புதிய பதிவுகள்
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
44 Posts - 41%
T.N.Balasubramanian
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
2 Posts - 2%
jothi64
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
408 Posts - 48%
heezulia
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
28 Posts - 3%
prajai
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_m10சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 28 Dec 2022 - 3:05

First topic message reminder :

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 ZrtrPXg












ஈகரை தமிழ் களஞ்சியம்




சிவோஹம் - தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:06

வெள்ளையர் ஆராய்ச்சி


இப்போது தேசம் இருக்கிற துர்த்தசையில், ‘ஓரியன்டலிஸ்ட்’, ‘இன்டாலஜிஸ்ட்’ எனப்படுகிற வெள்ளைக்காரர்களும், அவர்களுடைய வழியைப் பின்பற்றுகிற நம்முடைய ஆராய்ச்சியாளர்களும் சொல்லுகிறதிலிருந்துதான் வேதங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வேதங்களைப் பற்றி ரொம்பவும் உபயோகமான பல ஆராய்ச்சிகளை வெள்ளைக்காரர்கள் பண்ணியிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களுடைய தொண்டுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். மாக்ஸ்முல்லர் போலப் பலர் வாஸ்தவமாகவே வேதத்திலுள்ள கௌரவ புத்தியினாலேயே எத்தனையோ பரிச்ரமப்பட்டு தோண்டித் துருவிச் சேகரம் பண்ணி, ஆராய்ந்திருக்கிறார்கள். வால்யூம் வால்யூமாகப் புஸ்தகம் போட்டிருக்கிறார்கள். ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்று இருநூறு வருஷங்களுக்கு முந்திக் கல்கத்தா ஹைகோர்ட் ஜட்ஜாக இருந்தவர் ஆரம்பித்த “ஏஷியாடிக் ஸொஸைடி” போட்டிருக்கும் வைதிக புஸ்தகங்களைப் பார்த்தாலே பிரமிப்பாயிருக்கும். மாக்ஸ்முல்லர், ஈஸ்ட் இன்டியா கம்பெனி உதவியுடன் ஸாயண பாஷ்யத்தோடு ரிக் வேதத்தையும், இன்னும் பல ஹிந்து மத நூல்களையும் ஸீரியஸாக அச்சிட்டிருக்கிறார். இப்படி இங்கிலீஷ்காரர்கள் மட்டுமின்றி, ஜெர்மனி -பிரான்ஸ்-ருஷ்யா தேசத்தவர்களும் நிரம்ப உழைத்து ஆராய்ச்சி பண்ணியுள்ளனர். “கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததைவிட, ஹிந்துக்களின் வேதங்களை நாம் கண்டுபிடித்ததுதான் பெரிய டிஸ்கவரி” என்று கூத்தாடிய வெள்ளைக்காரர் உண்டு. தேசம் முழுவதும் சிதறிக் கிடந்த வேத வேதாங்கங்களைக் கண்டு பிடித்து, தர்ம-க்ருஹ்ய-ச்ரௌத ஸூத்ரங்களோடு மொழி பெயர்த்து ‘பப்ளிஷ்’ பண்ணியிருக்கிறார்கள். வைதிக சாஸ்திரங்கள் மட்டுமின்றி குண்டலினீ தந்திரம் பிரபலமானதே ‘ஆர்தர் அவலான்’ என்கிற ஸர் ஜான் உட்ராஃபின் புஸ்தகங்களால்தான். நம் கலாசாரத்தின் மற்ற அம்சங்களுக்கும் உதவிய வெள்ளைக்காரர் உண்டு. கர்ஸன் வைஸ்ராயாக இருந்தபோது Protection of Ancient Monuments என்று சட்டம் கொண்டு வந்தால்தான் நம்முடைய கோயில்கள் முதலியவற்றை யார் வேண்டுமானாலும் இடிக்கலாம் என்ற நிலை மாறிற்று. ஃபெர்கூஸன் தேசம் முழுவதும் உள்ள நம் சிற்பச் செல்வங்களை ஃபோட்டோ எடுத்துப் பிரச்சாரம் பண்ணினான். கன்னிங் ஹாம், மார்ட்டிமர் வீலர், ஸர் ஜான் மார்ஷல் முதலானவர்கள் ஆர்க்கியாலஜியில் [தொல் பொருளியலில்] நிரம்பச் செய்திருக்கிறார்கள். மெக்கென்ஸி தேசம் முழுவதும் ஏட்டுச் சுவடிகளை சேகரித்தால்தான் நம் பழைய சாஸ்திரங்களில் பலவற்றை இன்று தெரிந்து கொள்ள முடிகிறது. எபிக்ராஃபிக்கென்றே [சாசனங்களுக்கென்றே] இலாகா வைத்ததும் வெள்ளைக்கார ஆட்சியில்தான்.

இப்படியாக, நமக்கு எத்தனையோ கெடுதலை உண்டு பண்ணின வெள்ளைக்கார ஆட்சியிலும் சில நன்மைகள் விளைந்தன. ஆனாலும் இந்த நன்மைக்குள்ளேயே கூடச் சில கெடுதல்களும் உண்டாயின. ஏனென்றால் ஓரியன்டலிஸ்ட், இன்டாலஜிஸ்ட் என்கிறவர்களில் பலருடைய உத்தேசம், வேதத்திலிருந்து சரித்திரத்தை நிர்மாணிப்பது, அப்படிச் சொல்லிக்கொண்டு ஆரியர்-திராவிடர் என்று துவேஷம் உண்டாக்குவது முதலானவைதான். அவர்கள் ‘பகுத்தறிவுக் கொள்கை’ என்பதன்படி அதீந்திரியமானதையெல்லாம் allegory (உருவகம்) என்று தப்பர்த்தம் செய்வார்கள். இவல்யூஷன் தியரி (பரிணாமக் கொள்கைப்) படி வேதரிஷிகள் நம்மைவிட தாழ்ந்த Primitive -கள் என்றே வைத்து இவர்கள் பெரும்பாலும் வியாக்கியானம் செய்வார்கள். கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் உள்நோக்கத்திலேயே நம் மதநூல்களை ஆராய்ச்சி செய்து, நடுநிலைமை மாதிரி காட்டிக் கொண்டே நம்மை மட்டந்தட்டியவர்களும் உண்டு. தங்கள் பாஷைக்கும் ஸம்ஸ்கிருதத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்து comparative philology [மொழி ஒப்பு இயல்] -காகவே ஆராய்ச்சி பண்ணினவர் அநேகர்.

அவர்கள் செய்த ரிஸர்ச், பிரசாரம், உழைப்புக்கெல்லாம் அவர்களை நாம் சிலாகிக்கலாம். ஆனால் வேதங்களின் முக்கிய நோக்கம் ( purpose ) லோக க்ஷேமார்த்தம் வேத சப்தத்தை பரப்பி அத்யயனம் பண்ணுவது, யக்ஞம் முதலான வைதிக கர்மாக்களைப் பண்ணுவது என்பனவே. இந்த இரண்டையும் தள்ளிவிட்டு, புத்திக்கு அதீதமான வேதத்தை புத்தியால் ஆராய்ந்து, ஜனங்களின் வாக்கிலும் காரியத்திலும் உயிரோடு வாழ வேண்டிய வேதத்தைப் பெரிய புஸ்தகங்களாக்கி லைப்ரரியில் வைப்பது, ஜூ (Zoo) வில் இருக்க வேண்டிய ஜீவ ஜந்துக்களைச் ‘செத்த காலே’ஜில் [மியூசியத்தில்] வைக்கிற மாதிரித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:07

கால ஆராய்ச்சி சரியல்ல


வெள்ளைக்காரர்கள் விஷயத்துக்கு ஏன் வந்தேன் என்றால், வேதம் அநாதி என்பதைப் பற்றிச் சொல்லும்போது, வெள்ளைக்காரர்களின் அபிப்ராயத்தைச் சொல்ல வந்தேன். வேதம் அநாதி என்றால் அவர்களுடைய மனப்பான்மைக்கு அது ஏற்கும்படியாக இல்லை. என்னதான் நடுநிலைமை, scientific research என்றாலும், ‘இந்த ஹிந்துக்களின் புஸ்தகத்துக்கு இப்படி ஒரு ஏற்றம் தருவதா? என்று அவர்களில் சிலருக்கு மனஸுக்கு ஸம்மதப்படவில்லை. இன்னம் சில பேர் இப்படியில்லாவிட்டாலும் பகுத்தறிவுப்படி, ஸயன்டிஃபிக்காக ஆராய்ச்சி பண்ணித்தான் எதையும் ஒப்புக்கொள்ளலாம் என்ற அபிப்ராயத்தில் ரிஸர்ச் செய்திருக்கிறார்கள். அநாதி என்கிற வாதத்தை ஏற்கமுடியாமல், இதே ரீதியில் அநேகம் படித்த ஹிந்துக்களும் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள்.

இவர்கள் ஆராய்ச்சி மூலம் காலம் கணிப்பதில் முக்யமாக இரண்டு தினுசு இருக்கிறது. ஒன்று வானசாஸ்திர ரீதியில் (astronomical -ஆகப்) பண்ணுவது. இன்னொன்று பாஷையின் ரூபத்தை வைத்து நிர்ணயம் பண்ணுவது. இப்படிச் செய்து வேதத்துக்கு கால நிர்ணயம் பண்ணுவதில் முடிந்த முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறார்களா என்றால், அதுதான் இல்லை. ஒவ்வொரு அறிஞர் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்கிறார். திலகர் கி.மு.6000-ல் வேதம் உண்டாயிற்று என்கிறார். வேறு சிலர் கி.மு. 3000 என்கிறார்கள். அதைவிடக் கிட்டத்தில் கி.மு. 1500-க்கு வேதகாலத்தை இழுத்து விட்டிருக்கிறவர்களும் உண்டு.

மற்ற மதப் புஸ்தகங்களைப் பற்றி இப்படி அபிப்ராய பேதம் இல்லை. பௌத்தர்களின் த்ரிபிடகத்தை எடுத்துக் கொண்டால் அது அசோகன் காலத்தில் எழுதப்பட்டது என்றும், ஆனாலும் அதிலுள்ள புத்தரின் உபதேசங்கள் அசோகருக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முந்தி, அதாவது இன்றைக்கு 2500 வருஷத்துக்கு முன் புத்தர் சொன்னவை என்றும் ஏகமனதாக அபிப்ராயப்படுகிறார்கள். பைபிளின் ந்யூ டெஸ்ட்மென்ட் உண்டாகிக் கிட்டத்தட்ட 2000 வருஷம் ஆகிறது என்பதிலும் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கிறது. குரான் உண்டாகி சுமார் 1300 வருஷம் ஆகிறது என்று ஸகலரும் ஒப்புக் கொள்கிறார்கள். நம் வேதத்தின் விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு முடிவான தீர்மானம் ஏற்படாமலிருக்கிறது.

இரண்டு தினுசான காலக்கணக்கு என்று சொன்னேனே, அதைக் கொஞ்சம் விளக்க வேண்டும். வேதத்திலே சில இடங்களில், அப்போதிருந்த கிரஹங்களின் நிலைமை பற்றிச் சொல்லியிருக்கிறது. இப்படிப்பட்ட astrological conjunction (கிரஹச் சேர்க்கை) எப்போது ஏற்பட்டிருக்கும் என்று வான சாஸ்திரப்படிக் கணக்குப் பண்ணி கி.மு. 6000, அல்லது வேறு ஏதோ ஒரு வருஷம் என்ற கணக்குக்கு வருகிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியான கிரஹச் சேர்க்கை ஒரே ஒரு தடவை கி.மு. 6000-ல் தான் ஏற்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு முந்தியும் பல தடவை இதே மாதிரி இருந்திருக்கும். இந்த சிருஷ்டியில் மட்டுமில்லாமல், இந்த சிருஷ்டிக்கு முற்பட்ட பிரளயத்துக்கு முந்தியிருந்த சிருஷ்டிகளிலும் இதே கிரஹ நிலைமைகள், planetary positions எத்தனையோ தடவை இருந்திருக்கும். வேதத்திலே குறிப்பிட்டிருப்பது இவற்றில் எது என்று எப்படித் தீர்மானமான முடிவு பண்ணுவது? ஆகையால், காலத்தையெல்லாம் துளைத்துக் கொண்டு பார்க்கக்கூடிய அதீந்திரிய சக்தி வாய்ந்த ரிஷிகள் சேர்த்துக் கொடுத்த வேதங்களில் இப்படிப்பட்ட கணக்குகள் பொருந்தாமல்தான் இருக்கின்றன. வேதத்திலேயே இருக்கப்பட்ட உட்சான்று (internal evidence) என்று ஆராய்ச்சிக்காரர்கள் பெரிதுபடுத்துகிற வானசாஸ்திரக் கணக்கு, வாஸ்தவத்தில் விஷயத்தைத் தெளிவுபடுத்தவேயில்லை.

இன்னொரு, கணக்கு, பாஷையை வைத்துச் செய்வது என்று சொன்னேன். பாஷையில் மொழி, லிபி (script) என்று இரண்டு இருக்கின்றன.

இப்போது நம் தேசத்தில் இருக்கப்பட்ட லிபிகளுக்கெல்லாம் ஆதிமூலமாக பிராம்மி லிபி இருக்கிறது. இப்போது பார்த்தால் தமிழ் எழுத்துக்கும், தேவநாகரி [ஸம்ஸ்கிருத] எழுத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிறது. ஆனால் – பல நூற்றாண்டுகளாக வந்திருக்கிற சாஸனங்களை ஆராய்ச்சி பண்ணிப் பார்த்து, நூற்றாண்டு வாரியாக பிராம்மி லிபியில் ஏற்பட்ட மாறுதல்களுகளுக்கு சார்ட் (chart) போட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்தால் மூலமான பிராம்மியிலேயே தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு காலத்தில் ஒருவிதமான மாறுதல்கள் ஏற்பட்டு, இப்போது பார்த்தால் ஒன்றுக்கொன்று ஸம்பந்தமேயில்லாமல் தோன்றும் லிபிகள் எல்லாம் அந்த ஒரே மூலத்திலிருந்து வந்திருக்கின்றன என்று தெரிகிறது. இப்போது இருப்பதெல்லாம் பிராம்மியில் மீசை போட்டுக் கொண்ட எழுத்துக்கள், கொம்பு முளைத்த எழுத்துக்கள் என்றுதான் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். சார்ட்டைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். சில சமயங்களி்ல் பிராம்மி எழுத்தின் நடுவிலே மீசை மாதிரி ஒன்று சேர்கிறது. தேவநாகரி உ, ஊ எல்லாம் இப்படித்தான் இருக்கின்றன. தமிழ் எழுத்துக்கள் அநேகம் கொம்பு போட்டுக்கொண்டு தோன்றியிருக்கின்றன. இம்மாதிரியான ஒவ்வொரு மாறுதலும் ஏற்பட இத்தனை காலம் ஆகிறது என்று நன்றாக நிர்ணயமான சரித்திர காலச் சாஸனங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையில் கணக்குப் பண்ணியே இதுவரை காலம் தெரியாதிருக்கிற ஒரு சமயத்தைச் சேர்ந்த சாஸனத்தின் லிபியைப் பார்த்து, அது இன்ன காலத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயம் பண்ணுகிறார்கள்.

வேதத்தைப் பொறுத்தமட்டில் அதை எங்கேயும் கல்வெட்டில் எழுதிவைக்கவில்லை. ஆனபடியால் லிபியைப் பார்த்து காலநிர்ணயம் பண்ண வேண்டிய பிரச்சனை இல்லை.

பாஷை ரீதியில் உள்ள இன்னொரு விதமான அடிப்படையில்தான் வேத காலத்தை ஆராய்கிறார்கள். அது என்னவென்றால் : வார்த்தைகளில் ரூபம், ஒலிகளின் வடிவம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. சங்க காலத்தில் இருந்த அநேக தமிழ் வார்த்தைகள் இப்போது ரொம்பவும் உருமாறியிருக்கின்றன. ஒவ்வொரு பாஷையிலும் இப்படியேதான். சில சப்தங்கள் தேய்ந்து, உதிர்ந்து போகின்றன. சப்தம் மட்டுமின்றி அர்த்தமும் மாறுகிறது. இப்போது ‘வெகுளி’ என்றால் ‘அப்பாவி’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். ஆனால் ஆதியில் ‘வெகுளி’ என்றால் கோபம், கோபிஷ்டன் என்று அர்த்தம் இருந்தது. இப்போதுங்கூட ‘வெகுண்டு எழுந்தான்’ என்கிறபோது பழைய அர்த்தத்தில் தான் சொல்கிறோம். பழைய காலத்தில் ‘மாண்ட’ என்றால் ‘செத்துப் போன’ என்ற அர்த்தமே கிடையாது; ‘புகழுடைய’ என்பதே அதன் அர்த்தம் என்று ஒரு தமிழ்ப் புலவர் சொன்னார். இதே மாதிரி ஸம்ஸ்க்ருதத்திலும் உண்டு. பிற்கால காவியங்களைப் புரிந்து கொள்கிற மாதிரி வேதங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லா பாஷையிலுமே இப்படி உண்டு. இதில் நம் தேச பாஷைகள் எவ்வளவோ தேவலை. இங்கிலீஷ் பாஷையில் ஒரு ஆயிர வருஷத்துக்கே உட்பட்ட Anglo-Saxon என்கிற ஓல்ட் இங்கிலீஷில் ஒரு வரிகூட இன்றைய வெள்ளைக்காரர்களுக்குப் புரியாது. ஒரு முந்நூற்று சொச்சம் வருஷத்திலேயே அமெரிக்காவில் இங்கிலீஷ் ரொம்பவும் மாறி ‘அமெரிக்கன் இங்கிலீஷ்’ என்று தனியாகப் பெயர் வைக்கிற அளவுக்கு ரூபபேதம் அடைந்திருக்கிறது.

சிறுகச் சிறுக ஒரு ஒலி ஜனங்களிடத்தில் புழக்கத்தால் தேய்ந்து தேய்ந்து உருமாறுவதற்கு எத்தனை காலமாகிறது என்று கணக்கு பண்ணியிருக்கிறார்கள்.

அர்த்தம் மாறுவதற்கு எத்தனை காலமாகிறது என்பதை ஆராய்ச்சியின் மூலம் இவ்வளவு தெளிவாக நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆகையால் சப்த ரூபத்தைப் பார்க்கிற ரீதியிலேயே வேதவாக்யங்களைப் பார்த்துக் காலம் கணிக்கிறார்கள். “ஒவ்வொரு இருநூறு வருஷத்துக்கும் ஒரு சப்தம் இப்படியிப்படி மாறுகிறது. இதன்படி பிற்கால சப்தமொன்று வேதத்தில் இப்படி இருக்கிறதென்றால் அது இத்தனை முறை மாறியிருக்க வேண்டும்; இத்தனை mutation ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். வேத சப்தம் ஒன்றுக்கும் பிற்கால சப்தத்துக்கும் நடுவே பத்து மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றால் 10 * 200 = 2000 வருஷத்துக்கு முந்தி வேதம் உண்டாயிற்று என்று அர்த்தம். ரொம்பவும் அதிகமாகப் போனால் இன்னொரு சப்தம் முப்பது தரம் மாறியிருப்பதாகத் தெரிகிறதென்றால், வேதம் உண்டாகி 30 * 200=6000 வருஷம் ஆகிறது என்று அர்த்தம். அதாவது கி.மு. 4000-க்கு முந்தி வேதம் இல்லை” – என்கிற மாதிரி பல அபிப்ராயங்களைச் சொல்கிறார்கள்.

இந்த அடிப்படை தப்பு என்பதை ஒரு திருஷ்டாந்தத்தால் புரியவைக்க முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:07

நம் அகங்களில் அநேக விதமான பாத்திரங்கள் இருக்கின்றன. சிலவற்றை ஜாஸ்தி உபயோகிப்போம். சிலதை அவ்வளவுக்கு உபயோகிக்க மாட்டோம். வெண்கலப் பானையில் தினம் தினம் சாதம் வடிக்க வேண்டும். தினமும் அதை இரண்டு வேளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். அதனால் அது சீக்கிரத்தில் தேய்ந்து போகிறது. இன்னொரு பெரிய அண்டா இருக்கிறது. அது சாமான் ரூமிலேயே புழங்காமல் கிடக்கிறது. அதற்கு தினப்படி உபயோகமேயில்லை. எப்போதாவது ஒரு கல்யாணம், கார்த்திகை வந்தால்தான் அதற்கு உபயோகம். அதைத் தேய்ப்பதும் அப்போதுதான். ஆகையால், வெண்கலப் பானை தேய்கிற மாதிரி இந்த அண்டா தேயுமா? வெண்கலப் பானை போன வருஷம்தான் வாங்கியிருக்கலாம். ஆனாலும் ஏகமாகத் தேய்ந்திருக்கும். அண்டா நம் பாட்டிக்குச் சீராகக் கொடுத்ததாக இருக்கலாம். ஆனாலும் கொஞ்சம்கூடத் தேயாமலே கிண்டாக இருக்கிறது. இதைப் பார்த்து வெண்கலப்பானைதான் முந்தி வாங்கினது, அண்டா பிந்தி வாங்கினது என்று முடிவு பண்ணலாமா? கல்யாணத்தின்போது ஒரே ஸமயத்தில் தான் சாப்பிடுகிற தட்டு, பன்னீர்ச்செம்பு இரண்டும் சீராகக் கொடுத்திருப்பார்கள். பத்து வருஷத்தில் தட்டு நசுங்கி, தேய்ந்து, மறுபடி அழித்துப் பண்ணுகிற அளவுக்கு வந்துவிடுகிறது. பன்னீர்ச் செம்போ புதுக் கருக்கே போகாமல் மெருகோடு இருக்கிறது.

இப்படித்தான் அன்றாடம் பழக்கத்தில் புழங்குகிற லௌகிக சப்தங்களும், வேத சப்தங்களும் இரண்டு வகையான பாத்திரங்களைப் போல் வித்யாஸமாக இருக்கின்றன. தினந்தினமும் பேசிக்கொண்டிருக்கிற வார்த்தைகளின் சப்தங்கள் பல விதங்களில் தேய்கினறன, மாறுகின்றன. வேதமும் தினம் தினம் ஓதப்படுவதுதான். ஆனாலும் அதன் மூல சப்தம் மாறாமலே ஓதப்படுவதுதான் அதன் தனிச்சிறப்பு. வேதத்தின் அங்கங்களில் சிக்ஷை, வியாகரணம் என்பவை பற்றிப் பிற்பாடு நான் சொல்லும்போது, ஒவ்வொரு வேத அக்ஷரத்தையும் மூல ரூபம் சிதையாமல் ரக்ஷித்து அப்படியே சுத்தமாக கொடுப்பதற்கு எத்தனை கட்டுத்திட்டமான ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வீர்கள். ஆகையினால் நித்யப்படி புழக்கத்திலுள்ள பாத்திரங்கள் தேய்கிற மாதிரி அன்றாட வழக்குச் சொற்கள் மாறுகிறதென்றால், வேத சப்தம் மாறாது; மாறவுமில்லை. அது கல்யாண காலங்களில் மட்டும் உபயோகமாகிற அண்டா மாதிரி இருக்கிறது.

“வேதங்களுக்குள்ளேயே ரிக்வேதம் முந்தியது; அப்புறம் யஜுஸ் வந்தது; கடைசியிலே அதர்வம்; ஒவ்வொரு வேத சாகையிலும் ஸம்ஹிதா பாகம் முந்தையது; பிராம்மணம் அதற்குப் பின்னாலும், ஆரண்யகம் கடைசியாகவும் வந்தது” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவற்றுக்கிடையே உள்ள பாஷா வித்யாஸங்களைப் பார்த்து, மேலே சொன்ன மாதிரி காலக் கணக்கு போடுகிறார்கள். எத்தனைதான் ஆராய்ச்சி பண்ணினாலும் நான் சொன்ன அடிப்படை வித்யாஸத்தைக் கவனிக்காததால், இது எதையும் சரியென்று ஒப்புக் கொள்வதற்கில்லை. எத்தனையோ கட்டுத் திட்டங்கள் பண்ணியும் வேத சப்தங்கள் கொஞ்சம் மாறி இருக்கின்றன என்றால், அந்த மாறுதல் 200 வருஷத்துக்கு ஒரு தரம் ஏற்படும் மாறுதலாக இருக்காது என்பதையும், பல ஆயிரம் வருஷத்தில் தான் இப்படிப்பட்ட மாறுதல் ஏற்பட்டிருக்க முடியும் என்பதையும் கவனிக்கவேண்டும். Wear and Tear என்று சொல்வது [புழக்கத்தினால் ஏற்படும் தேய்மானம்] வேதத்தின் விஷயத்தில் மற்ற இலக்கியம் அல்லது பேச்சு மொழிக்கான மாதிரி இல்லை என்பதைப் புரிந்துகொண்டால், இந்தக் கால நிர்ணயமும் தப்புதான் என்று புரியும்.

ஹிந்தி என்று ஒரு பாஷையாக ஏற்படுத்தி வைத்தே சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ஆனாலும் அது ஒரு பெரிய பிரதேசத்தில் பரவியிருப்பதாலும், அதில் ஸம்ஸ்கிருதம், அராபிக், பெர்ஷியன், இங்கிலீஷ் முதலிய பல பாஷைகள் கலப்பதாலும் இந்தச் சிறிது காலத்துக்குள்ளேயே அது ரொம்பவும் மாறிவிட்டது. ஒரு சின்னப் பிரதேசத்திலேயே வளர்ந்த தமிழ், இப்படி அதிவேகமாக மாறவில்லை என்றாலும் தாயுமானவர் பாடல் புரிகிற அளவுக்குக் கம்ப ராமாயணம் புரியாது, கம்ப ராமாயணம் புரிகிற அளவுக்கு ஞானசம்பந்தர் தேவாரம் புரியாது, தேவாரம் புரிகிற அளவுக்குத் திருமுருகாற்றுப்படை புரியாது என்கிற ரீதியில், தமிழ் பாஷையும் மாறிக் கொண்டேதான் வந்திருக்கிறது. ஸம்ஸ்கிருதம் ஹிந்தியைப் போல, ஹிந்தியை விடவும், விரிவாக தேசம் பூராவிலும் பரவியிருந்தாலும், அது ஹிந்தியைப் போலவும், தமிழ் போலவும் பேச்சு மொழியாக இல்லாமல் இலக்கிய பாஷையாகவே நெடுங்காலமாக இருந்திருப்பதால் தமிழின் அளவுக்குக்கூட மாறவில்லை. அதிலும் காவியங்களை விடப் பரம ஜாக்ரதையுடன் ரக்ஷிக்கப்பட்ட வேதங்களில் மாறுதல் ஏற்படுவது ரொம்பவும் அபூர்வம்தான். ஆகையால் இப்போது ஆராய்ச்சிக்காரர்கள் மற்ற பாஷைகளின் விஷயத்தில் ஆயிரம் வருஷம் என்று கணக்குப் பண்ணும் மாறுதல், வேதத்தில் ஏற்படுவதற்கு லக்ஷம் வருஷம் வேண்டியிருக்கும்!

