by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி: 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் சரியாக காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றனர்.
போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு அதிபர் மாளிகையில் இருந்து விழாவிற்குப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் படாக் அல்-சிசி ஆகியோரை வரவேற்றார். குடியரசு தின விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகை அணிந்து வந்துள்ளார்.
குறிச்சொற்கள்: #குடியரசு_தினம் #பிரதமர்_நரேந்திர_மோடி #திரவுபதி_முர்மு #குடியரசுத்_தலைவர்
நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம்: கவர்னர் ரவி குடியரசு தின வாழ்த்து!
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது:
நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம்; பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது
வ.உ. சிதம்பரம், மகாகவி சுப்பிரமணிய பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம் - ஆளுநர் ரவி
இந்த நிலையில் சட்டமன்றத்தில் நடந்த பிரச்சனையை அடுத்து இன்று ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் தேநீர் விருந்தில் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, மெரினாவில் 74வது குடியரசு தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.
சென்னை மெரினாவில் 74வது குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைக்காவலர் சரவணன், வேலூர், செவிலியர் ஜெயக்குமார், பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீகிருஷ்ணன் தஞ்சை செல்வம் ஆகியோருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சிறப்பு காவல் நிலையத்துக்கான முதல்-அமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையங்கள் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
எகிப்து அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா, இந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில், நாளை மிகுந்த எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் நடைபெறுகிறது.
டெல்லியில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது 68) அழைக்கப்பட்டார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்துகொள்கிறது. இந்தநிலையில் டெல்லியில் நாளை (26-ந் தேதி) 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டில் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த நிலையில்,இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த பத்தா எல்- சிசிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பத்தா எல்-சிசிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இச்சந்திப்பின்போது, வேளாண்மை, எண்மம் (டிஜிட்டல்), வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதிபர் எல்- சிசியை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அரபு-ஆப்பிரிக்க நாடுகளின் அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வரும் எகிப்துடன் நட்புறவை மேம்படுத்த இந்தியாஆர்வம் காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2021-22 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 712 கோடி டாலராக (சுமார் ரூ.58,122 கோடி) இருந்தது என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 74 ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்யப்பட்டது.
பின்னர், பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடியை வைத்து மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு, 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றி வைத்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இதனை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி வைத்து வீரவணக்கங்களை செலுத்தி வருகின்றனர். இதேபோன்று, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒவ்வொருவருக்கும் எனது மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இன்றைய தினம், அன்னை பாரதத்திற்காக உயிர்த்தியாகம் செய்து நாட்டுநலனுக்கு பங்காற்றி, இன்றளவும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பவர்களை நினைவுகூரும் தினம். அதனுடன், மிக பெரிய ஜனநாயகம் கொண்ட நாட்டின் அரசியல் சாசன வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்களை நினைவுகூரும் தினமும் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் இருவர் உள்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..
புதுடில்லி: மறைந்த சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா, பிரபல தபலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உட்பட ஆறு பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், தொழிலதிபர் 'இன்போசிஸ்' நாராயணசாமியின் மனைவி சுதா மூர்த்தி உட்பட, ஒன்பது பேர் பத்ம பூஷண் விருது பெற உள்ளனர். சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் உட்பட நான்கு தமிழர்களுடன், ௯௧ பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி இந்தாண்டு, ஆறு பேருக்கு பத்ம விபூஷண், ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 19 பேர் பெண்கள், இரண்டு பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஏழு பேருக்கு மறைவுக்குப் பின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஜோடிகளுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடைபெறும் விழாக்களில், இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவார்.
கடந்தாண்டு உயிரிழந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா, பிரபல தபலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகி வாணி ஜெயராம், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
தொழிலதிபர் இன்போசிஸ் நாராயணசாமியின் மனைவி சுதா மூர்த்தி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள, ஆர்.ஆர்.ஆர்., படத்தில் இடம்பெற்றுள்ள, 'நாட்டு... நாட்டு...' பாடலுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உட்பட, 91 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த கலைப் பிரிவில் கல்யாண சுந்தரம் பிள்ளை, சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவத் துறையில் டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி, பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஜோடியாக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் நளினி பார்த்தசாரதி, மருத்துவத் துறை சேவைக்கான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது: திருப்பூர் முதலிடம்
சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி, திருப்பூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு, சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதும் இன்று நாட்டின் 74-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி, மாநிலத்தில் உள்ள சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான முதலமைச்சர் விருதுக்கு திருப்பூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இதில் சிறந் காவல் நிலையத்துக்கான முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையமும், இரண்டாம் பரிசு திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையமும், மூன்றாவது பரிசு திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கும் வழங்கப்படுகிறது.
குடியரசு தின விழாவையொட்டி காலை 8 மணியளவில் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆளுநர் தனது உரையில், "இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது.வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்" என்று குறிப்பிட்டார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் முதலில் வந்த 'தமிழ்நாடு வாழ்க' வாசகம் தாங்கிய வாகனம்
சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் முதலில் வந்த தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டிருந்த "தமிழ்நாடு வாழ்க" வாகனம் பார்வையாளர்களின் கவனம் பெற்றது.
நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னையில் வழக்கமாக, மெரினா காந்தி சிலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெறும். அப்பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், இந்த முறை உழைப்பாளர் சிலை பகுதியில் விழா நடைபெற்றது.
குடியரசு தினத்தையொட்டி, காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலினும், அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் காவல் துறை மற்றும் ராணுவ அணிவகுப்புடன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தனர். இதையடுத்து, தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்தார். அப்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
இதன் பிறகு, முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும், கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்காரஊர்திகளும் வலம் வந்தன.
"தமிழ்நாடு வாழ்க" வாகனம்: இந்த அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வாழ்க என்று வாசகம் இடம்பெற்றிருந்த வாகனம் முதலில் வந்தது. இதனை பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். இந்த வாகனத்தில் தமிழகம், தமிழ்நாடு சர்ச்சையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின்போது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வண்ணம் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த தமிழ்நாடு என்ற எழுத்துடன்கூடிய கோலமும் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக, 2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகம் என்று அழைப்பது மிக பொருத்தமாக இருக்கும் என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர் ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு என்று சொல்லை தவிர்த்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், "வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்