புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
181 Posts - 77%
heezulia
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
10 Posts - 4%
prajai
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
1 Post - 0%
Guna.D
பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_m10பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 25, 2010 9:14 pm

இலங்கையின் மற்றொரு எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் பூர்த்திக்கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் திணைக்களத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008ஆம் ஆண்டு தேர்தல் வாக்களர் பதிவின்படி இந்தத் தேர்தலில் ஒரு கோடியே நாற்பது இலட்சத்து 88ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 11ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும். வாக்களிப்புக் கண்காணிப்பு நடவடிக்கைக்கு என 65ஆயிரத்துக்கும் அதிகமான பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வன்னியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்பது தான் தேர்தல்த்திணைக்களத்தின் தகவலாக அமைந்திருக்கின்றது.

இந்தநிலையில்த்தான் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு மாபெரும் சக்திகளுக்கு இடையிலான கருத்து மோதல்களும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு இடையிலான கைகலப்புக்களும் உச்சத்தை எட்டியுள்ளன. இலங்கையின் தேர்தல் வன்முறை இந்தமுறை என்றும் இல்லாதவாறு ஆயிரத்தை அண்மித்ததாகவும் 800ற்கும் அதிகமானவை பதிவாகியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இதுவரை 10 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் உரியவர்களிடம் இன்று வரை ஒப்படைக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் வாக்களிக்கும் வாக்காளர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிகின்றது.

இரண்டு வேட்பாளர்களுக்குமான வெற்றிவாய்ப்பு ஐம்பதிற்கு ஐம்பது என்ற நிலையில் காணப்படுவதாக கொழும்பின் நடுவுநிலைமை ஊடககர்கள் சிலர் தெரிவித்துள்ள அதேவேளை இரண்டு பிரதான தரப்புக்களும் வழமைபோல் தாமே வெற்றிபெறுவோம் என்றும் தமது தரப்பு கருத்துக்கணிப்புக்களின் படி தாமே வெற்றிபெறுவதற்கான வெற்றிவாய்ப்பு மிக அதிகரித்துக் காணப்படுவதாக கூறிவருகின்றனர்.
மகிந்தரப்பு

மகிந்ததரப்பினைப் பொறுத்த வரையில் தேர்தல் வெற்றிக்காக தம்மால் முடிந்தவரை மிக மோசமான நடவடிக்கைகள் அனைத்தையும் கையில் எடுத்துள்ளது. அரச தரப்பு ஊடகங்கள் தொடர்ந்து முற்று முழுதாய் மகிந்தவின் வக்களாத்து வாங்குகின்றனவாகவே செயற்படுகின்றன. இலங்கையில் தனியார் ஊடகங்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மகிந்தவிற்கான ஆதரவுக் கருத்துக்களை தவிர்க்க முடியாமல் வெளியிட வேண்டிய இக்கட்டுக்குள் அந்த ஊடகங்கள் செயற்படுகின்றன.
பொன்சேகாவிடம் இருந்து இராணுவ அதிகாரம் பிடுங்கப்பட்டதன் பின்னர் அரச தரப்பால் நியமிக்கப்பட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளும் மகிந்தவிற்கான பரப்புரை நடவடிக்கைகளில் தீவிரமாக மறை முகமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் வாக்குகளின் முக்கியத்துவம் கருதிச் செயற்படும் மகிந்ததரப்பு வன்னி மக்களை அடைத்து வைத்துள்ள முகாம்களில் தமது தேர்தல் கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தம்மால் பணயக்கைத்தியாக வைத்திருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணத்தை மக்கள் மத்தியில் நேரடியாக துப்பாக்கி முனையில் மகிந்தவிற்கான பரப்புரையினை மேற்கொள்ள வைத்துவருகின்றது. வவுனியா ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் அவர் மகிந்தவிற்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டிருந்த வேளை அவர் மீது அங்கிருந்த மக்கள் தாக்குதல் நடத்த முற்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அந்த நடவடிக்கையினை கைவிட்டு அரச தரப்பினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக் குடியமர்ந்த மக்கள் மத்தியில் பரப்புரை நடவடிக்கைக்கென சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு விடுக்கப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக படை அதிகாரிகள் அங்கு செல்லும் தேர்தல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும் வெளியேற்றியும் வருகின்றனர். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி வாகனம் ஒன்றின் சாரதி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படை அதிகாரிகளால் தாக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டிருந்தார்.