அக்ஷர சுத்தத்தால்தான் மந்திரங்களுக்கு சக்தியே ஏற்படுகிறது என்ற கொள்கையின் பேரில் வேத சப்தங்கள் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன. அதில் தவறுதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே தனியாக ஒரு ஜாதி உட்கார்ந்து கொண்டு, அதைத் தலைமுறை தலைமுறையாக மூல ரூபத்திலேயே காப்பாற்றிக் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பெரிய உண்மையைக் கவனிக்காமல் பண்ணுகிற ஆராய்ச்சிகளினால் யதார்த்தம் ஒரு நாளும் தெரியாது.

வேதம் அநாதியில்லை என்று இந்த ஆராய்ச்சிகள் நிரூபிக்கவேயில்லை. அத்யயனத்தில் எத்தனை விதங்களை வைத்து வேத சப்தத்தை உள்ளபடி காப்பாற்றியிருக்கிறார்கள் என்பதை ஆலோசித்தோமானால் இது புரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:09

அத்யயன முறைகள்


எழுதி வைக்காமலே வேதத்தைத் துளிக்கூடப் பிழை வராமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக நம்முடைய ஆன்றோர் பல வழிகளை வகுத்து வைத்தார்கள். ஒரு அக்ஷரம்கூட மாறிவிடாமல், ஒரு ஸ்வரம்கூட ஏற்றல் இறக்கலில் வித்தியாஸப் பட்டுவிடாமல், மந்திர சக்தியானது பூரணமாகப் பலன் தருவதற்காக அத்யயனத்தில் பல விதிகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.

ஒவ்வொரு பதத்திலுள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் சொல்வதற்கு இத்தனை கால அளவை வேண்டும் என்று “மாத்ரா” கணக்கு வைத்திருக்கிறார்கள். மூச்சை எப்படி விடுவதால் சரீரத்தில் எந்தப் பகுதியிலே வைப்ரேஷன் ஏற்பட்டு சுத்தமான அந்த அக்ஷரம் பிறக்குமோ, அதைக் கூட சிக்ஷா என்ற வேதாங்கத்தில் நிர்ணயம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள். ஸங்கீத ஸ்வரத்துக்கும் வேத ஸ்வரத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை, மிருகங்கள், பக்ஷிகள் முதலியவை எழுப்பும் ஒலிகளுக்கும் வேத ஸ்வரங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை ஆகியவற்றைச் சொல்லி, சரியாக வேத ஸ்வரங்களை உச்சரிப்பதற்கு வழி காட்டியிருக்கிறார்கள்.

வார்த்தைகளும் அக்ஷரங்களும் மாறிப் போகாமலிருப்பதற்குச் செய்த ஒரு பெரிய உபாயம் என்னவென்றால், ஒரு மந்திரத்திலுள்ள பதங்களைப் பல தினுசில் கோத்து வாங்கி வாக்யம், பதம், க்ரமம், ஜடா, மாலா, சிகா, ரேகா, த்வஜம், தண்டம், ரதம், கனம் ஆகிய பலவிதமான முறைகளை (patterns) ஏற்படுத்தியிருப்பதுதான்.

இப்போது கனபாடிகள் என்று சிலபேரைச் சொல்கிறோம் அல்லவா? இவர்கள் “கனம் என்கிற முறையில் வேதம் ஓதுவது வரைக்கும் பாடம் படித்தவர்கள்” என்று அர்த்தம். ‘பாடி’ என்றால் பாடம் படித்தவன். ‘கனம்’ வரையில் பாடம் படித்தவன் “கனபாடி”. ஒரு கனபாடி கனம் சொல்லும்போது கேட்கிறோம். ஒரு சில பதங்களையே அவர் அப்போது பல தினுஸாக மாற்றி மாற்றி, மடக்கி மடக்கி சொல்கிறார் என்று தெரிகிறது. இது கேட்பதற்கே பரமானந்தமாக கர்ணாம்ருதமாக இருக்கிறது. வேத மந்திரங்களுக்குப் பொதுவாகவே உள்ள காம்பீர்யம் இதனால் மேலும் ஜாஸ்தியானாற் போலிருக்கிறது. இப்படியேதான் க்ரமம், ஜடை, சிகா, மாலா முதலான மற்ற முறைகளிலும் பதங்களை ஒவ்வொரு விதமாகச் சேர்த்துக் சேர்த்துத் திருப்பித் திருப்பிச் சொல்கிறபோது ரொம்பவும் கம்பீரமாக, தெய்விகமாக இருக்கிறது. ஆனால் இந்த ஓதுமுறைகளின் முக்யமான உத்தேசம் வேத மந்திரங்களின் அக்ஷரம் கொஞ்சம் கூட மாறிவிடாமலிருப்பதற்காக அவற்றைக் குறுக்கும் நெடுக்குமாய் பின்னிப் பின்னித் தரவேண்டும் என்பதே.

வாக்ய பாடம் அல்லது ஸம்ஹிதா பாடம் என்பதுதான் மந்திரங்களை உள்ளபடி அப்படியே பாடம் பண்ணுவது. வாக்ய ரூபமாக மந்திரங்கள் வரும்போது, அதிலுள்ள பதங்கள் ஸந்தியில் ஒன்று கூடுவதுண்டு. இங்கிலீஷைவிடத் தமிழில் இம்மாதிரி ஸந்தியில் வார்த்தைகள் ஒன்று சேர்வது ஜாஸ்தி. இங்கிலீஷில் வார்த்தைகள் தனித்தனியாகவேதான் இருக்கும். தமிழில் பழைய தேவாரம், திருவாசகம், திருக்குறள், திவ்யபிரபந்தம் மாதிரியானவற்றில் நமக்கு தனித்தனியாக வார்த்தைகள் தெரியாத மாதிரி ஸந்தி சேர்த்திருப்பதைப் பார்க்கிறோம். ஸம்ஸ்கிருதத்தில் தமிழைவிடவும் தனித்தனி வார்த்தைகளின் ரூபம் தெரியாமல் ஸந்தி சேர்த்திருக்கும். இப்படி ஒவ்வொரு வேத வாக்யத்திலும் உள்ள பதங்களைத் தெளிவாகப் பிரித்துப் பிரித்துப் பாடம் பண்ணுவதற்குத்தான் ‘பத பாடம்’ என்று பெயர்.

ஸம்ஹிதா பாடத்துக்கு அடுத்தது பத பாடம். இதற்கு அடுத்தது க்ரம பாடம். இதிலே ஒரு மந்திரத்தின் முதல் வார்த்தையை இரண்டாவது வார்த்தையுடன் சேர்த்தும், இரண்டாவது வார்த்தையை மூன்றாவதுடன் சேர்த்தும் மூன்றாவதை நாலாவதுடன் சேர்த்தும், இப்படியே அந்த மந்திரம் முடிகிறவரைக்கும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்.

பழைய கால சாஸனங்கள் சிலதில் உள்ள ஊர் பிரமுகர்களின் பெயர்களில் சில பெயருக்கு முடிவில் “க்ரம வித்தன்” என்று போட்டிருக்கும். “வேதவித்” என்கிற மாதிரி (வேதவித்து என்று தமிழில் சொல்கிறோம்) , ‘க்ரமவித்’ அல்லது ‘க்ரமவித்தன்’ என்றால், வேதத்தைக் கிரமம் என்ற அத்யயன முறையில் சொல்லத் தெரிந்தவன் என்று அர்த்தம். தமிழ் நாட்டில் இப்படி ஊருக்கு ஊர் பலர் இருந்திருப்பதைத்தான் சாஸனங்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

இதற்கப்புறம் ஜடா பாடம். இதிலே முதல் வார்த்தையை இரண்டாவது வார்த்தையுடன் சேர்த்துச் சொன்னவுடன், அதை மாற்றி இரண்டாவதை முதல் வார்த்தையுடன் சேர்க்க வேண்டும்; மறுபடியும் முதலை இரண்டாவதோடு சேர்க்க வேண்டும். அப்புறம் இரண்டாவது வார்த்தையை மூன்றாவதோடும், அதை மாற்றி மூன்றாவதை இரண்டாவதோடும் திரும்பவும் இரண்டாவதை மூன்றாவதோடும்; இப்படியே பின்னால் வருகிற வார்த்தைகளையும் மாற்றி மாற்றிச் சேர்த்துக் கொண்டு போக வேண்டும். இப்படிச் சொல்ல வல்லவர்களையே ‘ஜடா வல்லபர்’ என்பது.

இங்கே இரண்டு வார்த்தைகளைக் கோத்து வாங்கின மாதிரியே, மூன்று வார்த்தைகளை முன்னும் பின்னுமாக மாற்றுவது சிகா பாடம்.

இதைவிட சிரமமானது கனபாடம். இதிலே நாலு தினுசு உண்டு. முன்னும் பின்னுமாக வார்த்தைகளைப் பல விதங்களில் permutation, combination என்று சேர்த்துச் சொல்லும் அத்யயன முறையே அது. அதையெல்லாம் விளக்கினால் கணக்கு க்ளாஸ் மாதிரி மண்டையை உடைக்கும்.

உயிரைக் காப்பாற்றுகிற ஒரு அபூர்வ மருந்தைக் காப்பாற்றுவதற்கு லாபரட்டரியில் எத்தனையோ ஜாக்ரதை செய்து வைத்திருப்பது போல, லோகத்தை ரக்ஷிக்கிற வேத சப்தங்களை எழுதி வைக்காமலே வாய் வார்த்தையில் லவலேசம் கூட மாறிப் போய் விடாமல் காப்பாற்றித் தருவதற்காக, நம் பூர்விகர்கள் இப்படிப்பட்ட பாட முறைகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

ஸம்ஹிதா பாடத்திலும், பத பாடத்திலும் மந்திரத்திலுள்ள வார்த்தைகளை அதே ஆர்டரில், ஒவ்வொன்றையும் ஒரே தரம் மட்டும் சொல்வதால் இவை ப்ரகிருதி (இயற்கையான) பாடம் எனப்படுகின்றன. மற்றவை விக்ருதி (செயற்கையான) பாடம் எனப்படும். க்ரமத்திலே வார்த்தைகள் ஒன்று – இரண்டு – மூன்று அசல் பிரகிருதியாகவே போகாவிட்டாலும், இரண்டுக்கப்புறம் ஒன்று, மூன்றுக்கப்புறம் இரண்டு என்று தலைகீழாகத் திரும்பாததால், அதைப் பூரணமான விக்ருதி என்று சொல்ல முடியாது. முழு விக்ருதியானவை க்ரமம் தவிர எட்டுப் பாட வகைகள் ஆகும். அஷ்ட விக்ருதி என்ற இந்த எட்டு விதமான பாடங்களின் பெயர்களையும் ஒரு ச்லோக ரூபமாக நினைவில் வைத்துக் கொள்கிற மாதிரிச் சொல்வதுண்டு:

ஜடா மாலா சிகா ரேகா த்வஜோ தண்டோ ரதோ கன பாடகன்

இத்-யஷ்ட-விக்ருதய: ப்ரோக்தா, க்ரம: பூர்வா மஹர்ஷிபி பாடகன்



ரொம்பவும் ஆதிகாலத்தில் மஹரிஷிகளாலேயே இந்தப் பாடமுறைகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.

வேதம் வாய்மொழியாக மட்டுமே (புஸ்தகத்தில் எழுதி வைக்காமல்) வரும்போது, அதன் ரூபம் கொஞ்சமும் மாறக்கூடாது என்றால், அதற்கு இத்தனை விதமான பாடமும் இருந்ததாக வேண்டும் என்று வைத்தார்கள். பதத்தில் வார்த்தை வார்த்தையாகவும், க்ரமத்தில் இரண்டிரண்டு வார்த்தையாகவும், ஜடையில் அதை முன்பின்னாகவும் இப்படியெல்லாம் பல தினுசில் சொல்வது ஒன்றுக்கொன்று tally ஆவதால் [ஒத்துப்போவதால்] மூலரூபம் மாறவே இல்லை என்று நிச்சயமாகிறதல்லவா? அதனால் இத்தனை விதமான பதச் சேர்க்கை முறைகளும் இருக்க வேண்டும் என்று வைத்தார்கள். இதில் ஒன்றைவிட இன்னொரு தினுசில் அத்யயனம் பண்ணுவதற்குப் பலனும் இத்தனை மடங்கு ஜாஸ்தி என்று கூடச் சொல்வதுண்டு.

ஸம்ஹிதா பாட மாத்ரேண யத் பலம் ப்ரோச்யதே புதைபாடகன்

பதேது த்விகுணம் வித்யாத் க்ரமேது ச சதுர் குணம்|

வர்ண க்ரமே சதகுணம் ஜடாயாந்து ஸஹஸ்ரகம் |



(ஸம்ஹிதா பாடத்தைவிட இருமடங்கு பலன் கொண்டது பத பாடம்; நான்கு மடங்கு பலனளிப்பது க்ரம பாடம்; நூறு மடங்கு பலன் வாய்ந்து ‘வர்ண க்ரமம்’ என்ற பாடமுறை; ஆயிரம் மடங்கு பலனளிப்பது ஜடா பாடம்.)

அநாதியான வேதம் மாறவே கூடாது என்பதற்காக இத்தனை ஜாக்ரதையாக நம் முன்னோர்கள் அதன் ரூபத்தை ரக்ஷித்துக் கொடுத்திருக்கும்போது, வேத சப்தங்கள் எப்படி மாறின என்பதைப் பார்த்து வேதத்துக்குக் கால நிர்ணயம் பண்ணுகிறோம் என்று நவீன கால ஆராய்ச்சியாளர்கள் கிளம்பியிருப்பது, ஒரு போதும் யதார்த்தத்தை உள்ளபடி அறியப் பிரயோஜனப் படாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:09

தெய்வ வாக்கு


அபௌருஷேயம் (மனிதர் செய்யாதது) என்றால், நம்ப மாட்டோம் என்பது சரியேயில்லை. நம் தேசத்தில் மட்டுமில்லாமல் மற்ற மதஸ்தர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். கர்த்தரின் வார்த்தையையே தாம் சொல்வதாகவும், தாமாக எதையும் சொல்லவில்லை என்றும் இயேசு சொல்கிறார். முகமது நபி அல்லாவின் ஆக்ஞைகளையே வெளியிட்டதாக அந்த மதஸ்தர்கள் சொல்கிறார்கள். நாம் அபௌருஷேயம் என்பதைத்தான் அங்கே Revealed Text என்கிறார்கள். தெய்வவாக்கே மஹான்கள் மூலம் மத நூல்களாக வந்திருக்கின்றன.

மதப் புஸ்தகமில்லாமல், எந்த துறையிலும் ஆழ்ந்து ஐகாக்ரியத்தோடு (ஒருமுனைப்பாட்டோடு) புகுந்து விட்டால், அதில் உள்ள உண்மைகள் தாமாகவே ஒருத்தருக்கு வெளிப்பட்டுவிடுகின்றன. அந்த ஸத்யமே ஸ்புரித்தது, flash ஆயிற்று என்கிறார்கள். இதை intuition என்கிறார்கள். ஐன்ஸ்டீன் கூடத் தம்முடைய பிரசித்தமான ‘ரிலேடிவிடி தியரி’யைத் தம் புத்தியால் யோசித்து யோசித்துப் பண்ணவில்லை என்றும், அந்த ஈக்வேஷன் அப்படியே இன்ட்யூஷனில் ஃப்ளாஷ் ஆயிற்று என்றுதான் சொல்லியிருக்கிறார் என்றும் ஒரு ப்ரொஃபஸர் தெரிவித்தார்.

இதையெல்லாம் ஒப்புக்கொள்ளும்போது, பரம சுத்தமான அந்தஃகரணத்தை உடைய ரிஷிகளின் ஹ்ருதய ஆகாசத்தில் வேத மந்திரங்கள் தாமாகவே, அதாவது அபௌருஷேயமாக வெளிப்பட்டன என்பதை நம்பமாட்டோம் என்பது நியாயமில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:11

வேதங்கள் அனந்தம்


சிருஷ்டி அத்தனையும், சிருஷ்டிக்கு அப்பாற்பட்டதும் கூட சப்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறதென்றால், அது ரொம்ப ரொம்ப பெரிதாக அல்லவா இருக்க வேண்டும்? இப்போது வேதங்கள் என்று சொல்லப்படுகிற புஸ்தகங்கள் என்னதான் பெரிதாக இருந்தாலும், விச்வ வியாபாரத்தின் அத்தனை காரியங்களும் இந்த மந்திரங்களுக்குள் வந்துவிட்டன என்றால் சரியாக இருக்குமா என்று தோன்றலாம்.

இப்போது நமக்கு வந்திருக்கிற வேதங்கள் கொஞ்சம்தான். வேதத்திலேயே என்ன சொல்லியிருக்கிறதென்றால், வேதங்களுக்கு அளவே இல்லை – “அனந்தா வை வேதா:”- என்று இருக்கிறது. ரிஷிகளுக்கு அத்தனை வேதங்களும் ஸ்புரித்துவிட்டன என்று சொல்ல முடியாது. நாலு வேதங்களின் ஆயிரத்துச் சொச்சம் சாகைகளே (சாகை என்றால் கிளை) அவர்களுக்குத் தெரிந்தவை.

லோகம் முழுக்க சிருஷ்டித்த பிரம்மாவுக்கே வேதம் முழுக்கத் தெரிந்தது. இந்த பிரம்மாவுக்கு முன் ஒரு மஹாப் பிரளயம் நடந்தது. அதற்கு முந்தி இன்னொரு பிரம்மா இருந்தார். அதே மாதிரி அவருக்கும் முந்தி உண்டு. எல்லாவற்றுக்கும் முதலில் பரமாத்மாவின் எந்த ச்வாஸ சலனத்தால், சிருஷ்டிக் கிரமம் முதல் பிரம்மாவின் தொழிலாகத் தூண்டப்பட்டதோ, அந்தச் சலனம் மட்டும் ஆகாசத்தில் இத்தனை பிரளயங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மட்டும் அழிவே இல்லை. ஒவ்வொரு மஹாபிரளயத்துக்கும் அப்புறம் வருகிற புது பிரம்மா இந்த சலன சப்தங்களைக் கொண்டுதான் மறுபடி ஸ்ருஷ்டி முழுதையும் பண்ணுகிறார்.

நாம் எழுப்புகிற ஒலிகள் அழிகிறதேயில்லை! இரண்டாயிரம் வருஷத்துமுன் கிறிஸ்து பேசினதை, அவர் குரலிலேயே இப்போதும் பிடித்துத் தரமுடியும்; அதற்காக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று படித்ததாக ஞாபகம். அப்புறம் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு possibility [சாத்தியக்கூறு] இருக்கிறது என்று தெரிகிறது. ஒரு ஒலி உண்டானபின், என்றுமே அது அழியாமல் ஆகாசத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.

இம்மாதிரி, பிரளயத்திலும் அழியாமலிருந்த வேத சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா மறுபடி லோக சிருஷ்டி பண்ணியிருக்கிறார். கல், மண், மரம், இரும்பு முதலியவற்றை வைத்துக் கொண்டு, நாம் ஒரு ஊரை நிர்மாணம் பண்ணுகிறோம். ஆனால் இந்தக் கல், மண், மரம், இரும்பு எல்லாமே பரமாத்மாவின் எண்ணத்தில் இருந்து, எண்ணுகிற மனஸுக்கும் ச்வாஸத்திற்கும் மூலம் ஒன்றாயிருப்பதால், அவருடைய ச்வாஸ சலனத்தினால் ஏற்பட்டவைதான். அந்த சலனங்களுக்குரிய சப்த ரூபத்தை, பிரம்மா வேதங்களாகக் கண்டு அத்யயனம் பண்ணின மாத்திரத்தில் சிருஷ்டி முழுக்க வந்து விட்டது.

இப்போது அடிக்கடி பேப்பரில் [செய்தித்தாளில்] பார்க்கிறோம். பலவிதமான ‘ஸெளண்ட் வைப்ரேஷன்’களை [சப்த அதிர்வுகளை] செடிகளுக்கு அருகிலே உண்டு பண்ணினால், சில விதமான வைப்ரேஷனினால் செடி நன்றாக வளர்ந்து நிறையக் காய்க்கிறது. சிலவகை வைப்ரேஷனால் வளர்ச்சி குன்றுகிறது என்று நியூஸ் வருகிறது. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார சக்தி எல்லாம் சப்தத்துக்கு உண்டு என்பது இதிலிருந்து நிதர்சனமாகிறது.

பிரம்மாவின் தபோ மகிமையால், power of concentration-ஆல் லோகம் முழுவதையும் வேத சப்தத்தால் அவர் உண்டாக்க முடிந்தது. நாம் தினமும் ஜபிக்கிற அதே பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒரு தரம் சொல்லி ஒரு ஸித்தர் விபூதி பூசினால், உடனே ஒரு வியாதி சொஸ்தமாகிறது என்றால், அது எப்படி? நம்மைவிட அவருக்கு உள்ள கான்ஸென்ட்ரேஷன் [மன ஒருமைப்பாட்டு] சக்தியால்தான். அதோடுகூட மந்திரத்தை அக்ஷரம், ஸ்வரம் கொஞ்சங்கூட தப்பாமல் சுத்தமாகச் சொல்ல வேண்டும். அப்போதுதான் பலன் உண்டாகும். ஜகத் ச்ருஷ்டிக்குக் கருவியாகவே பிரம்மா பரமாத்மாவிடம் தோன்றியதால், அவருக்கு இவற்றில் பூர்ண சக்தி இருந்தது.

ஒன்றுமில்லாத ஆகாசத்திலிருந்து எலெக்ட்ரிஸிடியால் எவ்வளவோ காரியங்கள் செய்யப்படுகின்றன. அதைப் போல, எல்லாம் நிர்குணப் பிரம்மமான சைதன்ய வஸ்துவிடமிருந்து உண்டாகும். பிரளய ஸமயங்களில் அந்தச் சைதன்யம் தூங்கும். ஒரு ஸாண்டோ இருக்கிறான். அவன் தூங்கினால் அவனுடைய சக்தி ஒன்றும் வெளியே தெரிவதில்லை. குஸ்தி முதலிய காரியங்களைப் பண்ணும்பொழுது அவனுடைய சக்தி தெரிகிறது. அது போல சிருஷ்டி காலத்தில் சைதன்ய வஸ்துவின் சக்தி பல காரியங்களைச் செய்கிறது. நிர்குண வஸ்துவினிடத்திலிருந்து முதலில் ஒரு கான்ஸென்ட்ரேஷன் சக்தி (தபஸ்) கிளம்புகிறது. அதன் வழியே உண்டானவர் பிரம்மா. அவர் தபோரூபமாக உண்டானதால் சகல வேதங்களையும் பூர்ண சக்தியோடு கிரஹித்துக் கொண்டார். வேத சப்தத்திலிருந்து லோகத்தைச் சிருஷ்டித்தார். வேதங்கள் அளவிறந்தன; சிருஷ்டியும் பலவிதம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:11

பரத்வாஜ மஹரிஷி மூன்று ஆயுஸ் பரியந்தம் வேதாத்தியயனம் செய்தார். பரமேச்வரன் அவருக்குப் பிரத்தியக்ஷமானார். “உமக்கு நாலாவது ஆயுஸ் கொடுக்கிறேன். அதைக் கொண்டு என்ன செய்வீர்?” என்று கேட்டார். பரத்வாஜர், ‘அந்த ஆயுஸை வைத்துக் கொண்டும் வேதாத்தியயனமே பண்ணிக்கொண்டிருப்பேன்’ என்று சொன்னார். எத்தனை ஆயுஸ் கிடைத்தாலும் வேதங்களைப் பூர்ணமாக அத்யயனம் பண்ணுவது ஸாத்தியமில்லையாதலால், இந்த அஸாத்ய விஷயத்தில் ரிஷி பிரயத்னப்படுவதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பரமேச்வரன், அவர் மனஸை மாற்ற வேண்டும் என்று எண்ணினார். அங்கே மூன்று பெரிய மலைகளைத் தோன்றப் பண்ணி, ஒரு பிடி மண்ணை எடுத்துக் காட்டி, ‘நீ இவ்வளவு வருஷக் கணக்காக அத்யயனம் பண்ணின வேதங்கள் இந்தப் பிடி மண்ணுக்கு ஸமானம். நீ இன்னும் தெரிந்து கொள்ளாதவை இந்த மலைகளைப்போல் இருக்கின்றன’ என்று சொன்னார்.

வேதகிரி என்னும் திருக்கழுக்குன்றம் தான் இப்படி வேதமே மலையான இடம் என்பார்கள். நான் அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினபோது, கூட வந்தவர்கள் “தேவ தேவ தேவ மஹாதேவ” என்று பஜனை பண்ணினார்கள். நான் அதை “வேத வேத வேத மஹாவேத” என்று மாற்றிக் கொடுத்தேன்!

பரத்வாஜ ரிஷியின் இந்தக் கதை வேதத்திலேயே “காடக”த்தில் இருக்கிறது.

அதனால் அனந்தமான வேதங்கள் உண்டு என்று தெரிகிறது. நாலுவேதம், ஆயிரத்து சொச்சம் சாகை என்பதெல்லாம் பிற்பாடு ஏற்பட்ட அமைப்புகள்தான்.

பிரம்மா உண்டானவுடன் அவருடைய ஹிருதயத்தில் வேத சப்தமெல்லாம் தோன்றின. அவருக்கு ஸ்ருஷ்டி செய்வதற்கு அந்த வேதம் வழி காட்டிற்று. எங்கே பார்த்தாலும் வேத சப்தம் நிறைந்திருந்ததை அவர் அறிந்தார். அவருக்கு எல்லா வேதங்களும் தோன்றும்.

ரிஷிகளுக்குச் சிலசில மந்திரங்களே தோன்றும். இப்படி ரிஷிகளுக்குத் தோன்றிய மந்திரங்கள்தான் நமக்கு கிடைத்துள்ள வேதமாக இருக்கிறது.

நாம் மந்திரங்களுக்கு ரிஷி, சந்தஸ், தேவதை என்னும் மூன்றையும் சொல்லுகிறோம். எல்லா மந்திரங்களுக்கும் ரிஷி, சந்தஸ், தேவதை உண்டு. தெலுங்கு தேசத்தில் எல்லா மந்திரங்களுக்கும் அவைகளைச் சொல்லிவருகிறார்கள். தபஸ் பண்ணின ரிஷிகள் மூலமாக அறியப்பட்டவையே மந்திரங்கள். அந்தந்த ரிஷிகள்தான் அந்தந்த மந்திரங்களுக்குரிய ரிஷிகள். அவர்களுக்கு அந்த மந்திரங்களைக் கேட்கும் திவ்விய சுரோத்திரம் உண்டு. யோகசாஸ்திரத்தில் பெரிய ஆகாசமும் மனஸிலுள்ள ஆகாசமும் ஒன்றாக ஆகிவிட்டால் பெரிய ஆகாசத்திலுள்ள சப்தமெல்லாம் நமக்குக் கேட்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எங்கும் நிறைந்து அபேதமான நிலையை அடைந்தவர்களுக்கே அந்த சப்தங்கள் தெரியும். இம்மாதிரி ரிஷிகள் மந்திரங்களை லோகத்தில் பிரசாரத்துக்குக் கொண்டு வந்தவர்களேயன்றி, அவற்றை இயற்றியவர்களல்ல. ஆனாலும், ஏற்கனவே உள்ளதை வெளிப்படுத்தியதாலேயே நமக்குப் பரம உபகாரத்தைப் புரிந்திருக்கிறார்கள். ஒருவர் நமக்கு கங்கா தீர்த்தம் கொண்டு வந்து கொடுத்தால், கொடுத்தவரையே நமஸ்காரம் பண்ணி வாங்கிக் கொள்கிறோம். அவரா கங்கையை உண்டு பண்ணினார்? இல்லாவிட்டாலும், ஆயிரம் மைலுக்கு அப்பாலிருக்கும் கங்கை நமக்குக் கிடைக்கும்படி அவர் செய்த உபகாரத்தைப் போற்றுகிறோம். நம் காதுக்கு எட்டாத மந்திரங்களை நமக்காகப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்த ரிஷிகளை எவ்வளவு பூஜித்தாலும் போதாது. அதனால்தான் ஒரு மந்திரத்தைச் சொல்லும்போது, எந்த ரிஷி மூலமாக அது லோகத்துக்கு வந்ததோ அவர் பெயரைச் சொல்லி தலையைத் தொடுகிறோம். அவருடைய பாதங்களை சிரஸில் வைத்துக் கொள்கிறோம் என்பதற்கு இது அறிகுறி.

வேதங்கள் ஆதியற்ற அநாதி. அவை மநுஷ்யர்களால் செய்யப்படாத அபௌருஷேய கிரந்தம் என்பதெல்லாம் எப்படி என்று நான் இவ்வளவு நாழி சொன்னதிலிருந்து கொஞ்சங் கொஞ்சம் தெளிவாகியிருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:12

மந்திர யோகமும் மந்திர ஸித்தியும்


பதினான்கு உலகங்களும் ஒரு ராஜ்யம். இந்த ராஜ்யத்திற்கு ஒரு சக்ரவர்த்தி. அந்த சக்ரவர்த்திக்கு எல்லா ஜீவராசிகளும் பிரஜைகள். ராஜ்யமும் அநாதி, சக்ரவர்த்தியும் அநாதி. ராஜ்யமும் சக்ரவர்த்தியும் பிரஜைகளும் இருந்தால் அதற்கு ஒரு சட்டம் வேண்டும். இவைகள் எல்லாம் அநாதியானால், சட்டமும் அநாதியாகத்தானே இருக்கணும்? அந்த அநாதிச் சட்டமே வேதம். இவற்றில் ராஜ்யமான பிரபஞ்சத்தை “அநாதி” என்றாலும், அவ்வப்போது அதற்கு உற்பத்தி உண்டு; அழிவும் உண்டு. சக்ரவர்த்தியான பரமாத்மாவும், சட்டமான வேதமும் ஸர்வ சாச்வதம்.

உலகம் உற்பத்தி ஆகிறது, வளர்கிறது, பிரளயம் அடைகிறது. திரும்பவும் உற்பத்தி ஆகிறது, வளர்கிறது, பிரளயம் அடைகிறது. இப்படியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சக்ரவர்த்தியும் சட்டமும் மாத்திரம் ஸ்திரம். ஒவ்வொரு ஸ்ருஷ்டியின் ஆரம்பித்திலும், அந்த சக்ரவர்த்தி அதிகார புருஷர்களை ஸ்ருஷ்டி செய்கிறான். அந்த அதிகாரிகளுக்கு வேண்டிய யோக சக்தியைக் கொடுக்கிறான். யோக சாஸ்திரத்தில் தன் ச்ரோத்திரத்திற்கும் வெளி ஆகாசத்திற்கும் அபேதமான ஒரு ஸாம்யம் (ஸம நிலை) உபதேசிக்கப்பட்டிருக்கிறது. அதை அநுஷ்டிக்கும் போது திவ்ய ச்ரோத்திரம் கிடைக்கிறது. அந்த திவ்ய ச்ரோத்திரத்தைக் கொண்டு வெளி ஆகாசத்தில் ஸ்திரமாய்க் கிடக்கும் அநாதி சப்த அலைகளை ஈசனுடைய அருள் சகாயத்தால் அந்த அதிகார புருஷர்கள் அடைகிறார்கள். அவர்களே முதல் முதலில் வேதத்தை அறிந்தவர்களாகிறார்கள். அவர்களே மந்திரங்களுக்குக்கான மஹரிஷிகள்.

வேதாத்யயனம் ஒரு மந்திர யோகம். ஒவ்வொரு நாடி அசைவதினால் சித்தத்திற்கு ஒவ்வொரு விதமான விகாரங்கள் ஏற்படுகிறது. சில நாடி அசைவுகளால் காம விகாரங்களும், சில நாடிகளால் சோம்பல் விகாரங்களும், சில நாடிகளால் கோப விகாரங்களும் உண்டாகின்றன. இதை மாற்றிச் சொன்னால், காம விகாரம் ஏற்படும்போது சில நாடிகளில் அசைவும், கோப விகாரத்தின்போது சில நாடிகளில் அசைவும், இப்படியே ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு விதமான நாடி அசைவும் உண்டாகின்றன. இவை பிரத்யக்ஷமாகவே அநுபவத்தில் காணப்படுகின்றன. சாந்தம் ஏற்படும்போது முகத்தில் ஒரு களை உண்டாகிறது. அந்தக் களை சில நாடிகள் குளிர்ந்ததன் பலனேயாம். இப்படியே காமம், குரோதம் ஒவ்வொன்றும், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றபடி முகத்திலேயே பிரதிபலிக்கின்றன. நாடி சலனம்தான் இந்த அடையாளங்களை உண்டாக்குவது. இவ்விதம் மனோவிகாரங்களால் நாடிகளில் சில விகாரங்கள் ஏற்படுவதால், அந்த நாடிகளை வசப்படுத்தி விட்டால், காமக் குரோதங்களையோ, சாந்தத்தையோ நமது இஷ்டப்படி வரவழைத்துக் கொள்ளலாம். அதற்கு வெளிப் பொருள்கள் தேவையில்லை. இப்படி நாடிகளை ஸ்வாதீனப்படுத்த ப்ராணாயாமத்தை முக்கியமாகக் கொண்ட ராஜயோகம் ஒரு மார்க்கம். அதே விதமாய் மந்திரயோகம் ஒரு மார்க்கம். ஒரு எழுத்தை நாம் உச்சரிக்கும்போது நமது நாக்கு, உதடு, மேல்வாய், கீழ்வாய், கண்டம் முதலியவைகளின் இடைவெளி வழியாக ப்ராணவாயு வெளிப்படுகிறது. அப்பொழுதுதான் அக்ஷர த்வனி உண்டாகிறது. அந்த அக்ஷர த்வனிக்குக் காரணமாக எந்தெந்த உறுப்புகளில் ப்ராணவாயு ஸஞ்சரிக்கிறதோ அந்தந்த இடம் ஸம்பந்தப்படும் நாடிகளில் சலனம் ஏற்படுகிது. நாடிகளில் சலனத்தினால் மனஸில் எந்த விதமான விருத்திகள் ஏற்பட்டு இகலோக க்ஷேமமும் பர லோக க்ஷேமமாகிய மோக்ஷம் முதலிய புண்யமும் ஏற்பட வேண்டுமோ, அதற்கு அநுகுணமாக உள்ள உச்சாரணங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, வேறுவிதமான உச்சாரணங்களை விலக்கி அமைந்தனவே வேத மந்திரங்கள்.

மந்திரத்துக்கு Definition (லக்ஷணம்) “மனனாத் த்ராயதே” என்று சொல்லியிருக்கிறது. அதாவது திரும்பத் திரும்ப மனனம் செய்து உருப்போடுவதால் காப்பாற்றுவதே மந்திரம்.

அவைகளின் ஆவ்ருத்தியால் எந்தெந்த நாடிகளில் திருப்பித் திருப்பி சலனம் ஏற்பட்டு ஆத்மக்ஷேமம் கிட்டுமோ, அந்த க்ஷேமத்தைத் தானும் அடைந்து, தன் மந்திர சக்தியால் உலகத்தோரும் க்ஷேமம் அடையச் செய்வதே வேதியரின் பிறவிக் கடமை.

மந்திரங்களில் ஸித்தி பெற்றுப் பூரண பலனைப் பெற வேண்டுமானால் அவற்றை எப்படி ஓத வேண்டும் என்று [‘சிக்ஷா’ சாஸ்திரத்தில்) சொல்லியிருக்கிறது:

கீதீ சீக்ரி சிர: கம்பீ ததா லிகித பாடகபாடகன்

அனர்த்தக்ஞ: (ஹி) அல்பகண்டச்ச ஷடைதே பாடகாதமா: ||



“இப்படி யெல்லாம் வேதத்தைத் தப்பாகப் பயில்பவர்கள் அதமர்கள்” என்று சொல்லி, இந்த ச்லோகத்தில் ஆறு தினுசான தப்புகளைச் சொல்லியிருக்கிறது. “கீதீ” என்றால் வேதத்தை பாட்டு (கீதம்) மாதிரி இஷ்டப்படி ராகம் போட்டுப் பாடுகிறவன். இப்படிப் பண்ணக்கூடாது. வேதத்துக்கே உரிய ஸ்வரத்தில்தான் அதைச் சொல்ல வேண்டும். “சீக்ரி” என்றால் வேகமாகச் சொல்லிச் சீக்கிரத்தில் முடிக்கிறவன். இதுவும் பிசகு. வேத அக்ஷரங்களை அவற்றின் காலப் பிரமாணப்படி சொன்னால்தான் பூர்ண பலன் உண்டாகும். “சிர:கம்பீ” என்றால் தலையை ஆட்டிக்கொண்டு சொல்கிறவன். ஆடாமல் ஸமநிலையில் உட்கார்ந்து கொண்டு, மந்திரங்களால் தானாக ஏற்படும் நாடி சலனங்களைத்தான் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். பாட்டுப் பாடுகிறவர் மாதிரி சிரஃகம்பம் பண்ணினால் நாடி சலனம் வித்யாஸப்படும். ‘லிகித பாடகன்’ என்றால் எழுதி வைத்துக் கொண்டு படிப்பவன். இது தப்பு. வாயால் சொல்லிக் காதால் கேட்டே பாடம் பண்ண வேண்டும் என்று முன்பே சொன்னேன். “அனர்த்தக்ஞ:” என்றால் அர்த்தம் தெரியாதவன். அர்த்தம் தெரிந்துகொண்டுதான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும்….

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Feb 2023 - 23:13

ஒலியின் பயனும் பொருளின் பயனும்


இந்த இடத்தில் எனக்கு வேடிக்கையாக ஒன்று தோன்றுவதைச் சொல்ல வேண்டும். ஸம்ஸ்கிருதத்தில் ஒன்றைச் சொல்லி, அதற்குப் பின்னால் தரம் என்று சேர்த்தால் முதலில் சொன்னதைவிட (comparative degree ) இது சிலாக்யமாகிறது என்று அர்த்தம். ‘வீர்யவத்’ என்றால் ‘சக்தியுள்ள’ என்று அர்த்தம். ‘வீர்யவத்தரம்’ என்றால் ‘அந்த சக்தி மேலும் அதிகமான’ என்று அர்த்தம். சாந்தோக்ய உபநிஷத்தில் (1.1.10) ஓம்காரத்தின் தத்துவத்தை அறிந்து உபாஸிக்கிறவர்களுக்கே ‘வீர்யவத்தர’மான பலன் கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது. இப்படித் ‘தரம்’ போட்டு சொன்னதாலேயே அர்த்தம் தெரியாமல் ஓம்கார உபாஸனை பண்ணுகிறவர்களுக்கும் ‘வீர்யவத்’தான பலன் கிடைக்கிறது என்று ஆகிறது. அறிந்து பண்ணுகிறவர்களின் அளவுக்கு இல்லாவிடினும் மற்றவர்களுக்கும் சக்தி வாய்ந்த பயன் ஏற்படுகிறது என்று ஆசார்யாளும் பாஷ்யத்தில் சொல்கிறார்.

ஏன் என்றால், அர்த்தம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ‘பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்’, ‘நம் பூர்விகர்கள் பண்ணியிருக்கிறார்கள்’ என்பதற்காகவே ஒரு கர்மாவை ஒருத்தர் பண்ணினாலும், அந்த மனோபாவத்துக்கே நல்ல பலன் உண்டுதான். மற்ற கர்மாக்களை விட மந்திர உபாஸனையில் இதே விசேஷமாகச் சொல்ல வேண்டும். ஏனென்றால் மந்திரத்தில் சரியான அக்ஷர உச்சாரணத்தினால் ஏற்படுகிற சலனம்தான் முக்கியமாக க்ஷேமத்தைத் தருவது. சப்தம் உண்டாக்கும் பலன்தான் இங்கே விசேஷம். அர்த்தத்தின் விசேஷம் அதற்கப்புறம் வருவதுதான்.

இதைப்பற்றி யோசிக்கும்போது, எனக்கு அர்த்தம் தெரியாமல் செய்வதில்தான் “வீர்யவத்தர”மான பலன்; அர்த்தம் தெரிந்து பண்ணினால் வெறும் “வீர்யவத்” தான் என்றுகூட வேடிக்கையாகத் தோன்றுவதுண்டு. அர்த்தம் தெரிந்து கொள்ளாமல் மந்திர ஜபம் பண்ணினால் அதிகப் பிரயோஜனம் உண்டு; தெரிந்தால் அவ்வளவு இல்லை என்று தோன்றுகிறது. அது எப்படி?

ஒரு கலெக்டர் இருக்கிறார். அவருக்கு ஒரு படிப்பாளி வக்கீலை வைத்து மனு எழுதுகிறார். ஓரெழுத்துக்கூடத் தெரியாத ஒரு குடியானவன் யாராவது ஒருவரிடம் எழுதி கலெக்டரிடம் நேரில் கொடுக்கிறான். எப்படியாவது நல்லது பண்ணவேண்டும் என்று வேண்டிக்கொண்டு மனுவைக் கொடுக்கிறான். கலெக்டர் பார்த்தால், ‘பாவம்! ஒன்றும் தெரியாது! நம்பிக்கை மாத்திரம் இருக்கிறது என்று எண்ணி நல்லது பண்ணுவார்.

அதைப் போன்றதுதான் மந்திரமும். மந்திரத்துக்கு அர்த்தம் ஈச்வரனுக்குத் தான் தெரியும். நாம் போக்கிரித்தனமாக இருக்கக்கூடாது. வக்கீல் வைத்துப் பேசினால், அதில் குற்றம் ஏற்படுமானால், கலெக்டர் கோபித்துக் கொள்வார். தெரிந்து தப்பாகப் பண்ணினால் அதிகக் கோபம் உண்டாகும். தெரியாமல் தப்பாக இருந்தால், தெரியாமல் பண்ணுகிறான் என்று மன்னிக்கிற எண்ணம் ஏற்படும். “என்ன ஸார்! அர்த்தம் தெரியவில்லை; அதைப் பண்ணி என்ன பிரயோஜனம்?” என்று சொல்வது தப்பு. அர்த்தம் தெரியாமல் பண்ணுவது தான் வீர்யவத்தரமாக எனக்குத் தோன்றுகிறது!

இது வேடிக்கைக்குச் சொன்னது. தற்காலத்தில் புத்தியின் கர்வமும், கிருத்ரிமமும் ஜாஸ்தியாகிவிட்டதையும், இதில் பாமரர்களுக்குள்ள விநய ஸம்பத்து பறிபோய் விடுவதையும் பார்க்கிறபோது, புத்தியே இல்லாமல் வெறும் நம்பிக்கையின் பேரில் பண்ணினால் சிலாக்யமாய் இருக்குமோ என்று பட்டதால் இப்படிச் சொன்னேன்.

வாஸ்வத்தில் புத்தியும் இருந்து விநயமாகவும் இருக்க வேண்டும். மந்திரங்களுக்கு அர்த்தம் சப்தத்துக்கு அடுத்தபடிதான் முக்கியம் என்றாலும் மந்திரங்களே நமக்கு தர்ம சாஸ்திரச் சட்டமாகவும் இருப்பதால் அவற்றின் அர்த்தமும் தெரிந்தால்தான் அந்தச் சட்டப்படி நடக்க முடியும்…

வேத அப்யாஸத்தில் சொன்ன ஆறு தப்புகளில் கடைசியில் வரும் ‘அல்ப கண்டன்’ என்றால், ‘மெல்லிய குரலில் வேதம் சொல்லுகிறவன்’ என்று அர்த்தம். இவனும் அதமன்தான். Full-throated என்று சொல்லுகிற மாதிரி நன்றாக கம்பீரமாக, உரக்க, வாய்விட்டு வேத சப்தம் எவ்வளவு தூரம் வியாபிக்கும்படியாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்ல வேண்டும்.

வேத மந்திர சப்தம் அதைச் சொல்கிறவனுக்குள்ளே நல்ல நாடி சலனங்களை உண்டு பண்ணுவதோடு, கேட்கிறவர்களுக்கும் அப்படிப்பட்ட சலனத்தை உண்டு பண்ணுவது. அட்மாஸ்ஃபியரில் அது பரவியிருப்பதாலேயே இஹலோகத்துக்கும் பரலோகத்துக்கும் க்ஷேமமான பலன்கள் ஏற்படும். ஆகையால் அட்மாஸ்ஃபியரில் அது எவ்வளவு தூரம் வியாபிக்கும்படிப் பண்ண முடியுமோ அவ்வளவுக்கு பலமாகக் கோஷிக்க வேண்டும்.

மந்திரத்திலிருந்து முழுப் பிரயோஜனத்தை அடைய வேணடுமானால், இந்த ஆறு விதிகளைப் பின்பற்றினால் தான் முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக