புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
21 Posts - 81%
heezulia
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
1 Post - 4%
viyasan
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
213 Posts - 42%
heezulia
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
21 Posts - 4%
prajai
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_m10இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 10, 2023 6:08 pm

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் | பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி


இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் Sri_Lanka_Economic_Crisis3.jpg?w=640&dpr=1

கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. இலங்கையைப் போன்றே, பாகிஸ்தானும் திவால் நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை பெய்த அடைமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பயிர் சாகுபடி சுமார் 80 % வரை பாதிக்கப்பட்டது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல நகரங்களில் கோதுமைக்காக மக்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கோதுமை ஏற்றிவரும் லாரி என்று தெரிந்தால் அதை மக்கள் துரத்திக் கொண்டு ஓடுவது அந்த நாட்டின் பல பகுதிகளில் இயல்பாகிவிட்டது.

கோதுமை மட்டுமன்றி இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஒரு கிலோ சர்க்கரை ரூ.155-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.280-க்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.800-க்கும் விற்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரே நாளில் ரூ.35 உயர்த்தி நிதியமைச்சர் இஷாக் டார் அறிவித்தார். இதையடுத்து, அந்த நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.249.80-ஆகவும், டீசல் விலை ரூ.262.80-ஆகவும் உள்ளது. எரிபொருளுக்காக வாகனங்கள் பல கி.மீ. தொலைவு வரிசையில் நிற்கின்றன. பல மாகாணங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. "இந்த விலை உயர்வு பகுதி அளவானதுதான். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக பிப்ரவரி மாத மத்தியில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்' என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சமையல் எரிவாயு, உருளைகள் (சிலிண்டர்) தட்டுப்பாடும் உச்சத்தில் உள்ளது.

மின்சாரத் துறையின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக கிடுகிடுவென அதிகரித்துள்ளதால், பாகிஸ்தான் மக்கள் மின்சாரப் பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்சாரப் பயன்பாட்டை குறைக்க சந்தைகளை இரவு 8.30 மணிக்குள்ளும், திருமண மண்டபங்கள், உணவகங்களை இரவு 10 மணிக்குள்ளும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருள்கள், மூலப் பொருள்கள், மருந்துகள் போன்றவற்றை வெளியே கொண்டுவர முடியாமல் துறைமுகங்களில் சரக்குப் பெட்டகங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி, அந்நியச் செலாவணி 3.08 கோடி பில்லியன் டாலர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதை வைத்து அடுத்த 3 வாரங்களை மட்டுமே சமாளிக்க முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இறக்குமதியையே நம்பி உள்ள அந் நாட்டுக்கு இது கடும் சவாலாக உருவெடுத்துள்ளது.

2021-22 நிதியாண்டில் பாகிஸ்தானின் கடன் தொகை 59 ஆயிரம் பில்லியன் டாலர் ஆகும். இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 89 % என்பதில் இருந்தே இதன் தீவிரத்தை உணர முடியும். சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இதற்கு முன்னர் 2019-இல் 6 பில்லியன் டாலர் கடன் பெற்றுள்ள நிலையில், மீண்டும் கடன் பெறும் முயற்சியில் இறங்கியது. ஆனால், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கடும் நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதிப்பதால் இழுபறி நீடிக்கிறது.

பொருளாதார மூச்சுத் திணறலில் இருந்து தப்பிக்க சீனாவிடமும், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது. ரூ.2.50 லட்சம் கோடி கடன் தருமாறு சவூதி அரேபியாவிடம் பாகிஸ்தான் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தவறான ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார மேலாண்மைதான் பாகிஸ்தானின் இன்றைய நிலைக்குக் காரணம். இந்திய எதிர்ப்பை வைத்தே காலத்தை ஓட்டலாம் என்று கருதும் அரசியல்வாதிகள், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையையும் பெரிய அளவில் மேற்கொள்ளாததன் விளைவுதான் இது.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019-இல் ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதியை அந்நாடு நிறுத்தியதும் மற்றொரு காரணம். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பலவீனப்பட்ட நிலையில் இருக்கிறது அந்த நாடு.

பாகிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அங்கு போட்டி அரசு அமைக்க சில பயங்கரவாத குழுக்கள் முயன்றுவருகின்றன. போட்டி அரசு அமைப்பதாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நமது அண்டை நாடுகள் பொருளாதார ரீதியாக வலுவிழப்பது நமக்கு நல்லதல்ல. அகதிகள் ஊடுருவல், அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் போன்ற பல சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

அந்நிய உதவியை அளவுக்கு அதிகமாக நம்பினால் கடனில் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை. ராணுவத்துக்கு செலவிடும் நிதியைக் குறைத்து ஆக்கபூர்வ வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சில ஆண்டுகளுக்குப் பிறகாவது பாகிஸ்தான் மீள முடியும். ஆனால், அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள்கூட தென்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியதாகும்.

தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 11, 2023 7:33 pm

சிறிய நாடாக இருந்தாலும் 
சீரிய முறையில் அரசாட்சி செய்யவில்லையெனில் 
மக்களுக்குத்தான் கஷ்டம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக