புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
40 Posts - 63%
heezulia
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
2 Posts - 3%
viyasan
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
232 Posts - 42%
heezulia
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
21 Posts - 4%
prajai
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு


   
   
Abdul Rahman07
Abdul Rahman07
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 30/12/2022

PostAbdul Rahman07 Sat Dec 31, 2022 7:26 am

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக:

1750 ஆம் ஆண்டு எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர்.ஆனால் அவர்கள் வந்த எட்டயபுரமே முதல் எதிர்ப்பாக அமைந்தது.ஆங்கிலேயருக்கு எதிராக ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார் பெரிய அழகுமுத்து கோன்.ஆலோசனைக்கூட்டத்தில் பெரிய அழகுமுத்து, சின்ன அழகுமுத்து,ஜெகவீரராம எட்டப்பர்,குருமலைத்துறை ஆகியோர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த கூடாது என முடிவு செய்யப்பட்டது.எட்டயபுரம் மன்னரால் அழகுமுத்து கோனின் படை வீரர்கள் குடியேற வசதியாக கட்டாளங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்கள் வழங்கபட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்கத்துணிந்த சின்ன அழகுமுத்து ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் வாயிலாக,வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமை ஏது?வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், கும்பினியர்களின் தலைகள் கட்டாலங்குளம் மண்ணில் உருளும், என்று மிரட்டல் விடுத்தார். கோபமடைந்த ஆங்கிலேய அரசு 1750 மார்ச் மாதம் ஆங்கிலேய படையை எட்டயபுரம் பாளையத்திற்கு அனுப்பியது.ஆங்கிலேயர்களுக்கும் எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக போரிட்ட அழகுமுத்து சகோதரர்களுக்கும் போர் மூண்டது.எண்ணற்ற வீரர்களை உடைய எட்டயபுரம் பாளையம் இப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கண்டது.இதுவே வரலாற்றில் நடந்த முதல் ஆங்கிலேயருக்கு எதிரான போர் ஆகும்.இதனைத்தொடர்ந்து அழகுமுத்து சகோதரர்கள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படச் செய்தனர் .இதனைத் தொடர்ந்து பல இடங்களில் பிரிட்டிஷ் அரசுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே கிளர்ச்சி ஏற்பட்டது.1752ல் நடந்த போர்களத்தில் பல ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர் அவ்வப்போது ஆங்கில வீரர்களிடம் பீரங்கி படை வந்து சேராதது பின்னடவை ஏற்படுத்தியது.

ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பாளையக்காரர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் பூலித்தேவன் என்ற வீரர் அழகுமுத்து சகோதரர்களின் உதவியை நாடினார்.எட்டையபரம் மன்னர் இதனை விரும்பவில்லை எனவே பூலித்தேவனுக்கு உதவ மறுத்துவிட்டார்.ஆனால் தன் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் சேர்வைக்கோனார் ராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்டது போலவே அழகுமுத்து சகோதரர்கள், பூலித்தேவனுக்கு ஆதரவாக போரிட ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்துக்கொண்டு அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.ஆனால் இந்த ஒற்றுமையானது வெகுநாள் நீடிக்கவில்லை.ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்கள் ஒன்றினைய மறுத்துவிட்டனர்.முதன்முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். ஆங்கிலேய அரசின் கடுமையான கோபத்திற்கு ஆளான அழகுமுத்து சகோதரர்கள் 1755ல் கடுமையான போரை சந்திக்க நேர்ந்தது.இப்போரில் பெருமாள் கோவில் உள்ளே இருக்கும் சிலையை தகர்க்க வந்த ஆங்கிலேய படையை எதிர்த்து போரிடும் போது சின்ன அழகுமுத்து கோனார் சுடப்பட்டு பெருமாள் கோவில் முன்பு 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ம் நாள் மரணம் அடைந்தார்.இதனைக் கண்ட பெரிய அழகுமுத்துவும் அவரது வீரர்களும் கடுமையாக ஆங்கிலேயர்களை தாக்கினர்.தொடர்ந்து நடந்த போரின் தாக்கத்தால் ஆங்கிலேய படை போரில் பின்வாங்கியது.இதனையடுத்து 1757 ல் கான்சாகிப் படை, தன்னுடன் பீரங்கி படையையும் சேர்த்துக்கொண்டு பெத்தநாயக்கனூர் மீது போர் அறிவிப்பு செய்தது.

வாழ்க்கை:

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தை ஆட்சி செய்த ஜமீன்தார் குடும்பத்தில் யாதவர் மரபில் ஜனவரி 23 ம்நாள் 1710 ஆம் ஆண்டு பிறந்த மாமன்னர் அழகுமுத்துக்கோனார் 1725 முதல் 1750 வரை ஆட்சி செய்தார்.இவருக்கும் பாக்கியத்தாய் என்ற இராணி அழகுமுத்தம்மாள் ஆகிய இணையருக்கு பிறந்த அழகுமுத்து சகோதரர்கள் எனப்படும் இவர்கள் மூத்த சகோதரர் வீர அழகுமுத்துக்கோன் எனவும் இளைய சகோதரர் சின்ன அழகுமுத்து கோனார் எனவும் அழைக்கப்பட்டனர்.கட்டாலங்குலத்தில் யாதவர் மரபில் 1728 ஜீலை11 ஆம் நாள் வீர அழகுமுத்துக்கோனும் 1729 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் திருநெல்வேலி சீமையின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சின்ன அழகுமுத்து கோனும் பிறந்தனர்.1750 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்ட மாமன்னர் அழகுமுத்துக்கோன், ஜூலை 09ம் நாள் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான வீர அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக முடி சூடினார்.இவரது தம்பி சின்ன அழகுமுத்து கோன் இவரது அரசவையின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.தங்கள் நாட்டில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்வதை விரும்பாத சின்னழகுமுத்துக்கோனுக்கு ஆங்கிலேயர்கள் மீது அதிக வெறுப்புணர்வு இருந்தது. எட்டயபுரம் மன்னரிடம் நட்பு கொண்டிருந்ததால் ஜெகவீரராம எட்டப்பர் வேண்டுகோளுக்கு இணங்க அழகுமுத்து சகோதரர்கள், எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக தலைமை தாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டனர்.

முதல் இந்திய படுகொலை:
வீர அழகுமுத்து கோன், மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து தனது படையில் மொத்தம் 766 வீரர்களை சேர்த்தார்.மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன், பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்கிமறுநாள் மாவேலியோடை அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர்.ஆனால் தந்திரமாக செயல்பட்ட யூசுப் கான் அன்று இரவே எட்டையபுரத்தை முற்றுகையிட்டார்.தனது பலமிக்க பெரும் படையை பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தார். இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை சேர்வைக்காரர் சண்டை கும்மி என்ற பாடல் சொல்கிறது.

கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதிசூரரும்.
வெங்கலகைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும் மாண்டுவிட்டான்.

..என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.

 பெரிய அழகுமுத்துவும் அவரது தளபதிகளும் கடுமையாக போரிட்டனர்.அழகுமுத்துக்கோனின் குதிரை சுடப்பட்டு அவரது வலது கால் சுடப்பட்டது இருப்பினும் 3மணி நேரம் போர் தொடர்ந்தது.பல வீரர்கள் மரணம் அடைந்ததையடுத்து மீதி இருந்த 248 வீரர்களால் போரினை சமாளிக்க முடியவில்லை. அழகுமுத்துக் கோன், மற்றும் தங்களை எதிர்த்தவர்களையும் கைது செய்தார் கான்சாகிப்.ஆங்கிலேய அரசை எதிர்த்ததற்காக மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகள் துண்டிக்கப்பட்டன.


அழகுமுத்து கோன் மற்றும் அவரது ஆறு தளபதிகளையும் நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்றுபீரங்கியின் வாயில் அனைவரையும் இரும்பு சங்கிலியால் பீரங்கியின் வாயிலில் மார்பு பொருந்தும்படி கட்டி வைத்து மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.மன்னிப்பு கேட்க மறுத்து கர்ஜனை செய்த அழகுமுத்துகோனை கண்டு வியப்படைந்தார் கான்சாகிப்.

பீரங்கி வாயிலில் அழகுமுத்துக்கோன் கர்ஜித்த கடைசி முழக்கம்:
"கிருஷ்ண பரமாத்மாவே!என் பாரத தாயே! தமிழ் மக்களுக்காக புரட்சி செய்தேன்.எம் தமிழ்மண்ணின் உரிமைக்காக போர்தொடுத்தேன்.தமிழ்மண்ணுக்காக மடிகிறேன்.தமிழனின் தன்மானங்காத்திட கலங்காது படையெடுத்து கடல்வழி சென்று இலங்காபுரியை வென்று கோட்டிமன்னரைக்காத்து ஆரிய சக்கரவர்த்தியை வெற்றி கண்ட தமிழ் மன்னன் அழகப்பக்கோன் வழிவந்த சேர்வைமகன் அழகுமுத்து இன்று பீரங்கி வாயிலில் நிற்கிறான்.அன்று அரவானை பலிகொடுத்து பாரத போர் தொடங்கியது இன்று அழகுமுத்துவையும் அவனது வீரர்களையும் பலிகொடுத்து விடுதலை தொடங்குகிறது.இன்று தென்கோடியில் ஆத்தங்கரைக்கோட்டையில் தமிழனால் தொடங்குகின்ற விடுதலை முழக்கம் அகண்ட பாரதம் முழுவதும் ஒலிக்கட்டும்.இன்று தமிழர்களால் ஏற்றிய எழுச்சிக்கொடி நாளை விடுதலை கொடியாய் பட்டொளி வீசி பறக்கட்டும்.இன்று ஒரு அழகுமுத்து நாளை...நூற்றுக்கணக்கான அழகுமுத்து வருவார்கள்"...என்ற முழக்கங்களை கேட்ட ஆங்கிலேயர்கள் இறுதியாக ஒரு வாய்ப்பு அளித்தும் மன்னிப்பு கேட்க மறுத்த அழகுமுத்து கோன் மற்றும் அவரது ஆறு தளபதிகளையும் பீரங்கியால் சுட்டனர்.உடல் துண்டு துண்டாக சிதறியது. நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு இந்நிகழ்வை எடுத்துரைக்கிறது.1757ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடந்த இந்நிகழ்வே இந்திய விடுதலை வரலாற்றில் நடந்த முதல் மிகப்பெரிய படுகொலையாகும்
இப்போர் முடிந்த பிறகு கட்டாலங்குளம் அரசவையும் அழகுமுத்துக்கோன் கட்டிய கோட்டையும் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.தற்பொழுது அவர் வாழ்ந்த வீடு மட்டுமே எஞ்சியுள்ளது.

1757 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும். பீரங்கியின் முன்பு இரும்பு சங்கிலியால் கட்டபட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு வரி செலுத்தினால் உயிர்பிச்சை இடுவதாக கூறிய யூசுப்கானிடம் கடைசிவரை மண்டியிடாமல் பீரங்கிமுன் சிரித்தபடி உயிரைவிட்டார் பெரிய அழகுமுத்து என்ற வீர அழகுமுத்துக்கோன்.கி.பி 1757 நவம்பர் 18 ல் நடந்த இந்த நிகழ்வே இந்தியாவின் முதல் பீரங்கி படுகொலை ஆகும். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்க மாவீரர் வீரஅழகுமுத்து கோன்.பொழுது போனபிறகு போர்செய்வது தமிழர் மரபு அல்ல அதை தெரிந்துகொண்டு நடு இரவில் தாக்கி கைது செய்தார் யூசுப்கான் எனும் மருதநாயகம்.

#அழகுமுத்துசகோதரர்கள்
#வீரழகுமுத்து
#சின்னழகுமுத்துக்கோன்
#தமிழகவரலாறு
#விடுதலைபோர்
#பெத்தநாயக்கனூர்
#நடுக்காட்டூர்
#அனுமந்தக்குடி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1762
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sat Dec 31, 2022 11:11 am

1728 ஜூலை
1729 ஜனவரி

சகோதரர்கள் பிறப்பு இடைவெளி 6 மாத காலம்தானா?

ஆண்டு பிழையாக இருக்கலாம் என தோன்றுகிறது.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக