ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by T.N.Balasubramanian Today at 7:24 pm

» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by mohamed nizamudeen Today at 3:05 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by mohamed nizamudeen Today at 3:02 pm

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by mohamed nizamudeen Today at 2:57 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Today at 2:42 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by mohamed nizamudeen Today at 2:13 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by mohamed nizamudeen Today at 2:01 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Today at 1:59 pm

» சோளநார் பொம்மை
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Today at 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 04/10/2022
by Dr.S.Soundarapandian Today at 1:13 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Today at 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Today at 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Today at 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Yesterday at 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Yesterday at 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Yesterday at 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Yesterday at 11:47 pm

» ஊருக்கு உபதேசம்
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» இதய ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 11:44 pm

» சமையல்... சமையல்...
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» பாட்டி வைத்தியம்!
by mohamed nizamudeen Yesterday at 7:49 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» "வாழ்ந்தே காட்டுவோம்!!!"
by selvanrajan Yesterday at 1:16 pm

» ஆபரேஷன் காக்டஸ்: இந்தியப் படைகள் மாலத்தீவுக்குச் சென்று ஆட்சிக் கவிழ்ப்பை எவ்வாறு அடக்கியது?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38 pm

» சமையல் டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» சரஸ்வதிக்கு பிடித்த ஊர்!
by ayyasamy ram Yesterday at 7:44 am

» திராவிட மாடல் என்றால் என்ன?
by sncivil57 Sun Oct 02, 2022 4:50 pm

» விஜய் & பிரபாஸ் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ்
by ayyasamy ram Sun Oct 02, 2022 2:03 pm

» ரிலாக்ஸ் – சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Oct 02, 2022 2:02 pm

» கவிதைக்குள் ஓர் கதை
by ayyasamy ram Sun Oct 02, 2022 2:00 pm

» நானே வருவேன் – விமர்சனம்
by ayyasamy ram Sun Oct 02, 2022 1:56 pm

» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Sun Oct 02, 2022 12:48 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Empty தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்

Post by ayyasamy ram Tue Aug 16, 2022 7:59 pm

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Vikatan%2F2019-05%2F7e0d8766-65e0-4359-9dbf-df9a723a1241%2Fhoneymoon600.jpg?auto=format%2Ccompress&dpr=1
--
திருமணம் முடித்த கையோடு இளம் ஜோடி செல்லக்கூடிய தேனிலவுப் பயணம் என்பது, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்ப தருணமாக அமையும். சரியான இடங்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, தேனிலவுப் பயணம் இனிதாக அமையும். கூடுதலாக கொஞ்சம் திட்டமிட்டால் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என தமிழகத்தில் பல ஜில்லிடவைக்கும் தேனிலவு மையங்கள் இருப்பது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தமிழ்நாட்டை ஒட்டிய கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், புதுமண தம்பதிகளின் தேனிலவைத் தித்திப்பாக்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றில் டாப் 10 இடங்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

1. வர்க்கலா

‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில் தேனிலவைக் கொண்டாட எழில்கொஞ்சும் பல கடற்கரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று வர்க்கலா. பப்பில் ஏரியில் போட்டிங் போகலாம். ஜோடியாக கைகோர்த்துக்கொண்டு அந்தக் கடற்கரையின் பேரழகை ரசித்தவாறு நடந்து செல்லலாம். வர்க்கலாவில் காஃபி ஷாப்-கள் மிகவும் பிரபலம். அங்கு கிடைக்கும் காஃபியின் வாசனையோடு சூரியன் அஸ்தமனமாகும் அழகையும் பருகலாம். அங்கு விற்பனையாகும் வெள்ளி நகைகள், உடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை நினைவுப்பொருட்களாக வாங்கி வரலாம். விமானம், ரயில், கார் மூலமாகவும் வர்க்கலாவுக்குச் செல்லலாம். வர்க்கலாவுக்கு அருகே திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும், ஷிவகிரி ரயில் நிலையமும் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடம்பர ஹோட்டல்களும், குறைந்த கட்டணத்தில் தங்கக்கூடிய ஹோட்டல்களும் நிறைய உள்ளன.

2. பெக்கல்

கேரள மாநிலத்தில் உள்ள அழகான இடம். கடற்கரையும் கோட்டை நகரமும் ஒருங்கே அமைந்த இந்த இடம், நகரங்களின் பரபரப்புமிக்க வாழ்க்கையில் இருந்து நன்கு இளைப்பாறுவதற்கு அமைதியாக இடம் இது. நகரத்தில் உள்ள வசதிகளையும், இயற்கையின் அழகையும் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற புதுமணத்தம்பதிகள் இங்கு தேனிலவு செல்லலாம். பெக்கல் கோட்டையில் இருந்து அரபிக்கடலில் சூரியன்மறையும் அற்புத அழகை ரசிக்கலாம். நொம்பிளி ஆறு மற்றும் அமைதியான கழிமுகப்பகுதியில் படகு சவாரி போகலாம். காசர்கோடு ரயில் நிலையமும், மங்களூர் விமான நிலையமும் பெக்கல் அருகில் அமைந்துள்ளன. தேனிலவு தம்பதிகள் தங்குவதற்கு நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப நிறைய ஓட்டல்கள் உள்ளன.

3. குமரகம்

தேனிலவு தம்பதிகளுக்கான சொர்க்கபூமி என்று கேரளாவில் உள்ள குமரகத்தைச் சொல்லலாம். காண்பவர் நெஞ்சை கொள்ளையடிக்கும் கழிமுகப்பகுதியில் படகு உலா போகலாம். பெரும்பாலும் இங்கு வரும் தேனிலவுத்தம்பதிகள், உலகத்தரம் வாய்ந்த படகு வீடுகளில் ஒரு நாள் முழுவும் தங்குகிறார்கள். கொச்சின் சர்வதேச விமான நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் குமரகம் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப தங்கும் விடுதிகள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் கெஸ்ட் ஹவுஸ்கள் நிறைய உள்ளன.

4. கோவளம்

கேரளாவின் இந்த அழகிய கடற்கரை, தென் இந்தியாவின் சிறந்த தேனிலவு மையங்களில் ஒன்று. சூரியன் மறையும் அழகுக்காட்சியை ரசித்தவாறு கலங்கரை விளக்கம் பகுதியில் நடந்து செல்வது சுகானுபவம். சூரிய குளியலுக்கு சிறந்த இடம். புதுமணத்தம்பதிகள், மெழுவர்த்தியின் மங்களான வெளிச்சத்தில் அமர்ந்தவாறு விதவிதமான கடல் உணவு வகைகளை ருசிக்கலாம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் போகலாம். திருவனந்தபுரம் விமான நிலையம், திருவனந்தபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஹோட்டல்களும், கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன.

5. ஆழப்புழா

தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கேரளப் பகுதிக்கு விரும்பி வருகிறார்கள். குறிப்பாக தேனிலவு கொண்டாடுவதற்கு புதுமண ஜோடிகள் இங்கு நிறைய வருகிறார்கள். படகு வீடுகளுக்கு பிரபலமான இடம் இது. இயற்கை சூழ்ந்த பேக்வாட்டரில் மிதக்கும் படகு வீடுகளில் பகலிலும், இரவிலும் பொழுதை அனுபவிக்கலாம். அது நம் வாழ்நாளில் மறக்க முடியாத பொழுதாக நிச்சயம் மாறும். கொச்சின் சர்வதேச விமான நிலையமும், ஆழப்புழா ரயில் நிலையமும் அருகில் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ப விதவிதமான படகு வீடுகள் உள்ளன. நம் விருப்பப்படி அதைத் தேர்வு செய்யலாம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77709
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13281

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Empty Re: தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்

Post by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm


6. தேக்கடி

தேனிலவு கொண்டாட சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ளது. இங்கு, பெரியார் வனஉயிரியல் சரணாலயம் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய வனஉயிரியல் சரணாலயம் இதுதான். பல புதுமண ஜோடிகளின் கனவுப்பிரதேசம் இது. இயற்கையை ரசித்தவாறு அமைதியாக தேனிலவைக் கொண்டாடலாம். தேயிலை தோட்டங்கள் வழியாக ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். ஜீப் சவாரி மற்றும் படகு சவாரியும் செய்யலாம். மதுரை விமான நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஹோட்டல்களும், கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன. வீடுகளில் பேயிங் கெஸ்ட்டாக தங்கும் வசதியும் உண்டு.

7. வயநாடு

கேரளாவில் அடர்த்தியான வனப்பகுதி இது. முழுக்க முழுக்க இயற்கை சூழ்ந்த பகுதியாக இருப்பதால், தேனிலவுக்கு உகந்த இடம். வாசனைமிக்க தோட்டங்கள் வழியாக ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். ஒன்றாக டிரெக்கிங் போகலாம். கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமும், கோழிக்கோடு ரயில் நிலையமும் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப தங்கும் இடங்கள் உள்ளன. ஹோட்டல்கள் முதல் வீடுகளில் பேயிங் கெஸ்டாக தங்குவது வரை பலவிதமான தங்கும் இடங்கள் உள்ளன.

8. ருஷிகொண்டா

ஆந்திராவில் உள்ள அழகிய கடந்கரை. பாறைகளால் அமைந்த கடற்கரை. மேல் பகுதியில் பசுமைப் பிரதேசம் காட்சியளிக்கிறது. அமைதியை விரும்பும் புதுமணத்தம்பதிகள் சென்றுவர தகுந்த இடம். விசாகப்பட்டினத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தக் கடற்கரையில் இளம் ஜோடிகள் கைகோத்து உலாவுவது சுகானுபவம். ஜோடியாக கடலில் குளிக்கலாம். விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையமும், விசாகப்பட்டினம் ரயில் நிலையமும் அருகில் உள்ளன.

9. கபினி

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. வனம் சூழ்ந்த அழகான தேனிலவுப் பிரதேசம். கபினி ஆற்றை ஒட்டிய வனப்பகுதி. பெங்களூரில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ளது. பந்திப்பூர் வனப்பகுதியின் அழகை ரசித்துக்கொண்டே த்ரில்லான பயணம் போகலாம். அமைதியும், அழகும் நிறைந்த இடம். நம் அன்புக்கு உரியவர்களுடன் அனுபவிப்பதற்கு உகந்த இடம். புதுமணத்தம்பதிகள் தோளில் கைபோட்டுக்கொண்டு கபினி ஆற்றங்கரையில் நடந்து செல்வது ஆனந்தமான அனுபவம். மைசூர் விமான நிலையம் 90 கி.மீ தூரத்தில் உள்ளது. மைசூர் ரயில் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். இது ரொம்ப காஸ்ட்லியான இடம். குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான ஓட்டல்கள் மிகக்குறைவு. நாள் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான ரூம்களே அதிகம்.

10. கூர்க்

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. தேனிலவு தம்பதிகளின் சொர்க்கம். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும். அட்வெஞ்சரை விரும்பும் தம்பதிகளாக இருந்தால், தேனிலவு பயணத்தில் கொஞ்சம் த்ரில் அனுபவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன. அதன் வழியாக டிரக்கிங் போகலாம். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் போகலாம். அரிய வகை பறவைகள் மற்றும் தாவரங்களைப் புகைப்படங்கள் எடுத்து ரசிக்கலாம். அபி அருவியில் குளித்து மகிழலாம். தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஓர் இரவு தங்குவது த்ரில்லான அனுபவம். மைசூர் விமான நிலையம், மைசூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளன. நம் பட்ஜெட்டை பொறுத்து தங்குவதற்கான இடங்கள் உள்ளன. விருந்தினரை உபசரிப்பது, நட்பாகப் பழகுவுது ஆகியவற்றுக்கு கூர்க் மக்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களின் வீடுகளில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கலாம்.
-
நன்றி: விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77709
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13281

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை