புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
157 Posts - 79%
heezulia
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 2%
Pampu
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
prajai
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
322 Posts - 78%
heezulia
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_m10அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 9:43 pm

அமெரிக்காவில் விநோத சட்டங்கள்


அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமை என்றாலும் கூட, அவற்றில் சில சட்டங்கள் வினோதமும் கூட!

அதில் ஒன்று முடி திருத்தம்!

நம்மூரில் எளிதாய் நடப்பவைகள் கூட அங்கு விலை அதிகம். காய்கறி, மளிகை, துணிகள் முதல் காலனிகள் வரை யம்மாடி! மருத்துவத்துக்கு.. யம்மம்மா! கார் வாஷுக்கு எவ்ளோ தெரியுமா... 24 ஆயிரம் ரூபாய்!

பணம் ஒரு பக்கமிருக்க, ஒவ்வொன்றிற்கும் அப்பாயின்மென்ட் என்பது மகா ரோதனை !

அதனால் அமெரிக்கா செல்பவர்கள் உடல்நலம் பரிசோதித்து, வேண்டிய மருந்துகள், உபயோகிக்கும் பொருட்கள் என கையோடு எடுத்துச் செல்வர்.

முடிவெட்ட அங்கு ரூபாய் 2000 என்பதால் இங்கேயே (ஒட்ட) வெட்டிக் கொண்டு செல்பவர்களும் உண்டு. (ஹி..ஹி-அடியேனும்!)

இம்முறை அதையும் மீறி முடி வளர்ந்துவிட யோகிபாபுவுக்கு போட்டி வேண்டாம். காசு போனாலும் பரவாயில்லை என்று ஒரு வழியாய் மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அப்பாயின்மென்ட் இழுத்தடித்தது.

அப்புறம் எங்கள் மாப்பிள்ளை வசிக்கும் காலனியிலேயே வீட்டில் வைத்து வெட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டு, அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டேன்!

அவர் ரஷ்ய பெண்ணாம். வீட்டில் அனைத்து வசதிகளும் வைத்து மிகச் சிறப்பாக மிக நேர்த்தியாக வெட்டிவிட்டார். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் , பணிவாக பக்குவமாக!

இதுவே அப்பாயின்மென்ட் எடுத்து கடைக்கு சென்றால் கூட படுத்தி எடுத்து விடுவர். மனிதாபிமானமே இல்லாத வகையில் புல் வெட்டுவது போல மிஷின் போட்டு விரட்டியடிப்பர்.

இந்த ரஷ்ய அக்காவிடம் பேச்சு கொடுக்க (முடி திருத்தர்கள் பேச சளைப்பதில்லையே!) சில விஷயங்களை சொல்லி விசனப்பட்டார்!

பாஷை பிரச்சினையில் அது புரியாமல் போக நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பியூட்டிஷின்களான ரோஷினி மற்றும் ரம்யாவிடம் விசாரித்த போது அம்மாடியோவ்!

ஒரு முடிவெட்டும் தொழிலுக்கு இம்புட்டா என்கிற மலைப்பு!

அமெரிக்கர்களின் தோல் ரொம்ப மிருதுவானதாம். சின்னச் சின்ன செதுக்கங்கள் கூட நச்சு பண்ணி விடக் கூடுமாம்.

அதனால் ஏகப்பட்ட கெடுபிடியாம். பியூட்டிஷினுக்கு ஒரு வருட படிப்பு! முடி திருத்தத்திற்கு 8 மாதம்! அதுவும் நேராய் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். படிப்போடு பிராக்டிகல் கிளாஸ்களும் உண்டு!

அதன் பின் ஒன்று எழுத்து அடுத்து பிராக்டிகல் என இரண்டு பரீட்சைகள்! அவைகள் கடுமையாக இருக்கும். எந்த சால்சாப்புக்கும் அங்கே இடம் கிடையாது.

அவற்றில் பாஸ் செய்தால் தான் லைசன்ஸ்! லைசன்ஸ் பெற்றாலும் கூட யாரும் உடனே சொந்தமாய் தொழிலில் இறங்கிவிட முடியாது.

அனுமதி பெற்றுள்ள சலூனில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்தாக வேண்டும். நம்ம ஊரு போல ஒரு கத்திரிக்கோலை தொடர்ந்து பலருக்கும் உபயோகிக்க முடியாது. சானிடைஸ் செய்யணும். தரமான கிரீம்களை பயன்படுத்தனும்.

இந்த லைசன்ஸ் எடுக்க செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா...? ரூபாய் 25 லட்சம்!

இந்த தொகைக்கு நம்மூர் அரசு கல்லூரியில் மருத்துவம் அல்லது பொறியியல் பட்டமே பெற்று விடலாமே!

கையோடு அங்குள்ள இன்னொரு லைசன்ஸ் சமாச்சாரத்தையும் சொல்லத் தோன்றுகிறது. அது மீன்பிடிப்பு !

ஆறு , நதி , குளம் என எங்கும் எவரும் நேராய் போய் மீன் பிடித்து விட முடியாது. அதற்கும் இங்கு லைசென்ஸ் வேண்டும். மீன்பிடிப்பதற்கென்று ஒரு இதம் பதம் இருக்கின்றது. இங்கிதம்! சட்ட திட்டம்! கட்டுப்பாடுகள்!

அவைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மீன்களின் அளவு , சீதோஷ்ண நிலை இவற்றை பொறுத்து அது வேறுபடும்.

கடல் மீன்களை பிடிக்கமட்டும் பிரச்சனை இல்லை. படகுகளுக்கு தனி வரைமுறைகள் உண்டு. மீன்பிடிப்பு என்பது அங்கு விலை உயர்ந்த பொழுதுபோக்கு.

ஆமாம்.. இதற்காக லைசன்ஸ்க்கு மனு தாக்கல் செய்யணும். அதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம். ஒரு மாதம் , வருடம் என அந்த கட்டணம் எகிறும்.

வெயில் நேரங்களில் மீன்கள் தண்ணீருக்கு அடியில் சென்று விடும். அதனால் மீன்பிடிக்க உகந்த நேரம் மாலை தான். மீன் பிடிக்க வேண்டி பிரத்யேக தூண்டில்கள் உள்ளன. இதற்கான கடைகளுக்கு சென்றால் அவர்களே பயிற்சி தருவார்கள். லைசன்ஸ் எடுத்தும் தருவார்கள். தூண்டில் புழுக்களும் அங்கேயே கிடைக்கும்.

அப்புறம் லைசன்ஸ் எடுத்துவிட்டால் போதும் என மீன்பிடித்துவிட முடியாது. அதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் முன்பதிவு அடிப்படையிலேயே போகவேண்டும்.

பிடிக்கும் மீன்களையும் கூட நாம் எடுத்து வர முடியாது. ஆசை தீர பிடித்து பிடித்து திரும்ப நீரிலேயே விட்டுவிட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.!

மீன்கள் அதிகரிக்கும் போது அரசாங்கம் தெரிவிக்கும். அப்போது மீன்களை பிடித்து எடுத்துச் செல்லலாம்.

அதுவும் கூட எத்தனை மீன்கள்-என்ன வகையான மீன்களை பிடிக்கிறோம்-எடுத்துச் செல்கிறோம் என கணக்கு கொடுக்க வேண்டும். அது கெட்டது போ!

அதுபோல வேட்டையாடுவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆதி காலத்தில் அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்தபோது சாப்பாடு எதுவும் கிடையாது. மீன் மற்றும் மிருகங்களை வேட்டையாடி சுட்டுத் தான் சாப்பிட்டார்கள்.

அந்த பழக்கம் இப்போது பொழுதுபோக்காக நடக்கிறது. இதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்.

பறவைகள் மிருகங்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி துப்பாக்கிகள்!

வேட்டையையும் எந்த நேரத்திலும் செய்து விட முடியாது. இதற்காக காடுகளை பகுதி பகுதியாய் பிரித்து வைத்துள்ளனர். விடுமுறையிலோ வார இறுதி நாட்களிலோ அவர்கள்.... வேட்டையாடு...விளையாடு!

துணைக்கு நாய்களை வைத்துக்கொண்டு கிளம்பிவிடுவர். காட்டிலேயே தங்குவதற்கு குடில்கள் உண்டு. மிருகங்களை சுடுவதற்கு பயிற்சி வேண்டும்.

அவற்றை காலில் சுட்டுக் காயப்படுத்த கூடாது. சுட்டால் அவை சாக வேண்டும். அவற்றை எடுத்து வந்து புட்சரிடம் (வெட்டி தருபவர்கள்) கொடுத்து கூறு போடுவர். பிறகு பதப்படுத்துபவரிடம் (டாக்சி டெர்மிஸ்ட்) கொடுத்து வாங்கி வந்து குளிர்சாதனத்தில் வைத்து மாத கணக்கில் சாப்பிடுபவர்களும் உண்டு.

மான் வேட்டை என்பது அங்கு மிகப் பிரபலம்!

சமயத்தில் சாலைகளுக்கு குறுக்கே மான் வந்துவிட்டால் ஆபத்து. காரையே அது பதம் பார்த்து விடும்.

அப்படி மானை தட்டி விட்டால்-உடன் அதிகாரிகளுக்கு தெரிவித்தாக வேண்டும். ஒரு வேளை தெரிவிக்காமல், அடுத்து வரும் கார் நபர் புகார் அளித்தால் போச்சு... தண்டனை தான்.

அங்கே மான் வேட்டை பொதுவாக கூடாது. ஆனால் மான்களோ, காட்டுப் பன்றிகளோ பெருத்து விட்டால் அரசாங்கமே போய் வேட்டையாடுங்கள்...! என அனுமதிக்கும்.

என்ன ஒரு வினோதம்!

கட்டுரையாளர்: என்.சி. மோகன்தாஸ்
மாலைமலர்

#அமெரிக்கா #சட்டங்கள் #வினோத_சட்டம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 9:53 pm

அமெரிக்கா செல்ல பல வழிகள்- விசா எத்தனை விசா.


அமெரிக்கா அப்படி - இப்படி என திட்டிக் கொண்டே அங்கு செல்ல நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் அலைச்சல்களுக்கும் பஞ்சமில்லை.

அதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்! அவர்கள் சொல்படி காம்பவுண்டுக்கு வெளியே கப் - சிப் என நிக்கணும். அவன் கேக்கறதெல்லாம் ரெடி பண்ணனும்.

அப்புறம் அப்பாயின்மென்ட்டுக்கு தேவுடு காத்திருக்கணும். பிறகு இன்டர்வியூ ! அதற்கு பெரும் கட்டணம்! விசா தரவில்லை என்றாலும் கட்டணத்தை அண்ணாச்சி திருப்பி தரமாட்டார்.

விசா பெற்று அமெரிக்கா சென்ற பின்பும் கூட எப்போதும் ஒரு பதைப்பிலேயே வைத்திருப்பர். பதற்றம் ! இருக்கிறதை விட்டு விட்டு அப்படியே பறந்து போனாலும் அங்கே நிம்மதியாய் இருக்கிறார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

நல்ல வேலையா?அது . நிலைக்குமா.? விசா மாற்றங்கள்- புதுப்பித்தல்-அப்புறம் கிரீன் குடியுரிமை என எப்போதும் குட்டிப் போட்ட பூனையின் நிலைமை!

அமெரிக்கா செல்ல ரகம் ரகமாய் விசாக்கள் உள்ளன. அவை இசைக்கும் ராகங்களுக்கெல்லாம் நாம் இசைந்தாக வேண்டும்.

பணிவன்போடு இசைகிறார்கள்!

B,CH,F,L,P,O என அந்த விசாக்களுக்கு பல முகங்கள்!

B1 என்பது பிசினஸ் விசா; B2 டூரிஸ்ட் விசா! படிப்புக்காக -F !

மிகவும் பாப்புலரானது H1 தான்.இந்த விசாவிற்கு கண்டிப்பாய் 4 வருடம் கல்லூரி படிப்பு முடித்திருக்கணும்.(+2 + 4) படிப்பு மட்டும் போதாது. வேலையோடு வந்தால் தான் H1.

இதற்கு வருடத்திற்கு மூன்று லட்சத்திற்கு குறையாமல் அப்ளிகேஷன் வருகின்றன.ஆனால் மொத்தம் 65,000 தான் தருவர்.

அதற்கு லாட்டரி மூலம் தேர்வு நடக்கும்..

இதில் பட்டம் படித்தவர்களுக்கு 45 ஆயிரம் போக மீதி 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகளுக்கு!

H2 என்பது விவசாயம் மற்றும் இதர தொழிலாளர்களுக்கானது.

சுற்றுப் பக்க மெக்சிகோ மற்றும் சௌத் அமெரிக்கர்களுக்கு தான் இதில் முதன்மை.

H -3 என்பது சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு. அதாவது மருத்துவர்கள் போன்று பயிற்சிக்காக வருபவர்களுக்கு.

H- 4 குடும்ப உறுப்பினர்களுக்கு !இதில் வருபவர்கள் எம்ப்லாய்மென்ட் ஆதரைசேஷன் டாக்குமெண்ட் (EAD) பெற்றால் மட்டும் வேலைக்குப் போகலாம்.

L - கம்பெனி மூலம் டெபுசேஷனில் வருவது.இதில் வந்த பின் வேறு வேலைகளுக்கு மாறிக் கொள்ளலாம்.

L -1 A நிர்வாகிகள் நிறுவன முதலாளிகளுக்கு.! இதில் வருபவர்கள் 3 மாதத்திலேயே கிரீன் கார்டுக்கு அப்ளை செய்யலாம்.

L 1 B- சாஃப்ட்வேர் போன்ற ஸ்பெஷாலிட்டிக்கு! இவர்கள் வந்த உடனே கிரீன் கார்டு அப்ளை செய்தாலும் கிடைக்க லேட்டாகும்.

O- விசா என்பது பன்முக திறமை கொண்டவர்களுக்கு. கலைஞர்கள், டைரக்டர், தயாரிப்பாளர் , சயின்டிஸ்ட் நோபல் போன்ற உயரிய பட்டம் பெற்றவர்கள் இதில் அடக்கம்! இவர்கள் உடனே கிரீன் கார்டு அப்ளை பண்ணலாம்.

C - டிரான்சிட் விசா! கப்பல்களில் பணிபுரிபவர்களுக்கு. P-ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ள மற்றும் ஆர்கெஸ்ட்ரா குழு போன்றவற்றிற்கு.

Q - பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு அரசாங்கமே தரும் விசா! கலை - கலாச்சாரக் குழுக்களும் இதில் அடக்கம்.விசாக்களில் வருபவர்கள் உள்ளே சென்று தொடர்ந்து ஆறு மாதங்கள் மட்டுமே இருக்க முடியும். அப்புறம் வெளியே போய் விட்டு தான் திரும்ப வர வேண்டும்.இந்த விசா நபர்கள் அங்கு வேலை பார்க்க இயலாது.

இப்படியாக பலவித விசாக்களில் சென்று விட்டாலும் கூட யாரும் – போதும் என்று அப்படியே அடங்கி இருப்பதாய் தெரியவில்லை.

அடுத்து கிரீன் கார்டு, குடியுரிமை என்று அலை பாய்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிற விசாக்கள் என்றால் ஊருக்கு வரும் போதெல்லாம் ஊரில் அமெரிக்கன் எம்பசியில் ஸ்டாம்ப் செய்தால் மட்டுமே திரும்ப உள்ளே அனுமதி!

கிரீன் கார்டு வாங்கி விட்டால் எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம்.

அடுத்து குடியுரிமை பெற்று விட்டால் எந்த தலைவலியும் இல்லை. ஓட்டுப் போடலாம்.தேர்தலில் நிற்கலாம். துணை ஜனாதிபதி வரை பதவி பெறலாம். (ஆனால் ஜனாதிபதியாக மட்டும் முடியாது)

அமெரிக்காவில் பிறந்திருந்தால் எந்த விசா பிரச்சனையும் அவர்களுக்கு இல்லை. அதிலும் மேற்கத்திய நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் விசா ஆன்லைனிலேயே சும்மா அள்ளலாம்.

இந்த கிரீன் கார்டு குடியுரிமை பெறுவதெல்லாம் எப்படி ? ஐயோ...சாமி...ஆளை விடுங்க!அது பெரிய மண்டை காய்ச்சல் சமாச்சாரம்! சொன்னாலும் விளங்காது !

இங்கு இன்று கனமான விஷயங்களைப் விளம்பியாச்சு. கொஞ்சம் கடை...கண்ணி என்று ரிலாக்ஸ் செய்யலாமே..!

நம்மூர் போல அங்கு தெருவுக்குத் தெரு மளிகை, சலூன், டீக்கடை, ஹோட்டல், காய்கறி, பூ என கிடையாது. எல்லாமே குடியிருப்பு பகுதிகளை விட்டு தள்ளி தான். அதுபற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

அமெரிக்கா முழுக்க காஸ்ட்கோ, வால்மாட், டார்கெட் போன்ற மால்களும் டெக்சாஸ் மாநிலத்தில் HEB யும் பிரபலம் ! இங்கு நேரிடையான பண பரிவர்த்தனையே குறைவு. கார்டு - தேய்ப்பவர்களுக்கு முன்னுரிமை.

அதற்கு தனி பாயிண்டுகளும் உண்டு. தவிர கேஷ் என்று சொன்னால் நீண்ட நேரம் நிற்க வேண்டும்.விரும்பினால் நாமாக சொந்தமாக அதற்க்கான மெஷின்களிடம் சென்று பில் அடித்தும் செலுத்தலாம். எல்லாம் நம்பிக்கைநாணயம்!

அங்கு வாங்கின பொருட்களை மூன்று மாதத்திற்குள் திருப்பிக் கொடுக்கலாம் என்பது உபரி தகவல்.. எலக்ட்ரானிக் என்றால் ஒரு மாத அவகாசம்!

இதில் என்ன விசேஷம் என்றால் பொருட்களில் குறை இருந்தால் தான் திருப்பி எடுப்போம் என்கிற கெடுபிடி கிடையாது. பிடிக்கலையா ரிட்டன் ! நம்மூரில் ? ஆயிரம் கேள்விகள் - சால்சாப்புகள் - கம்பெனிக்கு அனுப்பி சரி பண்ணி தாரோம் அதுக்கு மாத கணக்கில் ஆகும்என எத்தனை சிக்கல் ! அங்கு எந்த கேள்வியுமில்லை. திருப்பலாம்-மாற்றலாம். வேண்டாம் என்று சொன்னால் பணமும் அக்கவுண்டுக்கு அனுப்பப்பட்டு விடும்.

இதில் என்ன விநோதம் என்றால் வாங்கின பொருளை பல நாட்கள் உபயோகித்து விட்டு திருப்பிக் கொடுத்தாலும் ஏற்பர். நண்பர் ஒருவர் அங்கு சென்ற போது எதிர்பாராமல் திடீர் குளிர் ! சரி என்று ஜாக்கெட் வாங்கப் போனால் படா விலை!

இம்புட்டா என்று தயங்க, அவரது மாப்ஸ் "விலையை பார்க்காதீங்க . உபயோகிச்சுட்டு ஊருக்கு போகும் முன் திருப்பிக் கொடுத்திடலாம்!" என்க, நண்பருக்கு அதில் நம்பிக்கை ஏற்படவில்லை.சும்மா சமாதானம் சொல்கிறார் என்று தான் நினைத்தார்..

ஆனால் அதன்படியே 10 நாட்களுக்கு உபயோகித்து விட்டு அவரையே அழைத்து போய் ரிட்டர்ன் ! கடையிலும் மறுக்காமல் வாங்கிகொண்டார்கள்.

ஆச்சர்யம்! அட.... இது என்ன பிரமாதம்! வாஷிங் மெஷின் வாங்கி ஒரு மாத விசிட்டில் உபயோகித்து விட்டு கூசாமல் திருப்பிக் கொடுத்து பணம் பெற்றவர்களும் கூட இருக்கிறார்கள்.

அது சரி, இது எப்படி அவர்களுக்கு கட்டுபடியாகிறது.?

ஏன் ஆகாது..? இது எல்லாத்துக்கும் சேர்த்து தானே விலை வைக்கிறார்கள்!

என்.சி.மோகன்தாஸ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 10:03 pm

அமெரிக்க வாழ்க்கை வியப்பானதா?


ஊரில் சொந்த பந்தம், பண்டிகைகள், திருவிழாக்கள் என எப்போதும் களை கட்டும். டென்னிஸ், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து வேட்டை என எல்லாவற்றுக்கும் குழுக்கள். ஒரு கல்யாணம் காட்சி, பிறந்தநாள், திருமணநாள், காதுகுத்து, சீமந்தம் போன்ற விசேஷங்களில் கலந்து கொள்வது என்பதே மகிழ்ச்சியானது.

ஊரில் சொந்த பந்தம், பண்டிகைகள், திருவிழாக்கள் என எப்போதும் களை கட்டும். ஒரே நாட்களில் பல அமைந்து எங்கேப் போவது என மூச்சு முட்டும். அதுவும் வெளிநாடுகளில் சொல்லவே வேண்டியதில்லை.

கடல் கடந்தவர்களுக்கு அந்நாட்டு சட்ட திட்டம், அலுவல்கள் என பின்னிக் கிடப்பதால் இது மாதிரியான ஒன்று கூடல் தான் அவுட் லெட்! அப்பாடா.. இன்று வீட்டில் சமைக்க வேணாம் என பெண்டிர்! - அதே மாதிரி அப்பாடா.. இன்று வீட்டுச் சாப்பாட்டிலிருந்து விடுதலை என குசும்பு பிள்ளைகள்!

நகர அமைப்புகளுக்குள் புழுங்கும் வாண்டுகளுக்கு அங்கே 'வால்' படைகள் காத்திருக்கும்.பெரும் போராட்டத்திற்கு பின் (நாள் கணக்கில் கடைக்கு படையெடுத்து) ஒரு வழியாய் வாங்கி, நீண்ட காலமாக அலமாரியில் தூங்கும் நகை நட்டு துணிமணிகளை அணிந்து பெருமிதம் கொள்ள வாய்ப்பு மகளிர் சமாஜத்துக்கு!

ஆனால் இந்த மாதிரி கூடல்களில் எங்கும் எப்போதும் எல்லோருக்கும் உள்ள பிரச்சினை பரிசு என்ன கொடுப்பது...?

ஊரில் கல்யாணம் என்றால் பழைய மஞ்சள் தேய்த்த மொய் நோட்டை தேடிப் பிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் வைத்ததை விட ஒரு 100 அல்லது 200 என பெரிய மனதோடு சபையில் பாசாக்கப்படும். நட்பு வட்டத்தில் எதற்கு அனாவசிய செலவு...

வீட்டுக்கு ஏற்கனவே வந்துள்ள பரிசுப் பொருட்களை மடை மாற்றி விடலாம் என தூசி தட்டி புது சட்டைப் போடப்படும்!.அல்லது உபயோகமில்லாமல் எதையாவது வாங்கிப் போய் அங்கு குவிப்பது!

இது பெரும் தலைவலி. சில சமயம் உருப்படியாக கொடுக்கலாம் என்று கூட்டணி அமைவதும் உண்டு. இந்த தலைவலியில் இருந்து விடுபட அமெரிக்காவில் அருமையாக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.

ஒன்று நம்மூரில் போல கிப்ட் கூப்பன்! அல்லது விசேஷங்கள் நடத்துபவர்களே 'கிஃப்ட் ரிஜிஸ்ட்ரி' அல்லது 'விஷ் லிஸ்ட்' என ஆன்லைனில் பதிவு செய்து விடுவார்கள்.

எப்படியும் பரிசுக்காக செலவிடப் போகிறார்கள். அவற்றை நமக்கு பிரயோசனப்படும் பொருளாக தரட்டுமே என்று விசேஷம் அழைக்கும் நபர் - 'எனக்கு எந்தெந்த பொருட்கள் தேவைப்படுகிறது என்று அழைப்பிலேயே பட்டியலிட்டு விடுவார்..

அதற்கு பெயர் தான் கிப்ட் ரெஜிஸ்ட்ரி!

அதை வைத்து அவரவர்களின் பட்ஜெட் படி அமேசான்,காஸ்ட்கோ,வால்மார்ட் போன்ற பிரபல கடைகளில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து அதன் ரசீதை இணைத்து விடுகிறார்கள்.

எதையும் நேரில் சுமந்துக் கொண்டு போகாமல் ஹாயாய் பார்ட்டி! (நம்மூர் மொய் விருந்தின் மறு உருவம்!) அத்துடன் பார்ட்டிக்கு அல்லது விசேஷத்திற்கு ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் அழைக்க வேண்டியதில்லை.

ஆன்லைனில் பதிவேற்றி அந்த லிங்கை ஷேர் செய்கிறார்கள்.

பார்ட்டிக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை அவரவர்கள் தத்தம் தொடர்பு எண்களுடன் அதில் உறுதிப்படுத்துவர்.

இன்னார் செல்கிறார்கள் போலிருக்கிறது, போனால் அவர்களையும் சந்திக்கலாம் என மற்றவர்களும் முடிவெடுக்கலாம்.

நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் இருக்கை உணவு ஏற்பாட்டுக்கும் திட்டமிட அது ரொம்ப வசதி.

விசேஷங்கள் தவிர அலுவலகங்களிலோ இருப்பிட பகுதிகளிலோ கெட் டூ கெதர் போன்ற கூடல்களுக்கும் 'POT LUCK' என ஒரு ஏற்பாடு இருக்கிறது.

இந்த வாட்ஸ் அப் குரூப்புகள் இப்போது உலகம் முழுக்க ரொம்ப வசதி.

நம்மூரில் என்றால் எதுவானாலும் அக்கம் பக்கம் கிடைக்கும். தேடி ஓடிப் போய் வாங்கி வந்துவிடலாம்.

அமெரிக்காவில் அதற்கு வாய்ப்பு குறைவு.

இருப்பிட காலனிகளை கம்யூனிட்டி என்கிறார்கள். அந்த கம்யூனிட்டி பகுதிகளில் கடைகளோ - மால்களோ கூடாது. அவைகள் இருந்தால் வெளி ஆட்களின் பிரவேசத்தால் உபத்திரமாகும் என அனுமதிப்பதில்லை.

அநேகமாய் எல்லோருமே வாகனங்கள் வைத்திருப்பதால் எந்த ஒரு சின்ன தேவை என்றாலும் (குண்டூசி வாங்கணும் என்றாலும்) குறைந்தது 20 நிமிடம் பயணித்தாக வேண்டும்! காலடியில் தெருவுக்கு நான்கு மளிகை கடை, டீக்கடை, சலூன், தையல், சலவை என பழகிப் போயுள்ள நமக்கு இது புதுசு! ரவுசு!

அவர்களும் அதை பெரிய சிரமமாய் எடுத்துக் கொள்வதில்லை.ஓடிப் போய் வாங்கி வருவர் இல்லையென்றால் ஆன்லைன்!

ஒவ்வொரு காலனியிலும் குழுக்கள் ஏற்படுத்தி ஆன்லைனிலேயே எளிதாய் வசூல்!

விளையாட்டு மைதானம் - நீச்சல் குளம் - ஜிம் - பண்டிகை கொண்டாட்டங்கள் என அவற்றை வைத்து நிர்வகிக்கிறார்கள். ஒரு பகுதியில் வீடு வாங்கினாலோ அல்லது வாடகைக்கு சென்றாலோ அந்தக் குழுவில் இணைந்து விட வேண்டும்.

நம்மூரில் போல அசோசியேஷன் என்று நேருக்கு நேர் போய் பேசும் அக்கப்போர் இல்லை. காலனிகள் எப்போதுமே அமைதி!

எப்போதும் பந்த் நடப்பது போன்ற தோற்றம்!

வீட்டிற்குள் அதிரடி இசை, தியேட்டர் என இருந்தாலும் கூட வெளியே நிசப்தம். அதுப் போல டென்னிஸ், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து வேட்டை என எல்லாவற்றுக்கும் குழுக்கள். சாதாரணமாய் அங்கு தெருக்களில் ஆட்கள் நடமாட்டத்தை பார்க்க முடிவதில்லை.

வாக்கிங் அல்லது ஆன்லைன் ஆர்டர் பொருட்களை கொண்டு சேர்ப்பவர்களை காணலாம். அத்துடன் வாகன சஞ்சரிப்பு மட்டும். அதனால் ஒரு தேவை என்று யாரும் யாருடைய கதவையும் போய் தட்டுவதில்லை.

அனாவசிய இடையூறுகள், தொந்தரவுகள், வம்பிழுப்புகள் கிடையாது. அதற்கு நேரமில்லாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட ஒரு உதவி என்று குழுவில் பதிவிட்டால் போதும் அத்தனை பேரும் கொண்டு வந்து கொட்டுவர்.

தேவைகளுக்கு அந்தக் குழுக்கள் முழுதாய் தோள் கொடுக்கின்றன.

இந்த பாட்லக் விஷயத்துக்கு வருவோம்.

லன்ச் அல்லது டின்னர் என முடிவெடுத்து ஆன்லைனில் லிங்க் உருவாக்கி –இன்னின்ன நபர்கள் இந்தந்த ஐட்டங்களை கொண்டு வருகிறோம் என மெனுவை முடிவு பண்ணி செய்து எடுத்து வந்துவிடுவதற்கு இப் பெயர்!

இந்த டின்னர், விசேஷ பார்ட்டிகள் குடும்பங்களுக்கும் குட்டிகளுக்கும் ஒரு ஆசுவாசம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்த மாதிரி கெட் டூ கெதர்களில் எத்தனை பேர்கள் விரும்பி பங்கேற்கிறார்கள்? எத்தனை பேர் ஆத்மார்த்தமாய் சென்று வாழ்த்துகிறார்கள்? நேர நெருக்கடியில் தவிக்கும் அங்குள்ள நம்மவர்களுக்கு இது அதிகப்படியான நெருக்கடி!

அமெரிக்கா என வெளியேயிருந்து நாம் ஆர்ப்பரிக்கலாம். பெருமைப்படலாம். அவர்கள் நிறைய சம்பாதிப்பதாக தோன்றலாம். ஆனால் அவற்றுக்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் விலை அதிகம்.

ஒவ்வொரு டாலரையும் கணக்குப் பார்த்து பார்த்து செலவிட வேண்டிய கட்டாயம்! இல்லாவிட்டால் சேமிப்பில் எதுவும் மிஞ்சாது.இந்த மாதிரி பார்ட்டிகளுக்காக நேர செலவு - பரிசு செலவு என எல்லாமே உபரியாகிறது.

இதற்குள் ஒரு பெரிய விதூஷனம் ஒளிந்திருக்கிறது.

இன்று இவர்கள் அழைத்தார்கள், டின்னரில் இத்தனை ஐட்டங்கள் வைத்து அசத்தினார்கள்.. இப்படி அலங்கரித்து இருந்தார்கள்.. நாமும் அவர்கள் எல்லோரையும் அழைக்கணும். இதைவிட பெரிதாய் அசத்தனும் என இவர்கள்.. குறிப்பாய் பெண்கள் அடிக்கும் செண்டிமெண்ட் தான் பிரச்சினை!

அப்புறம் சொந்த தேவைகளுக்கு டாலர்கள் கணக்கு பார்த்து பிசுக்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

இது சம்பந்தமாய் பலரும் கைபிடிக்கும் செய்தி ஒன்றை இங்கு நல்லெண்ண நோக்கோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. குறிப்பிட்ட முக்கிய விசேஷங்கள் தவிர வழக்கமான பிறந்தநாள், திருமணநாள், போன்ற பார்ட்டிகளை நாங்கள் தவிர்த்து விடுகிறோம். அதேப்போல எங்கள் குடும்பத்திலும் இந்த பார்ட்டி கலாச்சாரம் கிடையாது. அவற்றை ஏதாவது ஆதரவற்ற இல்லங்களில் கொண்டாடும்!

திருப்தியாக.மன நிறைவுடன் அவர்களின் வாழ்த்துக்களுடன்..!

இதை விட சந்தோஷமான கொண்டாட்டம் இருக்க முடியுமா?

என்.சி. மோகன்தாஸ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 10:08 pm

அமெரிக்காவில் வறுமை இல்லையா?



விசா புதுப்பிக்க முடியாமல் முடங்கி,பதுங்கி வாழ்பவர்களும் உண்டு. சொந்த நாட்டுக்கும் போக முடியாமல் அங்கும் ஒப்பேற்றமுடியாமல் பசியில் வாடுவோரும் உண்டு.

அமெரிக்கா என்றாலே பணக்கார நாடு. அங்கு ஏழைகள் இல்லை. வறுமையில் வாடுபவர்கள் இல்லை என்கிற எண்ணம் பொதுவாக இருக்கிறது.

அது தவறு. அங்கு பணம் கொட்டுகிறது, சொகுசு என்பதெல்லாம் வெறும் மாயை.!

பணம் கொடுக்கிறமாதிரி கொடுத்து எல்லாவற்றையும் அங்கேயே செலவழிக்க வைத்து விடுவது அவர்களது சாமார்த்தியம்.

நம்மூரில் அடிமட்டத்தில் ஒரு பிரச்சினை என்றால் அக்கம் பக்கம் புரட்டி அல்லது கூலி வேலைக்குப் போய் அதுவும் இல்லையென்றால் நகை நட்டை அடகு வைத்தாவது தற்காலிகமாய் சமாளிக்கலாம்.

அமெரிக்காவில் வாழ்வாதாரம் என்பது கஷ்டமான ஒன்று. அதன் வறுமை என்பது சாதாரணமானது அல்ல. 'காஸ்ட்லியானது'!

நிறைய சம்பாதிக்கலாம்.. சொகுசாய் இருக்கலாம் என்றுதான் இங்கு வருகிறார்கள்.

வேலை கிடைத்து வசதி வாய்ப்புக்களுக்கு பழகினப்பின் அதில் சிக்கல் வரும்போது நிலை நிற்பு நரகமாகிவிடுகிறது.

இது தவிர வறுமை எப்படி வருகிறது?

ஆதரவற்றோர், ஆதரவு தேவைப்படும் முதியோர்,வேலை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள்-உடல்நலம் பாதித்தோர், ஆதரவற்ற சிறுவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டோர், பாலியல் பலாத்காரத்துக்குண்டானவர்கள் மிக அதிகம். அவைகள் வெளியே தெரிவதில்லை.

விசா புதுப்பிக்க முடியாமல் முடங்கி,பதுங்கி வாழ்பவர்களும் உண்டு.

சொந்த நாட்டுக்கும் போக முடியாமல் அங்கும் ஒப்பேற்றமுடியாமல் பசியில் வாடுவோரும் உண்டு. அது தவிர கீழ் மட்ட தொழிலாளர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் விசா என்பது படித்தவர்களுக்கே பிரச்சினை. அன்றாடம் காய்ச்சிகள், சின்ன சின்ன மராமத்து வேலை பார்ப்போருக்கு விசா கிடையாது. அந்த மாதிரி வேலைகளுக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவற்றில் இருந்து கடல் வழியாக எப்படியோ நுழைந்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி பக்கத்து நாடான மெக்சிக்கோவில் இருந்து சுவர் ஏறி குதித்தும் கள்ள தோணிகளில் வருபவர்களும் அதிகம்.

எல்லாவற்றுக்கும் ஆட்கள் வேண்டும். விசா என்று கொடுக்க ஆராம்பித்தால் சமாளிக்க முடியாது.

அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திதரனும். அதனால் அவர்களை அரசு கண்டுக் கொள்வதில்லை. கண்டும் காணா பாவனை.

அது தவிர கட்டுமானம், சாலை விரிவாக்கம் போன்ற உடல் உழைப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கம்பெனிகள் மெக்சிகோவிலிருந்து அழைத்து வருகின்றன. அத்துடன் ஏதாவது காரணத்தால் வேலை இன்றி உணவுக்கு வாடுவோரும் உண்டு.

அவர்களை அப்படியே விட்டுவிட்டால் திருடு.. பித்தலாட்டம் என முறைகேடுகளில் கிளம்பிவிடுவார்கள்.

அதனால் அவர்களுக்கு தங்குவதற்கும் உணவுக்கும் காப்பகங்களை அரசு அமைத்திருக்கிறது.

அதுமாதிரி காப்பகங்களை நடத்த கார்பரேட் கம்பெனிகளுக்கும், அனுமதி அளிக்கிறது.அதற்கு தொண்டு அமைப்புகள் உதவுகின்றன. ஆனால் கொரோனா காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்படவே கம்பெனிகள் பலவற்றுக்கும் அவற்றை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் கை கொடுத்ததும்- இப்போதும் கை கொடுத்து வருவதும் நம் இந்தியர்கள் தான்!

அதுவும் பெண்கள்!

அமெரிக்கா முழுக்கவே உணவு உடை,ஆதரவற்றோருக்கு படிப்பு வசதிகள் என பல குழுக்கள் அதிலும் குறிப்பாய் இந்திய அமைப்புக்கள் செய்து வருகின்றன.

அப்படி வர்ஜீனியா பகுதிகளில் செயலாற்றி வரும் பலரையும் நானும் பார்த்திருக்கிறேன். சாப்ட்வேர் துறையில் படித்து இந்த சேவைக்காகவே ஸ்ரீஷா மற்றும் நுபுர் ஷர்மா போன்றோர் தங்களை அர்ப்பனித்துக்கொண்டுள்ளார்கள்.

வாஷிங்டன் டிசியின் வட வர்ஜீனியாவில் இந்த மாதிரி இல்லங்களில் உள்ளவர்களுக்கு இலவசமாய் உணவு வழங்கி வருகிறது "அன்னசுதா" மற்றும் 'GREEN BEYOND CHARITY அமைப்புகள்!.

இதற்காக பெண்கள்.. மாணவர்களை திரட்டி பல குழுக்களாக இவர்கள் செயல்படுகிறார்கள். வழங்கும் உணவும் ப்ரெஷ் ஆக இருக்கணும் இயற்கையாகவும் இருக்கணும் என்பதில் இவர்கள் முனைப்பாக உள்ளனர். இதன் மூலம் நம் பாரம்பரிய இயற்கை உணவுகள், கீரைகளை வைத்து உணவு தயாரித்து ஷெல்டரில் உள்ள ஆதரவற்றவர்கள், ஏழைகள், நோயாளிகளுக்கு என வழங்கி வருகிறார்கள்.

தரமான சுவையான.. இலவச வீட்டு உணவு! இதற்காகவே துளசி, வில்வம், பாரிஜாதம் சரஸ்வதி மதுங்கலி போன்ற மருத்துவ குணம் கொண்ட இந்திய மூலிகைகளை இங்கே பயிரிட்டு விற்கிறார்கள்.

இதன் மூலம் வரும் வருமானம் பாவப்பட்டவர்களுக்கு உதவியாக திருப்பப்படுகிறது.

எல்லாமே இக்குழுவினரின் வீடுகளில் அன்றாடம் அவரவர்களின் சொந்த செலவில் சமைத்து விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 800 க்கும் மேற்பட்ட வாலண்டியர்களுடன் மாணவர்களும் இருக்கிறார்கள்.

அதற்கு பலத்த ஆதரவு உள்ளது. இந்த சேவையை அறிந்து தன்னார்வத்துடன் குடும்பம் குடும்பமாய் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவர்களின் நேரம் தகாத வழியில் திரும்பிவிடாது அவர்களை சேவையில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களும் கொடுப்பதில் பிறருக்கு உதவுவதில் உள்ள சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தீபாவளி முதல் பல பண்டிகைகள் காலத்தில் ஏழைகளை சந்தித்து பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய ஆர்வமுடன் வருகிறார்கள்.

இதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சி! அத்துடன் திருப்தியாய் பொழுது போகிறது.

இந்த ஸ்ரீஷாவின் சேவை பல விதங்களில் தொடர்கிறது. பெண்களுக்கு மனத் தெம்பளித்தல்,வன்கொடுமை தடுப்பு,டென்னிஸ் பயிற்சி,யோகா,தியானம், இயற்கை செடி-கொடிகளை பெரிய நிலப்பரப்பில் வளர்த்தல்,பசங்களுக்கு கலை- கலாச்சார போட்டிகள் என எல்லாமே ஜோர்!.

இதன் மூலம் இந்திய குடும்பங்களை ஒன்றிணைப்பதுடன் இந்திய பொருள்களுக்கு மட்டுமின்றி இந்தியர்களுக்கும் மதிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அத்துடன் இந்த அமைப்புக்கள் இந்தியாவிலும் ஆதரவற்ற முதியோர்கள்,, பாதிக்கப்படும் பெண்கள், என்று இங்குள்ள சில அமைப்புகள் மூலம் உதவி வருவதை பாராட்டியே ஆக வேண்டும்.

என்.சி. மோகன்தாஸ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 10:15 pm

வாருங்கள்... கடலில் மிதப்போம்!


பொதுவாய் நம்மூர் ஓட்டல், கல்யாணம் காட்சி என்றால் தட்டை கணக்கு பண்ணி கட்டணம் வசூலிப்பர். அங்கு அதற்கு நேர் வினோதம்.

ஒரு முறை எடுத்த தட்டை திரும்ப உபயோகிக்க கூடாது. அடுத்தடுத்து புது தட்டுகளை தான் உபயோகிக்கணும்.

அமெரிக்கா என்பது அரசியல் அழிச்சாட்டியங்களை கடந்து "ஆ"...என வாய் பிளக்க வைக்கும் ஒரு வசீகரம்!

கணினி துறையில் பணி பெற்று அங்கேயே ஆணி அடிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தவிர பொதுஜனத்திற்கு அது எட்டாக் கனி! நீண்ட விசா அலைகழிப்பிற்கு பிறகு டூரிஸ்டாக செல்பவர்கள் பொதுவாய் பிரபல நகரங்கள், உல்லாச தலங்கள் என தங்கி சுற்றி பார்த்து, வியந்து, களைத்து அமெரிக்காவே அவ்ளோ தான் என ஊர் திரும்புவர்.

அமெரிக்கா என்றாலே சொகுசு - பணக்கார தேசம் என அறியப்படுகிறது.

ஆனால் உள்ளே போனால் தான் உண்மை புரியும்.

நாம் காண்பதெல்லாம் செயற்கை! ஜிகினா வேலைகள்! அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை முறையும் வெவ்வேறானவை. ஏற்கனவே நான்கு முறை பயணித்திருந்தாலும் கூட இம்முறை தான் எனக்கு உண்மையான - உள்நாட்டு அமெரிக்காவை அலசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் ... சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் மகளின் குடும்பத்தினருடன் நான்கு மாத வாசம்!

அக்டோபர் முதல் மார்ச் வரை அங்கே கடும் குளிர்!

டெக்ஸாசில் நம்மூர் சீதோஷனம் என்பார்கள். ஆனால் இந்த வருடம் அங்கு மழையின் அடம்!

குளிர்! வெளியே ஊர் சுற்றலாம் என்றால் பிற பகுதிகளில் மைனஸ் வரை போய் காலை எழுந்ததும் கனிவுடன் காரில் படிந்துள்ள ஐஸை வெட்டும் பரிதாபம்!

அதனால் ஒரு மாறுதலுக்காக குரூஸ் எனும் உல்லாச கப்பலை மாப்பிள்ளை தினேஷ் எனக்கும் மனைவிக்கும் முன்பதிவு செய்து இருந்தார். ஒரு வாரம்! நிஜமாலுமே அது உல்லாசம்! பிரமிப்பு!

சொர்க்கலோகம் என்பார்களே அதே... அதே. அமெரிக்கா இருப்பதையும் காட்டும்-- இல்லாததையும் இருப்பதாக நீட்டும்! அந்த வித்தை நம்மவர்களுக்கு தெரியாது- வராது. நம் அருமை பெருமைகளை நாம் அறிவதில்லை.

நமது பொக்கிஷங்களை உணர்வதில்லை. போற்றுவதில்லை. பாதுகாப்பதும் இல்லை. ஆனால் அவர்களோ உலகத்தில் உள்ள அத்தனை விசேஷங்களையும் அமெரிக்காவில் கொட்டி வைத்திருக்கிறார்கள். கொட்டமடிக்கிறார்கள்... அடிக்க வைக்கிறார்கள்!.

அங்கே வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையான உழைப்பு . அப்புறம் இரண்டு நாட்கள் பொழுதுபோக்கும் கடுமையான ஓட்டம்!

அந்த பொழுது போக்கிற்காக நகரத்தில் என்னவெல்லாம் உள்ளனவோ அவ்வளவையும் அந்த கப்பலுக்குள்ளும் வடிவமைத்திருக்கிறார்கள். கப்பல் என்றால் சும்மா இல்லை--பிரம்மாண்டம்!

அது ஒரு அதிசய உலகம்! அரசியல்வாதிகள் சொல்வது போல 'ஊரை அடித்து உலையில் போடுவது போல - அங்கே கப்பலில் போட்டு மிதக்க வைத்திருக்கிறார்கள்!

கப்பல் முழுக்க ஏசி- அல்லது தேவை என்றால் கதகதப்பு.! தங்குவதற்கு ஏறக்குறைய 1200 அறைகள்! அதில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் சொகுசு.! .

4000 த்துக்கும் மேற்பட்ட பயணிகள்! 1100 ஊழியர்கள்! விசாலமான விளையாட்டு மைதானம்! வாட்டர் கேம்ஸ்! ஜிம்மேர ஜிம்! மசாஜ் சென்டர்! அக்குபஞ்சர்! நடன அரங்குகள்! பசங்களுக்கு தனி களிக்கூடங்கள்! ஐஸ் ஸ்கேட்டிங்! சைக்கிளிங் ! மூலைக்கு மூலை மது பார்கள்.!

வெதுவெது நீச்சல் குளங்கள்! ஒவ்வொரு தளத்திலும் மெது மெது கார்பெட்!

அங்கங்கே வித வித பொழுதுபோக்கு அம்சங்கள்! காமெடி,,மேஜிக், இசைக்கச்சேரிகள்! பேஷன் ஷோக்கள்... கடைகள் என எங்கும் வண்ண ஜொலிப்புக்கள்! விஸ்தீரமான பபே உணவு கூடத்தில் பாம்பு முதல் ஊர்வன -மிதப்பன- பறப்பன நடப்பன -500 வித அயிட்டங்கள்! வெளிநாட்டு உணவுடன் இந்திய வகைகளும் உண்டு.

நாங்கள் அசைவம் தொடுவதில்லை என்பதால் கொஞ்சம் தேடித்தேடி தட்டுகளை நிரப்ப வேண்டிய கட்டாயம். பொதுவாய் நம்மூர் ஓட்டல், கல்யாணம் காட்சி என்றால் தட்டை கணக்கு பண்ணி கட்டணம் வசூலிப்பர். அங்கு அதற்கு நேர் வினோதம்.

ஒரு முறை எடுத்த தட்டை திரும்ப உபயோகிக்க கூடாது. அடுத்தடுத்து புது தட்டுகளை தான் உபயோகிக்கணும்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட உஷாரில் உணவகத்திற்கு நுழையும் போதே ஆட்கள் நின்று மறித்து கைகழுவிக்கொண்டு பிரவேசிக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

உணவகத்திலும் சரி, வெளியேவும் சரி. புன்னகையோடு உபசரிப்பு! அதற்கு அவர்கள் கொஞ்சம் கூட சளைப்பது இல்லை. சலிப்பதில்லை. அதற்காக டிப்சும் எதிர்பார்ப்பதில்லை. (டிப்ஸ் எல்லாம் அட்வான்சாகவே புக்கிங்கின்போதே சேர்த்து லவட்டி விடுகிறார்கள்.)

அவர்களின் உடை.. அடா... அடா ! வறுமையான உடை! ஜில்..ஜில்..-- ஜொள்..ஜொள்.! அரங்கு -- திறந்தவெளி நடனம்- நீச்சல் குளம் என எங்கும் நெஞ்சம் திறந்த உலா!

மற்றவர்கள் பார்ப்பார்களே... என அவர்கள் அஞ்சுவதில்லை.. கூசுவதில்லை. பார்க்கலாமா....கூடாதா? பார்த்தால் தப்பாய் நினைப்பார்களோ என்ற அச்சம்.. நாணம் பயிர்ப்பு எல்லாம் நமக்குத்தான் ! அது வேண்டாத கூச்சம் என்பது போகப் போகத்தான் புரிந்தது.

நம்மவர்கள் சேலை, நகை நட்டு, உடைகளை காட்டி பெருமிதம் கொள்வது போல இந்த அக்காக்கள் தங்கள் வெளுப்பை – ஜொலிப்பை பகிர்கிறார்கள். அடுத்த வினோதம்-- தனியாகவோ அல்லது கும்பலிலோ படம் எடுத்தால் நம்மூரில் துரத்தப்படுவோம்.

இங்கே அதிலும் கூட எதிர்ப்பதம்.! பெரிய மனதுடன் எடுத்துக்க என போஸ் தருகிறார்கள். கண்டுக் கொள்வதில்லை.

அதே மாதிரி நம்மை படம் எடுக்கணும் என்றாலும் மொபைலை கொடுத்தால் 'ஓக்கே' என்று சந்தோஷமாய் எடுத்துத் தருகிறார்கள்.

அமெரிக்க ஆங்கிலம் நமக்கு வசப்படாவிட்டாலும் கூட "ஹாய் ,தேங்க்யூ, ஓக்கே, ஸாரி, எக்ஸ்கியூஸ் மீ ,வெரி நைஸ் போன்ற வார்த்தைகள் தெரிந்தால் போதும் பிழைத்துக் கொள்ளலாம்..

அந்நியர்கள் என்றால் மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளுக்குள் இருந்தாலும் அவற்றை அவர்கள் வெளியே காட்டுவதில்லை. அப்படி அவர்கள் நிற பேதம் காட்டுவது சட்டப்படி குற்றம். புகார் அளித்தால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம். ஆனாலும் அறிந்தவர்கள் அறியாதவர்கள் யாராக இருந்தாலும் புன்னகையோடு அவர்கள் "ஹாய்" சொல்கிறார்கள் .

அந்தக் கப்பல் அமெரிக்காவை ஒட்டின மெக்சிகோ தீவுகளில் நிற்கின்றன. முதல் நாள் அது நின்ற தீவு "கோஸ்த மயா". "இங்கே வண்டி 4 மணி நேரம் நிற்கும். சுத்தி பார்த்துட்டு சீக்கிரம் வந்திருங்க! என்று அவர்கள் சொல்லும் பொது நம்மூர் விரைவு பேருந்துகள் ஹைவே பாடாவதி உணவகங்களில் நிறுத்தப்பட்டு "வண்டி 20 நிமிஷம் நிற்கும்" எனும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. "மாமா.. வண்டி நம்பரை குறிச்சுட்டுப் போங்க. திரும்பி வரும்போது வேறு வண்டியில ஏறிடாதிங்க..!" என்று எங்கள் மாப்ஸ் கிண்டலடித்த மாதிரியே அங்கு இன்னும் மூன்று கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மெக்சிகோ தனி நாடு என்றாலும் கூட அது பல தீவுகளைக் கொண்டது. அவர்களின் வருமானமே டூரிஸம் தான்.

அமெரிக்காவிலிருந்து வாரத்திற்கு 28 உல்லாச கப்பல்கள் அங்கு வருகின்றனவாம். அங்கேயும் பீச்! நீச்சல் குள குஷாலான குளியல்! ஆடல்- பாடல்- குடி! உணவு! நம் பாண்டி பஜார் -ரங்கநாதன் தெரு போல கடைகள் ! கப்பலின் அடுத்த ஸ்டாப் – கொஸுமேல்! அங்கும் அதே...அதே!

பஸ்ஸில் சுற்றி காட்டுகிறார்கள். பண்டைய அரசர் இந்தியப் பெண்ணை மணந்ததால் அங்கே இந்தியர்களுக்கு ஏக மரியாதை. அப்பெண்ணிற்கு சிலையும் வடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் சரி, மெக்சிகோவிலும் சரி, வறுமை இருந்தாலும் கூட அவர்கள் பெரும்பாலும் பிச்சை எடுப்பதில்லை.

சாலையில் உண்டியல் வைத்து இசைக்கிறார்கள். நடனம்! விதவித வேஷங்களில் நின்று அழைப்பார்கள். உண்டியல் போட்டுவிட்டு அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ளலாம்.--அதுவும் கூட அதிகமில்லை- ஒரு டாலர்!

கப்பல் பயணத்திற்கு அவர்கள் வருவது உல்லாசத்திற்கும் ஓய்வுக்கும் தான். காலை எழுந்ததுமே ஜிகு ஜிகு உடையுடன்- மதுக்கடைகளில் கியூ!

அப்புறம் 24 மணி நேர பேக்கரி-பீசா! அடுத்து நேராய் ஜிம் ! நீச்சல்! செமத்தியாய் காலை சிற்றுண்டிக்குப் பின் திரும்ப நீச்சல் குளத்தில் நீர் ஜந்து போல ஐக்யம்! அங்கேயே உற்சாக- மற்றும் சுடு பானங்கள்! அப்புறம் மலர்ந்தும் கவிழ்ந்தும் சன் பாத்! பிறகு பல்வேறு நாட்டின் இசைகள் முழங்க, குடும்பத்தோடும் குட்டிகளோடும் டான்ஸ்! அடுத்து வகையான லன்ச்! பிள்ளைகளுக்கு வீர விளையாட்டுகள்- சாகசங்கள்- போட்டிகள்-- அரங்குகளில் பலதரப்பட்ட ஷோக்கள்! படக் காட்சிகள்!

கப்பலின் காம்பவுண்டை சுற்றி அலைகளை ரசித்தபடி வாக்! விதவிதமான மதுக்கள்! மாதுக்கள்! 14 மாடிகளுக்கும் அநேக லிஃப்டுகள்! எது என்றாலும் சந்தேகம் போக்க தேவதைகள்! நைட் கிளப் --இரவினில் ஆட்டம் !

ஒவ்வொரு தளத்திலும் இசைப் புயல்கள்! அத்தோடு - சூதாட்டமான காசினோக்கள்! நாள் முழுக்க- அங்கும் ஜிலு..ஜிலு! எங்கு என்ன விசேஷம் என நேர்த்தியாக வழிகாட்டுகிறார்கள். ஆறாம் நாள் கப்பல் மடங்கி வந்து ஹுஸ்டன் நகரில் தரை தட்டுகிறது. கப்பல் பயணம் என்றதும்- அப்படி இப்படி என யூகித்து பயமுறுத்தி - மிரட்டப்பட்டு சென்றால் - எதுவுமே இல்லை. ஜாலியோ ஜாலி!

அங்கிருந்து வெளியேறும் வரை பாதுகாப்புக்கு பஞ்சமில்லை. அவரவர்கள் விரும்பும் சொகுசுப் படி ஆன்லைனிலேயே முழு கட்டணத்தையும் கவ்வி விடுகிறார்கள்.

மது பிரியர்களுக்கும் மாமிச வெறியர்களுக்கும் அக்கட்டணம் என்பது ஜுஜுபி! அதன் காரணமாய் அவர்கள் எப்போதும் அளவில்லா மிதப்பில்!

எங்களுக்கு 'தலைக்கு' ரூபாய் 60- ஆயிரம் கட்டணம் என்றாலும்-- மது மாமிசம் பக்கம் நாங்கள் போகவில்லை என்றாலும் கூட- முதலுக்கு மோசமில்லை! அமர்க்களம்!

- என்.சி. மோகன்தாஸ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:33 pm

நன்றி என்.சி.மோகன்தாஸ்! நன்றி சிவா!
இன்னும்கூட நாம் #அமெரிக்காவைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை உள்ளன!
நம் பக்கத்துவீட்டுக்காரர்கள் எத்தனை வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் , வரும்போது நம்மிடம் அமெரிக்கா பற்றி மூச்சு விடுவதில்லை! ஒருவேளை அந்த மூச்சுக்காற்றைப் பிடித்துக்கொண்டு இவனும் அமெரிக்கா சென்றுவிடுவானோ என்ற பயம் போலும்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:34 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி என்.சி.மோகன்தாஸ்! நன்றி சிவா!
இன்னும்கூட நாம் #அமெரிக்காவைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை உள்ளன!
நம் பக்கத்துவீட்டுக்காரர்கள் எத்தனை வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் , வரும்போது நம்மிடம் அமெரிக்கா பற்றி மூச்சு விடுவதில்லை! ஒருவேளை அந்த மூச்சுக்காற்றைப் பிடித்துக்கொண்டு இவனும் அமெரிக்கா சென்றுவிடுவானோ என்ற பயம் போலும்!
மேற்கோள் செய்த பதிவு: undefined

அந்த பயமாகக் கூட இருக்கலாம்... ஹா ஹா ஹா.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக