புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
1 Post - 50%
heezulia
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நிர்ஜல ஏகாதசி ! I_vote_lcapநிர்ஜல ஏகாதசி ! I_voting_barநிர்ஜல ஏகாதசி ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்ஜல ஏகாதசி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:18 pm

நிர்ஜல_ஏகாதசி!

நிர்ஜல ஏகாதசி ! DdozQ2i

நிர்ஜல ஏகாதசி மே/ ஜுன் மாதங்களில், வளர்பிறையில் தோன்றக்கூடிய நிர்ஜல ஏகாதசியின் விவரங்களை, பிரம்ம - வைவர்த்த புராணத்தில் வியாசதேவருக்கும், பீமசேனருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை யுதிஸ்டிரரின் சகோதரனான பீமசேனர், பெருமுனிவரான வியாசதேவரிடம் கேட்டார். ஓ! கற்றறிந்த மற்றும் வணக்கத்திற்குரிய பெரியவரே! என் தாய் குந்திதேவி, எனது சகோதரர்களான யுதிஸ்டிரர், அர்ஜுனன், நகுலா, சகாதேவா, மற்றும் திரௌபதி ஆகியோர் ஏகாதசி நாளன்று எதையும் உண்ணுவதில்லை.

அவர்கள் என்னையும் ஏகாதசியன்று விரதம் மேற்கொள்ளுமாறு வற்புறுத்தவர். ஏகாதசி விரதம் வேத சாஸ்திரங்களின் கட்டளையாக இருப்பினும் என்னால் பசியை பொறுத்துக் கொள்ள இயலாததால் என்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு கூறுவேன். ஆனால் என்னால் இயன்றவரை தானங்கள் செய்வேன். விதிமுறைகளுக்கேற்ப பகவான் கேசவனை வணங்குவேன். ஆனால் உண்ணாவிரதம் மட்டும் என்னால் மேற்கொள்ள முடியாது. ஆகையால், உண்ணாவிரதம் இருக்காமல் எவ்வாறு ஏகாதசியின் பலனை அடைவது என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசதேவர் கூறினார். ஓ! பீமா நீ நரகலோகத்தைக் தவிர்த்து மேலுலகங்களுக்கு செல்ல விரும்பினால், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசியன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். பீமன் கூறினான். ஓ! பெருமுனிவரே! பகவானின் கட்டளைப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகளை என்னால் கடைபிடிக்க இயலாது. என்னால் ஒரு கணம் கூட பசியை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்நிலையில் பகலும் இரவும் எப்படி என்னால் உண்ணாமல் இருக்க முடியும்? ப்ரிகா எனப்படும் பசித்தீ எப்பொழுதும் என் வயிற்றிலே குடிகொண்டுள்ளது. அத்தீயை அதிக அளவில் உண்பதால் மட்டுமே அணைக்க முடியும். ஆனால் மிக சிரமப்பட்டு வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். ஆகையால் இவ்வாழ்க்கையிலும் அதற்கும் பின்னரும் மங்களத்தை அடையக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள்.

வியாசதேவர் கூறினார். மன்னா! நீ ஏற்கனவே என்னிடம் இருந்து வேத மதக் கொள்கைகளைப் பற்றியும், மனிதப் பிறவியின் கடமைகளைப் பற்றியும் கேட்டறிந்துள்ளாய். ஆனால் இந்த கலியுகத்தில் யாராலும் அந்த விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது. ஆகையால், மிகுந்த பலனை அளிக்கக்கூடிய ஒரு சுலபமான வழிமுறையை உனக்குக் கூறுகிறேன். இந்த வழிமுறை எல்லா புராணங்களின் சாரமாகும். தேய்பிறை மற்றும் வளர்பிறையின் ஏகாதசியன்று உண்ணாவிரதம் மேற்கொள்பவர் யாராயினும் நரகத்திற்கு செல்லமாட்டார். வியாசதேவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனா, அதிர்ச்சியுற்று அரச மரத்தின் இலைபோல உடல் நடுங்கிக் கூறினான். ஓ! பெரியவரே! நான் என்ன செய்வேன்? வருடம் முழுக்க ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள கண்டிப்பாக என்னால் இயலாது. ஆகையால், எனது பகவானே தயவுசெய்து எல்லா பலன்களையும் அடையக்கூடிய ஒரே ஒரு சக்தி வாய்ந்த விரதத்தை எனக்குக் கூறுங்கள்.

வியாசதேவர் பதிலளித்தார். மே/ஜுன் மாதங்களில் வளர்பிறையில் சூரியன் ரிஷப ராசி அல்லது மிதுன ராசியில் இருக்கும்போது தோன்றக்கூடிய ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் ஒருவர் நீரும் கூட அருந்தாமல் முழு உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த நாளன்று ஒருவர் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக ஒரே ஒரு கடுகளவு நீரை அருந்தி ஆச்சமனா செய்து கொள்ள வேண்டும். இந்த அளவிற்கு மிகுதியாகவோ குறைவாகவோ நீரை அருந்தினால் அது மதுவை அருந்துவதற்கு ஈடாகும். இந்த ஏகாதசியன்று கண்டிப்பாக ஒருவர் எதையும் உண்ணக்கூடாது. ஏகாதசி சூர்யோதயம் தொடங்கி, துவாதசி சூர்யோதம் வரை நீரைக் கூட அருந்தக்கூடாது. இவ்வாறு நீரையும் அருந்தாமல் சிரத்தையுடன் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர். வருடத்திலுள்ள எல்லா ஏகாதசிகளின் பலனையும் அடைவார். துவாதசியன்று விடியற்காலையில் துயில் எழுந்து, குளித்து விட்டு, பிறகு தங்கத்தையும், நீரையும் அந்தணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அந்தணர்களோடு உணவ உண்டு. விரதத்தை முடிக்க வேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 13, 2022 8:34 pm

வ்யாஸர் வாழ்ந்த காலத்தே May /June எல்லாம் கிடையாதே.

வைகாசி/ஆனி என்று கூறி இருக்கலாமோ?

(எந்த ஊடகத்தில் இது வந்துள்ளது? அவர்கள் இதை கவனித்த திருத்தி இருக்கலாம்.)

@krishnaamma
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 9:17 pm

T.N.Balasubramanian wrote:வ்யாஸர் வாழ்ந்த காலத்தே May /June எல்லாம் கிடையாதே.

வைகாசி/ஆனி என்று கூறி இருக்கலாமோ?

(எந்த ஊடகத்தில் இது வந்துள்ளது? அவர்கள் இதை கவனித்த திருத்தி இருக்கலாம்.)

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1363711

இந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அப்படி சொல்லி இருக்கலாம்...புன்னகை... இது ஒர் வாட்ஸப் பகிர்வு ஐயா... மற்றும் உள்ளது அதையும் போடுகிறேன் இங்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 9:24 pm

நிர்ஜல ஏகாதசி ! 87kFJE2

நிர்ஜலா ஏகாதசி.....!!!
[10.6.2022]

இது உயர்ந்த ஏகாதசி.
இந்த ஏகாதசியில் தண்ணீர்கூட அருந்ததக்கூடாது (நீர் கூடப் பருகாமல் இருத்தல்).

எவன் ஒருவன் இந்தத் தினத்தில் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறானோ அவன் ஓராண்டு வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த பயனைப் பெறுவான்.

இந்த ஏகாதசியில் ச்ரமபட்டு விரதம் அநுஷ்டித்து விட்டால் ஸமஸ்த ஏகாதசிப் பலனும் கிடைத்துவிடும்.

தர்மபுத்ரன், கலியின் கொடுமையைப் பார்த்தார்.
எங்கும் களவு.
எங்கும் சண்டை.
தர்மமே சாய்ந்து விட்டது.
அதர்மம் ஓங்கி நிற்கிறது.
பிறர் மனைவியை அபகரித்தல்.
கள் குடித்தல்.
வீண் சண்டை செய்தல், மனைவிகள் புருஷர்களை படுத்துதல், கொலை எல்லாம் கண்டார்.

இதில் நாமும் வாஸம் செய்ய தலைவிதி ஏற்பட்டு விட்டதே எனக் கலங்கினார்.

இப்படிவரும் பாபத்தை அகற்ற வழியும் சுலபமாக இல்லையே எனவும் வருந்தினார்.
வியாச பகவானை சரணடைந்தார்.
மக்கள் உய்ய சுலபமான வழியைக் கூற வேண்டுமேன ப்ரார்த்தித்தார்.

வியாச பகவானும் சிறிது ஆழ்ந்து ஆலோசித்துக் கூறலானார். "எல்லா பாபங்களையும் அகற்ற ஏகாதசி ஒன்றுதான் சுலபமான உபாயம். இதைத்தவிர வேறு வழி இல்லை" என்றார்.

உடனே தர்மபுத்ரர் "தனது ராஜ்யத்தில் எல்லோரும் ஏகாதசி விரதமிருக்க வேண்டும்" என்று பறை சாத்தினார்.

அனைவரும் பயந்து உபவாஸம் இருக்க முயற்சித்தனர்.

இதைக் கண்ட பீமஸேனன் வருத்தமடைந்தான்.
இவனோ வயறுதாரி.
எவ்வளவு உண்டாலும் த்ருப்தியடையாதவன்.
மேலும் மேலும் உண்ணாலும் இவனது வயிற்றுள்ள அக்நி த்ருப்தி அடைவதில்லை.
ஆக இவன் எப்படி ஒவ்வொரு ஏகாதசியும் உபவாஸமிருக்க முடியும் என்று கலங்கி வியாசரிடம் முறையிட்டான்.

"தங்களது உபதேசம் என்னை உயிருடன் அழித்து விடுகிறது. எனது வயிற்றில் உள்ள அக்நிக்கு வ்ருகம் எனப்பெயர். எனவே என்னை விருகோதரன் என அழைப்பர். இந்த அக்நி அளவற்ற அன்னத்தை உண்டால்தான் சாந்தமடைகிறது. பகாஸுரனை விட நான் அதிகம் உண்ண வேண்டும். உங்களுக்கும் இது நன்கு தெரியும். ஆக எல்லா ஏகாதசிகளிலும் உபவாஸம் இருப்பது கடினம். தினத்தில் ஒரு வேளை புசித்து இரவு உண்ணாமல் இருப்பதே எனக்கு கஷ்டம். எனவே ஆண்டுக்கு ஒரு முறை ஒரு தினம் எப்படியாவது உபவாஸம் இருக்க முயற்ச்சிக்கிறேன். ஆனாலும் அந்த ஒரு தின உபவாஸமே அனைத்து ஏகாதசி உபவாஸப்பலனையும் அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஏகாதசியை செய்து எனக்கு கூற வேண்டும்" என்று கேட்டான்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 9:24 pm

வியாசரும் திவ்ய சக்ஷுஸ்ஸால் பார்த்து, "நிர்ஜல ஏகாதசியன்று ஒரு நாள் உபவாஸம் இருப்பாயாக. ஜலமும் அருந்தாமல் விரதத்தை நடத்த வேண்டும். சுக்ல ஏகாதசி பலனும் கிட்டும். முறைப்படி இருந்து த்வாதசி பாரணை செய். பகவானை இவ்வாறு பூஜை செய். உன் அபிமதம் ஸித்திக்கும்" என்றார்.

பீமனும் இவ்வாறு வருடத்துக்கு ஒரு முறை உபவாஸம் இருந்து பகவானை பூஜித்தான்.

இதை ஸ்ரீக்ருஷ்ணன் வியாசருக்கு உரைத்த மர்மம்.
இப்படி பீமன் இதில் நடந்தபடியால் பீம ஏகாதசி எனப் பெயர் வழங்கிற்று.

இவ்வாறு இருந்து பாரணை செய்தபடியால் பாண்டவ த்வாதசி என த்வாதசிக்குப் பெயரும் வந்தது.

இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் 24 ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிட்டும் என பீமனுக்கு வேதவியாசர் கூறியுள்ளார்.
பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜைசெய்வது ஆகும்.
இந்தநாளில் உள பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடுசெய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கும் .
வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலன் கிடைக்கும்.

இதை அனுஷ்டிப்பவர்கள் யமலோகம் காணமாட்டார்கள்.
இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

திருவாய்மொழி(520).....!!!

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!* செந்தாமரைக் கண்ணா!*
தொழுவனேனை உன தாள் சேரும்* வகையே சூழ்கண்டாய்.

திருவாய்மொழி 5.8.5

உன் கண்ணழகிலே ஈடுபட்டுப் பலவிதமான செயல்களைச் செய்யும் நான் உன் திருவடிகளைச் சேரும்படிப் பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவது, தொழுவது, ஆடிப் பார்ப்பது, பாடுவது, அலற்றுவது, என்னைத் தழுவி இருக்கும் காதலாகிற ப்ரபலமான பாபத்தால் அவன் வரக்கூடிய பக்கங்களைப் பார்த்து அங்கு வாராமையாலே வெட்கப்பட்டுத் தலை கவிழ்ந்திருப்பேன். மிகுதியாய் அழகாய் இருக்கும் நீர் நிலங்களையுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனாய் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! உன்னைத் தொழுபவனான என்னை உன் திருவடிகளை அடையும்படி ஒரு நல்ல வழியை நீயே பார்க்க வேண்டும்.

இது ஒரு வாட்ஸப் பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக