புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_m10கிருஷ்ணரை பற்றி ஓசோ Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணரை பற்றி ஓசோ


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2022 1:24 pm

கிருஷ்ணரை பற்றி ஓசோ Main-qimg-abe55c1bb398392e796c81c5cc6ea49c-lq
-
கிருஷ்ணரை பற்றி ஓசோ Main-qimg-abe55c1bb398392e796c81c5cc6ea49c-lq
-
கிருஷ்ணன் முற்றிலும் யாரோடும் ஒப்பிட முடியாதவன்;
மிகவும் வித்தியாசமானவன்.முதலாவதாக, கிருஷ்ணன்
மிகப்புராதன காலத்தவனாக இருந்தாலும்,

அவன் எதிர்காலத்திற்கும் சொந்தமானவனாக, உண்மையான
எதிர்காலத்தவனாக இருப்பதில்தான், அவனுடைய தனித்
தன்மையே அடங்கி இருக்கின்றது.

மனிதன், இனிமேல்தான் அந்த உயரத்திற்கு வளர வேண்டும்.
அங்கேதான், அவன் கிருஷ்ணனின் சம காலத்தவன் ஆக முடியும்.
கண்ணன் இன்னும் நம் புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்
பட்டவனாகத்தான் இருக்கிறான்

நம்முடைய முழு வரலாற்றிலும், பரிபூரண உயரத்தையும்,
ஆழத்தையும் எட்டிய ஒரே ஒரு மாமனிதன் கிருஷ்ணன்தான்.

இருந்தும்கூட, அவன் அப்படியொன்றும் இறுக்கமானவனாகவோ,
சோகமானவனாகவோ, கண்ணீர் சிந்துகின்றவனாகவோ இல்லை.

பெரும்பாலும், ஆன்மீகவாதிகளின் பிரதான குணம்
என்னவென்றால், வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றோடிப்
போனவர் போலவும், வாழ்க்கையை விட்டு விலகிப் போனவர்
போலவும், அவர், மந்தமானவராகவும், இறுக்கமானவராகவும்,
துக்கமுடையவராகவும் காணப்படுவார்.

அப்படிப்பட்ட நீண்ட ஞானிகளின் வரிசையில் கிருஷ்ணன் மட்டுமே
ஆடியபடியும், பாடியபடியும், சிரித்தபடியும் வருகிறான்.

ஆனந்தமாகச் சிரிக்கும் மதம், வாழ்க்கையை ஒப்புக் கொள்ளுகிற
மதம், அதன் முழுப் பரிமாணத்தோடு இனிமேல்தான் பிறக்க
வேண்டும்... அப்படி பிறந்த முதல் மனிதன்
கிருஷ்ணன்..
--
கிருஷ்ணரை பற்றி ஓசோ Vikatan%2F2019-05%2F2bd79586-8211-4091-ac59-c7565468f33b%2F77232_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
இன்று வரை, ஒவ்வொரு மதமும் வாழ்க்கையை இரண்டு பாகமாகப்
பிரித்து வைத்திருக்கிறது. ஒன்றை ஏற்றுக் கொள்கிறது; மற்றதை
மறுக்கிறது. ஆனால், கிருஷ்ணன் மட்டுமே வாழ்க்கையை
முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.

இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம்தான்
கிருஷ்ணனின் முழுப்பலனையும் பெற முடியும். அதனால்தான், இந்திய
நாடு கிருஷ்ணனைப் பூரணமான கடவுள் அவதாரமாகப் போற்றுகிறது

நாம் அனுபவிக்கும் துயரங்கள், எதிர்மறைத்தன்மை, அழுத்தப்பட்ட
உணர்வுகள், நிபந்தனைகள் என்னும் பெரிய பாலைவனத்தில், ஆடிப்பாடி
ஆனந்தப்படும் ஒரு சிறிய பாலைவனச் சோலையாக அவன் திகழ்கிறான்

இன்று வரை, மனித மனம், வாழ்க்கையைத் துண்டு துணுக்காகவே
பார்த்துப் பழகி விட்டது; அதை தர்க்கத்திற்குரியதாகவும்
(முரண்பட்டதாகவும்) பார்க்கிறது.

ஆன்மீகவாதி உடலை மறுக்கிறான்; உயிரை மதிக்கிறான். இதில் பரிதாபம்
என்னவென்றால், அவன் தன் உடலையும், உயிரையும் இரு கூறாக்கி,
இவற்றிடையே மோதலை உருவாக்கி விடுகிறான்.

இந்த உலகை மறுக்கிறான். இன்னொரு உலகை ஏற்கிறான். இப்படி
இரண்டிற்கும் இடையில் ஒரு பகைமையை ஏற்படுத்தி விடுகிறான்.

நாம், நம் உடலை மறுத்தால் நம் வாழ்க்கை, இயல்பாகவே துக்கமும்,
துன்பமும் நிறைந்ததாக மாறி விடும். ஏனென்றால்,

நம்முடைய வாழ்க்கையின் சகல சத்தும் சாரமுமாக இருப்பவை,
உடல் சார்ந்த ஆரோக்கியமும், உத்வேகமும், நுண் உணர்வுகளும், அழகும்,
சங்கீதமும்தான்.

ஆகவே, உடலை வெறுத்து ஒதுக்கும் ஒரு மதம், ரத்தசோகை பிடித்ததாகவும்,
நோய்ப்பட்டதாகவும்தான் இருக்க முடியும்...

இதனால்கிருஷ்ணனுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது.இறந்த கால
மதங்களுக்கும், எதிர்கால மதங்களுக்கும் நடுவே
ஒருபெரிய புரட்சி ஆரம்பமாகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2022 1:25 pm

கிருஷ்ணரை பற்றி ஓசோ 2129
வாழ்க்கையை, அதன் சகல அம்சங்களோடும், பருவங்களோடும்,
வண்ணங்களோடும் அவன் ஏற்றுக் கொள்கிறான். அவன் மட்டும்,
எதையும் தேர்ந்தெடுப்பதில்லை;

ஒரு நிபந்தனையின்றி வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்
கொள்கிறான். காதலை அவன் தவிர்ப்பதில்லை; ஒரு மனிதன்
என்ற முறையில் அவன் பெண்களை விட்டு ஓடிப்போவதில்லை.

கடவுளை அறிந்தவன், அனுபவித்தவன் என்ற முறையில், அவன்
மட்டுமே, போரைக் கண்டு முகம் திரும்பி ஓடிப் போகாதவனாக
இருக்கிறான்.

அன்பும், அருளும் நிறைந்தவனாக அவன் இருந்தும் கூட, போரை
ஏற்றுப் போரிடும் தைரியம் அவனிடம் இருக்கின்றது. அவன்
இதயம் சுத்தமான அகிம்சை குணம் உடையது.

அப்படியிருந்தும், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது,
வன்முறையின் கொடுமைக்குள்ளும், நெருப்புக்குள்ளும் அவன்
பாய்ந்து செல்கிறான்.

அவன் தேனை ஏற்றுக் கொள்கிறவன்தான் என்றாலும் அவனுக்கு
விஷத்தைக் கண்டால் பயமில்லை.

கிருஷ்ணன், வாழ்க்கையின் இருமைப் பண்பையும், தர்க்க
முரணையும் முழுசாக ஏற்றுக் கொள்வதால், அவன் இருமையைக்
கடந்து அப்பால் செல்கிறான்.

ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு மறுபகுதியை மறுக்கிற முரண்பாடு
உங்களுக்குள் உள்ளவரைக்கும், நாம் சொல்லுகிறோமே அந்த
ஆழ்நிலையை நாம் அடைய முடியாது.

ஆழ்நிலை என்பது தேர்வு செய்யாமல், இரு பகுதிகளையும் ஒன்றாக
ஏற்றுக் கொள்கிற போதுதான், முழுமையை ஒப்புக் கொள்கிற
போதுதான், சாத்தியமாகும்.

அதனால்தான், கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற, மிக
முக்கியத்துவமுடையவன் ஆகிறான். அவனுடைய இந்த முக்கியத்துவம்,
காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும்.

மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும், பகட்டும் மங்கிக் கொண்டே
செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள்
குப்பைத் தொட்டியில் வீசப்படும் போது, கிருஷ்ணனின் சுடர்,
தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து, அதன் சிகரத்தின் உச்சியில் நின்று
ஒளிவீசும்...

-ரங்கராஜ்ஜியம்
நன்றி: தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக