by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாள பேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகின்றான். தாள விஷயத்திலே மஹா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான்.
தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு, மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது.
ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, அவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலச் செய்கிறான், நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னான்:
”குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி,
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு;
தரித்திரம் போகுது, செல்வம் வருகுது;
படிப்பு வளருது, பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான்; ஐயோவென்று போவான்,
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரந் தெரியுது;
மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது; வளருது!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு,
சொல்லடி, சொல்லடீ, மலையாள பகவதீ.
அந்தரி, வீரி, சண்டிகை, சூலி;
குடுகுடு குடுகுடு”
– இப்படி அவன் சொல்லிக் கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சர்யத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப் போய், அவனை ஸமீபத்தில் அழைத்து ”எந்த ஊர்” என்று கேட்டேன். ”சாமி, குடுகுடுப்பைக்காரனுக்கு ஊரேது, நாடேது? எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லாமோ சுத்திக் கொண்டு வருகிறேன்” என்றான்.
அப்போது நான் சொன்னேன் :
”உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடிய வரையில் விஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான ரிகை வேஷ்டி கொடுக்கிறேன்” என்றேன்.
அப்போது, குடுகுடுக்காரன் சொல்லுகிறான் : ”சாமி, நான் பிறந்த இடந்தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். ‘ஒன்பது கம்பளத்தார்’ என்ற ஜாதி. எனக்குப் பத்து வயதாக இருக்கும் போது தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப் போய் விட்டார். பிறகு நான் இதே தொழிலில் ஜீவனம் செய்து கொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு ‘கம்பெனி ஏஜெண்டு’. இந்தியாவிலிருந்து தாசிகள், நட்டுவர, கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக் கொண்டு போய், வெள்ளைக்காரர் தேசங்களிலே, பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ், முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன்.
அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி ‘கம்பெனி’ கலைந்து போய் விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனாலும் பூர்வீகத்தொழிலைக் கைவிடுவது ஞாயமில்லை என்று நினைத்து இங்கு வந்த பின்னும் பல ஊர்களில் சுற்றி, இதே தொழில் செய்து வருகிறேன்.
ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப் போல வீண் பொழுது போக்காமல், அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன். எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும். அநேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவுபட்டிருக்கிறார்கள். நம்முடைய பரம்பரைச் தொழிலை வைத்துக் கொண்டே ஊருராகப் போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடியவரை நியாயங்கள் சொல்லிக் கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய விருத்தாந்தம்” என்றான்.
ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.
”சாமி வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு அவன் மறுபடி உடுக்கையடித்துக் கொண்டு போய் விட்டான்.
போகும் போதே சொல்லுகிறான் :
”குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு
சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது.
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது,
எட்டு லட்சுமியும் ஏறி வளருது,
பயந் தொலையுது, பாவந் தொலையுது
சாத்திரம் வளருது, சாதி குறையுது,
நேந்திரம் திறக்குது, நியாயந்தெரியுது,
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது,
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது,
சொல்லடீ சக்தி, மலையாள பகவதி,
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது,”
– என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப்புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.
#மகாகவி #அமரகவி_பாரதி #கோணங்கி #சிறுகதை #சுப்பிரமணிய_பாரதியார் #பாரதி #பாரதியார் #புதிய_கோணங்கி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்