புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 2:48 am

தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும் படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது.

இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன?

"இலக்கியம்', அறைக்குள் இருக்கும் வைரக்கல் என்றால், "இலக்கணம்', அதனைப் பார்ப்பதற்குகதவைத் திறக்கத் துணை செய்யும் சாவி திறவுகோல் என்பதை இங்கு இரண்டு மேற்கோள்களால் விளக்கலாம்.

""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்''


என்பது திருக்குறள் கடவுள் வாழ்த்து.

நிலமிசை நீடுவாழ்வோர் யார் என்றால், இறைவனின் மாட்சிமை பொருந்திய திருவடியை இடைவிடாது நினைப்பவர்தான் என்பது இதன் கருத்து. இதில் இரண்டு சொற்கள் பூட்டுகள் போல் உள்ளன. ஒன்று, "ஏகினான்' என்பது; மற்றொன்று "சேர்ந்தார்' என்பது.

இவ்விரண்டிலும் என்ன சிக்கல்கள் உள்ளன?

இறைவனைப் பற்றிய சொல்லின்கண் இறந்தகாலக் குறிப்பு வரக்கூடாது. ஏனெனில், அவர் நேற்றும் இன்றும் நாளையும் இருப்பவர்; முக்காலத்திலும் இருப்பவர். முக்காலங்களிலும் இருக்கும் ஒரு பொருளை நிகழ்காலச் சொல்லில் தான் கூற வேண்டும் என்பது இலக்கணம். எப்படியெனில், ""இமயமலை நிற்கிறது'', ""கங்கை நதி ஓடுகிறது''என்று கூற வேண்டும். இமயமலை நின்றது என்றோ, நிற்கும் என்றோ கூறக்கூடாது. ஏனெனில், ""நின்றது'' என்றால் இன்றில்லை என்றாகிவிடும் ""நிற்கும்'' என்றால், நேற்று இல்லை என்றாகிவிடும். மேலும் சிந்திக்கும்போது, இமயமலை நேற்றும் இன்றும் நாளையும் இருக்கும் பொருள் என்று கூற வேண்டுமானால், இமயமலை நிற்கிறது'' என்று கூறவேண்டும். அதே போலத்தான் கங்கை நதிக்கும்.

முந்நிலைக் காலம் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்
என்றார் தொல்காப்பியர். இக்கருத்தை,
முக்காலத்தினும் ஒத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத்தானே
என்றார். அதனால்தான் மாணிக்கவாசகர்,
""எங்கள் பாண்டிப்பிரான் மூலபண்டாரம்
வழங்குகின்றான் வந்து முந்துமினே''


என்று "வழங்குகின்றான்' என நிகழ்காலத்தில் கூறினார்.

இத்தகைய அழுத்தமான இலக்கணங்கள் இருக்கும்போது, திருவள்ளுவர், ""மலர்மிசை ஏகுகிறான்'' என்று கூறாமல், ""ஏகினான்'' என்று இறந்த காலத்தில் கூறியது பொருந்துமா? என்பதே இங்குள்ள சிக்கல்; அதாவது பூட்டு. இதனைப் பரிமேலழகர் அழகான ஒரு சாவியைதிறவுகோலைத் தந்து விளக்கினார்.

மூன்று காலத்திலும் நிகழும் பொருளை நிகழ்காலத்தில்தான் கூறவேண்டும் என்று கூறிய தொல்காப்பியர், இன்னொரு நூற்பாவில், எப்பொழுதோ, விரைவு காரணமாகவோ, உறுதி காரணமாகவோ நிகழ்காலச் சொல்லையும் எதிர்காலச் சொல்லையும் இறந்த காலத்தில் கூறலாம் என்று வழுவமைதியும் கூறியுள்ளார்.

எப்படி என்றால், ஒரு நண்பன், வீட்டுவாசலில் வந்து நின்றுகொண்டு, ""என்னப்பா! இன்னும் புறப்படவில்லையா?'' என்று கேட்கிறான். அப்போது, உள்ளே இருக்கும் அவனது நண்பன், ""இதோ வந்துவிட்டேன்'' என்று கூறினான். இவன் வரப்போகிறவன்; எனினும் வந்துவிட்டேன் என்று இறந்தகாலத்தில் கூறலாமா என்றால், இங்கு விரைவும் உறுதிப்பாடும் தொனிக்க அவ்வாறு அவன் கூறியதை இலக்கணம் ஏற்றுக்கொள்கிறது.

நாம் வாழ்க்கையில் நேரத்திற்கு ஏற்ப பேசும் சொற்களுக்குக் கூட, அது தவறாகும் என்றாலும், "சரி என்று ஏற்றுக்கொள்ளலாம்' என்று இலக்கணம் அமைதி கூறுகிறது. இதனை வழுவமைதி என்பர். இவ்வாறு, சொற்களின் இலக்கணத்தை விட வாழ்க்கையின் போக்கும் நோக்கும்தான் அவசியமானது என்று இலக்கணம் ஏற்றுக்கொள்கிறது.

இதற்குரிய நூற்பா,

வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள் என்மனார் புலவர்

என்பது தொல்காப்பியம் வினையியல் நூற்பா. இங்கு வாராக்காலம் என்பது எதிர்காலம். நிகழுங்காலம் என்பது நிகழ்காலம்.

இறைவன், நம்பொருட்டு அழைத்த குரலுக்கும் அன்புக்கும் ஏற்ப ஓடோடி வருவான் என்னும் விரைவுப் பொருளில்தான் திருவள்ளுவர், "ஏகுகிறான்' என்று நிகழ்காலத்தில் கூறவேண்டிய சொல்லை "ஏகினான்' என இறந்த காலத்தில் கூறினார்என்று பரிமேலழகர் விளக்கினார். அவ்வுரைப்பகுதி வருமாறு:

""அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், "ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார். என்னை? வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர் என்பது ஒத்ததாகலின்'' என்பது அது.

நினைந்த வடிவோடு விரைந்து சேருவான் என்பதில் இரண்டு செய்திகளைக் கூறினார். விரைவாக வருவான் என்பது மட்டுமல்ல, எந்த உருவில் நினைக்கிறோமோ அந்த உருவில் வருவான் என்பதால், இங்கு சமயக் காழ்ப்பிற்கு இடமில்லை என்றும் கூறினார். இந்த இலக்கணம் ஒரு மாண்புடைச் சாவி தானே!

இன்னொன்று, "சேர்ந்தார்' என்பது. சேர்தல் என்பது இடத்தால் சேர்தலா? இதயத்தால் சேர்தலா? என்பது கேள்வி. "மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்' என்பதில் சேர்தல் என்பது, இதயத்தால் சேர்தலைக் குறிக்கிறது. எண்ணத்தால், பக்தியால், உணர்வினால் சேர்தல் என்பது இதற்குப் பொருள். இது சாதகம்பயிற்சி. இப்பயிற்சியை இடைவிடாது மேற்கொள்வார் அதாவது, தியானித்துக் கொண்டு இருப்பவர் நிலமிசை நீடு இனிது வாழ்வார் என்பதே பொருள்.

இதற்கு இலக்கணம் இடம் தருகிறது. தொல்காப்பியத்தில், "வேற்றுமை மயங்கியல்' என்ற இயலில், "இரண்டாம் வேற்றுமை உருபு வரும்போது அந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை உருபும் வரலாம்' என்று ஒன்றோடு ஒன்று கூடிவரும் இலக்கணம் கூறியுள்ளார்.

மயக்கம் என்றால், "கூடுதல்' என்பது பொருள். வேற்றுமை மயக்கம் என்றால், பொருள் நிலைக்கு ஏற்ப உருபுகள் ஒன்றோடு ஒன்று கூடி வரும் என்பது பொருள். எடுத்துக்காட்டாக, அரசனைச் சார்ந்தார், அரசர்கண் சார்ந்தார் என்பதில், அரசரைச் சார்ந்தார் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ'யும், அரசர்கண் சார்ந்தார் என்பதில் ஏழாம் வேற்றுமை உருபு "கண்'னும் அமைந்து பொருள் தருகின்றன. இதனை விளக்க வந்த தொல்காப்பியர், இவ்வாறு இரண்டு உருபுகள் இயைந்து பொருள் தருவது எப்போது என்றால், "கருமம் அல்லாச் சார்புப் பொருள்' வரும் பொழுது மட்டுமே என்று கூறியுள்ளார். கருமம் அல்லாச் சார்பு என்றால் செயல்; தூணைச் சார்ந்தான் என்றால், அங்கு உடம்பினால் சார்தல் என்னும் செயல் நம் கண்ணுக்குத் தெரியும்.

ஆனால் அரசனைச் சார்ந்தான் என்றால், உடம்பினால் சார்தல் கிடையாது. அரசனை உள்ளத்தால் சார்ந்து நிற்கிறான் என்பதே பொருள். இங்கு செயல் என்னும் "கருமம்' இல்லை. சிந்தனை என்னும் எண்ணம் உண்டு. இதுவே கருமமல்லாச் சார்பு என்றார் தொல்காப்பியர்.

மாணடி சேர்ந்தார் என்பதில் உள்ள "சேர்தல்' என்பது இடத்தால் சார்தல் இல்லை. இதயத்தால் சார்தல் ஆகிய கருமமல்லாச் சார்பு எனப் பொருள்படும். எனவேதான், இங்கு சேர்தல் என்பது இடைவிடாது நினைத்தலை உணத்தியது என்கிறார் உரையாசிரியர்.

இவ்வாறு, தெரிந்த குறளாக இருந்தாலும் தெரியாத சில நுட்பங்கள் பொருந்தி உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் சில தடைகளுக்குச் சரியான விடைகளால் தெளிவுகொள்ளவும் இலக்கணம் என்னும் திறவுகோல் என்றும் உதவும்.

ஆதீனப் புலவர் மு.சிவசந்திரன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Oct 13, 2010 5:07 pm

அறிய வேண்டிய அரிய விளக்கமளித்த புலவரும், இங்கு அனைவரும் அறியத் தந்த சிவாவும் நன்றிக்குரியவர்களாவர். நன்றி கூறுவோம்.

ayyaasamy
ayyaasamy
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Postayyaasamy Sat Nov 20, 2010 9:34 am

இத்தகைய ஓர் அரிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 20, 2010 9:41 am

ayyaasamy wrote:இத்தகைய ஓர் அரிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக