by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தன்னுடைய வேட்பாளரை அறிவித்துள்ளது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக.
ஈரோட்டுத் தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெறவில்லை. தவிர, கூட்டணியின் பெயரும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று எழுதப்பட்டுள்ளது.
இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. இபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கும் எதிரணியை அசைத்துப் பார்க்கக் கூடிய பின்புலமும் இருக்கிறது.
அதிமுகவின் இபிஎஸ் அணி தானாக வேட்பாளரை அறிவிக்கும் என்பதை யார் எதிர்பார்த்திருந்தாலும் பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் என்றதும் காங்கிரஸ் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதைவிட ஆளுங்கட்சியான திமுகவே போட்டியிடலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதி காங்கிரஸுக்கு, வலிந்து திமுக போட்டியிடுவதுதான் ரிஸ்க். ஒருவேளை தோற்க நேரிட்டால் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதில் சங்கடங்கள் உருவாகிவிடும், காங்கிரஸையே நிறுத்தி முழுமூச்சாக பணியாற்றுவோம் என்று திமுக தலைமையிடம் உள்ளூர் திமுக தலைவர்கள் வலியுறுத்த அப்படியே ஆனதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிய நகர்வுதான் இன்னொரு மகனுக்குப் பதிலாக இவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதும்.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்றதுமே எதிர்த்து யார் போட்டியிடப் போவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் நிறையவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் என்று அறிவித்த நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் எல்லாம் ஒருசேர ஆதரித்தால் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் எளிதில் ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற ஆவல் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் காணப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சியில் சரஸ்வதியும் பெற்ற வெற்றியும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றமும் இந்த எண்ணத்துக்கு நெய்யூற்றின.
உள்ளூர இருந்த பாரதிய ஜனதாவின் இந்த ஆசையைத்தான் அதிமுகவின் மற்றோர் அணித் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியொன்றில் எதிரொலித்தார் - பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று (இத்தகைய ஆசையை பாஜகவினர் மனதில் விதைத்தவரே ஓ. பன்னீர்செல்வமாக இருக்கலாமோ என்னவோ?). இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, புதன்கிழமை மாலையில் தங்கள் அணி வேட்பாளர் அறிவிப்பின்போதும்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில், தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
ஆனால், பாஜகவின் நினைப்புக்கு மாறாக, அதிமுகவின் பிற அணித் தலைவர்களான பழனிசாமியோ, அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனோ இந்தக் கருத்தைப் பொருட்படுத்தவே இல்லை. போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததுடன், அமமுகவோ வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், என்ன மாயமோ பாரதிய ஜனதா போட்டியிடும் என்ற பேச்சு திடீரென நின்றுவிட, ஈரோடு கிழக்கில் போட்டியில்லை, அதிமுகதான் வலுவான கட்சி என்று பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.
இத்தகைய சூழ்நிலையில்தான், யாருக்கு ஆதரவு என்ற தங்களுடைய முடிவைத் தாமதப்படுத்துவதன் மூலம் - இழுத்தடிப்பதன் மூலம், நெருக்கடியை ஏற்படுத்த முடியும், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை, இபிஎஸ் அணியைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும், இடைத்தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை ஒன்றுசேர்த்துவிட முடியும் என்றெல்லாம் பாஜக நம்பிக் கொண்டிருந்தது (இதனிடையே, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தன).
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த மாதிரியெல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாஜகவின் ஆதரவுக்காகவோ, ஒப்புதலுக்காகவோ காத்துக்கொண்டும் இருக்காமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தங்கள் வேட்பாளரை இன்று (பிப். 1) அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பின் காரணமாக, வேறு வழியே இல்லாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியை, வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டே தீர வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணி வேட்பாளரின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எல்லாராலும் எளிதில் ஊகித்துவிட முடியும்.
பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள இபிஎஸ் அணி வேட்பாளரை விட்டுவிட்டு, அதிமுகவின் ஓரணிக்கு, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் முடியாது. அப்படியே அறிவித்தாலும் மேலும் குழப்பங்கள்தான் ஏற்படும்; அதன் விளைவும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில்தான், திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில், கூட்டணியின் பெயரை மாற்றியிருப்பது பற்றி உரிய நேரத்தில் பதிலளிப்பேன். எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வரை பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அறிவிப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் என்ன கருதுகிறது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதிமுக அணிகளின் இணைப்பை அல்லது ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்றே வழிகள்தான் இருக்கின்றன.
1. ஆளுங்கூட்டணிக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அணியை ஆதரிப்பது.
2. ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளரை ஆதரிப்பது.
3. ஆளும் திமுக அணிக்கு எதிராக வலுவான அணியும் வேட்பாளரும் தேவை என்ற நிலையில் அதிமுக அணிகளின் ஒற்றுமையைத்தான் விரும்பினோம். ஆனால், அதிமுக தலைவர்கள் இணங்கி வராததால் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துவிடுவது.
ஓபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரையே அறிவித்துவிட்ட எடப்பாடி அணியை ஆதரிப்பதிலும் பாஜகவுக்கு தர்மசங்கடங்கள் இருக்கின்றன.
இரண்டு அணிகளையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டு, விருப்பமானவர்களுக்கு வாக்கு என அறிவித்துவிடுவதன் மூலம், இடைத்தேர்தலையே தவிர்த்துவிட்டால், எப்போதும் போல கொங்கு மண்டல செல்வாக்கு என்ற தங்களுடைய பிம்பத்தையும் பாரதிய ஜனதாவால் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
இவற்றையெல்லாம் தாண்டி வேறு திட்டம் எதையேனும் பாரதிய ஜனதா வைத்திருக்கிறதா? தெரியவில்லை.
இயன்றவரை தாமதப்படுத்தினாலும் வாய்ப்புகளை அறிந்துகொண்ட பிறகு, எப்படியும் விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் நிலை என்ன? என்பதை பாரதிய ஜனதா அறிவிக்க வேண்டியிருக்கும். அதற்கான வேலையைத்தான் விரைவுபடுத்தித் தொடங்கிவைத்திருக்கிறார் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கான சின்னம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் நான்கு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் , அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலையில் இந்த நான்கு கட்சிகளுக்குமான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு கைச்சின்னம், அதிமுகவின் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம், தேமுதிகவின் ஆனந்திற்கு முரசு சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு எந்த விட பிரச்சனையும் இல்லை என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு திருப்தியை அளித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
ஈரோடு இடைத்தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தில் உள்ளார் என்றும் எத்தனை முகமூடி போட்டுக்கொண்டு ஈரோட்டிற்கு வந்தாலும் அதிமுக இந்த தேர்தலுடன் காணாமல் போகும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழர் நலன்களை அடகு வைப்பதில் ஆர்வம் காட்டுபவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார் என்றும் ஊழலின் மொத்த உறைவிடமாக அதிமுக இருந்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தது என்றும் அவர் தெரிவித்தார். உதய்மின் திட்டத்தை தமிழகத்தை இணைத்தால் மின்வாரியம் தற்போது கடனில் உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தோல்வி அடைந்தால் அதிமுகவை ஓபிஎஸ் இடம் ஒப்படைக்க வேண்டும்: புகழேந்தி
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார் என்பதும் இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க இருப்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி உட்பட அனைத்தையும் ஓ பன்னீர் செல்வத்திடம் ஈபிஎஸ் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ரூ.40000 கோடி ஊழல், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக ஈரோட்டில் பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஈரோடு இடைத்தேர்தல்: 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் வருகை
!இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை என மொத்தம் 2 கம்பெனியைச் சேர்ந்த 180 வீரர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தோ்தலில் 77 போ் போட்டியிடுகின்றனா்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 போ் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதியில் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வீடுவீடாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நட்சத்திர பிராரமும் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், பிப். 24, 25 ஆகிய 2 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
நட்சத்திர பிரசாரங்களின் காரணமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியையொட்டி 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வந்துள்ளனர்.
மேலும் கூடுதலாக 3 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக அமர்த்தப்படுவர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஈரோடு கிழக்கு: பிப்.27-இல் உள்ளூர் விடுமுறை
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஈரோடு கிழக்கு தொகுதியின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் பிற பகுதிகளில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகளைப் பெறுவது யார்? - அமைச்சர்களுக்குள் கடும் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், அதிக வாக்குகளைப் பெற்று முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதில், அமைச்சர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக கட்சிகளின் வேட்பாளர்களுக்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் களைகட்டியுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்றாலும், திமுக வேட்பாளரே போட்டியிடுவது போல், அமைச்சர்கள் படை தேர்தல் பணி ஆற்றி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களில், வாக்காளர்களை அமர வைத்து, கதை பேச வைத்து, கடைசியில் ‘கவனித்து’ அனுப்பும் திமுகவின் ‘ஈரோடு ஃபார்முலா’விற்கு வாக்காளர்களிடையே வரவேற்பும், எதிர்கட்சியினரிடையெ எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சாதி வாரியாக அமைச்சர்கள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி தவிர துரைமுருகன் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைச்சர்கள் நாசர், மஸ்தான் ஆகியோரும், ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் கயல்விழியும், நாடார்கள் வசிக்கும் பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் போன்றோரும், கவுண்டர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செந்தில்பாலாஜி, சாமிநாதன் என ஜாதி வாரியாக அமைச்சர்கள் ’வாக்கு வலை’ வீசி வருகின்றனர்.‘இந்த தேர்தலில் எங்களுக்கும் அதிமுகவிற்கும் போட்டி இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குள்தான், யார் பகுதியில் அதிக வாக்கு பெறுவார்கள் என்ற போட்டி உள்ளது. எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அக்ரஹாரம் பகுதியில், 85 சதவீத வாக்கு பதிவானால், அதில் 80 சதவீதம் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாங்கித்தருவேன். இதை சவாலாக சொல்கிறேன்’ என நேற்று நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் சவால்விட்டார் அமைச்சர் நாசர்.
10 வாக்குக்கு ஒரு பொறுப்பாளர்:
ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும், ஒரு பொறுப்பாளர், அந்த பொறுப்பாளரின் கீழ் 10 பேர் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு 10 வாக்குகளுக்கும் ஒருவர் என திமுக தேர்தல் பணி செயல்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த 10 பேரிடமும் தினமும் பேசி, அவர்களது வாக்கை உறுதி செய்ய தேவையான ‘எல்லா’ பணிகளையும், அந்த பொறுப்பாளர் ஏற்க வேண்டும். இதனை கண்காணிக்க பலமட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதோடு ஐடி விங் பிரிவைச் சேர்ந்த இளைஞர்களும் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.‘ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். வெளியிடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்றவர்களைக் கணக்கெடுத்து, அவர்களை போனில் பேசி, தேர்தலுக்கு இங்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். இரண்டு வாக்கு உள்ள குடும்பம், மூன்று வாக்கு உள்ள குடும்பம், நான்கு வாக்கு உள்ள குடும்பம் என தனித்தனியாக கணகெடுத்து வைத்துள்ளோம். வெளியூரில் வசிப்போருக்கு அமைச்சர்களே வீடியோ அழைப்பில் பேசி வாக்கு சேகரிக்கின்றனர்’ என தேர்தல் பணிகளை விளக்கியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
நாசர் சொன்ன ராஜா கதை:
அமைச்சர் நாசர் சொன்ன ராஜா கதை, பல்லுக்கும் நாக்குக்கும் சண்டை வந்தால் என்ன நடக்கும் என்ற கதைகளையெல்லாம் அமைச்சர் நேரு உள்ளிட்டவர்களே வியந்து கேட்டனர். அதோடு, ‘ராஜாஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோஷி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதில், சோகம் என்னவென்றால் ஜோஷியின் தாய், சகோதரி, கார் ஒட்டுநர் மூவரும் வாக்களிக்கத் தவறி விட்டனர். அவர்கள் மட்டும் வாக்களித்து இருந்தால், ஜோஷி வெற்றி பெற்று இருப்பார்’ என சுவாரஷ்யமான தேர்தல் கதையைச் சொன்னார் அமைச்சர் நாசர்.ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கிய தளபதியாக செயல்படும் அமைச்சர் நேருவோ, ‘நான் 1989-ல் மணப்பாறை இடைத்தேர்தல் முதல், இதுவரை 40-க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்களில் வேலை பார்த்து விட்டேன். இந்த இடைத்தேர்தலைப் போல வேறு எங்கும் பார்க்கவில்லை. இங்கு, 20 ஆயிரம் வாக்காளர்கள் வெளியிடங்களில் வசிக்கின்றனர். அவர்களை கண்டறிந்து கூட்டி வருவதோடு, அவர்கள் பெயரில் வேறு யாராவது வாக்களித்து விடவும் அனுமதித்து விடக்கூடாது’ என்று தனது அனுபவத்தை பதிவு செய்தார்.
பிரச்சாரத்தில் கலகலப்பு:
தேர்தல் பணி பார்ப்பவர்களுக்கு என்ன தேவை இருந்தாலும், உரிய சேனலில் கவனத்திற்கு கொண்டு வந்தால், உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியும் திமுக பூத் முகவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.வாக்கு கேட்க செல்லும் அமைச்சர்கள் பரோட்டா போட்டும், வடை சுட்டும், டீ போட்டுக் கொடுத்தும் கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியினரின் உபசரிப்பும், கவனிப்பையும் கண்டு மிரண்டு போயுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள், திரையரங்குகளில், ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற குரலுடன் திரையிடப்படும் புகைக்கு எதிரான விளம்பரப் பட வசனத்தை மவுனமாக பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
விசைத்தறியாளர்களை ‘வளைக்க’ சபரீசன் வியூகம்: வாக்குகளாக மாறுமா வாக்குறுதிகள்?
"கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி ஈரோடு கிழக்கு. இவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கி, பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக, இலவச வேட்டி - சேலை விநியோக திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். திமுக ஆட்சியில் இலவச வேட்டி சேலை உற்பத்திப் பணிகள், ஈரோடு மாவட்ட நெசவாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், விசைத்தறிகள் நலிவடைந்து, மூடப்பட்டு, எடைக்கு போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, எங்கள் வாழ்க்கையை திமுக அரசு சீரழிந்துவிட்டது என கண்ணீர் மல்க சொல்கின்றனர்."
- ஈரோட்டில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டு இது. எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை 8 அமைச்சர்கள் சந்தித்துப் பேசி கோரிக்கைகளை கேட்டுப் பெற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன், விசைத்தறியாளர்களை சந்தித்து பேசிய நிகழ்வும் நடந்துள்ளது. ஆக… ஈரோடு கிழக்கில் விசைத்தறியாளர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதை இந்த சந்திப்புகள் உணர்த்துகின்றன.
அண்ணாமலையின் குற்றச்சாட்டு:
தங்கள் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசைத்தறியாளர்கள் கூறியது: “ஈரோடு மாவட்டத்தில் 50,000 விசைத்தறிகள் இயங்குகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் விசைத்தறியைச் சார்ந்து 30,000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை மற்றும் சீருடை உற்பத்தி பணிகளை நம்பியே ஈரோடு விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது.பொதுவாக, இலவச - வேட்டி சேலை உற்பத்திக்கான பணிகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் அரசாணை வெளியானது. ‘வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி சேலைகளை வாங்கி விநியோகம் செய்து கமிஷன் பெறுவதற்காக, இந்த தாமதம் நடக்கிறது’ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்பே, இலவச வேட்டி - சேலைக்கான அரசாணை வெளியானது.
தரமில்லாத நூல் விநியோகம்:
அடுத்ததாக தரமில்லாத பஞ்சினால் உற்பத்தி செய்யப்பட்ட நூலினை வழங்கியதால், வேட்டி, சேலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பொங்கலின்போது இலவச வேட்டி, சேலைகள் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அமைந்தது. விசைத்தறிகளுக்கு 34 சதவீத கட்டண உயர்வு (யூனிட்டிற்கு ரூ 1.40) அறிவிக்கப்பட்டது. இதனைக் குறைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்துவோம் எனக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணம் செலுத்தாமல் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்.நிலுவைத் தொகையால் பாதிப்பு:
இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்த வகையில், ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு தற்போது வரை ரூ 31 கோடி வரை நிலுவைத் தொகை உள்ளது. சீருடை உற்பத்தி செய்த பணிக்காக, ரூ 20 கோடியும் நிலுவையில் உள்ளது. இவை தவிர சொத்து வரி உயர்வால் பாதிப்பு மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் பலவும் விசைத்தறித் தொழிலை கடுமையாக பாதித்து வருகின்றன” என்றனர்.இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால், நீண்ட நாட்களாக தொடரும் விசைத்தறியாளர்களின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளதோடு, அதற்கான தீர்வுகள் குறித்தும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் வாக்குறுதி:
கடந்த மாதம் 31-ம் தேதி, விசைத்தறியாளர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வு யூனிட்டுக்கு ரூ 1.40-ல் இருந்து 70 பைசாவாக குறைக்கப்படும். இலவச மின்சார அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும். இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த இரு உத்தரவுகளும் அமலாகும்” என வாக்குறுதி அளித்துள்ளார்.சபரீசனின் சந்திப்பு:
ஈரோட்டில் கடந்த 9-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன், விசைத்தறியாளர்களைச் சந்தித்து பேசி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 10-ம் தேதி முத்துசாமி, எ.வ.வேலு, காந்தி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் விசைத்தறியாளர்களைச் சந்தித்து பல்வேறு உறுதிமொழிகளை அளித்துள்ளனர்.இதில், விசைத்தறியாளர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையில், ரூ.99 கோடியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் நெசவாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.60 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை உற்பத்தி முழுமையாக விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் என்ற உறுதியும் அமைச்சர்களால் அளிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் தொழிலை சார்ந்த சாயப்பட்டறை, பதப்படுத்துதல் போன்ற தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குதல், கடன் வழங்குதல், கிளஸ்டர் ஏற்படுத்த நிலம், மஞ்சப்பை தயாரிப்பு என பல கோரிக்கைகள் விசைத்தறியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில், விசைத்தறியாளர்களின் வாக்குகளை வளைக்க முதல்வரின் மருமகன் சபரீசனின் வகுத்த ‘வியூகம்’ வாக்குகளாக மாறுமா அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பலன் கிடைக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
ஈரோட்டில் கூடாரங்களில் அடைக்கப்பட்ட வாக்காளர்கள்?- தமாகாவின் குற்றச்சாட்டும், அமைச்சரின் விளக்கமும்
ஈரோடு கிழக்கில் கூடாரங்களில் வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர் என அதிமுகவினர் குற்றஞ்சாட்டிய நிலையில், அதிமுகவினரை சந்திக்க வாக்காளர்கள் விரும்பாததால், எங்களோடு இணைந்து தேர்தல் பணியாற்றுகின்றனர் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி, நேற்று தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ‘நூற்றுக்கும் மேற்பட்ட கூடாரங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்து, அதிமுகவினர் சந்திக்க விடாமல் செய்கின்றனர்’ என்று தனது பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார் பழனிசாமி. திமுகவினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சட்டப்பிரிவு நிர்வாகி இன்பதுரை ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை வேட்பாளராக போட்டியிட்ட தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவாராஜா, "இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திமுக ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த இடைத்தேர்தலில் ஏற்படுத்துகின்றனர். மாற்றுக் கட்சியினர் மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் ஈரோட்டில் 120 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அதில் அடைத்து வைத்துள்ளனர்.
தலைவர்கள் பிரச்சாரம் இல்லாத நாட்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்களை அடைத்து வைப்பதோடு, பிரச்சாரம் என்ற பெயரில் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். இதற்கென ஒரு வாக்காளருக்கு நாள் ஒன்றுக்கு, ரூ 500 முதல் 1000 வரை வழங்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்திற்கு வந்தபோது, காலை 11 மணி முதல் இரவு வரை அடைத்து வைத்து, தலா ரூ 2000 விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள வாக்காளர்களை மேட்டூர் அணைக்கு இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இதோடு, சென்னிமலை, சிவன்மலை என வாக்காளர்களை ஆன்மிக சுற்றுலாவும் அழைத்து செல்கின்றனர். கருங்கல்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில், மட்டன், சிக்கன், மீன் இறைச்சி வீடுதோறும் ஒரு கிலோ வழங்கப்பட்டுள்ளது. இது போல கோலம்போட, ஆரத்தி எடுக்க, பூக்களைத் தூவ பணம், தட்டு, குடம் போன்ற பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்களை அதிமுக வேட்பாளரும், அவரது கூட்டணிக் கட்சியைச் சார்ந்தவர்களும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி ரூ 100 கோடிக்கு மேல் செலவு செய்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். தவறான வழியில் வந்த பணத்தை அமைச்சர்கள் கொடுக்கிறார்கள். அதனை வாங்கிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளுக்கு ஒரு வேகத்தடை ஏற்படுத்துவது போல், அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்ற எங்களின் வேண்டுகோளை மக்கள் மனப்பூர்வமாக ஏற்கின்றனர்" என்றார்.
ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களோ, கடந்த 18 மாதத்தில் தமிழக முதல்வர் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். வாக்காளர்கள் எங்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து, வாக்களிப்பதாக உறுதி அளிக்கின்றனர் என்கின்றனர்.
தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களைக் கொடுக்கின்றனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘50 ஆயிரம் போலி வாக்காளர் உள்ளதாக’ புகார் தெரிவிக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலை திமுக தயாரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலை தயாரிக்கிறது. 2021-ல் ஈரோடு கிழக்கில் இருந்த வாக்காளர்கள் எவ்வளவு, தற்போது எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், எப்படி போலி வாக்காளர்கள் வருவார்கள் என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று விடுவார் என தெரிந்து, தோல்விக்கான காரணங்களை இப்போதே அதிமுகவினர் பட்டியலிடுகின்றனர். அனைத்து கூடாரங்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரைச் சந்திக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதனால், எங்களோடு அவர்கள் இருக்கிறார்கள். எங்களை அடைத்து வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்கள் யாரேனும் புகார் அளித்துள்ளார்களா?
எங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்த செங்கோட்டையன், ‘கைதட்ட கூட கூட்டம் வரவில்லை. வந்திருக்கிற 10 பேராவது கைதட்டுங்கள்’ என்று கேட்கும் நிலைக்கு வாக்காளர்கள் அதிமுகவை புற
திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுக, அதிமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பணிமனை அமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனுமதியின்றி செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுகவின் 10 பணிமனைகள், அதிமுகவின் 4 பணிமனைகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினருடன் பணிமனைக்கு சீல் வைக்க வந்த தேர்தல் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்