ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 6:36 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:23 am

» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 6:54 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Mon Aug 08, 2022 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 5:55 am

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























சினி துளிகள் ( தொடர் பதிவு)

சினி துளிகள் ( தொடர் பதிவு) Empty சினி துளிகள் ( தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Jun 30, 2022 7:15 pm

சினி துளிகள் ( தொடர் பதிவு) Images?q=tbn:ANd9GcSsXDovyeVkSsjGpvwVT8Y9ECJfD9NKciUtyw&usqp=CAU

கீர்த்தி சுரேஷுக்கு, 'கட் - அவுட்'!



குடை சாய்ந்து கிடந்த, கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் மீண்டும் சூடு
பிடித்திருக்கிறது. குறிப்பாக, தெலுங்கு சினிமாவில், பல படங்களில்
நடித்து வருகிறார். இந்நிலையில், மகேஷ் பாபுவுடன் இணைந்து அவர்
நடித்த, சர்க்காரு வாரி பாட்டா என்ற படம், சமீபத்தில் திரைக்கு வந்தது.

அப்போது, ஆந்திராவில் உள்ள, கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள், அவருக்கு,
35 அடி உயரத்தில், 'கட் - அவுட்' வைத்து பரபரப்பை ஏற்படுத்தி
விட்டனர்.

பெரும்பாலும் முன்னணி, 'ஹீரோ'களுக்கு மட்டுமே ரசிகர்கள்,
'கட் - அவுட்' வைத்து கொண்டாடி வரும் நிலையில், முதன் முதலாக
கீர்த்தி சுரேஷுக்கும் வைத்திருப்பதால், ஆந்திராவில், பரபரப்பு
நாயகியாக உருவெடுத்துள்ளார்.

— எலீசா
நன்றி: வாரமலர்


Last edited by ayyasamy ram on Thu Jun 30, 2022 7:27 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77062
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் ( தொடர் பதிவு) Empty Re: சினி துளிகள் ( தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Jun 30, 2022 7:17 pm


'ரிஸ்க்' எடுக்கும், ஆர்யா!



பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த, சார்பட்டா பரம்பரை படம்,
மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தன் மார்க்கெட் உச்சத்திற்கு போக
போகிறது என்று எதிர்பார்த்தார், ஆர்யா.

ஆனால், எதிர்பார்த்தபடி அவருக்கு மெகா படங்கள் எதுவும் வரவில்லை.
இருப்பினும், தன், 'ஆக் ஷன் - ஹீரோ இமேஜை' தக்க வைத்துக்
கொள்வதற்காக, கேப்டன் என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார்.

அவ்வாறான படங்களை தயாரிக்க யாரேனும் முன்வராத பட்சத்தில்,
தொடர்ந்து தான் நடிக்கும் படங்களை தானே தயாரிப்பதற்கும்
திட்டமிட்டுள்ள, ஆர்யா, 'அனல் பறக்கும், 'ஆக் ஷன்' கதைகளை யார்
வைத்திருந்தாலும், உடனே என்னை அணுகலாம்...' என்று, கோலிவுட்டில்
சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77062
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் ( தொடர் பதிவு) Empty Re: சினி துளிகள் ( தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Jun 30, 2022 7:18 pm


அதிதி ஷங்கருக்கு, குவியும் வாய்ப்புகள்!


பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான, அதிதி ஷங்கர்,
கார்த்தி நடித்துள்ள, விருமன் படத்தில், கிராமத்து நாயகியாக அ
றிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சிறப்பாக
நடித்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானதை
அடுத்து, தற்போது, சிம்புவுடன், கொரோனா குமார் படத்தில்
ஒப்பந்தமாகி இருக்கிறார்;

அடுத்தபடியாக, கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கப்
போகிறார். இவர் நடித்த, முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே,
மேலும், இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது, கோலிவுட்டின்
முன்னணி நடிகையருக்கு, பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77062
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் ( தொடர் பதிவு) Empty Re: சினி துளிகள் ( தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Jun 30, 2022 7:19 pm

பூஜா ஹெக்டேவை காலி பண்ணிய, பிரியங்கா மோகன்!



பூஜா ஹெக்டேவுக்கு, தெலுங்கில் நடித்த, ராதே ஷ்யாம் மற்றும்
ஆச்சார்யா போன்ற படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியை
கொடுத்து விட்டது. அதனால், புதிய படங்களுக்கு அவரை
ஒப்பந்தம் செய்ய தயங்குகின்றனர், தயாரிப்பாளர்கள்.

எனவே, பூஜாவின் இடத்தை பிடித்து விடுவதற்காக, அவரை வைத்து
படம் இயக்க இருக்கும் இயக்குனர்களுக்கு துாது விட்டார், ராஷ்மிகா
மந்தனா. ஆனால், தமிழில் சில படங்களில் நடித்துள்ள,
பிரியங்கா மோகனை, மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக தற்போது ஒப்பந்தம்
செய்து விட்டனர்.

இதனால், எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள பிரியங்கா மோகன்,
இந்த தருணத்தை பயன்படுத்தி, பூஜா ஹெக்டேயின் இடத்தை தான்
பிடிக்க வேண்டும் என்று, கோதாவில் இறங்கியடிக்கத் தொடங்கி விட்டார்.

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77062
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் ( தொடர் பதிவு) Empty Re: சினி துளிகள் ( தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm



மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா!


இயக்குனர் மற்றும் 'ஹீரோ' என்று பயணித்து வந்த, எஸ்.ஜே.சூர்யா,
வில்லனாக நடித்த, மாநாடு படம், அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.

இருப்பினும், தொடர்ந்து வில்லனாக நடிப்பதில் உடன்பாடு இல்லாதவர்,
மீண்டும் 'ஹீரோ'வாக நடிக்க தயாராகி, தன்னை அதிரடி வில்லனாக
நடிக்க வைக்க கதையுடன் முற்றுகையிடும் இயக்குனர்களிடம்,
'வில்லன் வேண்டாம். 'ஹீரோ'வாக நடிப்பதற்கு கதை சொல்லுங்கள்...'
என்று கேட்கிறார்.

அவர்கள் தயங்கினால், 'உங்களிடம் உள்ள அதே கதையில், ஹீரோ -
வில்லன் என, நானே இரட்டை வேடம் போடுகிறேன். நீங்கள் ஏற்கனவே,
ஒப்பந்தம் செய்துள்ள, 'ஹீரோ'வை கழட்டி விடுங்கள்...' என்று, வில்லன்
தொனியில் பேசுகிறார்.

'கொஞ்சம் விட்டால், டைரக் ஷனும் நானே செய்கிறேன் என்று சொல்லி,
நமக்கே, 'ஆப்பு' வைத்து விடுவார் போலிருக்கே...' என்று, மிரண்டு
போயுள்ளனர், இயக்குனர்கள்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77062
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் ( தொடர் பதிவு) Empty Re: சினி துளிகள் ( தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை