ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:23 am

» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 6:54 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை.

போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Empty போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை.

Post by T.N.Balasubramanian Sat Jul 30, 2022 9:35 am

கோவை: கோவை நகரில், கடந்த சில ஆண்டுகளாக போஸ்டர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிப்பதுடன், பாலங்கள், சுவர்களை அலங்கோலமாக்கி வருகின்றன.போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Tamil_News_large_3088499


பொதுவெளி மற்றும் திறந்தவெளி இடங்களின் அழகைச் சிதைப்பதைத் தடுப்பதற்கான சட்டத்தின் (The Tamil Nadu Open place(Prevention of Disfigurement) Act 1959 படி,அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது, அதிகபட்சம் மூன்று மாத சிறை அல்லது 200 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, எந்த அரசுத்துறை அதிகாரிகளும் இதன் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை. இதனால் போஸ்டர்களின் சைஸ், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பூதாகர பிரச்னையாக மாறியுள்ளன.

இவ்வாறு பெரிய சைஸ் போஸ்டர் ஒட்டுவதில், உள்ளூர் பத்திரிகைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில், பெரும் போட்டியே நடக்கிறது. குறிப்பாக, ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது தனி நபர்களை பிரமாண்டப்படுத்தும் வகையில், நகருக்குள் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. ஆளும்கட்சியினர் இதற்கான அனுமதி, லஞ்சம் எதுவுமே இல்லாமல், இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

பேனர்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் தி.மு.க., தலைமை, இத்தகைய போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று, கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடுவதே இல்லை.இதனால், புதிதாகக் கட்டப்படும் அவிநாசி ரோடு மேம்பாலத்தில், மிகப் பிரமாண்டமான போஸ்டர்கள், ஆளும்கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ளன.


போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Gallerye_070333684_3088499
கோவை நகரை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில்வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு நேர்மாறாக, கோவை நகரை அசிங்கப்படுத்தும் போஸ்டர்களுக்கு, இதே நகரிலுள்ள வி.ஐ.பி.,க்களே அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த போஸ்டர்களில் அவர்களின் புகைப்படங்களை, பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதற்கு அடிமைகளாகி, லட்சம் லட்சமாக பணத்தை வாரியிறைக்கின்றனர்.


மாநகராட்சி கமிஷனருக்கு சபாஷ்!

இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து, போஸ்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளது. கோவை அவிநாசி ரோட்டில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தில் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக, கோவை கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் ஹேமலதா கொடுத்துள்ள புகாரின்பேரில், ஐந்து நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ''முதற்கட்டமாக, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அடுத்த கட்டமாக, அரசியல்கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கியபின், அவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மாநகராட்சி தற்போது எடுத்துள்ள நடவடிக்கை தொடர வேண்டும்; அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பு.


அரசியல்கட்சிகளுக்கு 10 நாட்கள் அவகாசம்!

கோவை நகரில் போஸ்டர்களை அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் சமீரன், ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், போஸ்டர்களை ஒட்டாமல் அரசியல்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநகராட்சி கமிஷனர் பிரதாப், 'தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அந்தந்த கட்சியினரே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரி, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இனி போஸ்டர் ஒட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை பாயுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.


நன்றி தினமலர்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை. Empty Re: போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை.

Post by T.N.Balasubramanian Sat Jul 30, 2022 9:48 am

மாநகராட்சி கமிஷனர் பிரதாப், 'தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அந்தந்த கட்சியினரே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

மதிப்புக்குரிய நீதி மன்றங்கள் பல ஆண்டுகளாக இந்த போஸ்டர் /பேனர்கள் வைப்பதை கண்டித்து வருகின்றன.

செவிடன் காதில் ஊதிய சங்கென அரசியல் கட்சிகள், வாய் மூடி இருக்கின்றன.அரசியல் சட்டம் கொண்டுவந்து 
இதுமாதிரி ஓட்டும் கட்சிகளை தண்டிக்கவேண்டும்.

இதை தவிர மக்களும் கண்ணீர் அஞ்சலி படங்களை ஓட்டுகின்றனர் இதுவும் அறவே நீக்கப்படவேண்டும்.

சட்டங்கள் பல இருந்தும் வாய்மூடியாக இருக்கும் பல அரசு துறைகள் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.


எல்லாம் சரிதான் அய்யா, இனி போஸ்டர் ஓட்டமாட்டோம் என கூறி,
அந்த சுவர்களை வண்ண வண்ண எழுத்துக்களால் வாழ்த்துக்கள் கூறி 
படங்கள் வரையாமல் இருக்கவேண்டும். இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

ayyasamy ram likes this post

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை