புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
46 Posts - 70%
heezulia
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
211 Posts - 75%
heezulia
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
8 Posts - 3%
prajai
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அதானி விவகாரம் Poll_c10அதானி விவகாரம் Poll_m10அதானி விவகாரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதானி விவகாரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 11, 2023 8:52 pm

அதானி விவகாரம்: என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்



அதானி விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் உள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் அனுபவப்பூர்வமானவை. இந்த துறையில் இந்தியா நிபுணத்துவமானது. இப்போது மட்டுமல்ல. எப்போதும் தான் எனக்கூறியுள்ளார்.

'அதானி குழுமம் குறித்த 'ஹிண்டன்பர்க்' அறிக்கை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உள்நாட்டு முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்துவதற்கான வலுவான வழிமுறைகளை உருவாக்குவது அவசியம்' என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பட்ஜெட்டிற்கு பிந்தைய நிலை குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

பிறகு நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம், அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்: இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் அரசு என்ன சொல்லும் என்ற தகவலை வெளியிட மாட்டேன். இந்தியாவில் உள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் அனுபவப்பூர்வமானவை. இந்த துறையில் இந்தியா நிபுணத்துவமானது. இப்போது மட்டுமல்ல. எப்போதும் தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நிர்மலா சீதாராமன் கூறுகையில், புதிய வருமான வரி விதிப்பு முறையால் பொது மக்கள் கைகளில் பணம் அதிகம் புழங்கும். அந்த பணத்தை எப்படி சேமிப்பது, எப்படி செலவிடுவது என்பதை அவர்களே முடிவு செய்யலாம்.அரசாங்க திட்டங்கள் மூலம், தனிநபர்களை முதலீடு செய்ய தூண்டுவது அவசியமில்லை. ஆனால், முதலீடுகள் தொடர்பாக தனிப்பட்ட முடிவை எடுக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

நேரடி வரி முறையை எளிமைப்படுத்தி உள்ளதுடன், வரிகளை குறைத்துள்ளோம். இதனால், நடுத்தர மக்களுக்கு சுமை இருக்காது. கிரிப்டோ நிறைய தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பின்பற்றும் போது பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவான வழிமுறைகளை பயன்படுத்தி கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவது குறித்து ஜி20 நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 11, 2023 8:58 pm

அதானி விவகாரத்தை திசைதிருப்புகிறாரா மோடி?



அதானி விவகாரம் AdlfzVh


பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்துக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பெரிய அளவில் உலுக்கிக்கொண்டிருக்கிறது அதானி விவகாரம். ‘அதானியின் பின்னால் இருக்கும் சக்தி யார்?’ என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், பிரதமர் மோடி பிரச்னையை திசைதிருப்புவதாக விமர்சித்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

பங்குகளின் விலையை உயர்த்திக்காட்ட அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. தற்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் இந்த விவகாரம் ஆக்கிரமித்திருக்கிறது.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸுகளை ஆளும் தரப்பு ஏற்கவில்லை. அதனால், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவையின் மையப்பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி-க்கள், ‘அதானி அரசு... வெட்கக்கேடு வெட்கக்கேடு’ என்று முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி-க்களின் போராட்டத்தால், பிப்ரவரி 2, 3, 6 ஆகிய மூன்று நாள்களில் அலுவல் எதுவும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கியது.

ராகுல் காந்தியின் கேள்விகள்!


இந்தக் கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்களில் ஒன்று ராகுல் காந்தியின் வருகை. கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்ததால் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை. தற்போதைய கூட்டத்தொடரில் பங்கெடுத்துவரும் ராகுல் காந்தி, 7-ம் தேதியன்று அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியைத் தொடர்புபடுத்தி அதிரடியாகப் பல கேள்விகளை முன்வைத்து, ஆளும் தரப்பைத் திணறடித்தார்.

“2014-ம் ஆண்டு டெல்லிக்கு மோடி வந்தபோதுதான், அதானியின் மாயவித்தை தொடங்கியிருக்கிறது. அப்போது உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த அதானி, பிறகு, 2-வது இடத்துக்கு முன்னேறினார்” என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நோக்கிச் சில கேள்விகளை முன்வைத்தார்.

“நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்றபோது, எத்தனை முறை உங்களை அதானி சந்தித்திருப்பார்... வெளிநாடுகளில் நீங்கள் இருந்தபோது, ஒப்பந்தங்களைப் பேசி முடிப்பதற்காக எத்தனை முறை அதானி அந்த நாடுகளுக்குப் பயணித்திருப்பார்... கடந்த 20 ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்கள் உட்பட பா.ஜ.க-வுக்கு கௌதம் அதானி நன்கொடையாக அளித்த பணம் எவ்வளவு?” என்று ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆளும் தரப்பினர் யாருமே தயாராக இல்லை.

ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்!


இதற்கிடையே, இந்தப் பிரச்னையில் மேற்கொள்ளவேண்டிய உத்திகளை வகுப்பதற்கான எதிர்க்கட்சி எம்.பி-க்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எம்.பி-யின் அறையில் நடைபெற்றது. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் கட்சி, பி.ஆர்.எஸ்., ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் காந்தி சிலையின் முன்பாக போராட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்களும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தகைய விவாதத்தை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த விவாதத்துக்கு மத்திய அரசு அஞ்சுகிறது. இந்த விவகாரத்தைத் தவிர்ப்பதற்காக பிரதமர் மோடி எதையும் செய்வார். அதானிக்குப் பின்னால் இருக்கும் சக்தி யார் என்பதை நாடு தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் ராகுல் காந்தி.

‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும்’ என்றார் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. ‘ராகுல் காந்தியின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என்றார், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. அதையடுத்து, ராகுல் பேச்சின் முக்கியமான பகுதிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

மோடி அளித்த பதில்!


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘நெருக்கடியான தருணங்களில் மோடி தங்களுக்கு உதவுவதற்காக வருவார் என்பது மக்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டால் எதுவும் செய்ய முடியாது. என்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே எனது பாதுகாப்பு கவசம்’ என்றார். தனது அரசின் சாதனைகளை பிரதமர் அடுக்கியபோது, பா.ஜ.க-வினர், ‘மோடி... மோடி...’ என்று கோஷமிட, பதிலுக்கு எதிர்க்கட்சியினர், ‘அதானி... அதானி...’ என்று குரல் எழுப்பினர்.

‘85 நிமிடங்கள் ஆற்றிய உரையில், அதானியுடன் தன்னை இணைத்து முன்வைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் மோடியிடமிருந்து நேரடியான பதில் இல்லை. அதானி எப்படித் தன்மீதான குற்றச்சாட்டை தேசத்தின்மீதான தாக்குதல் என்று சொன்னாரோ, அதே பாணியிலான திசைதிருப்பும் வேலையைத்தான் பிரதமரும் செய்திருக்கிறார்’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 12, 2023 10:58 am

“அதானி எப்படித் தன்மீதான குற்றச்சாட்டை தேசத்தின்மீதான தாக்குதல் என்று சொன்னாரோ, அதே பாணியிலான திசைதிருப்பும் வேலையைத்தான் பிரதமரும் செய்திருக்கிறார்’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். -

ஓரக்கண் பார்வை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1806
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sun Feb 12, 2023 4:19 pm

இன்று நான் கண்ணுற்ற ஒரு கருத்துச் சித்திரம்!

அதானி விவகாரம் EiTi6lZ

இதைவிட எப்படி சொல்லி இந்த மக்களுக்கு புரிய வைப்பது?



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 12, 2023 5:01 pm

mohamed nizamudeen wrote:இன்று நான் கண்ணுற்ற ஒரு கருத்துச் சித்திரம்!

அதானி விவகாரம் EiTi6lZ

இதைவிட எப்படி சொல்லி இந்த மக்களுக்கு புரிய வைப்பது?
மேற்கோள் செய்த பதிவு: undefined

மக்களுக்கு புரியாததா?

மக்களுக்கு புரியவில்லை என்றால் இப்பிடியும் புரிய வைக்கலாம் 

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்,
2008 --நிலக்கரி குத்தகை விட்டதில் -1.86 லக்ஷம் கோடி
 2008 -2G  அலைவரிசை 1.76 லக்ஷம் கோடி.
2009 -ஹெலிகாப்டர் -3600 கோடி 
2012 -டாட்ரா டிரக் 14 கோடி 
2010 -காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 
2009 சத்யம் கம்ப்யுட்டர் 

கூகிள் விலாவாரியாக கொடுத்துள்ளது.
இன்னும் பல போட்டிகள் IPL  போட்டிகள்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா, கோபால்ஜி and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 7:27 pm

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்..!



அதானி விவகாரம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

அதானி குழும நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் காட்டிய நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மோசமான சரிவை சந்தித்தன

இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ள நிலையில் அதானி குழுமங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கையை கையாள செபிதான் சரியான அமைப்பு என்றும் முதலீட்டாளர்களின் நலனை காக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 7:28 pm

அதானி விவகாரத்தையும் மீறி எல்.ஐ.சி வருவாய் அதிகரிப்பு..!



அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனத்திற்கு நஷ்டம் அடையும் என்று கூறப்பட்டது. ஆனால் எல்.ஐ.சி வருவாய் பல மடங்கு பெருகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்ஐசி யின் வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக செய்து குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு நிறுவனத்தின் நிகர வருவாய் மற்றும் ரு.6334.20 கோடி என்று தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் வெறும் ரூ.235 கோடி தான் வருமானம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில் முடிந்த காலாண்டில் பிரிமியம் வருவாய் மட்டும் ரூ.97,620 கோடியிலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 750 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2023 11:42 am

“அதானி விவகாரத்தில் மறைப்பதற்கும் அஞ்சுவதற்கும் பாஜகவிடம் ஏதுமில்லை” - அமித் ஷா



புதுடெல்லி: “அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு மறைப்பதற்கும் ஒன்றுமில்லை; அஞ்சுவதற்கும் ஒன்றுமில்லை" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு உள்துறை அமித் ஷா அளித்த விரிவான பேட்டியில், காஷ்மீர் தேர்தல், நகரங்களில் முஸ்லிம் பெயர்கள் மாற்றம், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீதான நடவடிக்கை எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பதிலளித்துள்ளார். குறிப்பாக அதானி விவகாரத்தில் தன் கருத்தை முன்வைத்துள்ளார்.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, சந்தை மதிப்பை இழந்துள்ள அதானி குழும நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதன் காரணமாக நாடாளுமன்றம் வெகுவாக முடங்கியது.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, “அதானி குழும விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கைப் பற்றி விமர்சிப்பது சரியாகாது. ஆனால், அதானி குழும விவகாரத்தில் பாஜக அச்சப்படவும் ஏதுமில்லை; மறைக்கவும் ஏதுமில்லை” என்று கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய அளவிற்கு சரிவினை சந்தித்துள்ளது. அந்த அறிக்கையின் உண்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தால், அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஹிண்டன்பர்க் - அதானி விவகாரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்ளது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் அமைச்சர் அமித் ஷா, பாஜகவுக்கு இவ்விவகாரத்தில் அச்சமில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிஎஃப்ஐ தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, "பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அடிப்படைவாதத்தை, மத துவேசத்தை தூண்டியது. அவர்கள் தீவிரவாதத்திற்கான அடிப்படைத் தேவைகளை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மீதான நடவடிக்கையைத் தள்ளிப்போடுவது தேசத்தின் பாதுகாப்பில் சுணக்கம் காட்டுவதாகிவிடும். அதனால் தான் உள்துறை பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்தது" என்றார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 7:10 pm

அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு



அதானி குழும பங்குகளில் எல்ஐசி மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு இந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூ.50,000 கோடி சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை, அதானி குழுமத்தின் பங்குகளுக்கு ஆதரவு பெருகவில்லையெனில், எல்ஐசியின் இந்த நிறுவனத்தின் மீதான முதலீடு மதிப்பு சரிந்து, நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்த ரூ.53,000 கோடியிலிருந்து வெறும் ரூ.3,000 கோடியாக மாறிவிடும் என்கிறார்கள்.

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது.

அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்த விதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது.

அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக