இப்போது நடக்கலாம்.
தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கையொப்பமிட வேண்டும். இல்லாவிட்டால் சின்னம் முடக்கப்படும். ஒருசிலர் தங்களின் சுயநலத்துக்காக ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க என்னும் இயக்கத்தைப் பலவீனமடைய வைத்துவிட்டார்கள். அது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.
சுயநலத்துடன், பணத்திமிறில் சிலர் செயல்பட்டுவருகிறார்கள் அதன் காரணமாகவே நாங்கள் அ.தி.மு.க என்னும் இயக்கத்தைவிட்டு வெளியேறி அ.ம.மு.க-வைத் தொடங்கினோம். கடந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வருகிற தேர்தலில் வெற்றிவாய்ப்புக்காகப் பாடுபடுவோம். தி.மு.க-வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணையும் காலம் விரைவில் வரும்” என்று டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் மோசடி- தலைமை தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார்
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை.
தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தலாம் என கால அவகாசம் இருந்தும் அவர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்