புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) |
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி- விரைவில் தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி- விரைவில் தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி- விரைவில் தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி- விரைவில் தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி- விரைவில் |
ஈகரை தமிழ் களஞ்சியம் |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
‘இங்கே ஆத்மா என்றிருக்கிறதே, பரமாத்மா என்றல்லவா இருக்கவேண்டும்?’ என்று கேட்கலாம். பரமாத்மா என்றால் அல்பாத்மா வேறு இருக்க வேண்டும். அப்படி ஒன்று இல்லை. ஆதலினால் பரமாத்மாவும் இல்லை. எல்லாம் ஒரே ஆத்மாதான். த்வைத நிலையில்தான் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டாகச் சொல்வது. அத்வைதமாக மாறினால் ஒரே ஆத்மாதான்.
மோக்ஷம் என்பது பயமில்லாத இடம். அது பயமுள்ள இடமானால் அங்கே போவதற்கு நாம் பாடுபட வேண்டியதேயில்லை. அத்வைதிகளைத் தவிர மற்றவர்களுக்கு மோக்ஷத்திலும் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு (த்வைதம்) உண்டு. இரண்டில்லாமல் ஆவதை அவர்கள் சொல்வதில்லை.
உபநிஷத் என்ன சொல்கிறது? த்வைதம் இருந்தால் அங்கே பயம் இருக்கத்தான் செய்கிறது என்கிறது 1. ‘பரம் பொருளில் ஒருவன் கொஞ்சம் பேதத்தை (த்வைதத்தை) கல்பித்துவிட்டாலும், உடனே பயத்துக்கு இடம் ஏற்பட்டுவிடுகிறது’ என்று சொல்கிறது. ‘த்வைதத்தால் பயமும் துக்கமும் உபத்ரவமும் உண்டாகின்றன’ என்று பல இடங்களில் உபநிஷத்துக்கள் சொல்கின்றன. இரண்டு வித்யாஸமான வஸ்துக்கள் இருந்தால்தான் ஆசை, பயம், துக்கம் முதலியவை உண்டாகின்றன.
நமக்குப் பிரியமானவர்கள் இறந்துபோனால் துக்கம் உண்டாகிறது. நாமே போனால் துக்கமிருக்காதே என்று நினைக்கிறோம். நாம் போவதில் நமக்கு துக்கம் கிடையாது. ஆகையால் எல்லாரும் நாமாக இருந்துவிட்டால் துக்கமே இல்லை. துக்கம் தோன்றினால் பேத நினைவு இருக்கிறது. பிரியம் எதனால் உண்டாகிறது? இரண்டு என்னும் நினைவில்தான். நமக்கு இன்னொன்றாக இருப்பதிலேதான் பயமும், ப்ரியமும், துக்கமும் உண்டாகின்றன. பகவானே இப்படி வேறாக இருந்தாலும் இவை உண்டாகும்.ஆகவே அவரே நாமாகி விட்டால்தான், துக்கமே இல்லை, பயமே இல்லை, ஆசை த்வேஷங்களுக்கும் இடம் இல்லை. மோக்ஷத்தில் அப்படி இரண்டற்று ஆகிவிட்டால்தான் அது நிஜமான விடுதலை.
ஆகையினால்தான் இரண்டாவது வேண்டாம், அத்வைதந்தான் ஸத்யமென்று வேதாந்தம் முறையிடுகிறது. இந்த விஷயத்தை நம் ஆசார்யாள் தீபம்போல் எடுத்துக்காட்டி, ‘மறவாதீர்கள்’ என்று விளக்கியிருக்கிறார். “பாஷ்ய தீபம்” என்று பாஷ்யத்துக்குப் பெயர்.
வேதத்தில் ‘த்வைதம்’ என்று வந்திருக்கிறது என்றவுடன், ‘த்வைதம்’தான் வேத முடிவு என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அது எந்த இடத்தில், எதற்காக, எந்த முடிவுக்கு முன்பு சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆலோசிப்பதில்லை.
மோக்ஷத்திலும் ஸ்வாமி வேறு, ஜீவன் வேறு என்று இருந்தால், “எவன் தனக்கு அந்நியமாக தேவதையை உபாஸிக்கிறானோ அவன் பசுப் பிராயமானவன்” என்று உபநிஷத்தில் சொன்ன நிலையே 2 மோக்ஷத்திலும் நீடிக்கிறது என்றுதான் அர்த்தம்! மோக்ஷத்திலும் பகவான், பக்தன் என்ற பேதமுண்டு என்கிற சைவர்களும், வைஷ்ணவர்களும் இதற்கு வேறுவிதமாக அர்த்தம் பண்ணுவார்கள். ‘அந்யாம் தேவதாம் உபாஸ்தே’ என்று மூலத்தில் இருப்பதற்கு ‘தனக்கு அந்நியமாக தேவதையை உபாஸிக்கிறவன்’ என்று பொருள் கொள்ளாமல், ‘சிவன் அல்லது விஷ்ணு என்ற தேவதைக்கு அந்நியமாக ஒன்றை எவன் உபாஸிக்கிறானோ அவன் பசுவுக்கு ஸமானம்’ என்று அர்த்தம் சொல்வார்கள். சிவன்தான் பரதெய்வம், அல்லது விஷ்ணுதான் பரதெய்வம் என்கிற அபிப்பிராயத்தின் பேரில், மற்ற தேவதைகளின் உபாஸனையை இப்படிக் கண்டனம் செய்து தங்கள் தேவதைகளின் உபாஸனையை மோக்ஷ உபாயம் என்று சொல்வார்கள். “அந்யாம் தேவதாம்” என்றால் ஒரு தேவதைக்கு அன்னியமான இன்னொரு தேவதை என்று அர்த்தம் ஏற்படத்தானே செய்கிறது? இதை எப்படித் தப்பு என்று சொல்லலாம்?” என்று கேட்கலாம்? ஆனால் மந்திரத்தில், “அந்யாம் தேவதாம் உபாஸ்தே” என்றவுடனேயே, மேலே இன்னம் விளக்கமாக, அந்யோஸெள அந்யோஹம் அஸ்மீதி (அந்ய: அஸெள அந்ய: அஹம் அஸ்மி இதி) என்று வருகிறது – அதாவது ‘இந்த தேவதை வேறு; நான் வேறு; நாங்கள் ஒருவருக்கொருவர் அன்னியமானவர்கள்’ என்ற எண்ணத்தோடு எவன் உபாஸிக்கிறானோ (அவன் பசுவுக்கு ஸமானம்) என்று ஸ்பஷ்டமாக வருகிறது. ஒரு தேவதைக்கு அன்னியமாக இன்னொரு தேவதையை உபாஸிப்பதைப்பற்றி இல்லை, உபாஸகனான தனக்கு அன்னியமாகவே தேவதை இருப்பதாக நினைத்து உபாஸிப்பதைத்தான் பசுத்தனம் என்று சொல்லியிருக்கிறது. அதனால் இங்கேயும் அத்வைத மோக்ஷம்தான் குறிக்கப்படுகிறது. இங்கே பகவான், பக்தன் என்ற பேதமில்லை. தேவதை, அதன் உபாஸகன் என்ற பேதம் இல்லை.
முக்கியமாக நம் மதம் சைவம், வைஷ்ணவம் என்றுதான் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. சிவன்தான் உசத்தி, விஷ்ணுதான் உசத்தி என்று இந்த இரண்டு சம்பிரதாயக்காரர்களும் நீண்ட காலமாகச் சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், பிரம்மத்துக்கும், ஜீவனுக்கும் பேதம் சொல்லாத நம் ஆசார்யாள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பேதம் சொல்வாரா? சொல்லவே மாட்டார். ஸகல தேவதைகளும் அவருக்குப் பரமாத்ம ஸ்வரூபந்தான். ஆனால் மற்ற ஸித்தாந்திகள் எல்லோரும் பேதம் சொல்கிறவர்கள்தான். சில பேர் சிவன்தான் [பரமாத்மா] என்பார்கள்; சிலர் விஷ்ணுதான் பரமாத்மா என்பார்கள். இந்த விஷயத்தில் உபநிஷத் என்ன சொல்கிறது என்று பார்த்தால், இங்கேயும் நம் ஆசார்யாளின் அபிப்பிராயந்தான் உபநிஷத்தின் அபிப்பிராயம் என்று தெரிகிறது. அதாவது உபநிஷத் அபிப்பிராயத்தையேதான் ஆதி சங்கரர் சொன்னார் என்று தெரிகிறது.
நம் மதத்துக்கு ஆதாரமான வேதங்களுக்கு அந்தமாக இருக்கப்பட்ட முக்கியமான பத்து உபநிஷத்துக்களில் சிவ-விஷ்ணு ஏற்றத் தாழ்வுகள் எங்குமே சொல்லியிருக்கவில்லை. அவற்றில் ஒரே ஒரு இடத்தில்தான் “விஷ்ணு” என்ற சொல்லே வருகிறது. அதே போல் “சிவ” என்ற சப்தமும் ஒரு தரம்தான் வருகிறது. மாண்டூக்ய உபநிஷத் முடிவில், மூன்று ஸ்திதிகளைக் கடந்த துரீயமான அத்வைத நிலை சிவமாக இருக்கிறது என்று வருகிறது. ஆகவே இங்கே சொன்னது ‘சிவம்’ என்கிற பரம மங்களமான பரமாத்ம தத்வமே தவிர ‘சிவன்’ என்கிற மூர்த்தியில்லை. கடோபநிஷத்தில் 3 ஜீவனானவன் விவேகமுள்ள புத்தி என்கிற ஸாரதியைக் கொண்டு நன்றாக அடக்கப்பட்ட மனஸ் என்ற கடிவாளத்தால், இந்திரியக் குதிரைகளைக் கட்டுப்படுத்தி நடத்தி, ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷ எல்லைக்குச் செல்கிறான் என்று சொல்லி, அதுவே விஷ்ணுவான பரமபதம் என்று சொல்லியிருக்கிறது. தத் விஷ்ணோ: பரமம் பதம் என்று இருக்கிறது. இதே வார்த்தை ஸம்ஹிதையிலும் வருகிறது – ஸூரிகள் எனப்படும் ஞானிகள் விஷ்ணுவான பரமபதத்தை ஸதா காலமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வருகிறது 4. வைஷ்ணவர்கள் “தத் விஷ்ணோ: பரமம் பதம்” என்பதற்கு அர்த்தம் செய்யும்போது விஷ்ணுவை சங்க சக்ர கதா பாணியான மூர்த்தியாகச் சொல்லி, அவர் இருக்கிற வைகுண்டலோகமே பரமபதம் என்கிற மோக்ஷம் என்று இங்கே உபநிஷத்தில் நிலை நாட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். “விஷ்ணுவுடைய பரமபதம்” என்பது அவர்களுடைய பாஷ்யம். “விஷ்ணுவாகிய பரமபதம்” என்பது அத்வைதிகளுடைய பாஷ்யம். அத்வைதிகள் சொல்வது போல் அர்த்தம் செய்யாவிட்டால், ஞானிகள் விஷ்ணு இருக்கிற ஒரு இடத்தைத்தான் பார்க்கிறார்கள், விஷ்ணுவையே பார்க்கவில்லை என்று ஆகும். அப்படிச் சொல்வது ஞானிகளைக் குறைத்துச் சொல்வதாகும். விஷ்ணுவைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். பார்ப்பது என்றால் அநுபவிப்பது, தன்னில் தானாக அநுபவிப்பது என்றே அர்த்தம்.
உள்ள அனைத்தையும் எவன் தன் ஆத்மாவுக்குள்ளேயே இருப்பதாகப் பார்க்கிறானோ (‘அநுபச்யதி’), அனைத்துக்குள்ளும் தன் ஆத்மாவே இருப்பதாகப் பார்க்கிறானோ (‘அநுபச்யதி’) அவனுக்குத்தான் எதனிடமும் வெறுப்பில்லை. அவனுக்கு மோஹமும் இல்லை, சோகமும் இல்லை’ என்று ஈசாவாஸ்ய உபநிஷத்தில் அத்வைத திருஷ்டியைச் சொல்கிறபோது, ‘அநுபவிக்கிறான்’ என்ற அர்த்தத்தில்தான் “பச்யதி” (பார்க்கிறான்) என்ற வார்த்தை வந்திருக்கிறது. அத்வைத திருஷ்டி என்று இப்போது நான் சொன்னதில்கூட, திருஷ்டி (பார்வை) என்பது அநுபவத்தைத்தானே சொல்கிறது? இதே போலத்தான் “விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி” என்றால் விஷ்ணுவான பரமபதத்தை (பிரம்மத்தை) எப்போதும் அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சரியாகப் பொருள் கொள்ளவேண்டும்.
வேறாகப் பார்த்தால் பயம் உண்டாகிவிடும் என்று உபநிஷத்திலேயே இருக்கிறதே! எனவே வேறாக இன்றி இப்படித் தானாக ஆகி விஷ்ணுவை அநுபவிப்பது என்றால், விஷ்ணு என்பது மாண்டூக்யத்தில் சொன்ன சிவம் மாதிரி ஒரு மூர்த்தியாக இல்லாமல் பரமாத்ம தத்வமாகத்தான் இருக்கவேண்டும். அதனால்தான் விஷ்ணுவைப் “பரமம் பதம்” என்று சொல்லியிருக்கிறது. “பரமம் பதம்” என்றால், ‘மிகவும் உத்தமமான ஸ்தானம்’ என்று ஆசார்யாள் பாஷ்யம் செய்திருக்கிறார். ஆத்மா தன்னைத் தானே உணர்ந்து கொள்வதுதான் பரமோத்தம ஸ்தானம். அது ஒரு இடமில்லை. ஒரு இடம் என்றால், மற்ற இடங்களில் அது இல்லை என்றல்லவா ஆகிவிடும்? அது ஸர்வ வியாபகமானது. ‘விஷ்ணு’ என்ற வார்த்தைக்கு root meaning-ஏ ‘எங்கும் வியாபிப்பது’ என்பதுதான். ‘வ்யாபன சீலம்’ என்றே இங்கு ஆசார்ய பாஷ்யத்தில் இருக்கிறது. எங்கேயும் வியாபித்தது என்றால் கை கால் உள்ள மூர்த்தியாக இருக்கமுடியாது; பரம்பொருள் என்ற ஸத்ய தத்வமாகத்தான் இருக்கவேண்டும்.
இப்படியாக உபநிஷத்துக்களில் சிவ, விஷ்ணு என்ற இரண்டும் ஒரே ஸத்ய வஸ்துவைத்தான் சொல்கின்றன, ஆக, ஜீவனும் பிரம்மமும் ஒன்றென்பது; ஜகத்து மாயை என்பது; சிவன், விஷ்ணு என்ற இரண்டில் ஏதோ ஒன்றுதான் பரமாத்மா என்று பேதம் சொல்லாமலிருப்பது – என்றிப்படி நம் சங்கர பகவத் பாதர்கள் சொல்லியிருக்கிற முடிவுகள்தான் வேதாந்தத்தின் முடிவும் என்று தெரிகிறது.

“சங்கர சம்பிரதாயம்”
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களை அநுஸரிக்கிற அத்வைதிகளுக்கு “#ஸ்மார்த்தர்கள்” என்ற பெயரே இருக்கிறது. இப்போது ஸ்மார்த்தர்களாக இருக்கப்பட்ட இளைஞர்களிலேயே பலபேருக்கு இந்த [ஸ்மார்த்தர் என்ற] பெயர் தெரியவில்லை! தங்களை “ஐயர்” என்றே சொல்லிக் கொள்கிறார்கள்.
வைஷ்ணவர்கள், விசிஷ்டாத்வைதிகள் என்றால் ஐயங்கார். த்வைதிகள் ராவ்ஜிகளாக இருக்கிறார்கள், அதாவது பேருக்குப் பின்னால் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அல்லது ‘ஆச்சார்’ போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் ஸ்ரீ மத்வாசாரியாரைப் பின்பற்றுவதால் ‘மாத்வர்’ என்கிறோம். இவர்களும் விஷ்ணு பக்திகாரர்கள்தான். ஆனால் வைஷ்ணவர்கள் என்றால் ஸ்ரீ ராமாநுஜாசாரியாரின் மதத்தை சேர்ந்தவர்கள் என்றே நினைக்கிறோம். மத்வர்கள் ‘ஆச்சார்’ போட்டுக் கொள்வதுபோல், ஸ்ரீ வைஷ்ணவர்களும் ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்கிறார்கள். ‘ராஜகோபால ஐயங்கார்’ ‘ராஜகோபாலாசாரியார்’ இப்படி இரண்டு தினுசாகவும் போட்டுக் கொள்கிறார்கள். மத்வர் என்று ஸ்ரீ மத்வாசாரியார் பெயரை வைத்தே அந்த மதஸ்தவரை சொல்வது போல், ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் இவர்களின் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களை அந்தந்த ஆசார்யார் பெயரால் குறிப்பிடக் காணோம். ‘சங்கராத்வைதின்’ என்று ஏதாவது இங்கிலீஷ் ஃபிலாஸஃபி புஸ்தகத்தில் வேண்டுமானால் இருக்கும்; லெக்சரில் இந்த வார்த்தை அடிபடலாம். நடைமுறையில் இல்லை. த்வைதிகள் ராவ், விசிஷ்டாத்வைதிகள் ஐயங்கார், அத்வைதிகள் ஐயர் என்று இப்போது வைத்துக்கொண்டிருக்கிறோம்.
பொதுவாக ஸ்மார்த்தர்கள்தான் #சாஸ்திரி, சர்மா என்றெல்லாமும் போட்டுக் கொள்கிறார்கள். #தீக்ஷிதர்கள் என்று போட்டுக் கொள்பவர்களும் நம் பக்கத்தில் பெரும்பாலும் ஸ்மார்த்தர்களில் சிலர் மட்டும்தான். யாகம் பண்ணினவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஏற்பட்டது இந்த ‘தீக்ஷிதர்’ பட்டம். (சிதம்பரத்து தீக்ஷிதர்கள் ஸமாசாரம் வேறு.) பொதுவில் அத்வைதிகள் ஐயர் ஜாதி என்றே இப்போது தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேருக்குப் பின்னாடிப் போட்டுக் கொள்கிற ஜாதியைக் கொண்டு இப்படிச் சொல்லிக்கொள்கிறோம். இந்தத் தலைமுறைக்காரர்கள் ஜாதிப் பெயர் போட்டுக் கொள்வதில்லை. அது நிஷித்தமாகிவிட்டது! போன தலைமுறையிலும் ராவ்ஜிகளின் அளவுக்கு மற்றவர்கள் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் தாத்தா காலத்துக்குப் போனால் நாம் எல்லோரும் ஒரு ஐயருக்கோ, ஐயங்காருக்கோ, ராவ்ஜிக்கோ பேரன் என்று ஆகும். ‘ஆச்சார்’ போட்டுக் கொண்டவர்களும், ‘நாங்கள் ஆச்சார் ஜாதி’ என்று சொல்லவில்லை. ராவ் அல்லது மாத்வர் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். அப்படியே, ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்ளும் வைஷ்ணவர்களும் தங்களை ஆசாரியார் ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை. ஐயங்கார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் ஐயர் என்கிறோம். சர்மா ஜாதி, சாஸ்திரி ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை.
சங்கர பகவத்பாதாளை அநுஸரிக்கிறவர்கள் தங்களுக்குப் பெயர் ஸ்மார்த்தர் என்பதையே தெரிந்து கொள்ளாத மாதிரி, இன்னொரு முக்கியமான விஷயமும் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். தங்களுக்கென்று ஆசாரியாள் இதுதான் தெய்வம் என்று எந்த ஒரு தெய்வத்தையும் வைக்காமல், எல்லா தெய்வங்களையும் ஸமமாகப் பார்க்கச் சொன்னார் என்பது அத்வைதிகளில் பலபேருக்கே தெரியவில்லை. தங்களுடைய உபாஸனா மூர்த்தியாகப் பரமசிவனைத்தான் ஆசார்யாள் வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இப்படி நினைப்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது
த்வைதி, விசிஷ்டாத்வைதி இரண்டு பேருமே விஷ்ணுவை உபாஸிக்கிறார்கள். இதனால்தான் அத்வைதியாக இருக்கப்பட்ட இந்தக் காலத்து ஸ்மார்த்தர்கள், தாங்கள் அந்த இரண்டு பேருக்கும் மாறுபட்டவர்களாதலால், தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இது தப்பு.
ஐயர், ஐயங்கார், ராவ் என்பன ஸம்ஸ்கிருதப் பெயர்களாக இல்லை. எனவே ஸம்ஸ்கிருத்தில் தன் ஜாதியைச் சொல்கிறபோது ஐயங்கார் தன்னை வைஷ்ணவர் என்று சொல்கிறார். ராவ்ஜி மாத்வர் என்று சொல்கிறார். அப்படி அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை. ஆனால் அத்வைதியான இந்த ஐயர் ஜாதிக்காரன் மட்டும் தப்பாகத் தன்னை சைவன் என்று சொல்லிக் கொள்கிறான். மற்றவர்களுக்கும் இப்படியேதான் தப்பபிப்பிராயம் இருக்கிறது.
என்னைக்கூட ரொம்பப் பேர் சைவ ஆசாரியர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து ஒரு ப்ரொஃபஸர் [Hajime Nakumura] என்பவர் என்னிடம் வந்திருந்தார். அவர், “ஆசார்யாளுடைய ஸூத்ர பாஷ்யம், கீதா பாஷ்யமெல்லாம் படித்திருக்கிறேன். அதிலெல்லாம் அத்வைதம்தான் சொல்லியிருக்கிறதே தவிர சிவனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால் நீ ஏன் சைவமாக இருக்கிறாய்?” என்று என்னைக் கேட்டார். ‘என்னை எதனால் சைவன் என்கிறாய்?’ என்று நான் அவரைத் திருப்பிக் கேட்டேன். அதற்கு அவர், “நீ விபூதிதானே இட்டுக் கொள்கிறாய்? சிவ பூஜை (சந்திர மெளளீச்வர பூஜை) தானே பண்ணுகிறாய்? எல்லா சங்கராசாரியார்களுமே இப்படித்தானே சைவமாக இருக்கிறீர்கள்? அத்வைதத்தில் சிவன், விஷ்ணு என்ற பேதமே ஆசாரியாள் சொல்லாதபோது நீயும், இன்னும் மற்ற சங்கர மடத்துக்காரர்களும் ஏன் சிவச் சின்னங்களைப் போட்டுக்கொண்டு சிவபூஜை பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு நான் பதில் சொன்னேன்.
சில சரித்திர பூர்வமான உண்மைகளுக்குப் போனால்தான் இதற்குப் பதில் கிடைக்கும்.
ஆசார்யாள் அவதாரம் பண்ணுவதற்கு முந்தி தேசத்தில் என்ன மதம் அல்லது மதங்கள் இருந்தன? வைதிக மதமான ஸநாதன தர்மமும், எழுபத்திரண்டு துர்மதங்களும் இருந்தன என்று “சங்கர விஜய” புஸ்தகங்களிலிருந்து தெரிகிறது. ஆனால் வைதிக மதத்துக்கு மாறானவற்றில் முக்கியமானதாக பெளத்தம்தான் இருந்தது. பொது மக்களிலும் சரி, பெரும்பாலோர் ஸநாதன வைதிக தர்மத்திலோ, இல்லாவிட்டால் பெளத்தத்தைச் சேர்ந்தவர்களாகவோதான் இருந்தார்கள். மற்ற மதங்களுக்கு ஏதோ அங்கங்கே ஒரு கூட்டத்தில் (group-ல் ) மட்டும் following (பின்பற்றுதல்) இருந்தது. அந்தச் சின்னக் கூட்டத்துக்காரர்கள், அந்தச் சில்லறை மதங்களை ரொம்பவும் தீவிரமாகப் பின்பற்றினாலும் கூட (இப்போது கூட இப்படிப் பல “இஸம்’கள் ‘ஸ்கூல்’களுக்கு ஆள்பலம் கொஞ்சமாக இருந்தாலும், அவர்கள் ரொம்பவும் தீவிரமாக அந்தந்தக் கொள்கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோமல்லவா?) பொதுவில் வைதிக மதம், பெளத்த மதம் என்று இரண்டாகவே பெரிய அளவில் பிரித்து விடும்படியாக இருந்தது.
இந்த ஸநாதன தர்ம வைதிக மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு “ஸ்மார்த்தர்கள்” என்றே பேர். ஸ்மார்த்தர்கள் என்றால் ஸ்மிருதியைப் பின்பற்றுகிறவர்கள் என்று அர்த்தம் ஸ்மிருதி என்றால் தர்ம சாஸ்திரங்கள். வேதத்தில் அங்கங்கே பரவலாகச் சொன்ன தர்மங்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து, இன்னும் அதில் வெளிப்படையாகச் சொல்லாத விஷயங்களையும் அதற்கு அநுஸரணையாகவே சேர்த்து, நன்றாக வகை தொகை பண்ணி, பாகுபடுத்தி, சமூகத்தில் இன்னின்னார் இப்படியிப்படி நடக்கவேண்டும் என்று – ஒரு ஜீவனானது மாதாவின் கர்ப்பத்தில் வைக்கப்படுவதிலிருந்து, அது பிறந்து, வளர்ந்து, வித்யாப்யாஸம் பண்ணி, விவாஹம் செய்து கொண்டு, புத்திரோத்பத்தி பண்ணி, கடைசியில் மரணமடைந்து தஹனம் ஆகிறவரைக்கும் என்னென்ன செய்யவேண்டும் என்று – ‘ரூல்’ களைப் போட்டுக் கொடுப்பது தர்ம சாஸ்திரம்தான். அவையே ஸ்மிருதிகள். அவற்றை பின்பற்றுபவர்களே ஸ்மார்த்தர்கள். இப்போது “ஹிந்து” என்ற பெயரில் சொல்லப்படுகிற வேத மதஸ்தர்களுக்கு ஆதியில் இதுதான் பெயர்.
தர்ம சாஸ்திரங்களில் விஷ்ணுவைத்தான் உபாஸிக்கவேண்டும் என்றோ, சிவனைத்தான் உபாஸிக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. வேதப் பிரதிபாத்யமான [வேதத்தில் சொல்லப்பட்ட] எல்லா தெய்வங்களும் இங்கே சமம்தான். எதை உபாஸித்தாலும் தப்பில்லை. எல்லாவற்றையும் ஒன்றே என்று புரிந்துகொண்டு உபாஸிப்பது விசேஷம். ‘ஆதித்யம்-அம்பிகாம்-விஷ்ணும்-கணநாதம்-மஹேச்வரம்’ என்பதாக ஸூரியன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், பரமேச்வரன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஸ்மார்த்தர்கள் பூஜை பண்ணுவார்கள். ஐந்து மூர்த்திகளை வழிபடுவதால் இதற்குப் ‘பஞ்சாயதன பூஜை’ என்று பேர். இஷ்ட தெய்வம் என்று ஒன்றிடம் அதிகப் பிரீதி வைக்கலாம். ஒரே வீட்டிலேயே அண்ணனுக்கு பரமசிவன் இஷ்ட தெய்வமாயிருக்கும். தம்பிக்கு மஹாவிஷ்ணு இஷ்ட தெய்வமாயிருக்கும். இதற்காக சைவர் – வைஷ்ணவர் என்று இரண்டு மதமாக பிரிந்து போகமாட்டார்கள். சிவ உபாஸனைக்காரர்களும், விஷ்ணு உபாஸனைக்காரர்களும் தனிஜாதியாக இல்லாமல், பரஸ்பரம் விவாஹ ஸம்பந்தமும் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் பொது, வேதம். அதில் சொல்லியிருக்கப்பட்ட கர்மாநுஷ்டானங்கள் எல்லோருக்கும் பொது.
வேதத்தில் எல்லாரும் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணி ஹோம பஸ்மாவை இட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. தர்ம சாஸ்திரங்களிலும் இப்படிச் சொல்லியிருக்கிறது. அதனால் ஆதியில் எல்லா ஸ்மார்த்தர்களும் பஸ்மதாரணம் [விபூதி இட்டுக் கொள்ளுதல்] தான் செய்து கொண்டார்கள் — விஷ்ணுவை இஷ்ட தெய்வமாக உபாஸிக்கிறவர்களும் கூடத்தான். இப்போதும், வைஷ்ணவர்களும், மாத்வர்களும் யாகம் செய்கிறபோது, ஹோம பஸ்மா இட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
நாமம் போடுவது, அதில் பாதம் வைத்துப் போடுவது, பாதம் இல்லாமல் போடுவது இதெல்லாம் பிற்பாடு வந்த வைஷ்ணவ ஆசாரியர்கள் பண்ணின ஏற்பாடுதான் என்று வைஷ்ணவர்கள் சொல்கிற குரு பரம்பரைக் கதைகளிலிருந்தே தெரிய வருகிறது. பிற்பாடு விஷ்ணுவை மட்டும் முழுமுதல் தெய்வமாக வைத்து, அந்த அடிப்படையின் மேல் தனி மதம், தனி ஜாதி என்றே பிரித்தபோது, அதில் சேர்ந்தவர்களுக்கு புது அடையாளம் தரும்படி ஆகிவிட்டது. இதே போல் மத்வாசாரியாரின் மதஸ்தர்களுக்கும் கோபிசந்தனம், சாந்து என்று புதிதாக அந்த ஸம்பிரதாயம் தனி ஸமூகமாக உருவானபோது ஏற்பட்டது. இந்த ஸம்பிரதாயங்களில் பிரிந்து போகாமல் பகவத்பாதர்களை அநுஸரித்து ஆதியான வைதிக வழியிலேயே நின்றுவிட்டவர்களுக்கு வைஷ்ணவர், மாத்வர் என்பது போன்ற பெயர்கள் ஏற்படவில்லை. ஸ்மார்த்தர் என்ற பழைய பெயரே நீடித்தது. அதே போல, ஆதியிலிருந்து, வேதத்திலேயே சொல்லப்பட்டு, வழி வழியாக வந்த பஸ்மதாரணம் ஸ்மார்த்தர்களிடம் நிலைத்து நின்றுவிட்டது. விபூதியை குழைத்துப் போட்டுக்கொள்வதற்குதான் வேதத்திலேயே மந்திரம் சொல்லியிருக்கிறது.
அதாவது, ஸ்மார்த்தர்கள் விபூதி இட்டுக் கொள்வதால், அவர்களெல்லோரும் சைவர்கள் என்று தற்காலத்தில் தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருந்தாலும், வாஸ்தவத்தில் ஸ்மார்த்தர்களின் விபூதி தாரணம் சிவ சம்பந்தம் உடையதல்ல; வேத சம்பந்தம் உடையது என்றே சொல்ல வேண்டும்.
ஸ்ரீ ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்தைத் தனி சம்பிரதாயமாக ஆக்கியதற்கு முந்தி பரம பக்தியோடு விஷ்ணுவையே இஷ்ட தெய்வமாக ஆராதித்த வைதிகர்களும், ஸ்மார்த்தர்களாக இருந்து பஸ்மதாரணம்தான் பண்ணீயிருப்பார்கள். ஸந்நியாஸிக்கு யக்ஞம் பண்ணும் அதிகாரம் இல்லை. அதனால் அவன் ஹோமம் பண்ணி பஸ்மா தரிப்பதற்கில்லை. ஆயினும் விபூதியே இட்டுக் கொள்வான்.
இப்போதும் வைஷ்ணவர்களின் பாஞ்சராத்ர தீக்ஷையில் அவர்கள் ஹோம பஸ்மத்தை இட்டுக் கொண்டாக வேண்டும்.
புத்தர் வேத மதத்தை ஆட்சேபித்தார். யக்ஞாதி கர்மாநுஷ்டானங்கள் கூடாது என்றார். புத்தர் ஈச்வரனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதனால் பெளத்ததில் வைதிக கர்மமும் இல்லை. பக்தியும் இல்லை. அவர் காலத்தில் ஸ்மார்த்தர்கள் ஏராளமாக கர்மாநுஷ்டானம் செய்தார்கள். புத்தர் ஈச்வரனைச் சொல்லவில்லை என்றால், இந்த கர்ம மார்க்கக்காரர்களும், “ஈச்வரன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நமக்கு வேதம் சொன்ன கர்மா இருக்கிறது. அதைச் செய்துவந்தாலே சிரேயஸ்” என்று நினைத்தவர்களாக இருந்தார்கள். இவர்களைப் பூர்வ மீமாம்ஸகர் என்பார்கள். இவர்களுக்குக் கர்மா மட்டும் தான் உண்டு. பக்தியும் கிடையாது, ஞானமும் கிடையாது. பரம ஸத்தியத்தை நினைத்து நினைத்து தியானம் பண்ணுவது, ஆத்ம விசாரம் பண்ணுவது, சகல கர்மாக்களையும் விட்டு விட்டு ஸந்நியாஸியாகி எப்போதும் பரமாத்ம சிந்தனையிலேயே இருப்பது – என்கின்ற அத்வைத ஞான மார்க்கம் இவர்களுக்குப் பிடிக்காது. இந்த பூர்வ மீமாம்ஸகர்களில் குமாரில பட்டர் என்பவர் மஹா பெரியவராக வந்து பெளத்ததைத் தீவிரமாகக் கண்டித்து, வேத கர்மாக்களை நிலைநாட்டினார். பெளத்தம் கர்மாவைச் சொல்லாததற்காக அதை இவர் கண்டித்தார். இதே மாதிரி, பெளத்தம் ஈச்வரனை, பக்தியைச் சொல்லாததற்காக அதை இன்னொரு பெரியவர் கண்டனம் செய்தார். அவர் பெயர் உதயனாசாரியர் என்பது. நியாய சாஸ்திரம் எனப்படும் தர்க்க சாஸ்திரத்தில் அவர் வல்லவர். லோக விவகாரங்களுக்குக் காரணமாக ஈச்வரன் என்று ஒன்று இருந்தேயாக வேண்டும் என்பதை இவர் யுக்தி மூலமாக வாதம் பண்ணி நிலைநாட்டி ஏராளமாக எழுதினார்.
இப்போது பள்ளிக்கூடப் புஸ்தகங்களிலிருந்து ஆரம்பித்து, எங்கேயும் புத்தரைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறதே தவிர குமாரில பட்டர், உதயனாசாரியார் முதலானவர்களின் பேர்கூட ஒருத்தருக்கும் தெரியாதபடி செய்திருக்கிறது! வெள்ளைக்காரர்களின் ஆட்சியின் போது இப்படி வேண்டுமென்றே செய்து விட்டார்கள். அவர்களுக்கு வைதிக மதத்தை எப்படியாவது மட்டம் தட்டி, எல்லாரையும் கிறிஸ்துவ மதத்துக்கு இழுத்து விடவேண்டும் என்பது ஆசை. ‘கிறிஸ்துவ மதத்துக்கு இழுக்க முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை. வைதிகத்தை எப்படியாவது மட்டம் தட்டிவிட வேண்டும். நம்மால் ஆளப்படுகிற இந்த ஹிந்துக்களுக்குத் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பற்றிப் பெருமிதம் இல்லாமல் பண்ணிவிடவேண்டும்’ என்று அவர்களுக்கு எண்ணம். தங்களுக்கு நாகரிகமே தெரியாத ஆதிகாலத்தில் இப்போது தங்களால் ஆளப்படும் ஹிந்துக்கள் மஹோன்னதமான நாகரிகம் படைத்தவர்களாக இருந்தது அவர்களை ரொம்பவும் உறுத்திக் கொண்டிருந்தது. அதனால் இப்படி நினைத்தார்கள். வைதிக மதத்தின் பெருமைகள், அதில் வந்த பெரியவர்கள் ஆகியனபற்றி ஹிந்துக்களுக்கு ஒன்றுமே தெரியாமல் செய்யும் விதத்தில், எலிமென்டரி ஸ்கூல் பாட கட்டத்திலிருந்து ஆரம்பித்து விட்டார்கள்! அதனால்தான் வேத விருத்தமாக [வேதத்துக்கு முரணாக] புத்தர் மதம் ஸ்தாபனம் செய்ததை மட்டும் குழந்தைகள் படிக்கிற காலத்திலேயே அவர்கள் தெரிந்து கொள்ளும்படியாகப் பெரிசாகப் பிரபலப்படுத்தினார்கள். வேதமதத்தில் வந்த மஹான்களைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டார்கள். குமாரில பட்டர் வேதப் பிராமாண்யத்தை [வேதமே பிரமாண நூல் என்பதை]யும், வேத கர்மாக்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, இந்த இனங்களில் மாறுபட்ட பெளத்தத்தைக் கண்டித்தார். உதயனர் பெளத்தர்களின் நிரீச்வரவாதத்தைக் கண்டித்து ஈச்வரன் உண்டு என்பதை நிலை நாட்டினார். கர்மம்-பக்தி-ஞானம் என்ற மூன்றில் இப்படிக் கர்மத்தையும் பக்தியையும் பற்றிய பெளத்தக் கொள்கையை இருவர் நிராகரணம் பண்ணின பிறகே, ஞானமார்க்கத்தை வேத வழிப்படிப் புதுப்பித்துக் கொடுத்த நம் பகவத்பாதாள் அவதாரம் பண்ணினார்.
ஞானரீதியில் பெளத்தமும் அத்வைதமும் ஒரே மாதிரிதான் என்று இவ்விரு ஸித்தாந்தகளையும் சேர்த்து ஆக்ஷேபிக்கிற விசிஷ்டாத்வைதிகள், த்வைதிகள் ஆகியோர் சொல்வதுண்டு. நம் ஆசார்யாளையே மாறுவேஷத்திலிருக்கிற பெளத்தர் — “ப்ரச்சன்ன பெளத்தர்” — என்று அவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இந்த அபிப்பிராயம் சரியே இல்லை. பெளத்தம், அத்வைதம் இரண்டும் லோகத்தை மாயை என்று சொல்வதாலும், அத்வைதத்தில் ரொம்பவும் ஞானநிலை அடைந்தபோது அங்கே ஈச்வர உபாஸனையும் நின்றுவிடுவதாலும் இப்படி ஆசார்யாளையே “மாறுவேஷ பெளத்தர்” என்று சொல்பவர்கள் சொன்னாலும், கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தாலும் இது ரொம்பப் பிசகு என்று தெரியும். லோகம் மாயை என்கிறபோது, ஆசாரியாள் பெளத்தர்கள் மாதிரி எல்லாம் ஒரே சூன்யம் என்று சொல்லிவிடவில்லை. லோகம் தாற்காலிக உண்மைதான். அதையே பரம ஸத்தியமாக எண்ணிவிடக் கூடாது என்றுதான் சொன்னார். மாயையான இந்த லோகம் சூனியத்தில் கரைந்து போய்விடுவதல்ல; மாறாக லோகம் நிரந்தர ஸத்யமல்ல என்று தெரிந்து கொள்கிறபோது, இந்த லோகமும் அதை மாயையாகத் தெரிந்துகொள்கிற நாமும்கூடப் பரம ஸத்யமும் பூர்ணமுமான பிரம்மமே என்று தெரியும் என்றார். பெளத்தர்களின் மோக்ஷமான நிர்வாணம் என்பது எதுவுமே இல்லாத சூனிய நிலை. ஆசார்யாளின் மோக்ஷமான அத்வைதமோ பேருண்மையாகவும், பேரறிவாகவும், பேரானந்தமாகவும், அதாவது ஸத்-சித்-ஆனந்தமாக ஆகிவிடுகிற பரிபூரண நிலை. இந்த இரண்டையும் ஒன்றென்பது தப்பு.
ஆசார்யாளின் பெருமை என்ன? அவர் எல்லா மார்க்கங்களையும், ஸித்தாந்தங்களையும் ஒவ்வொரு ‘லெவலி’ல் ஒப்புக்கொண்டு, இவை எல்லாமும் சேர்ந்து உச்சத்தில் ஞானமார்க்கத்தில் கொண்டு விடுகிறது என்று காட்டியதுதான். பெளத்தர்கள் வேதகர்மாக்களை விட்டவர்கள்; ஆக்ஷேபித்தவர்கள். ஆசாரியாளோ வேத கர்மாக்களை விசேஷமாக ஆதரித்தவர். “வேதோ நித்யம் அதீயதாம்; தத் உதிதம் கர்மஸு அநுஷ்டீயதாம்” என்பதுதான் அவருடைய ‘உபதேச ஸார’த்துக்கு ஆரம்பமே ஆகும். ஞானம் வரும் முன்பு மனஸ் ஒருமைப்பட வேண்டும். இதற்கு பக்தி உபாஸனை அவசியம். பகவானிடம்தான் மனஸ் அப்படியே ஒருமுகப்பட்டு நிற்கும் என்பதால், பக்தியைப் பூர்வாங்கமாக விதித்தார். அதற்கும் முந்திக் கர்மாநுஷ்டானம் ரொம்பவும் அவசியம். வேதம் சொன்னபடி, கர்மாவிலேயே ஈடுபட்டிருக்கிறபோதுதான் சித்தத்தின் அழுக்குகள் போகும் என்றார். கர்மா செய்யச் செய்யத்தான் சித்த சுத்தி ஏற்படும். சித்த சுத்தி ஏற்பட்டபின் செய்கிற பக்தியால் அந்தச் சித்தமானது ஒருமுகப்படும். அப்புறம்தான், இப்படி ஒருமுகப்பட்ட மனம் தன்னையே இழந்து கொண்டு பரம ஸத்தியமான ஞானத்தில் கரைய முடியும் என்று ஆசார்யாள் வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
கர்மாவைச் சொல்லும் பூர்வ மீமாம்ஸை, ஈச்வரனைச் சொல்லும் நையாயிக மதம் [நியாயக் கொள்கை], கர்மாவும் ஈச்வரனுமில்லாத பெளத்தத்தின் தியான விசாரம், எல்லாம் ஆசார்யாளின் அத்வைதத்தில் இருக்கின்றன. ஆனாலும் இவர்கள் ஒவ்வொரு லெலவலை மட்டும் பிடித்துக் கொண்டு, அந்த லெவலோடு நின்று விட்டபோது, ஆசார்யாள்தான் எல்லாவற்றையும் ஸமன்வயப்படுத்தி [இசைவித்துக்] கொடுத்தார். மற்ற ஸித்தாந்தங்கள் ஒரு லெவலில் மட்டும் நின்று விடுவதால் அவற்றோடு சண்டையும் போட்டார். வைதிக கர்மா ஆசார்யாளுக்கு ஸம்மதம்தான். ஆனாலும், ‘பக்தியும் வேண்டாம், ஞானமும் வேண்டாம்’ என்று பூர்வ மீமாம்ஸகர்கள் இருந்ததது அவருக்கு ஸம்மதமில்லை. ‘நீங்கள் செய்கிற கர்மா தானாக பலன் தந்துகொள்ள முடியாது. கர்மா ஜட வஸ்து. ஆனதால் கர்மாவுக்குப் பலன் தருவது ஈச்வரனே. அவன்தான் லோக வியாபாரம் ஒரு ஒழுங்காக நடப்பதற்காக வேதத்தின் மூலம் கர்மாக்களையே கொடுத்திருக்கிறான். எந்தக் கர்மா செய்தாலும், அந்தப் பலனை அவனிடம்தான் ஒப்பிக்க வேண்டும் லோக க்ஷேமத்துக்காக நமக்கு அவன் தந்திருக்கிற கர்மாவை, நாம் நிஷ்காம்யமாக [ஆசை வாய்ப்படாமல்] செய்து, அவனுக்கே அர்ப்பணம் பண்ணவேண்டும், அப்படிப் பண்ணினால்தான் கர்மாவால் நமக்குக் கிடைக்கிற பலனைவிடப் பெரிதாக, இந்தக் கர்மபலத் தியாகத்தால் சித்த சுத்தி என்ற மஹா பெரிய பலன் கிடைக்கும்” என்று மீமாம்ஸகர்களுக்கு ஆச்சர்யாள் எடுத்துச் சொன்னார். அதே மாதிரி, நையாயிகர்களிடமும், “ஈச்வரன் இருக்கத்தான் வேண்டும் என்று தர்க்க ரீதியில் நிரூபித்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அந்தத் தர்க்கம் அநுபவமாக வேண்டும். ஈச்வரனை நேருக்கு நேர் அநுபவிப்பது என்பது, கடைசியில் அவனைத் தவிர வேறொன்றுமில்லை என்ற அநுபவத்தில்தான் கொண்டு விட்டாக வேண்டும். அதாவது, அவனுக்கு பேதமாக நாமும் இல்லை என்கிற அத்வைதாநுபவம்தான் ஈச்வர பக்தியின் முடிவு” — என்று வாதம் பண்ணி ஸ்தாபித்தார்.
“நாம் என்ன, ஸத்தியம் என்ன, துக்கம் என்பது என்ன?” என்றெல்லாம், ஆசாபாசங்களை விட்டு விட்டு, எப்போது பார்த்தாலும் விசாரணை பண்ணிக் கொண்டே, தியானம் பண்ணிக் கொண்டேயிருந்தால், புத்தருக்கு வந்த மாதிரி நமக்கும் ஒரு தெளிவு பிறக்கத்தான் செய்யும். ‘புத்தர் நேராக ஈச்வரனைப் பற்றி சொல்லவில்லையே தவிர அவர் ஈச்வரனை ஆக்ஷேபிக்கவும் இல்லை. ஆனதால், அவர் அத்வைத ஞானம் அடைந்தும் இருக்கலாம். ஆனால் அதை அவருக்கு வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. அவ்வளவுதான்’ என்றுகூடச் சொல்வதுண்டு. ஆனாலும் இப்படித் தியானமும் விசாரமும் எல்லாரும் பண்ணமுடியுமா? அதற்கு ஒரு பக்குவம் வேண்டாமா? வேண்டும். இதற்காகத்தான் வேத தர்மத்தில் கர்மா, பக்தி என்று முதலில் வைத்திருக்கிறது. இதுகளால் சித்த சுத்தியும், ஐகாக்ரியமும் [ஒருமைப்பாடும்] ஏற்பட்ட அப்புறம்தான் ஸத்ய தத்வத்தைப்பற்றி ஞான வழியில் நின்று விசாரம் பண்ண முடியும். கர்மாவை லோக க்ஷேமார்த்தமாகவும், பல தினுசான ஜீவர்களின் பக்குவத்தைப் பொறுத்தும் வர்ண தர்மம், ஆசிரம தர்மம் என்றெல்லாம் வேதமும், ஸ்மிருதிகளும் பிரித்துக் கொடுத்திருக்கின்றன. அதாவது இன்னின்னார் இன்னின்ன மாதிரி செய்தால்தான், அவரவருக்கும் சிரேயஸ், லோகத்துக்கும் க்ஷேமம் என்று ‘அதிகாரி பேதம்’ பார்த்துப் பல கர்மாக்களையும், உபாஸனா மார்க்கங்களையும் பிரித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் புத்த மதம் மாதிரி அலக்ஷ்யம் பண்ணி, வேத கர்மா, உபாஸனை எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, அதிகாரி பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் தியானம்_விசாரம் என்று விதித்தால், லோக காரியம் கெட்டுப் போகும். புத்தர் மாதிரி யாரோ இரண்டொருத்தரைத் தவிர யாருக்கும் தெளிவு உண்டாகிவிடாது. முன்னேயே சொன்ன மாதிரி ஏற்கனவே குமாரில பட்டரும், உதயனாசாரியாரும் பெரிய அளவுக்குச் செய்திருந்த பெளத்த மத கண்டனத்தை ஆசார்யாள் பூர்த்தி பண்ணினார்.
பெளத்தம் என்பது இம் மூவராலும் நலிந்த பிறகு, தேசத்தில் நம் ஆசார்யாளின் வழியே நிலைப்பட்டது. அதாவது ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்கிற ஸநாதன வேதமதம் மட்டுமே மறுபடியும் நிலைப்பட்டு விட்டது. உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டு, ஆசார்யாளால் விஸ்தாரமாக விளக்கி நிலைநாட்டப்பட்ட அத்வைத ஞானம்தான் அதன் உச்சநிலை.
ஆனால் அத்வைதாநுபவம் என்பது எல்லாருக்கும் ஸாத்யமானதல்ல. பெரும்பாலும் பொதுஜனங்கள் வைதிக கர்மாக்களைப் பண்ணிக் கொண்டும் ஈச்வர உபாஸனை செய்து கொண்டுந்தான் இருந்தார்கள். ஆனால், பூர்வ மீமாம்ஸகர்களைப் போல், “கர்மாவேதான் எல்லாமும்; ஸ்வாமி கூட வேண்டாம்” என்று நினைத்து இவர்கள் கர்மா செய்யவில்லை. ஆசார்யாள் காட்டியபடி, ஈச்வரனை ஒப்புக் கொண்டு, ஈச்வரார்ப்பணமாகவே கர்மாக்களைச் செய்தார்கள்.
இப்போது எந்தக் கர்மா செய்தாலும், ஆரம்பத்தில் நாம் அது பரமாத்மாவின் பிரீதிக்காகவே (“பரமேச்வர ப்ரீத்யார்த்தம்”) செய்யப்படுவதாக ஸங்கல்பத்தில் சொல்கிறோமல்லவா? இந்த ஸங்கல்பம் நம் ஆசார்யாள் செய்து கொடுத்ததுதான். அவருக்கு முந்தி அப்படியில்லை. கர்மா பண்ணினால் கிடைக்கிற பலன் நமக்குத்தான் என்றும், அந்தப்பலனை ஈசவரன் தராமல், தானாகவே பெற்றுக்கொண்டுவிடலாம் என்றும் நினைத்துவிடக் கூடாது என்றே ஆசார்யாள் இப்படி வைத்தார். ஸாதாரண கர்மாவிலிருந்து யாக யஜ்ஞம் உட்பட எல்லாவற்றையும் ஈச்வரார்ப்பணம் பண்ண வைத்தார்
ஆதியிலிருந்த வேத மதம், பிறகு வேதத்தை தழுவி ஏற்பட்ட ஸ்மிருதிகளான தர்ம சாஸ்திரங்களை அநுசரித்தபோது ஸ்மார்த்த மதம் என்று பெயர் பெற்றது. இரண்டும் வேறு அல்ல. வேத மதமேதான் ஸ்மார்த்தம். வேதத்தில் கர்மாவானது சித்த சுத்திக்காக ஈச்வரார்ப்பணமாகத்தான் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. பின்னால் வந்த பூர்வ மீமாம்ஸகர்கள்தான் குழறுபடி செய்தார்கள். அதை ஆசார்யாள் சரி பண்ணிவிட்டார். அதாவது ‘ஒரிஜினலா’ன பழைய ஸ்மார்த்த மதத்தையேதான் நன்றாகப் புத்துயிரூட்டி நிலைநாட்டினார்.
இதேபோல, உபாஸனை என்று எடுத்துக்கொண்டாலும் வேதத்தில் விஷ்ணுதான் உசத்தி, சிவன் தாழ்த்தி என்றோ, சிவன்தான் உசத்தி, விஷ்ணு தாழ்த்தி என்றோ இல்லை. வேதத்தில் ஸகல தெய்வங்களையும் ஒரே பரமாத்மாவாகத்தான் ஏற்றத்தாழ்வில்லாமல் சொல்லியிருக்கிறது. ருத்ரத்தில் எல்லாம் சிவஸ்வரூபமே என்று சொல்லியிருக்கும். புருஷ ஸூக்தத்தில் எல்லாம் விஷ்ணுஸ்வரூபமே என்று இருக்கும். இன்னோரிடத்தில் வருணனையே பரமாத்மா என்று சொல்லியிருக்கும். இந்திரனையே பரமேச்வரன் என்று சொல்லியிருக்கும்; அக்னிதான் முழு முதற் கடவுள்; சூரியன் முழுமுதற் கடவுள் __ என்றிப்படி எந்த தெய்வத்தைச் சொல்லும்போதும், வேத ஸுக்தங்கள் அதைப் பரமாத்மாத்வாகவேதான் சொல்லும். முடிவாக, ஒரு ஸத்யம்தான் இருக்கிறது. அதற்குத்தான் ஞானிகள் பல பேர் கொடுத்திருக்கிறார்கள்: ‘ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டது.
வேதத்தை அப்படியே பின்பற்றும் தர்மசாஸ்திரங்களும் (ஸ்மிருதிகளும்), இந்த தெய்வம்தான் பெரிசு என்பதாக சிவனையோ, விஷ்ணுவையோ, அம்பாளையோ, வேறு எந்த தெய்வத்தையோ சொல்லவில்லை.
ஆனாலும், இஷ்ட மூர்த்திக் கொள்கை என்பதாக, அவரவரும் தங்கள் மனஸ் விருப்பத்தோடு எந்த மூர்த்தியில் அன்பாக லயிக்கிறதோ, அந்த மூர்த்தியையே முழுமுதல் தெய்வமாக வழிபடுவதை வேதமும் ஸ்மிருதிகளும் ஆதரிக்கின்றன. இப்படியே ஸ்மார்த்தர்கள் இஷ்ட தேவதையை விசேஷமாக உபாஸிக்கிறபோதே, மற்ற தேவதைகளை நிந்திக்காமல் பஞ்சாயதனமாகப் பூஜித்து வந்தார்கள்.
வேதத்தின் கர்மக் கொள்கை குழறுபடியாகி, “கர்மாதான் எல்லாமும்” என்று பூர்வ மீமாம்ஸகர்கள் வைத்துவிட்ட மாதிரி, வேதத்தின் உபாஸனா மார்க்கமும் பிற்காலத்தில் குழறுபடியாகி, அவரவரும் தங்கள் இஷ்ட தெய்வந்தான் பெரிசு என்று சண்டை போடுகிற ஸ்திதியும் ஏற்பட்டது.
இப்படி கர்மா, பக்தி இரண்டும் குழம்பி, பெளத்தர்களினால் ஞானமார்க்கமும் குழறுபடியான சமயத்தில்தான் ஆசார்யாள் அவதாரம் பண்ணி, எல்லாவற்றையும் சீர்பண்ணி, ஒன்றுக்கப்புறம் ஒன்று என்று வரிசைப்படுத்திக் கொடுத்தார். பழையபடிதான் ஆசார்யாள் சீர் பண்ணிக் கொடுத்தாரேயொழிய தாமாக புது வழி ஒன்றை ஏற்படுத்தவே இல்லை. ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்ற ஸநாதன வேததர்ம வழியில் கல்லும் முள்ளும் மண்டிப் போனபோது கல்லையும் முள்ளையும் அப்புறப்படுத்தி, அந்த ஸ்மார்த்த வழியையேதான் சுத்தப்படுத்திக் கொடுத்தாரேயன்றி, புதிதாக ஒரு வழி போடவில்லை.

வேதம் சொல்கிற இஷ்ட தெய்வ வழிபாட்டு முறையை ஒப்புக்கொண்டு, பிள்ளையாரையே முழுமுதற் கடவுளாக வழிபடும் காணபதர்கள், ஸுப்ரம்மண்யரை அப்படி வழிபடும் கெளமாரர்கள், அம்பாளை வழிபடும் சாக்தர்கள், ஈச்வரனை வழிபடும் சைவர்கள், விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள், ஸூரியனை வழிபடும் ஸெளரர்கள் ஆகிய இவர்களுக்கு, இந்த ஆறு வழிகளை சுத்தப்படுத்தி வைதிகமாக ஆக்கிக் கொடுத்தார். இதனால் தான் அவரை “ஷண்மத ஸதாபகர்” என்பது. இன்னொரு தெய்வத்தை நிந்திக்காமல் தங்கள் இஷ்ட தெய்வத்தை அவரவரும் வழிபடவே ஷண்மத ஸ்தாபனம் பண்ணினார். ஸ்மார்த்தர்கள் யாவரும் பழையபடி — ‘ஆதித்யம் – அம்பிகாம் – விஷ்ணும் – கணநாதம் – மஹேச்வரம்’ என்றபடி — ஐந்து மூர்த்திகளையும் வைத்துப் பஞ்சாயதன பூஜை பண்ணும்படியாகச் செய்தார். அக்னி சம்பந்தமான வைதிக கர்மாநுஷ்டானங்களெல்லாம் ஸுப்ரமண்யருக்குப் போய்ச் சேருகிறது என்பதால், ஷண்மதங்களில் விட்டுப் போன ஸுப்ரமண்யரைப் பஞ்சாயனத்தில் சேர்க்காமல் விட்டு விட்டார் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆதலால் சங்கர சம்பிரதாயம் என்று ஒன்று புதிதாக ஏற்படவே இல்லை. பழைய ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்கிற வேத நெறியேதான், நடுவே சிதிலமடைந்தபோது சங்கரரால் முன்னைவிட ஜீவசக்தியுடன் புத்துயிரூட்டப்பட்டது. ஆகையால், “சங்கர சம்பிரதாயம்” என்று யாராவது சொன்னால் தப்பு; நானே சொல்லியிருந்தாலும்கூடத் தப்பு.
இப்போது எப்படி நம்மில் சிஷ்டர்களாக இருப்பவர்கள், ‘புதிதாக எவரேனும் எதாவது கொள்கையைச் சொன்னால் எடுத்துக் கொள்ளக்கூடாது; மரபுப்படி, சம்பிரதாயப்படி வந்ததா என்று பார்க்கவேண்டும்’ என்கிறார்களோ அப்படியேதான் நம் ஆசார்யாளும் தாம் எழுதிய பாஷ்யம் நெடுகிலும் சம்பிரதாயத்தைப் போற்றி வந்திருக்கிறார். அங்கங்கே, இதுதான் சம்பிரதாயம்; இப்படித்தான் சம்பிரதாயிகர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்; அதனால் இதுவே ஏற்கத்தக்கது என்று ரொம்பவும் மரியாதையுடன் சொல்வார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி, அவர் ‘பழைய மதங்களை அழிக்க வரவில்லை; அவற்றைப் பூர்த்தி பண்ணவே வந்தார்’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆசார்யாளும் பழைய வைதிக ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தை உள்ளபடி ஸ்திரப்படுத்தத்தான் வந்தாரே தவிர, தாமாக ஒன்றை ஸ்தாபிக்கவில்லை. “சங்கர சம்பிரதாயம்” என்று சொன்னால், அதை அவர் அபசாரமாகவே நினைப்பார்.
அவரது முடிந்த முடிவான அத்வைதக் கொள்கையைக்கூட அவர் சம்பிரதாயமாக வந்த உபநிஷத்துக்கள், கீதை, பிரம்மஸூத்திரம் இவற்றின் பிரமாணத்தில்தான் முழுக்க முழுக்க நிலைநாட்டியிருக்கிறாரே தவிர, தம்முடைய சொந்தக் கொள்கை என்று தப்பித் தவறிக்கூடச் சொல்லமாட்டார்.
இதனால்தான் நம் ஆசார்யாளை அநுஸரிக்கிறவர்களுக்குப் புதுப்பெயர் ஒன்றும் ஏற்படாமல் ஸ்மார்த்தர் என்ற பெயரே நின்றுவிட்டது. ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ மத்வர் முதலியவர்கள் தோன்றுவதற்கு முன்பு ஸ்மார்த்தர்களிலேயே விஷ்ணுவை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களும் இருந்தார்கள்.
இதிலே ஒரு வேடிக்கை: ஆசார்யாள் சொன்ன மாதிரி பரதெய்வ நிந்தை பண்ணாமல் பஞ்சாயதன பூஜையுடன் இஷ்ட தெய்வத்தை விசேஷமாக உபாஸிக்கிற அளவுக்குப் பக்குவம் இல்லாதவர்களும் ஸ்மார்த்தர்களில் இருந்திருக்கிறார்கள். அதாவது தங்கள் தெய்வம் ஒன்றே முழுமுதல் தெய்வம் என்று நினைத்தவர்களும், ஃபிலாஸஃபி என்று வரும்போது அத்வைதத்தை ஒப்புக் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் தீவிர வைஷ்ணவர்களும் அத்வைதிகளாக இருந்திருக்கிறார்கள். இது எப்படித் தெரிகிறதென்றால், உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்கிறேன். இப்படிப்பட்ட அத்வைத வைஷ்ணவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் சில பேர் இப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் என்னைத்தான் ஆசார்யராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஸித்தாந்தம் என்ன என்று கேட்டால் அத்வைதம்தான். இவர்கள் நாமம் போட்டுக்கொள்ள மாட்டார்கள். விபூதிக்கு என்ன இருந்தாலும் சிவசம்பந்தம் சேர்ந்துவிட்டது என்பதால் விபூதியும் இட்டுக் கொள்ளமாட்டார்கள். நாமமும் இல்லாமல், விபூதியும் இல்லாமல் கோபி சந்தனம்தான் இட்டுக்கொள்வார்கள். இன்னும் சில பேர் வடகலை, தென்கலை இரு நாமமுமாக இல்லாமல் “கீற்று நாமக்காரர்கள்” என்ற பேரோடு அத்வைதிகளாக இருக்கிறார்கள்! ஆனாலும் அத்வைதிகளான இவர்கள் ஸ்ரீ ராமாநுஜ ஸம்பிரதாயத்தில் வந்த வைஷ்ணவர்களைக் காட்டிலும் வீர வைஷ்ணவர்களாக இருக்கிறார்கள்! ராமாநுஜ – வைஷ்ணவர்கள்கூட சிவன் கோவிலுக்குப் போகிற இந்தக் காலத்திலும், என்னை ஆசாரியராக வைத்துக் கொண்டிருக்கிற இந்த அத்வைத – வைஷ்ணவர்கள் சிவன் கோவிலுக்குப் போவதில்லை! “இதிலிருந்தே என்னை சைவனாகச் சொல்வது எவ்வளவு தப்பு என்று தெரிகிறது பார்!” என்று அந்த ஜப்பான் ப்ரொஃபஸருக்கு எடுத்துக் காட்டினேன். இதேமாதிரி வீரசைவர்களிலும் அத்வைதிகள் உண்டு. தத்துவம், Philosophy என்று வருகிற போது ஆசார்யாளின் அத்வைத ஸிந்தாந்தத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும், உபாஸனை, Theology என்கிறபோது அவர் சொன்ன ஸாமரஸ்யத்தை [ஸமரஸபாவத்தை] ஏற்கமுடியாமல் விஷ்ணுவோ, சிவனோதான் ஒன்றைக் காட்டிலும் மற்றது பெரிசு என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும், பொதுவாக, அத்வைதிகள் என்றால் சைவர் என்ற எண்ணம் ஏற்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. பகவத்பாதாளுக்குப் பிற்பாடு ஸ்ரீ ராமாநுஜாசாரியார் விசிஷ்டாத்வைதத்தைப் பிரசாரம் பண்ணினார். ‘ஜீவனும் பிரம்மமும் ஒன்றாகப் போய் அத்வைதமாகிவிட முடியாது. ஜீவன் தனக்குள் அந்தர்யாமியாக பிரம்மமே இருந்து இயக்கி வைக்கிறது என்பதைக் கொஞ்சம் பேதமாக இருந்துதான் மோக்ஷ நிலையிலும் அநுபவிக்கிறான். பிரம்மம் என்பதும் சங்கரர் சொன்னபடி குணம் குறியில்லாத, காரியமில்லாத நிர்குண வஸ்துவல்ல. அது ஸகுணமானதுதான் [குணத்தோடு கூடியதுதான்]. காரியம் பண்ணுவதுதான். ஜீவனையும் காரியம் பண்ணவைப்பது அந்தர்யாமியாக உட்புகுந்திருக்கிற அதுதான்’ என்ற கருத்துக்களை உடையவர் ஸ்ரீ ராமாநுஜர். இது வரைக்கும், எந்த தெய்வத்தை வழிபடுபவர்களுக்கும் பொதுவான மாதிரி, ஃபிலாஸஃபியாக, தத்வமாக மட்டும் இருக்கிறது. ஆனால் இங்கே அப்படிப்பட்ட ஸகுணப்பிரம்மம் மஹாவிஷ்ணுதான்; சிவனோ வேறு தெய்வமோ இல்லை என்றும் சொல்லி, ஸ்ரீ ராமாநுஜர் ‘தியாலஜி’ப்படி ஒரு குறிப்பிட்ட இஷ்ட தெய்வக்காரர்கள் மட்டுமே விசிஷ்டாத்வைதத்தை ஏற்கும்படிப் பண்ணிவிட்டார்.
ராமாநுஜ ஸித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அதுவரை ஸ்மார்த்தர்களாக இருந்தவர்கள்தான். வைதிக மதம், ஹிந்து மதம் என்பதே அவர் நாள்வரையிலும் ஸ்மார்த்த மதம்தானே? ஆகையினால், விஷ்ணு தான் பரதெய்வம் என்று அவர் ஏற்படுத்திய ஸிந்தாந்தத்துக்குப் போனவர்கள் ஸ்மார்த்தர்களிலிருந்துதானே போயிருக்க வேண்டும்? விசிஷ்டாத்வைத தத்வத்தை (Philosophy) ஏற்றுக் கொண்டு அதில் போனவர்கள் போயிருப்பார்கள். அது தவிர தங்களுடைய இஷ்ட தெய்வமான மஹாவிஷ்ணுவுக்கு உத்கர்ஷத்தை [மேன்மையை]ச் சொல்லியிருக்கிறது என்பதற்காகவே, தத்வத்தைவிட வழிபாட்டுமுறை (Theology)யை முக்கியமாகக் கவனித்தும், விஷ்ணுவை இஷ்ட தெய்வமாகக் கொண்ட பல ஸ்மார்த்தர்கள் ஸ்ரீ ராமாநுஜ சம்பிரதாயத்தைத் தழுவியிருக்கக் கூடும். பிற்பாடு ஸ்ரீ மத்வாசாரியார், ஸ்ரீ வல்லபாசாரியார், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் முதலானவர்கள் வந்து, தத்வரீதியில் வெவ்வேறு ஸித்தாந்தங்களைப் பிரசாரம் செய்தார்கள். அந்தர்யாமியாக ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கிறதைக் கூடச் சொல்லாமல். இரண்டும் அடியோடு வேறானவை என்றே மத்வர் ஸித்தாந்தம் செய்தார். அதுதான் த்வைதம். வல்லபாசாரியார், சைதன்யர் ஆகியவர்களின் ஃபிலாஸஃபியைச் சுருக்கமாகச் சொல்லிப் புரியவைப்பது சிரமம். அந்த ‘டிஸ்கஷன்’ இப்போது வேண்டாம். மொத்தத்தில் நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், இந்த மூன்று பேருங்கூட தத்வம் என்று ஒன்றை வைக்கிறபோதே வழிபாட்டிலும் “இதுதான் தெய்வம்” என்று ஒன்றை வைத்துவிட்டார்கள். மத்வ மதத்திலும் விஷ்ணுதான் பரமாத்மா. மற்ற இருவருக்கும் பிரம்மம் அல்லது பரமாத்மா என்பது க்ருஷ்ணன்தான். அதனால், இதெல்லாமும் விஷ்ணுவை உபாஸிக்கும் மதங்கள்தான். இந்த சம்பிரதாயங்களுக்கும் ஸ்மார்த்தர்களிலிருந்துதானே போயிருக்கிறார்கள்? இவர்களிலும் தத்வத்துக்காகப் போனவர்கள் மட்டுமில்லாமல், தங்களுடைய விஷ்ணுவுக்கு உத்கர்ஷம் தந்திருக்கிறது என்பதற்காகவே போன ஸ்மார்த்த வைஷ்ணவர்களும் இருந்திருப்பார்கள் அல்லவா?
ஆக, ஸ்மார்த்தர்களிலிருந்துதான் பிற்பாடு ராமாநுஜ ஸித்தாந்தம், மத்வ ஸித்தாந்தம், வல்லப ஸித்தாந்தம், சைதன்ய சம்பிரதாயம், (நிம்பார்க்கர் என்று ஒருத்தர் உண்டு – அவரும் கிருஷ்ண பக்திக்காரர்தான். அவருடைய ஸித்தாந்தம்) ஆகிய இத்தனை வைஷ்ணவ பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் போயிருக்கிறார்கள். இதனால் ஸ்மார்த்தர்களாகவே தங்கிவிட்டவர்களில் விஷ்ணுவை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் குறைந்து போய், ஈச்வரனை [சிவனை] இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களே அதிகமாகியிருப்பார்களல்லவா? இதனால்தான் அத்வைதிகள் சிவமதஸ்தர் என்று நினைக்கும்படியாகி விட்டிருக்கிறது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சி தொடங்கி பத்திரங்கள் எழுதும் நாளிலிருந்தே, ஸ்மார்த்தர்கள் தங்களை ஸ்மார்த்தர் என்று போட்டுக் கொள்ளாமல் “சிவ மதம்” என்று போட்டுக் கொள்ளும்படியாக ஆகியிருக்கிறது !
ஏதோ இந்தக் காலத்தில், நம் மதத்தைப்பற்றி அடியோடு அறிந்து கொள்ளாத புதுத் தலைமுறை ஸ்மார்த்தர்கள்தான் தங்களை சைவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்லை. போன நூற்றாண்டிலேயே ராஜாங்கத்தில் செல்லுபடியாகிற பத்திரங்களில்கூட இப்படியே குறித்து வந்திருக்கிறார்கள்!
அது மட்டுமில்லை. இதற்கெல்லாம் ரொம்பக் காலம் முந்தி, ராமாநுஜர் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பலப்படுத்திய நாளில், ஸ்மார்த்தர்களில் விஷ்ணு பக்தர்களாக்கப்பட்டவர்களில் அநேகர் அந்த வழியை அநுசரிக்க ஆரம்பித்தபோதே, அத்வைதிகள் என்றால் சைவர்கள் என்று நினைக்கும்படியாக ஆனதாகத் தோன்றுகிறது. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், ஸ்ரீ ஸ்ரீகண்டாசார்யார் என்பவர் ராமாநுஜர் காலத்தை ஒட்டியே வந்தவர் என்று சொல்கிறார்கள். தத்வரீதியில் இவரும் விசிஷ்டாத்வைதம் மாதிரித்தான் சொல்கிறார். ஆனால் முக்தி நிலையைச் சொல்லும்போது அத்வைதத்துக்கு இன்னம் கொஞ்சம் கிட்டே போயிருக்கிறார். உபாஸனா ரீதியில் இவருக்கு சிவன்தான் பிரதானம். ராமாநுஜருக்கு எப்படி நாராயணந்தான் பரமாத்மாவோ, அப்படி இவருக்குப் பரமசிவன்தான் பரமாத்மா. இப்படி இவர் ஒரு சைவ-விசிஷ்டாத்வைத மதத்தை ஸ்தாபித்த போதிலும், ஸ்மார்த்த வைஷ்ணவர்கள் ராமாநுஜ ஸித்தாந்தத்தைத் தழுவிய அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிகமிகக் குறைவாகத்தான் ஸ்மார்த்த சைவர்கள் (அதாவது பரமேச்வரனை இஷ்டமூர்த்தியாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள்) ஸ்ரீகண்டரின் சைவமான ஸித்தாந்தத்தை தழுவியிருக்கிறார்கள். ஏனென்றால், ராமாநுஜருடன் பல வைஷ்ணவர்கள் பிரிந்து போனவுடனேயே, ஸ்மார்த்தர்கள் தங்களை முக்கியமான சைவர்கள் என்றே நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் சைவமான ஸித்தாந்தமாகவே ஒரு மதத்தை ஸ்தாபித்தபோது அதற்கு மாறவேண்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை போலிருக்கிறது. இந்த சைவ விசிஷ்டாத்வைதத்தின் மோக்ஷமும் அத்வைதத்துக்கு கிட்டவே இருந்ததால், தங்களுடைய அத்வைதத்தை விட்டுவிட்டு, அதே மாதிரியான ஸித்தாந்தத்துக்கு ஏன் போகவேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்.
தத்வம் ரொம்பக் கொஞ்சம் பேருக்குத்தான் முக்கியமாக இருப்பது; அப்பீல் ஆவது. பெரும்பாலாருக்கு பக்தியும், உபாஸனா மூர்த்தியும்தான் முக்கியம். அதனால்தான் விஷ்ணு உத்கர்ஷம் கூறப்பட்ட ஸித்தாந்தங்களுக்கெல்லாம் ஸ்மார்த்த மதத்திலிருந்து தீவிர விஷ்ணு பக்திக்காரர்கள் போயிருக்கிறார்கள். இதனாலேயே அத்வைதம் சிவ-உத்கர்ஷத்துக்கு ஏற்பட்டது என்ற அபிப்பிராயம் உண்டாகி, சிவ உத்கர்ஷத்திற்கென்றே ஒரு ஸித்தாந்தம் ஏற்பட்டபோது, அதில் விசேஷமாக ஸ்மார்த்தர்கள், அதாவது ஸ்மார்த்த மதத்திலிருந்த தீவிர சிவபக்திக்காரர்கள் சேராதபடி ஆகியிருக்கிறது. இப்போதுள்ள அடியோடு விஷயம் தெரியாதவர்களோ, அத்வைதிகள் என்றாலே சைவர் என்று நினைத்துவிடுமளவுக்கு ஆகியிருக்கிறது!
(ஸ்ரீ சங்கர)மடங்களில் சந்திர மெளளீச்வர பூஜைதானே நடக்கிறது என்றால், அது ஒரு காரணத்தினால் ஏற்பட்டது. ஆசார்யாளுக்கு பரமேச்வரனே ஐந்து ஸ்படிக லிங்கங்களைக் கொடுத்து, அவற்றின் ஆராதனை லோகத்தில் எந்நாளும் இருக்கும்படியாகப் பண்ணவேண்டும் என்றார். அவற்றில் இரண்டை ஆசார்யாள் சிருங்கேரியிலும், காஞ்சீபுரத்திலும் உள்ள மடங்களில் வைத்தும், பாக்கி மூன்றை நேபாளம், கேதாரிநாத், சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆலயங்களில் வைத்தும், அவிச்சின்னமாக (முறிவு படாமல்) ஆராதனை நடக்க வழி செய்தார். சங்கர மடம் என்றால், எல்லா மடங்களிலும் யூனிஃபார்மிடி இருக்க வேண்டாமா? அதனால் மடங்களில் சந்திர மெளளீச்வர பூஜையை வைத்தார். ஆசார்யாளுக்கு லக்ஷ்மீ நிருஸிம்ம மூர்த்தி ஒரு சாளக்ராமம் கொடுத்தார். ஈசுவரனே தம் ஸ்வரூபமான ஸ்படிக லிங்கம் தந்ததுபோல, நரஸிம்மமூர்த்தி தன் ஸ்வரூபமான சாளக்ராமத்தைக் கொடுத்தார். ஸ்படிக லிங்கத்தைப் பூஜையில் வைத்த மாதிரியே இந்த சாளக்ராமத்தையும் ஆசார்யாள் மடத்துப் பூஜையில் வைத்திருக்கிறார்.

அவருக்கு சிவ – விஷ்ணு பேதம் கொஞ்சமும் கிடையாது. சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் ப்ரதிஷ்டை பண்ணின மாதிரியே, பத்ரிநாத்தில் நாராயணனைப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார். அங்கேயே ஒரு மடம் ஸ்தாபித்திருக்கிறார். அவர் மடங்களை ஸ்தாபித்த இடங்களில் புரி ஜகந்நாதமும், த்வாரகையும் விசேஷமான கிருஷ்ண க்ஷேத்ரங்களே. அவர் சிவ ஸஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணவில்லை; விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துக்குத்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். சிவகீதை, தேவிகீதை எல்லாம்கூடப் புராணங்களில் இருந்தாலும் கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த பகவத் கீதைக்குத்தான் நம் ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஈசுவரனையும் அம்பாளையும் போலவே மஹாவிஷ்ணு, ராமர், கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி எல்லாரைக் குறித்தும் ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார். இதையெல்லாம் சரியாக கவனிக்காததால், அவரை சைவர் என்று சொல்லிவிடுகிறார்கள்.
ஆசார்யாளின் மடத்தில் நடப்பது வெறும் சிவபூஜை மட்டுமில்லை. ஆரம்பத்திலேயே சொன்னேனே, அந்தப் பஞ்சாயதன பூஜைதான் மடத்துப் பூஜையும். ஆசாரியாள் ஈச்வரனும் அம்பாளும் சேர்ந்து எடுத்த அவதாரம்; உமாமஹேச்வரர்களே அவருக்கு கைலாஸத்தில் பஞ்சலிங்கங்களைக் கொடுத்தார்கள்; ஆகையால் அவர் நடுநாயகமாக ஈச்வரனையும் அம்பாளையும் மடத்துப் பூஜையில் வைத்தார். ஆனாலும் சிவ பஞ்சாயதன முறைப்படி மஹாவிஷ்ணு, கணபதி, சூரியன் ஆகியோர்களும் பூஜையில் இடம் பெற்றிருக்கிறார்கள். இங்கே சிவராத்ரி, நவராத்ரி மாதிரி, ராமநவமி, கோகுலாஷ்டமி, நரசிம்ம ஜயந்தி முதலானவற்றையும் கொண்டாடுகிறாம்.
மடத்தில் ஸ்ரீமுகம் அனுப்பும்போது என்ன சொல்கிறோம்? இன்ன காரியத்தைக் குறித்து, “க்ரியதே நாராயண ஸ்மிருதி:” என்று ஸ்ரீமுகத்தில் சொல்கிறோம். அதாவது எந்தப் புஸ்தகத்துக்கு அல்லது காரியத்துக்கு ஆசீர்வாதமாக இந்த ஸ்ரீமுகம் அனுப்பப்படுகிறதோ அது நல்லபடியாக நடப்பதற்காக நாராயணனை ஸ்மரிக்கிறோம் என்று சொல்கிறோம். சிவனை ஸ்மரிப்பதாகச் சொல்லவில்லை. நீங்கள் எனக்கு நமஸ்காரம் பண்ணும்போது என்ன சொல்கிறேன்? “நாராயண நாராயண” என்றுதான் சொல்கிறேன். எல்லா சங்கராசாரியர்களும் இப்படித்தான் சொல்கிறோம். இது ஆதி ஆசார்யாளே பண்ணின ஏற்பாடு. ஜகத் பரிபாலன கர்த்தா என்கிற ரீதியில், லோகத்தில் நல்லது நடப்பதற்கெல்லாம் நாராயணனைத்தான் ஸ்மரிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்.
இத்தனை நாழி, அத்வைதிகள் என்றால் சைவர் என்று அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பதைப் பற்றிச் சொன்னேன். இதற்கு நேர்மாறாக சங்கரர் மஹாவிஷ்ணுவைத்தான் உபாஸித்தவர் என்கிறவர்களும் உண்டு. அவர்கள் இந்த நாராயண ஸ்மரணம், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் முதலான விஷயங்களை தங்களுக்கு ஆதரவாகச் சொல்கிறார்கள். இதோடுகூட, ஆசார்யாள் பாஷ்யங்களில் இந்த லோக வியவகாரத்தை எல்லாம் செய்யும் ஸகுணப் பிரம்மமான ஈச்வரனைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறபோது, அவனை ‘நாராயணன்’ என்றே சொல்லியிருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார்கள்.
ஆனாலும் ஆசாரியாளை சைவர் என்றோ, சாக்தர் என்றோ, வைஷ்ணவர் என்றோ எப்படிச் சொன்னாலும் அது அவரை குறுக்குகிற காரியந்தான். அப்படியெல்லாம் ஏதோ ஒரு தெய்வத்துக்கு மட்டும் அவர் பக்தர் என்பது சரியில்லை ஏன் அத்வைத பாஷ்ய கிரந்தங்களில் ஸகுணப் பிரம்மம் என்றால், நாராயணன் என்று சொன்னார் என்றால், முத்தொழில் என்று பிரித்துக் கொடுக்கிறபோது மஹாவிஷ்ணுவுக்குத்தான் லோக ரக்ஷணப் பொறுப்புத் தந்திருக்கிறது. எவன் ரக்ஷிக்கிறானோ அவனையே பிரபஞ்சத்தையெல்லாம் நடத்தும் சக்தியாகச் சொன்னார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆசாரியாள் சைவர், வைஷ்ணவர், சாக்தர் எல்லாம்தான். அவருடைய சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்மார்த்தர்களான நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஸ்மார்த்தர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். அவர் மாரியம்மனும், ஐயனாரும், நவக்கிரஹங்களும் உள்பட அத்தனை தெய்வங்களையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து கீர்த்தனங்களால் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அத்தனை தெய்வங்களுமான ஏக பரமாத்மாதான் நமக்கு உபாஸ்யம். அதை அத்தனை ரூபங்களிலும் ஏற்றத்தாழ்வில்லாமல் பாவிக்கிற மனப்பான்மை நமக்கு வரவேண்டும். ஆதிகாலத்திலிருந்து அத்வைதிகளிலேயே வீரசைவர்களும், வீரவைஷ்ணவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று சொன்னாலும், அது ஆசார்யாளின் மனோபாவத்துக்கும், அவர் நமக்கு போட்டிருக்கிற ஆக்ஞைக்கும் சம்மதமானதல்ல. அத்வைதிகளிலேயே அப்பைய தீக்ஷிதர் பரம சாம்பவராகவும் [சிறந்த சிவபக்தராகவும்] லீலாசுகர் பரம பாகவதராகக் கிருஷ்ணனிடமே பரம ப்ரீதியும் வைத்திருந்த மாதிரி, நாம் ஏதாவது ஒரு இஷ்ட தெய்வத்திடம் அதிக பக்தி வைப்பதில் தப்பில்லை. ஆனால் இந்த மஹான்கள் எப்படி இன்னொரு தெய்வத்தை நிந்திக்காமலே தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பக்தியில் உருகினார்களோ, அப்படி நாமும் எந்த ஒரு தெய்வத்தையும் நிந்திக்காமல், நம் இஷ்ட மூர்த்தியிடம் விசேஷ பக்தியோடு இருக்கவேண்டும்.
வேத மதம் என்ற ஸ்மார்த்த மதத்தின் மூலக் கொள்கைகளில் இது ஒன்று: இன்னொரு தெய்வத்தைத் தாழ்த்திச் சொல்லித் தன் தெய்வம்தான் தெய்வம் என்று சொன்னால் அப்போது அது வேத ஸம்மதம் உடையதாகாது. இந்த ‘டெஸ்ட்’படிப் பார்த்தால் ஆசார்யாளை அநுஸரிக்கிற ஸ்மார்த்த மதஸ்தர்களான நாம்தான் பூரண வைதிகர்கள். இப்படி நான் சொல்லவில்லை. நான் சொன்னால் அது தப்பு. இது என் சம்பிரதாயம் என்பதற்காக உயர்த்திச் சொல்கிறேன் என்றாகிவிடும். ஆதலால் இது என் அபிப்பிராயமில்லை. மூன்று பூர்வகாலப் பெரியவர்களுடைய அபிப்பிராயம் இப்படி இருந்திருக்கிறது.
த்வைதி, அத்வைதி, விசிஷ்டாத்வைதி எல்லோருக்கும் மூல புருஷரான வியாஸ மஹரிஷியின் அபிப்பிராயமே இப்படித்தான் இருந்திருக்கிறது. பாரதத்தில் அநுசாஸனபர்வாவில் பீஷ்ம பிதாமஹரின் வாயிலாக அவர் பிராசீனமாக இருந்து வந்த ஐந்து மதங்களின் பெயரைச் சொல்லும்போது, ஸாங்க்யம் யோக: பாஞ்சராத்ரம் வேதா: பாசுபதம் ததா என்கிறார். இவற்றில் ‘வேதா:’ என்பதுதான் வேத மதம்; பிற்காலத்திய ஸ்மார்த்த மதம். அதில் ஸகல தெய்வ ஆராதனையும் உண்டு. கர்மம்-பக்தி-ஞானம் மூன்றும் உண்டு. தத்வங்களை ஆராய்ச்சி பண்ணுகிற ஸாங்கியமும் அதில் அடக்கம். யோக ஸாதனையும் அதிலே தியானத்தின் அங்கமாக வருவதுதான். இது அத்தனையும் ஆசார்யாளினால் புத்துருப்பெற்ற ஸ்மார்த்த ஸம்பிரதாயத்திலும் உண்டு. ‘சிவானந்த லஹரி’, ‘ஸெளந்தர்ய லஹரி’, ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் குறித்த ‘ஷட்பதி’ ஸ்தோத்திரம் முதலானவற்றில் நம் அத்வைத ஆசாரியாளே த்வைதம், விசிஷ்டாத்வைதம் முதலியவற்றையும் ஒவ்வொரு நிலையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். “யோக தாராவளி” என்ற நூலில் ஒரேடியாகப் பாதஞ்ஜல யோக நுட்பங்களைக் கொட்டியிருக்கிறார். ஸாங்கியர்களின் இருபத்து நாலு தத்துவங்களையும் அவர் பாஷ்யங்களின் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். வியாஸர் சொன்ன ஐந்தில் வேதம், ஸாங்கியம், யோகம் போக மீதமுள்ளவை பாஞ்சராத்ரமும், பாசுபதமும். பாஞ்சராத்ரத்தில் விஷ்ணு மட்டும்தான் தெய்வம் என்று சொல்லியிருக்கிறது. பாசுபதத்தில் பரமேச்வரன் மட்டும்தான் தெய்வம் என்று சொல்லியிருக்கிறது. இவை மற்ற தெய்வங்களை மட்டம் தட்டி இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கு மட்டும் உத்கர்ஷம் சொல்கின்றன. அதனால் இவை வேத மதத்தைச் சேர்ந்தவை ஆகா என்று வியாஸாசார்யாள் அபிப்பிராயப்படுகிற மாதிரிதான் “வேதா:” என்று வேத மதத்தைச் சொல்லிவிட்டு, ‘பாஞ்சராத்ரம், பாசுபதம்’ என்று இவற்றை வேதத்திற்கு வேறான சம்பிரதாயங்களாகத் தனியே சொல்லிவிட்டார். ஸாங்கியம் வெறும் தத்வ வாதம்தான். அதில் கர்மாவுமில்லை; பக்தியுமில்லை; அநுபவ ஞானத்துக்கும் வழியில்லை. யோகம் ரொம்பவும் உசந்தது என்றாலும், அதிலும் வைதிக உபாஸனை, கர்மா எல்லாம் பூர்ணமாக வரவில்லை; ஞானம் என்று எடுத்துக்கொண்டாலும், உபநிஷத்தில் சொன்ன மாதிரி அதில் பரமாத்ம தத்வத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லவில்லை. அதனால்தான் இந்த நாலுமே ஏதோ ஒரு தினுசில் அபூர்ணம் என்பதால், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்ட பூர்ணமான வேதத்திலிருந்து அவற்றைப் பிரித்துச் சொல்லிவிட்டார்.
வியாஸர் மஹரிஷி, பரமஞானி. அவர் அபிப்பிராயம் இப்படி என்றால், இன்னொருத்தர் கந்தர்வராக இருந்து அம்பாள் சாபத்தால் மநுஷ்யராகப் பிறந்து மிகப் பெரிய சிவபக்தராகி ஈஸ்வரனை ஸ்தோத்திரம் பண்ணி அதன் பலனாக ஈச்வரனையே அடைந்து நித்ய கைலாஸ வாஸம் செய்தவர். அவருக்கு புஷ்பதந்தர் என்று பேர். அவர் பண்ணின ஸ்தோத்திரத்துக்கு “சிவ மஹிம்ன ஸ்தோத்திரம்” என்று பேர். ‘சிவனின் மஹிமையைக் கூறும் துதி’ என்று அர்த்தம். புனாவுக்கு அப்புறம் கொஞ்சம் வடக்கே போய்விட்டால் போதும். வடஇந்தியா முழுக்க பக்தர்கள் என்றால் சிவ மஹிம்ன ஸ்தோத்திரம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். (நான் எத்தனையோ சொல்லியும், புஸ்தகமாகவே அச்சுப்போட்டுக் கொடுத்தும்கூட, நம் பக்கங்களில் திருப்பாவை..திருவெம்பாவையோ, திருமுருகாற்றுப்படையோ, விநாயகர் அகவலோ அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.) அந்த “சிவ மஹிம்ன” ஸ்தோத்திரத்திலேயும், வியாஸர் சொன்ன மாதிரிப் பல மதங்களைப் பற்றிய பிரஸ்தாவம் வருகிறது. மஹாபாரத சுலோகத்தை நினைத்துக்கொண்டே புஷ்பதந்தர் பாடின மாதிரி இருக்கிறது:
த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதி மதம் வைஷ்ணவம் இதி
‘த்ரயீ’ என்றால் வேதமதம். அப்புறம் ஸாங்கியம், யோகம். பசுபதி மதம் என்பதுதான் மற்ற தெய்வங்களை மட்டம் தட்டி சிவனே பெரிசு என்கிற பாசுபத மதம். இதே மாதிரி பரதெய்வ நிராகரணம் பண்ணி விஷ்ணு உத்கர்ஷம் சொல்வது வைஷ்ணவம். வியாஸர் இதைத்தான் பாஞ்சராத்ரம் என்றார்.
வியாஸரும் சரி, புஷ்பதந்தரும் சரி இந்த ஐந்து மதங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவை ஒரே சமுத்திரத்தில் கொண்டு சேர்க்கிற ஐந்து நதிகள் மாதிரி என்று சிறப்பித்தே பேசுகிறார்கள். ‘எங்கள் தெய்வம்தான் உசத்தி’ என்கிறவர்களையும் ஒப்புக் கொண்டுதான் பேசியிருக்கிறார்கள். ஆனாலும்கூட இந்த மனோபாவம் வேதமதத்துக்கு உகந்ததல்ல என்பதால், இவற்றை வேதத்திலிருந்து வேறாகவே சொல்லியிருக்கிறார்கள். புஷ்பதந்தர் விஷயத்திலே இது ரொம்பவும் ரஸமாயிருக்கிறது. ஏனென்றால் அவரே பரம சாம்பவர்தான். சிவ மஹிமைதான் அவருடைய ஸ்தோத்திரத்தின் விஷயம். ஐந்து மதங்களும் பரமேச்வரன் என்கிற ஒரே ஸமுத்திரத்தில் கலக்கும் நதிகள்தான் என்றே இந்த ச்லோகத்தில் சொல்லியிருகிறார். அப்படியிருந்தும் பசுபதி மதமான சைவமே நம்முடைய ஸநாதன தர்மமான வேதமதம் என்று அவர் சொல்லவில்லை. எதையும் தள்ளாததுதான் வேதமதம். எல்லாவற்றையும் கொள்ளுவதுதான் வேதமதம் என்பதால், இப்படி அதைப் பாசுபதத்துக்கு வேறானதாகச் சொல்லியிருக்கிறார்.
மூன்றாமவர் ஒரு கவி. மும்மதஸ்தருக்கும் முக்கியஸ்தரான வியாஸர் வாக்குக்கு ஒரு மதிப்பு உண்டு என்றால், சைவரான புஷ்பதந்தரே சிவனை மட்டும் சொல்லும் மதத்தை வேதத்துக்கு வேறாகச் சொல்வதில் ஒரு விசேஷம் உண்டென்றால், எந்த மதத்தையும் சேராமல், எந்த தெய்வத்தையும் பெரிசு சின்னது என்று சொல்லாமல், நடுநிலைமையிலிருந்து பார்க்கிற கவி வாக்குக்கும் ஒரு அலாதிச் சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு கவியின் கருத்தை இங்கே பார்ப்போம். அந்தக் கவி யார்? நைஷதம் என்கிற நள சரித்திரத்தை எழுதிய ஸ்ரீஹர்ஷர். ரொம்பவும் காவிய ரஸம், இலக்கியச் சுவை நிரம்பிய ஒரு கட்டத்தில் உபமானம் சொல்கிறபோது அவரும் ஐந்து மதப் பிரஸ்தாவம் பண்ணுகிறார்.
தமயந்திக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது. அவளுக்கு நளன்மேல்தான் பிரேமை. ஸ்வயம்வரத்துக்கு வந்துள்ள நளனுக்கே மாலை போடவேண்டும் என்பது அவளுடைய உத்தேசம். தமயந்தியின் மேல் இந்திரன், வருணன், அக்னி, யமன் ஆகிய நாலு தேவர்களுக்குங்கூட ஆசை. அவள் தங்கள் பத்னியாக வேண்டும் என்று ஆசை. இவளுக்கோ நளனிடம்தான் பிரியம் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களும் (அவர்களின் ஒவ்வொருவரும்) தத்ரூபம் நளனைப் போலவே வேஷம் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். ஐந்து நளன்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் – ஸ்வயம்வர மண்டபத்திலே. எது நிஜ நளன் என்று தமயந்தி எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?
இந்த இடத்திலேதான் ஸ்ரீஹர்ஷர் ஐந்து மதங்களுக்கு நடுவே ஸத்யதரமான அத்வைதம் இருக்கிற மாதிரி, ஐந்து நளன்களுக்கிடையே இருந்த ஸத்யமான நளனைப் புரிந்து கொள்ள முடியாமல் தமயந்தி திகைத்து நின்றாள் என்கிறார்: பஞ்சம கோடி மாத்ரே…. மதானாம் அத்வைத தத்வ இவ ஸத்யதரேபி லோக:
‘தரம்’ என்றால் ஒப்பிட்டு உயர்த்தி கூறுகிற comparitive degree. மற்ற நாலு மதங்களும் தப்பானவை என்று கவி சொல்லவில்லை. வியாஸர், புஷ்பதந்தர் மாதிரி இவரும் அவற்றை ஸத்தியமானவை என்று ஒப்புக் கொள்கிறார்.ஆனாலும் அவற்றோடு ஒப்பிட்டு, அவற்றினும் ஸத்தியத்தில் உயர்ந்தது அத்வைதமே என்பதால் “ஸத்யதர அபி அத்வைத” என்று அதைச் சிறப்பித்துச் சொன்னார். எப்படி நம் ஆசார்யாள் ஸத்யத்திலேயே மூன்று தினுசு பிரித்தாரோ* அப்படியே ஸ்ரீஹர்ஷரும் சாதாரண ஸத்யம், உத்தமமான ஸத்யம் என்று பிரித்து, பாரதத்தில் சொல்லப்பட்ட ஐந்து மதங்களில் மற்ற நாலும் ஸாதாரண ஸத்தியம், அத்வைதமே உத்தம ஸத்தியம் என்கிறார்.
பாரதத்தில், பீஷ்ம வசனத்தில் “அத்வைதம்” என்று இல்லை. “வேதா:” என்றுதான் இருக்கிறது. ஆனாலும் விஷ்ணுதான் தெய்வம், சிவன்தான் தெய்வம் என்று கட்சி கட்டினால், அந்த மதம் வேதத்துக்கு வேறானது என்கிற அபிப்பிராயம் அங்கு வந்து விட்டது. புஷ்பதந்தர் வாக்கிலும் இதே கருத்து வந்திருக்கிறது. அங்கும் “த்ரயீ” என்று வேதத்தைச் சொல்லியுள்ளதே தவிர, “அத்வைதம்”, என்றில்லை. ஆசார்யாளுக்குப் பிந்தி சைவம், வைஷ்ணவம் என்று ஒன்றைத் தாழ்த்தி இன்னொன்றை உயர்த்திச் சொல்கிற மதங்கள் வந்துவிட்ட நிலையில், அத்வைதிகளின் ஸ்மார்த்த மதம்தான் எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிற பூர்ண வேதமாக ஆகிவிட்டது. அதனால்தான் ஸ்ரீ ஹர்ஷர் ‘வேதமதம்’ என்று போடுவதற்குப் பதில் ‘அத்வைதம்’ என்றே போட்டு விட்டார்!
ஒரு பக்கத்தில் அத்வைதிகள் சைவர்கள் என்ற தப்பபிப்பிராயம் வந்து கொண்டிருந்தாலும், பிற்கால ஆசார்யர்கள் அத்வைதத்துக்கு மாறான ஸித்தாந்தங்களை ஏற்படுத்திய நாளாக அத்வைதந்தான் பூர்ணமான வேதமதம் என்கிற ஒரு அபிப்பிராயமும் இருந்திருக்கிறது. அத்வைதிகளுக்கே ஸ்மார்த்தர் என்ற பொதுவான ஆதிப் பெயர் நீடித்து வந்திருப்பது இதற்கு ஒரு அத்தாட்சிதான்.
ஸ்மார்த்தர் என்ற வார்த்தைக்கு ‘அத்வைத ஸித்தாந்தத்தை மேற்கொண்டவர்’ என்றோ, ‘சங்கரரை அநுஸரிப்பவர்’ என்றோ root meaning இல்லை.; அர்த்தமில்லை. பூர்ண வைதிகமான தர்மசாஸ்திர ஸ்மிருதிகளைப் பின்பற்றுபவர் என்றுதான் அர்த்தம். இதே மாதிரி சர்மா, சாஸ்திரி முதலான பொதுப்பேர்களும் முக்கியமாக ஸ்மார்த்தர்களுக்குத்தான் நீடித்திருக்கிறது. ஆசார்யாள் தோன்றுவதற்கு ரொம்பவும் பூர்வ காலத்திய சாஸ்திரங்களிலிருந்தும் ‘சர்மா’ என்பதே பிராம்மணனுக்குரிய ஜாதிப் பெயர் என்று தெரிகிறது. பிராம்மணனை ‘சர்மா’ என்றும், க்ஷத்ரியனை ‘வர்மா’ என்றும் சொல்வது பிராசீனமான வேதமத வழக்கு. ரவிவர்மா என்று சைத்ரிகர் இருந்தார் என்றால் அவர் க்ஷத்ரியர் என்று அர்த்தம். இப்போதும் ஒரு பிராம்மணப் பிள்ளைக்கு உபநயனம் ஆனால், தனது வேதசாகையையும், ஸூத்திரத்தையும், கோத்திரத்தையும் சொல்லி அவன் நமஸ்காரம் பண்ணும்போது, “என்ன சர்மன்?” என்று கேட்கிறோம். “இன்ன சர்மன்” என்றே அவன் பெயரைச் சொல்கிறான். ஐயங்கார், மாத்வர் எல்லோருக்கும் இப்படித்தான். ஆனாலும் எப்போதும் தன் பேரின் பின்னாடி ஜாதிப் பெயராக சர்மா போட்டுக் கொள்கிறவன் பெரும்பாலும் அத்வைதிதான். இது, இவன்தான் பூர்ணமாக வேத மதஸ்தன் என்று காட்டுகிறது.
‘சாஸ்திரி’ என்றால் ‘சாஸ்திரத்தை அநுசரிப்பவன்’. சாஸ்திரம் என்றால் வேத – தர்ம சாஸ்திரங்கள்தான். இந்தப் பெயரையும் அத்வைதியான ஸ்மார்த்தன்தான் போட்டுக்கொள்கிறான்.
விதிவிலக்காக, அபூர்வமாக ஒரு மத்வரோ, வைஷ்ணவரோ சர்மா என்று போட்டுக் கொள்ளலாம். ஆனால் D.S. சர்மா, ரைட் ஆனரபிள் சாஸ்திரி என்கிற மாதிரி பேரைச் சொன்னாலே அவர்கள் ஸ்மார்த்தர்கள்தான் என்று எடுத்துக்கொள்கிறோம்.

ஒருத்தர் ராமாநுஜ ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர், அல்லது மத்வ ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர், அல்லது தமிழ் தேசத்திலுள்ள சைவ ஸித்தாந்த மடங்களுக்கு மூல புருஷராக இருக்கப்பட்ட மெய்க்கண்டாரைச் சேர்ந்தவர் என்றால், அது ஒருத்தருடைய பிறப்பையும், இந்த வழிகளில் ஒன்றில் அவருக்கு இருக்கிற நம்பிக்கையையும் மட்டும் குறித்த விஷயமல்ல. ஐயங்காருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன், ராவ்ஜியின் புத்திரன், சைவ மடாலயத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் மட்டும் ஒருத்தன் அந்த சம்பிரதாயத்தை அநுசரித்தவனாக ஆகிவிடமாட்டான். அந்தக் கொள்கையை மனமார ஏற்றுக் கொண்டு நம்புகிறேன் என்றாலும் அந்த சம்பிரதாயக்காரனாக ஆகிவிடமாட்டான். இப்படி நான் சொல்லவில்லை. அந்த சம்பிரதாயங்களைச் சேர்ந்த ஆசார்ய புருஷர்களே சொல்லுவார்கள். “ஐயங்காராகப் பிறந்தால் மட்டும் போதாது; விசிஷ்டாத்வைதத்தை நம்பினால் மட்டும் போதாது; அப்படி பிறந்த ஒருத்தன் உடம்பிலே சங்க சக்ரங்களை முத்ராதாரணம் பண்ணிக் கொள்ள வேண்டும். மஹாவிஷ்ணுக்குரிய மந்திரத்தை உபதேசம் செய்து கொள்ள வேண்டும். இப்படி ‘ஸமாச்ரயணம்’ செய்து கொண்டால்தான் ஒருத்தன் விசிஷ்டாத்வைதி ஆகிறான்” என்று வைஷ்ணவ ஆசார்யர்கள் சொல்வார்கள். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இப்படி ஒரு முறை ஸமாச்ரயணம் செய்து கொண்டால் போதும். மத்வ ஸித்தாந்தப்படியோ தங்கள் ஆசார்யரைப் பார்க்கிற போதெல்லாம், பஞ்ச முத்ராதாரணம் பண்ணிக் கொள்ளவேண்டும். இவர்களுக்கும் மந்திர உபதேசம் உண்டு. சைவ சித்தாந்தப்படி சூல – இடபக்குறிகளை முத்ராதாரணம் செய்து கொள்வது ‘கம்பல்ஸரி’ இல்லாவிட்டாலும், பஞ்சாக்ஷர உபதேசம் நிச்சயம் பெற்றாக வேண்டும். தீக்கை” என்று இதைச் சொல்வார்கள். “தீக்ஷை” என்பதன் திரிபே அது. இதர ஸம்பிரதாயத்திலும் இப்படி ஏதாவது ஒரு ஸம்ஸ்காரம் செய்யப்பட்டால்தான் ஒருவன் அதைச் சேர்ந்தவனாகக் கருதப்படுவான். பிறப்பும், நம்பிக்கையும் மட்டும் ஒருத்தனை வைஷ்ணவனாகவோ, மாத்வனாகவோ, சைவனாகவோ ஆக்கிவிடாது. அதற்கென்று ஒரு ஸம்ஸ்காரம் செய்து கொண்டாக வேண்டும். இது அந்தந்த ஆசார்யர்களே சொல்வது.
அப்படியானால், நாமம் போட்டுக் கொள்பவர்களிலும், விபூதி இட்டுக் கொள்பவர்களிலும், ஸமாச்ரயணம், முத்ராதாரணம், தீக்ஷை முதலியன பெறாதவர்களாகப் பல பேர் இருக்கிறார்களே, இவர்களை என்ன சம்பிரதாயத்துக்காரர் என்று சொல்வது?
இவர்கள் எல்லாரும் ஸ்மார்த்தர்கள்தான். இது ரொம்பப் பேருக்கு தெரியாத விஷயம்.
இப்போது ஒருவன் ஹிந்துவாக இருக்கிறான். அவன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறுகிறான். எப்படி மாறுகிறான்? அந்த மதத்துப் பாதிரி ஞான ஸ்நானம் (Baptism) என்று பண்ணி வைக்கிறார். அது பண்ணப்பட்டால்தான் இவன் கிறிஸ்துவனாகக் கருதப்படுவான். இல்லாவிட்டால் ஹிந்து தானே?
இப்படியே சிவ தீக்கை அல்லது ஸமாச்ரயணம் அல்லது முத்ராதாரணம் செய்யப்பட்டால்தான் ஒருத்தன் சைவ ஸித்தாந்தியாகவோ ஸ்ரீ வைஷ்ணவனாகவோ மாத்வனாகவோ ஆகிறான்.
கிறிஸ்துவ மதத்துக்கு போகிறவன் நம் வேத சாஸ்திரங்களை விட்டுவிட்டுப் போகிறான். அத்வைதம் தவிர மற்ற ஸித்தாந்தங்களுக்குப் போகிறவன், வேத சாஸ்திரங்களையும் வைத்துக் கொண்டே அந்த ஸித்தாந்தத்துக்குப் போகிறான். இந்த ஸம்பிரதாயத்து ஆசார்யர்களும் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் பிரமாணமாக ஒப்புக்கொண்டவர்கள்தாம். ஆனாலும் அவற்றுக்கும் அதிகமாகச் சில சடங்குகளைப் பண்ணச் சொல்கிறார்கள். அதைப் பண்ணினால்தான் ஒருத்தன் வைஷ்ணவனாகவோ, சைவனாகவோ, மாத்வனாகவோ ஆனதாக அர்த்தம்.
அல்லாது போனால் அவன் ஸ்மார்த்தன்தான்; அதாவது சங்கர பகவத் பாதாளைச் சேர்ந்தவன்தான் என்று சொல்லிவிடலாம். இபபடிச் சொல்லி நான் ஏகப்பட்ட பேரை என் சம்பிரதாயத்துக்கு வளைத்துக் கொள்கிறேனா என்ன? அத்வைதி என்பவனுக்கு ஏதாவது புது ஸம்ஸ்காரம் பண்ண வேண்டும் என்று ஆசார்யாள் சொல்லியிருந்தால் நான் சொல்வது தப்புதான். ஆனால் ஆசார்யாள் அப்படிச் சொல்லவே இல்லை. அத்வைதி என்று ஒரு மதஸ்தனை அவர் பிரிக்கவே இல்லை. அநாதிகாலமாக வந்த ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தவராகவேதான், பூர்ண வைதிக மதஸ்தராகவேதான் தம்மை அநுஸரிப்பவர்களை வைத்து விட்டார். அத்வைதிக்குத் தனி ஸம்ஸ்காரம் எதுவும் வைக்கவில்லை. ஆகையால் வேறாகப் புது ஸம்ஸ்காரமாகாத எல்லோரும் அவரைச் சேர்ந்தவர்கள்தான்.
வேதத்தில் இந்த தீக்ஷை, முத்ராதாரணம், ஸமாச்ரயணம் எதுவும் சொல்லியிருக்கவில்லை. நேராக வேதத்தில் அதிகாரம் உள்ள மூன்று வர்ணங்களுக்கு, அந்த அதிகாரத்தைப் பெறுமுன்னர் உபநயனம் பண்ணி காயத்ரி உபதேசம் பண்ணவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறது. பிரம்ம – க்ஷத்ர – வைச்யர்களுக்கு உபநயனந்தான் சொல்லியிருக்கிறது. நாலாவது வர்ணத்துக்கு அதுவும் இல்லை. அதுவும் இல்லாமலே அவனை வேத மதஸ்தனாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆசார்யாளும் இதே வழிமுறையைத்தான் வைத்துக்கொண்டார். புதிதாக எந்த ஸம்ஸ்காரத்தையும் சொல்லவில்லை.
புதிதாக நமக்கென்று ஒன்றும் இல்லையே என்று ஸ்மார்த்தர்கள் குறைப்பட்டுக் கொள்ளவே கூடாது. வேதத்தில் எது சொல்லியிருக்கிறதோ அது நமக்குப் போதும். ராமசந்திரமூர்த்தியும், க்ருஷ்ண பரமாத்மாவும் முத்ராதாரணம், ஸமாச்ரயணம் பண்ணிக் கொண்டதாகவோ, சிவ தீக்ஷை எடுத்துக் கொண்டதாகவோ ராமாயண, பாகவதாதிகளில் சொல்லியிருக்கிறதோ? இல்லை. அவர்கள் அவதார புருஷர்களானதால் அவர்களுக்கு இவை இல்லை என்று அந்த ஸித்தாந்திகள் சொன்னால், அது வாதத்துக்கு சரியாக வராது. ஏனென்றால் ராமாயணத்திலே ராமர் தம்பிகளோடு கூட வேதாத்யயனம் பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது1. உபநயனமானால்தான் அத்யயனம் பண்ண முடியும். அதனால் அவருக்கு உபநயனம் ஆனது தெரிகிறது. இப்படியே பாகவதத்திலும் கிருஷ்ண வஸுதேவரும் தேவகியும் காராக்ருஹத்திலிருந்து விடுதலையாகி வந்தவுடன் உபநயனம் பண்ணினார்கள் என்று சொல்லியிருக்கிறது2. அப்புறம் கிருஷ்ணர் ஸாதாரணப் பசங்களைப் போலவே, ஸாந்தீபனி என்ற பிராம்மணரிடம் குருகுலவாஸம் பண்ணி, வேதத்தை அத்யயனம் பண்ணினதாக இருக்கிறது. அவதார புருஷர்களுக்கு இதெல்லாம் மட்டும் என்னத்துக்கு? நினைத்த மாத்திரத்தில் அவர்களே சகல வேத சாஸ்திரங்களையும் தெரிந்துகொள்ள முடியாதா? ராமர் விசுவாமித்ரரிடமிருந்து எதற்காக அஸ்திர சஸ்திர அப்யாஸம், பலை, அதிபலை மந்திரங்கள் முதலானதுகளைக் கற்க வேண்டும்? ஆகையால் மநுஷ்யர்கள் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பதற்கு வழிகாட்டியாகத்தான் அவர்கள் உபநயனம் செய்து கொண்டு, அத்யயனம் பண்ணினார்கள் என்று அர்த்தமாகிறது. அவர்கள் பண்ணினதே நமக்குப் போதும். வேதத்திலும், அதை அநுசரித்து மஹரிஷிகள் செய்த ஸ்மிருதிகளிலும் இருப்பதற்கு அதிகமாக நமக்கு எதுவும் வேண்டியதில்லை என்று ஸ்ரீ பகவத்பாதாள் வைத்து விட்டார்.
மற்ற ஸம்பிரதாய ஆசார்யர்கள் வேத, சாஸ்திரங்களை ஒப்புக்கொண்டே அதிகப்படி ஸம்ஸ்காரங்களை வைத்தாலும், அவர்கள் கொள்கை காரணமாக, சிவ – விஷ்ணு பேதமின்றி வேத சாஸ்திரங்கள் விதித்திருக்கிற அநேக விஷயங்களை அவர்களுடைய ஸம்பிரதாயக்காரர்கள் விடும்படி இருக்கிறது. ஆகவே புதிதாகச் சிலது சேர்ந்தாலும், பழசான சிலது விட்டுப் போகிறது. நமக்கு இரண்டும் இல்லை என்று திருப்தியாக இருக்கலாம். ‘அநாதியான சாஸ்திரத்துக்கு அதிகமாக எதுவும் சேர்க்காதே! அதில் இருப்பதை ஒன்றைக்கூட விட்டும் விடாதே!’ என்று நம் ஆசார்யாள் வைத்துவிட்டார். இருந்ததையேதான், புதிதாக நடுவில் வந்த தோஷங்களை அகற்றிவிட்டு, பழைய மூல ரூபப்படி சுத்தமாக்கி வைத்தார்.
புதிதாக ஒன்றைச் சொல்ல வரவில்லை; உள்ளதை சரிப்படுத்தித் தரத்தான் அவர் வந்தார் என்பது ஒரு புராண வாக்கிலிருந்தும் தெரிகிறது.
ஆசார்யாளைப் பரமேச்வர அவதாரமாகச் சொல்கிற புராணங்கள், இதிஹாஸங்கள் பல இருக்கின்றன. அவற்றில் “கூர்ம புராண”த்தில், கலியின் கோலாஹலம் முற்றிய சமயத்தில், ஈச்வரன் தானே அவதாரம் பண்ணி அதர்மப் பிரவாஹத்தை அடக்கப் போகிறான் என்று சொல்கிற இடத்தில்,
கரிஷ்ய(தி) அவதாரம் ஸ்வம் சங்கரோ நீல லோஹித: |
ச்ரெளத ஸ்மார்த்த ப்ரதிஷ்டார்த்தம் பக்தானாம் ஹித காம்யயா ||
என்று ச்லோகம் வருகிறது. “ச்ரெளத” என்றால் “ச்ருதி” என்னும் வேதத்தை அநுசரித்தது என்று அர்த்தம். “ஸ்மார்த்த” என்றால் அந்த வேதத்தையே ஸ்மரித்து நினைவுக் குறிப்பாகக் கொண்டு ரிஷிகள் செய்த தர்மசாஸ்திரம். இந்த வேத..தர்ம சாஸ்திரத்தைப் பிரதிஷ்டை செய்வதற்காகவே (“ச்ரெளத ஸ்மார்த்த ப்ரதிஷ்டார்த்தம்”) பக்தர்களுக்கு நல்லது செய்கிற ஆசையினால் (“பக்தானாம் ஹித காம்யயா”) நீலகண்டனான சங்கரன் தானே அவதரிக்கிறான் (“கரிஷ்யத்வதாரம் ஸ்வம் சங்கரோ நீல லோஹித:”) என்று கூர்மபுராண வாக்கு இருக்கிறது. அத்வைதத்தைப் பிரதிஷ்டை பண்ணினார்; ஷண்மதப் பிரதிஷ்டை பண்ணினார் என்றெல்லாம் (இப்போது நாம் ஆசார்யாள் என்ற மாத்திரத்தில் எவற்றை முக்கியமாக நினைக்கிறோமோ அந்த இரண்டையும்) சொல்லாமல், ச்ரெளத ஸ்மார்த்த பிரதிஷ்டையையே இங்கே சொல்லியிருப்பது விசேஷமானது. இப்படியேதான் ஆசார்ய வந்தனமாக இருக்கப்பட்ட ச்லோகத்திலும்,
ச்ருதி-ஸ்மிருதி-புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் ||
என்றுதான் வருகிறது. இங்கேயும் அத்வைதம், ஷண்மதம் இவற்றைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆசார்யாள் வேதத்துக்கும் (ச்ருதி), தர்ம சாஸ்திரங்களுக்கும் (ஸ்மிருதி), புராணங்களுக்கும் உறைவிடமானவர் என்று சொல்லியிருக்கிறது. வேதத்தில் சொன்னதை விதிகளாகச் சட்டம் மாதிரிப் போட்டுக் கொடுப்பது ஸ்மிருதி என்றால், இவற்றையே கதைகளாக மனஸில் ஏற்றுவதுதான் புராணங்களின் லக்ஷ்யம். அப்படிப்பட்ட வேதம், ஸ்மிருதி, புராணம் மூன்றுக்கும் ஆலயமாக இருப்பவர் ஆசார்யாள் என்று சொல்லியிருக்கிறது.
வேத மதம், ஸ்மார்த்த ஸம்பிரதாயம் என்று சொல்லிவிட்டாலே போதும். அதுதான் ஜீவபிரம்ம அபேதத்தைச் சொல்லும் அத்வைதம்; இந்த அத்வைதத்திலேயே ஒரு அங்கமாக வருவதுதான் ஸகல தேவதைகளுக்கிடையும் அபேதத்தைச் சொல்லும் ஷண்மதக் கருத்து என்பதால்தான், இந்த ச்லோகத்திலும், கூர்ம புராணத்திலும் தனியாக அத்வைதம் பற்றியும் ஷண்மதம் பற்றியும் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அத்வைதத்தில் ஷண்மதம் அங்கம்தான். அத்வைதத்தைச் சொன்னால் ஷண்மதத்தைத் தனியாகச் சொல்லக்கூட வேண்டாம்.ஏனென்றால் ஜீவனும் பிரம்மமுமே ஒன்றுதான் என்கிறபோது, ஷண்மத ஏற்பாட்டின் தாத்பர்யமான சகல தெய்வங்களும் ஒன்றுதான் என்பதும் அதிலேயே உட்கட்டை(implied) தானே? ஷண்மதம் எப்படி அத்வைதத்தில் அங்கமோ, அப்படியே அத்வைதம் ஸ்மார்த்தத்தில், வைதிகத்தில் அடக்கம்தான். வேதத்தில் சகல தத்வங்களுக்கும் உச்சாணியில் அத்வைதத்தைத்தான் வைத்திருக்கிறது. சகல தெய்வங்களையும் ஒரே பரமாத்மாவாக ஆராதிப்பதுதான் வேதத்தில் நாம் பார்ப்பது. ஆகவேதான் ஷண்மதம், அத்வைதம் எல்லாமே வைதிகத்தை, ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தைப் பூரணமாக அநுசரிப்பதன்றி வேறில்லை. அநுசரிப்பதென்ன? அதுவேதான் இது. வைதிக மதம் என்றாலே அத்வைதிகளின் சம்பிரதாயந்தான். அத்வைதம் என்றாலே வைதிகம்தான், ஸ்ரீஹர்ஷன் இப்படித்தானே நைஷதத்தில் ‘வேதம்’ என்று சொல்ல வேண்டிய இடத்தில் ‘அத்வைதம்’ என்று சொல்லியிருக்கிறான்?
ஆகையால் த்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவ ஸித்தாந்தம் முதலிய சம்பிரதாயங்களுக்கென்று தனியாக ஏற்பட்ட ஸம்ஸ்காரத்தைச் செய்துகொள்ளாத எல்லாரும் ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களைச் சேர்ந்தவர்கள்தான். வேறு சம்பிரதாயத்துக்குப் போய்விட்டாலும் கூட, அவர்கள் ஆசார்யாளை விட்டு விட்டாலும், ஆசார்யாள் அவர்களை விட்டுவிட்டதாக ஆகாது. அந்த ஸித்தாந்தங்களையும் ஒவ்வொரு லெவலில் ஒப்புக்கொள்வதுதான் ஆசார்யாளின் ஸித்தாந்தம். ஆசார்யாளின் பரமகுருவான (அதாவது குருவுக்கு குருவான) கெளடபாதர், ‘மாண்டூக்ய உபநிஷத் காரிகை’ என்று செய்திருக்கிறார். ‘காரிகை’ என்றால் பாஷ்யத்தில் ஒருவகை… தமிழில்கூட “யாப்பருங்கலம்” என்று ஒரு புஸ்தகம் உண்டு; அதற்கு விளக்கமாக எழுதப்பட்ட ஒரு புஸ்தகத்துக்கு “யாப்பருங்கலக் காரிகை” என்று பெயர் வைத்திருக்கிறது…மாண்டூக்ய காரிகையில் ஒரு இடத்தில் கெளடபாதர், “பல ஸித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று வித்யாஸப்பட்டு பரஸ்பரம் விரோதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நம்முடைய அத்வைதமானது அவற்றில் எதனிடமும் விரோதபாவம் பாராட்டவே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்:
பரஸ்பரம் விருத்யந்தே தைரயம் ந விருத்யதே |
இந்த விரோதமில்லாத மனோபாவம், ஐக்ய உணர்ச்சி, ஸமரஸம்தான் நமக்கு ஆசார்யாள் தந்திருக்கிற வழி. இதை நாம் எந்நாளும் பின்பற்றி வரவேண்டும். வேதமும், ஸ்மிருதிகளும் அப்புறம் ஆசார்யாளும் வகுத்துக் கொடுத்த மாதிரி காரியங்களிலும், அந்தக் காரியங்களுக்கு ஏற்ற ஆசாரங்களிலும் நாம் பிரிந்திருந்தாலும், மனஸால் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சம்கூட பிரிந்திராமல், எல்லாரும் ஆசார்யாளின் குழந்தைகளாகவே அன்போடு ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். இந்த அநுக்கிரஹத்தையும் பண்ணும்படி ஆசார்யாளையே பிரார்த்தனை பண்ணுவோம்.

அத்வைதமோ த்வைதமோ? – அதுவும் பராசக்தி வசமே!
ஜலத்துக்கு நிறைவு சமுத்திரம். டம்ளரில், செம்பில், குடத்தில், அண்டாவில், கிணற்றில், குளத்தில், நதியில் என்று ஒன்றைவிட ஒன்று ஜாஸ்தியாக இருக்கிற ஜலம் கடைசியில் சமுத்திரம் என்று முடிகிறது. இப்படியே ஞானத்துக்கும் கிருபைக்கும் நிறைவான சமுத்திரம் பராசக்தி. நமக்குக் கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அன்பு இருக்கிறது. பிராணிகளுக்கு நம்மைவிடக் குறைவு. நம்மை விட ஜாஸ்தி அறிவுள்ள, ஜாஸ்தி கிருபா சக்தி உள்ள தேவ ஜாதிகள் இருக்கின்றன. நம்மிலேயே மஹான்களானவர்கள் மகா ஞானிகளாக, பரம காருண்யத்தோடு இருக்கிறார்கள். இந்த ஞானம், கிருபை பூரணமாக நிறைந்த இடத்தைத்தான் ஸ்வாமி, பரமாத்மா, பராசக்தி என்று சொல்வது.
எல்லாவற்றையும் அறிகிற ஞானம் அது; அறிகிறது மட்டுமில்லை, அறியப்படுகிற எல்லாமுமே அதுதான். அதற்கு வேறாக இன்னொன்று இருந்து, அதை இது அறிகிறது என்றில்லை. அப்படி இன்னொன்று இருப்பதற்கு இடம் இருந்து விட்டால், இது எங்கும் நிறைந்த பூரணம் ஆகாது. இன்னொன்று துளித்துளி இருந்து விட்டால் கூடச் சரி, இதற்குக் குறைதான் – இது அந்தத் துளியில் இல்லாததால் இது பூரணமில்லை; நிறைந்த ஒரே நிறைவில்லை என்றுதானே அர்த்தம்? இதனால் என்ன முடிவாகிறது என்றால், பரமாத்மாவைத் தவிர அறியப்படுகிற வஸ்து என்று இரண்டாவது பதார்த்தமே கிடையாது என்பதுதான்.
அப்படியானால் இத்தனை ஜீவாத்மாக்கள் வேறு வேறாக இருப்பத்தாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே இது என்ன? இது ஒரு பெரிய வேஷம்தான், மாயா நாடகம்தான். வேஷம் கலைந்து விட்டால், நிறைந்த நிறைவான ஒன்றே ஒன்றுதான். அதுவே அறிவாக நிற்கும். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிற அறிவு ! அது பூரணமானதால், அதனால் அறியப்பட வேண்டிய வஸ்து என்று வேறு எதுவுமே இல்லை. தன்னையே அறிந்து கொண்டிருக்கிற அறிவு அது.
இப்படி இரண்டாவதாக வேறே இல்லாமல் ஜீவாத்மாவை அந்தப் பரமாத்ம சமுத்திரத்தில் கொண்டு போய்க் கரைப்பதுதான் வாஸ்தவமான நிறைவு. இன்னொன்று என்று கொஞ்சம் இருந்தாலும் அதற்குக் குறைவுதானே? இன்னொன்றாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதும் அதுதான். “இதம் ஸர்வம் புருஷ ஏவ” என்று வேதம் சொல்கிறது 1. இப்படி வாஸ்தவமாக நிறைவதுதான் அத்வைதம், அத்வைதம் என்பது.
ஜீவாத்மாவானவன் அத்வைதமாக, பூரணமாக, நிறைந்த நிறைவாக ஆகிவிடுவதைப் பற்றி உபநிஷத்துக்கள் சொல்கின்றன. உபநிஷத்துக்கள் சொல்வதை ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்யாள் பல தினுசான பிரமாணங்களோடு தம்முடைய அநுபவத்தை சேர்த்து, லோகமெல்லாம் கொண்டாடுகிற சாஸ்திரமாக அநுக்கிரஹம் செய்திருக்கிறார். இதை புத்தி ஆராய்ச்சியால் (intellectual-ஆக) அலசிப் பார்த்தலும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும் என்று தெரிகிறது. ஸயன்ஸிலும் இப்போது ‘வேறு வேறு எலிமென்ட்ஸ் இல்லை. எல்லாம் ஒரே எனர்ஜி. மாட்டரும் எனர்ஜியும் கூட வேறு இல்லை’ என்று அத்வைதத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள்.
எல்லாம் சரி, ஒன்றுதான் இருக்க முடியும் என்பது intellectual-ஆக தீர்மானமாகித்தான் விட்டது. ஆனால் – இது ரொம்பப் பெரிய ‘ஆனால்’ – காரியத்தில் துளிக்கூடத் தெரியவில்லையே! இத்தனை வித்தியாஸங்கள் லோகத்தில் பிரத்தியக்ஷமாகத் தெரிந்துகொண்டுதானே இருக்கின்றன? ஒன்றுக்கொன்று இருக்கிற வித்தியாஸங்களைப் பாராட்டினால்தானே வாழ்க்கையே நடக்கிறது? ஒவ்வொரு காரியத்திலும் ஒன்றைச் சேர்க்க வேண்டும், இன்னொன்றை தள்ள வேண்டும் என்றுதானே இருக்கிறது? ‘வித்தியாஸமே இல்லை; எல்லாம் ஒன்று’ என்று சொல்லிக் கொண்டு, சேர்க்கக் கூடாததை சேர்த்தால் காரியமே கெட்டல்லவா போகிறது?
இதனால் என்ன தெரிகிறது? காரியம் என்று இருக்கிற வரையில் ‘அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிப் பிரயோஜனமில்லை என்றுதான் தெரிகிறது! “காரியம் இருக்கிற வரையில் வித்தியாஸம் பார்த்துத்தான் ஆகவேண்டும்; காரியமேயில்லாத நிலையில் எல்லாம் ஒன்றாகவே பிரகாசிக்கும். காரியத்தில் வித்தியாஸம் பார்க்கும்போதுகூட, மனசுக்குள் எல்லாம் ஒன்று என்ற பாவத்தை வைத்துக் கொள்ளு. ‘ஸாரத்தில் எல்லாம் ஒன்றே; அந்த ஒன்றுதான் நாமும்! அதனால் நாம்தான் எல்லாமும்’ என்று எல்லாவற்றையும் ஆத்ம ஸ்வரூபமாகப் பார். அதாவது மற்ற வித்தியாஸங்களைப் பாராட்டினாலும் எல்லாவற்றிடமும் அன்பில் மட்டும் கொஞ்சங்கூட வித்தியாஸமில்லாமல், சகல ஜீவராசிகளிடமும் ஒரே மாதிரி அன்போடு பிரேம ஸ்வரூபமாக இருந்து கொண்டிரு” என்றுதான் ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆகக்கூடி காரியத்தில் அத்வைதம் இல்லை என்றாகிறது.
காரியம் என்றால், நினைப்பது கூடக் காரியம்தான். நினைப்பது மனசின் காரியம். மனசு ஒரு க்ஷணங்கூட நிற்காமல் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கிறது. இது நடக்கிறவரை காரியம் தான், அத்வைதம் இல்லை. ‘நினைக்கிறது’ என்றால், ‘நினைக்கப்படுகிற வஸ்து’, ‘நினைக்கிற வஸ்து’ என்று இரண்டு வித்தியாஸமான வஸ்துக்கள் இருக்கத்தானே செய்கின்றன? இது த்வைதம் தானே? நினைப்பே போய்விட வேண்டும்; மனசு அப்படியே நின்று விட வேண்டும்; அப்படி ஆனால்தான் அத்வைதம் அநுபவமாக ஸித்திக்கும்.
சரி, ஆனால் மனசு நிற்கமாட்டேன் என்கிறதே! என்ன பிரம்மப் பிரயத்தனம் பண்ணினாலும் அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறதே! அது ஏகப்பட்ட வித்தியாஸங்களைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது? வெளிக்காரியத்தை நிறுத்திவிடுவது, மனஸின் காரியத்தையும் நிறுத்திவிடுவது, நிறுத்தாவிட்டால் கூட பிரேம ஸ்வரூபமாகி விடுவது என்றால் இதெல்லாம் நடைமுறையில் (practical-ஆக) கொஞ்சங்கூடச் சாத்தியமில்லாமல் இருக்கிறதே? என்ன பண்ணலாம்?
என்ன பண்ணுவது? எது சாத்தியமோ அதைத்தானே பண்ணமுடியும்? அத்வைதம்தான் பரம தாத்பரியமாக இருக்க முடியும் என்று புத்தியால் ஒத்துக் கொண்டது அப்படியே இருக்கட்டும். அந்த நினைப்பே (conviction-ஏ) உள்ளுக்குள்ளே கொஞ்சம் இருந்து கொண்டிருந்தால், இத்தனை காரியம், இத்தனை ஓயாத எண்ணத்துக்கும் நடுவிலே ஏதோ லவலேசம் ஒரு தெளிவு, சாந்தம் இருக்கும்.
ஆனால் இந்த அல்ப சாந்தி திருப்தி தரமாட்டேன் என்கிறதே! ‘நமக்கு நிறைவில்லாமல் இருக்கிறதே! நிறைந்து விட வேண்டும்’ என்று தாபமாகவும் இருக்கிறது! ஆனால் மனஸையும், காரியத்தையுமோ விடமுடியவில்லையே! அன்புருவாகவும் முடியவில்லை! இப்படி இரண்டுங்கெட்டானாகத்தான் நம்மில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் இருக்கிறோம். இப்போது என்ன பண்ணலாம்? ஒன்றுமே பண்ணாமலிருக்கிற அத்வைதம் அநுபவமாகிற வரைக்கும் ஏதாவது பண்ணத்தானே வேஎண்டும்?
அதனால் மனஸினால் எது சாத்தியமோ அதையே பண்ணலாம். இப்போது லோகம் என்று வேறாகத்தானே ஒன்று தெரிகிறது? அதிலே இருக்கிற பெரிய ஒழுங்கைப் (Order)ப் பார்க்கிறபோது, இதை எல்லாம் ஒரு பேரறிவுதான் உண்டாக்கி, நடத்திவருகிறது என்று தெரிகிறது. உண்டாக்குவது, நடத்துவது எல்லாம் மாயை என்ற சமாசாரம் இப்போது நமக்கு வேண்டாம். அதைச் சொல்லி கொண்டிருப்பதால், நமக்குத்தான் ஒரு பிரயோஜனமும் இல்லையே! ‘லோகத்தை நடத்துகிற ஒரு மஹாசக்தி இருக்கிறது; நமக்கு வேறாக இருக்கிறது; நாம் அற்பசக்தர்; அது மஹாசக்தி; நாம் சிற்றறிவு படைத்த கிஞ்சித்ஞர்; அது பேரறிவான ஸர்வக்ஞ சக்தி’, என்றே வைத்துக் கொள்வோம். ‘வைத்துக் கொள்வது’ என்ன? நாம் இருக்கிற நிலையில் இப்படித்தானே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது? இப்போது அந்தப் பேரறிவைத் தவிர அறியப்படுகிற வஸ்து இல்லை என்ற அத்வைத ஸமாசாரமெல்லாம் நமக்கு வேண்டாம். அது நமக்கு வேறாக இருந்தாலும் நம்முடைய சகல சமாசாரங்களையும் தெரிந்து கொள்கிறது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் அதற்கு தெரியும் என்ற அளவோடு நிறுத்திக் கொள்வோம். ஈ, எறும்பிலிருந்து யானை வரைக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு விதமான புத்தியைக் கொடுத்து, ஆஹாரத்தைக் கொடுத்து, ரக்ஷித்துக் கொண்டிருக்கிற பராசக்திக்கு சகல ஜீவராசிகளின் கஷ்டமும் தெரியத்தானே வேண்டும்? எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிற ஞான சமுத்திரமாக மட்டும் அது இல்லை; கிருபா சமுத்திரமாகவும் அது இருக்கிறது. நம் ஒவ்வொருத்தருக்கும் ஒன்றிடம் அன்பு, பிரியம் இருக்கிறதென்றால், இந்த அன்பு அத்தனைக்கும் மூலம் அந்தப் பராசக்தியிடமிருந்து தானே வந்திருக்கிறது? அதனால் அது கிருபா சமுத்திரமாகத்தான் இருந்தாக வேண்டும். அப்பேர்ப்பட்ட கிருபா சமுத்திரத்திடம், நாம் கஷ்டத்தைச் சொல்லி, குறையைச் சொல்லி, ‘ஐயோ! நிறைந்த நிறைவாக இல்லாமல், நான் இப்படி ரொம்பக் குறைந்து நிற்கிறேனே, என்னை நிறைந்து போகும்படி பண்ணு; குறையே இல்லாதபடி பண்ணு’ என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். இப்படிச் செய்து கொண்டே இருந்தால், அந்தப் பராசக்தி, அல்லது பரமாத்மாவே நமக்கு நிறைவான அத்வைதத்தை அநுக்கிரஹம் பண்ணிவிடும்.
இப்படிப் பிரார்த்திப்பதுகூட இரண்டாம் பட்சம்தான். நம் குறையையெல்லாம் தானாகவே அறிந்திருக்கிற ஞான சமுத்திரமாகவும், நாம் பிரார்த்திக்காமலே நம் குறையைப் போக்கக்கூடிய கருணா ஸமுத்திரமாகவும் இருக்கிற பரமாத்மாவிடம், இப்படி நாம், ‘அத்வைதத்தைக் கொடு, ஞானத்தை கொடு, நிறைவைக் கொடு’ என்று கூடப் பிரார்த்திக்க வேண்டியதில்லைதான். இப்படியெல்லாம் குறைப்பட்டு அழாமல், சந்தோஷமாக பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். ‘நம்மை போல் இப்படி ஓயாமல் சஞ்சலித்துக் கொண்டிருக்காமல், நிச்சலனமாக, பரம சாந்தமாக ஒரு பரமாத்மா இருக்கிறார். அவர் கருணா சமுத்ரமாக இருக்கிறார்’ என்று நினைத்துக் கொள்ளும்போதே, நமக்கு ஆனந்தமாக இருக்கிறதல்லவா? அதனால், அவரை நினைத்துக்கொண்டு, இப்படி ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தால் போதும்! இந்த ஆனந்தத்தைக் கெடுத்துக் கொண்டு, ‘இதைக் கொடு’, ‘அதைக் கொடு’ என்று அழ வேண்டாம். அவரே நமக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டுப் போகிறார்!
இப்போது நமக்கு அவருடைய ஆக்ஞையாக வேதங்கள் போட்டிருக்கிற கடமைகள் இருக்கின்றன. இந்தக் கடமைகளை ஸந்தோஷமாகச் செய்து கொண்டிருப்போம். கடமை எல்லாம் காரியம்தான். காரியம் த்வைதம்தான். அதற்காக அழவேண்டாம். ‘இதுவும் ஸ்வாமி ஆக்ஞைதானே?’ என்று சந்தோஷமாகச் செய்வோம். மனசு ஒடுங்கமாட்டேன் என்கிறதா? பரவாயில்லை; அதற்காக அழ வேண்டாம். ஆனால் எதையாவது, கண்ட கண்டதுகளை நினைத்துக் கொண்டிருக்காமல், பராசக்தியுடைய கிருபையை நினைத்துக் கொண்டிருப்போம். அவளுடைய எல்லையில்லாத அழகை நினைத்துக் கொண்டிருப்போம். இம்மாதிரி காரணமேயில்லாத பக்தியைப் பண்ணிக்கொண்டு, கடமையை சுத்தமாக நடத்திக் கொண்டிருந்தால் அதுவே மனசுக்கு நிறைவாகத்தான் இருக்கும்.
மனஸே இல்லாமற் போய்விட்ட பெரிய நிறைவு – நிறைந்த நிறைவு என்று முடிவான ஒன்று – இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். அதுதான் நம் கைக்கு வராத வஸ்துவாக இருக்கிறதே! அதை நினைத்து இப்போது ஏன் அழவேண்டும்? ஏற்கனவே இருக்கிற குறைகள் போதாது என்று இந்த அழுகையும் ஒரு குறைதான்! எனவே, நம்மைப் பரமாத்மா இப்போது வைத்திருக்கிற ஸ்திதியிலேயே நமக்கு நிறைவாக, ஆனந்தமாக இருக்கிற வேத கர்மாநுஷ்டானம், பக்தி இவை நமக்குப் போதும். வேதத்தில் சொன்னபடி காரியங்களைப் பண்ணி, ஈசுவரார்ப்பணம் பண்ணிக்கொண்டு, அவரை அன்போடு நினைத்து, பக்தி பண்ணி ஆனந்தமாக இருந்தோமானால், நமக்குக் குறைப்பட்டுக் கொள்ளவே தோன்றாது.
இப்படி நாம் ஈச்வராக்ஞையாகக் கர்மாக்களைப் பண்ணிக்கொண்டு, அவரிடம் காரணமேயில்லாத பக்தியை – இது வேண்டும், அதுவேண்டும் என்று அழாமல் ஆனந்தமாகச் செய்கிற பக்தியை – பூரணமாக வளர்த்துக் கொண்டே போவோம். அப்புறம் அவரே, ‘இவனை நமக்கு வேறே மாதிரி தனியாக விட்டுவைத்தது போதும்; நமக்குள்ளேயே கொஞ்சங்கூட பேதமில்லாமல் கரைத்துக் கொண்டு விடுவோம்’ என்று கருணை கொண்டு அத்வைத மோக்ஷம் கொடுத்து விடுவார். அது அவருடைய காரியம். அவருடைய காரியம்தான். அதிலே நாம் செய்கிறதற்கு எதுவும் இல்லை. நம்மால் முடியாத காரியத்தில் நாம் உபத்திரவப் படுத்திக்கொண்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்போது நமக்குத் தெரிவது, நம்மை வேறுமாதிரி விட்டிருக்கிறார் என்பதுதான். இருக்கட்டுமே! அவர் இஷ்டப்பட்டுத்தானே இப்படி விட்டிருக்கிறார்? இப்படி தனித்தனி ஜீவனாக இருக்க வேண்டும் என்று நாமாக உத்தேசம் பண்ணியா இந்த மாதிரி ஆகியிருக்கிறோம்? இல்லை. அவர்தான் தன்னையே நாமெல்லாமாக ஆக்கி, தன்னிடமிருந்தே அவிழ்த்து விட்டாற்போல, இப்படி ஒரு பெரிய நாடகம் போட்டிருக்கிறார். அவர் நமக்கு வேறு மாதிரி நம்மை விட்டிருந்தால், அப்படியேதான் வைத்துக் கொள்வோமே! இந்த ஸ்திதியிலும் நம்மால் முடிகிற காரியம், ஒரே அன்போடு அவரைக் கிருபா சமுத்திரமாக, ஸகல கல்யாண குணநிலயமாக நினைத்து நினைத்து நினைத்து அதிலேயே உருகி உருகி பக்தி செய்து கொண்டு ஆனந்தமாகயிருப்பது. இந்த ஆனந்தம் போதுமே!
ஒரு குணமும், ரூபமும் இல்லாத அத்விதீய நிர்குண ப்ரம்மத்தை மனஸினால் பிடிக்க முடியாது. ஸகுணமான மூர்த்திதான் மனசுக்கு விஷயம். அதனிடம் செலுத்துவதுதான் பக்தி. இது த்வைதம்தான். இருக்கட்டுமே! அணுவுக்குள் அணுவாக இருக்கிறவர், நாம் பக்தி செலுத்துகிற மூர்த்திக்குள் மட்டும் இல்லையா என்ன? அவர் அணுவுக்குள் அணுவாயிருப்பது நமக்கு அநுபவத்தில் ஸித்திக்க வேண்டுமென்றால், அவரே அப்படிப் பண்ணிவிட்டுப் போகட்டும். அவர் ஸர்வ வியாபகர், நீக்கமற நிறைந்தவர் என்றால், நாம் அன்போடு பூஜிக்கிற ரூபத்திலும் இருக்கத்தானே வேண்டும்? அவரே எல்லாமும் என்று நாம் அநுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இதை அவரே தெரிவித்துவிட்டுப் போகிறார்! தெரிவிக்கிறார், தெரிவிக்காமல் போகிறார், அது அவர் காரியம். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நமக்கு இப்போது அவரை பக்தியோடு ஸ்மரித்துக் கொண்டிருக்கிற ஆனந்தமே போதும். இதில் உண்டாகிற நிறைவே போதும்.
அவர் வாஸ்தவத்தில் நிறைந்த நிறைவாக இருக்கட்டும், நிர்குணமாக இருக்கட்டும், அத்வைதமாகத்தான் இருக்கட்டும். அதைப்பற்றி நமக்கு என்ன வந்தது? நம்மால்தான் அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே! வாஸ்தவத்தில் அவர் எப்படியிருந்தாலும், நமக்கு த்வைதமாகத் தெரிகிற இத்தனை அழகு, இத்தனை அன்பு, இத்தனை அறிவு எல்லாமும் அவரிடமிருந்து வந்திருப்பதால், அவரை அத்தனை ஸெளந்தர்யமும், கருணையும், ஞானமும் உள்ள மூர்த்தியாக வைத்துக் கொண்டு பக்தி செலுத்துவோம். பிறகு அவரே அவருடைய வாஸ்தவ ஸ்வரூபத்தைக் காட்டிவிட்டுப் போகிறார். அவருடைய வாஸ்தவ ஸ்வரூபத்தை அவரேதான் காட்டமுடியும். நாம் செய்யக் கூடியது, நம் மனசுக்கு அந்த ஸ்வரூபம் எப்படி வந்தால் ஆனந்தமாக இருக்கிறதோ அப்படி நினைத்து பக்தி செலுத்துவதுதான். அதைச் செய்ய ஆரம்பிப்போம்.
பகவானே கீதையில் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்:
பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யச்சாஸ்மி தத்வத: |
ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விசதே தத் அனந்தரம் || 2
“ஒருத்தன் என்னிடம் பக்தி செலுத்திக் கொண்டேயிருந்தால், நான் யார், எப்படிப்பட்டவன் என்று உள்ளபடி தெரிந்துகொள்கிறான். அம்மாதிரி என்னை உள்ளபடி தெரிந்து கொண்டபின், எனக்கு வேறாக இல்லாமல் என்னுள்ளேயே புகுந்து விடுகிறான்” என்கிறார்.
அவருக்கு வெளியிலே நாம் இருக்கிற மட்டுந்தான் அவரை பார்த்து பக்தி பண்ணலாம். உள்ளேயே புகுந்து விட்டால்? அப்போது அவர் வேறு, நாம் வேறு இல்லை. ஒன்றாக, அத்வைதமாக, ஆகிவிடுவோம். ஆனால் இப்படி ஆவது எப்போது ஸாத்யம் என்றால், ‘என்னிடம் பக்தி செய்து, உள்ளபடி என்னைத் தெரிந்து கொண்டபின் தான்’ என்கிறார். ‘ததோ மாம்’ என்பதில் உள்ள ‘ததோ’, ‘தத:’, என்பதற்குப் ‘பின்னால்’, ‘அப்புறம்’ என்று அர்த்தம். இப்போது பண்ணக் கூடியது பக்தி; அப்புறம் நடக்க வேண்டியது அந்த சமயத்தில் நடக்கட்டும்! ‘பக்தி பண்ணிக்கொண்டேயிரு: அப்புறம் நான் உள்ளபடி எப்படியிருக்கிறேன் என்பதை நானே காட்டி, உன்னை அத்வைதமாக கரைத்துக் கொள்கிறேன்’ என்கிறார்.
‘தத்வத:’, ‘தத்வத:’ என்று இரண்டு தடவை சொல்கிறார். அதாவது ‘பக்தியினால் என்னை உள்ளபடி தெரிந்து கொள்கிறான்; உள்ளபடி தெரிந்து கொண்டபின் நானே ஆகிவிடுகிறான்’ என்கிறார்.
பக்தியினால் அவரை உள்ளபடி தெரிந்து கொள்கிறோம் என்றால், பக்தி செய்கிறபோது அவரை உள்ளபடி தெரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தமாகிறது. பக்தி செய்ததற்குப் பலனாகத்தான் அவர் தமது வாஸ்தவ ஸ்வரூபத்தைத் தெரிவிக்கிறார். அப்படியென்றால், பக்தி செய்யும்போது அவரை நமக்கு உள்ளபடி தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?
‘தெரியாதவரிடம் எப்படி பக்தியை செலுத்துவது?’ என்றால் பக்தி ஆரம்பிக்கிற சமயத்திலும் அவர் அடியோடு தெரியாதவரல்ல; உள்ளபடி, அதாவது அவருடைய பூர்ண ஸ்வரூபம்தான் இப்போது நமக்குத் தெரியவில்லை. அந்தப் பூர்ணம்தான் அத்வைதமாக, ஒரே நிறைவாக, மனசுக்கு எட்டாமல் இருக்கிறது. அந்த வாஸ்தவ ஸ்வரூபம் நமக்குத் தெரியாவிட்டால் போகட்டும். அதனால் பாதகமில்லை. அது தெரிந்து விட்டால் தான் பகவான், பக்தன் என்ற பேதமேயில்லையே! அப்புறம் பக்திக்கு இடம் ஏது? பக்திக்கு விஷயம் அபூர்ணமாகத்தான் இருக்க முடியும். பக்தன் வேறு, பகவான் வேறு என்கிறபோதுதான் பக்தி உண்டு. அதாவது பக்தியின்போது பக்தனையும் தாமேயாகக் கரைத்துக் கொள்ளாத மாதிரிதான் பகவான் இருக்கிறார். அந்த அளவுக்கு அபூர்ணமாகத்தான் இருக்கிறார். அவர் பக்தன் மனஸுக்குப் பிடிபடுவதாலேயே அபூர்ணம்தான். இருந்துவிட்டுப் போகட்டும். நம்மையும் அதற்குள்ளேயே கரைத்து கொண்டு விட்ட பூர்ணத்தை நாம் நினைக்காததால் பரவாயில்லை. நினைக்க முடியாததை எப்படி நினைப்பது? ஆனாலும், அந்த பூர்ணத்தையே கொஞ்சம் அபூர்ணமாக்கி, அனந்த கல்யாண குண நிலயமாக, ஒரே அழகும், கிருபையுமாக ஒரு ஸ்வரூபத்தை நம் மனஸினால் நினைத்துப் பார்க்க முடிகிறதல்லவா? இந்த ஸ்வரூபத்திடம் பக்தி பண்ணி, நெக்குருகி நெக்குருகி ஆனந்திக்க முடிகிறதல்லவா? இம்மாதிரி பக்தி பண்ணினால் அப்படியே அவர் பரம அழகோடு கிருபையோடு வருகிறார். பிறகு வாஸ்தவ ஸ்வரூபத்தைத் தானே பிரகாசித்துவிட்டுப் போகிறார்; அவரோடு நம்மை அபேதமாக ஆக்கிக் கொள்கிறார்.அதெல்லாம் அவர் வேலை.
பக்தி செய்கிறபோது, நாம் நினைப்பது அவருடைய வாஸ்தவ ஸ்வரூபத்தை இல்லைதான். ஆனால் அந்த யதார்த்த ஸ்வரூபத்தை அறிய இந்தப் பக்தியை விட்டால் வேறு வழியில்லை.
‘பக்த்யா மாம் அபிஜானாதி’: ‘பக்தியினால் என்னை அறிந்துகொள்கிறான்’. ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்வது மட்டுமில்லை – ‘ஜானாதி மட்டுமில்லை; அபிஜானாதி – நன்றாக, முழுக்க, அதாவது வாஸ்தவ ஸ்வரூபத்தையே அறிந்து கொண்டு விடுகிறான். பிறகு ஒன்றாகி விடுகிறான்.
அது பிற்பாடு நடக்க வேண்டிய கதை. இப்போது பரமாத்மாவை வேறாகவே வைத்து பக்தி செய்வோம். நிறைந்த நிறைவான முழு ஸ்வரூபமாக இல்லாமல் ஸகுணமாகவே பக்தி செய்வோம். இதில் நமக்குக் கிடைக்கிற நிறைவிலேயே திருப்தியாக இருப்போம்.
அத்வைத சாஸ்திரங்களில்கூட, “ஈச்வர அநுக்ரஹாத் ஏவ பும்ஸாம் அத்வைத வாஸனா” என்று சொல்லியிருக்கிறது. ஈச்வர அநுக்ரஹத்தால்தான் ஒருத்தனுக்கு அத்வைத வாஸனை, அத்வைதத்தில் ஒரு ருசி, பிடிமானமே உண்டாகும் என்று அர்த்தம். இப்படி ஈச்வரன்தான் ஒரு ஜீவனுக்கு அத்வைதத்தில் ருசியை உண்டாக்குகிறான் என்றாலே, அப்படி ஒருத்தன் இந்த ஜீவனுக்கு வேறாக உட்கார்ந்திருக்கிறான் என்று ஆகிவிடுகிறது! ஈச்வரன் தனக்கு வேறாக எதுவுமே இல்லை என்ற பாவத்திலேயே இருந்தால், எப்படி, எதனிடம் கருணை கொண்டு அநுக்ரஹம் பண்ண முடியும்? தனக்கு வேறாக இன்னொன்று இருப்பதாக நினைக்கிறபோது தானே அவன் அநுக்ரஹம் என்ற ஒன்றைச் செய்யவே இடம் ஏற்படுகிறது? ஆகையினால், இந்த மாயா நாடகத்தில் ரொம்பவும் வேடிக்கையாக, ஜீவாத்மா மாதிரி இருக்கிற நாம் மட்டும்தான் நமக்குப் பரமாத்மா வேறு என்று நினைக்காமல், அந்தப் பரமாத்மாவும் இப்படி நம்மை வேறாக நினைத்து விளையாடுவதாக ஆகிறது! ‘இந்த ஜீவன் தானாக அத்வைதத்துக்கு ஆசைப்படவில்லை; ஈச்வரன்தான் அந்த ஆசையை உண்டாக்குகிறான்’ என்றால் ஜீவனுக்கு வேறுமாதிரி அவன் இருக்கிறான்; அப்புறம் வேறாக இருக்க வேண்டாமே என்ற ஆசையை ஜீவனுக்கு அநுக்ரஹம் பண்ணுகிறான் என்றுதானே அர்த்தம்? அநுக்ரஹம் பண்ணுகிறவன், அநுக்ரஹத்தைப் பெற்றுக் கொள்கிறவன் என்று இரண்டு பேர்வழிகள் இருந்துவிட்டால் த்வைதம்தான். ‘அநுக்ரஹம் பெறுவதற்காக ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு அதைச் செய்கிறேன்’ என்று ஈச்வரனே வேறு மாதிரி இருக்கிறபோது, அவனை வேறாகவே நினைத்து பக்தி செய்வதில் பிசகே இல்லை.
அநுக்ரஹம் செய்வதற்காக அவன் வேறு மாதிரி இருக்கிறான். அத்வைத வாஸனையையும் அவனே ஏற்படுத்துகிறான் என்றபின், அந்த அநுக்ரஹ மூர்த்தியே அத்வைத அநுபவத்தையும் கொடுத்துவிட்டுப் போகட்டுமே! வாஸனையை உண்டாக்கினவன்தான், அதைப் பூர்த்தி பண்ண முடியும். பூர்த்தி பண்ணுவதற்காகத்தானே வாஸனையை உண்டாக்குகிறான்? இப்படி ஒரு நல்ல ஆசையை உண்டாக்கினவன் அப்புறம் கைவிட்டு விடுவானா? தான் ஆரம்பித்த காரியத்தை அவனே செய்து முடித்துக் கொள்கிறான். முடிக்கிறான், முடிக்கவில்லை. அது அவன் சமாசாரம். அதில் நம் காரியம் எதுவும் இல்லை.
நம் காரியம் அவனை ஸகுணமாக உபாஸிப்பது. இதனால் அவனுக்குக் குறை உண்டாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டாம். அவனேதான் சொல்கிறானே, “முதலில் நீ என்னை என்னவென்று நினைத்து பக்தி பண்ணினாலும் அப்படியே ஒரு மாதிரி இருப்பேன். அப்புறம் வாஸ்தவத்தில் நான் என்னவோ அதுவாக நானே பிரகாசித்துவிடுவேன்” என்கிறானே!
∗ ∗ ∗
பிரகாசிப்பது அவர் காரியம். அவரை நாம் பிரகாசிக்கப் பண்ண முடியாது. முடியாததற்கு நாம் பிரயத்தனப்படுவது வியர்த்தம்தான்; இருக்கிற குறையை ஜாஸ்தியாக்கிக் கொள்வதுதான்.
அவனைத் தவிர வேறு அடியோடு இல்லை என்பது அத்வைதம். உயிர் என்று, ஜீவாத்மா என்று ஒன்று இருந்தாலும், உயிருக்குயிராக, அந்தர்யாமியாக அவன் ஒருத்தனே இருக்கிறான் என்பது விசிஷ்டாத்வைதம். அவன் வேறு, நாம் வேறுதான்; ஆனால் அவன்தான் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான் என்பது த்வைதம். த்வைதம்தான் நமக்கு நன்றாகத் தெரிகிறது. தெரிந்ததைப் பிடித்துக் கொண்டோமானால், மேலே மேலே தெரிந்து கொள்ள வேண்டியதை அவனே தெரியப்படுத்துவான். அப்போது அணுவுக்குள் அணுவாக, உயிருக்கு உயிராக அவனை அநுபவிப்போம். அப்புறம் நாம் அநுபவிக்கிறோம், அவனை அநுபவிக்கிறோம் என்ற வித்தியாசம் கூட இல்லாமல், அத்வைதமாகி விடுவோம். இதெல்லாம் பரமாத்மாவின் அநுக்கிரஹத்தினால் நடக்கவேண்டியவை. நம்மால் நடத்திக் கொள்ள முடிவதாகத் தெரிவது, கடமையைப் பண்ணுவது; கூடிய மட்டும் நம்முடைய ஆசைக்காக இல்லாமல், ஈசுவர ஆக்ஞை இப்படி என்று காரியம் பண்ணுவது; அவனிடம் பக்தியோடு இருப்பது; இதுதான். ஸ்வாமியை நினைக்காமல், வெறுமே ‘அன்புருவமாக இரு’, ‘பிரேமஸ்வரூபமாக இரு’ என்றால், நம்மால் முடியவில்லை. காரியம் உள்ள மட்டும் கோபமும் த்வேஷமும் வரத்தான் செய்கின்றன, ஆனால் அன்புருவான ஸ்வாமியிடம் நாம் அன்பு வைத்து, காரியங்களை அவருக்கே அர்ப்பணம் செய்யத் தொடங்கினால், தானாகவே எல்லாரிடமும் அன்புமயமாகிறோம். இந்த அன்பே பெரிய ஆனந்தம், நிறைவு.
மனஸை ஆடாமல் நிறுத்தி, அத்வைதமாக ஸத்யத்தை அநுபவிக்க முடியாத நாம், ‘நீ வேறு, நான் வேறு’ என்றே த்வைதமாக பக்தி பண்ணி, அந்த ஸந்தோஷத்திலேயே திருப்தியாக இருப்போம். அப்புறம் அவனே விசிஷ்டாத்வைதமாக உயிருக்குயிராகப் பிரகாசிக்கட்டும்; அல்லது அத்வைதமாக ஆக்கிக் கொள்ளட்டும்.
முக்கியமாக ஒரு சரீரம்தான் நம்மை அவனுக்கு வேறு மாதிரி ஆக்கியிருக்கிறது. இந்த சரீரத்துக்குள் அந்தர்யாமி என்றுகூட அவனை வைத்துக் கொள்ளாமல், சரீரத்தோடு நின்று, வேறு வேறாகவே இருந்து விட்டால் த்வைதம். அப்படி த்வைதமாக இருந்தால்கூட, அழகுப் பிரவாஹமாக, கருணா ஸமுத்திரமாக ஒரு பராசக்தியை நினைத்து பக்தி செய்ய முடியும்; அதிலிருந்து கிடைக்கிற ஆனந்தத்தைப் பெறமுடியும். ஆகையினால், உயிர் – உயிருக்குயிர் என்ற பேதம் அடிப்பட்டுப்போன அத்வைதத்துக்கோ, ‘உயிர் நாம், உயிருக்குயிர் அவர்’ என்ற விசிஷ்டாத்வைதத்துக்கோ தவிக்காமல், த்வைதமாகவே, ‘நாம் இப்படி உடல் எடுத்திருக்கிறோம்; இந்த உடம்புதான் நாம்; இதை வைத்துக்கொண்டும் அந்தப் பரமாத்மாவை, பராசக்தியை நினைத்து ஆனந்திக்க முடிகிறதோ இல்லையோ? இப்படியே தான் இருப்போமே ! இந்த உடம்பு என்ன, இன்னும் புழு உடம்பு வந்தாலும் வந்துவிட்டுப் போகட்டுமே! அந்தப் புழு அவனுக்கு வேறாகவே இருந்தாலுங்கூட அவனை நினைக்க முடியுமானால், அவன் அதை மோக்ஷ லோகத்தில் சேர்த்துக் கொள்வானானால், அப்படித்தான் வேறாகவே ஆனந்தமாக இருந்துவிட்டுப் போவோமே! என்று நம்மைத் திருப்தர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாதிருக்க வரம் தரவேண்டும்
என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்ன மாதிரி, பகவத் ஸ்மரணம் எப்போதும் இருக்கவேண்டும் என்பது தான் விஷயம். அது இருப்பதே அலாதி ஆனந்தம். இந்த ஆனந்தம் நம் அஞ்ஞான நிலையிலேயே காரிய சாத்தியமாக இருக்கும் போது, ‘உடம்பு இருக்கிறதே, மனசு இருக்கிறதே, இதெல்லாம் தொலைந்து ஆத்மா மட்டும் பிரகாசிக்கவில்லையே!’ என்று துக்கப்பட வேண்டாம்.
அப்பர் ஸ்வாமிகள் பக்தர். ஆதலால் அவர் இப்படிச் சொன்னது பெரிசில்லை. ஞான மார்க்கத்துக்கு, அத்வைதத்துக்கு பரமாசாரியாளாக இருக்கிற நம் சங்கர பகவத்பாதர்களே, ‘சிவாநந்த லஹரி’யில், ‘நான் புழுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! இல்லை, கொசுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! அதனாலெல்லாம் என்ன மோசம் போய்விட்டது? இல்லை, ஒரு மாடாகத்தான் ஜன்மா எடுத்தால் என்ன? உன்னுடைய பாதத்தை ஸ்மரிக்கிற பரமானந்த வெள்ளத்தில் மட்டும் ஹ்ருதயம் தோய்ந்து கிடக்குமானால், அப்போது எந்த உடல் வாய்த்தால்தான் என்ன?” என்கிறார்.
நரத்வம் தேவத்வம் நகவன ம்ருகத்வம் மசகதா பசுத்வம் கீடத்வம்…..
கீடம் – புழு. ‘கீடத்வம்’ தான் அப்பர் சொன்ன ‘புழுவாய்ப் பிறக்கினும்’. மசகதா – கொசுத்தன்மை; Mosquito இதிலிருந்து வந்ததுதான். கொசுவாக இருந்துங்கூட பக்தி பண்ணமுடியுமானால், அந்த ஜன்மா எடுக்கக்கூட பயப்படவேண்டாம்.
மநுஷ்ய உடம்பாக இருந்தாலும், அதை வைத்துக் கொண்டே ஆனந்தமாக பக்தி பண்ணிக்கொண்டு, ஸமஸ்த ப்ராணிகளிடமும் நிறைந்த அன்போடு கர்மாவைச் செய்யமுடிகிறபோது, ‘உடம்பு வேண்டாம், புனர் ஜன்மா வேண்டாம்’ என்றெல்லாங்கூட ப்ரார்த்திக்க வேண்டியதில்லை.
எந்த உடம்பு வந்தாலும், எப்படிப்பட்ட ஜன்மா வாய்த்தாலும், அந்த பரமாத்மாவை அன்பே உருவான தாயாக பாவித்து, ஸாக்ஷாத் அந்தப் பரதேவதையின் சரணாரவிந்தத்தில் நீங்காத நினைவை வைத்து விட்டால் போதும். அவள் ஞானாம்பிகை. ஞானப்பால் கொடுப்பவள். கர்மாவினாலும், பக்தியினாலும் நம் மனஸிலிருக்கிற அழுக்கை எல்லாம் துடைத்து விடுவாள். அது பளிச்சென்று ஸ்வச்சமாக கண்ணாடி மாதிரி ஆகி, அதன் ஆட்டமெல்லாம் நின்று போனால் பூர்ண ஸ்வரூபம் தானே அதில் பிரகாசித்துவிடும். அந்த நிலையை அவளே அநுக்ரஹிப்பாள். இப்படித்தான் அநுக்ரஹிக்க வேண்டும் என்று நாம் சொல்ல வேண்டாம். வைகுண்டம், கைலாசம் மாதிரி தன் லோகம் என்பதாக ஏதோ ஒன்றில் நம்மைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு சேவா பாக்யம்தான் தரட்டும்; அல்லது அது வேறு, நாம் வேறு இல்லை என்று பூர்ணமாக நிறைந்து விடுகிற நிலையைத்தான் தரட்டும். எதுவானாலும் சரி.
அந்த நிலை நமக்குத் தெரியாதது, அதைத் தரப்போகிறதும் இன்னொருத்தர். நமக்குத் தெரிந்தது த்வைதம். ஏன் த்வைதம் தெரிகிறது என்றால் மனசு நிற்கவில்லை. மனசு ஏன் நிற்கவில்லை என்றால் ஆசாபாசம், த்வேஷம், பயம், துக்கம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. இவற்றிலேயே அலைந்து கொண்டு மனசு அசுத்தமாகி விட்டதால் நிற்கமாட்டேன் என்கிறது. அதனால் நமக்கு முதலில் சித்தசுத்தி வரவேண்டும். அதற்குக் கடமையைச் செய்து கொண்டு பரமாத்மாவை பக்தியோடு நினைத்துக் கொண்டிருப்பதுதான் வழி. இதை சந்தோஷமாகச் செய்வோம்.
செய்து பார்த்தால் இதுவே ஆனந்தமாயிருக்கும். சித்தசுத்தி அது இது என்ற லக்ஷ்யங்களைக்கூட அப்போது நாம் நினைக்க மாட்டோம். ஆனந்தமாக பக்தி பண்ணிக் கொண்டு, அன்பாகக் காரியங்களைச் செய்து கொண்டு, நாம் பாட்டுக்கு நிம்மதியாக இருக்க ஆரம்பித்துவிடுவோம். அநுக்ரஹத்தை பராசக்தி தானாகப் பண்ணுவாள். அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. நமக்கு நிஜமான பக்தி உண்டாகி ஆனந்தமாக இருக்கத் தெரிந்து கொண்டோமானால், கட்டாயப்படுத்தவும் தோன்றாது. அதனால் அவளுக்கு எப்படி இஷ்டமோ அப்படி த்வைதமாகவே வைத்து அநுக்ரஹம் செய்யலாம்; அல்லது அந்த அநுக்ரஹம் விசிஷ்டாத்வைதமாக இருக்கலாம்; அத்வைதமாக இருந்தாலும் இருக்கலாம். எதுவானாலும் சரி என்று அந்தப் பராசக்தியின் கையில் விட்டுவிட்டு, நாம் பக்திப் பண்ணிப் பண்ணியே பரமானந்தமாக இருந்து கொண்டிருப்போம்.
அத்வைதந்தான் பரம ஸத்தியம். நாம் மனஸை நிறுத்திவிட்டு அந்த ஸத்தியத்தை அநுபவிக்க முடியுமானால் விசேஷந்தான். ஞான மார்க்கம் இதற்காக ஏற்பட்டதுதான். ‘ஆனால் நம்மில் பெரும்பாலாருக்கு அதில் போக முடியவில்லைய ! இதற்காக அழுது கொண்டேயிருக்க வேண்டியதுதானா? என்று தோன்றியது. அப்புறம், ‘அழவேண்டாம். நம்மால் முடிந்த கர்மத்தையும் பக்தியையும் அழாமல் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். ஸகலப் பிரபஞ்சங்களின் வியவகாரங்களையும் நடத்திக் கொண்டிருக்கிற பராசக்தியின் சித்தப்படிதான் நமக்கு அத்வைத சித்தி உள்பட எந்த லக்ஷ்யமும் ஸித்திக்குமாதலால், நாம் இருக்கிற நிலையிலேயே நமக்கு ஒரு நிறைவையும், இதற்கு மேலே நிறைந்த நிறைவான அத்வைதத்தையுங்கூட அந்தப் பராசக்தியின் அநுக்ரஹத்தால் பெற்றுவிடலாம்’ என்ற தெளிவு உண்டாயிற்று. அதைத்தான் சொன்னேன்.

மூன்றாவது வழி
எந்தக் காரியத்தையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தப்பி ஒரு காரியத்தைச் செய்தால் கஷ்டந்தான் உண்டாகும். ‘நியாயம்’ என்றாலும் முறை என்றே பொருள். சாலையில் செல்லும்போது இடது பக்கம் போகவேண்டும் என்றால், எல்லோரும் இடது பக்கமாகப் போவதுதான் முறையாகும். பெரியோர்கள் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு பொதுவான முறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் போட்டிருக்கும் வழியில் செல்வதுதான் நல்லது.
பகவானிடம் போவதற்கு இரண்டு முறைகளை – நியாயங்களை – வகுத்துத் தந்திருக்கிறார்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை; மற்றொன்று பூனைக் குட்டி முறை. ஸம்ஸ்கிருதத்தில் பூனை என்பதற்கு மார்ஜாரம் என்றும், குரங்கு என்பதற்கு மர்க்கடம் என்றும் பெயர். கிசோரம் என்றால் குட்டி என்று அர்த்தம். ஆகவே ஸம்ஸ்கிருதத்தில் இவை மர்க்கட கிசோர நியாயம் என்றும், மார்ஜார கிசோர நியாயம் என்றும் வழங்குகின்றன.
பூனை குட்டி போட்டால், அக்குட்டியானது தானாக நடந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் போகும் சக்தி பெறும் வரையில் அதைத் தாய்ப் பூனையே தன் வாயினால் கவ்விக் கொண்டு தூக்கிச் செல்கிறது. இதே போலத்தான் புலியும். புலிக்குப் பூனை மாமா முறை ஆகவேண்டும் என்பார்கள். புலிக்கு வேட்டையாடுதல், தாண்டுதல், பதுங்கிப் பாய்தல் ஆகிய எல்லாவற்றையும் பூனை சொல்லிக்கொடுத்ததாம். ஒன்றை மட்டும் சொல்லித் தரவில்லை. தானோ மிகவும் சிறியவன், எல்லாவற்றையும் சொல்லித் தந்தால் தனக்கே ஆபத்து வந்துவிடும் என எண்ணி, மரத்தில் ஏறுதல், சுவரில் ஏறுதல் முதலியவற்றைப் புலிக்குச் சொல்லித் தரவில்லையாம்! புலிக்கும் பூனைக்கும் தன் குழந்தைகளிடத்தில் வாத்ஸல்யம், பிரியம் அதிகம்.
பகவான் எல்லாக் குழந்தைகளுக்குமே தாயை மயக்கக்கூடிய சக்தியைத் தந்திருக்கிறார். அப்போதுதான் இக்குழந்தை வாழ வழி உண்டு என்பதாலேயே மாயாவியாகிய பகவான் அதற்கு ஏமாற்றும் வித்தையைச் சொல்லித் தந்திருக்கிறார். நம் கர்மாவை அனுபவிப்பதற்கு உடம்பு வேண்டும்; அந்த உடம்பு வளர உணவு வேண்டும். இதற்காகவே, (நமக்கு இந்த உண்மை தெரியாவிட்டாலும்) நாம் நம் வயிற்றில் ஆகாரத்தைப் போடுகிறோம். உடல் வளர்கிறது. இதற்காக நாக்கு என்ற ஓர் உறுப்பு இருக்கிறது. நாக்கில் நமக்கு ருசி தெரிகிறது. ருசி இல்லையென்றால் நாம் சாப்பிடமாட்டோம். உடலுக்குள் உணவு செல்லாது. ஆகவேதான் நாக்கில் ருசியைக் கொடுத்து அதன் மூலம் உடலானது உணவைப் பெற்றுக் கர்மாவை அனுபவிக்கும்படி பகவான் செய்திருக்கிறார். இவ்வாறெல்லாம் நாம் கர்மாவை அனுபவிக்கப் பண்ணுவதற்காகவே பகவான் பல தந்திரங்கள் செய்திருக்கிறார். பகவான் குழந்தைகளுக்கு மயக்கும் சக்தியைக் கொடுத்து அதை நாம் பிரியத்துடன் வளர்க்க வைத்து, நம்மை ஏமாற்றுகிறார். ஆனாலும் பகவானின் ஏமாற்றுவித்தை சாதாரண மக்களிடம்தான் பலிக்கும். ஞானியை பகவான் ஏமாற்ற முடியாது. ஞானி பகவானையே ஏமாற்றிவிடுவான்.
“சிக்ஷா சாஸ்த்ர”த்தில் வேத அக்ஷரங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதில் வேதத்தை எப்படிக் கற்கவேண்டும், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. “எப்படிப் பெண் புலியானது தன்னுடைய குட்டியை ஆபத்திலிருந்து காக்கத் தன் வாயில் கவ்விச் செல்கிறதோ, அப்படி வேதத்தை உச்சரிக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது*. புலி தன்னுடைய குட்டியை வாயில் கவ்விக் கொண்டு போகும்போது, குட்டியின் உடலிலே பற்காயம் ஏற்பட்டு விடக்கூடாது, குட்டி கீழே விழுந்து விடவும் கூடாது. அதுமட்டுமின்றி ஆபத்திலிருந்து தப்புவதற்காகத் தாய்ப்புலி வேகமாகவும் ஓட வேண்டியிருக்கும். இந்நிலையில் புலி குட்டியை எவ்வளவு ஜாக்கிரதையாக வாயில் பதமாகக் கவ்விக் காக்கிறதோ, அவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக வேதத்தை உச்சரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதே போலத்தான் பூனையும். பூனைக்குக் ‘கிராமப் புலி’ என்றே பெயர். ஆகவே வேதத்தை மார்ஜார கிசோர நியாயமாக உச்சரிக்கவேண்டும் என இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
இரண்டு வகை பக்தியில் பூனைக் குட்டி முறை ஒன்று. அதாவது பக்தர்களில் ஒரு வகையினர், இந்தப் பூனைக்குட்டி தன் முயற்சியின்றி, தாய்விட்ட வழி என்றிருப்பது போலவே பகவானை சரணடைந்து இருப்பர். அவரைப் பணிவுடன் வேண்டி அவரைத் துதித்துப் புகழ்பாடி அவருடைய அருளை வேண்டுவார்கள். அவருடைய பொற்பாத கமலங்களில் தங்களது உள்ளத்தைக் கிடத்துமாறு செய்து, தம்மை ஆட்கொள்வது பகவானது பொறுப்பே என்று கருதி, பூனைக்குட்டி சுயமுயற்சியின்றித் தாயை நம்பி இருப்பதுபோல் இருப்பார்கள். இவ்வித பக்திக்கு மார்ஜார கிசோர நியாயம் என்று பெயர்.
பூனைக்குட்டிக்கு நேர் மாறு குரங்குக் குட்டி. இந்தக் குரங்குக் குட்டி போன்றவர் இன்னொரு வகை பக்தர்கள். குரங்கின் குட்டியானது அதன் தாயின் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும். தாய் மரத்துக்கு மரம் தாவும்போது தன் குட்டியைப் பற்றி யாதொரு கவலையும் கொள்ளாது. குட்டிதான் தன்னைக் காத்துக் கொள்ளத் தாயின் வயிற்றை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இந்தக் குட்டிக்கு பகவான் அப்படிப்பட்ட ஒரு பிடிக்கும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். “கடித்ததெல்லாம் கரும்பு; பிடித்ததெல்லாம் இரும்பு” என்று பகவான் அதற்கு வரம் கொடுத்திருக்கிறாராம். அது எதையும் பலத்துடன் பற்றிக் கொள்ளும். குரங்குப் பிடி என்றே சொல்வதுண்டே!
இப்படிப்பட்ட குரங்கின் ரீதியிலேயே, மர்க்கட கிசோர நியாயமாக, சில பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகவானை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வார்கள். பகவானே அருள் செய்யட்டும் என்று காத்திராமல், அவன் உதறித் தள்ளினாலும் விடுவதில்லை என்று அவனைப் பிடித்துக் கொள்வார்கள். ‘சிக்கெனப் பிடித்தேன்’ என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார். அவரே சிவபுராணத்தில் ‘பக்தி வலையில் படுவோன்’ என்று கூறுகிறார். அப்படியானால் பக்தர்கள் பகவானைச் சிக்கென்று பிடிக்கிறார்களா, பகவான் பக்தரிடம் சிக்கிக் கொள்கிறானா என்ற கேள்வி வருகிறது. பக்தன் சிக்கென்று பிடித்துவிட்டால், அப்புறம் பகவானே அவனிடம் சிக்கிக்கொண்டு விடுகிறான். பக்தர்கள் கையிலிருந்து பகவான் தப்ப முடியாமல் வலையில் விழுந்த மீன்போலச் சிக்கிவிடுகிறார்.
வைஷ்ணவர்களில் வடகலை, தென்கலை என்று இரண்டாகப் பிரித்திருப்பதே இந்த இரண்டு வித சரணாகதி வித்தியாஸத்தினால்தான். ஸ்ரீ வேதாந்ததேசிகனைப் பின்பற்றும் வடகலைக்காரர்கள் மர்க்கட கிசோர நியாயத்தை அநுஸரித்து நாம்தான் விடாமுயற்சியுடன் ஸ்வாமியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ பிள்ளை லோகாசாரியார் ஆகியவர்களைப் பின்பற்றும் தென்கலைக்காரர்கள், மார்ஜார கிசோர நியாயப்படி நாம் எந்த முயற்சியும் இல்லாமல் கிடந்துவிட்டால் போதும், ஸ்வாமியே நம்மை ஆட்கொண்டுவிடுவார் என்கிறார்கள். இப்போது வடகலை, தென்கலை என்றால் நாமம் போட்டுக் கொள்வதில் இருக்கிற வித்தியாஸத்தைத்தான் நினைத்துக் கொள்கிறோம். இங்கிலீஷ் ‘யு’ (U) மாதிரி நாமம் போட்டுக் கொண்டால் வடகலை; ‘ஒய்’ (Y) மாதிரி அடியிலே பாதம் வைத்துப் போட்டுக் கொண்டால் தென்கலை என்று புரிந்து கொள்கிறோம். வாஸ்தவத்தில் அவர்களுக்குள்ளே வித்தியாஸம் சரணாகதியில் இருவிதமான தத்வங்களை அநுசரிப்பவர்கள் என்பதே. வழியிலே இன்னார் இன்ன தத்வக்காரர் என்று தெரிவிப்பதற்கே வடகலைக்காரர் U மாதிரியும், தென்கலைக்காரர் அதற்குப் பாதம் வைத்து Y மாதிரியும் நாமம் போட்டுக் கொள்கிறார்கள். சரணாகதி என்பதைப் “பிரபத்தி” என்பார்கள்.
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
என்று பகவான் கீதையின் முடிவில் சொல்லியிருக்கிறதுதான் சரணாகதி சாஸ்திரத்துக்குத் தாரக மந்திரம் மாதிரி. ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி விபீஷண சரணாகதியின் போது, ‘ராமா, நான் உன்னுடையவன்; அபயம்!’ என்று எவன் வந்தாலும் அவனை ரக்ஷிப்பதே என் ஜன்ம விரதம்:
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததா(மி) ஏதத் வ்ரதம் மம ||
என்று சொன்னதையும் வைஷ்ணவர்கள் ரொம்பவும் சிறப்பித்துச் சொல்வார்கள். கீதை, ராமாயணம் இரண்டுமே சரணாகதி சாஸ்திரங்கள் என்பார்கள்.
தத்வங்கள், ஸித்தாந்தங்கள் இருக்கட்டும். நடைமுறையில் நாம் எப்படியிருக்கிறோம்? அவன் விட்ட வழி என்று நம்பிக்கையோடு கிடப்பதற்கு நம்மால் முடிகிறதா? அத்தனை பக்தி, வைராக்யம் நமக்கு இருக்கிறதா? இல்லவே இல்லை. சரி, அப்படியானால் நாம்தான் முயற்சி பண்ணி அவன் அருளை வலியப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஸதாவும் அவனையே பிடித்துக் கொண்டிருக்கவாவது நம்மால் முடிகிறதா? இதுவும் முடியவில்லை.
‘நல்லதோ பொல்லாததோ நமக்கென்று என்ன இருக்கிறது? அம்மாக்காரி செய்கிறபடி ஆகட்டும்’ என்பதாக, சுயமுயற்சியே இல்லாமல் மார்ஜார கிசோரமாகக் கிடக்கவும் நமக்குப் பக்குவம் இல்லை. ‘அம்மாவை விடாமல் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்; பிடிவாதமாக அவள் ரக்ஷணையைப் பெற்றே தீரவேண்டும்’ என்று மர்க்கட கிசோரமாக சரணாகதி பண்ணவும் நமக்குப் பக்குவம் போதவில்லை.
இரண்டும் இல்லாவிட்டால், இப்படி இரண்டுங் கெட்டனாக இருந்தால் எப்படித்தான் உருப்படுவது? அதற்கு என்ன வழி? இரண்டு வழிகள், முறைகள், நியாயங்கள் மேலே சொன்னேன். இரண்டும் முடியாது என்றால் என்ன செய்வது? யாரிடம் போவது? எந்த வழியிலானாலும் சரணாகதி செய்வதற்குரிய பக்குவமில்லாத நாமும் போகக்கூடிய மூன்றாவது வழியைச் சொல்பவர் யாராவது இருக்கிறார்களா?
இருக்கிறார். நம் சங்கர பகவத் பாதாள்தான் அவர்.
“இரண்டுவித சரணாகதியும் பக்தியில் வருவது. இந்த பக்தியே நமக்கு எட்டமாட்டேன் என்கிறது. ஆசார்யாளோ இதைவிடக் கஷ்டமான ஞானத்தைச் சொல்கிறவரல்லவா? ‘பக்தனும் இல்லை, பகவானும் இல்லை என்று அப்படியே ப்ரம்மமாக இருந்துவிடு’ என்கிறவரல்லவா? நாம் இருக்கிற ஸ்திதியில், அது கொஞ்சங்கூட ஸாத்யமில்லாத விஷயமல்லவா?” என்று தோன்றலாம்.
ஆசார்யாள் ஞானத்தைச் சொன்னவர்தான். ஆனால் அவர், அதிகாரி பேதம் பார்த்து இன்னார் இருக்கிற நிலைக்கு இன்ன வழிதான் ஸாதனம் என்று உணர்ந்து கர்மம், பக்தி இவற்றைக்கூட அங்கீகாரம் பண்ணி இந்த மார்க்கங்களிலும் வழி காட்டியிருக்கிறார். இவற்றில் போனாலே, ஒற்றையடிப்பாதை ஹைரோட்டில் கொண்டு சேர்க்கிற மாதிரி, இவை ஞானத்தில் கொண்டு போய் விட்டுவிடும் என்று சொல்லியிருக்கிறார். இப்படித்தான், பக்தியிலும் மேலே சொன்ன இரண்டு வழிகளைத் தவிர, பக்குவம் போதாத நமக்கும் கொஞ்சத்தில் கொஞ்சம் ஸாத்யமாக ஒரு மூன்றாவது வழியைச் சொல்லியிருக்கிறார்.
மர்க்கட கிசோரம், மார்ஜார கிசோரம் ஆகிய இவ்விரண்டு முறை, அல்லது நியாயத்தைத் தவிர மூன்றாவதாக ஒரு நியாயத்தை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் தமது சிவானந்த லஹரியில் கூறுகிறார்.
இங்கே மனத்தை அவர் குரங்காகத்தான் சொல்கிறார். ஓயாமல் அலை பாய்வதில் அது குரங்காகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்வாமி என்ற தாயைத் தானாகக் கட்டிக் கொள்கிற விஷயத்தில் மட்டும் நம் மனம் குரங்காக இருக்கவில்லை. எனவே, ஸ்வாமியே குரங்காட்டியாக வந்து இந்தக் குரங்கைக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார், நம் ஆசார்யாள். இந்த மனக் குரங்கு சில சமயம்தான் முறையான வழியில் போகிறது. திடீரென அடர்ந்த காட்டுக்குள் போய் வழி இன்றித் தவிக்கிறது; அலைகிறது. அப்படிப்பட்ட இந்தக் குரங்கை யாராவது ஒரு குரங்காட்டியிடம் கொடுத்துவிட வேண்டியதுதான் முறையாகும். அதனால் குரங்கும் பிழைக்கும்; குரங்காட்டிக்கும் பிழைப்பு நடக்கும்.
“நீயோ கபாலக் கப்பரையை வைத்துக்கொண்டு பிச்சைக்காரனாக, பிக்ஷாடனனாகத் திரிகிறாய். உனக்கு ஏற்ற குரங்கு இருந்தால் அதைக்கொண்டு நீயும் பிழைக்கலாம். குரங்கும் உன்னால் அடக்கப்பட்டுச் சீரடையும். உனக்குத் தகுந்த குரங்கு ஒன்று உண்டென்றால், அது என்னுடைய மனம்தான். என் மனமானது குரங்குக் குட்டியாக இருந்தாலும், நீ அதற்குத் தாயாக இருப்பதை அறிந்து அது உன்னைப் பற்றிக் கொள்ளவில்லை. மனம் பூனைக் குட்டியாகவும், நீ தாய்ப் பூனையாகவும் இருந்தாலாவது நீயாகவே அதைத் தூக்கிச்சென்று காப்பாற்றுவாய். ஆனால் இதுவோ அடங்காத குரங்கு. நீயும் பூனையாக இல்லாமல் பிச்சைக்காரனாக இருக்கிறாய். ஆகவே, நீ ஒரு கயிற்றைக் கொண்டு இந்தக் குரங்கைக் கட்டிப் போட்டுத்தான் அடக்க வேண்டும். இதனால் நீயும் வெறுமே பிச்சை கேட்கிற தடியாப் பிள்ளையாக இல்லாமல், குரங்காட்டு வித்தை என்று ஒரு பொழுதுபோக்கைக் காட்டி, கலைஞன் என்ற ஹோதாவில் ஸம்பாவனை கேட்பதாக ஒரு கௌரவம் பெறுவாய். இந்தப் பொல்லாத குரங்கு உன்னிடமிருந்து தப்புவதற்குப் பலவாறு முயற்சி செய்யும். நீ அன்பு என்கிற கயிற்றால் அதைக் கட்டி இழுத்துச் செல்வாயாக!” என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர்.
பகவானிடம் நாம் செல்வம், ஆரோக்கியம், புகழ் இப்படி எது எதையோ வேண்டுகிறோம். உண்மையில், மனமானது கண்டப்படி அலையாமல் அதைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் ஸ்வாமியின் அருளை நாம் கோரவேண்டும். மனம் அவசியமற்றவைகளையெல்லாம் செய்யத் தூண்டும். கண்ணால் காணக் கூடாதவைகளைக் கண் பார்க்கிறது. காதால் கேட்கக் கூடாதவற்றைக் காது கேட்கிறது. நாக்கினால் ருசிக்கக் கூடாதவைககளை நாக்கு ருசிக்கத் துடிக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மனம் பல பொருட்களைக் கண்டு மயங்குவதுதான். இதற்கெல்லாம் மேலான அழகுள்ள பொருள் கிடைத்துவிட்டால், மனமானது இவற்றை விட்டுவிட்டு அந்த ஒரு அழகு வஸ்துவையே பற்றிக் கொண்டு திருந்திவிடும். ஒரு குழந்தைக்குப் பொரி உருண்டையின் மேல் மிகவும் பிரியம். ஆனால் லாடு கிடைத்தால், அதே குழந்தை பொரி உருண்டையைத் தூக்கி எறிந்துவிட்டு லாடுவை எடுத்துக் கொள்கிறது. அதுபோல் மற்ற எல்லாவற்றையும் விட அழகான பொருள் கிடைத்தால் மனம் அதில் மயங்கிக் கட்டுண்டு கிடக்கும். அப்பேர்ப்பட்ட அனைத்திலும் அழகிய வஸ்து ஈசுவரனே! ‘பிச்சைக்காரனான நீ, மிக அழகுடையவனான நீ, இந்த மனக்குரங்கைக் கட்டிப் பிடித்துக் கொண்டு போய் விடுவாயாக!’:
கபாலின்! பிக்ஷோ! மே ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா பத்த்வா சிவ, பவத் அதீனம் குரு விபோ!
என்று ஆசார்யாள் சிவானந்த லஹரியில் கூறுகிறார்.
‘கபி’ என்றால் குரங்கு. ஹ்ருதய கபி: மனக் குரங்கு.
பகவானிடம் புதிதாக ஒன்றும் நாம் கேட்டுப் பெற வேண்டியதில்லை. நம்மிடம் இல்லாமல் அவனிடம் உள்ள ஏதோ ஒன்றைக் கேட்கவேண்டியதில்லை. நம்மிடமே இருக்கும்படியான நம் உண்மை ஸ்வரூபத்தை நாம் அறியவில்லை. நம்முடைய உண்மை ஸ்வரூபம் ஆனந்த மயமானது. பகவானேதான் அது. பரமாத்மாவேதான் அது. அப்படிப்பட்ட நம் நிஜ ஸ்வரூபத்தை மனத்தால் மறைத்துக்கொண்டு ஓயாமல் துக்கப்படுகிறோம். “என் உண்மை நிலையை உணர அருள்வாயாக! என்னை நான் அறிய முடியாதபடி, இந்த மனசு ஆட்டிப் படைக்கிறது. இதை அன்பினாலே கட்டி, கட்டுப்படுத்தி என்னிடம் கொடுத்தால் போதும். என் ஸ்வரூபத்தையே நான் காண முடியாமல் கெடுக்கும் இந்தக் கெட்ட மனப்போக்கை நீ எடுத்துப் போ. என் ஸ்வரூபத்தையே எனக்களித்து அதைக் காக்க வேண்டிய காவலன் நீ!” என்று பிரார்த்திப்போம்.
‘தாய் விட்டபடி’ என்றிருக்கும் பூனைக் குட்டிபோல் பகவானை சரணமடைய நமக்குப் பக்குவமில்லை. குரங்காகத் திரிகிறது நம் மனசு. ஆனாலும் குரங்குக் குட்டிபோல் அவனை பற்றிக்கொள்ளவும் நமக்குப் பக்குவமில்லை. குரங்கு குட்டியாக இருந்துகொண்டே, பூனையம்மாவின் ரக்ஷணையைக் கேட்பவர்களாக இருக்கிறோம்! ஆகவே, ஆசார்யாளின் மூன்றாவது வழியைப் பின்பற்றி நாமும் “மனத்தை நீயே அடக்கி அருள்வாய்” என்று பிரார்த்திப்போம்.
இது முதலில் ஸதாகாலப் பிரார்த்தனையாக இருக்காது. ஸதாவும் பிரார்த்திக்கிறோம் என்றால், எப்போதும் அவனை விடாமல் பிடித்துக்கொண்டு மா்க்கட கிசோரமாக இருக்கிறோம் என்றாகிவிடுமே! நமக்குத்தான் அவ்வளவு யோக்கியதை இல்லையே! ஆனாலும் ஏதோ கொஞ்சம் தவிப்பு, உருப்படவேண்டும் என்ற கவலை உண்டாகிவிட்டதல்லவா? ஏதோ ஒரு நிலையில், இரண்டு நிமிஷமாவது பிரார்த்தனை என்று பண்ணத் தோன்றுகிறதல்லவா? அப்போது இந்தப் பிரார்த்தனையைப் பண்ணிக்கொள் என்று ஆசார்யாள் வழி காட்டுகிறார்.
“நான் முழுதும் குரங்காக இல்லை. மற்ற எல்லா விஷயத்திலும் மனசு குரங்காகத் திரிந்து கொண்டிருந்தாலும் உன்னைப் பிடித்துக்கொள்கிற விஷயத்தில் மட்டும் அப்படி இல்லை. வரனுக்கு எல்லா qualifications-வும் [தகுதியும்] இருக்கிறது; ஆயுள் பாவம் மட்டுமில்லை என்கிற மாதிரி, எதில் முக்கியமாகக் குரங்காக இருக்க வேண்டுமோ, அது ஒன்றைத் தவிர பாக்கி எல்லாவற்றிலும் குரங்காக இருக்கிறேன்! அதனால் இந்த விஷயத்தில் நீதான் தாய்ப் பூனை மாதிரி செய்யவேண்டும். ஆனாலும் நான் முழு குரங்குக்குட்டியாக இல்லாதபோது உன்னை மட்டும் முழு தாய்ப்பூனையாக இருக்கச் சொன்னால் அது நியாயமில்லை. உன்னிடம் அவ்வளவு பெரிய அநுக்ரஹம் எதிர்பார்க்க எனக்கு யோக்கியதை இல்லை. அதனால் ஒரேயடியாக நீ என்னை ஆட்கொண்டு நடத்திக்கொண்டு போ என்று நான் சொல்லவில்லை. ஆனால் என் அலைபாயும் குரங்கு மனஸையும் ஏதோ கொஞ்சம் சரிபண்ணிக் கொண்டு நான் இந்த நிமிஷம் உன்னைப் பிரார்த்திக்க வந்திருக்கிறேன் அல்லவா? இந்தப் பிரார்த்தனை இன்னம் வலுப்பதற்குப் பக்திக் கயிற்றால் சற்று என்னைக் கட்டிப் போடு. உன்னை விட்டுவிட்டு அந்த கயிற்றின் நீளத்திற்கு நான் ஓடிக்கொண்டுதான் இருப்பேன். நீயும் அந்த அளவுக்கு ஆட்டம் பார். ஆனால் ஒரேயடியாக உன்னிடமிருந்து நழுவிப் போவதற்கு விடாதே. இம்மாதிரி, உன்னுடனேயே ஒட்டிக் கொண்டிராவிட்டாலும், உன்னை விட்டு ஒரே ஓட்டமாக ஓடாமல் நீ என்னைக் கொஞ்சம் விட்டுப் பிடித்தால், அதுவே இந்த ஸ்டேஜில் எனக்குப் போதுமானது. உன்னை நான் விடாமல் மர்க்கட கிசோரமாகப் பிடித்துக் கொள்வதோ, நீ என்னை விடாமல் பிடித்துக்கொள்வாய் என்று பூர்ணமாக நம்பி நான் எந்த பாரமும் இல்லாமல் மார்ஜார கிசோரமாகக் கிடப்பதோ -இந்த இரண்டில் எதுவோ ஒன்று எப்போது வாய்க்கிறதோ அப்போது வாய்த்துவிட்டுப் போகட்டும். இப்போதைக்கு ஒரு நிமிஷம் நான் குரங்குக் குட்டியாக இந்த பிரார்த்தனையாவது பண்ணுகிறேன் அல்லவா? இதற்குப் பிரதியாக நீயும் கொஞ்சம் தாய்ப் பூனையின் ஸ்வபாவத்தைக் காட்டி என்னை இன்னம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறப் பண்ணுவதற்கு எண்ணு. அதாவது, எனக்கு உன்னிடம் உள்ள அன்பை, பக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு போகப் பண்ணு” என்றிப்படிப் பிரார்த்தனை பண்ண வேண்டும்.
முதலில், நாமிருக்கிற நிலையில், “பக்தியைத் தா” என்று பிரார்த்தனை பண்ணுவோம். பக்தி வந்தபின் பிரபத்தியில் எது, மா்க்கட கிசோரமா, மார்ஜார கிசோரமா என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரண்டுக்குமே மூலாதாரமாக பக்தி அல்லவா இருந்தாக வேண்டும்?
இரண்டுமே கலந்து கலந்துதான் வருகிறது என்கிறமாதிரி, ஆசாரியாள் ச்லோகத்திலிருந்து தொனிக்கிறது. பிரார்த்தனை என்று ஒன்றைப் பண்ணுகிறோம் என்ற அளவுக்கு நாம் குரங்குக் குட்டியாக அவனைத் துளி பிடித்துக் கொள்ளத்தான் செய்கிறோம். ஆனால் பிடிப்பு உறுதியாக இல்லை. பிடி நழுவி நாம் விழுந்துவிடுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம். இப்போது, அதாவது நம் முயற்சி போதாதபோது, அவனே பூனையம்மாவைப்போல் நமக்கு உறுதி தர வேண்டியிருக்கிறது என்ற உணர்வைப் பெற வேண்டும். “நான் நழுவி விழாமல் பக்திக் கயிற்றைப் போட்டுக் கட்டிப் பிடித்துக் கொள் — த்ருடம் பக்த்யா பத்த்வா பவத் அதீனம் குரு” — என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
“உன் அருள் என்ற கயிற்றால் கட்டிப் போடு” என்று ஆசார்யாள் சொல்லவில்லை. அப்படிச்சொன்னால், அவனே பூனை கவ்விக் கொள்கிற மாதிரி நம்மைக் கயிற்றால் தன் வசத்தில் வைத்துக் கொண்டு, நம்மை உய்விக்கிற பொறுப்பைத் தானே வைத்துக்கொண்டு விடுகிறான் என்று ஆகிவிடும். பக்த்யா பத்த்வா என்றே சொல்கிறார். அதாவது “உன் அருளால்” கட்டு என்று சொல்லாமல், “என் பக்தியாலேயே என் மனஸைக் கட்டு” என்கிறார். “பக்தி வலையில் படுவோன்” என்று மாணிக்கவாசகர் சொன்ன மாதிரி ஆசாரியாள் சொல்லவில்லை. அதாவது நம்மை விட்டு ஓடிக்கொண்டிருக்கிற அவனையே நாம் பக்திக் கயிற்றால் கட்டுகிறோம். அல்லது பக்தி என்ற வலைக்குள் பிடித்துவிடுகிறோம் என்று சொல்லவில்லை. இப்படிச் சொல்லியிருந்தால் அது முழுக்க மர்க்கட கிசோர நியாயமாக ஆகிவிடும்.
இரண்டும் இல்லாமல், இரண்டும் கலந்த மாதிரி ஆசாரியாள் சொல்கிறார். பக்தியால் அவனைக் கட்டுகிற பக்குவந்தான் நமக்கு இல்லையே! அதனால் இப்போது இந்த ஆரம்ப நிலையில் பக்தியையே அவன்தான் தரவேண்டும். நாம் பக்தியே செய்யாமல் அவனே நம்மை ஒரேயடியாக உய்வித்து மோக்ஷத்தில் சேர்த்துவிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. அது ரொம்பவும் தகாத ஆசை. அதனால் ‘பக்தியைக் கொடு; அப்படிக் கொடுப்பதே உன் அருள்தான்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகரும் சொல்கிறது போல, அவன் தன் அருளால் நேரே மோக்ஷத்துக்குத் தூக்கிவிடாமல், முதலில் நாம் அவனை பக்தி பண்ணுகிறதற்கே அருள்செய்ய, அப்புறம் நம் பக்திக்கு இரங்கி மோக்ஷம் தரவேண்டும். இப்படிப் புருஷப் பிரயத்தனமும், தெய்வாநுக்ரஹமும் கலந்து வந்தால்தான் நன்றாயிருக்கிறது. நியாயமாயிருக்கிறது. இப்போது நமக்குச் சுரக்க வேண்டிய அன்பை (பக்தியை)யே அவன் ஒரு கயிறாகத் தரட்டும். பக்தியால் நாம் அவனைக் கட்டுவதும் கட்டாததும் பிற்பாடு நடக்கிறபடி நடக்கட்டும். இப்போதைக்கு அவனே நாம் பக்தியை விட்டுவிடாத மாதிரி, அதனால் நம்மைச் சுருக்குப் போட்டுக் கட்டிவிடட்டும் -என்றிப்படி மா்க்கட கிசோர நியாயமாகவும் இல்லாமல், மார்ஜார கிசோர நியாயமாகவும் இல்லாமல், ஒரு வழியை ஆசார்யாள் சொல்லிக் கொடுக்கிறார்.
“பிரபத்தியில் இப்படியா அப்படியா? குரங்குக் குட்டியாகப் பற்றிக்கொள்ள வேண்டுமா, அல்லது பூனைக் குட்டியாகத் தன் செயல் இல்லாமல் கிடக்க வேண்டுமா?” என்று வாதம் செய்து சண்டை போட்டு, ஏதாவது ஒன்றை நிலைநாட்டி விடலாம். ஆனால் அது வெறும் வாதமாகத்தான் இருக்குமே தவிர, காரியத்தில், நம்மில் அபூர்வமாக லக்ஷத்தில் ஒருத்தனைத் தவிர எவராலும் இரண்டு விதங்களில் எதிலும் சரணாகதி பண்ண ஸாத்யப்படாது. இதற்காக நாம் மனம் தளர்ந்து விடாமல், நம் நிலையிலும் ஸாத்யப்படுகிறமாதிரி, “பக்தி வரம் தா அப்பா!” என்று பிரார்த்திக்க, ஆசார்யாள் வழி சொல்லிக் கொடுக்கிறார்.
இப்போதைக்கு இந்த மூன்றாவது வழியில், நிஜ பக்தியைக் கொடு என்று பிரார்த்தனை பண்ண முடிந்த மட்டும் பண்ணுவோம். அப்புறம் அது முதலில் சொன்ன இரண்டு வழிகளில் எதில் கொண்டு சேர்க்கிறதோ, அல்லது பகவத்பாதாளின் ஞான மார்க்கத்தில்தான் சேர்கிறதோ, அப்படிச் சேர்த்துவிட்டுப் போகட்டும். எந்த நதியானாலும் முடிவில் அதை ஸமுத்ரம் எடுத்துக்கொள்கிற மாதிரி எந்த வழியானாலும் அதன் முடிவில் ஒருவனேயான பரமாத்மா நம்மை எடுத்துக்கொள்வான்.
“என் மனஸைக் கட்டி உன் ஆதீனத்திலேயே வைத்துக்கொள்ளு” என்று இங்கே நம்முடைய பக்தி பாவத்தை ஈச்வரப் பிரஸாதமாகவே ஆசார்யாள் விட்டுவிடுகிறார். அவரது பாஷ்யங்களிலும், அத்வைத பிரகரண கிரந்தங்களிலும் ஈச்வர ஆராதனத்தை மனம் ஒருமைப்படுவதற்காக அவர் உபாயமாகச் சொல்லியிருந்தாலும், ஈச்வரனின் அருளாலேயே பக்தியும் ஸம்பாதித்துக் கொள்ளப்படவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த அத்வைத நூல்கள், ஞானவிசாரமும், ஆத்ம தியானமும் செய்யக்கூடிய பக்குவம் பெற்றவர்களுக்கு ஏற்பட்டது. இங்கே “சிவானந்த லஹரி”யில் நம் எல்லோராலும் முடிந்த பக்தி மார்க்கத்தைக் காட்டுவதால் இந்த மாதிரி சொல்கிறார். பக்தியினால் (உபாஸனையால்) ஸாதகனே மனஸைக் கட்டவேண்டும் என்று ஞானப் புஸ்தகங்களில் சொன்னார். இங்கே ஈச்வரனிடம், “அப்பா, பக்தியைத் தந்து, அதனால் எங்கள் மனஸைக் கட்டிப்போடு” என்று அவனிடமே விட்டுவிடுகிறார் ஆசார்யாள்.
“ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்” என்று ஆசார்யாள் சொல்கிறபடி, மகா சபலத்துடன் தாவிக்கொண்டேயிருக்கிற மனக் குரங்கை ஈச்வரன் கட்டி வைத்து, முதலில் அது கயிற்றின் நீளத்துக்குத் தாவுகிற மாதிரி விட்டுப் பிடித்தாலும், அப்புறம் அது அவன் ஆட்டினால்தான் ஆடுவது என்று குரங்காட்டியின் குரங்கு மாதிரிச் சும்மா இருக்கிறபடி செய்துவிடுவான். மனஸ் இப்படித் துளிக்கூடத் தானாக நகராதபோது, அதை அவனும் ஆட்டி வைக்காவிட்டால், அதுதான் மனமே அழிந்துபோய் ஆத்மா மட்டும் பிரகாசிக்கற அத்வைத சித்தியான மோக்ஷம். இப்படிப்பட்ட அத்வைதத்தைத் தருவதும் பரமாத்மாவின் கையில்தான் இருக்கிறது என்கிற மாதிரி இங்கே கயிற்றை அவன் கையிலேயே கொடுத்திருக்கிறார்! இந்த ச்லோகம் பக்திப் பிரார்த்தனையாக இருக்கும்போதே அதற்குப் பலனாகப் பரமாத்மா ஞான மோக்ஷத்தைக் கொடுக்கவும் செய்யலாம் என்கிற அபிப்பிராயத்தையும் கொடுக்கிறது.
பின்னாடி ஒரு ச்லோகத்தில் இந்த அபிப்பிராயம் இன்னம்கூட ஸ்பஷ்டமாக வருகிறது. அந்த ச்லோகத்தில் மனஸை ஒரு மதயானைக்கு ஒப்பிட்டுவிட்டு, “இந்த யானையை ஞானம் என்கிற கருவியால் உன் பாதமான தறியில் கட்டிவிடு” என்கிறார்: “ஹ்ருதய மதேபம் பதான சித்யந்த்ரை:
இங்கே “பக்த்யாபத்த்வா” (பக்தியினாலே கட்டி) என்றவர் அங்கே “பதான சித்யந்த்ரை:” (ஞானத்தால் கட்டு) என்கிறார். பக்தியைத் தருவது, ஞானத்தைத் தருவது, அதனால் முடிவில் அத்வைதத்தையே தருவது ஆகிய எல்லாமும் பரமாத்மப் பிரஸாதமாகவே கிடைக்கக் கூடியவை என்று இதிலிருந்து தெரிகிறது. நமக்கு அவன் பக்தியைத் தந்து, நாம் அவனை பக்தி பண்ணிக் கொண்டிருந்தாலே, அவன் ஞான மோக்ஷாதிகளைக் கொடுத்துவிடுவான் என்ற தாத்பரியம் ஏற்படுகிறது.
அந்த பக்தியை முதலில் பிரார்த்திப்போம். அதனால் இரண்டில் ஒரு தினுஸான சரணாகதி ஸித்திக்கும். அவன் விட்ட வழி என்று, நம் மனஸுக்கென்று ஆசையும் ப்ளானும் இல்லாமல் விட்டுவிடுவதுதானே சரணாகதி? இதுவும் ஞான மார்க்கத்தில் மனஸின் ஓட்டமே இல்லாத நிலை என்று சொல்லப்படுகிறதும் ஒன்றேதான். ஆத்ம விசாரத்தால் மனஸை நிறுத்துவதற்குப் பதில் இங்கே பக்தியால், அன்பினால் நிறுத்துகிறோம்.
பக்தி மார்க்கத்திலே சொல்லப்படும் இரண்டு விதமான சரணாகதிகளானாலும் சரி, ஞான மார்க்கத்திலே சொல்லப்படும் மனோ நாசமானாலும் சரி, எதற்கும் முதலிலே வழியாக இருப்பது பக்திதான். அதனால், ஆசார்யாள் சொல்லிக் கொடுக்கிற மாதிரியே –நாம் இப்போதுள்ள ஸ்திதியில் –“இந்த என் மனக்குரங்கை பக்தி என்ற கயிற்றால் திடமாகக் கட்டி, உன் ஆதீனத்தில் வைத்துக் கொள்ளப்பா” என்று பரமாத்மாவிடம் பிரார்த்தனை செய்வோம்.

மே ஹ்ருதயகபிம் அத்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா பத்த்வா
சிவ பவத் அதீனம் குரு விபோ ||
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5