இதனை விடவும் நேரடியான வாக்குகளை பெறமுடிமோ என்ற அச்சம் காரணமாக இனவாதம் கலந்த வாக்குறுதிகளையும், பரப்புரைகளையும் மகிந்ததரப்பு தீவிரப்படுத்தியுள்ளது. பொன்சேகாவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு பிளவு படக்கூடிய அபாயம் ஏற்பட்டு வருவதாக மகிந்தராஜபக்ச பரப்புரைகளை முன்னெடுத்துவருகின்றார். போலி வாக்காளர் அட்டைகள் தயாரித்தல், மக்களை அச்சுறுத்தி வாக்களிக்க வைத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் அரசதரப்பு ஈடுபட்டு வருகின்றதாக எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.
பொன்சேகா தரப்பு
பொன்சேகா தரப்பினை பொறுத்த வரையில் இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெற்றால் இலகுவில் வெற்றிபெறலாம் என்ற நிலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகின்ற பொன்சேகா தமக்கு இடப்பட்ட கட்டளைகளை தாம் நிறைவேற்றியதாக கூறிவருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவினைப் பெற்றுள்ள எதிரணி இன்னும் வெற்றிக்கனி தமக்கானதாகவே இருப்பதாக கூறிவருகின்றது. இந்தநிலையில் ஏற்கனவே ஐக்கியதேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு என்பனவற்றுக்கான வழமையான ஆதரவு நிலையுடன் இராணுவ ரீதியான வெற்றிக் கதாநாயகன் என்று சிங்கள மக்களால் கொள்ளப்பட்ட சரத்பொன்சேகாவிற்கான ஆதரவு நிலையும் இருக்கின்ற அதேவேளை, தற்போது இலங்கை இராணுவத்தில் உள்ள படையினரில் நான்கில் மூன்று வீதத்தினர் சரத்பொன்கேகாவினாலேயே உருவாக்கப்பட்டதாகவும் அந்தப் படையினரதும் குடும்பங்களினதும் ஆதரவு பொன்சேகாவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உதாரணத்துக்கு யாழ்ப்பாணம் தீவகம் காரைநகர்ப் பகுதியில் ஸ்ரீலங்காக் கடற்படையினர் மக்களை நேரடியாக அணுகி பொன்சேகாவிற்கே வாக்களிக்குமாறு அச்சுறுத்தும் பாணியில் தெரிவிப்பதாக அறிய முடிந்தது. அப்பகுதி மக்களை ஈபிடிபியினர் மகிந்தவிற்கு ஆதரவளிக்குமாறு அச்சுறுத்தும் நிலையில் தாம் இக்கட்டான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
வவுனியா வன்னி மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களில் விறகு எடுப்பதற்காக அருகில் இருக்கும் காடுகளுக்கு மக்கள் செல்வதாக இருந்தால் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதற்காக வாக்குறுதி வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக முகாம் மக்கள் தெரிவிக்கின்றனர். காரணம் கேட்டால் முகாம் மக்கள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை படையினர் தெரிவிப்பதாக அம் மக்கள் கூறுகின்றனர்.
தேர்தல் வன்முறையை நோக்கியே நகரும் என எதிரணி அச்சம் கொண்டு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. இந்தத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு என்பது எவ்வாறாயினும் இரு பகுதிக்கும் சமபலமாகவே தென்படுவதால் ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற சக்தி இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டிருப்;பதாக அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.

தமிழின அழிப்பினை இரு பிரதான வேட்பாளர்களும் இணைந்தே மேற்கொண்டனர் இவர்களில் யாரைத் தேர்வு செய்தால்தான் என்ன என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டாலும், நான்கு ஆண்டுகள் மிகக் கொரூர ஆட்சி புரிந்த தற்போதைய அரசாங்கத்தை மாற்றி அமைத்து மற்றொரு அரசினைத் தெரிவு செய்வதன் மூலம் தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விளங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தத் தேர்தலில் பொன்சேகாவிற்கு வாக்களிக்கும் படி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய யதார்த்த சூழலில் ஒரு தெரிவை அல்லது ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருக்கும் வன்னிப்பகுதியில் இருந்த இளைஞர்கள் உட்பட்ட நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலை காணப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் மூலமே இன்னும் கொஞ்ச நாளாவது நின்மதியான காற்றைச் சுவாசிக்க முடியலாம் என்று. காரணம் மீண்டும் மகிந்த ஆட்சிபீடம் ஏறினால் வன்னியில் இருந்து வெளியேறிய இளைய வயதை உடைய அனைவரும் அடைக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் காணாமல்ப் போகலாம் என்பது. தற்போதைய தேர்தலை இலக்குவைத்தே பலர் விடுவிக்கப்பட்டனர். ஏ9 பாதை திறக்கப்பட்டது. இன்னும் பல சலுகைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் பொன்சேகா தொடர்பில் எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆனாலும் பொன்சேகா தலைமையில் ஆட்சி அமைந்தாலும் அதனை தொடர்ந்து தக்கவைக்கின்ற அல்லது நிர்வகிக்கின்ற பொறுப்பு தமிழ்த்தரப்புகளுக்கும் சர்வதேசத்திற்கும் உள்ளது. சர்வதேசம் விதிக்கின்ற கோட்டினை அல்லது உத்தரவினை சிரமேற்கொண்டே ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை வகுப்பு அமையும் என்பதால் ஓரளவு மாறுபட்ட சூழல் உணரப்படலாம் என்பதால் பொன்சேகாவின் வருகையை ஓரளவு ஏற்கக் கூடிய நிலையினை தமிழர் புத்திஜீவிகள் எதிர்நோக்குகின்றனர்.
நம்பிக்கையுடன் இறுதிவரை நகர்ந்து எல்லாம் இழந்தும் கையறு நிலையில் இருக்கும் தமிழ்மக்களை தொடர்ந்தும் அவல நிலையிலேயே வைத்திருக்கும் நோக்கில் தமிழின அழிப்பு துரோக சக்திகள் தமிழ்மக்களின் ஆன்மாக்களாக வேடமிட்டு இந்தத் தேர்தலையும் புறக்கணிக்குமாறு அறிக்கைகளையும் ஆலோசனைகளையும் வெளியிட்டுவருகின்றமை தொடர்பில் யாரும் நம்புவதற்குத் தயாரில்லை.
நடைபெறவுள்ள தேர்தலில் தமிழினத்துக்கு இழைத்த கொடுமையின் பலாபலனை வாழ்நாள் முழுக்க எண்ணி எண்ணியே மகிந்தவும் குடும்பமும் பெருமூச்சு விடும் வகையிலான நடவடிக்கையினை மேற்கொள்ளும் வல்லமை பெற்ற தமிழினம் ஏன் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் அல்லது மகிந்தவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே தமிழர்தாயகத்தின் தற்போதைய கேள்வி நிலை




பெருமூச்சுவிடுமா மகிந்த குடும்பம்? (செய்தி ஆய்வு Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக