by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
Page 3 of 4 • 1, 2, 3, 4
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
பிபிசி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
துருக்கியின் 10 மாகாணங்களில் அவசர நிலை:
துருக்கியில் உள்ள 10 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் அடுத்தடுத்து ஐந்து முறை பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து இந்த பூகம்பத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டிடத்தின் இடைபாடுகளில் சிக்கி சுமார் 5000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்வதாக நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ 70 நாடுகள் முன்வந்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
16 ஆயிரம் பேர் பலி
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. வீடுகளை இழந்த மக்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதிகளில் கட்டட குவியல்களாக காட்சியளிக்கின்றன. அதற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆங்காங்கே பிணங்கள் மீட்கப்பட்டு மொத்தமாக எரியூட்டப்படுகிறது
இந்நிலையில், சிரியாவில் இடிபாடுகளுக்குள் தம்பியுடன் 7 வயதான சிறுமி ஒருவர் சிக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளது. 17 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கி, மீட்பதற்காக காத்திருந்த அந்த சிறுமி, அப்போது தனது தம்பியை பாதுகாப்பதற்காக அவனது தலையில் கையை வைத்து இருந்தார். இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த வீடியோவை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அத்னோம், இந்த துணிச்சலான பெண்ணுக்கு பாராட்டுகள் எனக்குறிப்பிட்டுள்ளார். ஏராளமானோர் அந்த சிறுமியை பாராட்டி வருகின்றனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
துருக்கி - சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது...!
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 17 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதேவேளை நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் நிலை என்ன? என்பதில் அச்சம் நிலவி வருகிறது. அதேவேளை, நிலநடுக்கத்தால் உணவு, குடிநீருக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால் உலக நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
5 நாள்களாக தவித்த சிறுமி! உயிருடன் மீட்ட இந்திய வீரர்கள்!!
துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித்தவித்த 8 வயது சிறுமியை துருக்கி வீரர்களுடன், இந்திய மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) உயிருடன் மீட்டடனர்.
இடிபாடுகளிலிருந்து சிறுமியை மீட்கும் வீரர்களின் விடியோ பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கள் கிழமை (பிப். 6) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பல்வேறு கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி, சிரியாவுக்கு உதவும் வகையில் ஏராளமான நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியா சார்பில் மீட்புப் படையினர் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், துருக்கியின் நுர்டாகி பகுதியில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிறுமி சிக்கித் தவித்துள்ளார். அவரை துருக்கி வீரர்களுடன் சேர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் குளிருக்கு மத்தியில் கட்டட இடிபாடுகளில் சிக்கித்தவித்த சிறுமியை உயிருடன் மீட்ட வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தம்பியைப் பாதுகாக்கும் காட்சி ! மனதை உருக்குவது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்வு
அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
இன்று நடந்த மீட்பு பணியின் போது , பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்
இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.இடிபாடுகளில் சிக்கி சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். எனினும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்திய மருத்துவரை கட்டியணைத்த துருக்கிப் பெண்: இதயங்களை வென்ற புகைப்படம்
துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து ஏராளமான குழுவினர் விரைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் உருகுலைந்த பகுதிகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தவிக்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க நிவாரணப் பொருள்களுடன் 'தோழரே நாங்கள் இருக்கிறோம்' என்ற பெயரில், இந்திய மருத்துவர்கள், மீட்புப் படையினர் கொண்ட பெரிய குழு துருக்கியில் தரையிறங்கி உடனடியாக மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆபரேஷன் தோஸ்ட், வி கேர் என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ பெண் மருத்துவருக்கு, அங்குள்ள துருக்கிப் பெண் ஒருவர் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பல லட்சம் பேரால் பார்வையிடப்பட்ட அந்தப் புகைப்படத்தை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
துருக்கியில் தோழமை திட்டம் (ஆபரேஷன் தோஸ்த்) என்ற பெயரில் நிவாரணப் பணிகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நிலநடுக்கத்தால் குலைந்துபோயிருக்கும் கட்டடங்களில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது
துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி நிலநடுக்கத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.
131 கட்டிட ஒப்பந்ததாரர்கள் கைது..!
துருக்கி நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 30,000 பேர் பலியாகி இருக்கும் நிலையில் பூகம்பத்தை தாங்கும் அளவுக்கு கட்டிடங்கள் கட்டாத கட்டிட ஒப்பந்ததாரர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
துருக்கியின் கட்டுமான விதிகளின் படி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதற்கான அளவில் பொறியியல் தர அளவுகள் பின்பற்றப்பட வேண்டும் என்று உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமல் கட்டியதால் தான் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது என்றும் ஆயிரக்கணக்கான உயிர் இழப்புக்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே நிலநடக்கத்தை தாங்கும் அளவுக்கு கட்டிடங்களை கட்டாத ஒப்பந்ததாரர்களை கைது செய்ய அந்நாட்டுத் துணை அதிபர் வாரண்ட் பிறப்பித்த நிலையில் இதுவரை 131 ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Page 3 of 4 • 1, 2, 3, 4
» புனேயில் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பேருந்தை தூக்கி 2 பேரை உயிரோடு மீட்டனர்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
» வீரசிவாஜி சிலைக்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்