புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
41 Posts - 67%
heezulia
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
206 Posts - 74%
heezulia
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சந்திரயான்-3  - Page 3 Poll_c10சந்திரயான்-3  - Page 3 Poll_m10சந்திரயான்-3  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரயான்-3


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 20, 2023 2:36 pm

First topic message reminder :

சந்திரயான்-3 ஆரம்ப கட்ட சோதனை வெற்றி: இஸ்ரோ



சந்திரயான்-3  - Page 3 Isroro10

இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலமானது பெங்களூருவிலுள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனையானது கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெற்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

மின்காந்த குறுக்கீடு மற்றும் மின்காந்த இணக்கத்தன்மை சோதனையானது, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகளுக்காக இது நடத்தப்பட்டது.

இந்த சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என இஸ்ரோ கூறியுள்ளது. அதே வேளையில் சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று முக்கிய தொகுதிகளை கொண்டுள்ளது.

இந்த பணி சிக்கலானதும், மேலும் தொகுதிகளுக்கு இடையே உள்ள ரேடியோ-அதிர்வெண் (ஆர் எஃப்) தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கான பணியை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது என்றும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைப்புகளின் செயல்திறன் திருப்திகரமாக இருப்பதாக இந்திய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 7:49 pm

சந்திரயான் 3: விண்ணில் பாய்வதை நேரலையாக பார்க்க காத்திருங்கள்...

இன்னும் 18 மணி நேரத்தில் நேரலை ஆரம்பமாகும்...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 8:10 pm

சந்திரயான்-3 வெற்றி பெற திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு



திருப்பதி: சந்திரயான் 3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் மாடலை வைத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள நிலையில், இன்று(ஜூலை 13) மதியம் 1.05 மணிக்கு கவுண்ட் டவுன் துவங்கியது.

இந்த நிலையில் சந்திரயான் -3 திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் சந்திரயான் 3-ன் மாதிரியை கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.

பின்னர் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா தனது 3வது நிலவு பயணமான 'சந்திராயன்-3' நாளை பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது. எல்லாம் நன்றாக நடக்க வேண்டும். ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் நிலவில் தரையிறங்கவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 3:07 pm



சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்; இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 3:26 pm

சந்திரயான்-3  - Page 3 Chandrayaan

இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல்பிஎம் 3- எம்4 ராக்கெட்டின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.

பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


அதற்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் பணிகளும், இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளது.

சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதை நேரில் காண்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சென்னைக்கு வியாழக்கிழமை வந்திருந்தார். அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வெள்ளிக்கிழமை சென்று ராக்கெட் ஏவுதலை நேரில் பாா்வையிட்டார்.

மற்றொரு புறம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியை இஸ்ரோ தளத்தில் முன்பதிவு செய்து நேரடியாக பார்த்தனர்.

நிலவின் தென்துருவம்: சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்துடன் உந்து கலன் (ப்ரபல்சன் மாட்யூல்), லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் பயணிக்கின்றன.

சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் ஏற்கெனவே நிலவைச் சுற்றி வருகிறது. அதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்பதால் இந்த முறை ஆா்பிட்டரை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பவில்லை.

அதேவேளையில், தற்போது அனுப்பப்பட்டுள்ள லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் உந்து கலன் மூலம் புவி வட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின் உந்து கலனிருந்து லேண்டா் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். ஆகஸ்ட் இறுதியில்தான் நிலவில் அது இறங்கும். தொடா்ந்து லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்ய உள்ளன.

இந்த விண்கலத்தில் மொத்தம் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா வசமாக்கிக் கொள்ளும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு சந்திரயான்-2 கலம், அதே ஆண்டு செப்டம்பா் மாதம் நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டா் கலன் தரையிறங்காமல் நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதி செயலிழந்தது. அதிலிருந்து பெற்ற படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சாதனையை சந்திரயான்-3 மூலம் படைக்கக் காத்திருக்கிறது இஸ்ரோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 3:44 pm

சந்திரயான்-3  - Page 3 YROyFKG

இஸ்ரோவின் முக்கிய மிஷன்களின் திட்ட இயக்குனர்கள்

சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை!
சந்திராயன் -2 - வனிதா முத்தையா!
சந்திராயன் - 3 - வீரமுத்துவேல்!
மங்கள்யான் - சுப்பையா அருணன்!

எல்லாருமே தமிழகத்தை சேர்ந்தவங்க!

யாரும் கண்டுக்க மாட்டோம்!

ஆனா கூத்தாடிப் பயலுகள ஒரு சினிமா நடிச்சாலே பிரபலமாக்குவோம்!

அதே கூத்தாடிகள் கிறுக்கச்சிக்கு கார் வாங்கி தந்து விளம்பரம் செய்தால் கூத்தாடுவோம்..

எவனாச்சும் பைத்தியக்காரத்தனமா பேசுனா வைரலாக்குவோம் ஏனா நாம் தமிழர்கள் அல்லவா ..!

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 3:48 pm

விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்



ஸ்ரீஹரிகோட்டா: அனைத்துக் கட்டங்களையும் வெற்றிகரமாகக் கடந்து, சந்திரயான்-3 விண்கலம் நிலவை அடைய வாழ்த்துகளைத் தெரிவிப்போம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில், சந்திரயான் - 3 விண்கலமானது நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல்பிஎம் 3- எம்4 ராக்கெட்டின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.

பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சந்திரயான் - 3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது.

சந்திரயான் விண்கலமானது ஏவப்பட்ட 16 நிமிடங்களில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலவிற்கான பயணத்தை சந்திரயான் தொடங்கியிருக்கிறது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பல்துறை தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2023 5:02 pm

மொட்டை மாடி.--2 30 சென்றேன் . அபார்ட்மெண்ட் நண்பர் அவரது 2 மகள்களுடன் வந்திருந்தார். இன்னும் 5 நிமிடம் இருக்கிறது,
நிழல் பகுதியில் நிற்கலாமே என்றார்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஒரு நிமிடங்களில் சந்திராயன் சென்ற பாதை வெண்ணிற புகையுடனும் நீள் பார்வையில் போவதை
பார்க்க முடிந்தது. முதல் ஸ்டேஜ் ராக்கெட் எரிந்து விழுவதையும் பார்க்க முடிந்தது. பெருங்கோடு சிறுகோடாக மாறி மறைந்ததும்
பார்க்கமுடிந்தது.

மனமும் நிறைந்தது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 5:17 pm

T.N.Balasubramanian wrote:மொட்டை மாடி.--2 30 சென்றேன் . அபார்ட்மெண்ட் நண்பர் அவரது 2 மகள்களுடன் வந்திருந்தார். இன்னும் 5 நிமிடம் இருக்கிறது,
நிழல் பகுதியில் நிற்கலாமே என்றார்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஒரு நிமிடங்களில் சந்திராயன் சென்ற பாதை வெண்ணிற புகையுடனும் நீள் பார்வையில் போவதை
பார்க்க முடிந்தது. முதல் ஸ்டேஜ் ராக்கெட் எரிந்து விழுவதையும் பார்க்க முடிந்தது. பெருங்கோடு சிறுகோடாக மாறி மறைந்ததும்
பார்க்கமுடிந்தது.

மனமும் நிறைந்தது.
மேற்கோள் செய்த பதிவு: undefined

அற்புதம்.. நேரில் காண்பதும். கண்கொள்ளாக் காட்சிதான்....

நான் யுடியூபில் நேரலை பார்த்தேன்...

கவுண்டவுன் 3...2...1...0...

திக் திக் நிமிடங்களாக நகர்ந்தது....

காரணம் சமீபத்தில் எலான் மஸ்கின் விண்கலம் இவ்வாறான நேரலையில் கடந்த மாதம் வெடித்த காட்சி.....

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது என்ற அறிவிப்பு வந்தவுடன் தான் மனது அமைதியானது...

உலகின் அனைத்து நாடுகளும் உற்று நோக்கிய இந்தியாவின் பெருமை மிகு நிகழ்வு...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2023 6:12 pm

தமிழர்களின் பெருமையை மற்றவர்கள் புகழும் அளவிற்கு
தமிழக அரசு கண்டுகொள்வதில்லை.
இவர்கள் கவலை முழுதும் எப்பிடி பணம் பண்ணலாம்.
சலுகை என்ற பெயரில் கொடுப்பதுபோல் பிரச்சாரம் செய்து
பெயர் பெறுகின்றனர்.
புகழ் பெறுபவர்களின் ஜாதி முக்கிய அங்கம் வகிக்கிறது.
சதுரங்க போட்டி பிரக்யான் /நீட் தேர்வு மாணவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 15, 2023 1:34 pm

சந்திராயன் 3 வெற்றி: விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் – பிரதமர் மோடி பெருமிதம்



சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறி பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி செயற்கைக்கோள் செலுத்தும் நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

சந்திராயன் 3 விண்கலத்தை சுமந்து விண்ணில் சீறிப் பாய்ந்த LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. இதையடுத்து, 179 கி.மீ தொலைவில் சந்திராயன் விண்கலம் 3 புவி நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

சந்திராயான் 3 விண்கலம் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் “நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். மேலும், சந்திரயான்-3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது: “விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது; இதற்காக அயராது உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, விண்வெளி துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று வாழ்த்து கூறி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, “சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது; ஒவ்வொரு இந்தியனின் கனவுகளும், லட்சியங்களும் உயரமாக பறக்கிறது; இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக