புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
ரஷ்யா உக்ரைன் போர் I_vote_lcapரஷ்யா உக்ரைன் போர் I_voting_barரஷ்யா உக்ரைன் போர் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யா உக்ரைன் போர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 9:43 am

ரஷ்யா உக்ரைன் போர் Fb_img20

இன்றோடு உக்ரைன்மேல் படையெடுத்து ஓராண்டை நிறைவு செய்கின்றது ரஷ்யா



இப்போரினால் என்னென்ன நடந்ததென்றால் அது பலவகை விளைவுகளை சொல்ல கூடியது

முதலாவது ரஷ்யா இதுகாலமும் மிரட்டி கொண்டிருந்தது போல இனியும் அக்கம்பக்கம் நாடுகளை மிரட்ட முடியாது என்பதும், எது நடக்க கூடாது என #ரஷ்யா அஞ்சியதோ அதாவது எக்காரணம் கொண்டும் நேட்டோவும் அமெரிக்காவும் தங்கள் காலடியில் வரகூடாது என அஞ்சியதோ அது நடந்தே விட்டது

போரின் முதல் தோல்வி ரஷ்ய ராணுவ வியூகமும் ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பில் வெளிநாட்டு மூலபொருள் இருந்ததுமாகும், ரஷ்ய ராணுவ வியூகம் சுத்தமாக சொதப்பியது

ஒரு பக்கம் ரஷ்ய ராணுவம் இன்னொரு பக்கம் ரஷ்ய வாடகை ராணுவமான் வாக்னர் குரூப்பெல்லாம் குழப்பி அடித்ததில் சூழல் உக்ரைனுக்கு ஆதரவானது

ரஷ்யா ஆயுத ஏற்றுமதி நாடு ஆனால் அதன் மூலபொருள் அன்னிய இறக்குமதியில் இரூந்ததை பின்னர் காணமுடிந்தது இதனாலே அதன் ஏவுகனை வீச்சு விமான படை வீச்சு எல்லாமே குறைந்து ஒரு கட்டத்தில் ஈரான், வடகொரியா என கை ஏந்தியது ரஷ்யா

போரில் #உக்ரைன் சாகசம் காட்டியது நிஜம், என்னதான் அமெரிக்க உதவி என்றாலும் அது கிடைக்கும் நாடெல்லாம் சாதிப்பதில்லை பாகிஸ்தானை போல‌

உக்ரைன் 2013ல் புட்டீன் கிரிமியாவினை ரஷ்யா பிடித்தபொழுதே யுத்தத்தை எதிர்பார்த்தது, #புட்டீன் செய்த மிகபெரிய தவறு உக்ரைன் சுதாரிக்க சுமார் 9 ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்தது அல்லது ரஷ்ய ராணுவம் மேல் கொண்ட பெரும் நம்பிக்கை

இந்த 9 ஆண்டில் உக்ரைனை மேலை நாடுகள் பலமாக்கின அதுதான் பின்னர் தெரிந்தது

அமெரிக்காவின் ஜாவலின் ஏவுகனைகள் ரஷ்யாவின் டாங்கிகளை முறித்து போட்டன, ரஷ்ய விமானபடை பல விமானங்களை இழந்தபின் ஒதுங்கி கொண்டது, ரஷ்யாவின் பிரதான கப்பலான மோஸ்வா மூழ்கடிக்கபட்டதும் ரஷ்ய கடற்படையும் வீச்சை குறைத்தது

அமெரிக்க ஹைமாஸ் சிஸ்டம் உள்ளிட்ட பல ஆயுதங்கள் சாகசம் காட்டும் பொழுது ரஷ்யாவிடம் பதில் ஆயுதமில்லை

ரஷ்யாவின் எஸ் 400, எஸ் 500 சிஸ்டமெல்லாம் கடைசிவரை கைகொடுக்கவில்லை ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் எளிதாக தாக்கின, ரஷ்ய கப்பலுக்கு கூட காவல் இல்லை

அதுவும் கடந்த செப்டம்பருக்கு பின் ரஷ்யா எந்த முன்னகர்வும் செய்யாமல் திண்ற ஆரம்பித்துவிட்டது

போரில் நேட்டோவும் அமெரிக்காவும் பலம்காட்டின, அவர்கள் ஆயுதங்கள் நின்று பேசின நிச்சயம் ரஷ்யாவிடம் பதில் ஆயுதமில்லை என்பது நிஜம்

ஒரு வகையில் 1980ல் ஆப்கனில் சிக்கியது போல் உக்ரைனிலும் ரஷ்யா சிக்கிவிட்டது இனி எத்தனை வரூட யுத்தம் நடந்தாலும் ரஷ்ய வெற்றி சாத்தியமில்லை

ரஷ்யாவின் ஒரே பலம் உள்நாட்டு உணவு உற்பத்தி மற்றும் எண்ணெய் உற்பத்தி , இந்த இரண்டும் இருந்தால் ஒரு தேசம் யுத்தத்தை தாங்கும், ஈராக்கின் சதாம் உசேன் அதை முயற்சித்தார்

புட்டீனின் ரஷ்யாவும் அதனை தாங்குகின்றது, அணுகுண்டு பலமான நாடு என்பதால் ஈராக் போல் உங்கே அப்படி நுழைய முடியாது என்பது புட்டீனுக்கு ஆறுதல்

ரஷ்ய வங்கிகளுக்கு தடை, விமானங்களுக்கு தடை என பல்வேறு தடைகளால் ரஷ்யா சிக்கியிருக்கின்றது இத் நிச்சயம் பின்னாளில் பாதிப்பினை கொடுக்கும், ரஷ்ய பொருளாதாரம் இப்பொழுது சீன இந்திய எண்ணெய் ஏற்றுமதியில் இருக்கின்றது

மோடி அரசு இந்தியருக்கு மட்டுமல்ல புட்டீனுக்கும் அதிர்ஷ்டம், அதனால் எண்ணெய் வியாபாரம் சரியாக நடக்கின்றது, இந்திய எரிபொருள் சந்தை ஸ்திரமாக நிற்கின்றது

இந்த போர் நிகழ்த்திய பெரிய விளைவுகள் சில உண்டு

முதலாவது இனி ரஷ்ய ஆயுதம் உலகளவில் பின்னடவை எட்டும், அந்த ஆயுத சந்தையினை அமெரிக்கா கைபற்றும்

இரண்டாவது இனி ரஷ்யா யாரையும் மிரட்டமுடியாது கடைசியில் கால்வைத்தால் உக்ரைன் நிலைதான்

மூன்றாவது உலக அளவில் பல அரசியல், ராணுவ பொருளாதார கூட்டணிகள் மாறும், மேற்காசிய நிலவரமும் மாறும்

#சீனா உலகில் அமெரிக்காவுக்கு நிகரான நாடாக தன்னை நிறுவ முயலும் அதை தடுக்க அமெரிக்கா ஆடும் ஆட்டத்தை இந்தியா தனக்கு சாதகமாக மாற்றும்

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக உகந்த சூழல் இனி உருவாகும்

ஒருவகையில் 1990க்கு பின் மறுபடியும் உலகை பாதிக்க தொடங்கியிருக்கின்றது ரஷ்ய நிகழ்வுகள்

இங்கு பெரும் பலம் பெற்ற நாடுகள் மூன்று

முதலாவது சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா, தன் மண்ணில் ஒரு ஓலைவெடி கூட வெடிக்காமல் நீண்ட கால எதிரியினை அதன் பங்காளியினை கொண்டே குலைப்பதெல்லாம் மிகபெரிய ராஜதந்திரம்

இதனால் உக்ரைன் எனும் அடிமை சிக்கிவிட்டது, அமெரிக்க ஆயுத உலகபுகழ் பெற்றுவிட்டது, #ஐரோப்பா எண்ணெய் சந்தை அமெரிக்கா கைக்கு சென்றும் விட்டது

இப்படி பல கணக்குகளில் அவர்களுக்கு வெற்றி

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சல்லி விலை எரிபொருள் என்பது மிகபெரும் அனுகூலம், அதுவும் இந்தியாவுக்கு மிக பெரும் அதிர்ஷ்டம்

சந்தடி சாக்கில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம் ஆனால் அமெரிக்காவினை பகைகமாட்டோம் என #இந்தியா ராஜதந்திரமாக நகர்ந்து உலகளவில் தன் ஆதிக்கத்தை தக்கவைத்து நிற்கின்றது

இரண்டாம் ஆண்டாக போர் தொடங்கும் நிலையில் மிகபெரிய தோல்வியின் வீழ்ச்சியில் நிற்கும் புட்டீன் இன்னும் ஆவேசமாக போரை தொடங்குவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கும் அவர் அடியாள் படையான வாக்னர் குருப்ப்க்கும் உரசல் தொடங்குவது மேலும் ரஷ்யாவுக்கு பின்னடைவு

புட்டீன் ராஜதந்திரமாக உருவாக்கிய அவரின் கூலிபடையான வாக்னர் குரூப் இப்பொழுது தனி குழப்பம் செய்வது புட்டீனுக்கு பெரும் அதிர்ச்சி மாபெரும் பின்னடைவு

ஏற்கனவே மிகபெரிய பின்னடைவில் இருக்கும் ரஷ்யா இனி இன்னும் திணறும் கவுரவமான தோல்விக்கு கூட அது வரமுடியாது

யுத்தம் நீடித்தால் 2013ல் இழந்த கிரிமியாவினை மீள கைபற்ற உக்ரைன் தீவிரம்காட்டும் அதை தடுக்க ரஷ்யாவும் வரிந்து கட்டும் என்பதால் இருதரப்பும் இப்போதைக்கு விவகாரத்தை விட போவதில்லை

இப்பொழுது உக்ரைனின் எல்லையோர 10 சதவீத பகுதிகளை தன் ரகசிய போராளிகள் மூலமும் தன் ஆதிக்கம் மூலமும் பிடித்த ரஷ்யா அதை தக்கவைக்கவே கடும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றது என்பதுதான் இன்றைய நிலை

அது முன்பு பிடித்த கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் திரும்ப மீட்டது போல இப்பகுதிகளை பிடிக்க  உக்ரைன் கடும் போர் நிகழ்த்துகின்றது

ரஷ்யா தாக்குதல் யுத்தத்தை நிறுத்திவிட்டு இப்பொழுத் தற்காப்பில் திணறுகின்றது

எப்படியோ இந்தியாவின் #எரிபொருள் சந்தை ஓராண்டாக ஸ்திரமாக நிற்கின்றது, இன்னும் பல ஆண்டுக்கு அப்படித்தான் இருக்கும் போலிருக்கின்றது

1980களில் ஆப்கனில் தடுமாறி பின் பெரும் பின்னடவை சந்தித்த அந்த காலங்களில் மறுபடியும் மாஸ்கோ சிக்கி கொண்டது என்பதுதான் நிஜம்

காரணம் ரஷ்ய ராணுவ வியூகபடி அது இன்னும் ஸ்டாலின் அதாவது ஜோசப் ஸ்டாலின் காலத்திலே இருக்கின்றது, அதிகமான ராணுவசேனை வெற்றிகொடுக்கும் என்பது அது

ஆனால் அமெரிக்காவும் நேட்டோவும் முழு தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டன ரஷ்யா அதை செய்யவில்லை

ரஷ்யாவின் வியூகம் 1950களில் கைகொடுத்திருக்கலாம் ஆனால் அது இனி எடுபடாது என்பதை ஆப்கனில் உணர்ந்தும் ரஷ்ய ராணுவம் இன்னும் தன்னை திருத்தவில்லை அதே தவறை உக்ரைனிலும் செய்கின்றார்கள் என்பது தெரிகின்றது

அதனை மாற்றாதவரை ரஷ்யாவுக்கு வெற்றி இல்லை

உண்மையில் ரஷ்யா மிக பலமான நாடு சந்தேகமில்லை , ஒரு வருடமாக சுமார் 30 சக்திவாய்ந்த நாடுகளை எதிர்த்து நிற்கின்றது, தன் நாட்டிலும் அரசியல் நெருக்கடி மக்கள் குழப்பம் வராத அளவு அது பலத்து நிற்கின்றது

ஆனால் இப்போரை உக்ரைன் தொடங்கியிருந்து இந்நிலை வந்திருந்தால் அது ரஷ்யாவின் வெற்றி, ஆனால் போரை தொடங்கியது ரஷ்யா எனும் வகையில் இது ரஷ்யாவின் தோல்வி, பெரும் தோல்வி என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

#பிரம்ம_ரிஷியார் @ முகநூல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 5:27 pm

சீனாவின் சமாதான திட்டம்: உக்ரைன் நிராகரிப்பு

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சீனா முன்வைத்துள்ள சமாதான திட்டத்தை உக்ரைன் நிராகரித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் மிகயீலோ பொடோலியக் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனா தன்னை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடாகக் கருதினால், நிதா்சனத்துக்கு துளியும் பொருந்தாத திட்டங்களை முன்வைக்கக் கூடாது; சா்வதேச சட்டங்களை மதிக்காத, இந்தப் போரில் படுதோல்வியடைவிருக்கும் ஒரு நாட்டுக்காக (ரஷியா) பரிந்து பேசக் கூடாது.

சீனாவின் சமாதான திட்டத்தில் தொலைநோக்குப் பாா்வை இல்லை. போருக்காக பல ஆண்டுகள் திட்டமிட்டவா் யாரும் 3 நாள் ஆட்டத்தை ஆட மாட்டாா்கள். சமாதானத்துக்கான வாய்ப்பு கால வரையற்றது என்று சீனா கருதக் கூடாது’ என்று தனது ட்விட்டா் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, அந்தப் போா் குறித்த தனது நிலைப்பாடு குறித்த அறிக்கையை சீனா வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்களை சீனா குறிப்பிட்டிருந்தது.

எனினும், அந்த அறிக்கையில் உக்ரைன் மீது படையெடுத்த ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதை சீனா விமா்சித்திருந்தது.

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும்; எரிகிற நெருப்பில் எண்ணெய் வாா்க்கும் செயலில் ஈடுபடக் கூடாது; நிலைமை மேலும் மோசமாகி, கட்டுப்பாடுத்த முடியாத அளவுக்குச் செல்லும் அளவுக்கு விட்டுவிடக் கூடாது என்று அந்த அறிக்கையில் சீனா வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், சீனாவின் அந்த சமாதான திட்டத்தை உக்ரைன் அதிபரின் ஆலோசகா் நிராகரித்துள்ளாா். சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னா் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் நேட்டோ தன்னை விரிவாக்கம் செய்து வந்தது.

அவ்வாறு நேட்டோ அமைப்பு தங்களை நான்கு புறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷியா நீண்ட காலமாகவே எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், நோட்டோவில் இணைவதற்கு அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸியின் தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

இதனைக் கடுமையாக எதிா்க்கும் ரஷியா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

உக்ரைன் படையினரிடம் இருந்த கிழக்குப் பகுதி மக்களைப் பாதுகாக்கவும், உக்ரைன் ராணுவம் மற்றும் அரசில் இருந்து ‘நாஜி ஆதரவு’ சக்திகளை அகற்றவும் அந்த நாட்டில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யை மேற்கொள்வதாக அப்போது ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்தாா்.

தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது.

போலந்துக்கு எண்ணெய் விநியோகம் நிறுத்தம்



போலந்துக்கு ரஷியாவிலிருந்து குழாய் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து போலந்தின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பிகேஎன் ஆா்லன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாங்கள் கச்சா எண்ணெய் வரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். ட்ரஷ்பா குழாய் வழித் தடம் வழியான எண்ணெய் விநியோகத்தை ரஷியா நிறுத்திவிட்டது.

இந்தச் சூழலுக்காக நாங்கள் ஏற்கெனவே எங்களை முழுமையாக தயாா்ப்படுத்தி வைத்திருந்தோம். எனவே, தற்போது எண்ணெய் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று அந்த ட்விட்டா் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷியாவிலிருந்து ஜொ்மனி, போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு ட்ரஷ்பா குழாய் வழித் தடம் வழியாக கச்சா எண்ணெய் விநியோகிக்கப் படுகிறது.

உக்ரைன் போரைத் தொடா்ந்து ரஷியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்த ஐரோப்பிய யூனியன், ரஷிய கச்சா எண்ணெயைச் சாா்ந்திருக்கும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அந்தத் தடையிலிருந்து ட்ரஷ்பா குழாய் வழித் தடத்துக்கு விலக்கு அளித்தது.

தற்போது போலந்துக்கான கச்சா எண்ணெய் தேவையில் 10 சதவீதம் ரஷியாவிலிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2023 10:22 pm

உக்ரைன் போரை நிறுத்துமா இந்தியா?


ஒரு போர் என்பது சண்டையிடும் இரண்டு நாடுகளை மட்டுமே பாதிப்பதில்லை. அதைத் தாண்டி, உலகம் முழுக்க அதன் தாக்கம் உணரப்படுகிறது. ஓராண்டைத் தாண்டித் தொடர்கிறது ரஷ்யா - உக்ரைன் போர். ஐரோப்பாவே இன்று பொருளாதார நெருக்கடியில் தவிப்பதற்கு இந்தப் போர் பிரதான காரணம். சமையல் எரிவாயு விலையில் தொடங்கி கோதுமை விலை வரை போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு படித்த நம் மருத்துவ மாணவர்களின் கல்வியும் தடைப்பட்டிருக்கிறது.

உலகின் வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா, தன்னைவிடச் சிறிய நாடான உக்ரைன்மீது தாக்குதலைத் தொடங்கியபோது, `போரில் சீக்கிரமே ரஷ்யா வெற்றிபெறும்’ என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் செய்யும் உதவிகளால் உக்ரைன் தாக்குப்பிடித்துவருகிறது. எனினும், போர் முழுக்க உக்ரைன் மண்ணில் நடப்பதால், அந்த தேசம் பெரும் அழிவைச் சந்தித்திருக்கிறது. இன்னொரு பக்கம் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவுக்கும் பெரும் இழப்பு. இரண்டு நாடுகளுக்குமே எப்படியாவது போர் முடிந்தால் பரவாயில்லை என்ற நினைப்பு வந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் சீனாவின் சமாதான முயற்சிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இரண்டுமே ரஷ்யாவின் நட்பு நாடுகள். அதேசமயம், உக்ரைனும் மதிக்கும் நாடுகள். ரஷ்யா, உக்ரைன்மீது தொடங்கிய யுத்தத்தை இந்தியாவும் சீனாவும் கண்டிக்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. ஆனால், ‘இந்தப் போர் தேவையற்றது' என்று பிரதமர் மோடியும் சொன்னார், சீனாவும் இதையே சொன்னது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஐரோப்பாவுக்குச் சென்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் மற்றும் ரஷ்ய அமைச்சர்களுடன் பேசியிருக்கிறார். விரைவில் டெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்ய மற்றும் அமெரிக்க அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இது பற்றிப் பேசக்கூடும். ஏற்கெனவே ‘இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்' என்று சில நாடுகள் கேட்டிருக்கின்றன.

இந்தச் சூழலில் திடீரென உக்ரைனுக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நாட்டுக்கு உதவிகள் வழங்கியதுடன் நிறுத்திக்கொள்ளாமல் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கவிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஜோ பைடன் உக்ரைனுக்கு வந்ததால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரைத் தொடரும் பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் அமைதி முயற்சிகளைக் கடந்து, இந்தப் போர் நீடிப்பதை அமெரிக்கா விரும்புகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

உலகின் நலனுக்காக, உக்ரைன் போரை நிறுத்தும் சமாதான முயற்சிகளுக்கு எல்லா நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்.

விகடன்


mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2023 7:52 am

சோவியன் யூனியனின் பிரதான உளவுதுறையான‌ கேஜிபி கலைக்கபட்டு இப்பொழுது ரஷ்ய உளவுதுறையின் பெயர் எப்.எஸ்.பி என மாற்றபட்டுவிட்டது என்பது கூட தெரியாமல் ரஷ்ய கேஜிபியின் உக்ரைன் சாகசம் என சிலர் பொங்குவதை கண்டால் பரிதாபமே மிஞ்சுகின்றது

உக்ரைனில் ரஷ்யா செய்திருப்பது ஆக்கிரமிப்பு முயற்சி, அதனில் சந்தேகமே இல்லை. உக்ரைன் ஒரு இறையான்மை மிக்க நாடு அங்கு இன்னொரு நாடு ஆக்கிரமிப்பது எக்காலமும் ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌

ஆயிரம் சிக்கல் இருக்கலாம், மிரட்டல் இருக்கலாம் அதற்காக இன்னொரு நாட்டுக்குள் பலாத்காரமக நுழைவதெல்லாம் அப்பட்டமான சர்வாதிகாரம் அதனை உலகம் ஒரு காலமும் ஒப்பாது

இன்று உக்ரைனுக்குள் நுழையும் ரஷ்யா அதை அப்படியே விட்டுவிட்டால் நாளை மால்டோவா, ரோமேனியா என தொடங்கி ஒவ்வொரு நாடாக கைபற்றும் என்பதை மறுக்க முடியாது

பலமிருப்பதால் அண்டை நாடுகளை கைபற்றுவோம் என ஒவ்வொரு நாடும் களமிறங்கி அண்டை நாட்டை ஆக்கிரமித்தால் உலகம் தாங்காது, மானுட குலம் வாழமுடியாது

இந்த பூமியில் வரைபடங்கள் மாறிகொண்டே இருக்கும் அது யதார்த்தாம் காலம் மாற மாற அரசுகள் எழும் வீழும் நாட்டின் கோடுகள் மாறும்

அதற்காக அலெக்ஸாண்டர் காலத்து நாடுகளை மீட்போம் என கிரீஸ் கிளம்பினாலோ , செங்கிஸ்கான் காலத்து வரைபடத்தை அமைப்போம் என சீனா கிளம்பினாலோ, 18ம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை அமைப்போம் என பிரிட்டன் கிளம்பினாலோ அது மடத்தனம்

அதே மடதனத்தைத்தான் உக்ரைனில் பழைய சோவியத்தை அமைப்போம் என புட்டீன் முயற்சித்துகொண்டிருகின்றார்

இதனை ஒரு காலமும் உலகம் அனுமதிக்காது, இதை அனுமதித்தால் அடுத்து ஒவ்வொரு நாடும் தன் அண்டை நாட்டை ஆக்கிரமிப்பதை தடுக்க முடியாது

கியூபா எனும் குட்டி நாட்டுக்கு எல்லா இறையாண்மையும் உண்டு என பேசிய ரஷ்யா அதை இறையாணமை உக்ரைனுக்கு இல்லை என சொல்ல எக்காலமும் உரிமை இல்லை

நாம் இந்தியர்கள், இந்நாட்டின் மேல் சீனாவோ பாகிஸ்தானோ படையெடுத்தால் நாம் தாங்குவோமா? ஒரு காலமும் இல்லை, அவரவர் நாடு அவரவர்க்கு முக்கியம்

சிறிய நாடான வியட்நாம்,இலங்கை போன்றவையே அதை மிக உக்கிரமாக செய்தன எனும் பொழுது ஐரோப்பாவின் இரண்டாம் பெரிய நாடான உக்ரைன் எப்படி விடும்?

ஆம், அதைத்தான் உக்ரைன் மக்களும் உலக நாடுகள் ஆதரவோடு தங்கள் நாட்டின் மேலான ஆக்கிரமிப்பை எதிர்த்து மாபெரும் யுத்தம் நடத்துகின்றார்கள்

புட்டீன் உக்ரைனில் செய்வது மிகபெரிய தவறு, அந்த யுத்தத்தை இன்னும் தொடர்வது மிகபெரிய தவறு

ஒரு காலமும் உக்ரைன் மேலான ரஷ்ய ஆக்கிரமிப்பை உலகம் ஏற்காது எனும் நிலையில், தன் அண்டை நாட்டின் மேல் வலிய போரை திணித்து நடத்தும் புட்டீனே போர் நிறுத்தம் செய்யவேண்டிய நிலையில் உள்ளார்

அவர்தான் நிறுத்தவேண்டும் இல்லையேல் ரஷ்யா கொடுக்கவேண்டிய விலை பன்மடங்கு அதிகமாக , ரஷ்யா காலத்துக்கும் எழும்பமுடியா அளவில் பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும்

#பிரம்ம_ரிஷியார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1805
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Feb 28, 2023 8:31 am

போர் விரைந்து முடியட்டும்!
இரு நாடுகளிலும் அமைதி மீண்டும் நிலவட்டும்!
நம்புவோம்!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 02, 2023 3:44 pm

ரஷியாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல்:


ரஷ்யாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல் நடைபெற்று வருவதை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்த அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டு கடந்தும் தீவிரமாக இருநாட்டின் எல்லைகளில் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் எல்லை பகுதியில் அடிக்கடி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு திடீரென ரஷ்யாவின் எல்லை பகுதியில் 3 இடங்களில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் கார் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ட்ரோன் நொறுங்கி விழுந்தது என்றும் இதில் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 13, 2023 2:28 pm

உக்ரைன் மீது தெர்மைட் குண்டுகளை வீசியுள்ளதா ரஷ்யா?


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது #தெர்மைட் என்ற குண்டுகளை வீசி உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

#உக்ரைன் நாட்டில் உள்ள வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசி உள்ளதாகவும் அந்த நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இரு தரப்புக்கும் நடந்த போரில் சுமார் 1100 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இந்த நிலையில் வுஹ்லேடார் நகரின் மீது ரஷ்யா தெர்மைட் குண்டுகளை வீசியதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அலுமினியம், இரும்பு ஆக்சைடு ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்ட இந்த குண்டுகள் மனித உடலில் பட்டதும் சதையை எரிக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

தெர்மைட் குண்டுகளை பொதுமக்கள் மீது பயன்படுத்துவது போர் குற்றமாக கருதப்படும் நிலையில் #ரஷ்யா இந்த குண்டுகளை வீசி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 13, 2023 2:29 pm

ஆஸ்கர் விழாவில் உரை நிகழ்த்த உக்ரைன் அதிபருக்கு அனுமதி மறுப்பு~!


#உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துவக்க உரை நிகழ்த்த கோரிக்கை விடுத்தார். ஆனால், இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகிறது.

ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்பபோர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் போர் முடியாமல், உக்கிரமடைந்து வருகிறது.

தற்போது, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆயுதம் மற்றும் நிதியுதவியால் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 12 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்த நிகழ்வில், பல சினிமா கலைஞர்களும், இசைக் கலைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விழாவின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துவக்க உரை நிகழ்த்த கோரிக்கை விடுத்தார். ஆனால், இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளதாகக தகவல் வெளியாகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 26, 2023 11:20 pm

சர்வதேசத் தலையீடுகள் - உக்கிரமாகும் உக்ரைன்-ரஷ்யா போர்

கடந்த ஓராண்டாக நடைபெற்றுவரும் ரஷ்யா - உக்ரைன் போரில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அதிகரித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்றுவரும் ரஷ்யா உக்ரைன் போரில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு உதவிவருகின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நாட்டுக்கு 500 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி செய்வதாக அறிவித்திருந்தார். அதையடுத்து. சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதினுடன் நெருக்கம் காட்டினார். கடந்த 20-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரை ரஷ்ய நாளேடான பிராவ்தாவில் வெளியானது.

அதில், "ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள், கொள்கைகள் உட்பட, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசச் சட்டம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை, சுதந்திர, பிராந்திய ஒருமைப்பாடு திறம்பட நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த ஒரு நாடும் சர்வதேச ஒழுங்கை மீறக் கூடாது. சீனா-ரஷ்யா கூட்டணி எந்த மூன்றாம் நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், ரஷ்ய அதிபர் புதின் எழுதிய கட்டுரை சீனாவில் வெளியாகும் பீப்பிள்ஸ் டெய்லியில் வெளியானது. அதில், "ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. தனக்கு அடிபணியாத எந்த நாட்டையும் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்வதால், சர்வதேசப் பாதுகாப்பு, ஒத்துழைப்பின் கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது. உக்ரைன் வழியாக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ஊடுருவுவதன் மூலம் நேட்டோ தனது நடவடிக்கைகளை உலக அளவில் விரிவுபடுத்த முயற்சி செய்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார் புதின்.

இரு தரப்பின் கருத்துகளையடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "உக்ரைனிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெறுமாறு புதினுக்கு அழுத்தம் கொடுக்க, சீன அதிபர் ஜின்பிங் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்" என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கடந்த 21-ம் தேதி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா திடீரென உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், "ஜி-7 நாடுகள் உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்று அறிவித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த ரஷ்யா, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்ட தனது ராணுவ விமானங்களை ஜப்பான் கடல்மீது ஏழு மணி நேரத்துக்கும் மேலாக பறக்கச் செய்தது. அது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த, ஜப்பான் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தது. அதற்கு ரஷ்ய தரப்பில், “இது சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை" என்று பதிலளிக்கப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைனின் பாக்முட் நகரத்தைக் கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையையும் ரஷ்யா தீவிரப்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி முதல் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் முன்பக்கத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளை ரஷ்யப் படைகள் தாக்கிவருகின்றன.

இது குறித்து உக்ரேனிய ராணுவம், "லைமானிலிருந்து குபியன்ஸ்க் வரையிலும், அதேபோல் தெற்கில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் நகரின் புறநகரில் இருக்கும் அவ்டிவ்காவிலும் கடுமையான சண்டைகள் நடந்தன" எனத் தெரிவித்தது.

பாக்முட்டின் மேற்கில் இருக்கும் கோஸ்டியன்டினிவ்காவில், ரஷ்ய ஏவுகணை ஒன்று குடியிருப்பின்மீது மோதியதில் குறைந்தது மூன்று பெண்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு சுமி பிராந்தியத்தில், ஒரு நிர்வாக கட்டடம், ஒரு பள்ளிக் கட்டடம், குடியிருப்புக் கட்டடங்கள்மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கைகளுக்கு ரஷ்யா தரப்பிலிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. தெற்கில் ஒடேசா பகுதியில் உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த பகுதியை தங்கள் படைகள் அழித்ததாக ரஷ்யா கூறியது. இதேபோல் உக்ரைனில் தொழில்மயமான பகுதியாக டான்பாஸ் இருக்கிறது. இதை முழுமையாகக் கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் குளிர்கால தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான துருப்புகள் இறந்தபோதிலும் இந்தத் தாக்குதல் இதுவரை குறைந்த வெற்றியையே ரஷ்யாவுக்கு கொடுத்திருக்கிறது.

இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், "பாக்முட், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் சுமார் 10,000 உக்ரேனிய குடிமக்கள், பல முதியவர்கள், உடல்நலன் பாதிப்புள்ளவர்கள் மிகவும் மோசமான நிலைமைகளை அனுபவித்துவருகிறார்கள்.

அவர்கள் நிலத்துக்குள் குழி அமைத்து அதில்தான் வாழ்ந்து வருகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறது. இது குறித்து உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர், "உக்ரைனைச் சுற்றி ராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களை உருவாக்க, ரஷ்யா உக்ரைனுக்குள் ஆழமாகப் போரிடுகிறது" என்றார்.

விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக